Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ரிஷப் பண்ட்டுக்கு இடமில்லையா..! ஹர்பஜன் அறிவித்த இந்திய லெவன் இதுதான்… யார் யார் இருக்கா.!

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை 2022 போட்டிக்கான இந்திய அணியை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார்.. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், நாளையுடன் முடிவடைகிறது 8 அணிகள் பங்கேற்றுள்ள தகுதி சுற்று போட்டிகள் முடிவடையும் நிலையில், அதிலிருந்து முதல் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி […]

Categories
மாநில செய்திகள்

மறுபடியும் ஏன்?…. ஜெயலலிதா ஹாஸ்பிடலில் பேசிய ஆடியோ…. இபிஎஸ்க்கு ரூட்‌ கிளியர்…. !!!!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை நேற்று முன் தினம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த விஷயம் தான் தேசிய அளவில் பேசு பொருளாக மாறி உள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, ஜெயலலிதா பேசிய ஆடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இது ஏற்கனவே வைரலாகி பல்வேறு சந்தேகங்களை, சர்ச்சைகளை கிளப்பிய ஆடியோ தான் என்பதே மறுப்பதற்கில்லை. இருப்பினும் மீண்டும் வைரலாவதால் அதிமுகவினர் மத்தியிலும்‌ பொதுமக்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

நேர்மை தவறிய மூத்த ஊழியரை வெறும் 10 நிமிடங்களில்…. விப்ரோ நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு….!!!!

விப்ரோ நேர்மை மீறல் அல்லது துன்புறுத்தலுக்கு எதிரானது எனவும் இவை இரண்டில் ஏதேனும் ஒன்றை மீறினால் ஊழியர் தன் வேலையை இழக்க நேரிடும் எனவும் விப்ரோ சேர்மன் ரிஷாத் பிரேம்ஜி தெரிவித்து இருக்கிறார். அதன்படி நேர்மை தவறிய ஒரு மூத்த ஊழியரை வெறும் 10 நிமிடங்களில் டிஸ்மிஸ் செய்தோம் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். விப்ரோ நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ததாக தகவல் வெளியாகிய சில வாரங்களுக்கு பின், அதன் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கொடுமையே!…. இறந்த சிறுமியை தோளிலேயே தூக்கிச் சென்ற நபர்….. நெஞ்சை உலுக்க வைக்கும் வீடியோ….!!!

மத்திய பிரதேசம் சத்தருப்பூர் மாவட்டத்தில் விபத்தில் மரணம் அடைந்த தனது சகோதரியின் மகளை மாவட்ட மருத்துவமனையில் பரிசோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர். பரிசோதனைக்கு பிறகு அந்த நபர் பிணத்தை புதைக்க அரசு மயானத்தை தேடி அலைந்துள்ளார். ஆனால் அங்கு எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. மேலும் தனியார் மயானத்தில் புதைக்கவோ அல்லது வாகனம் வைத்து கொண்டு செல்லவும் போதிய வசதி இல்லாத காரணத்தினால் தோளிலேயே தூக்கிக்கொண்டு தனது சொந்த கிராமத்திற்கு பேருந்தில் சென்று டிக்கெட் எடுக்கவே பணம் இல்லாத […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை…. சென்னையில் இருந்து கூடுதல் பேருந்துகள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை என்றாலே அது தீபாவளி பண்டிகை தான். பள்ளி, கல்லூரிகள் முதல் தொழில் நிறுவனங்கள் வரை அனைத்திற்கும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறைகள் அளிக்கப்பட்டு விடும். இதனால் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கும், உறவினர்களை காண்பதற்கு வெளியூர்களுக்கு அதிக அளவில் பயணங்களை மேற்கொள்வார்கள். இதனால் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் கூட்டம் அலைமோதும். இட நெருக்கடியை தவிர்ப்பதற்காக மக்களின் பயண வசதிக்காக அரசு கூடுதலாக சிறப்பு பேருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சபாநாயகர் படிக்க மாட்டாரா ? அவர் ஆசிரியர் தானே ? கொந்தளித்த எடப்பாடி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்றத்திற்குள் நடைபெறுகின்ற சம்பவம் வேறு, இது கட்சியில் வராது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இது போல ஒரு நிகழ்வு. அங்கு கட்சி உடைந்தது. ஏக்நாத் ஷிண்டே – உத்தவ் தாக்கரே.  சிவசேனா கட்சியில் ஒரு பிரச்சனை வந்து,  அங்கே இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அங்கே முதலமைச்சராக இருக்கிறார். அங்க இருக்கின்ற தலைவரா முதலமைச்சராக இருக்கிறார். ஆக சட்டமன்ற உறுப்பினர்களின் அடிப்படையில்தான் முதலமைச்சர் வர முடியும். பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் […]

Categories
மாநில செய்திகள்

என்னடா இப்படி பண்ணி வச்சிருக்கீங்க!…. அப்பட்டமாக மீறப்பட்ட கோட்பாடுகள்….. சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு….!!!!

பொதுப் பட்டியலில் குளறுபடிகள் நடந்துள்ளது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அகில இந்திய மருத்துவக் கல்லூரி அனுமதி இடங்களுக்கான ஓ.பி.சி இட ஒதுக்கீட்டில் விதிமீறல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இட ஒதுக்கீடு இடங்கள் என்றாலே பொதுப் போட்டியில் இடங்கள் நிரப்பப்பட்ட பின்னர் இட ஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படும் என்பதே ஆகும். அதாவது, பொதுப் போட்டியில் அனுமதி பெறுகிற ஓ.பி.சி, எஸ் சி, எஸ்.டி பிரிவினர் இட ஒதுக்கீடு எண்ணிக்கையில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்று 32 மாவட்டங்களில்…. “வெளுத்து வாங்கப்போகும் மழை”…… எங்கெங்கு தெரியுமா?

தமிழகத்தில் இன்று 32 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக  தமிழகத்தின் 32 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. 41 வருசத்துக்கு முன்னாடி செஞ்ச கேக் ஏலம்… விலை என்ன தெரியுமா?…

பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் இளவரசி டயானாவின் திருமணத்தின் போது சுமார் 41 வருடங்களுக்கு முன் தயார் செய்யப்பட்ட கேக், ஏலத்திற்கு விடப்படவிருக்கிறது. பிரிட்டனின் மன்னரான சார்லஸ் மற்றும் மறைந்த இளவரசி டயானா இருவருக்கும் கடந்த 1981 ஆம் வருடம் ஜூலை மாதம் 29ஆம் தேதி அன்று திருமணம் நடைபெற்றது. அந்த சமயத்தில் 3000- திற்கும் அதிகமான விருந்தினர்கள் பங்கேற்றனர். அந்த விருந்தினர்களில் ஒருவரான நைஜல் ரிக்கட்ஸ் கடந்த வருடம் மரணமடைந்தார். அவர் மன்னர் சார்லஸ் திருமணத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : நெதர்லாந்தை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்ற இலங்கை..!!

இலங்கை அணி நெதர்லாந்தை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் 9வது தகுதிச்சுற்று போட்டியில் நெதர்லாந்து – இலங்கை அணிகள் இன்று இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு முதல் ஜீலாங்கில் மோதியது.. இப்போட்டியில் காயமடைந்த சமீரா மற்றும் பிரமோத் ஆகியோருக்கு பதிலாக பினுரா மற்றும் லஹிரு குமாரா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷானகா முதலில் பேட்டிங் […]

Categories
தேசிய செய்திகள்

டிப்பர் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!… நொடியில் பறிபோன 2 உயிர்…. பெரும் சோகம்….!!!!

லடாக்கில் சாலை அமைப்பதற்குரிய பணியில் ஈடுபட்டிருந்தபோது சென்று கொண்டிருந்த ரிசர்வ் பொறியாளர் படையினரின் டிப்பர் லாரி ஒன்று நேற்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் இறந்தனர். அத்துடன் பலர் காயமடைந்தனர். லடாக்கின் சசோமா-சசர் லா பகுதியில் தொழிலாளர்கள் சில பேர் டிப்பர் லாரியில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இவ்விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு…. வயது வரம்பு அதிரடி உயர்வு…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நடத்தப்படும் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ள விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் இருந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு அறிவிப்பில் வயது வரம்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஆசிரியர் பணி நியமனங்களுக்கு 40 வயது வரம்பு என குறிப்பிடப்பட்ட […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இனி இப்படி செய்தால் அவ்வளவுதான்…. மக்களுக்கு திடீரென எச்சரிக்கை விடுத்த சென்னை மாநகராட்சி….!!!!

இன்றளவும் கழிவு நீர் தொட்டியில் ஏதாவது பிரச்சனை இருந்தால் அதனை சரி செய்ய துப்புரவு பணியாளர்களை தான் அனைவரும் நாடுகிறோம். கழிவு நீர் தொட்டியில் இறங்கும் அந்த நபர் விஷ வாயு கசிவால் பாதிக்கப்படும் சம்பவங்களும் அதிகம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.இந்த வாயுவை சுவாசிக்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டு மரணங்களும் நிகழ்கிறது.இது போன்ற நிகழ்வுகளை தடுக்கும் நோக்கத்தில் சென்னை மாநகராட்சி வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டி மற்றும் கழிவு நீர் பாதையில் இறங்கி சுத்தம் செய்ய எந்த […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”….. அரசு ஊழியர்களுக்கு 5000 ரூபாய் தீபாவளி போனஸ்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மத்திய அரசு பண்டிகை பரிசாக தங்களின் ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வை அறிவித்தது. அதன்படி அகலவிலைப்படி 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து மாநில அரசுகளும் அகலவிலைப்படையை நான்கு சதவீதம் உயர்த்தி வரும் நிலையில் ஹரியானா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அதிகாரப்பூர்வ அகலவிலை படியை உயர்த்தி அறிவித்துள்ளன.அகலவிலைப்படி மட்டுமல்லாமல் போனஸ் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில அரசு […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

ஆதாரத்தை அடுக்கிய எடப்பாடி…! கண்டு கொள்ளாத சபாநாயகர்… ஓபிஎஸ்-சுக்கு செம சப்போர்ட் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக துணை தலைவர் தொடருவார் என்ற செய்தி வெளிவந்தவுடன் தான்… சட்டப்பேரவை தலைவர் அவர்களை சந்தித்து எங்களுடைய கருத்துக்களை தெரிவித்தோம். அதோடு நான் முழுமையாக எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் கடிதம்,  கையப்பமிட்ட கடிதத்தை கொடுத்திருக்கிறோம். அது மட்டுமல்ல எங்களுடைய நியாயத்தை அதையும் பட்டியலிட்டு கொடுத்திருக்கின்றோம். இரண்டு முறை ஏற்கனவே கொடுத்துவிட்டோம், மூன்றாம் முறை எங்களுடைய சட்டமன்ற மூத்த உறுப்பினர்கள் சட்டபேரவை தலைவருடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதை மட்டும் நிரூபித்தால்…. நான் அரசியலை விட்டு விலகுகிறேன்…. ஓபிஎஸ் தடாலடி….!!!

நானும் முதல்வர் ஸ்டாலினும் சந்தித்து பேசியதை பழனிச்சாமி நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். நான் ஒரு மணி நேரம் முதல்வருடன் பேசியதாக இபிஎஸ் குற்றம் சாட்டுகிறார். நான் அப்படி பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன். ஒருவேளை அதனை நிரூபிக்க தவறினால் எடப்பாடி அரசியலை விட்டு விலகுவாரா என ஓபிஎஸ் சவால் விடுத்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தொடர்பாக என்னைப் பற்றி ஏதாவது விமர்சனம் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் புதிய பாடப்பிரிவு…. யுஜிசி அதிரடி உத்தரவு….!!!

நாடு முழுவதும் கல்லூரிகள்,பல்கலைக்கழகங்களில் இரங்கலை மற்றும் முதுகலை அளவில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்குவதற்கு பல்கலைக்கழக மானிய குழு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.இணைய பாதுகாப்பின் முக்கியத்துவத்தை கருதி அதனை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை அளவில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த பாடத்திட்டம் ஆனது அதிக விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பான சைபர் பாதுகாப்பை உறுதி செய்யும் என பல்கலைக்கழக மானிய […]

Categories
தேசிய செய்திகள்

செல்போன் வாங்க ரத்தத்தை விற்க முயற்சித்த பெண்…. பரபரப்பு சம்பவம்…..!!!!

மேற்கு வங்கத்தில் ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக 16 வயது சிறுமி தனது ரத்தத்தை விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைனில் 9000 ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் ஃபோனை சிறுமி  ஒருவர் ஆர்டர் செய்துள்ளார் . அதற்கான பணத்தை திரட்டுவதற்காக ரத்த வங்கியில் தனது ரத்தத்தை விற்க முயற்சி செய்து உள்ளார். தன்னுடைய ரத்தத்தை செலுத்தினால் பணம் தருவீர்களா என அந்த சிறுமி கேட்ட நிலையில் சிறுமி விபரீத செயலில் ஈடுபட்டு உள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இன்று முதல் தமிழகம் முழுவதும் அமல்…. இனி இதற்கெல்லாம் அபராதம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழக முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.இதன்படி லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 500 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை, தலைக்கவசம் அணியாவிட்டால் ஆயிரம் ரூபாய், சிக்னலை மதிக்காமல் சாலையை கடப்பவர்களுக்கு 500 முதல் 1500 ரூபாய், பொது இடங்களில் வாகனங்களை ஆபத்தான முறையில் நிறுத்திவிட்டு சென்றால் ஆயிரம் முதல் 100 ரூபாய் வரை,அதிகாரிகளிடம் தவறான தகவலை அளித்தால் 2000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு […]

Categories
உலக செய்திகள்

14 வயது மாணவனுடன் காரில் பாலியல் வல்லுறவு…. ஆசிரியை கைது…. அதிர்ச்சி சம்பவம்…..!!!!

அமெரிக்காவின் ஜோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் நாடகத்துறை ஆசிரியராக பணியாற்றி வரும் 31 வயதான பிரிட்டினி லோபஸ் முர்ரே என்பவர் அந்தப் பள்ளியில் பயிலும் 14 வயது மாணவனுடன் சுமார் இரண்டு மாதங்களாக பாலியல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த ஆசிரியர் மீது தற்போது மாணபங்கப்படுத்துதல்,குழந்தையோடு அத்துமீறி உறவு கொள்ளுதல் முதலான பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை அந்த ஆசிரியரின் அந்தரங்க புகைப்படங்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : விலகிய முக்கிய வீரர்…. “இங்கிலாந்துக்கு பின்னடைவா?”…. அவருக்கு பதில் இவர்தான்.!!

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து இங்கிலாந்து வீரர் ரீஸ் டாப் விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தகுதி சுற்று போட்டிகள் கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள தகுதிசுற்று போட்டிகள் நாளையுடன் முடிவடையும் நிலையில், பிரதான சூப்பர் 12 சுற்று போட்டிகள் 22 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கிடையே சூப்பர் 12 சுற்றில் இடம்பெற்றுள்ள அணிகள் அனைத்துமே பயிற்சி போட்டியில் விளையாடி வந்தன. அதேபோல இங்கிலாந்து அணியும் பயிற்சி […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டாலின் ஆலோசனைப்படி செயல்படும் சபாநாயகர் அப்பாவு : எடப்பாடி பரபரப்பு குற்றச்சாட்டு ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற கட்சியினுடைய துணை தலைவராக, அனைத்திந்திய அண்ணா திராவிட பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு அதை மாண்புமிகு சட்டப்பேரவை தலைவரிடம் நாங்கள் ஒப்படைத்தோம். கிட்டத்தட்ட 62 சட்டமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு சட்டப்பேரவை தலைவருடன் திரு.உதயகுமார் அவர்களை எதிர்க்கட்சியின் துணைத் தலைவராகவும், திரு அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்களை துணைச் செயலாளராக நியமனம் செய்ய வேண்டும் என்று கடிதம் கொடுக்கப்பட்டு,  […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரூ.1,050 கோடி மதிப்பில் புது வகுப்பறைகள்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…..!!!!

ரூ.1,050 கோடி மதிப்பில் புது வகுப்பறைகள் கட்டப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரானது நேற்று கூடியது. இந்நிலையில் 110 விதியின் கீழ் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் பள்ளிக்கல்வி குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் “கடந்த ஓராண்டுக்காலத்தில் பள்ளிக் கல்வித் துறையானது மகத்தான பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து இருக்கிறது. இந்திய ஒன்றியத்திலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் வண்ணம், காலை உணவுத் திட்டம், இல்லம்தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

மரத்துப்போன மனிதநேயம்….. மருத்துவமனையில் தூங்கியதற்கு உதைத்த பெண்…. வைரல் வீடியோ….!!!!

சத்தீஸ்கரில் அம்பேத்கர் மருத்துவமனை கல்லூரியில் திங்கட்கிழமையன்று காத்திருப்பு அறையில் படுத்து உறங்கிய நபர் அங்கிருந்த கூலரை ஆன் செய்து தூங்கி உள்ளார். காலை அங்கு வந்த பெண் ஒருவர் கூலரை ஆப் செய்துள்ளார். ஏன் ஆப் செய்தீர்கள் என அந்த நபர் கேட்டதற்கு, உடனே அந்தப் பெண் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்திருந்த நபரை செருப்பால் பலமுறை அடித்ததுடன் காலால் எட்டி உதைத்துள்ளார். இதற்கிடையில் அங்கு நின்ற நபர் ஒருவர் அந்த நபரை குச்சியால் குத்துகிறார். இதனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பத்தல பத்தல” ரொம்ப மொக்கையா இருக்கு…. ஜி.பி முத்து சொன்னது சரி‌‌…. வைரலாகும் வேற லெவல் ப்ரோமோ….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக பரிச்சயமில்லாதவர்களாக உள்ளனர். இதனால் இந்த சீசனை ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். தற்போது மைனா நந்தினி வைலட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். இந்நிலையில் இன்றைய முதல் பிரமோ வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில், கதை சொல்லும் டாஸ்க் பலரும் […]

Categories
மாநில செய்திகள்

இனி போதை நபருடன் வாகனத்தில் செல்பவர் மீதும்…. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை….!!!!

நம் நாட்டிலேயே அதிகமான சாலைவிபத்து மரணங்கள் தமிழகத்தில் நடப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் 11,419 இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்து இருக்கிறது. இதில் சென்னையில் மட்டும் 1026 நபர்கள் சாலை விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். சாலை விபத்துகளை குறைப்பதற்கு போக்குவரத்து காவல்துறையினர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் புது திட்டத்தையும் நடைமுறைபடுத்தி வருகின்றனர். அத்துடன் குடித்துவிட்டு வாகனத்தை இயக்குவதாலேயே அதிக விபத்துகள் நிகழ்வதால் அதனை தடுக்க […]

Categories
மாநில செய்திகள்

“அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கு”…. கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிரடி….!!!!

தமிழகத்தில் தற்போது மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி கடந்த 2011-15 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி நிறைய பேரிடம் பண மோசடி செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தது. அந்த புகாரின் பேரில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அன்ன ராஜ், தேவசகாயம், சகாய ராஜன் மற்றும் பிரபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு எம்எல்ஏக்கள் மீதான சிறப்பு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : குசால் மெண்டிஸ் அதிரடி அரைசதம்…. 163 ரன்களை சேஸ் செய்யுமா நெதர்லாந்து?

டி20 உலகக்கோப்பை கடைசி தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை அணி 163 ரன்களை நெதர்லாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. 2022 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையின் 9வது தகுதிச்சுற்று போட்டியில் நெதர்லாந்து – இலங்கை அணிகள் இன்று இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் ஜீலாங்கில்விளையாடி வருகிறது .. நடப்பு ஆசியக் கோப்பை சாம்பியனான இலங்கை அணி  ஐக்கிய அரபுக்கு எதிராக கடந்த போட்டியில்  அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து சூப்பர் 12 கட்டத்தில் இடம்பிடிக்கும் […]

Categories
டெக்னாலஜி

நீங்க ஸ்மார்ட்போன் வாங்க போறீங்களா?…. அப்போ தீபாவளிக்கு முன்பே போங்க…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் இப்போது பண்டிகைக்காலத்தை முன்னிட்டு பெரும் தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் வாயிலாக இந்த தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. ஆகவே மொபைல்கள், ஸ்மார்வாட்ச்கள் ஆகிய சாதனங்களை வாங்க இதுவே சிறந்தநேரம் என்பதால், அதன் விற்பனையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தற்போதைய பண்டிகைக்காலங்கள் நிறைவடைந்தவுடன் வாடிக்கையாளர்களுக்கு, ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் மிகப் பெரிய அதிர்ச்சியை அளிக்க இருப்தாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக வெளியான தகவலில், இந்தியாவில் பண்டிகைகாலங்கள் நிறைவுபெற்றதும் ஸ்மார்ட் […]

Categories
டெக்னாலஜி

ஒப்போ பயனர்களே!…. குறைந்தது ஸ்மார்ட் போன்களின் விலை…. எவ்வளவு தெரியுமா?… உடனே வாங்க கிளம்புங்க….!!!!

இந்திய சந்தைகளில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட் போன்களில் Oppo நிறுவனத்தினுடைய மொபைல்களும் ஒன்று. அதே நேரம் அந்நிறுவனத்தின் விலை சற்று அதிகமாக உள்ளதாக வாடிக்கையாளர்களிடம் அவ்வப்போது கருத்து எழுவதுண்டு. இப்போது ஓப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தேர்வுசெய்யப்பட்ட தன் ஸ்மார்ட் போன் மாடல்களுக்கு அசத்தல் விலை குறைப்பு அறிவித்து இருக்கிறது. அந்த வகையில் ஓப்போ F21 ப்ரோ, ஓப்போ ஏ55 மற்றும் ஓப்போ ஏ77 ஆகிய மாடல்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. ஓப்போ இந்தியா அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு… வரலாறு காணாத வீழ்ச்சி…!!!!!

கொரோனாவால் வீழ்ச்சியை சந்தித்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல நாடுகள் முயற்சி செய்து வருகின்ற நிலையில் உக்ரைன் ரஷ்யா இடையேயான போர்  உலகப் பொருளாதாரத்தை மேலும் பின்னோக்கி தள்ளுகின்றது. மேலும் போரால் கச்சா எண்ணெய் உணவு தானியங்களில் விலை அதிகரிக்க தொடங்கி இருக்கின்றது. இதன் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பொருட்களின் விலை ஏற்றமடைந்து பணவீக்கம் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் பண வீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கி உட்பட பல நாடுகளின் வங்கிகள் வட்டி விகிதத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பிரின்ஸ்’ படத்தை இதற்காகவே பார்க்கலாம்….. இயக்குனர் கூறிய சுவாரஸ்சியமான தகவல்கள்….!!!!

தமிழ் சினிமாவில் மெரினா படத்தின் மூலம் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஹிட் படங்களைத் தொடர்ந்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி உள்ளார். இவர் நடிப்பில் வெளியான டாக்டர், டான் என்ற இரு படங்களும் மெகா ஹிட் அடித்தது. இவர் தற்போது பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனரான அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING. ரூ.237 கோடிக்கு வருவாய் இழப்பு – சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல் ..!!

2022 மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டுக்கான இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளரின் அறிக்கை  சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. ஜிஎஸ்டி வரி, வணிகவரி, முத்திரைத் தீர்வை மூலமாக 237 கோடி வருவாய் இழப்பு கண்டுபிடிப்பு என  அறிக்கையில் தகவல். 143 இனங்களில் 237 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் காட்டப்பட்டுள்ளது. மின்னணு வழிப்பட்டியல் தயாரித்த பிறகு பதிவு ரத்து செய்யப்பட்டவர்கள் ரூபாய் 80.78 கோடி வரி செலுத்தவில்லை எனவும் தகவல்

Categories
தேசிய செய்திகள்

“மகனை எரித்துக் கொன்ற தந்தை”… பின்னணி என்ன…? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!!

கேரளாவில் மகனை தந்தை எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் கேச்சேரியைச் சேர்ந்த சுலைமான்- செரீனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மனநலம் குன்றிய மகன் சதக் என்பவர் இருக்கிறார். இந்த நிலையில் நேற்று காலை செரினா வெளியே சென்றுள்ளார் அப்போது வீட்டின் வராண்டாவில் சதக் இருந்துள்ளார். இந்த நிலையில் பெட்ரோல் கேனுடன் அங்கு வந்த சுலைமான் திடீரென அவரது மகன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து […]

Categories
அரசியல்

திடீரென சரிந்த தங்கம் விலை….. எவ்வளவு தெரியுமா….?? நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!

தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது நகைப் பிரியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இந்தியாவில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. இதனையடுத்தது ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது. இதனால், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,635-க்கு விற்பனை ஆகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

“கழிவறையில் வைத்து” 24 வயது இளம்பெண்ணை சீரழித்த 15 வயது சிறுவன்….. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டோராடூன் பகுதியில் ஒரு பிரபலமான ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் ஒருவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த இளம் பெண் கடந்த வெள்ளிக்கிழமை கழிவறையில் தன்னுடைய செல்போனை சார்ஜ் போட்டுள்ளார். அப்போது 15 வயது சிறுவன் ஒருவன் திடீரென கழிவறைக்குள் நுழைந்து ஹாய்‌ என்று கூறியுள்ளான். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம் பெண் பெண்கள் கழிவறைக்குள் எப்படி வரலாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பழனிசாமிக்கு சவால் விட்டு இருக்கோம்: நிரூபிச்சு காட்ட சொல்லி ஓபிஎஸ் அதிரடி ..!!

இன்று செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சியான அதிமுக சட்டமன்ற துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக நேற்று நடத்திய போராட்டம் எனக்கு எதிரான போராட்டமாக நான் கருதவில்லை. ஏற்கனவே நேற்று இருகுறித்து என்னுடன் இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் சவால் விட்டிருக்கிறார்கள். யாருக்கு பழனிச்சாமிக்கு ? என்ன சவால் விட்டிருக்கிறார்கள் என்று சொன்னால்,  பழனிச்சாமி நான் மாண்புமிகு தமிழக முதலமைச்சரை சந்தித்ததை நிரூபித்தால் நாங்கள் அரசியலில் இருந்தே விளக்க தயார் என்றும்,  நிரூபிக்கவில்ல என்றால் அவர் விலக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாரிசு படத்தால் கடும் அப்செட்டில் தயாரிப்பாளர்….இதுதான் காரணமா?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனதுகென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகர் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

அப்படிபோடு! இனி யாரும் மாணவிகள் கிட்ட வாலாட்ட முடியாது…. “போலீஸ் அக்கா” இருக்காங்க…. செம திட்டம் அறிமுகம்….!!!!!

கோவை மாநகர் காவல்துறை சார்பில் பொதுமக்கள், பெண்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்புக்காக பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாநகர் பகுதியில் செயல்படும் 60 கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப் படுத்தவும், அவர்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான பிரச்சனைகளை சரி செய்வதற்காகவும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதாவது ‘போலீஸ் அக்கா’ என்ற திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 37 பெண் காவலர்கள் இணைந்துள்ளனர். இந்நிலையில் திட்டத்தின்படி ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

38 ஆசிரியர்கள் கைது…. சிஐடி ரிப்போர்ட்… நடந்தது என்ன?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

கர்நாடகாவில் உள்ள பள்ளிகளில் 2ம் நிலை உதவிய ஆசிரியர்கள் (2012-2013) மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் (2014-2015) பதவிக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக தொடர்ந்து புகார்கள் இருந்தது. இது குறித்து விதான செளதா காவல்துறையினர் கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம் தொடர்ந்து பூதகரமாக வெடித்ததால் காவல்துறையிடம் இருந்து சி.ஐ.டி.யிடம் மாற்றப்பட்டது. இந்நிலையில் ஆசிரியர் பணி நியமனம் முறைகேடுகள் தொடர்பாக கர்நாடகாவில் 51 இடங்களில் 30 சிறப்பு குழுக்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட நபர்…. போலீசில் புகார் அளித்த பெண்….!!!!

வாகனங்களை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் சிறு நாயக்கன்பட்டி பகுதியில் பபியோன்ராஜ்-செலின் ரோஸ் என்ற தம்பதி வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது “எனக்கு சொந்தமாக ஒரு டிராக்டரும் இரண்டு டிப்பர் லாரிகளும் இருக்கின்றன. இதனை கடந்த சில நாட்களுக்கு முன்பு மணப்பாறையைச் சேர்ந்த ஒருவருக்கு ஒப்பந்தத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காலங்களில் அவள் வசந்தம்” திரைப்படத்தின்…. பப்பாளி பாடல்…. வீடியோ செம வைரல்….!!!

“காலங்களில் அவள் வசந்தம்” திரைப்படத்தின் பப்பாளி என தொடங்கும் பாடலின் லிரிக்கல் வீடியோ நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.  அறம் எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்ரீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் “காலங்களில் அவள் வசந்தம்” என்ற திரைப்படம் உருவாக்கியுள்ளது. இயக்குனர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் கலகலப்பான காதல் கதையாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் காலங்களில் அவள் வசந்தம் இயக்குனர் ராகம் மிர்தாத் இயக்கத்தில் திருமணத்திற்கு பிறகான காதலை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் உருவாகியுள்ளது. புதுமுக நடிகர் கௌஷிக் ராம், தானாகாரன் புகழ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுதும் மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு….. தலைமைச் செயலாளர் புதிய அதிரடி….!!!!!

தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, அரசு அலுவலகங்களில் எழில் மிகு அலுவலகம் என்பதை உருவாக்குவதற்காக செலவு இல்லாத பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் சிறப்பாக செயல்பட்டு முந்தைய மற்றும் தற்போதைய நிலையை விவரிக்கும் வகையில்  நிழற்படங்களை உருவாக்கி அனுப்பி வைத்ததற்கு என்னுடைய பாராட்டுகள். இதேபோன்று நாம் நாள்தோறும் வேலை பார்க்கும் அலுவலகங்களை தூய்மையாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பொன்னியின் செல்வன்” மணிரத்தினம் உயர்ந்த இடத்திற்கே போயிட்டாரு….. புகழ்ந்து தள்ளிய பிரபலம்…..!!!!!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் குறித்து பிரபலத்தின் கருத்து ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த “பொன்னியின் செல்வன்” திரைப்படம் குறித்து ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, “ஒரு கதை பெரிய திரையில் பிரம்மாண்டமாக காட்டியதற்கு பெருமைப்பட வேண்டும். பொன்னியின் செல்வன் மக்களை தங்களது சொந்த வரலாற்றை திரையில் காட்டி இருக்கின்றது. இந்த திரைப்படம் ஆரோக்கியமான விவாதங்களை உருவாக்கி இருக்கின்றது. இத்திரைப்படத்தின் மூலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.பிமுத்துக்கு என்ன பிரச்சனை…. Confession ரூமில் பஞ்சாயத்து…. நடந்தது என்ன…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக பரிச்சயமில்லாதவர்களாக உள்ளனர். இதனால் இந்த சீசனை ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். தற்போது மைனா நந்தினி வைலட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக உள்ள ஜி.பி.முத்து சோசனஷியல் மீடியா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.ஸ டிக் […]

Categories
சினிமா

நடிகர் சிம்புவின் படப்பிடிப்பின்போது…. வெளியான புகைப்படங்கள்…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

தற்போது நடிகர் சிம்பு “பத்து தல” படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்குகிறார். இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இவற்றில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானிசங்கர், கலையரசன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அண்மையில் சிம்புவின் பிறந்தநாளையொட்டி வெளியாகிய “பத்து தல” திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவிலில்…. பூஜை நேரம் மாற்றம்…. அறிவிப்பு வெளியிட்ட கோவல் நிர்வாகம்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான கந்த சஷ்டி திருவிழா வருகின்ற 25-ம் தேதி தொடங்க இருக்கின்றது. இந்த நிலையில் முருகன் கோவிலின் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது “கந்த சஷ்டி திருவிழா வருகின்ற 25ஆம் தேதி தொடங்க உள்ளது. அந்த நாளில் மாலை 5.21 மணி முதல் 6.23 மணி வரை சூரிய கிரகணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

Happy News: நாளை முதல் திரையரங்குகளில்…. சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி….

தீபாவளி பண்டிகையையொட்டி அக். 21ஆம் தேதி முதல் அக்.27ஆம் தேதி வரை 7 நாட்கள் திரையரங்குகளில் சிறப்புக் காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாளை கார்த்தியின் சர்தார், சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன. இதில் சர்தார் திரைப்படத்தின் வெளியிட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியது. இதன் காரணமாக தான், சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி திரையரங்க உரிமையாளர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஜி.பி.முத்து வெறுக்கும் ஒரே போட்டியாளர்”…. யார் தெரியுமா?…. வைரலாகும் ப்ரோமோ….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டி 21 போட்டியாளர்களுடன் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக பரிச்சயமில்லாதவர்களாக உள்ளனர். இதனால் இந்த சீசனை ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். தற்போது மைனா நந்தினி வைலட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். தற்போது ஜி.பி.முத்து இரண்டாவது வாரத்தில் வீட்டின் தலைவராகியுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பாம்பன் பாலத்தில் மீண்டும் ஒரு விபத்து….. பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்….. அதிர்ச்சி….!!!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்றானது மதுரை நோக்கி பாம்பன் பாலத்தின் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தால் ஓட்டுனர் பேருந்தை நிறுத்த முயன்று பிரேக் பிடித்துள்ளார். அப்போது கன மழையின் காரணமாக பாலத்தில் மழைநீர் தேங்கி நின்றதால் பேருந்து நிற்காமல் இழுத்துச் சென்று எதிராக ராமேஸ்வரம் நோக்கி வந்த மற்றொரு அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அரசு பேருந்து […]

Categories

Tech |