Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NEDvPAK : பாக்., பந்துவீச்சை சமாளிக்க முடியாமல்….. 91 ரன்னில் சுருண்டது நெதர்லாந்து.!!

பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 போட்டியில் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது நெதர்லாந்து அணி. டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்று பெர்த் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய ஸ்டீபன் மைபர்க் 6, மேக்ஸ் ஓ’டவுட் 0, என அடுத்தடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் பாய்ந்த தனியார் பேருந்து…. கண்ணாடியை உடைத்து வெளியேறிய பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!!

பேருந்து பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனியார் பேருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்திற்குள் பாய்ந்தது. இதனால் பயணிகள் அலறியடித்து கொண்டு அவசர கால கதவு வழியாக வெளியேற முய. ஆனால் அந்த வழி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நாளை முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நேற்று இரவு அரல்வாய்மொழி, சாமிதோப்பு, மார்த்தாண்டம், குளச்சல், நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனை அடுத்து பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் மழை நீர் சுமார் 2 அடி அளவுக்கு தேங்கி வடிந்ததால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். சில இடங்களில் மழைநீருடன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கார்” பரிசாக கொடுக்கிறோம்…. 14 லட்ச ரூபாய் இழந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடத்தூர் பகுதியில் அஜித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டு முகவரிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தபால் வந்தது. அதில் ஒரு கடிதமும், பரிசு கூப்பனும் இருந்தது. அந்த பரிசு கூப்பனை திறந்து பார்த்தபோது கார் பரிசு விழுந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அடுத்து அந்த கடிதத்தில் குறிப்பிட்ட செல்போன் எண்ணை அஜித்குமார் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் உங்களுக்கு கார்பரிசு விழுந்துள்ளது. நீங்கள் கார் அல்லது அதற்கு […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

தெறித்து ஓடிய ராகுல் காந்தி…. ப்பா என்னா ஸ்பீடு…. இணையத்தை கலக்கும் வீடியோ…..!!!!

தெலுங்கானா மாநிலத்தில் இந்திய ஒற்றுமை பயணத்தின் போது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி சிறுவர்களுடன் ஓட்ட பந்தயம் விளையாடினார். இதற்கு முன்னதாக நடன கலைஞர்களுடன் பதுகம்மா நடனமாடி ராகுல் காந்தி உற்சாகப்படுத்தினார். ராகுல் ஒற்றுமை பயணம் தெலுங்கானாவில் 19 சட்டசபை தொகுதிகள் மற்றும் 7 பார்லிமென்ட் தொகுதிகள் என மொத்தம் சுமார் 375 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து வருகின்ற நவம்பர் 7ஆம் தேதி மராட்டியம் செல்ல உள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கு முன்னதாக நவம்பர் நான்காம் தேதி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“ஆபாச படம் பிடித்து மிரட்டும் கணவரின் நண்பர்” குழந்தைகளுடன் போராடிய இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இளம்பெண் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இளம்பெண் ஒருவர் தனது உறவினர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் இளம்பெண் கூறியதாவது, எனது கணவர் வெளியூர் சென்றிருந்தபோது அவரது நண்பர் எங்களது வீட்டிற்கு வந்தார். அப்போது என்னை ஆபாசமாக படம் பிடித்து வைத்திருப்பதாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மிட்டாதாரன் கொட்டாய் மலை கிராமத்தில் விவசாயியான சின்னவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தெய்வானை என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ஆடுகள் நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்ததால் சின்னவன் தழை வெட்டுவதற்காக அங்கிருந்த வேப்ப மரத்தில் ஏறியுள்ளார். இந்நிலையில் தழைகளை வெட்டிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சின்னவன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சிக்னல் இல்லாமல் திரும்பிய லாரி…. 3 வயது குழந்தை பலி; தந்தை படுகாயம்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் சிப்காட் கோவிந்த அக்ரஹாரம் பகுதியில் கூலி தொழிலாளியான ராதே(28) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதுடைய அனிகா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 26-ஆம் தேதி ராதே தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் சூளகிரி நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அட்டகுறுக்கி அருகே சென்ற போது எந்த சிக்கனமும் இல்லாமல் முன்னால் சென்ற லாரி திடீரென திரும்பியது. இதனால் ராதே ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் லாரி மீது பயங்கரமாக மோதியது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மர்மமாக இறந்து கிடந்த கர்ப்பிணி…. காதல் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தாயின் பரபரப்பு புகார்…!!!

கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ராயபாளையம் நெசவாளர் காலணியில் கார்த்தி(26) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்தி, பிருந்தா(23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதலை பிருந்தாவின் தாய் ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது பிருந்தா நான்கு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி அன்று பிருந்தா தனது கணவருடன் சகோதரி மங்கையர்கரசி வீட்டிற்கு சென்று வந்துள்ளார். கடந்த […]

Categories
சினிமா

திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…. இனி முழு அரசியலில் நமீதா…. அவரே சொன்ன பதில்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து தனது கவர்ச்சியால் ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் வசம் கவர்ந்தவர் தான் நடிகை நமீதா. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பழமொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர்.இவர் தற்போது சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் இன்றும் ரசிகர் மத்தியில் இவருக்கென தனி ஒரு வரவேற்பு உள்ளது. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய இவர் தற்போது அரசியலில் களம் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மாணவிகளின் கவனத்திற்கு….! புதுமை பெண் திட்டத்தில் சேருவது எப்படி….? மாவட்ட கலெக்டரின் தகவல்…!!!

கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதுவரை 2, 3 மற்றும் 4- ஆம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இந்த திட்டத்தின் கீழ் உதவி தொகையை பெற்று பயனடைந்தனர். தற்போது www.puthumaipenn.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகளும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1- ஆம் தேதி முதல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி-வட்டக்கோட்டை வரை சொகுசு படகு சவாரி…. தொடங்குவது எப்போது…? அதிகாரியின் தகவல்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடலின் நடுவே இருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கு தினமும் சராசரியாக பத்தாயிரம் பேர் வரை மட்டுமே படகு சவாரிக்கும் அழைத்து செல்லப்படுவதால் மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். தமிழக அரசு 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 2019-ஆம் ஆண்டு தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய இரண்டு சொகுசு படகுகளை கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு வாங்கியது. தற்போது படகு தளத்தில் போதிய கட்டமைப்பு இல்லாததாலும், கொரோனா தொற்று பாதிப்பாலும் […]

Categories
சினிமா

அப்போ காதல் கன்ஃபார்ம் தான்…. அதிதி ராவ் காதலை உறுதிப்படுத்திய சித்தார்த்…. இணையத்தில் வைரலாகும் புதிய போஸ்ட்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சித்தார்த்.இவரும் நடிகை அதிதி ராவும் காதலித்து வருவதாக அண்மைக்காலமாக ஒரு தகவல் இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் இவர்கள் தரப்பிலிருந்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.இந்நிலையில் அதிதி ராவ் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு சித்தார்த் வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் இதய இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அது மட்டுமல்லாமல் அவருடன் ஒன்றாக இணைந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மைசூரு-தூத்துக்குடி சிறப்பு கட்டண ரயில்…. வெளியான அறிவிப்பு…!!!

மதுரை வழியாக மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு பண்டிகை கால சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் எண் 06253 வருகிற 4,11, 18 ஆகிய தேதிகளில் மதியம் 12 மணிக்கு மைசூரில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 1.15 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தை சென்றடைந்து. மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடிக்கு வருகிறது. மறு மார்க்கத்தில் ரயில் எண் 06254 வருகிற 5,12,19 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு 5.50 […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எச்சரிக்கை….!! ஜவளகிரி வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்த 70-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள்….. அச்சத்தில் பொதுமக்கள்…!!!

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து கூட்டம் கூட்டமாக காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு இடம் பெயர்வது வழக்கம். நேற்று கர்நாடக வனப்பகுதியில் இருந்து 70-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் நுழைந்து பல்வேறு குழுக்களாக சுற்றி திரிகிறது. இதனால் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் கிராம மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். அந்த யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BJP, RSS நடக்கவிருக்கும் பந்த்க்கு அனுமதி வழங்க கூடாது.. இஸ்லாம் அமைப்புகள் வேண்டுகோள்..!

கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பான வழக்கு NIA விசாரணையில் நடந்து வருகின்றது. இதற்கிடையே பாஜக கோவையில் பந்த் அறிவித்தது. அதற்க்கு தடைகேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் கோவை மாவட்ட ”பாஜக பந்த் அறிவிப்புக்கு” தமிழக மாநில தலைமை ஒப்புதல் அளிக்கவில்லை என்று கோர்ட்டில் பாஜக மாநில தலைவர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று பாஜக பந்த் அறிவிப்பு இல்லை என்று அறிக்கையே விட்டது. இதனிடையே நேற்று முன்தினம் இஸ்லாமிய […]

Categories
தேசிய செய்திகள்

“ஐடி ஊழியர்கள்”…. அதிகரிக்கும் மூன் லைட்டிங் பிரச்சனை…. 50% ஊழியர்கள் பணி நீக்கம்….. ஷாக் தகவல்….!!!!!

ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே மற்றொரு நிறுவனத்திலும் வேலை பார்க்கின்றனர். இது மூன் லைட்டிங் என்று சொல்லப்படுகிறது. இது தற்போது கண்டுபிடிக்கப்பட்டதால் 50% ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்பிறகு வீட்டில் இருந்து வேலை செய்யும் ஊழியர்கள் தான் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே மற்றொரு நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலை பார்க்கின்றனர். இதன் காரணமாக வீட்டிலிருந்து வேலை பார்க்கும் ஊழியர்களில் 90 சதவீதம் பேர் மீண்டும் அலுவலகத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“22 வயசு பெண்ணை காதலிக்கும் ராபர்ட் மாஸ்டர்”…. அவரே சொன்ன உண்மை…. வைரலாகும் வீடியோ….!!!!!

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 9-ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் இருந்த நிலையில், சாந்தி, ஜி.பி முத்து மற்றும் அசல் கோலார்  ஆகியோர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில் சக போட்டியாளர்களிடையே கடும் மோதல் மற்றும் சண்டைகள் நடைபெற்றது. அதன் பிறகு கமல்ஹாசன் ஒரு டாஸ்க் கொடுத்தார். அப்போது போட்டியாளர்களிடம் ஏதாவது ஒரு பொம்மையை […]

Categories
தேசிய செய்திகள்

கொல்லிமலை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி…. வனத்துறையினர் அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருவதனால் அணைகள், ஏறி, ஆறுகள் அனைத்தும் மழை நீரால் நிரம்பி காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டத்தின் மூலிகை சுற்றுலா தளமான கொல்லிமலையில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம் அருவி, மாசிலா அருவி, புளியஞ்சோலையில் நீர்வரத்து அதிகரித்து காட்றாற்று வெள்ளம் கரைப்புரண்டு ஓடியது. அதனால் கடந்த பத்தாம் […]

Categories
மாநில செய்திகள்

10.5 கிலோ எடையுள்ள தேவர் வெள்ளி கவசம்…. பசும்பொன் சென்று காந்திமீனாளிடம் வழங்கினார் ஓபிஎஸ்..!!

பசும்பொன் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாளிடம் வெள்ளி கவசத்தை வழங்கினார் ஓ.பன்னீர்செல்வம்.. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 115 ஆவது ஜெயந்தி மற்றும் 60ஆவது குருபூஜை விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தவிழாவையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் என பலரும் பசும்பொன் கிராமத்திற்கு சென்று முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் அஞ்சலி […]

Categories
தேசிய செய்திகள்

யமுனை நதியில் நிறையும் நச்சு நுரைகள்… வெளியான ஆய்வறிக்கை… சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை…!!!!!

யமுனை ஆற்றில் நச்சு கழிவுகள் நிறைந்திருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள புனித நதிகளில் ஒன்றாக கருதப்படும் யமுனை நதி இமயமலையில் உற்பத்தியாகி புதுடெல்லி, ஆக்ரா வழியாக பாய்ந்து வருகிறது. பண்டிகை காலங்களில் பக்தர்கள் யமுனை நதியில் நீராடுவது வழக்கமான ஒன்றாகும். இத்தகைய யமுனை நதியில் தற்போது தொழிற்சாலை மற்றும் நகர்புற கழிவுகள் அதிக அளவில் திறந்து விடப்படுகின்ற காரணத்தினால் அதில் நச்சு நுரைகள் நிறைந்து காணப்படுகிறது. முழுமையாக சுத்திகரிக்கப்படாத சாக்கடை நீர் நதியில் கலப்பதன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டி.ஜெ கிட்ட கேளுங்க… செமையா சமாளிப்பாரு… எடப்பாடியை அண்ணன் என்ற டிடிவி ..!!

செய்தியாளர்கள் எங்களை முடக்கனும் என்கின்ற விதத்தில் தான் கேள்வி கேப்பீங்க. கிரிக்கெட்ல எதிர் டீம் சிக்ஸர் அடிக்கனும்னா பால் போடுவாங்க. அதை வந்து அவரு இப்பதானே அரசியலுக்கு வந்திருக்கிறார். கொஞ்ச நாள்ல பட்டு வருவாருள்ள, அதுல நிதானமாகிடுவாருன்னு நினைக்கின்றேன். ஏற்கனவே ஒருமுறை ஊடக நண்பர்களை பார்த்து பேசினாரு. ஒரு ஐபிஎஸ் அதிகாரி. அதுவும் ஒரு தேசிய கட்சியினுடைய தமிழ்நாட்டு தலைவர். அவருடைய இந்த மாதிரியா போக்கை அவர் கட்சியிலே உன்னிப்பா கவனிச்சுக்கிட்டு இருப்பாங்க. தேசிய தலைமைல கவனிக்கு. […]

Categories
தேசிய செய்திகள்

உலகில் அதிக ஊழியர்களைக் கொண்ட அரசு துறை… ஸ்டேட்டிஸ்டா நிறுவனம் வெளியிட்ட விவரம்…!!!!!

உலகில் அதிக ஊழியர்களைக் கொண்ட அரசு துறை விவரம் ஒன்றை ஸ்டேட்டிஸ்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலக அளவில் அதிக ஊழியர்களைக் கொண்ட துறையாக இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. உலகிலேயே அதிக ஊழியர்களைக் கொண்ட அரசு துறைகள் பற்றிய விவரத்தை ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்டேட்டிஸ்டா என்ற நிறுவனம் வருடம் தோறும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் 2022 ஆம் வருடத்திற்கான பட்டியல் படி உலகில் உள்ள நாடுகளில் அதிக ஊழியர்களைக் கொண்ட […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டம்… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!!

வடகிழக்கு பருவமழை பற்றிய முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுடான ஆய்வுக் கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கு மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையாளருமான தாரேஸ் அகமது […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன்”…. பிரதமர் மோடி டுவிட்..!!

பிரதமர் நரேந்திரமோடி முத்துராமலிங்கத்தேவரை வணங்குவதாக ட்விட் செய்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 115 ஆவது ஜெயந்தி மற்றும் 60ஆவது குருபூஜை விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தவிழாவையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் என பலரும் பசும்பொன் கிராமத்திற்கு சென்று முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடி முத்துராமலிங்கத்தேவரை வணங்குவதாக ட்விட் செய்துள்ளார். அதில், பெருமதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை கார்வெடிப்பு சம்பவம்… 3 கோவில்களை தகர்க்க சதித்திட்டம்… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!!!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விபத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து ஜமேசா முபினுடன் தொடர்பில் இருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜமீஷா முபின் வீட்டிலிருந்து 75 கிலோ வெடி மருந்து உட்பட 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் கோவையில் உள்ள மூன்று முக்கிய கோவில்களை தகர்க்க சதி செய்திருப்பது உட்பட பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது பலியான ஜமேஷா முபின் மற்றும் அவருடைய உறவினர்களான அசாருதீன், […]

Categories
Uncategorized

ஹிந்தியை தினிக்காதீங்க…! தெரியும்ல ஜல்லிக்கட்டு போராட்டம் … மத்திய அரசை எச்சரித்த கௌதமன் ..!!

ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய இயக்குனர் கௌதமன், ஜல்லிக்கட்டு விளையாட கூடாது என்பது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு.  இந்திய ஒன்றிய அரசு கைவிரித்து இனி ஜல்லிக்கட்டு விளையாட்டு நடக்காது என்று கொக்கரித்தது, அதெல்லாம் வரலாறு. கடைசியில் எங்க போராட்டத்திற்கு அடிபணிந்து தலைகுனிச்சி இந்த சட்டத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீங்கள் நிறைவேற்றலாம் என்று வேறு வழி இல்லாமல் நீங்கள் அடிபணிந்தீரகள். இந்த போராட்டம் முடியாது, சட்டம் ஏற்றினாலும் தமிழர்கள் இதை நம்ப மாட்டார்கள் என்று கடற்கரையை […]

Categories
மாநில செய்திகள்

தேவர் ஜெயந்தி : தனி விமானம் மூலம் மதுரை செல்கிறார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்..!!

முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த சேலத்தில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை செல்கிறார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்.. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 115 ஆவது ஜெயந்தி மற்றும் 60ஆவது குருபூஜை விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் என பலரும் பசும்பொன் கிராமத்திற்கு சென்று முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பேசி முடிச்சுட்டு நீ கெளம்பிரு… உன் பின்னாடியே வந்துருதேன்னு சொன்ன தயாநிதி… வசமாக போட்டுக் கொடுத்த உதயநிதி ..!!

சென்னை கிழக்கு திமுக சார்பில் ”இங்கு இவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்” என்ற தலைப்பில் நடந்த  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு அண்ணன் நினைச்சா,  மழையை கூட நிப்பாட்டிராரு. ஏனென்றால், அவர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்ல. எனக்கு நம்பிக்கை இல்லை,  சொல்றேன். இருந்தாலும் எனக்கு இன்னைக்கு மதியம் தொலைபேசியில் அழைத்து ஞாபகப்படுத்தினார். நான் கேட்பதும் முன்னாடி அவரே சொல்லிட்டாரு, ரெண்டு இடத்துல ஏற்பாடு பண்ணி இருக்கு. மழை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மாணவிகள் மாதம் ரூ.1000 பெற விண்ணப்பிப்பது எப்படி..?? மாவட்ட கலெக்டரின் தகவல்…!!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதுவரை 2, 3 மற்றும் 4- ஆம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இந்த திட்டத்தின் கீழ் உதவி தொகையை பெற்று பயனடைந்தனர். தற்போது www.puthumaipenn.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகளும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1- ஆம் தேதி முதல் 11-ஆம் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் மழை…. எங்கெல்லாம் தெரியுமா?

தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1. வடகிழக்கு பருவமழை உள் தமிழகம், கேரளா, தென் உள் கர்நாடகா, ராயல சீமா பகுதிகளிலும் பரவியுள்ளது. 2. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 30.10.2022 : தமிழ்நாடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உத்தரவிட்ட C.M ஸ்டாலின்…! 3 மணி நேரத்தில் கோவிலுக்கு போன அமைச்சர்… DMK ஹிந்து விரோதி இல்லைனு நிரூபணம்..!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழன் பிரசன்னா, துண்டிச்சிட்டு வைத்து படிக்கிறார் என்று சொன்னவன் எல்லாம், இன்றைக்கு சொல்கிறான். யப்பா இந்தியாவிற்கே திராவிட மாடல் என்கின்ற துருப்புச்சீட்டு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கின்ற மாபெரும் தலைவன் என்று சொல்கிறான். அவருக்கு ஒண்ணுமே தெரியாது, அவருக்கு பேசவே தெரியாது என்று சொன்னவர்கள் எல்லாம்,  வாயையும் எல்லாவற்றையும்,  நவ துவாரங்களையும் அடக்கி கொண்டு சொல்கிறார்கள்.. ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தென் கருணாநிதியென்று என தெரிவித்தார். மேலும் பேசிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக சொல்லி செய்யல…! 1நாள், 2 நாள்ல எந்த அரசாலும் முடியாது… போலீஸ் கரெக்ட்டா செய்யுது..!!

செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, பாஜக சொன்னதால் NIAவுக்கு மாற்றம் செய்யல. ஒரு விபத்து நடக்குது. ஒரு குண்டுவெடிப்பு நடக்குது. அந்த குண்டுவெடிப்புக்கு பின்னாடி யார் இருக்காங்க ? அதை விசாரணையை செஞ்சி,  அதற்கு பிறகு பார்க்கும்போது,  இது பின்னாடி வெளிமாநிலத்தவருடைய தொடர்பு இருக்கலாம்,  வெளிநாட்டவருடைய ஈடுபாடுகள் கூட இருக்கலாம் என்று சொல்லிட்டு அதை முறையாக தேசிய புலனாய் முகமைக்கு அனுப்பி இருக்கிறார்கள். நீங்கள் சொல்லுற மாதிரி 24 மணி நேரம்,  48 மணி நேரத்தில் முடிவு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : பரபர போட்டி…. “நோபால் த்ரில் மேட்ச்”…. 3 ரன்னில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்திய வங்கதேசம்..!!

வங்கதேசம் 3 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி த்ரில்  வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று சூப்பர் 12 போட்டியில் வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பிரிஸ்பேன் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணி களம் இறங்கி 20 ஓவர் முடிவில் 7 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தி மொழி வண்டு மாதிரி…! 1இல்ல 2 மாதம் கழிச்சி பாருங்க… கலக்கலாக விளங்கிய வைரமுத்து…!!

ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவி பேரரசு வைரமுத்து. ஹிந்தியை அமுல்படுத்த மத்திய அரசின் பரிந்துரைகள் நமக்கு வெற்று உரைகளாக தோன்றுகின்றன. இந்த பரிந்துரைகளை நாம் புறம் தள்ள வேண்டியது நமது கடமையாக இருக்கிறது என்று நினைக்கிறேன். சிலர் நினைக்கலாம்..  இது இந்தி தானே, ஒரு மொழி தானே, இந்திய மொழி தானே, இதை கற்றுக் கொள்வதில் என்ன தடை ? என்று பலபேர் கேட்கலாம். நான் அவர்களை பார்த்து கேட்கிறேன். இந்தியை மெல்ல நுழைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னுடைய சீடர் எப்படி பேசினார் ? திரும்பி பார்க்கும் ஸ்டாலின்… முகத்தில் ஒரே பூரிப்பு தான் ..!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நம்முடைய அமைச்சர் சேகர் பாபு அவர்கள், வரும் போது கூட காதில் விழுந்தது, பிரபாகரன் பேசும்போது சொன்னார்கள்… அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், இது இல்ல. இது இல்லாமல் இன்னும் நிறைய கனவு அவருக்கு இருக்கிறது. இவருக்கே இவ்வளவு கனவு இருக்கிறது என்று சொன்னால்,  இவருடைய தலைவர் நம்முடைய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மனநல காப்பகத்தில் இணைந்த காதல் ஜோடி”…. அரசு வேலை வழங்கிய அமைச்சர்…!!!!!

மனநல காப்பகத்தில் இணைந்த காதல் ஜோடிக்கு நேற்று முன்தினம் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சைக்காக சென்ற இடத்தில் மகேந்திரன் என்பவருக்கும் தீபா என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்திருக்கின்றது. இந்த நிலையில் இவர்களின் திருமணம் கீழ்பாக்கத்தில் உள்ள மனநல காப்பக வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மனநல காப்பகத்தின் இயக்குனர், டாக்டர்கள், நர்சுகள் பிரம்மாண்டமாக திருமண ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். காப்பகத்திற்கு வெளியே இருக்கும் கோவிலில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நவ.4 அல்லது 5ல்…. விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!!

இயக்குனர் வம்சியின் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகியுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த நிலையில் ‘வாரிசு’திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. படத்திலிருந்து போஸ்டர்கள் மற்றும் ஸ்டில்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதனிடையே, தமன் இசையில் இப்படத்திற்கான அனைத்து பாடல்களும் முழுமையடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, படத்தின் முதல் பாடலை வரும் நவ.4 அல்லது 5ல் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

OMG: ஒரே நேரத்தில் 100 பேருக்கு Heart Attack….நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!!!

தென் கொரியாவின் சியோலின் இதாவோன் பகுதியில் சுமார் 1 லட்சம் பேர் ஹாலோவீன் திருவிழா கொண்டாடத்திற்காக கூடினர். அங்கு பெரிய அளவிலான மக்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பண்டிகையின் போது ஒரு குறுகிய தெருவில் முன்னோக்கி தள்ளப்பட்ட ஒரு பெரிய கூட்டத்தால் நசுக்கப்பட்டதில் சிக்கிய மக்களில் சுமார் 120 பேர் உயிரிழந்துள்ளதாக தென் கொரிய நாட்டை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டத்தின் கூட்ட நெரிசல் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 149 ஆக […]

Categories
மாநில செய்திகள்

MBBS பாடப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்க திட்டம்…. அரசு பள்ளி மாணவர்களுக்கு நிம்மதி….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே மருத்துவ படிப்பை தேர்வு செய்து படித்து வந்தனர். இதன்பின் 7.5% உள் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட பிறகு மருத்துவ படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகளில் படித்த பெரும்பாலான மாணவர்கள் தமிழ் வழி கல்வி படித்தவர்கள் என்பதால் அவர்களுக்கு முதல் வருடத்தில் ஆங்கில வழியில் எம்பிபிஎஸ் பாடங்களை படிக்க சிரமமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு MBBS பாடப் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“கால்நடைகளின் உயிரைக் குடிக்கும் பாலித்தீன்”…. பயன்பாட்டை குறைக்க வேண்டும் என கோரிக்கை…!!!!!

பாலித்தீன் கழிவுகளின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.  இன்றைய சூழ்நிலையில் பொதுமக்கள் பாலித்தீன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். பாலித்தீன் கால்நடைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு சுற்றுச்சூழலுக்கும் சுகாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கின்றது. பொதுவெளிகளில் மக்கள் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும். கால்நடை வளர்ப்போர் கால்நடைகளுக்கு பாதுகாப்பான மேய்ச்சல் சூழலை நாம் உருவாக்கி தர வேண்டும். அது நமது கடமையாகும். வனப்பகுதியை ஒட்டி இருக்கும் கிராமங்களில் பாலிதீன் கவர்களை பயன்படுத்திவிட்டு குப்பைகளை போடுவதால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தயாரிப்பாளர் மகனுடன் பிகில் பட நடிகைக்கு திருமணமா…? அவரே சொல்ல விளக்கம் இதோ….!!!

பிகில் மற்றும் 96 திரைப்படத்தில் நடித்துள்ள வர்ஷா பொல்லம்மா தெலுங்கு டைரக்டர்  மகனுடன் காதல்.  தமிழ் சினிமாவில் சப்போர்ட்டிங் நடிகையாக “வெற்றிவேல்” திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் தான் வர்ஷா பொல்லம்மா. இதனைத் தொடர்ந்து இவர் “96” திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடனும், “பிகில்” திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடனும் நடித்துள்ளார். கன்னட நடிகையான வர்ஷா பொல்லம்மா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கலக்கிக் கொண்டிருக்கின்றார். இவர் ஹீரோயினாக நடிக்கவில்லை என்றாலும் கூட பல திரைப்படங்களில் சப்போட்டிங் ரோல்கள் அவருக்கு […]

Categories
உலக செய்திகள்

அடக்கவுளே… மகளைக் கடித்த நண்டு… ஆத்திரத்தில் தந்தை செய்த செயலால் மருத்துவமனையில் அனுமதி…!!!!

சீனாவில் உயிருடன் நண்டு சாப்பிட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவின் ஜெஜியாங் நகரை சேர்ந்த லூ(39) என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வீட்டிற்கு உயிர் உள்ள நண்டுகளை வாங்கி வந்திருக்கின்றார். அப்போது நண்டு அவரது மகளை கடித்ததால் வலியால் அலறி துடித்துள்ளார் அதன் பின் ஆத்திரமடைந்த லூ குழந்தையை கடித்த அந்த நண்டை பிடித்து அப்படியே உயிருடன் சாப்பிட்டுள்ளார். இந்த சூழலில் இரண்டு மாதங்களுக்குப் பின் லூவிற்கு கடமையான முதுகு வலி ஏற்பட்டு வலி தாங்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! திருமணமான ரெண்டு மாசத்துல…. மகாவுக்காக ரவி செய்த காரியம்…. குவியும் வாழ்த்து….!!!!

ரவீந்தர்-மகாலட்சுமி திருமண வாழ்த்து இணையத்தில் குவிந்து வருகின்றது. தமிழ் சினிமாவில் பேசப்படும் விஷயமானது தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகையான மகாலட்சுமி   திருமணமாகும். தமிழ் சீரியலில் பிரபல நடிகையாக திகழ்பவர் மகாலட்சுமி. இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி மற்றும் அன்பே வா போன்ற சீரியலில் நடித்துள்ளார்.  இவர்களது  திருமண போட்டோ சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் வைரலாகி வருகின்றது. சீரியல் நடிகையான மகாலட்சுமி பணத்திற்காக மட்டுமே தமிழ் டைரக்டர் ரவீந்தரை திருமணம் செய்து இருக்கிறார் என்று […]

Categories
மாநில செய்திகள்

முத்துராமலிங்கத் தேவரின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்! – முதல்வர் ஸ்டாலின் ட்விட்.!!

ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்! என்று முதல்வர் ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார்.. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 115 ஆவது ஜெயந்தி மற்றும் 60ஆவது குருபூஜை விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் பலரும் பசும்பொன் கிராமத்திற்கு சென்று முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு, அன்பில் […]

Categories
அரசியல்

இன்றைய(30.10.22) தங்கம், வெள்ளி விலை நிலவரம்….!!

இன்று தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை. இந்தியாவில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.37,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட்  ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,675-க்கு விற்பனை ஆகிறது. மேலும் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.57.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“தரமான ஹெல்மெட் விற்கப்படுகிறதா..?” அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்…. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை….!!!!!

தரமான ஹெல்மெட் விற்பனை செய்யப்படுவதை அதிகாரிகள் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். சாலைகளில் ஏற்படும் பெரும்பாலான விபத்துகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதாலே ஏற்படுகின்றது‌. இந்த நிலையில் தற்போது வாகனம் ஓட்டுபவர் மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கின்றது. மேலும் விதிமீறல்களுக்கு பல மடங்கு அபராதம் உயர்த்தப்பட்டு இருக்கின்றது. இதனால் பல இடங்களில் புதிய சாலை ஓரத்தில் விற்பனையாளர்கள் முளைக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது ஹெல்மெட் விற்பனை அமோகமாக நடந்து வருகின்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. “PS-1” வெற்றி கொண்டாட்டம்….. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!!

”பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் வெற்றியை அப்படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும்  இசைக்குழுவுடன் கொண்டாடி வருகின்றனர். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான “பொன்னியின் செல்வன்” திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30- ஆம் தேதி வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தீபாவளியை முன்னிட்டு வெளியான “சர்தார் மற்றும் பிரின்ஸ்” திரைபடங்களை காட்டிலும் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் மாஸ் குறையவே இல்லை. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு இசையமைப்பாளர் ஏ ஆர் […]

Categories
உலக செய்திகள்

வழிபாட்டுத்தலத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி…. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…. காவல்துறை வெளியிட்ட தகவல்….!!!!

வழிபாட்டுத்தலத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. ஈரான் நாட்டில் ஷிராஸ் நகரில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலம் அமைந்துள்ளது. இந்த வழிபாட்டுத்தலத்தில் கடந்த 26ம் தேதி அன்று பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 15 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 40-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதற்கிடையில் துப்பாக்கிச் சூடு நடத்திய மூன்று பயங்கரவாதிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!… திடீரென சரிந்து இடிந்து விழுந்த பாலம்…. இடிபாடுகளில் சிக்கிய 8 பேர்…. கேரளாவில் பரபரப்பு…..!!!!!

கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பிரபலமான மேகா கட்டுமான நிறுவனம் மேற்கொள்கிறது. இந்நிலையில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்த போது திடீரென பாலம் சரிந்து இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளில் 8 தொழிலாளிகள் சிக்கிய நிலையில், அதிர்ஷ்டவசமாக காயத்தோடு உயிர்த்தப்பினர். இதனையடுத்து பாலத்தை சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் மக்கள் கூட்டம் கூடியதால் […]

Categories

Tech |