Categories
வேலைவாய்ப்பு

1061 பணியிடங்கள்…. மத்திய அரசில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் பணியாளர் திறமை மையத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கின்றது. நிறுவனத்தின் பெயர்: DRDO Centre for Personnel Talent Management பதவி பெயர்: Stenographer, Store Assistant, and Other மொத்த காலியிடம்: 1061 கல்வித்தகுதி: 10th Pass, 12th Pass, Bachelor’s degree, Master’s degree வயதுவரம்பு: 18 – 27 Years கடைசி தேதி: டிசம்பர் 7 கூடுதல் விவரங்களுக்கு: […]

Categories
தேசிய செய்திகள்

Social mediaக்களை கட்டுப்படுத்த புதிய அறிவிப்பாணை…. மத்திய அரசு அதிரடி….!!!

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த புதிய அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பேஸ்புக், ட்விட்டர்,இன்ஸ்டாகிராம் மற்றும் youtube லிட்டர் சமூக ஊடகப் பயனாளர்களின் புகார்களை 24 மணி நேரத்தில் பதிவு செய்து 15 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் அடிப்படையில் விசாரணை நடத்த குறை தீர்ப்பாய குழுக்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. பயனர்களை மேம்படுத்துதல், இடைத்தரகரால் நியமிக்கப்பட்ட குறைதீர்ப்பு அதிகாரியின் முடிவுகளுக்கு எதிரான மேல்முறையீடுகளை விசாரிப்பதற்காக புகார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரு கட்சி மட்டும் ஆதரிக்கல…! எல்லாத்துக்கும் காரணம் தளபதி தான்… மந்திரிகள் சூப்பரா செயல்படுறாங்க.. ஆஹா.. ஓஹோ என அரசை பாராட்டிய கம்யூனிஸ்ட்…!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன், இந்தி மொழி திணிக்கப்படுவது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட எல்லா கட்சிகளும் அதனை ஆதரித்து இருக்கின்றன. ஒரே ஒரு கட்சி அந்த தீர்மானத்தை ஆதரிக்கவில்லை. பாரதிய ஜனதா கட்சி. அந்தக் கட்சி ஆதரிக்காதது ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. […]

Categories
தேசிய செய்திகள்

கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி…. புதுச்சேரி அரசு அதிரடி….!!!!

புதுச்சேரியில் பல்வேறு நிபதனைகளுடன் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.இது பத்து அல்லது அதற்கு மேற்பட்டோர் பணிபுரியும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும் ஒவ்வொரு ஊழியருக்கும் சுழற்சி அடிப்படையில் வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும். பெண் ஊழியர்கள் இரவு 8 மணிக்கு மேல் வேலை செய்ய தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது. பெண் ஊழியர்களின் கண்ணியம், மரியாதை மற்றும் பாதுகாப்பிற்கு போதுமான நடவடிக்கையை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. போலி குறுஞ்செய்தி…. 15 லட்சம் மோசடி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனால் மக்கள் யாரும் தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிரக்கூடாது என அரசு தரப்பில் இருந்தும் பல வங்கிகள் தரப்பில் இருந்தும் பல்வேறு அறிவுறுத்தல்கள் மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் தினந்தோறும் புதுவிதமான மோசடி சம்பவங்கள் அரங்கேரி கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் சேலம் கெங்கவல்லியை சேர்ந்த வாலிபர் முத்துக்குமார். இவருக்கு கடந்த ஜூலை எட்டாம் தேதி குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மின் கட்டணம் மூலம் புதுவகை மோசடி…. யாரும் இதை நம்பாதீங்க…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனால் மக்கள் யாரும் தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிரக்கூடாது என அரசு தரப்பில் இருந்தும் பல வங்கிகள் தரப்பில் இருந்தும் பல்வேறு அறிவுறுத்தல்கள் மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் தினந்தோறும் புதுவிதமான மோசடி சம்பவங்கள் அரங்கேரி கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் மின்கட்டணம் தொடர்பான குறுஞ்செய்தி மூலம் தற்போது மோசடி நடைபெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் கட்டிய உங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓ!… இதுதான் உண்மையா….? கல்யாணமாகாமல் கர்ப்பம்…. நித்யா மேனன் போட்ட போஸ்ட்…. தீர்ந்தது குழப்பம்….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நித்யாமேனன். இவர் அனுமான் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு மலையாள சினிமாவில் ஹீரோயின் ஆக நடித்து வந்த நித்யா மேனன், தமிழில் வெப்பம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் நடித்த காஞ்சனா, மெர்சல் மற்றும் திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. பான் இந்தியா ஸ்டார் ஆக திகழும் நித்யா மேனன் தற்போது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பந்துவீசுவதற்கு முன்…… 2 அடி கிரீஸை விட்டு வெளியேறிய பாக் வீரர்…. “இக்கட்டான நேரத்திலும் கோலி செய்த செயல்”…. வைரலாகும் போட்டோ..!!

இக்கட்டான நிலையில் கூட கிரீசை விட்டு வெளியேறாத கோலியை பாராட்டும் நெட்டிசன்கள் பாக்., வீரர் செயலை விமர்சித்து வருகின்றனர். அக்டோபர் 23, ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 90,000 ரசிகர்கள் முன்னிலையில் நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 இன் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வியத்தகு வெற்றியைப் பதிவு செய்தது. விராட் கோலி 53 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அத்துமீறாதீங்க…! ”சீனா” பெயரை உச்சரிக்காத BJP அரசே…  யுத்தம் செய்ய காத்திருக்கிறோம்… ஹிந்திக்கு எதிராக கொந்தளித்த கௌதமன்…!!

ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய இயக்குனர் கௌதமன், சண்டை நடந்தா தல தெறிச்சு ஓடுற கூட்டம் இந்திய ஒன்றியத்தில் எத்தனையோ,  இடத்துல நடந்திருக்கு. சண்டை என்றால்,  சண்டையை நோக்கி ஓடுகின்ற கூட்டம் பச்சை தமிழகத்தை சார்ந்த எங்களுடைய வீர வரலாறு, புறநானூறை நீங்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்றால் திரும்ப படிங்கள். நீங்கள் வள்ளுவரின் சில வார்த்தைகளை மட்டும் சீன எல்லையில் சொல்லிவிட்டு,  சீனாவின் உடைய பெயரை கூட சொல்லாமல், ஐநா சபையில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஊட்டி மார்லிமந்து அணை…. “1 கோடி மதிப்பில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டம்”….!!!!!

ஊட்டியின் முக்கிய குடிநீர் ஆதாரமான மார்லிமந்து அணையில் 1 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட இருக்கின்றது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகருக்கு தண்ணீர் தருகின்ற மூன்றாவது முக்கிய குடிநீர் ஆதாரமாக மார்லிமந்து அணை இருக்கின்றது. இந்த அணை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த அணையாகும். இந்த அணையின் தடுப்பு சுவர்களில் விரிசல் ஏற்பட்டதால் தண்ணீர் வீணாகி வருகின்றது. மேலும் தூர்வாரப்படாமல் இருப்பதால் அதிக தண்ணீரை சேர்த்து வைக்க முடியவில்லை. பொதுமக்களுக்கு சுத்திகரிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அரசின் கௌரவம்”….. விருது வழங்க நடிகர் ரஜினிக்கு அழைப்பு….!!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார் (42) கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இவருடைய மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவருடைய மறைவுக்குப் பிறகு அவருடைய சமூகப்பணி மற்றும் கலைப்பணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருதை வழங்குவதாக முதல்வர் பசுவராஜ் பொம்மை அறிவித்தார். இந்த விருது நவம்பர் 1-ம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே….! அதற்காக தான் ராபர்ட் மாஸ்டரை யூஸ் பண்ணினேன்…. உண்மையை உடைத்த வனிதா….!!!!

பிக் பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி இல் தற்போது 19 பேர் இருக்கிறார்கள். ஜி பி முத்து தன்னுடைய மகனுக்காக வெளியேறியதையடுத்து சாந்தி மாஸ்டரும் மக்களால் வெளியேற்றப்பட்டார். இந்த போட்டியாளர்களில் ஒருவராக இருப்பவர் ராபர்ட் மாஸ்டர். இவர் வனிதாவோடு சில வருடங்கள் வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக் பாஸ் குறித்து பல கருத்துக்களை வெளியிட்டு வரும் வ, இது பிக் பாஸ் வீடா? அல்லது பீச்சா? போட்டியாளர்கள் ஜோடி ஜோடியாக சுற்றுகிறார்கள். ராபர்ட் மாஸ்டரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M ஸ்டாலின் எதுமே பேசல…! கரூர் சண்டையா பாக்காதீங்க…. பொறுப்போடு செயல்படுங்க … டிடிவி திடீர் அட்வைஸ் ..!!

செய்தியாளர்களிடம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  கோயம்புத்தூர்ல சிலிண்டர் குண்டு வெடித்து,  நல்ல வேலையாக இறைவன் அருளால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல்,  அதை கொண்டு வந்தவரே,  அதற்கு பலியான நிகழ்ச்சி எல்லாருக்கும் தெரியும். ஆனால் தமிழக முதலமைச்சர் இதுவரை வாய் திறக்காமல்,  இதைப் பற்றி சொல்ல வேண்டிய பொறுப்பில் இருப்பவர். அதுவும் காவல்துறைக்கு தலைவராக இருப்பவர்,  இப்படி மௌனம் சாதிப்பது தமிழக மக்களுக்கு வேதனையும்,  வருத்தமும் அளிக்கிறது. இனியாவது தமிழ்நாட்டில் அரசாங்கம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன நடக்க போகுதோ…? ரச்சிதாவை இப்படி பாக்குறாரு ராபர்ட் மாஸ்டர்…. டிரெண்டாக்கும் நெட்டிசன்கள்….!!!

பிக் பாஸ் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. போட்டியாளர்கள் கடும் சண்டையுடன் விளையாட்டை விளையாடி வருகின்றனர். இதில் வனிதாவோடு லிவ்விங் டு கெதரில் வாழ்ந்து வந்த ராபர்ட் மாஸ்டர் ரட்சிதாவை கண்ணிமைக்காமல் பார்க்கும் வீடியோவை ரசிகர்கள் டிரண்டாக்கி வருகின்றனர். ரட்சிதா விக்ரமனுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவரை ராபர்ட் மாஸ்டர் பார்க்கும் பார்வையானது கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவுக்கு பின்னணி பாடல்கள் குரல்களை பதிவு செய்து இணையவாசிகள் வைரல் ஆக்கி வருகிறார்கள். ராபர்ட் மாஸ்டர் ஏற்கனவே […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் பிஎச்டி படிப்பு இனி செல்லாது…. மாணவர்களுக்கு யுஜிசி திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!

ஆன்லைன் மற்றும் தொலைதூர முறையில் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.இதனிடையே ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளப்படும் பிஎச்டி படிப்புகள் செல்லாது என்று யுஜிசி திடீரென அறிவித்துள்ளது.கொரோனா காலத்திற்கு பின்னர் இந்தியாவில் ஆன்லைன் எனப்படும் இணைய வழி மூலம் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை 170 சதவீதமும் தொலைதூரக் கல்வி முறையில் படிப்பவர்களின் எண்ணிக்கை 42 சதவீதமும் அதிகரித்துள்ளதாக ஆய்வு கூறுகிறது. நாடு முழுவதும் 66 உயர்நிலை நிறுவனங்களில் 136 இளங்கலை படிப்புகள் மற்றும் 236 முதுகலை படிப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

நாய் வளர்ப்பவரா நீங்கள்?…. இனி இது கட்டாயம்…. இல்லன்னா ரூ.5,000 அபராதம்…. மாநில அரசு அதிரடி….!!!!

மனிதர்களின் மிகவும் பிடித்தமான வளர்ப்பு பிராணிகளில் முதலிடத்தில் இருப்பது நாய்கள் தான். பெரும்பாலான வீடுகளில் நாய்கள் வளர்க்கப்பட்டு வந்தாலும் எத்தனை வீடுகளில் நாய்கள் வளர்க்கப்படுகின்றன என்று கணக்கெடுப்புகள் எதுவும் கிடையாது. இதனால் பல மாநிலங்களிலும் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களின் கணக்கெடுப்பை அறிய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் ஹரியானா மாநிலத்தில் நாய்களை வளர்க்க பதிவு செய்வது கட்டாயம் என்றும் அவ்வாறு விதியை மீறினால் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் மாநில அரசு அறிவித்துள்ளது.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தற்கொலைக்கு முயன்ற திருநங்கை…. “கைகளில் தூக்கி வந்து மருத்துவமனையில் அனுமதித்த பெண் போலீஸ்”…!!!!!

தற்கொலைக்கு முயன்ற திருநங்கையை பெண் போலீஸ் ஒருவர் கைகளில் தூக்கி வந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தட்டார்மடம் அருகே இடைச்சிவிளை மோடி நகரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் சம்பவத்தன்று பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராமலட்சுமியை தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தார்கள். இந்நிலையில் முத்துக்குமாரின் அண்ணனான திருநங்கை செல்வராஜ் என்ற செல்வி சென்ற 26 ஆம் தேதி சாத்தான்குளம் நீதிமன்றத்திற்கு சென்று தனது தம்பி முத்துகுமார் […]

Categories
மாநில செய்திகள்

குடிநீர் இணைப்பு…. அனைத்து கிராமங்களிலும் ஊராட்சி தலைவர்களுக்கு…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் வீடு தோறும் குடிநீர் இணைப்பை வழங்கும் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்ற ஊராட்சி தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கிராம பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் குடிநீர் இணைப்பை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.அதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தில் இதுவரை மூவாயிரம் கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மேலும் தீவிர படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து தமிழக குடிநீர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா இருங்க…. அடுத்த மாதம் 4 நாட்கள்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிக்காக நவம்பர் மாதம் 4 நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தணி அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதற்காக நவம்பர் 9ஆம் தேதி அனைத்து ஓட்டு சாவடிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து ஒரு மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணி நடைபெறும். நவம்பர் மாதம் 12, 13 , 26, 27ஆகிய நாட்களில் அனைத்து ஓட்டு சாவடிகளிலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூத்தடிக்கிறாங்க”…. எனக்கு சுத்தமா பிடிக்கல…. நடிகர் மன்சூர் அலிகான் அதிரடி….!!!!

தமிழ் சினிமாவில்பிரபலமான வில்லன் நடிகராக வலம் வருபவர் மன்சூர் அலிகான். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியானது. கடந்த 9-ம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், வைல்ட் கார்டு என்ட்ரியில்  மைனா நந்தினி  உள்ளே வந்தார். கடந்த வாரம் சாந்தி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாகவே முன்வந்து […]

Categories
மாநில செய்திகள்

பீஸ் கட்ட முடியாத இன்ஜினியரிங் மாணவர்களுக்கு கட்டணம்…. அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு….!!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்த பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு கட்டணங்களை செலுத்த உதவி செய்யப்படும் என துணைவேந்தர் வேல்ராஜ் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,பொறியியல் படிப்பில் மாணவர்கள் தேர்வு செய்த பாடப்பிரிவில் மட்டுமல்லாமல் தங்களுக்கு விருப்பமான மற்ற பாடப்பிரிவில் உள்ள பாடங்களையும் கூடுதலாக படிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்த மாணவர்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களால் கட்டணம் செலுத்த முயலவில்லை என்றால் அவர்களுக்கு முன்னால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BJPயினர் எல்லாருமே…! மோடி மாதிரி தான்… வாயிலையே வடை சுடுவாங்க.. உதயநிதி செம கலாய்..!!

சென்னை கிழக்கு திமுக சார்பில் ”இங்கு இவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்” என்ற தலைப்பில் நடந்த  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், பாஜகவும் சேர்ந்து நடத்துகிறார்கள் இந்தி திணிப்பு போராட்டம் என்று..  நேத்து அவங்களும் நடத்திருக்காங்க. கேட்டா…  நாம ஆங்கிலத்தை திணிக்கிறோமா?  இப்படி நம்ம என்ன சொன்னாலும், அதற்கு குதர்க்கமாக ஏதாவது சொல்லிக்கிட்டு இருக்காங்க. இன்னைக்கு கூட  பாஜக தலைவர் பத்திரிகையாளரை பார்த்து ”குரங்கு” என்று சொல்லிட்டாரு. குரங்கு மாதிரி […]

Categories
தேசிய செய்திகள்

HDFC, ICICI, SBI, PNB வங்கி வாடிக்கையாளரா நீங்க….? ATM கட்டணம் எவ்வளவு….? முழு விவரம் இதோ….!!!

வங்கிகளில் வாடிக்கையாளர்களின் கூட்டத்தை தவிர்ப்பதற்காக இணையதளம் வாயிலாக பண பரிவர்த்தனையை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்கி வருகிறது. ஏராளமான மக்கள் தங்கள் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி atm இயந்திரங்கள் வாயிலாக பண பரிவர்த்தனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சேவைகளுக்கு வங்கிகள் குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூல் செய்து வருகிறது. இலவச வரிவர்த்தனை வரம்பை மீறும் போது பிற வங்கி ஏடிஎம்களை பயன்படுத்தும் போது மட்டுமே இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது பாரத ஸ்டேட் வங்கியானது கொல்கத்தா, பெங்களூர் உள்ளிட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு! செம மாஸ்…. “PS-1” ஓடிடி ரிலீஸ்…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….. குஷியில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கல்கியின் புகழ் பெற்ற நாவலை மையமாக வைத்து‌ எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ரகுமான், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் உலக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கிறிஸ்துவ தேவாலயங்களை சீரமைப்பதற்கு நிதி உதவி”…. தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு….!!!!

தூத்துக்குடியில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சீரமைப்பதற்கு நிதி உதவி வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்து குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தூத்துக்குடியில் சொந்த கட்டிடத்தில் இயங்கி வரும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்வதற்கு நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. இவ்வுதவிகளை பெற தேவாலயம் பதிவு செய்யப்பட்டு, சொந்த கட்டிடத்தில் குறைந்தபட்சம் 10 வருடங்களுக்கு மேல் பயன்பாட்டில் இருக்க வேண்டும். மேலும் பதிவு துறையில் பதிவு செய்திருக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BJP தலைவர் அவனா..! இவனா..! Annamalai க்கு பதிலடி கொடுத்த Tamilan Prasanna..!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழன் பிரசன்னா, இந்த ஆட்சியை சாய்க்க நினைக்கிறார்கள். ஆட்டுக்குட்டிகளை பேசி இந்த மேடையை நான் அசிங்கப்படுத்த விரும்பவில்லை. ஆனால் இன்றைக்கு ஆட்டி குட்டி பேசியது…  அவனுக்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா ? இவனுக்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா ? என்றான். நிச்சயம் அடுத்த நிகழ்ச்சி வரும். அந்த நிகழ்ச்சி வருகின்றபோது பாஜகவின் தலைவர் என்று யாராவது கேட்டால்,  நானும் கேட்கலாமா அவனா ? இவனா என்று ? கேட்டால் எங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

விவசாயிகளிடமிருந்து 19% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வதற்கு தமிழக நுகர் பொருள் வாணிபக் கழகத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி தொடங்கிய நடப்பு கொள்முதல் சீசரின் 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய வாணிபக் கழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில் பல மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக நெல்லில் ஈரப்பதம் அதிகரித்தது. இதனால் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அடி தூள்”…. அடுத்தடுத்த படங்களில் கமிட்டான சூப்பர் ஸ்டார்….. லைகா நிறுவனம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்….!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்த படத்திற்குப் பிறகு ரஜினி நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினியின் 170-வது திரைப்படத்தை டான் […]

Categories
மாநில செய்திகள்

ஆதாரங்கள் அழிப்பு?…. முதல்வர் ஸ்டாலின் அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!!

கோவை கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை 23ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கார் வெடித்து சிதறியதில் ஜமேஷா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அறிந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மேலும் கார் வெடித்து சிதறிய இடத்தில் சிறிய அளவிலான இரும்பு குண்டுகள், ஆணிகள் உள்ளிட்டதை சிதறி கிடந்தது. தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்கள் தான் திருந்தனும்…! ADMKமாதிரி இல்ல.. DMK ஆட்சி சூப்பர்… BJP சொல்லுறத கேட்க கூடாது..!!

செய்தியாளரிடம் பேசிய துரை வைகோ, தமிழகத்தில் சில பிரச்சனைகள் நடக்கின்றது. ஆனால் அது சம்பந்தமா, கிட்டத்தட்ட 24 மணி நேரம்,  48 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட நபர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்கிறார்கள், அதற்குண்டான நடவடிக்கைகளை  எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் சொல்வதை போல  ஒரு வருஷத்தில் ஆங்கங்கே சம்பவம் நடந்திருக்கிறது,  நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் துரிதமிழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. சென்ற அதிமுக ஆட்சியை பொருத்தவரைக்கும் இந்த மாதிரி பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஊடக நண்ர்கள், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்தியா vs பாகிஸ்தான் செவ்வாய் கிரகத்தில் ஆடினால்….. அங்கு நான் செல்வேன்…. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்.!!

இந்தியாவும், பாகிஸ்தானும் செவ்வாய் கிரகத்தில் விளையாடும் என்றால் அங்கு கூட நான் செல்வேன் என்று  ஃபரூக் இன்ஜினியர் தெரிவித்துள்ளார். அக்டோபர் 23, ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 90,000 ரசிகர்கள் முன்னிலையில் நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 இன் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வியத்தகு வெற்றியைப் பதிவு செய்தது. விராட் கோலி 53 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தல்”…. தேதி அறிவிப்பு…!!!!

தூத்துக்குடியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தல் வருகின்ற 8-ம் தேதி நடைபெறுகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியில் அதிமுகவை சேர்ந்த ஐந்தாவது வார்டு உறுப்பினர் சத்யா தலைவராக இருந்த நிலையில் அவருக்கு எதிராக பஞ்சாயத்து உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அந்த தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். இதனால் பஞ்சாயத்து தலைவர் சத்யா பதவியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாநில தேர்தல் ஆணையம் தமிழகத்தில் காலியாக இருக்கும் இடங்களுக்கு தேர்தலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்த மனசு தான் கடவுள்”… உயிருக்கு போராடிய பெண்…. உதவிக்கரம் நீட்டிய பிரபல தயாரிப்பாளர்…. குவியும் பாராட்டு…‌!!!!!

சென்னையில் காவிரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் உறுப்பு இடை நார்திசை நுரையீரல் பாதிப்பு காரணமாக ஒரு பெண்மணி சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பெண் கணவன் இல்லாமல் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு நுரையீரல் பாதிப்பு காரணமாக தழும்புகள் மற்றும் வடுக்கள் போன்றவைகள் ஏற்பட்டதால் 2 நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவரின் பெயர் தமிழ்நாடு உறுப்பு மாற்ற ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அந்த பெண்மணியின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு […]

Categories
வேலைவாய்ப்பு

3,115 பணியிடங்கள்…. இந்திய ரயில்வேயில் வேலை….. இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!

ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 3,115 தொழில் பழகுணர் பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. எலக்ட்ரீசியன், பிட்டர்,வயர் மேன் மற்றும் பெயிண்டர் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பிரிவுகளில் தொழிற் பழகுணருக்கான அறிவிப்பை மத்திய ரயில்வே வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: பழகுனர்களுக்கு பயிற்சி காலி பணியிடங்கள்: 3,115 கல்வி தகுதி: ஐடிஐ கல்வியில் பணியிடங்களுக்கு ஏற்ப பட்டப் படிப்பு. தேர்வு முறை: மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப்பட்டியல் தயாரிக்கப்படும். எழுத்து மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று(29.10.22) 5ஆவது சனிக்கிழமை…. வங்கிகளுக்கு விடுமுறையா….? வெளியான முக்கிய தகவல்….!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதத்திற்குரிய விடுமுறை நாட்கள் பட்டியல்கள் குறித்து வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அக்டோபர் மாதத்திற்கான விடுமுறை பட்டியலையும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியிட்டது. பொதுவாகவே அனைத்து வங்கிகளுக்கும் இரண்டாவது சனிக்கிழமை, நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த மாதத்தில் ஐந்தாவது சனிக்கிழமை வந்துள்ளதால் ஐந்தாவது சனிக்கிழமையான இன்று வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்று சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் கடந்த 2015 வருடம் ஆகஸ்ட் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிணத்தை அனுப்ப கூட ஹிந்தி தெரியணும்…! பாஜக அரசுக்கு எதிராக…. கொளுத்தி போட்ட வைரமுத்து ..!!

ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் பேசிய கவி பேரரசு வைரமுத்து. நான் ஒன்று கேட்கிறேன் நண்பர்களே… மத்திய அரசின் அலுவல் மொழியாக இந்தி.  மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி.  கல்வி மொழியாக இந்தி. அலுவல் மொழியாக இந்தி என்ற சாதாரணமான போக்கில் நீங்கள் புரிந்து கொண்டு போய்விட முடியாது. ஐ எஃப் எஸ் என்று சொல்லக்கூடிய இந்தியன் அயல்ரக தேர்வு முழுக்க இந்தியில் இருக்க வேண்டும், அவை இந்தி தெரிந்தவராக இருக்க வேண்டும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சித்தார்த் – அதிதி ராவ் காதல்….? நீண்டநாள் கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி….. வெளியான ஃபோட்டோ….!!!

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ஹைதரி காதலிப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிவந்தன. இரு தரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு இருவரும் ஒரே காரில் வந்து இறங்கினார்கள். விழா நடைபெறும் இடத்திலும் ஒன்றாகவே அமர்ந்து நிகழ்ச்சியை ரசித்தனர். இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் அதிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இருவரும் நெருக்கமாக இருப்பது போல் இரு புகைப்படத்தை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“மாணவர் மனசு பெட்டி”…. நோக்கம் நிறைவேற்றப்படுகின்றதா…?

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர் மனசு பெட்டி தலைமையாசிரியர் அறைக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிப்பதற்காக தலைமை ஆசிரியர் தலைமையில் இரண்டு ஆசிரியர்கள், ஒரு பெற்றோர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர், ஆசிரியர் அல்லாத பணியாளர், நிர்வாகப் பணியாளர் உள்ளிடோர் கொண்ட பாதுகாப்பு ஆலோசனை குழு அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த பெட்டியை 15 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது மாதத்திற்கு ஒரு முறையோ பிரித்துப் பார்த்து பள்ளி அளவில் நிவர்த்தி செய்ய முடிந்ததை உடனுக்குடன் தீர்வு காணப்படுகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரு தடவையாவது உங்களை அப்பா என்று அழைக்கட்டுமா ? உருகி போன முதல்வர் ஸ்டாலின் …!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, தளபதி ஸ்டாலின் தொண்டனின் தொண்டனாக…  மிகப்பெரிய இயக்கத்தின் தலைவருடைய மகனாக இருக்கலாம். ஆனால் அவர் என்னைக்கும் அப்படி பார்த்ததே கிடையாது. முத்தமிழறிஞர் கலைஞர் மறைந்த பிறகு, ஒரு இரங்கல் பாட்டு பாடு போதும் சொன்னார், இத்தனை ஆண்டு காலம் உங்களை தலைவரை, தலைவரே என்று அழைத்து விட்டேன், ஒருமுறை உங்களை […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே ரெடியா…? MBBS, MDS மருத்துவ படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு முடிவுகள் இன்று வெளியீடு…..!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,607 எம்பிபிஎஸ், 1380 PDS இடங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் பொதுப் பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆனது கடந்த 19ஆம் தேதி என்று ஆன்லைன் மூலமாக தொடங்கியது. அன்றைய தினமே மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு பிரிவினருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு அண்ணா சாலையில் உள்ள அரசு பணி நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேரடியாக நடைபெற்றது. பொது கலந்தாய்வு ஆன்லைன் […]

Categories
மாநில செய்திகள்

புதுமைப்பெண் திட்டத்தில் ரூ.1000 உதவித்தொகை…. இனி இவர்களுக்கும்…. விண்ணப்பிப்பது எப்போது….? முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக நடப்பு வருடத்தில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் மேற்படிப்பு சென்றால் அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். இந்த திட்டமானது புதுமைப்பெண் திட்டம் என்ற முறையில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக கல்லூரிகளில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் மாணவிகள் பயன் அடைந்துள்ளார்கள். இதுவரை 2, 3 மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

MK.ஸ்டாலின் தலைமையில்…. இந்திய நாட்டில் பேர் நடக்குது… DMKவை புகழ்ந்து தள்ளிய கம்யூனிசம்…!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன், நாட்டில் ஒரு மிகப்பெரிய போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சனாதானத்திற்கு எதிரான போர். இந்த சனாதானத்திற்கு எதிரான போரில், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் தலைமை தாங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருப்பது தான் இன்னைக்கு முக்கியமான விஷயம். குறிப்பாக லட்சியமா ? எண்ணிக்கையா ?  என்று பார்த்தால் நிச்சயமாக […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை இன்று முதல் ஆரம்பம்…. 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை…. மக்களே அலர்ட்….!!!!

தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் துவங்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்ற இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் மு.க ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன் தெரியுமா…? வெளியான தகவல்….!!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றார். இதுகுறித்து ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முதுகு வலியை பரிசோதனை செய்வதற்காக வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது போரூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் பரிசோதனை முடிந்து முதல்வர் உடனடியாக வீடு திரும்பினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழன் வேடிக்கை பார்க்க மாட்டான்…! இது ஒன்றிய அரசுக்கு தெரியும்… பாஜகவை எச்சரித்த பிரபல தமிழ் இயக்குனர் ..!!

ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய இயக்குனர் கௌதமன், வெள்ளைக்காரனுக்கு பிறகு தான் 1965இல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது. இங்கே  கவிப்பேரரசர் கூட சொன்னாங்க. 1938 வெள்ளக்காரன் ஆளும் போது எப்படி தாளமுத்தும்,  நடராஜனும் இந்த மண்ணில் மொழிக்காக உயிர் கொடுக்க முடியும். அப்போ ஆண்டது யார் ?  ராஜகோபாலாச்சாரி ( ராஜாஜி )  அப்போ நேரடியா சொல்லி தான் ஆகணும். வெள்ளைக்காரன் காலகட்டத்திலேயே ஹிந்தி உள்ள வருதுன்னா, இப்ப இருக்கக்கூடிய இந்திய ஒன்றிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அய்யோ 1 ரன்னில் போச்சே..! தரையில் உட்கார்ந்து கதறி அழுத பாக் வீரர்…. வைரலாகும் வீடியோ.!!

பாகிஸ்தான் தோற்றதை தாங்கிக் கொள்ள முடியாமல் அந்த அணியின் ஆல் ரவுண்டர் சதாப் கான் கண்ணீர் விட்டு அழுத வீடியோ வைரலாகி வருகிறது.. டி20 உலகக் கோப்பை சூப்பர் 12இல் நேற்று முன்தினம் பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ட்டு முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 130 ரன்கள் குவித்தது இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் […]

Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு..! 184 பேருடன் புறப்பட்ட இண்டிகோ விமான இன்ஜினில் திடீர் தீ…. “உடனே நிறுத்திய விமானி”…. வைரல் வீடியோ..!!

டெல்லியில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்ட விமானத்தின் இன்ஜினில் தீப்பிடித்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திலிருந்து பெங்களூருக்கு புறப்படுவதற்கு 6E-2131 என்ற இண்டிகோ விமானம் நேற்று இரவு ஓடுதளத்தில் இருந்து டேக் ஆப் செய்வதற்காக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டேக் ஆப் செய்யும்போது, விமானத்தின் வலது இறக்கையில் இருந்து தீப்பொறி கிளம்பியது. இதையடுத்து உடனே விமானி டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கினார். இண்டிகோ விமானம் 6E-2131 இன்ஜின் தீப்பிடித்ததால், புறப்படுவது நிறுத்தப்பட்டது மற்றும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! சிக்கனம் தேவை…! பிரச்சனை சரியாகும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் சிக்கனமாக இருப்பது அவசியம். பண தேவை பற்றாக்குறையால் கடன் வாங்கும் சூழல் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேறாமல் கவலையை ஏற்படுத்தும். நண்பர்களால் நற்காரியம் உண்டாகும். தொழில் சார்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நினைத்த காரியத்தை நினைத்த படி நடத்தி முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களால் நன்மையும் உண்டாகும். சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். காரியங்களில் தாமதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். தொழில் வியாபாரம் சிறப்பாக […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! வேலை அதிகரிக்கும்…! உயர்ந்த எண்ணம் கிட்டும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று வேலை பளு அதிகரிக்கும். உறவினர்கள் ஆதரவு கிடைக்காமல் இருக்கும். பார்த்து கவனத்துடன் இருக்க வேண்டும். இன்று இறைவழிபாடு தேவை. பிரச்சனைகள் அகலும் நாளாக இருக்கும். பிரபலங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் தொல்லை கொடுத்தவர்கள் விலகிச்செல்வார்கள். தொழிலை விரிவுபடுத்திக் கொள்வீர்கள். சிந்தனைத்திறனை அதிகப்படுத்தி கொள்வீர்கள். சிலர் வெளியூர் பயணங்களுக்கு செல்லக்கூடும். பெண்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். வேலையாட்களிடம் கவனமாக பேசுங்கள். சக பணியாளர்களிடம் நிதானமாக நடந்துகொள்ளுங்கள். நினைத்தபடி பணிகளை செய்ய முடியாத சூழல் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! உதவி கிட்டும்…! பொறாமை அதிகரிக்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! உடன்பிறந்தவர்கள் உதவி கரம் நீட்டுவார்கள். உடன் இருப்பவர்கள் துரோகிகளாக மாறுவார்கள். பொறுமையுடன் எதையும் செய்யுங்கள். இன்று முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. உடன் பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் வகையில் இருக்கும். கூட்டு தொழிலில் லாபம் கிடைக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வழக்குகளில் வெற்றி கிட்டும். தொழில் மற்றும் வியாபாரம் ரீதியாக நெருக்கடிகள் மேலோங்கும். போட்டி மற்றும் பொறாமைகள் அதிகரிக்கும். தொழிலில் மந்தமான நிலை நிலவுவதால் லாபம் குறையும். பேச்சில் […]

Categories

Tech |