ஹிந்தியை திணிக்கும் முயற்சியை கைவிட்டு, இந்திய ஒற்றுமை சுடரை தொடர்ந்து ஒளிர செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார். இந்த கடிதத்தில், அலுவல் மொழி தொடர்பாக நாடாளுமன்ற குழு அளித்த அறிக்கை தொடர்பாக, ஊடகங்களில் வந்த செய்தி குறித்து அந்த கடிதமானது எழுதப்பட்டிருக்கிறது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழித் தொடர்பான நாடாளுமன்ற குழு குடியரசுத் தலைவர் அவர்களிடம் சமர்ப்பித்துள்ள […]