Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது! ஐஸ்வர்யா ராய் அபிஷேக்கை 2-வதாக திருமணம் செய்தாரா….? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்….!!!!

உலக அழகியான மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஐஸ்வர்யா ராய். ஐஸ்வர்யா ராய் நடிக்க தொடங்கி சில படங்களிலேயே பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஆகிவிட்டார். அதனைப் போல பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சனும் நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் தான் இருவரும் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. உம்ராவ் ஜான் எனும் படத்தில் நடித்த இவர்கள் தொடர்ந்து குரு, தூம் 2 ஆகிய படங்களிலும் சேர்ந்து நடித்தார்கள். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஓபிஎஸ், இபிஎஸ்” இதில் யாருக்கு சீட்…. சட்டமன்றத்தில் மோதல் வெடிக்குமா….? அச்சத்தில் அதிமுகவினர்….!!!!

தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் வருகிற 17-ஆம் தேதி நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தின் போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி முறைகேடுகள் தொடர்பான அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கை போன்றவைகள் ஆளும் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு தற்போது தமிழகத்தில் நடக்கும் போதைப்பொருள் விற்பனை மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை போன்றவைகள் குறித்து எதிர்க்கட்சியினர் சட்டசபையில் பேசுவார்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“ரூ.‌ 65,000 கோடி முதலீட்டில் புதிய திட்டங்கள்” 40,000 பேருக்கு வேலை வாய்ப்பு…. அதானி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற இன்வெஸ்ட் ராஜஸ்தான் உச்சி மாநாட்டில் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் கௌதம் அதானி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, ராஜஸ்தான் மாநிலத்தில் அதானி குழுமம் ஏற்கனவே அதிக அளவில் முதலீடு செய்துள்ள நிலையில், மீண்டும் 65 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இருக்கிறது. இங்கு ஏற்கனவே அதான் குழுமத்திற்கு சொந்தமான அனல் மின் நிலையம் இருக்கிறது. இதனுடன் சேர்ந்து 10,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் சூரிய‌ மின் […]

Categories
மாநில செய்திகள்

“ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்” அரசாணையில் என்னென்ன எச்சரிக்கைகள்…. இதோ முழு விவரம்….!!!!

தமிழக அமைச்சரவையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அவசர தடை சட்டம் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆளுநரும் ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இது தொடர்பான அரசாணை தற்போது வெளியாகியுள்ள நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் 5000 அபராதம் விதிக்கப்படும். அதன் பிறகு ஆன்லைன் தடை சட்டங்களை ஒழுங்கு படுத்துவதற்காக ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு ஆணையும் அமைக்கப்படும். இந்த ஆணையமானது ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

சீட் பிடிக்க இப்படியா!…. ரத்தம் சொட்ட சொட்ட அடித்து உருண்ட பெண்கள்…. தீயாய் பரவும் வீடியோ….!!!

மும்பையில் மின்சார ரயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். அதன்படி  கடந்த புதன்கிழமை இரவு 7:45 மணிக்கு தானே-பன்வெல் நோக்கி  ரயில் சென்று கொண்டிருந்தது. அதில் பெண்கள் பெட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் ஏறியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் இருக்கைக்காக மற்றொரு பெண் பயணியிடம் வாக்குவதில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதில் 3 பேரில் ஒருவர் சக பயணியை முடியை பிடித்து அடித்துள்ளனர். இதனால் பெட்டியில் பயணித்த சக பயணிகள் சண்டையை நிறுத்துமாறு அறிவுறுத்தி […]

Categories
மாநில செய்திகள்

பண்டிகை கால முன்பணத்தை உயர்த்தி வழங்க அனுமதி…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு பண்டிகை காலம் முன்பணத்தை உயர்த்தி வழங்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு பண்டிகைக்கால முன்பணத்தை 24 ஆயிரம் ரூபாயாகவும் கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கு 18,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலகசெய்திகள்

2022 ஆம் வருடம் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு… யாருக்கு தெரியுமா…?

உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக நோபல் பரிசு விளங்கி வருகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி போன்ற துறைகளில் உலக அளவில் பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கும் நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022 ஆம் வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வருடத்திற்கான நோபல் பரிசு பெல்லாரஸ் நாட்டைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்டிஸ் க்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் உக்ரைன் மனித உரிமைகள் […]

Categories
சினிமா

தமிழகத்தில் மட்டும் #PS1 வசூல் எவ்வளவு தெரியுமா?…. வரலாற்று சாதனை….!!!!

உலகப் புகழ் பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்த திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், கார்த்தி உள்ளிட்ட பல நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் பொன்னியின் செல்வன் 1 கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் வெளியான பொன்னியின் செல்வன் […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. இவர்களுக்கு 4% அகலவிலைப்படி உயர்வு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்வை வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகலவிலைப்படி 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்ட நிலையில் இந்த அகல விலைப்படி உயர்வு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் புதுச்சேரியிலும் அமலுக்கு வந்துள்ளது. புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் 34 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, 4 சதவீதம் உயர்த்தி, 38 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன்படி ஜூலை 1ஆம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. ரூ.400 கோடியை நெருங்கிய பொன்னியின் செல்வன்…. ரஜினி பட சாதனையை முறியடிக்குமா…?

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டே வருகிறது. உலக அளவில் 3 நாட்களில் ரூ.200 கோடி வசூலித்தது. […]

Categories
வேலைவாய்ப்பு

1,673 பணியிடங்கள்…. டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.65,000 சம்பளத்தில்….. SBI வங்கியில் வேலை…..!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கி ஆனால் எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: probationary officer காலி பணியிடங்கள்: 1,673 கல்வித் தகுதி: டிகிரி வயது: 21 – 30 சம்பளம்: ரூ.65,780 – ரூ.68,580 தேர்வு முறை: முதல் நிலை தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்க கடைசி தேதி:அக்டோபர் 12 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://sbi.co.in/  என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 4 தேர்வு ரிசல்ட் எப்போது….? தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை மாதம் 24-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு மொத்தம் 7138 பணிகளுக்காக நடத்தப்பட்டது. இந்த தேர்வை 18.50 லட்சம் பேர் எழுதிய நிலையில் முதன்முதலாக ஆங்கிலம் தவிர்த்து தமிழ், கணிதம் மற்றும் பொது அறிவு பாடத்திட்டங்களை மட்டுமே கொண்டு தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு வழக்கம்போல் இல்லாமல் மிகவும் எளிமையாக இருந்ததாக தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுமே கூறியிருந்தனர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் எப்போது வரும் என்று […]

Categories
வேலைவாய்ப்பு

12th, Diploma முடித்தவர்களுக்கு…. இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாகவுள்ள 47 ஜுனியர் மற்றும் சீனியர் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. நிறுவனத்தின் பெயர்: Airports Authority of India பதவி பெயர்: Junior and Senior Assistant மொத்த காலியிடம்: 47 கல்வித்தகுதி: 12th Pass, Diploma in Electronics/Telecommunication//Radio Engineering, B.Com வயது வரம்பு: 18 – 30 years கடைசி தேதி:நவம்பர் 10 கூடுதல் விவரங்களுக்கு: https://www.aai.aero/en/careers/recruitment https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Advertisement%20for%20DR.pdf

Categories
அரசியல் மாநில செய்திகள்

இஸ்லாமியர்களின் பிரியாணி அண்டாவை ஆட்டைய போட பேரணி நடத்தும் RSS.. Velmurugan ஆவேசம்..

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பொதுக்கூட்டத்தில் பேசும் போது, இஸ்லாமியர்கள் பெரும்பாலும் வாழுகின்ற பகுதிகளிலும், கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதிகளிலும், பல்லாயிரக்கணக்கான வணிக நிறுவனங்களை இஸ்லாமியர்கள் நடத்துகின்ற பகுதிகளிலும், திட்டமிட்டு ஊர்வலம் என்கின்ற பெயரிலே, சூறையாடுவதற்கும், எனது இஸ்லாமிய சகோதரர்கள் தங்கள் ரத்த வேர்வை சிந்த சிந்த உழைத்து பிரியாணி குண்டாவை அவன் உருவாக்கினால்,  அதை தூக்கி கொண்டு போவதற்கும்  பேரணி நடத்துகின்ற கும்பல்களே….  இதில் என்னத்தை சாதிக்க போறீங்க நீங்க ? இந்தியாவின் பன்முக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு….. பாகிஸ்தானிடம் தோற்றத்திற்கு காரணம் இதுதான்…. கேப்டன் ஹர்மன்ப்ரீத் பேசியது என்ன?

இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தோல்விக்கு இதுதான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.. மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் வங்கதேசத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் 6 முறை இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உட்பட 7 அணிகள் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் நேற்று சில்கெட்டில் நடந்த முதல் லீக்போட்டியில் இந்தியா […]

Categories
மாநில செய்திகள்

மது அருந்திவிட்டு பேருந்தை இயக்கினால் பணிநீக்கம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மது அருந்திவிட்டு அரசு பேருந்து இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.மது அருந்திய நிலையில் பணிபுரிவது கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.  சம்பந்தப்பட்டவர் மீது மிக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அண்மை காலத்தில் சில அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மது அருந்திவிட்டு பணிக்கு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது.இது தொடர்பாக வீடியோக்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனை தொடர்ந்து போக்குவரத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’…. முதல் பாடல் வெளியீடு….. ட்ரெண்டாகும் வீடியோ….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவரின் நடிப்பில் அடுத்த வெளியாக போகும் பர்ஹானா திரைப்படத்தை ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.ஸபிரபுவின் ட்ரீம் வாரியார் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து. இறுதி கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்ற வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கு கவிஞரும் […]

Categories
மாநில செய்திகள்

HIGH ALERT: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு…. மழை வெளுத்து வாங்கும்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர்,நாகை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! இனி எல்லாமே ஈஸி தான்… இந்தியாவில் விரைவில் டிஜிட்டல் கரன்சி…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் டிஜிட்டல் ரூபாய் நோட்டுகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்காக டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இது போன்ற திட்டங்களை விரிவுபடுத்தும் போது அதன் சிறப்பு அம்சங்கள் மற்றும் நன்மைகள் குறித்து எடுத்துரைக்கப்படும். இ ரூபாய் என்பது தற்போது உள்ள பணத்திற்கு கூடுதல் விருப்ப தேர்வாக இருக்கும். இது வழக்கமான ரூபாய் நோட்டுகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“PS-1″… புலிக்கொடி ஏன் இடம்பெறவில்லை…. 2-ம் பாகத்தில் அப்படி மட்டும் இருந்தால்…. மணிரத்தினத்திற்கு கௌதமன் கடும் எச்சரிக்கை….!!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்களும் பொன்னியின் செல்வன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில்” பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு….!!!

மதுரை மாவட்டத்தில் தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு இந்த கோவிலில் சுவாமி- அம்பாள் பிரகார உலா நடைபெற்று உள்ளது. முன்னதாக சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து பிரகாரத்தில் உலா வந்த சுவாமி மற்றும் அம்பாளை ஏராளமான பக்தர்கள் தரிசித்து சென்றனர்.

Categories
ஆன்மிகம் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“பிரதோஷ சிறப்பு வழிபாடு” புகழ்பெற்ற கோவில்களில்…. திரண்ட ஏராளமான பக்தர்கள்….!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அருகே புகழ்பெற்ற திருப்பன்கூர் சிவலோகநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு பொருட்களால் சுவாமி மற்றும் நந்தி பகவானுக்கு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதே போல திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில், கண்ணப்பன் பேட்டை கலிகாமேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நந்தி பகவானுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

Categories
தேசிய செய்திகள்

பனிச்சரிவில் சிக்கிய வீரர்கள்…. மேலும் 10 பேரின் உடல் மீட்பு…. வெளியான தகவல்…!!!!

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் நேரு மலையற்ற பயிற்சி நிலையம் உள்ளது. அங்கு பயிற்சி பெறுபவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட 41 பேர் கொண்ட குழு அதே மாவட்டத்தில் உள்ள திரவுபதி கா தண்டா மலைச்சிகரத்தில் கடந்த 4 ஆம் தேதி ஏறினர். அதன் பிறகு 17 ஆயிரம் அடி உயரத்தை அடைந்த போது கடுமையான பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணிகள் உடனடியாக முடக்கிவிடப்பட்டது. இதில் விமானப்படை, ராணுவம் மற்றும் பேரிடர் மீட்பு படை என […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“50 சதவீத மானியம் பெற்று புதிய தொழிலை தொடங்குங்கள்”…. கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்ட தகவல்….!!!!

தேசிய கால்நடை இயக்கத் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியம் பெற்று புதிய தொழில் தொடங்கி தொழில் முனைவோர் ஆகலாம் என தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் ஒரு செய்தி குறிப்பில் கூறியுள்ளார். தேசிய கால்நடை இயக்கத் திட்டத்தின் அடிப்படையில் 50 சதவீத மானியம் பெற்று புதிய தொழில் தொடங்கி தொழில் முனைவோராக உருவாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஒரு செய்தி குறிப்பில் கூறியுள்ளார். மேலும் இது குறித்த அவர் கூறியிருப்பதாவது “மத்திய […]

Categories
உலக செய்திகள்

சத்தமில்லாமல் 12,000 ஊழியர்கள் டிஸ்மிஸ்… மெட்டா நிறுவனத்தின் அதிரடி முடிவு…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

மெட்டா நிறுவனம் பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மெட்டா நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 12 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் மேலும் அதிர்ச்சியாக இந்த நடவடிக்கையை ‘குய்ட் லேஆப் ‘அதாவது சத்தமில்லாமல் அமைதியான முறையில் பேஸ்புக் நிறுவனம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே இந்த நிதியாண்டில் புதிதாக வேலைக்கு ஊழியர்களை எடுப்பதை நிறுத்தி வைத்திருக்கின்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பும்ரா, ஜடேஜா இல்லாதது மற்றவர்களுக்கு ஒரு வாய்ப்பு…. ரவி சாஸ்திரி கருத்து.!!

டி20 உலக கோப்பையில் பும்ரா மற்றும் ஜடேஜா இல்லாதது அணிக்கு  ஒரு புதிய சாம்பியனை வெளிக்கொண்டு வருவதற்கு ஒரு வாய்ப்பு என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் வரும் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உட்பட 16 அணிகள் பங்கேற்கிறது, இதில் இந்திய அணி […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பிரபல ரவுடி ராக்கெட் ராஜா கைது…. “மினி பேருந்து தீ வைத்து எரிப்பு”….. திசையன்விளை அருகே பதற்றம்..!!

பிரபல ரவுடி ராக்கெட் ராஜாவின் சொந்த ஊர் அருகே மினி பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாங்குநேரியை சேர்ந்த சாமிதுரை என்பவர் கொலை வழக்கில் பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவை கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து நேற்று நெல்லை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள ராக்கெட் ராஜா மீது ஏற்கனவே 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. சாமிதுரை கொலை வழக்கில் விக்டர், முருகேசன் ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

இனி பிள்ளைகளுக்கு சொத்து ரத்து – பெற்றோர்களுக்கு உரிமை உண்டு – ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு ….!!

கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துக்கள் எழுதி வைக்க இருப்பதை ரத்து செய்ய உரிமை உண்டு என சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை அறிவித்திருக்கிறது. சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி தனது சொத்துக்களை மூத்த மகன் பெயரில் எழுதி வைத்திருந்தார். அதனால் வயதான காலத்தில் தங்களை கவனிக்காமலும் மருத்துவ செலவுக்கு உதவி செய்யாமலும் இருந்ததால் சொத்துக்கள் எழுதி வைத்ததை  ரத்து செய்ய கோரி அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரித்த கீழமை நீதிமன்றம் அந்த […]

Categories
சினிமா

அடடே! சூப்பர்…. பிரபலம் மாடலை காதலிப்பதாக உறுதி செய்த நடிகர் காளிதாஸ்…. இணையத்தை கலக்கும் புகைப்படம்…!!!

பிரபல நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ். இவரும் மலையாள திரையுலகில் மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவிலும் பிரபல நடிகர்கராக வலம் வருகிறார். தனது 7 வயதில் மலையாள திரைப்படமான ‘கொச்சி கொச்சி சந்தோசங்கள்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் சிறந்த குழந்தை நட்சத்திரக்கான தேசிய திரைப்பட விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு மீன் குழம்பும் மண்வாசனை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் கதாநாயகனாக அறிமுகமானார். சமீபத்தில் வெளியாகி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு…. தூத்துக்குடி-மைசூர் இடையே சிறப்பு கட்டண ரயில்…. விவரம் இதோ….!!!!

தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கின்றது. இந்நிலையில் இந்த பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி-மைசூர் இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கம் படுகின்றது. இது குறித்து தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மைசூர் தூத்துக்குடி சிறப்பு கட்டண ரயில் 21.10.22 அன்று மதியம் 12.05 மணிக்கு மைசூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மறு மார்க்கத்தில் தூத்துக்குடி-மைசூர் சிறப்பு […]

Categories
தேசிய செய்திகள்

உங்க பான் கார்டு எத்தனை நாட்கள் செல்லுபடியாகும்…? பலரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் இதோ…!!!!!!

பான் கார்டு என்பது நிதி வர்த்தனைக்காக பயன்படுத்தப்படுகின்ற ஒரு முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. வங்கி கணக்கை திறப்பது முதல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது வரை பான் கார்டு அனைத்திற்கும் தேவைப்படும் முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. இது KYC ஆகவும் செயல்படுகின்றது பங்குச்சந்தையில் பணத்தை முதலீடு செய்யவோ தங்கம் வாங்கவோ அல்லது அரசாங்க திட்டத்தில் பயன்படுத்தவும் சட்டப்பூர்வ அடையாள அட்டையாக பான் கார்டு பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆதார் உருவாக்கப்பட்ட பிறகும் உங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!… இயற்கை எரிவாயு விலை உயர்வு…. எவ்வளவு தெரியுமா?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் கெஜரிவால் தலைமயில் ஆம் ஆத்மி அரசு மேற்கொண்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் சுற்றுப்புற சூழலில் ஏற்படும் காற்று மாசை குறைக்கும் நோக்கில் மின்சார வாகனங்கள் பயன்பாட்டுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதனைப் போல அதிகரித்தவரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் அவற்றுக்கு மாற்றாக இயற்கை எரிவாயு நிரப்பிய வாகனங்களில் பயன்பாடு டெல்லியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில் இந்திர […]

Categories
அரசியல்

திடீரென உயர்ந்த தங்கம் விலை….. எவ்வளவு தெரியுமா….? நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.38,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,840-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“வியாபாரி கொலை வழக்கு”…. 5 பேர் அதிரடி கைது…. 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு…!!!!!

தூத்துக்குடி அருகே கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தார் அருகே இருக்கும் மஞ்சநம்பகிணறு கிராமத்தைச் சேர்ந்த பூ வியாபாரி அழகுதுரை என்பவர் சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பாக மது குடிக்கும் இடத்தில் உறவினர் ஒருவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை பார் உரிமையாளர் உள்ளிடோர் கண்டித்துள்ளர்கள்கள். இதனால் அவருக்கும் உரிமையாளர் தரப்பினருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டது. இதை அடுத்து அழகுதுரை வீட்டிற்குச் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!‌ சுக்கு நூறாக உடைந்த பிரதமரின் கனவு…. “முதலில் எருமை மாடுகள், 2-வது பசு மாடு” பெரும் பரபரப்பு….!!!!

இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இந்த வந்தே பாரத் ரயில் சேவை ஆனது பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கடந்த 2-ம் தேதி இந்தியாவின் 3-வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து, குஜராத் மாநிலம் காந்திநகர் வரை இயக்கப்படுகிறது. இதேபோன்று புதுடெல்லி முதல் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“நபார்டு வங்கி பணி”…. முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்…. ஆட்சியர் தகவல்….!!!!!

முன்னாள் படை வீரர்கள் நபார்டு வங்கி பணியில் சேர விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கூறியுள்ளார். நபார்டு வங்கியில் வளர்ச்சி பிரிவு உதவியாளர் பணிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றார்கள். இதில் முன்னாள் படை வீரர்களுக்கு இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் https://www.nabard.org என்ற இணையதளத்தில் வருகின்ற பத்தாம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் பிஎஃப் கணக்கில் வட்டி வரவில்லையா…? இதுதான் காரணம்… நிதி அமைச்சகம் விளக்கம்…!!!!!

இ பி எஃப் ஓ சந்தாதாரர்கள் பலரின் கணக்குகளில் பிஎஃப் வட்டித்தொகை வரவு வைக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும் சிலரது கணக்குகளில் இந்த தொகை வந்து கணக்கில் காணப்படவில்லை. உங்கள் கணக்கிலும் இன்னும் வட்டி தொகை வந்ததற்கான குறிப்புகளை காண முடியவில்லை என்றால் இந்த செய்தி உங்களுக்கு தான். சிலரது கணக்கில் ஏன் இந்த தொகையின் இருப்பு தெரியவில்லை என்பது பற்றி பணியாளர் வருங்கால வைப்பு நிதியான இபிஎப் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. தற்போது நிதி அமைச்சகம் இது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி அருகே சிலம்பம் பயிற்சி முகாம்…. “உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள மாணவ-மாணவிகள்”….!!!!!

தூத்துக்குடி அருகே சிலம்பம் பயிற்சி முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழமுடிமண் புனித வளன் தொடக்கப் பள்ளியில் சிலம்ப பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ஏராளமான மாணவ-மாணவிகள் பங்கேற்று பயிற்சி பெற்றார்கள். இதில் பயிற்சி பெற்ற  மாணவ-மாணவிகளுக்கு வண்ண பட்டைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வீர தமிழன் போர்களை சிலம்பக்கூட செயலாளரும் தலைமை ஆசானமான சுடலைமணி, பயிற்சியாளர் வெள்ளைய ராஜா உள்ளிட்டோர் தலைமை ஏற்று சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள். மேலும் இம்முகாமில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“ஜல்ஜீவன் திட்டத்தில் பயனடைந்தவர்கள்”…. பங்குத் தொகையை செலுத்த ஆட்சியர் அறிவுறுத்தல்….!!!!!!

ஜல்ஜீவன் திட்டத்தில் பயனடைந்தவர்கள் பங்குத் தொகையை செலுத்த வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் அனைத்து ஊரக குடியிருப்பவருக்கும் வீடுதோறும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 2020-21 ஆம் வருடம் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் இருக்கும் 6 ஊராட்சி ஒன்றியங்களில் 31 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றது. […]

Categories
உலக செய்திகள்

கால்பந்து மைதானத்தில் மீண்டும் மோதல்…. ரசிகர் ஒருவர் பலி…. அர்ஜென்டினாவில் பரபரப்பு….!!!!

அஜெண்டினா நாட்டில் தலைநகர் பியூனஸ் அயர்ஸில் கால்பந்து மைதானம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் உள்ளூர் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற இருந்தது. இந்த போட்டியை காண மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இதனை அடுத்து மைதானம் நிரம்பி வழிந்த காரணத்தால் அது பூட்டப்பட்டது. மேலும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்குள் செல்ல முற்பட்டதால் அவர்களை போலீசார் தடுக்க முற்பட்டுள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் போலீசார் ரப்பர் குண்டுகளால் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“மின் கட்டணம் செலுத்த நீண்ட வரிசையில் பொதுமக்கள்”…. ஆன்லைனில் செலுத்த அதிகாரி அறிவுறுத்தல்….!!!!!

திருப்பத்தூரில் மின் கட்டணம் செலுத்த நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கின்றார்கள். திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து ஜலகாம்பாறை செல்லும் வழியாக திருப்பத்தூர் துணை மின் நிலையம் இருக்கின்றது. இங்கே திருப்பத்தூர் நகர பகுதிக்கு உட்பட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்தி வருகின்றார்கள். இதுவரை மின் கட்டணம் செலுத்துவதற்கு இங்கு இரண்டு கவுண்டர்கள் செயல்பட்டு வந்த நிலையில் தற்பொழுது ஒரு கவுண்டர் மட்டுமே செயல்பட்டு வருகின்றது. இதனால் மின் கட்டணம் செலுத்த வரும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் நின்று […]

Categories
உலக செய்திகள்

சுற்றுலா செல்ல சிறந்த 20 நாடுகளின் பட்டியல் வெளியானது…. இலங்கைக்கு கிடைத்த இடத்தை பாருங்கள்….!!!!

கொண்டே ட்ராவலர் என்பது ஒரு சுற்றுலா இதழ் ஆகும். இந்த இதழ் தம்முடைய வாசகர்கள் தேர்வு செய்த சுற்றுலா சொல்வதற்கு ஏற்ற சிறந்த நாடுகள் பட்டியலை வருடந்தோறும் வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த வருடமும் சுற்றுலா செல்வதற்கு உலக அளவில் சிறந்த 20 நாடுகளின் பெயர்களை பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் இலங்கை 17 வது இடத்தை பிடித்துள்ளது. இதில் அந்நாடு 88.01 புள்ளிகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும். கடந்த வருடம் இலங்கை இந்த பட்டியலில் […]

Categories
உலக செய்திகள்

எங்கள் விஷயத்தில்…. மேற்கத்திய நாடுகள் தலையிட்டால்…. அணு ஆயுத போரை நடத்த தயங்க மாட்டோம்…. எச்சரிக்கை விடுத்த பிரபல நாட்டு அதிபர்….!!!!

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து 8 மாதங்களாக நீடித்துக் கொண்டு வருகின்றது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து 8 மாதங்களாக நீடித்துக் கொண்டு வருகின்றது. இந்நிலையில் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பக்கபலமாக இருந்து வருகின்றது. இதனை கடுமையாக எதிர்த்து வரும் ரஷ்ய அதிபர் புதின், போரில் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து தலையிட்டால் அணு ஆயுத போரை நடத்த தயங்க மாட்டோம் என்று அண்மையில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 1962-ஆம் […]

Categories
உலக செய்திகள்

என்னது….? செல்போன் “செயலி” மூலம்…. கொரோனாவை கண்டுபிடிக்க முடியுமா….? பிரபல நாட்டு பேராசிரியரின் கண்டுபிடிப்பு….!!!!

கொரோனோ வைரஸ் தொற்றுநோயைக் கண்டுபிடிக்கும் செல்போன் செயலிக்கான (ஆப்) தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் துறையின் இணை பேராசிரியராக பணிபுரிபவர் இலங்கை நாட்டை சேர்ந்த  உடாந்த அபேவர்த்தனே ஆவார். இவர் தனது குழுவினருடன் இணைந்து, கொரோனோ வைரஸ் தொற்றுநோயைக் கண்டுபிடிக்கும் செல்போன் செயலிக்கான (ஆப்) தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார். அதன் அடிப்படையில் “ரெஸ்ஆப்” என்ற செயலியை ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனை சேர்ந்த ஒரு நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலியானது, கொரோனாவை […]

Categories
உலக செய்திகள்

என்ன….? டெய்லி மெயில் மீது வழக்கா….? இளவரசர் ஹரி மற்றும் 5 பேர்…. தனியுரிமை மீறலில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு…..!!!

பிரிட்டன் இளவரசர் ஹரி, எல்டன் ஜான் மற்றும் பலர் டெய்லி மெயில் நிறுவனத்தின் வெளியீட்டாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளன. செய்தி நிறுவனமான டெய்லி மெயில் அதன் தலைப்புகளில் சட்டவிரோதமான தகவல்களை சேகரித்ததாகக் கூறி அதன் வெளியீட்டாளர் மீது ஆறு பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் பாடகர் எல்டன் ஜான் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இந்த சட்ட நடவடிக்கையில் பங்கேற்கும் மற்றவர்களில் லிஸ் ஹர்லி, சாடி ஃப்ரோஸ்ட், ஜானின் கணவர் டேவிட் […]

Categories
உலக செய்திகள்

“ஒரே நேரத்தில் இரண்டு மார்க்கமாக”…. அமெரிக்க ராணுவத்தின் அதிரடியால்…. நிலைகுலைந்து ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு….!!!!

அமெரிக்கா ராணுவத்தின் அதிரடி தாக்குதலால் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் கொல்லப்பட்டனர். சிரியா நாட்டில் பல பகுதிகளில் ஐ.எஸ் பயங்கரவாதிகளினுடைய ஆதிக்கம் மீண்டும் ஓங்கி வருகின்றது. இதனை ஒடுக்குவதற்காக அமெரிக்க ராணுவப் படைகளின் உதவியுடன் சிரியா ராணுவம் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது. இந்த நிலையில் அந்நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள காமிஷ்லி நகரில் இருக்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகளினுடைய நிலைகளை குறி வைத்து அமெரிக்க ராணுவ படைகள் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலானது ஒரே நேரத்தில் […]

Categories
உலக செய்திகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்…. பிரபல நாட்டுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்…. புறக்கணித்த இந்தியா….!!!!

இலங்கை நாட்டுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இலங்கை நாட்டு அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே, கடந்த 2009-ஆம் ஆண்டு நடந்த இறுதிக் கட்ட போரின் போது, மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து, இலங்கைக்கு எதிராக இனப் படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 2012 – 2014 ல், அப்போது அதிபராக இருந்த மகிந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“விவசாயிகள் விளைப்பொருட்களை இருப்பு வைத்து கடன் பெறலாம்”…. அதிகாரி தகவல்….!!!!!

விவசாயிகள் விளைபொருட்களை இருப்புவைத்து கடன் பெறலாம் என அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் பகுதியில் முதல் போக நெல் அறுவடை பணி ஆரம்பமாகியுள்ளது. இந்த நிலையில் கம்பம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் சந்தை மூலமாக மறைமுக ஏலத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் பங்கேற்று விவசாயிகளின் விளைபொருட்களை கொள்முதல் செய்து […]

Categories
அரசியல்

140ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 08) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தலைவர், தளபதியின் திடீர் விசிட்” அனிரூத்துடன் பார்ட்டி… செம குஷியில் சாருக்கான்…. வைரலாகும் பதிவு….!!!!

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. தன்னுடைய முதல் படத்திலேயே மெகா ஹிட் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். அதன் பிறகு தளபதி விஜய் உடன் சேர்ந்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார். இந்த படங்களை தொடர்ந்து பாலிவுட் சென்ற அட்லி தற்போது ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் […]

Categories

Tech |