‘துணிவு’ படம் குறித்த அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘வலிமை’. இந்த படத்திற்கு பிறகு இவர் இயக்குனர் வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சமுத்திரகனி முக்கிய […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடித்துள்ள லத்தி திரைப்படம் டிசம்பர் மாதத்தில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஷால் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்தில் ரிது வர்மா ஹீரோயினாக நடிக்க, எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் […]
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் தீபத் திருவிழாவுக்கு 52 இடங்களில் அன்னதானம் வழங்கலாம். இதற்கான இடத்தை தேர்வு செய்து, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுபடி, தீபத் திருநாளில் அண்ணாமலை மீது ஏறுவதற்கு 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இவர்களுக்கு, திருவண்ணாமலை அரசு […]
தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்காக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியை பயன்படுத்தி பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுமே செய்து கொடுக்கப்பட வேண்டும். அதாவது பள்ளி கட்டடங்களில் ஏற்படும் பழுது, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, கற்பித்தலுக்கு தேவையான பொருட்கள் வாங்குதல் உள்ளிட்ட வசதிகளை செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் மாணவர்கள் உடைய எண்ணிக்கைக்கு ஏற்றார் போல நிதியும் வழங்கப்படுகிறது. இதனை அந்த வருடத்திற்குள் மட்டுமே […]
செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள எருமைப்பட்டி அருகே இருக்கும் முண்டான்செட்டி கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவருக்கும் அவரின் அண்ணன் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக சொல்லப்படுகின்றது. இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. வழக்கின் முடிவு தாமதமாகி வருவதால் அண்ணாதுரை மிகுந்த மன வேதனை அடைந்ததாக சொல்லப்படுகின்ற நிலையில் அவர் நேற்று சேந்தமங்கலம் நீதிமன்றம் அருகே இருக்கும் செல்போன் கோபுரத்தின் […]
கேரளாவில் தற்போது பறவை காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. இதனால் தமிழக கேரள எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகிறது. அதோடு அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி யும் தெளிக்கப்படுகிறது. இதனையடுத்து கேரளாவில் இருந்து வரும் பறவைகள், தீவனங்கள் உள்ளிட்ட எதுவுமே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. ஒருவேளை பறவைகளை ஏற்றிக்கொண்டு ஏதாவது வண்டிகள் வந்தாலும் அந்த வண்டிகள் மீண்டும் திருப்பி அனுப்பப்படுகிறது. மேலும் கூடலூர் அருகே […]
மயிலாடுதுறை மாவட்டத்தில் அபிராமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் மூங்கில் தோட்டம் கன்னித்தோப்பு பகுதியைச் சேர்ந்த வினோத் குமார் என்பவரை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து அபிராமியின் கணவரும் மாமியாரும் வரதட்சணை கேட்டு அவரை கொடுமைப்படுத்தி உள்ளனர். இதனால் அபிராமி வினோத்குமார் விட்டு பிரிந்து சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார். இதனை அடுத்து அபிராமி தீபாவளி பண்டிகைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை வந்து […]
யசோதா படத்தின் கதை குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. சமந்தா தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் கைவசம் தற்போது ஏராளமான படங்களை வைத்துள்ளார். இதனையடுத்து ஹரி, ஹரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ”யசோதா”. தெலுங்கில் தயாராகியுள்ள இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் உருவாகியுள்ளது. எம். சுகுமார் ஒலிப்பதிவு செய்துள்ள இந்த […]
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் ஏழு பேரையும் அவர்களுடைய மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி டாக்டர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் இலங்கை கடற்படை படையினரின் இத்தகைய நடவடிக்கைகள் மீனவர்களுடைய வாழ்வாதாரத்தை வெதுவாக பாதிக்கிறது. பாகிஸ்தான் ஜல சந்தியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மீறப்படுவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஆகும். தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை மீனவர்கள் எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை தேவை. […]
நல்ல கருத்துக்கள் நிறைந்த புத்தகங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு சார்பாக ஒரு சில மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த புத்தக கண்காட்சிகள் மூலமாக பலரும் பயனடைந்து வருகின்றனர். பல எழுத்தாளர்களும் தங்களுடைய படைப்புகளை கண்காட்சி மூலமாக வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வருகின்றனர். வரும் 2023 ஆம் வருடம் சென்னை மாநகரில் சர்வதேச புத்தக கண்காட்சி நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கண்காட்சியில் 30 முதல் 40 நாடுகள் […]
தென்கொரியாவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் பிரபல பன்னாட்டு நிறுவனமான சாம்சங், செல்போன், டிவி, ஏசி போன்ற மின்சாதன பொருட்கள் விற்பனையில் முன்னிலை வகுத்து வருகிறது. இந்த சூழலில் இந்த நிறுவனத்தின் செயல் தலைவராக லீ ஜே யோங் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர் சாம்சங் நிறுவனத்தை நிறுவிய லீ புயூங் பங் குடும்பத்தை சேர்ந்த மூன்றாம் தலைமுறை நபராகும். லீ ஜே யோங் கடந்த 2012 ஆம் வருடம் முதல் சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவராக பதவி […]
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் அப்சர்கானை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கோவையில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கார் சிலிண்டர் வெடிப்பு விபத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு உபா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை 5 பேரையும் மூன்று நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த சூழலில் அதே வழக்கில் ஆறாவதாக கைது செய்யப்பட்ட அப்சர்கான் என்பவரை போலீசார் கோவை […]
கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரசாத். இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 23 வயதுடைய பெண்ணுக்கும் instagramல் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனை அடுத்து இவர்கள் இருவரும் கடந்த மாதம் ஐந்தாம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து திருமணம் செய்த நாளிலிருந்து இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. இதனால் புதுமணப்பெண் 23ஆம் தேதி ஊருக்கு செல்வதாக கூறு விட்டு சென்றுள்ளார். அதன் பின் […]
துணிவு திரைப்படத்தின் டப்பிங் பணிகளை இயக்குனர் வினோத் தொடங்கி வைத்துள்ளார். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பியபடி உள்ளார்கள். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது என்பது […]
வேலூர் மாவட்டத்தில் வேல்மொண ஊரில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் அமைந்துள்ளது. இங்கு அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணியினை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். மேலும் கட்டுமான பணிகளில் எந்த காரணத்திற்கு கொண்டும் தரம் குறைவாக இருக்கக் கூடாது என அவர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது “இலங்கை தமிழர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கும் பணிகளை […]
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாத்வாரா பகுதியில் விஸ்வாஸ் ஸ்வரூபம் என்று அழைக்கப்படும் உலகிலேயே மிக உயரமான சிவன் சிலை கட்டப்பட்டுள்ளது. இதன் உயரம் சுமார் 351 அடி ஆகும். கடந்த 10 வருடங்களாக சிவன் சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த சிலை நாளை திறக்கப்பட இருக்கிறது. இந்த சிலையை முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் ஆன்மீக போதகர் மொராரி பாபு திறந்து வைக்கிறார். இதேபோன்று குஜராத்தில் இந்தியாவின் இரும்பு […]
10th, 12th, ஐடிஐ படித்தவர்களுக்கு சென்னை மற்றும் பெரம்பூர் ரயில்வே பணிமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வெளியாகியுள்ளது. பணி: டிரேட் அப்ரண்டிஸ். காலி பணியிடங்கள்: 1,3,43. கல்வித்தகுதி: 10th, 12th, ஐடிஐ· வயது: 24-க்குள். விண்ணப்ப கட்டணம் 100. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 31. மேலும், விவரங்களுக்கு (https:// sr.indianrailways.gov.in/) இங்கு கிளிக் செய்யவும்.
தீபாவளி முடிந்த மறுநாள் அதாவது கடந்த செவ்வாய்க்கிழமை சூரிய கிரகணம். இந்த சூரிய கிரகணம் முடிவடைந்த நிலையில் தற்போது நாசா சூரியன் சிரிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தங்களுடைய அதிகார பூர்வ twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். சூரியனின் மேற்பரப்பில் வெப்பம் குறைவதால் சில சமயங்களில் கரும்புள்ளி தோன்றும். இந்த கரும்புள்ளிகள் ஒன்று சேர்ந்து சிரிப்பது போன்ற ஒரு முகத்தை உருவாக்கியுள்ளது. இந்த சிரித்த முகத்தை நாசா படம்பிடித்துள்ளது. உலகின் ஆதி கடவுளாம் சூரியன் பல கோடி வருடங்களுக்கு […]
அரசு பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை செப்டம்பர் 5ஆம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 2,3,4 வருடம் பயிலும் சுமார் 1.10 லட்சம் மாணவிகள் பயனடைந்து இருக்கின்றார்கள். இந்த சூழலில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளுக்கு உதவித்தொகை பெற இந்த திட்டத்திற்கு நவம்பர் ஒன்றாம் […]
உத்திர பிரதேசம் மாநிலம் அலிகர் நகரத்தில் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் ஒன்று உள்ளது. இந்த ஏடிஎம் எந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக லட்சக்கணக்கில் பணம் நஷ்டமாகி உள்ளது. அதாவது ஏடிஎம் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால் 18 பேர் வரை பணம் எடுத்த போது 100 ரூபாய் எடுக்க முயன்றவர்களுக்கு 500 ரூபாயை கொடுத்துள்ளது. இதன் மூலமாக ஒரு லட்சத்து 96 ஆயிரம் பணம் நஷ்டமாகி உள்ளது. இதனை தொடர்ந்து ஒரு வாடிக்கையாளர் இந்த […]
சேலம் அருகே காவலரை வாலிபர்கள் துரத்தி துரத்தி தாக்கிய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் அசோக் என்பவர் காவலராக பணியாற்றி வருகின்றார் இவர் ரோந்து வாகன ஓட்டுனராக இருக்கின்றார். இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி அவருக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சாதாரண உடையில் இருசக்கர வாகனத்தில் சின்ன திருப்பதி வந்து கொண்டிருந்தபோது மூன்று இருசக்கர வாகனத்தில் பயணித்த ஐந்து பேர் மோதுவது போல் வேகமாக வந்துள்ளனர். […]
வெள்ளிதிரையை போன்று சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகைகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதுடன் மிகவும் பிரபலமாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி சின்னத்திரை நடிகர்கள் பொருளாதாரஅளவிலும் நல்ல வளர்ச்சி அடைந்து வருகின்றனர். ஒரு சீரியலில் கமிட்டாகி அந்த சீரியல் ஹிட்டானாலே வீடு, கார் என செட்டில் ஆகி விடுகின்றனர். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிகை ஹேமா மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் தற்போது ஒரு வைர கம்மலை வாங்கியுள்ளார். […]
பிரபல நாட்டில் ஓய்வு பெறும் வயதை மூன்று ஆண்டுகள் உயர்த்த முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி கூறியுள்ளார். பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் 2 தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் இளைய தலைமுறை என்பதை நீண்ட காலம் வேலை செய்ய ஊக்குவிப்பதற்காக ஓய்வூதிய சீர்திருத்தங்களை தொடர உறுதியளித்தார். இது ஓய்வூதிய வயதை படிப்படியாக 65 -ஆக உயர்த்தும். இருப்பினும் தொழிற்சங்கங்களுடன் ஓய்வு பெறும் வயது குறித்து விவாதிக்கவும், திருத்தமும் தயாராக இருப்பதாக அவர் அறிவித்தார். மேலும் […]
உலக அளவில் பிரபலமான சமூக வலைதளமாக கூகுள் நிறுவனம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை. இந்த கூகுள் நிறுவனம் பயனாளர்களுக்கு பல்வேறு விதமான ஆப்ஷன்களையும், வசதிகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் தனக்கு சந்தையில் இருக்கும் மதிப்பை வைத்து தன்னுடைய பேமெண்ட் வங்கி செயலி மற்றும் செயலி வழி பேமென்ட் போன்றவற்றை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக கடந்த வியாழக்கிழமை கூகுள் நிறுவனத்துக்கு மத்திய அரசானது […]
சசிகலா புஷ்பாவின் வீட்டில் அதிகாரிகள் காலி செய்துள்ளனர். கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை தூத்துக்குடியில் அதிமுக சார்பில் சசிகலா புஷ்பா மேயராக இருந்து வந்தார். இதனையடுத்து மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர் மாநிலங்களவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தன்னை அடித்துவிட்டார் என்று கூறினார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவரது 2-வது திருமணம் தொடர்பான விவாகரத்திலும் பல்வேறு […]
இங்கிலாந்து நாட்டின் பிரதமராகியிருக்கும் ரிஷி சுனக் நாட்டிற்கு நம்பிக்கை மிகுந்த வருங்காலத்தை உருவாக்குவதற்கு தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வதாக கூறியிருக்கிறார். ரிஷி சுனக், இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். சுமார் 200 வருடங்களில் முதல் தடவையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் வயதினர் பிரதமர் ஆகியிருக்கிறார். அதன்படி நாட்டின் மன்னரான சார்லஸ், ரிஷி சுனக்கை நியமனம் செய்த பிறகு அவருக்கு தீபாவளி பலகாரங்கள் கொடுக்கப்பட்டன. Brilliant to drop into tonight’s Diwali reception in […]
பிரபல நாட்டில் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரான் நாட்டில் உள்ள ஷிராஸ் நகரில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் வழிபாட்டு தளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தளத்தில் நேற்று முன்தினம் இரவு ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த பயங்கரவாதிகள் சிலர் வழிபாட்டுத்தளத்தின் நுழைவாயிலில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 15 பேர் உயிரிழந்ததுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. மேலும் […]
சேலம் மாவட்டத்தில் மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் இருக்கிறார். இங்கு நிதி பற்றாக்குறை காரணமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை விரைந்து எடுத்து செல்ல முடியாததாக கூறப்படுகிறது. அதன்பிறகு தற்போது குடிநீர் விநியோகப் பிரச்சனையும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அதாவது நிதி பற்றாக்குறை குடிநீர் வினியோகத் திட்டத்தை பெங்களூருவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு திமுக கவுன்சிலர்கள் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் திமுக […]
தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் வெற்றிமாறன். இவர் தற்போது லாக்கப் நாவலை விசாரணை என்ற பெயரிலும் பூமணி எழுதிய வெட்கை நாவலை அசுரன் என்ற பெயரிலும் திரைப்படமாக எடுத்திருக்கின்றார். தற்போது இவர் வாடிவாசல் நாவலை அதே பேரில் இயக்க இருக்கின்றார். இத்திரைப்படத்தை தாணு தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார். மேலும் இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கின்றார். ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள ஜல்லிக்கட்டை மையப்படுத்தி பேட்டைகாளி தயாரித்திருக்கின்ற வெற்றிமாறன் வாடிவாசல் திரைப்படத்தையும் […]
காஷ்மீர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என பிரபல நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக காஷ்மீர் பிரச்சனையால் மோதல் இருந்து வருகிறது. இதனால் கடந்த 2019-ஆம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதனால் பிரச்சனை மேலும் தீவிரமடைந்தது. இந்நிலையில் சீனா தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மாவோ நிங்கி […]
நூதன முறையில் வாலிபரிடம் இருந்து பண மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள துலுக்கநத்தம் கிராமத்தில் சாதிக் பாஷா(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை வேண்டி இணையதள முகவரியில் தனது விவரங்களை பதிவு செய்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் சாதிக் பாஷாவின் இணையதளம் முகவரிக்கு சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை தருவதாக கூறி ஒரு தகவல் வந்தது. அதில் ஆன்லைன் மூலம் நேர்காணல் நடத்தப்படும் என குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் […]
தண்ணீரில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கச்சிராயன் பால்குடி பகுதியில் விவசாய கூலி தொழிலாளியான ஸ்டாலின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் நெவுலி கண்மாயில் குளிப்பதற்காக ஸ்டாலின் தனது மூன்று வயது மகன் நிதிஷை அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் குளித்துக் கொண்டிருக்கும் போது நிலைதடுமாறி தண்ணீருக்குள் விழுந்த நிதிஷை ஸ்டாலின் காப்பாற்ற முயன்ற போது இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இதனைப் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒத்தப்பட்டி பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நாகபிரியா(30) தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக நாகபிரியாவும், பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்க்கும் சின்னச்சாமி(32) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர். இதனால் நாகப்பிரியா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் வேறொரு பெண்ணுடன் சின்னசாமிக்கு திருமங்கலம் […]
வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள காமாளையம் 4-வது தெருவில் பாலாஜி(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல்பட்டு சட்டக் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு படித்து வருகிறார். தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக பாலாஜி சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் நண்பரான இஸ்மாயில் என்பவரை அழைத்துக் கொண்டு பாலாஜி மோட்டார் சைக்கிளில் ஓடையில் குளிப்பதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென உந்தன் நான்கு மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி […]
கரூர் மாவட்டத்திலுள்ள பாலமலையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு கந்த சஷ்டி இரண்டாவது நாளை முன்னிட்டு சுவாமிக்கு சந்தனம், மஞ்சள், தயிர், பால், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.37,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,735-க்கு விற்பனை ஆகிறது. மேலும் வெள்ளி விலை […]
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை பழனி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக கார் லாரி வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் பஸ் நிலையத்திற்கு பின்புறம் உள்ள பைபாஸ் சாலை வழியாகத்தான் ரவுண்டானா அருகில் பழனி சாலையில் வந்து இணையும். இவ்வாறு இணையும் இடத்தில் 15 பேருந்துகள் நின்று செல்லும் வகையில் கூடுதல் பஸ் நிலையம் கட்டுவதற்காக கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் ரவுண்டானா அருகில் இருந்து பழனி சாலையில் கனரக வாகனங்கள் மற்றும் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் அய்யனேரி கிராமத்தில் தசரதன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகனான சரத்குமாருக்கு ஐந்து மாதத்திற்கு முன்பு திவ்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சரத்குமார் தனது மாமனாருடன் ஐபேடு கிராமத்திற்கு இறைச்சி வாங்க சென்றுள்ளார். அந்த கிராமத்தை சேர்ந்த சிலரிடம் சரத்குமாருக்கு முன்விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து சரத்குமார் இறைச்சி வாங்கி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அந்த கிராமத்தை சேர்ந்த தாமோதரன், கோபி, துரைப்பாண்டி, அசோக்பாண்டியன், குபேந்திரன், சதீஷ் ஆகிய ஆறு […]
மின்சார பழுதை சரி செய்வதற்காக மின்கம்பத்தின் மீது ஏறிய வயர் மேன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் கன்னிகாபுரம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் அதிமாஞ்சேரி பேட்டை பகுதியில் உள்ள மின்வாரியத்தில் வயர் மேனாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர் தன்னுடைய கிராமத்தில் ஏற்பட்டுள்ள மின்சாரப் பழுதை சரி செய்வதற்காக மின்கம்பத்தின் மீது ஏறி உள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக மின்சாரம் அவரை தாக்கியுள்ளது. இதில் வெங்கடேசன் மின்கம்பத்தில் இருந்து […]
மாநகர சபை கூட்டங்களை போல கிராம சபை கூட்டங்களையும் நடத்த வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். தாம்பரம் மாநகராட்சிக்குள்ட்பட்ட பம்பலில் இன்று 6-வது வார்டு மாநகர சபை கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர் வரும் 9-ஆம் தேதி முதல் நகர சபை மற்றும் மாநகர சபைக் கூட்டங்களை போல மக்கள் பங்கேற்கும் கிராமசபை கூட்டங்களையும் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
சின்னத்திரை நடிகை திவ்யா தன்னுடைய கணவர் ஆர்னவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் கரு எந்த நேரத்திலும் கலையலாம் என்றும் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எனவே அர்ணவ்வ் மீது காவல்துறையினர் கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து நடிகர் அர்ணவ்வை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சிறையில் இருந்த அவர் தனக்கு ஜாமீன் வேண்டும் என்று […]
அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நாகர்கோவிலில் வசித்து வரும் சுயம்புலிங்கம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழகத்தில் பள்ளி வாகன விதிமுறைகள் ஒரே மாதிரி இருக்க வேண்டும். இந்நிலையில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை ஆட்டோ போன்ற வாகனங்களில் அனுப்பி வைக்கின்றனர். மாணவர்கள் இப்படி வருவதை பள்ளிகள் எப்படி ஏற்று கொள்ளலாம். இந்நிலையில் பள்ளி […]
காதல் மற்றும் நகைச்சுவை கலந்து அலட்டிக்கொள்ளாத திரைக்கதையாக பிரின்ஸ் படம் உருவாகியிருக்கிறது. சிவகார்த்திகேயனின் குடும்பம் சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட பாரம்பரியம் உடையது. படத்தில் அப்பா சத்யராஜ். மகன் சிவகார்த்திகேயன் ஆவார். இவர் ஒரு பள்ளியில் சமூக அறிவியல் பாடமெடுக்கும் ஆசிரியராக இருக்கிறார். அதே பள்ளியில் ஆங்கிலம் பாடமெடுக்கும் டீச்சர், மரியா ரியா போசப்கா. அத்துடன் சென்னையில் பிறந்த இங்கிலாந்து நாட்டு பெண். இதில் சிவகார்த்திகேயனுக்கும், மரியாவுக்கும் இடையில் காதல் மலர்கிறது. மரியா இங்கிலாந்து பெண் என்ற ஒரேகாரணத்துக்காக […]
உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் சிவானந்தம். இவருடைய வீட்டில் வழக்கம் போல மனைவி மூலிகை டீ போட்டுள்ளார். அப்போது வீட்டில் இருந்த சிவானந்தம் அவருடைய 6 வயது மகன், ஐந்து வயது மகன் உள்ளிட்டர் டீயை குடித்துள்ளனர். அது மட்டும் இன்றி வீட்டிற்கு வந்த அவருடைய மாமா பக்கத்து வீட்டைச் சேர்ந்த சோப்ரான் என்பவரும் மூலிகை டீயை குடித்துள்ளார்கள். பின்னர் சிறிது நேரத்தில் இந்த ஐந்து பேருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு […]
அரியனாவின் சூரஜ்கண்டில் மாநில உள்துறை அமைச்சர்கள் இரண்டாவது நாள் மாநாடு நடைபெற்றது. அதில் காணொளி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி ‘ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை’ என்ற யோசனையை முன் வைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, நாடு முழுவது காவல்துறையினருக்கு ஒரே மாதிரியான சீருடை தேவை. ‘ஒரே நாடு ஒரே சேவை’ என்பது காவல்துறைக்கு வழங்கக்கூடிய ஒரு யோசனை தான். இதை நான் உங்கள் மீது திணிக்க முயற்சிக்கவில்லை. மாநிலங்களுக்கு வெவ்வேறு எண்கள் மட்டும் […]
ஒரே நாளில் மூன்று திரைப்படங்கள் ரிலீஸ். தீபாவளிக்கு பின் எப்போதுமே படங்கள் வெளியிட்டில் ஒரு தேக்கம் ஏற்படும். குறிப்பாக மழைக்காலம் என்பதால் அதிகமான படங்கள் வெளியாகாது. அதற்குப் பிறகு கிறிஸ்துமஸ் விடுமுறைகள்தான் திரைப்படங்களை வெளியிட பலரும் முன் வருவார்கள். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால் திரைப்படங்களின் வெளியீட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றது. கிடைக்கும் இடைவெளியில் தங்களது படங்களை வெளியிட்டு விட தயாரிப்பாளர்கள் முயற்சித்து வருகின்றார்கள். கடந்த வாரம் தீபாவளியை முன்னிட்டு “சர்தார் மற்றும் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கவள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவேஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் இன்னும் 2 அல்லது 3 தினங்களில் சம்பவம் நடக்கும் என்று Tamilnadu weatherman ப்ரதீப் ஜான் ட்வீட் செய்துள்ளார். வடக்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டியுள்ள கடல் பகுதியில் கனமழை வரும் என்பதைதான் அவர் அப்படி குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் […]
திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பதியில் வழக்கமாக இரவு 12 மணிக்கு நடை சாத்தப்படும். அப்போது வரிசையில் நிற்பவர்கள் அடுத்த நாள் காலை 10 மணி வரை நிற்க வேண்டும். இதற்கு தீர்வு காண காலை 6 மணிக்கு இருக்கும் விஐபி தரிசன நேரத்தை மாற்றிவிட்டு பக்தர்களை […]
பலரின் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் அளவை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு மழையில் நனைந்ததமிழக அரசின் கோரிக்கையை ஏற்று நெல்லை 22 சதவீத வரை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகளின் கவலையை போக்கும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் 22 சதவீத […]
இந்தியாவில் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் செல்லும் வகையில் இருந்த ரயில் சேவை தற்போது நடுத்தர மற்றும் வசதியானவர்களுக்காக மாறி வருவதாக கூறப்படுகிறது. அதிலும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் முன்பதிவு இல்லாத பெட்டிகள் குறைந்து வருவதை இதற்கு உதாரணமாக என்று ஏழை பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் பயணிகள் ரயில்களை இயக்குவதால் ரயில்வேக்கு லாபம் எதுவும் கிடைப்பதில்லை என்று ரயில்வே இணைய மந்திரி ராவ்சாகேப் தன்வே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது, […]