Categories
மாநில செய்திகள்

போதை பொருள் தடுப்பு நடவடிக்கை… முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை…!!!!!

தமிழக முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த இருக்கின்றார். இந்த ஆலோசனையில் போதைப்பொருள் கடத்தல் காரர்கள் மீது கடமையான நடவடிக்கை எடுப்பது போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது அவற்றின் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்றவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

Categories
மாநில செய்திகள்

HIGH ALERT: தமிழகத்தில் மிக அதீத கனமழை வெளுத்து வாங்கும்…. 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன் எதிரொலியாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதாவது தமிழகத்தில் இன்று ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், கடலூர், பெரம்பலூர் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

“சுண்டைக்காய் விலை என்ன கேட்டால் மட்டும் தீர்வு வராது”….. நிர்மலா சீதாராமனை கிண்டல் செய்த ப.சிதம்பரம்…!!!

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகில் குட்டப்பாளையத்தில் உள்ள சிவசேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தை பார்வையிட காங்கிரஸின் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வந்திருந்தார். அவரை திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி வரவேற்றார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கொங்கு பகுதியில் காங்கேயம் மாடுகளை பல விவசாயிகள் வளர்ப்பதற்கு, பால் உற்பத்தி பெறுவதற்கும் இன்னும் தமிழக அரசு ஊக்கம் தர வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். பாரம்பரிய […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அக்காவுக்கு பிறந்த குழந்தை….. பார்க்க சென்ற வாலிபருக்கு நடந்த விபரீதம்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

ரயில் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் கொத்தங்குடி பகுதியில் இருக்கும் தண்டவாளத்தில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்த காயங்களுடன் தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக கிடந்த வாலிபர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பொறிபரந்த பட்டாகத்தி…. ரயில் பயணிகளை மிரளவைத்த மாணவர்கள்…. அதிர்ச்சி சம்பவம்…..!!!!

சென்னையில் மெட்ரோ ரயிலில் தினம் தோறும் மாணவர்கள் கத்தி மற்றும் கற்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் மாணவர்களுக்கு பல எச்சரிக்கை மற்றும் கைது நடவடிக்கைகள் எடுத்த போதிலும் மாணவர்களின் அட்டகாசம் அடங்கவில்லை.இந்நிலையில் மாணவர்கள் பட்டாகத்திகளை நடைமேடையில் தேய்த்தபடி செல்வது போன்ற வீடியோ காட்சிகள் மீண்டும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. கல்லூரி முடிந்து மாலை நேரத்தில் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் […]

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்து மயங்கி விழுந்த 57 பள்ளி மாணவர்கள்…. வெளியான ஷாக் ரிப்போர்ட்…..!!!!

மெக்சிகோவின் தெற்கு மாகாணமான சியா பாஸில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மாணவர்கள் பலர் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக மயக்கமடைந்த 57 மாணவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்களின் முதற்கட்ட பரிசோதனையில் அவர்கள் அனைவருக்கும் விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் அந்த மாகாணத்தில் உள்ள மேலும் இரண்டு பள்ளிகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நீங்க இப்படி செஞ்சதுக்கு நன்றி கேசவ் மஹாராஜ்…. வெற்றிக்கு பின் மகிழ்ச்சியில் தவான் பேசியது என்ன?

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் கேசவ் மஹாராஜ் பேட்டிங் தேர்வு செய்ததற்கு ஷிகர் தவான் நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி முதலில் நடைபெற்ற டி20 தொடரை 1: 2 என்ற கணக்கில் இந்திய அணியிடம் இழந்தது. இதையடுத்து  3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இந்நிலையில் நேற்று இரண்டாவது […]

Categories
தேசிய செய்திகள்

டுவிட்டர் பயனர்களே!…. இனி ஸ்கிரீன்ஷாட் எடுக்க முற்பட்டால்…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

டுவிட்டர் இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் கொடிக் கட்டி பறக்கிறது. உள்ளூர் முதல் உலக நாயகர்கள் வரை டுவிட்டரை பயன்படுத்துவதால் அதன் தாக்கமும், வீச்சும் அதிகமாக காணப்படுகிறது. இப்போதெல்லாம் பல சமூகமாற்றங்களுக்கு டுவிட்டரும் பெரும் பங்கு வகிக்கிறது. வீடியோ, போட்டோ உட்பட தங்களது கருத்துகளை எளிமையாக கொண்டு சேர்க்கவும், தங்களுக்கு கிடைத்த தகவல்களை மற்றவர்களிடம் அனுப்பவும் டுவிட்டர் பயன்படுகிறது. டுவிட்டர் தங்களின் பயனாளர்களுக்கு புளூடிக் கொடுத்து அங்கீரிப்பதன் வாயிலாக பொய்யான தகவல்களும், ஆதாரமற்ற தகவல்களும் அவற்றில் பரவுவது ஓரளவு […]

Categories
சினிமா

“ஆதாமா? அப்டினா?” …. முதல் நாளே கமல்ஹாசனை கலங்கடித்த ஜி.பி.முத்து….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜிபி முத்து முதல் நாளே செய்த சேட்டைகள் வைரல் ஆகி வருகிறது.பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் நேற்று தொடங்கிய நிலையில் இந்த முறை டிக் டாக் பிரபலமான ஜி பி முத்து உள்ளிட்ட 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.நேற்று போட்டியாளர்கள் அறிவிப்பு நிகழ்ச்சியில் முதல் ஆளாக வந்த ஜிபி முத்து பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு சென்று ஜி பி முத்து வீட்டில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை…. 22 மாவட்டங்களில் கனமழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழையும், 22 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் இன்று  தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 22 மாவட்டங்களில் கன […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பேருந்துகள்….. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் பொதுவாகவே தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது வெளியூரில் இருக்கும் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.அதனால் அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்களின் கூட்டம் அலைமோதும்.இதனால் மக்களின் வசதிக்காக தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக முழுவதும் 16,688 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்!!…. சமாஜ்வாதி கட்சி தலைவர் மறைவு…. பிரதமர் மோடி இரங்கல்….!!!!

முலாயம் சிங் யாதவின்   மறைவு மிகவும் வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் முலாயம் சிங் யாதவ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் உயிர் காக்கும் மருந்துகளை கொண்டு சிகிச்சை அளித்தும் அவரின் நிலைமை மோசமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில்  அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவரின் இறப்பிற்கு பல மாநில […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தனிமையில் சந்தித்த காதலர்கள்…. பெற்றோரிடம் கதறி அழுத சிறுமி…. போலீஸ் அதிரடி….!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜமீன்ஊத்துக்குளி கிராமத்தில் பெயிண்டரான பார்த்திபன்(25) என்பவர் வசித்து வருகிறார். இவரும் 16 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி உள்ளனர். இந்நிலையில் ஆசை வார்த்தைகள் கூறி பார்த்திபன் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பொள்ளாச்சி மேற்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மீண்டும் வந்த பாகுபலி யானை” இரவு நேரத்தில் சாலையில் உலா…. பீதியில் பொதுமக்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிமலை அடிவார பகுதியில் சமயபுரம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டு யானைகள் இரவு நேரத்தில் நுழைகிறது. நேற்று முன்தினம் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதி வழியாக கல்லார் வனப்பகுதிக்கு சென்று, தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை நாசப்படுத்தியது. மேலும் இரவு நேரத்தில் பாகுபலி யானை சமயபுரம் பகுதியில் அங்கும் இங்கும் உலா வந்ததால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்க […]

Categories
தேசிய செய்திகள்

முலாயம் சிங் யாதவ் மறைவு… 3 நாட்கள்…. முதல்வர் யோகி ஆதித்யநாத் திடீர் அறிவிப்பு…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவருமான முலாயம்  சிங் இன்று காலமானார். முலாயம் சிங் யாதவியின் மறைவை முன்னிட்டு உத்திரபிரதேசத்தில் மூன்று நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்ற முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். முலாயம் சிங் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் உத்தர பிரதேச மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் முலாயம் சிங் யாதவின் இறுதிச் சடங்கு உத்தர பிரதேசத்தில் உள்ள அவரின் சொந்தமான கிராமமான சைஃபாய் பகுதியில் நடைபெறும் […]

Categories
அரசியல்

இப்படி எல்லாம் யார் காலிலும் விழக்கூடாது…? இது தப்பு.. சிறுமியிடம் சுயமரியாதை பாடம் எடுத்த கனிமொழி எம்.பி…!!!!

சென்னையில் திமுகவின் 15ஆவது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் திமு கவின் தலைவராக இரண்டாவது முறையாக முதல்வர் ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் திமுகவின் துணை பொது செயலாளர் ஒருவராக கனிமொழி எம்பி யை முதல்வர் ஸ்டாலின் நியமனம் செய்துள்ளார். இதனை அடுத்து கனிமொழியை நேற்று பல்வேறு நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு துறையினர் அவரை நேரில் சந்தித்து புதிய பதவிக்காக வாழ்த்து தெரிவித்துள்ளனர் சிலர் பொன்னாடை கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதிலும் முக்கியமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மோதிரத்தை விழுங்கிய நபர்…. விசாரணையின் போது நடந்த சம்பவம்…. போலீஸ் நடவடிக்கை…!!!

விசாரணையின் போது வாலிபர் மோதிரத்தை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்துவதற்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது அந்த வாலிபர் தொண்டாமுத்தூர் பகுதியில் வசிக்கும் விஜய்(26) என்பதும், அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இந்நிலையில் விசாரணை நடைபெற்ற போது அந்த வாலிபர் தனது கையில் அணிந்திருந்த மோதிரத்தை விழுங்கியதால் காவல் நிலையத்தில் பரபரப்பு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“5ஜி சிம் கார்டு மாற்று தருகிறோம்” நூதன முறையில் மோசடியில் ஈடுபடும் கும்பல்…. போலீசார் எச்சரிக்கை….!!!

இந்தியாவில் கடந்த 1-ஆம் தேதி பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்துள்ளார். இந்த சேவை முதற்கட்டமாக டெல்லி உட்பட முக்கிய நகரங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்நிலையில் 4ஜி சிம் கார்டுகளை 5ஜி சிம் கார்டுகளாக மாற்றுத் தருவதாக கூறி மர்ம கும்பலைச் சேர்ந்தவர்கள் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது, பணத்தை மோசடி செய்யும் மர்ம கும்பல் 4ஜி சிம் கார்டை 5ஜி  சிம் கார்டுகளாக மாற்றி […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்!…. தொடரும் கனமழை…. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய தகவல்….!!!

தலைநகர் டெல்லியில் 3 வது நாளாக இன்றும் மழை தொடரும் என்று மாநில ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இரண்டு நாட்களாக விட்டுவிட்டு பெய்து வரும் சாரல் மழையால் பகல் நேர வெப்பநிலை கணிசமாக குறைந்து 22 டிகிரி செல்சியஸ் என்கின்ற அளவை அடைந்துள்ளது. இதனால் கொடை வெப்ப முழுமையாக தணிந்துள்ளது. கடந்த வாரம் பகல் நேர வெப்பநிலை 35 டிகிரி என்கின்ற அளவு இருந்தது. பொதுவாக டெல்லியில் பருவமழை காலத்தில் மழை நாள் கணக்கில் நீடிக்காது. சிறிது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த வாலிபர்…. ஏமாற்றப்பட்ட கல்லூரி மாணவர்…. போலீஸ் விசாரணை….!!

கல்லூரி மாணவரிடம் பணம் மற்றும் செல்போனை பறித்த மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டியில் வசிக்கும் 22 வயதுடைய வாலிபர் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த வாலிபர் ஓரின சேர்க்கையாளர்களுக்கு இடையே தொடர்பு ஏற்படுத்தும் ஒரு செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்தார். அதன் மூலம் அவருக்கு வாலிபரின் நட்பு கிடைத்தது. இருவரும் செயலி மூலம் பழகி வந்தனர். இந்நிலையில் அந்த வாலிபர் சின்னவேடம்பட்டி ஜனதா நகரில் […]

Categories
உலக செய்திகள்

இஸ்லாமாபாத்தில் வணிக வளாகத்தில் திடீர் பயங்கர தீ விபத்து… மீட்பு பணிகள் தீவிரம்…!!!!!

இஸ்லாமாபாத்தில் உள்ள வணிக வளாகத்தில் திடீரென தீ ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள சென்டாரஸ் மாலில் மூன்றாவது அடுக்கு மாடியில் இன்று ஒரு பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் மேல் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகள் உட்பட மற்ற தளங்களில் தீ பரவியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் உயிரிழப்புகள் பற்றி உறுதியான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க ரயில் டிக்கெட்டை கேன்சல் பண்ணனுமா?… அதுவும் ஆன்லைனில்…. இதோ முழு விபரம்….!!!!

சுற்றுப்பயணம் (அல்லது) வெளியூர்களுக்கு திட்டமிடும் பல பேரும் கடைசி நேர சூழல் காரணமாக பயணத்தை மேற்கொள்ள முடியாமல் ரத்துசெய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டு விடுகிறது. அதுபோன்ற நிலையில் ஏற்கனவே புக்கிங் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்தால் மட்டுமே குறிப்பிட்ட தொகையை ஐஆர்சிடிசி திரும்பகொடுக்கும். சில பேருக்கு ஒட்டுமொத்தம் ஆக புக்பண்ண டிக்கெட்டுகளை எவ்வாறு கேன்சல் செய்வது..? மற்றும் ஒரு குழுவிலுள்ள ஒருவரின் டிக்கெட்டை எவ்வாறு கேன்சல் பண்ணுவது? என்ற சந்தேகம் இருக்கிறது. ஐஆர்சிடிசியில் அதற்குரிய ஆப்சன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தட்டி கேட்ட பானிபூரி வியாபாரி…. வாலிபரின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்….!!

பானிபூரி வியாபாரியை அடித்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்திற்கு உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அமர்சிங்(39) என்பவர் வேலை தேடி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வந்துள்ளார். இவர் ரோட்டரி நகர் ஏழாவது பிரதான சாலை ஓரமாக தள்ளு வண்டியில் பானிபூரி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4-ஆ ம் தேதி ஒரு வாலிபர் பானிபூரி சாப்பிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இதனை தட்டி கேட்ட அமர்சிங்கை அந்த வாலிபர் கற்களை கொண்டு […]

Categories
உலக செய்திகள்

மெக்சி கோவில் பள்ளி மாணவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா…? திடுக்கிடும் தகவல்கள்… பின்னணி என்ன…??

வட அமெரிக்க நாடான மெக்ஸிகோ உலக அளவில் போதைப்பொருள் அதிகம் பயன்படுத்தி வரும் நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. நாடு முழுவதும் போதை பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருக்கிறது. இந்த சூழலில் அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு மர்மமான முறையில் விஷம் கொடுக்கப்பட்டதும் அதன் பின்னணியில் போதை பொருள் கடத்தல் கும்பல் இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மெக்சிகோவின் தென் மாகாண சியாபாசில் உள்ள கிராமப்புற மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிவேகமாக சென்ற மோட்டார் சைக்கிள்…. கை குழந்தையுடன் பலியான தாய்…. பரபரப்பு சம்பவம்….!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தாயும், கைக்குழந்தையும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அமைந்தகரை பகுதியில் பூங்குழலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது ஆறு மாத கைக்குழந்தையுடன் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு சாலைக்கு மறுபுறம் இருக்கும் கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பூங்குழலி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இளம் பெண்ணும், அவரது கைக்குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். […]

Categories
அரசியல்

திடீரென சரிந்த தங்கம் விலை….. எவ்வளவு தெரியுமா….?? நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!

தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது நகைப் பிரியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி  சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது. இதனையடுத்தது ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.38,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்துள்ளது. இதனால், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,805-க்கு விற்பனை ஆகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே இதோ பாருங்க!!…. இனி உங்கள் பணம் பறிபோகாது…. மத்திய அரசு அதிரடி….!!!!

காசோலை மோசடிகளை தடுக்க உச்ச நீதிமன்றம் சிறப்பு குழுக்களை நியமித்துள்ளது. வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் மக்கள் தாங்கள் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை காசோலை மூலம் கொடுக்கின்றனர். ஆனால் அந்த வங்கி கணக்கில் போதிய தொகை இல்லாமல் போவதால் காசோலை மூலமாக பணம் பெற முடியாத சூழல் உருவாகும். மேலும் கொடுக்க வேண்டிய தொகைக்காக வங்கி காசோலை கொடுத்து மோசடியில் ஈடுபடுவது அதிகமாக  காணப்படுகிறது. இந்நிலையில்  சுமார் 35 லட்சம் மோசடி  வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

கலப்பு திருமண சான்றிதழ் சமர்ப்பிக்க தாமதம்….. அதுக்காக பணி நியமனத்தை மறுக்க கூடாது…. ஐகோர்ட் உத்தரவு.!!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இளங்கோ என்பவரை 4 வாரங்களில் பணி நியமனம் செய்ய பள்ளி கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கலப்பு திருமண சான்றிதழை தாமதமாக சமர்ப்பித்தார் என்பதற்காக பணி நியமனத்தை மறுக்கக்கூடாது என்றும், இளங்கோ என்பவருக்கு 4 வாரங்களில் பணி நியமனம் வழங்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பள்ளிக்கல்வித் துறைக்கு  உத்தரவிட்டுள்ளது. அதாவது, கலப்பு திருமணம் புரிந்தவருக்கான முன்னுரிமை ஒதுக்கீட்டின் கீழ் 4 வாரங்களில் மனுதாரருக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தீபாவளிக்கு 16,688 சிறப்பு பேருந்துகள் – தமிழக அரசு அறிவிப்பு …!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,688 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையானது 22ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகத்திலிருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். இந்நிலையில் தமிழகத்தில் 21,22,23ஆகிய மூன்று நாட்களுக்கு தீபாவளி சிறப்பு பேருந்து இயக்கம் தொடர்பான ஒரு ஆலோசனைக் கூட்டம் என்பது போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் […]

Categories
உலக செய்திகள்

இன்போசிஸ் நிறுவனத்தின் மீது வழக்கு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!

இன்ஃபோசிஸ் நிறுவனம் பாரபட்சமாக பணிக்கு ஆட்களை சேர்ப்பதாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய நீதிமன்றம் மறுத்துள்ளது. இன்போசிஸ் என்னும் பிரபல ஐடி நிறுவனத்தினுடைய ஆட்கள் சேர்க்கும் பிரிவில் துணை தலைவராக இருந்த ஜில் ப்ரீஜீன் அந்நிறுவனத்தின் மீது புகார் தெரிவித்திருக்கிறார். அதாவது பாலினம், தேசியம் மற்றும் வயது போன்ற அடிப்படையில் இன்போசிஸ் நிறுவனம் பாரபட்சமாக நடத்துவதாக குற்றம் சாட்டியிருக்கிறார். இது பற்றி அவர் தெரிவித்ததாவது, இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இருக்கும் சட்டவிரோதமான பாகுபாடான கலாச்சாரத்தை பார்த்து நான் அதிர்ந்தேன். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேடிக்கை பாக்காதீங்க…! தட்டி, உள்ளே தூக்கி போடுங்க… பாஜக ஆட்டத்தை அடக்குங்க… முதல்வருக்கு பரபரப்பு கோரிக்கை…!!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், உங்களுடைய நிதியமைச்சர் உடைய வண்டியை நோக்கி ஒரு பெண்ணை அனுப்பி செருப்பால் அடிக்கிறார், முதலமைச்சர் உடைய கட்டவுட்களை கொளுத்துகின்றார்கள், முதலமைச்சர் உடைய கொடும்பாவியை கொளுத்துகின்றார்கள். முதலமைச்சர் உடைய சுவரொட்டிகளை கிழிக்கிறார்கள். எல்லா அநியாய, அக்ரமங்களையும்  ஆட்டுக்குட்டி அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறான். தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில், ஒரு அரசியல் கட்சியின் தலைவனாக அண்ணாமலை என்கின்ற இந்த தலைவன் பொறுப்பேற்ற பிறகு, […]

Categories
தேசிய செய்திகள்

இனி செக் பவுன்ஸ் வழக்கை சமாளிக்க இப்படித்தான் பண்ணனும்…. அரசு எடுத்த அதிரடி முடிவு…..!!!!!

செக் பவுன்ஸ் வழக்குகளை திறம்பட சமாளிப்பதற்கு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள நாடு தயாராகி வருகிறது. செக்குகளை வழங்குபவரின் பிற கணக்குகளிலிருந்து பணத்தைக் கழிப்பது மற்றும் இது போன்ற சந்தர்ப்பங்களில் புது கணக்குகளைத் திறப்பதைத் தடுப்பது ஆகிய பல்வேறு நடவடிக்கைகளை நிதியமைச்சகம் பரிசீலித்து வருகிறது. அந்த வகையில் செக்பவுன்ஸ் வழக்குகள் அதிகரித்து வருவதைக் கருதி, அமைச்சகம் அண்மையில் உயர் மட்டக் கூட்டத்தைக் கூட்டியது. அவற்றில் பல்வேறு பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளது. உண்மையில், இது போன்ற வழக்குகள் சட்டஅமைப்பின் மீதான சுமையை […]

Categories
தேசிய செய்திகள்

#MulayamSinghYadav : உ.பியில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்…. முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல்.!!

உத்தர பிரதேசத்தில் 3 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ் கடந்த சில தினங்களுக்கு முன் கடும் உடல்நலக் குறைவால் டெல்லியை அடுத்த குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.. அவருக்கு வயது 82. ஆனால் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான முலாயம் சிங் யாதவுக்கு உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. முலாயம் சிங்கின் […]

Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் எப்போது முடியும்?…. அமைச்சர் சொன்ன ஷாக் நியூஸ்….!!!!

தர்மபுரியில் நடந்த பா.ஜ.க கூட்டத்துக்கு வருகை புரிந்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திருமதி பாரதி பிரவின் பவார், நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் பேசியதாவது “தமிழகம் பெருமை வாய்ந்த கலாச்சாரங்களை கொண்ட மாநிலம் ஆகும். மத்திய அரசானது மக்கள் நலனில் அக்கறைகொண்டு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளானது கொரோனா காரணமாக தடைப்பட்டது. மத்திய அமைச்சரவை இதற்கென நிதியை ஒதுக்கியது. தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

சென்னையில் நடைபெற்ற ராணுவ தேர்வு… ப்ளூடூத் பயன்படுத்தி மாணவர்கள் முறைகேடு… போலீசார் அதிரடி…!!!!!

சென்னையில் நடைபெற்ற ராணுவ தேர்வில் ப்ளூடூத் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை நத்தம்பாக்கத்தில் ராணுவ பள்ளி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் ராணுவ பணிகளுக்கான குரூப் சி தேர்வு நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது. இந்த தேர்வை வட மாநில இளைஞர்கள் உட்பட 1,728 பேர் எழுதியுள்ளனர். இந்த நிலையில் இந்த தேர்வில் பங்கேற்ற வட மாநில இளைஞர்கள் 28 பேர் சிறிய அளவிலான ப்ளூடூத்தை பயன்படுத்தி முறைகேடாக தேர்வு எழுதியது […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!!…. இனி அமுல் நிறுவனம் தனியார் நிறுவனம் கிடையாது…. அமைச்சர் அமித்ஷா தகவல்….!!!!

அமுல் மற்றும் பல  கூட்டுறவு சங்கங்கள் இணைக்கப்படும் என மத்திய உள்துறை மந்திரி  தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்திற்கு 3  நாள் பயணமாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா  வந்துள்ளார். இதனையடுத்த அவர் வடகிழக்கு கவுன்சிலின்  70-வது மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இயற்கை விவசாயம் மற்றும் டிஜிட்டல் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது. இந்நிலையில் அமுல் உள்ளிட்ட  பல கூட்டுறவு சங்கங்களை இணைத்து பல மாநிலங்களில்  கூட்டுறவு சங்கம் […]

Categories
சினிமா

நயனின் குழந்தைகள் ஆணா பெண்ணா?…. வெளியான PHOTO….. விக்னேஷ் சிவன் சொன்ன பதில்…..!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் இவர்களின் திருமணம் நடந்து முடிந்தது. இவர்களின் திருமணத்தில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். திருமணம் முடித்த கையோடு இரண்டு முறை ஹனிமூன் சென்ற இவர்கள் தங்களின் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தனர். அண்மையில் கூட விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு தனது மாமியார் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

இனி பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்கலாம்…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் பல பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் பள்ளிகளுக்கு அவ்வப்போது விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் மழை பெய்தால் பள்ளியின் தலைமை ஆசிரியரே விடுமுறை அறிவிக்கலாம் என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அதாவது ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பெய்யும் பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த பகுதிகளில் மழை பெய்யும் அளவைப் பொறுத்து கல்வி அலுவலர்களிடம் தெரிவித்துவிட்டு […]

Categories
உலக செய்திகள்

சுமார் 480 கோடிக்கு விற்பனை…. உலகையே வியக்க வைக்கும் பிங்க் நிற வைரக்கல்….!!!!

உலக வரலாற்றில் இதுவரை கிடைக்கப்பெற்ற வைரங்களில் பிங்க் நிற வைரம் தான் மிகவும் விலை உயர்ந்தது . ஹாங்காங்கில் சோதேபி ஏல நிறுவனம் 11.15 கேரட் வில்லியம்சன் பிங்க் ஸ்டார் வைரத்தை 49.9 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்துள்ளது. அவர் உண்மையான மதிப்பு 21 மில்லியன் டாலர் என்ற நிலையில் ஏலம் விடப்பட்டதில் 49.9 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டுள்ளது.கடந்த 1947 ஆம் ஆண்டு பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபத்திற்கு 23.60 கேரட் வில்லியம்சன் பிங்க் நிற வைரம் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா-நியூசிலாந்திற்கு இடையே ஒத்துழைப்பு வேண்டும்…. ஜெய் ஷங்கர் பேச்சு…!!!

இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையே இருக்கும் உறவில் புத்துணர்ச்சி தேவை என்று வெளியுறவுத் துறை மந்திரியாக இருக்கும் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார். வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அதன்படி வெலிங்டனில் கட்டப்பட்டிருக்கும் இந்திய உயர் ஆணையரகத்தை திறந்து வைத்துள்ளார். அப்போது அவர் தெரிவித்ததாவது, நியூசிலாந்து இந்தியா நாடுகளுக்கு இடையே இருக்கும் உறவை வளர்க்க வேண்டும். அது விவேகமான வழியாக அமையும். இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவு புத்துணர்வு பெற தயார் நிலையில் இருக்கிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எத்தனை 1000 ஸ்டாலின் வந்தாலும் ADMKவை அழிக்க முடியாது – எடப்பாடி அதிரடி பேச்சு …!!

1300க்கும் மேற்பட்ட மாற்றுகட்சியினர் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைத்து கொண்டனர். ஆத்தூர், கொங்கவள்ளி, ஏற்காடு பகுதியை சேர்ந்த திமுக – விசிக – பாமக ஆகிய கட்சியை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, எத்தனை ஆயிரம் ஸ்டாலின் பிறந்து வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. வரும்  தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கு கழகத்தின் ஆயிரக்கணக்கான மாற்று கட்சியினர் இணைந்ததே சாட்சி. […]

Categories
மாநில செய்திகள்

மத்திய பாஜக அரசின்… 1இல்ல… 2இல்ல… ”அந்த 3சட்டம்” வேல்முருகன் பரபரப்பு பேச்சு ..!!

அதிகார திமிர் பிடித்த ஆளுநரை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.  NIA என்கின்ற ஒன்றிய அரசின் இந்த புலனாய்வை, உடனடியாக கலைக்க வேண்டும். உபா என்கின்ற சட்டம் நீக்கம் செய்ய வேபண்டும் என்ற 3 கோரிக்கையை வைத்து  மனிதநேய மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், உபா என்கின்ற சட்டமும்  இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும்,  இந்தியாவின் ஒற்றுமைக்கும், இந்தியாவின் சமூக நீதிக்கும், இந்தியாவின் ஜனநாயக தன்மைக்கும்,  யாரெல்லாம் […]

Categories
சினிமா

தன்னை போல் யாரும் இந்த முடிவுக்கு போகக்கூடாது! மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு…. நடிகை தீபிகா படுகோன் செய்யும் சேவை….!!!!

பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் சில ஆண்டுகளுக்கு முன்னதாக மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டார். இதையடுத்து அவர் தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட்டதோடு, தன்னை போன்று மனஅழுத்தத்தினால் மனநல பாதிப்பால் விபரீத முடிவுகளில் ஈடுபடுவோரை தடுக்கும் அடிப்படையில் லைவ்லவ் லாப் எனும் அமைப்பினை பெங்களூரு ஒடிசாவில் துவங்கினார். இந்த அமைப்பினை தமிழகத்திலும் கொண்டு வருவதற்கு தீபிகா படுகோன் திட்டமிட்டார். அந்த வகையில் தற்போது திருவள்ளூர் மாவட்டம் ஈக்காட்டிலுள்ள வசந்தம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சங்கத்துடன் இணைந்து மனநலத் திட்டத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இரட்டை குழந்தை” சர்ச்சையில் சிக்கிய நயன்-விக்கி…? வெளியான தகவல்…!!!

திரைத்துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை நயன்தாரா. இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. அந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் இருவரும் குழந்தைகளின் பாதங்களை கொஞ்சி முத்தமிட்டபடி இருக்கின்றனர்.  வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ள நயன் விக்கி தம்பதியின் குழந்தைகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் வாடகை […]

Categories
மாநில செய்திகள்

முலாயம் சிங் யாதவ் மறைவு : தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்..!!

முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ் கடந்த சில தினங்களுக்கு முன் கடும் உடல்நலக் குறைவால் டெல்லியை அடுத்த குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.. அவருக்கு வயது 82. ஆனால் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான முலாயம் சிங் யாதவுக்கு உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. முலாயம் சிங்கின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் இன்று முதல் ஓலா, உபர் ஆட்டோக்கள் இயங்காது…? அரசு அதிரடி உத்தரவு…!!!!!

பெங்களூர் உட்பட கர்நாடகத்தில் பல்வேறு பகுதிகளில் செல்போன் செயலி மூலமாக வாடகை கார்கள் இயக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஓலா, உபர், ராபிடோ போன்ற நிறுவனங்கள் வாடகை கார்கள் வழங்கும் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனங்கள் இந்த சேவையில் ஆட்டோக்களையும் இணைத்து இருக்கிறது. இந்த சூழலில் இந்த வாகனங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இதனை அடுத்து கர்நாடக போக்குவரத்து ஆணையம் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் வாடகை கார்களை மட்டுமே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: இன்னொரு மொழிப்போரை திணிக்காதீர் – முக.ஸ்டாலின் அதிரடி அறிக்கை …!!

இன்னொரு மொழிப்போரை திணிக்க வேண்டாம் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் மத்திய அரசு ஒற்றுமையை காத்திட வேண்டும் எனவும், குடியரசு தலைவர் திரவுபதி  முர்மு  – மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு, கடந்த வாரம் அனுப்பி இருக்கக்கூடிய அறிக்கையிலே மத்திய அரசினுடைய கல்வி நிறுவனங்களான ஐஐடி போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளம்…. அதிர்ச்சியில் உறைந்த வாகன ஓட்டிகள்….!!!!!

மிகவும் பரபரப்பான சாலையில்  திடீரென பள்ளம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம்  மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நெய்டா பகுதியில்   கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் அஸ்ட்ரா சாலை இடிந்து நிலையில் இருந்தது. இந்நிலையில்  அப்பகுதியில் உள்ள சாக்கடை, குடிநீர் குழாய்களில்  ஏற்பட்ட உடைப்பை  சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சாலை திடீரென 20  அடி ஆழத்திற்கு இடிந்து உள்வாங்கியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம ஹாட்டானா லுக்கில் கீர்த்தி சுரேஷ்…. ஜொல்லு விடும் ரசிகர்கள்…. வைரல் புகைப்படம்….!!!

தமிழ் சினிமாவில் ‘இது என்ன மாயம்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து கோடியில் சம்பளம் வாங்கும் நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான சில படங்கள் தோல்வியை தழுவியதால் மார்க்கெட் குறைந்தது. இணையதளத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: lift கேட்ட பெண்ணை பலாத்காரம் செய்து”சாலையில் தூக்கி வீசிய நபர்”…. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்….!!!!

பெண்ணை பாலில் பலாத்காரம் செய்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜெய்சிங்பூர்  பகுதியில் பொறியியல் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 23 வயதுடைய பெண் ஒருவர் பிடெக் படித்து வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை வகுப்புகளை முடித்துவிட்டு வருவதற்கு தாமதமாகிவிட்டதால் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக ஒரு கார் வந்துள்ளது. இதனை பார்த்த அந்த பெண்  லிப்ட் கேட்டுள்ளார். இதனையடுத்து காரில் வந்த நபர் அந்த பெண்ணை   காரில் […]

Categories

Tech |