Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஜிம்னாஸ்டிக் போட்டி…. தனித்திறமைகளை வெளிப்படுத்திய வீரர் வீராங்கனைகள்….!!!!

திருச்சி மாவட்டத்தில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி நடைபெற்றுள்ளது. இந்தப் போட்டியானது அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியின் விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெற்று உள்ளது. மேலும் திருச்சி மாவட்டத்தின் அமெச்சூர் ஜிம்னாஸ்டிக் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டட்டுள்ளது. இந்த போட்டியை சங்க மேலாளர் மதன் கென்னடி அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். இந்த போட்டியில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் இதில் சமநிலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சமந்தாவின் “யசோதா”…. வெளியான ரிலீஸ் தேதி….. உற்சாகத்தில் ரசிகர்கள்…..!!!!

நடிகை சமந்தா நடிப்பில் இப்போது “யசோதா” எனும் பான் இந்தியா படம் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தை இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இயக்குகின்றனர். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். இப்படத்துக்காக சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற இருமொழிகளிலும் தனக்காக டப்பிங் பேசி இருக்கிறார். திரில்லர் வகை கதை அம்சம் உடைய இத்திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். ஸ்ரீ தேவி மூவிஸ் நிறுவனம் […]

Categories
உலக செய்திகள்

தொடரும் கனமழை…. நூற்றுக்கணக்கான வீடுகளை சூழ்ந்த வெள்ளம்…. பிரபல நாட்டில் மக்கள் அவதி…..!!!!!

ஆஸ்திரேலிய நாட்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அந்நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் விக்டோரியா ஆகும். இந்த மாநிலத்தில் தெருக்களில் விடப்பட்ட கார்கள் வெள்ளத்தால் முற்றிலும் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பத்திரமாக மீட்கபட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கமிஷன் கலெக்சன் கரப்ஷன்” மானம், ரோஷம் இருந்தா ஒரு அமைச்சரை வெளியே அனுப்புங்க…. திமுகவுக்கு மாஃபா சவால்….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பகுதியில் அதிமுக கட்சியின் பொன்விழா மற்றும் 51-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன்பிறகு பொதுக்குழு கூட்டத்தின் போது மழை பெய்தது. அந்த மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமானவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியன் பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக கட்சி மட்டும் தான் அனைத்து சமூகத்தினரையும் ஒன்றாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிவாஜியின் குடும்பத்தில் சொத்து தகராறு….. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

மறைந்த பிரபல நடிகர் நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிரபு, ராம் குமார் என்ற இரு மகன்களும், சாந்தி, ராஜ்வி என்ற இரு மகள்களும் உள்ளனர். கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசன் மரணத்திற்கு பிறகு ரூ.270 கோடி சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை எனவும் வீடுகளின் வாடகை பங்கு தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் கூறி சாந்தி மற்றும் ராஜீவ் ஆகிய இருவர் சென்னை ஐகோர்ட்டில் சிவில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். அதில், இந்து‌ வாரிசுரிமை சட்டத்தில் […]

Categories
உலக செய்திகள்

சிறையில் பயங்கர தீ விபத்து…. 4 பேர் உடல் கருகி பலி…. பிரபல நாட்டில் பெரும் பரபரப்பு….!!!!

ஈரான் நாட்டின் தலைநகர் தெக்ரான் ஆகும். இங்கு சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் அரசு எதிர்ப்பாளர்களும் வெளிநாட்டு கைதிகளும் அடித்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிறையில் நேற்று முன்தினம் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்திற்கு காரணம் சிறை கைதிகள் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலின் போது துணிக்கிடங்கில் தீ பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ மளமளவென சிறைச்சாலை முழுவதும் பரவியது. இந்த தீயினால் ஏற்பட்ட கரும்புபுகை அப்பகுதிகளைச் சூழ்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

8 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. தாய் அளித்த புகார்…. யோகா ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை….!!

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த யோகா ஆசிரியருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ஜேம்ஸ் மரிய ஞானராஜ் என்பவர் யோகா ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு ஜேம்ஸ் மரிய ஞானராஜ் அதே பள்ளியில் படித்து வந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதனையறிந்து அதிர்ச்சி அடைந்த தாயார் இதுகுறித்து அண்ணாநகர் அனைத்து மகளிர் […]

Categories
மாநில செய்திகள்

மேட்டூர் அணையில் தொடர்ந்து உபரி நீர் திறப்பு….. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை 12 மாவட்ட பொதுமக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது. பருவமழை காலங்களின் போது கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படும். தற்போது கர்நாடக மாநிலம் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. அதன் பிறகு கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்தும் மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் […]

Categories
தேசிய செய்திகள்

நான் உங்கள் மகனுக்கு டியூஷன் எடுக்கிறேன்…. மாணவனை அழைத்து சென்று தோஷத்தை தீர்த்த டீச்சர்…. விசாரணையில் வெளிவந்த அதிரடி திருப்பம்….!!!!

சிறுவனை பள்ளி ஆசிரியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பஸ்தி பாவா கேல் பகுதிகள் 13 வயது சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுவனுக்கு டியூஷன் சொல்லிக் கொடுப்பதாக கூறி பெற்றோரிடம் அனுமதி வாங்கி சிறுவனை  மங்லிக்   ஆசிரியை தனது  வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின் தனக்கு திருமண தோஷம் இருப்பதால்  சிறுவனை திருமணம் செய்து கொண்டார். மேலும் மஞ்சள்-மருதாணி  வைப்பது முதல் தேனிலவு  வரை நடத்தியுள்ளார். […]

Categories
Uncategorized

தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம்…. எதற்காக தெரியுமா?…. பெரும் பரபரப்பு….!!!!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகில் வாலிநோக்கம் கிராமத்தில் அரசு உப்பு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த உப்பு நிறுவன தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு ஊதிய உயர்வு வழங்குவது நடைமுறையில் இருந்து வந்தது. கடந்த 8 ஆண்டுகளாக புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்று சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் பல போராட்டங்களில் நடத்தி வந்தனர். இதனையடுத்துஅதிகாரிகள் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக கால அவகாசம் கேட்டனர். இந்நிலையில் அதிகாரிகளின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

OMG: இவன் தான் காரணம்?…. 8 மாத கர்ப்பிணியாக 16 வயது சிறுமி…. பெரும் அதிர்ச்சி…..!!!!

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய, வாலிபரை காவல்துறையினர் வலைவீசை தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள மேல்காங்கிருப்பு கிராமத்தில் வசித்து வருபவர் காசிலிங்கம் மகன் ஜெயபால்(23). இவர் முத்தாண்டிக்குப்பம் பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமியை காதலிப்பதாக சொல்லி அவரிடம் நெருங்கி பழகி வந்ததோடு, உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அச்சிறுமி இப்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]

Categories
ஆன்மிகம் கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குகநாதீஸ்வரர் கோவில்…. 1008 சங்காபிஷேகம்…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் குகநாதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் புரட்டாசி மாத நட்சத்திரம் தண்டு 1008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருவாதிரை நட்சத்திர தினத்தன்று 1008 சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 6 மணிக்கு கணபதி ஹோமமும் 7.30 மணிக்கு தீபாராதனையும் காட்டப்பட்டது. இதனை அடுத்து 1008 சங்குகள் சிவலிங்கம் வடிவில் வைத்து பூஜை செய்ய ப்பட்டு பின்னர் குகநாதீஸ்வரருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதனைதொடர்ந்து மதியம் 12 மணிக்கு […]

Categories
மாநில செய்திகள்

PSTM Certificate என்றால் என்ன….? எதற்காக உதவும்….? மாணவர்களே கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!!

தமிழகம் முழுவதும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் தமிழ் மொழியில் படித்ததற்கான சான்றிதழ் பெற இசேவை மூலம் விண்ணப்பிக்கும் முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. இ சேவை மையங்கள் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாக சரிபார்ப்பு செய்து சான்று வழங்கப்படும் என்றும் தமிழ் வழியில் படிப்பதற்கான சான்றிதழ் தலைமை ஆசிரியர்கள் ஆன்லைன் மூலமாகவே மட்டுமே வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்PSTM Certificate என்றால் என்ன….?  என்பது குறித்து பார்க்கலாம் PSTM Certificate Full Form Person […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“தர்ணாவில் ஈடுபட்ட‌ பெண்” தரையில் அமர்ந்து குறை கேட்ட கலெக்டர்…. அடுத்த நொடியே கைது…. வேலூரில் பரபரப்பு….!!!!!

வேலூர் மாவட்டத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன் பிறகு குறைதீர்க்கும் கூட்டத்தில் மலைகன்னிகாபுரம் பகுதியில் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மகள் விஜயலட்சுமி என்பவர் மனு கொடுப்பதற்காக வந்திருந்தார். இந்தப் பெண் திடீரென கூட்டம் முடிவடைந்த பிறகு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார். அந்த பெண்ணிடம் […]

Categories
உலக செய்திகள்

கனமழை மற்றும் நிலச்சரிவு தொடரும்…. பிரபல நாட்டு வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையால் பரபரப்பு….!!!!

இலங்கை நாட்டில் கடந்து சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் அந்நாட்டில் உள்ள ஆறு மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு வருகின்றது. இந்த பலத்த மழை வெள்ளத்தால் சுமார் 50,000 மேற்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இலங்கையில் கனமழை மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் யார்…? சற்று நேரத்தில் முடிவு…!!!!

தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுகவில் தற்போது உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. எடப்பாடி மற்றும் ஓ பன்னீர்செல்வம் தனித்தனியாக பிரிந்து தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும்பாலான நிர்வாகிகளின் ஆதரவு இருப்பதால் தற்போது அவருடைய கையை அதிமுகவில் ஓங்கி இருக்கிறது. இருப்பினும் ஓபிஎஸ் அதிமுகவை தன்வசப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உதயகுமார் நியமனத்தை அங்கீகரிக்க வலியுறுத்தி, துணைத் தலைவராக ஓபிஎஸ் நீடிப்பதற்கு எதிர்ப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விபச்சார கூடமாக மாறும் தங்கும் விடுதிகள்….. முகம் சுழிக்கும் சுற்றுலா பயணிகள்….. பொதுமக்கள் வைத்த கோரிக்கை….!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் பக்கத்தில் ஆரோ என்ற இடம் உள்ளது. இது சுற்றுலாப் பயணிகளுக்கு புகழ்பெற்ற இடம் ஆகும். இந்தப் பகுதிக்கு உள் மாநிலத்தவர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டவர்களும் வந்து செல்கின்றனர். இதற்காக ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த ஆரோ பகுதிகளில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமாக இருக்கும். இவர்களின் வசதிக்காகவே குயிலா பாளையம், பட்டனூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. இந்நிலையில் இந்த தங்கும் விடுதிகளில் இரவு நேரங்களில் விபச்சாரம் நடைபெறுவதாக […]

Categories
அரசியல்

150ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 18) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (18.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளிலிருந்து, அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

எப்ப செய்யணும் எப்படி செய்யணும்….! அப்பவே செய்தேன்… இப்போ முடியாதா..? சசிகலா நறுக்…!!!!

தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுகவில் தற்போது உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. எடப்பாடி மற்றும் ஓ பன்னீர்செல்வம் தனித்தனியாக பிரிந்து தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும்பாலான நிர்வாகிகளின் ஆதரவு இருப்பதால் தற்போது அவருடைய கையை அதிமுகவில் ஓங்கி இருக்கிறது. இருப்பினும் ஓபிஎஸ் அதிமுகவை தன்வசப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில் செய்தால் அவர்கள் சந்தித்து பேசிய சசிகலா அதிமுக தொண்டர்கள் எனக்கு துணை நின்றால் போதும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தாமதம் ஆகும் பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி படங்கள்…. சுருதிஹாசன் தான் காரணமா?…. லீக்கான தகவல்….!!!!

நடிகை சுருதிஹாசன் தெலுங்கில் பால கிருஷ்ணா, சிரஞ்சீவி போன்றோருடனும், பிரபாசுடன் சலார் ஆகிய 3 திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். பால கிருஷ்ணா திரைப்படத்துக்கு தற்காலிகமாக “என் பி கே 107” என பெயர் வைத்துள்ளனர். சிரஞ்சீவி படம் ரவீந்த்ரா என்ற பாபி இயக்கத்தில் வால்தேர் வீரய்யா எனும் பெயரில் தயாராகிறது. இதில் பால கிருஷ்ணா, சிரஞ்சீவி படங்களை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த 2 திரைப்படங்களிலும் சுருதிஹாசன் தான் கதாநாயகியாக […]

Categories
மாநில செய்திகள்

Breaking: பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் தமிழ் மொழியில் படித்ததற்கான சான்றிதழ் பெற இசேவை மூலம் விண்ணப்பிக்கும் முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. இ சேவை மையங்கள் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாக சரிபார்ப்பு செய்து சான்று வழங்கப்படும் என்றும் தமிழ் வழியில் படிப்பதற்கான சான்றிதழ் தலைமை ஆசிரியர்கள் ஆன்லைன் மூலமாகவே மட்டுமே வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

+2 மாணவியை பெண் கேட்டு சென்ற காதலன்…. பின் நடந்த விபரீதம்… சோகம்….!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாம்ராஜ்(21). இவர் கஸ்தம்பாடி கிராமத்தை சேர்ந்த பிளஸ் டூ மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர்களுடைய காதல் விவகாரம் இரு குடும்பத்திற்கு தெரிய வரவே அந்த ப்ளஸ் டூ மாணவியின் வீட்டில் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து உள்ளனர். இதனால் மாணவி தன்னை தன் வீட்டிற்கு பெண் கேட்டு வரும்படி சாம்ராஜ்ஜிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து சாம்ராஜ் மாணவியின் பெற்றோரிடம் சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் மாணவியின் பெற்றோர் சாம்ராஜ்ஜை […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ சேவைக்காக அர்ப்பணித்த…. “மக்கள் மருத்துவர்” மகாலனபீஸ் காலமானார்….!!!!

பல லட்சம் பேர் உயிரைக் காப்பாற்ற உதவிய ‘ஓஆர்எஸ்’ கரைசலை கண்டுபிடித்த புகழ்பெற்ற மருத்துவர் திலீப் மகாலனபீஸ் (88) வயது மூப்பால் கொல்கத்தாவில் காலமானார். மே.வங்கத்தை சேர்ந்த திலீப், கடந்த 1966-ல் ஓஆர்எஸ் கரைசலை கண்டுபிடித்தார். நீர்ச்சத்து குறைவால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் எளிய வழியாக ஓஆர்எஸ் கரைசல் உள்ளது. தன் வாழ்நாளை மருத்துவ சேவைக்காக அர்ப்பணித்த மகாலனபீஸ், தன் வாழ்நாள் சேமிப்பான 1 கோடியை குழந்தைகள் நலத்துக்காக நன்கொடையாக அளித்தார்.

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை…? கோரிக்கை நிறைவேறுமா….? எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள்….!!!!

தீபாவளியை கொண்டாடுவதற்காக வெளி மாநிலங்களிலும், வெளியூர்களிலும் வசிக்கும் பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவது வழக்கம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பொது விடுமுறை விடுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ஆம் தேதி திங்கள்கிழமை வருகிறது. இவ்வாறு தீபாவளி திங்கட்கிழமை வருவதால் கூடுதல் விடுமுறை அளிக்க வேண்டும் என்பது அரசு மற்றும் தனியார் ஊழியர்களின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக அக்.22ம் தேதி சனிக்கிழமை, பணிக்கு திரும்ப ஏதுவாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

62 நாடுகள்!…18 மாதங்கள்… இதுக்கு அப்புறம் தான் படம் நடிப்பேன்?…. நடிகர் அஜித் போட்ட பிளான்….!!!!

நடிகர் அஜித்குமார் திரையுலகில் நடிப்பதோடு ஓய்வு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு பிரபலமான இடங்களை சுற்றிப்பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். சென்ற சில தினங்களாக அவர் பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் மோட்டார் சைக்கிள் பயணம் சென்றார். இதையடுத்து அஜித் விசாகப்பட்டினத்தில் துணிவு படப் பிடிப்பில் கலந்துகொண்டு முடித்ததும் இமயமலை பகுதியில் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டு கார்கில் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார். கேதார்நாத், பத்ரிநாத் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தார். இந்த […]

Categories
கல்வி

“எண்ணும் எழுத்தும் பயிற்சி திட்டம்” நடனமாடி அசத்திய ஆசிரியை…. வைரலாகும் வேற லெவல் வீடியோ…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதில் குறிப்பாக மாணவர்களின் கல்வியும் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டதால் தமிழக அரசானது இல்லம் தேடி கல்வித் திட்டம் மற்றும் எண்ணும் எழுத்தும் திட்டம் போன்றவற்றை அறிமுகப்படுத்தியது. இதில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் கிராமங்கள் தோறும் சென்று தன்னார்வலர்கள் மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்து கொடுத்தார்கள். அதன் பிறகு எண்ணும் எழுத்தும் திட்டத்தை பொருத்தவரை 1 முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணறிவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஹன்சிகா காலுக்கு கீழே வைத்து போட்டோ எடுக்குறாங்க”…. பத்திரிக்கையாளர்களை கடுமையாக விளாசிய தயாரிப்பாளர்….!!!!!

ஹன்சிகாவின் காலுக்கு கீழே கேமராவை வைத்து போட்டோ எடுத்ததாக பத்திரிக்கையாளர்களை கடுமையாக விளாசியுள்ளார் தயாரிப்பாளர் கே ராஜன். தயாரிப்பாளர் கே.ராஜன் பத்திரிக்கையாளர்களை விளாசியுள்ளார். பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த கே.ராஜன் பேசியதாவது, சினிமா நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஹன்சிகா பங்கேற்க வந்தார். ஆறு மணி நிகழ்ச்சிக்கு அவர் எட்டு முப்பது மணிக்கு வந்தார். ஹன்சிகா வந்ததுமே அவரை பத்து கேமரா மேன்கள் சுற்றி கொண்டார்கள். அவரை பல கோணத்தில் போட்டோ எடுத்த அவர்கள் காலுக்கு கீழே கேமராவை வைத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடர் மழை எதிரொலி… “ஆண்டிபட்டி அருகே கிராமத்தைச் சூழ்ந்த வெள்ளம்”…. சாலை துண்டிப்பு….!!!!!

ஆண்டிப்பட்டி அருகே தொடர் மழை எதிரொளியால் வெள்ள நீர் கிராமத்தை சூழ்ந்துள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சென்ற சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. நாச்சியார் புறத்திலும் கனத்த மழை பெய்தது. இதனால் கிராமத்தில் ஆங்காங்கே பல இடங்களில் மழை நீர் குட்டை போல் தேங்கி நிற்கின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆண்டிபட்டி, நாச்சியார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் கனமழை பெய்ததன் […]

Categories
கல்வி

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணம்…. எவ்வளவு வசூலிக்க வேண்டும் தெரியுமா….? தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் தனியார் கல்லூரிகள் அதிக அளவில் கட்டணம் வசூலிக்க கூடாது என்பதற்காகவும், அதிக கட்டணத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காகவும் நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் சுகாதாரத்துறை செயலாளர்கள் அடங்கிய ஒரு குழு செயல்பட்டு வருகிறது. இந்த குழு தனியார் கல்லூரிகள் முன்மொழியும் கட்டணத்தை ஆய்வு செய்து அது நியாயமானதாக இருக்கிறதா என்பதை பரிந்துரை செய்யும். அதோடு கட்டணங்கள் நியாயமாக இருந்தால் அதை அங்கீகரிப்பது மற்றும் ஆலோசனைகளையும் வழங்கும். இந்த குழு நடப்பாண்டுக்கான தனியார் மருத்துவ கல்லூரிகளின் கட்டணத்தை இறுதி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த…. “தஞ்சையில் 2 1/2 கோடியில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம்….!!!!!!

தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே இரண்டரை கோடி மதிப்பில் பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு வருகின்றது. தஞ்சாவூர் மாநகரின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றது. அதில் ஒரு பகுதியாக பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே தெற்கு அலங்கம் பகுதியில் 2 கோடி 50 லட்சம் மதிப்பில் பல அடுக்கு நிறுத்துமிடம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி…. “பாலாற்றின் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் வெள்ளம்”…. ஆபத்தை உணராத மக்கள்..‌‌..!!!!

கனமழை காரணமாக ஆம்பூர் பாலாற்றில் தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து செல்கின்றது. தமிழகம் மற்றும் ஆந்திர எல்லைப் பகுதிகளின் சென்ற சில நாட்களாகவே கனமழை பெய்து வருகின்றது. இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் வெளியேறி வருகின்றது. அந்த வகையில் ஆம்பூர் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் பச்சை குப்பம் பகுதியில் இருந்து குடியாத்தம் மற்றும் நரியம்பட்டு பகுதி சாலைகளை இணைக்கும் தரைப்பாலத்தை மூழ்கடித்தப்படி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. ஆனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுகள் ஆபத்தை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பாகற்காய் பாடலுக்கு நடனமாடி கும்மியடித்த தலைமை ஆசிரியை”…. வைரலாகும் வீடியோ….!!!!!

திருவாரூரில் ஆடிப்பாடி கும்மியடித்து தலைமை ஆசிரியை அசத்தியுள்ளார். தமிழகம் முழுவதும் காலாண்டு விடுமுறையின் போது தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்கின்ற கற்றல் செயல் திட்டத்திற்கான பயிற்சி வகுப்புகள் அந்தந்த மாவட்டங்களில் நடந்தது. அந்த வகையில் திருவாரூரில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் 200க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பங்கு பெற்ற எண்ணும் எழுத்தும் இயக்கத்தின் கீழ் பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் திருவாரூர் துர்காலயா சாலையில் அமைந்திருக்கும் மெய்ப்பொருள் அரசு உதவி பெறும் பள்ளியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : வாழ்வா?…. சாவா?…. வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இலங்கை….. யுஏஇ-யுடன் இன்று மோதல்.!!

இன்றைய தகுதிச்சுற்றின் 6 ஆவது போட்டியில் இலங்கை – யுஏஇ அணிகள் மோதுகிறது. ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தகுதிச் சுற்றுப் போட்டியில் இன்று (அக்.,18) ஜீலாங்கில் நடைபெறும்  6-வது போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய ஆட்டத்தில் யுஏஇ-யை இலங்கை அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. நமீபியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இலங்கை அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதேபோல ஐக்கிய அரபு அமீரகம் தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“முதல் நாமினேஷன்லையே இந்த பக்கிய தூக்குங்க பிக்பாஸ்”…. கோரிக்கை விடுக்கும் வியூவர்ஸ்….!!!!

முதல் நாமினேஷன்லையே அசல் கோலாருவை வீட்டுக்கு அனுப்புங்க பிக்பாஸ் என பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். பிக் பாஸ் தொடங்கியதில் இருந்து குவின்ஸியுடன் தான் அசல் கோலார் இருந்து வருகின்றார். இந்த அசல் கோலாருக்கு வேறு வேலையே இல்லையா என பார்வையாளர்கள் கேட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் குவின்ஸி விக்ரமனுடன் பேசிக்கொண்டு இருந்தபோது அவர் கையை தடவினார் அசல். இந்த வீடியோ வைரலாகிவிட்டது. ஒரு சின்ன பிள்ளையை இந்த அசல் என்ன பாடு படுத்துகிறார். இதைக் கேட்கவே மாட்டீங்களா […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அதிரடி வேட்டை”….. கோட்ட பொறியாளர் உட்பட சிக்கிய 3 பேர்… வழக்கு பதிவு….!!!!!!

போட்ட பொறியாளர் உள்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். திருவாரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் சென்ற 14ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை வேட்டையில் இறங்கினார்கள். இதில் கணக்கில் வராத 75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து கோட்ட பொறியாளர் இளவழுதி, உதவி கோட்ட பொறியாளர் மாரிமுத்து. இளநிலை பொறியாளர் குமாரசெல்வன் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே..! இன்று காலை 9.45 முதல் மாலை 5 மணி வரை….. இங்கெல்லாம் கரண்ட் கட்…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று 18-10-2022 மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. ஊத்துக்குளி, மற்றும் செங்கப்பள்ளி துைண மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள உயர் அழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று (செவ்வாய்க்கி ழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. குள்ளாயூர், அணைப்பாளையம், […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் தீபாவளி பரிசு இதுதான்….. செம மகிழ்ச்சியில் விவசாயிகள்…..!!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமான திட்டம் பிஎம் கிஷான் திட்டம் இந்த திட்டத்தின் கீழ் வருடம் தோறும் விவசாயிகளுக்கு 6000 நிதியுதவி வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 2000 ரூபாய் என்று வருடத்திற்கு மூன்று தவணையாக வழங்கப்படுகிறது. இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் 12 ஆவது தொகை எப்போது வரும் என்று விவசாயிகள் காத்திருந்தனர். இந்த நிலையில் 12-வது தவணை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“அரசு பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை”… மாணவர்களின் கல்வி பாதிப்பு….. ஆட்சியர் அலுவலகத்தில் மனு…!!!!!

முதலி பாளையம் ஹவுசிங் யூனிட் அரசுப் பள்ளியில் ஆசிரியர் பற்றாகுறையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகின்றது என ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கொடுத்தார்கள். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன் தினம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் மக்கள் தங்களின் குறைகளை மனுக்களாக ஆட்சியரிடம் கொடுத்தார்கள். அந்த வகையில் முதலிபாளையம் ஊராட்சி ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர்கள் மனு ஒன்றை கொடுத்துள்ளார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, முதலிபாளையத்தில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி இருக்கின்றது இப்பள்ளியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரச்சிதா பற்றி குவின்ஸி சொன்னது தான் சரி”…. பார்வையாளர்கள் ஆதரவு…!!!!!

ரச்சிதா குறித்து குவின்ஸி சொன்னது சரிதான் என்கின்றார்கள் பார்வையாளர்கள். பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. தொடங்கிய ஒரு வாரத்திலேயே நாமினேஷன் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் பார்வையாளர்கள் ஜி.பி.முத்துவை தவிர வேறு யாரை வேண்டுமானாலும் நாமினேட் செய்யுங்கள் என கூறுகின்றார்கள். குவின்ஸி ரச்சித்தாவை  நாமினேட் செய்து இருக்கின்றார். மேலும் ரச்சித்தா குறித்து ஒரு விஷயமும் கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, ரச்சிதாவுக்கு இன்னொரு முகம் இருக்கின்றது என தோன்றுகிறது. ஆனால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எங்களுக்கு வேண்டாம்….! திருப்பி வாங்கிக்கோங்க…. சர்வதேச வீராங்கனைகளுக்கு இந்த நிலமையா….???

மதுரையை சேர்ந்த இரண்டு மாற்றுத்திறனாளி வீராங்கனைகள் சங்கீதா, தீபா. இவர்கள் இருவரும் 20 வருடங்களாக வேலை கிடைக்காததால் விரக்தி அடைந்துள்ளனர். இதனையடுத்து தாங்கள் வாங்கிய பதக்கங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்துள்ளனர். சங்கீதா டேபிள் டென்னிஸ் போட்டிகளிலும், தீபா பேட்மிட்டன் போட்டியில் சர்வதேச அளவில் பதக்கங்களை வென்றுள்ளார்கள். இருப்பினும் இவர்கள் தங்களுக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்திருந்தும் இருவருக்கும் அரசு எந்த வேலையும் கொடுக்கவில்லை. இதனால் மன வேதனை அடைந்த இவர்கள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“ஸ்கூட்டரில் வைத்திருந்த பணம்”…. பட்டப்பகலில் அபேஸ் செய்த மர்ம ஆசாமி…. போலீஸ் வலைவீச்சு…!!!!!

பட்டப்பகலில் ஸ்கூட்டரில் விவசாய வைத்திருந்த 1 லட்சத்து 35 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் அருகே இருக்கும் கரட்டுப்பாளையம் பகுதியில் சேர்ந்த ராமலிங்கம் என்ற விவசாயி நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு கரட்டுப்பாளையத்தில் இருந்து ஸ்கூட்டரில் வெள்ளகோவிலில் இருக்கும் ஒரு வங்கிக்கு வந்தார். பின் வங்கியிலிருந்து ஒரு லட்சம் எடுத்து அதை ஒரு பையில் வைத்துக் கொண்டு வெளியே வந்தார். இதன்பின் அந்தப் பணப்பையை […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை… தமிழகம் முழுவதும் அரசு அதிரடி உத்தரவு…!!

இந்த வருடம் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை அன்று காலையில் எழுந்து தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து பட்டாசு வெடிப்பது வழக்கம். தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவமனைகள் வரை அனைத்து இடங்களிலும் தீக்காய சிகிச்சை பிரிவு மற்றும் மருந்துகளை தயார் நிலையில் வைக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ராக்கெட் ஏவுதளம்…. “கூடல்நகர் கிராம மக்கள் மறுகுடியமர்வு”…. ஆட்சியர் ஆய்வு….!!!!!!

ராக்கெட் ஏவுதளம் பணிக்காக கூடல் நகர் கிராம மக்களுக்கான மறுகுடியமர்வு இடத்தை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அடுத்து பூமத்திய ரேகைக்கு மிக அருகில் குலசேகரன் பட்டினம் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட இருக்கின்றது. இதனால் முதல் கட்டமாக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதுடன் எல்லைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது. இதில் ஏராளமான அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்கள் கையகப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதற்கு அந்தந்த இடங்களில் அமைந்துள்ள மரங்களைப் பொறுத்து இழப்பீடு வழங்கப்பட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

VJ சித்ரா மரணத்திற்கு காரணம் யார்….? வெளியான திடுக் தகவல்….!!!!!

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து பிரபலமான சின்னத்திரை நடிகை சித்ரா தன்னுடைய கணவருடன் ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவருடைய கணவரை காவல்துறையினர் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதன் காரணமாக கைது செய்து சிறையில் அடைத்தனர். பிறகு அவர் வெளியே வந்தார். VJ சித்ரா மரணமடைந்து ஓராண்டுக்கு மேல் ஆகிறது. ஆனாலும் அவரது தற்கொலையில் இருக்கும் சர்ச்சைகளும் கேள்விகளும் ஓய்ந்தபாடில்லை. சமீபத்தில் பேட்டி அளித்திருக்கும் சித்ராவின் கணவர் ஹேம்நாத், விஜய் டிவி VJ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BiggBoss: GP முத்து செய்த தரமான சம்பவம்…. ‘தலைவரே தலைவரே’ கொண்டாடும் ஹவுஸ் மேட்ஸ்…!!!!

டிக் டாக் செயலியில் தனது பயணத்தைத் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் ஒரு காலத்தில் விமர்சிக்கப்பட்டவர்தான் ஜி.பி.முத்து. துவக்கத்தில் வெறுத்தவர்கள் அனைவரையும் தனது ரசிகர்களாக்கி கோலோச்சி வருகிறார் இவர். டிக் டாக் முடக்கப்பட்டதை தொடர்ந்து யூடியூபில் கலக்கியவர் தற்போது பிக் பாஸில் நுழைந்துள்ளார். பிக் பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின், இதுவரை எவிக்ஷன் ஏதும் இல்லாததால் அமைதியாக இருந்த பிக்பாஸ் வீட்டில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இன்றைக்கு கைப்பிடியுடன் கூடிய […]

Categories
மாநில செய்திகள்

விஜயகுமார் மீண்டும் தமிழகம் வருகை… பின்னணி என்ன….???

டெல்லியில் உள்துறை ஆலோசகராக இருந்த விஜயகுமார் ஐபிஎஸ் தனது பணியை ராஜி னாமா செய்துவிட்டு தமிழ்நாடு திரும்பி உள்ளார். வீரப்பனை சுட்டுக்கொன்ற சிறப்பு படையின் தலைவராக இருந்தவர் விஜயகுமார். காஷ்மீர் ஆபரேஷனிலும், உள்துறை விவகாரங்களிலும் அமித் ஷா, ஐபியில் பணியாற்றிய ஆர்.என்.ரவி ஆகியோரிடம் நெருக்கமாக இருந்தார். தொடர்ந்து ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் மோதல் நீடித்து வரும் நிலையில் விஜயகுமாரின் வருகை பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. இவர் திடீரென தமிழ்நாட்டிற்கு திரும்பி உள்ளது பல விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

55 வயது பெண்ணை மயக்கி பலாத்காரம்…. ஆசிரமத்தில் கொடூரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

உத்திரபிரதேச மாநிலத்தின் லக்னோ நகரில் ஆசிரமம் ஒன்று உள்ளது. அதில் பிரயாக்ராஜ் நகரின் கர்ஜனா பகுதியை சேர்ந்த 55 வயது பெண் ஒருவர் தங்கி உள்ளார். இந்நிலையில் அவர் கோமதி நகர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் தாவரத்தை கிளப்பியுள்ளது. அதாவது கடந்த நான்காம் தேதி போதை பொருட்கள் சிலவற்றை தனக்கு கொடுத்ததாக அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார் .அதன் பிறகு சுயநினைவு இல்லாத பெண்ணை ஆசிரமத்தில் உள்ளவர்களில் சிலர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது பற்றி […]

Categories
மாநில செய்திகள்

இந்த வழித்தடத்தில் ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

திருச்சி கோட்டம் சீர்காழி ரயில் நிலையம் மற்றும் வைத்தீஸ்வரன் கோவில் ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெற உள்ள நிலையில் குறிப்பிட்ட ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம் இடையே மதிய 3.45 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மற்றும் வருகின்ற அக்டோபர் 21, 25, 28 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை மற்றும் சிதம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றது. இந்த ரயில் சிதம்பரத்திலிருந்து மாலை 4.34 மணிக்கு இயக்கப்படும். […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு இலவச பயிற்சி…. அக்டோபர் 26 ஆம் தேதிக்குள்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தொகுதி 5 ஏதேர்வுக்கு அரசு சார்பாக நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்பில் சேர இந்த மாதம் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்களுக்காக தமிழக அரசு சார்பில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, சார் தியாகராய கல்லூரி மற்றும் நந்தனம் அரசினர் ஆடவர் கலை கல்லூரி ஆகிய இடங்களில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் இலவச பயிற்சி வழங்கப்படுகின்றது. உதவி பிரிவு அலுவலர் மற்றும் உதவியாளர் ஆகிய பதவிகளுக்கான 161 காலியிடங்களை […]

Categories

Tech |