Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தாயுடன் ஆடு மேய்க்க சென்ற சிறுமி…. லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கோர விபத்து…!!!

சாலையை கடக்க முயன்ற போது லாரி மோதிய விபத்தில் சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி கிராமத்தில் பாலு-காளியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காயத்ரி(13) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் காயத்ரி தனது தாயுடன் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு விடுவதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து காயத்ரி மட்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டை- […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg boss: உலகநாயகனிடமே திமிரா….? ஆயிஷாவின் பேச்சால் கொந்தளித்த ரசிகர்கள்….. எலிமினேஷன் கன்ஃபார்ம்?….!!!!!

பிக் பாஸ் 6 வீட்டிலிருந்து இந்த வாரம் ஆயிஷாவை வெளியேற்ற பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.  விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 – ல் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி நல்ல விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜி.பி.முத்து, சாந்தி மற்றும் அசல் கோலார் எலிமினேட் செய்து வெளியேற்றப்பட்டனர். இந்த வாரம் ஆயிஷாவே எலிமினேட் செய்ய நாமிடேட் செய்துள்ளார்கள். இதனை அடுத்து மூச்சு திணறல் ஏற்பட்ட ஆயிஷாவால் டாஸ்க் செய்ய மட்டும் முடியுமோ […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

துரத்தி கடித்த வெறி நாய்…. 2 வயது குழந்தை உள்பட 4 பேர் காயம்…. பொதுமக்களின் குற்றச்சாட்டு…!!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் நகராட்சியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி தெரிகிறது. இந்த நாய்கள் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள், தெருவில் நடந்து செல்லும் பொது மக்களை கடிக்கிறது. இந்நிலையில் தெரு நாய் 2 வயது குழந்தையான காவியா, சுந்தரவல்லி(70) திலகவதி(60), ராமச்சந்திரன்(70) ஆகிய நான்கு பேரையும் கடித்தது. இதனால் காயமடைந்த 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாய்கள் தொந்தரவு குறித்து புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டின் பங்கை உறுதிப்படுத்த…. அமெரிக்கா துணை நிற்கும்.. தகவல் தெரிவித்த பென்டகன்….!!!!

இந்தோ பசிபிக் பகுதியில் இந்தியாவின் பங்கை உறுதிப்படுத்துவதற்கு அமெரிக்கா துணை நிற்கும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது. இந்திய, பசிபிக் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த பிராந்தியத்திலுள்ள பிற நாடுகளுடன் அமெரிக்கா தனது ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் இந்தோ பசிபிக் பகுதியில் இந்தியா தனது பரந்த பங்கை உறுதிப்படுத்தி அமெரிக்கா துணை நிற்கும் என அந்நாட்டு ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. இந்த பென்டகனின் மூத்த அதிகாரி ஒருவர் இது குறித்து கூறியதாவது “இந்தியா தனது சொந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தந்தையை இழந்த வேதனை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளத்திவிடுதி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜ்குமார்(24) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ராஜா உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இந்நிலையில் வயிற்று வலி மற்றும் தந்தை இறந்த துக்கத்தில் இருந்த ராஜ்குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜ்குமாரின் உடலை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கரை ஒதுங்கிய கடல் பசு…. மீனவர்கள் அளித்த தகவல்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!!

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசுவை வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முத்துக்குடா கிராமத்தில் உள்ள கடற்கரையில் இறந்த நிலையில் கடல் பசு கரை ஒதுங்கியது. இதனை பார்த்த மீனவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் கடல் பசுவை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் கடல் பசு அதே பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டது.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

யாரேனும் கடத்தி சென்றார்களா…? இளம்பெண்ணை தேடும் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!!

காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தத்துமுத்துபட்டி பகுதியில் விவசாயியான மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விசித்ரா(19) என்ற மகள் உள்ளார். இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வீட்டிலிருந்த விசித்திரா திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விசித்ராவை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் மாரிமுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மீண்டும் வந்த காட்டு யானை…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் கண்காணிப்பு…!!

காட்டு யானையின் அட்டகாசம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி மற்றும் மாவனல்லா பகுதிக்குள் காட்டி யானைகள் நுழைந்து அட்டகாசம் செய்கிறது. நேற்று முன்தினம் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை வாழை தோட்டத்திற்குள் புகுந்து நாசம் செய்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூலி வேலைக்கு சென்ற பெண்ணையும், ஆடு மேய்த்து கொண்டிருந்த முதியவரையும் இந்த காட்டு யானை தாக்கி கொன்றது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்னர் காட்டு யானையை அடர்ந்த […]

Categories
மாவட்ட செய்திகள்

“நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரியில் இடம்பிடித்த அண்ணன் – தங்கை”… குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!!!!

நாகை மாவட்டம் வேதாரணியம் தாலுகாவிற்கு உட்பட்ட நெய் விளக்கு வடகாடு பகுதியைச் சேர்ந்த வீரசாமி ராணி தம்பதியினர் வசித்து வருகின்றார்கள். இவர்களுடைய மகன் ஸ்ரீபரன்(21), மகள் சுபஸ்ரீ (18) கூலி வேலை பார்த்து வந்த வீராசாமி சுமை தூக்கும் போது முதுகு தண்டுவடம் பாதித்ததால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கடந்த 2016 ஆம் வருடம் முதல் வீட்டிலேயே இருந்து வருகிறார். அதன்பின் ராணி தையல் வேலை செய்தும் ஆடுகள் வளர்த்தும் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். எவ்வளவு துன்பங்களை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்ட வன ஊழியர்கள்…. புதர் மறைவில் நின்ற விலங்கு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!!

காட்டெருமை தாக்கியதால் வனக்காப்பாளர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் மசினகுடி வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உப்பள்ளா என்ற இடத்தில் புதர் மறைவில் நின்ற காட்டெருமை வனத்துறையினரை நோக்கி ஓடிவந்தது. இதனை பார்த்த வனத்துறையினர் தப்பி ஓடினர். ஆனால் காட்டெருமை வன காப்பாளரான சசிதரன் என்பவரை முட்டி தள்ளியதால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. பின்னர் வன ஊழியர்கள் சத்தம் போட்டு காட்டெருமையை விரட்டினர். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு தனியாக பாதை அமைத்து தரணும்”…. மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. பேச்சுவார்த்தையில் அதிகாரிகள்….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் மேல வேலாயுதபுரம் கிராமத்தில் அழகம்மாள் என்ற மூதாட்டி ஒருவர் நேற்று முன்தினம் இறந்துள்ளார். இவருடைய உடலை அடக்கம் செய்வதற்காக பொதுமக்களும் உறவினர்களும் நேற்று மாலை சுடுகாடு செல்ல ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான பட்டா நிலம் உள்ளது. அதனால் அந்த வழியாக மூதாட்டியின் உடலை எடுத்துச் சொல்ல கூடாது என தனியார் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனை கண்டித்து சுடுகாட்டத்திற்கு செல்வதற்கு நிரந்தர பாதை அமைத்து […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை…. எந்த மாவட்டம் தெரியுமா….? திடீர் அறிவிப்பு….!!!!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலகl கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதியில் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை கன மழை பெய்யும் என […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பறவை காய்ச்சல் எதிரொலி”…. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்..!!!!

பறவை காய்ச்சல் எதிரொளியால் கோழிப்பண்ணைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தற்போது நடந்து வருகின்றது. கேரளாவில் தற்போது பறவை காய்ச்சல் பரவி வருவதால் தமிழக எல்லைப் பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பறவை காய்ச்சல் வராமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் மூலம் கிருமிகள் பரவாமல் இருப்பதற்காக வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகின்றது. தற்போது கறிக்கோழி பண்ணைகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகின்றது. […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களை இப்படியா பண்ணனும்….? போதையில் ஏற்பட்ட மோதல்…. போலீஸ் அதிரடி….!!!!

திருவாரூர் மாவட்டத்தில் வெள்ளக்குடி பகுதியில் மணிகண்டன், ராமன், லட்சுமணன், சுபாஷ், டேவிட் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஐந்து பேரும் நண்பர்கள் ஆவர். இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று 5 பேரும் ஒரே இடத்தில் ஒன்றாக அமர்ந்தும் மது அருந்தி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் சுபாஷ், டேவிட் ஆகிய இருவரும் சேர்ந்து மற்றும் மூன்று பேரை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மூன்று பேரும் அரசு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“பேருந்து மீது ஏறி நின்று ஆடிய வாலிபர்கள்”… இரு தரப்பினரிடையே மோதல்… பெரும் பரபரப்பு…!!!!

ஆண்டிப்பட்டி அருகே தேவர் ஜெயந்தி முன்னிட்டு இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டிப்பட்டி அருகே உள்ள க.விலக்கு பகுதியில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டதை முன்னிட்டு முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக ஏராளமான பொதுமக்கள் கூடியுள்ளனர். அப்போது க.விலக்கு, முத்தனம் பட்டி, ராகுகாரன்பட்டி, பெருமாள் கோவில் பட்டி, கரட்டுபட்டு மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக மேளதாளம், பட்டாசு வெடித்தபடி ஊர்வலமாக சென்றுள்ளனர். இதனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நண்பர்களுடன் இன்ப சுற்றுலா” வாலிபர்களுக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு இரண்டு வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி சுந்தரம் மெயின் ரோடு பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெரம்பூர் ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் தனது நண்பர்களான நாகராஜ், அஜித், ராஜி, ஷெரிப், ரமேஷ் ஆகியோருடன் குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். இதனை அடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்துகள் மோதல்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!!

அரசு பேருந்துகள் மோதி கொண்ட விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருச்சி மாவட்டத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று கரூர் நோக்கி நேற்று மதியம் வந்து கொண்டிருந்தது. இதே போல் ஈரோட்டில் இருந்து அரசு பேருந்து குளித்தலை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் எல்லரசு பாலம் பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக இரண்டு அரசு பேருந்துகளும் முன்பக்க பக்கவாட்டு பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து அறிந்த போலீசார் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குழந்தையை கடத்தி சென்ற பெண்…. 3 மணி நேரத்தில் மீட்ட போலீசார்…. பரபரப்பு சம்பவம்…!!!

பெண் கடத்தி சென்ற குழந்தையை போலீசார் மூன்று மணி நேரத்தில் மீட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரிகை பகுதியில் உள்ள ரோஜா தோட்டத்தில் வேலை பார்ப்பதற்காக உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்கேவால்-அனிதா தம்பதியினர் தங்களது 2 பெண் குழந்தைகளுடன் வந்துள்ளனர். இரவு நேரம் என்பதால் ராம்கேவால் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஓசூர் பேருந்து நிலையத்தில் படுத்து தூங்கியுள்ளார். அதிகாலை எழுந்து பார்த்தபோது தங்களது 6 மாத பெண் குழந்தை காணாமல் போனதை கண்டு கணவன், மனைவி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வால்பாறையில் விழிப்புணர்வு…. “சுற்றுலா பயணிகளுக்கு எடுத்துரைத்த போலீசார்”…!!!!!

வால்பாறையில் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை, காடம்பாறை, முடீஸ், சேக்கல்முடி உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் சார்பாக போதை பொருள் தடுப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்து நாள்தோறும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றார்கள். இதனால் காவல்துறை சார்பாக சுற்றுலா பயணிகளிடையே கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்கு இன்ஸ்பெக்டர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நிலப் பிரச்சனை காரணமாக தகராறு….. பெண் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணை தாக்கிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கல்குமாரம்பட்டி பகுதியில் மேனகா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் உறவினரான நவீன் குமார் என்பவருக்கும் இடையே நில பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டபோது நவீன்குமாரின் தரப்பினர் மேகனாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த மேனகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நவீன் குமார் மற்றும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கிண்டல் செய்த உறவினர்கள்…. சிறுமி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கை.களத்தூர் கிராமத்தில் ராமசாமி(53) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராமசாமியும் உறவினரான மாரிமுத்து(30) என்பவரும் அப்பகுதியில் வசிக்கும் சிறுமியை கேலி, கிண்டல் செய்து மிரட்டியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் கடந்த 25-ஆம் தேதி சிறுமி பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சிறுமியை சேலத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உங்க படுக்கை அறையில்…. மற்றவர்கள் நுழைந்தா எப்படி இருக்கும்…? விராட் மனைவி ஆத்திரம்….!!!

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி டி20 உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்காக்கு எதிரான தோல்விக்கு பிறகு தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு வந்தார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது விராட் கோலி இல்லாத சமயத்தில் அவர் தங்கி இருந்த ஹோட்டல் அறையை யாரோ ரகசியமாக வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. இதற்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். ஹோட்டல் அறையில் தன்னுடைய தனிப்பட்ட விஷயங்களை வீடியோ பதிவு செய்தது தன்னை […]

Categories
மாநில செய்திகள்

“10-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு”…. இந்திய உணவு துறையில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!!

இந்திய உணவு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய உணவு துறையில் காலியாக உள்ள எம்டிஎஸ் போன்ற பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு  ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மத்திய அரசு வேலைக்காக காத்திருக்கும் வாலிபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன் பெறலாம். 1. பணி: security assistant/ executive – 1521 சம்பளம்: 21,700-69,100 வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும். 2. பணி: multi Tasking/ General -150 […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரி ஜிப்மரில் வேலை… விண்ணப்பங்கள் வரவேற்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நிரப்பப்பட இருக்கின்ற முதுநிலை மேலாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அறிவிப்பு எண்:JIP/MGE/10/2022/03 பணி: senior manager -1 சம்பளம்; மாதம் 50,000 வயதுவரம்பு: 45 க்குள் இருக்க வேண்டும். தகுதி: லைஃப் சயின்ஸ் பாடப் பிரிவுகள் ஏதாவது ஒன்றில் முனைவர் பட்டம் பெற்றிருப்பதுடன் ஐந்து வருடங்கள் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.jipmer.edu.in என்ற கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை […]

Categories
மாநில செய்திகள்

“கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது குற்றம்”… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!!

கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம் என சென்னை உயர்நீதிமன்றம் திங்கட்கிழமை கூறியுள்ளது. நன்கொடைகளுக்கு வருமான வரித்துறை விதிக்கும் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கல்வி நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சபிக் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. இதனை அடுத்து இந்த வழக்கில் பேசிய நீதிபதிகள் கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து மாநில அரசுகளின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட உண்மைதாங்க….! நடிகையுடன் காதல் அறிவித்த பிரபல தமிழ் நடிகர்….!!!

நடிகை மஞ்சிமா மோகனுடனான தன்னுடைய காதலை கவுதம் கார்த்திக் அறிவித்துள்ளார். 2019ல் வெளியான தேவராட்டம் திரைப்படத்தில் இருவரும் ஒன்றாக நடித்தனர். அப்போதிருந்து நெருக்கமாக பழகிவந்த இவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. சமீபத்தில் கௌதம் கார்த்திக் பிறந்த நாளுக்கு நடிகை மஞ்சிமா மோகன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மை “my favorite human” என குறிப்பிட்டு காதல் குறியீட்டை பயன்படுத்த, அதற்கு கவுதமும் நன்றி “MY favorite human” என கூறி காதல் குறியீட்டை பயன்படுத்தினார். இருவரும் மாறி மாறி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொடூரம் :”பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர்”… 16 வயது சிறுமி கர்ப்பம்… பெண்கள் உள்பட 4 பேர்… போலீசார் அதிரடி…!!!

பத்தாம் வகுப்பு மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்ற நிலையில் திடீரென மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவியின் தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. பின் இது குறித்து மாணவியின் […]

Categories
மாநில செய்திகள்

சுதந்திரமாக விசாரணை செய்ய வேண்டும்…. ராம்குமார் தந்தைக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு…. மனித உரிமை ஆணையம் உத்தரவு….!!!!

ராம்குமார் வழக்கை சுதந்திரமாக விசாரணை செய்ய வேண்டும் என மாநில  மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு சுவாதி என்ற பெண் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராம்குமார் என்பவரை கைது செய்தனர். இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்  மின் கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் தனது மகன்  மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை புகார் அளித்தார். […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் பயங்கரம்…. காவலில் வைத்து உயிரிழந்த பிரபலம்… வெடிக்கும் ஆர்ப்பாட்டங்கள்…!!!

ஈரான் நாட்டில் ஒரு இளம் பெண் ஹிஜாப் சரியாக அணியாத காரணத்தால் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த நிலையில் மற்றுமொரு பிரபலம் போலீஸ் காவலில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றும் நாடுகளில் ஒன்றாக ஈரான் இருக்கிறது. இந்நிலையில் அந்நாட்டின் தெஹ்ரான் நகரத்தில் சரியாக ஹிஜாப் அணியவில்லை என்று காவல்துறையினர் தாக்குதல் மேற்கொண்டதில் மாஷா அமினி என்ற 22 வயது பெண் பலியானார். இதனை எதிர்க்கும் வகையில் நாடு முழுக்க பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். […]

Categories
மாநில செய்திகள்

5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!!

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் ஐந்து பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, சிறைத்துறை டிஜிபியாக அம்ரேஷ் பூஜாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிபி சிஐடி ஏடிஜிபியாக அபய் குமார் சிங் மாற்றப்பட்டுள்ளார். இதனை அடுத்து சைபர் கிரைம் பிரிவு ஏடிஜிபியாக சஞ்சய் குமார் ஆயுதப்படை ஐஜியாக ராதிகா போன்றோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஏபிஜிபி வெங்கட்ராமன் காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவை கூடுதலாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நைசாக பேசி கைப்பையை பிடுங்கி சென்ற மூதாட்டி…. போலீஸ் அதிரடி….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் பகுதியில் சித்ரா என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மதியம் தாராபுரம் பஸ் நிறுத்தத்தில் உடுமலை செல்ல பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் 60 வயதுள்ள மூதாட்டி ஒருவர் சித்ராவின் அருகில் நின்றுள்ளார். இதனை அடுத்து அந்த மூதாட்டி சித்ராவிடம் நைசாக பேசி அவரிடம் இருந்த கைப்பையை பிடுங்கி சென்றுள்ளார். அப்போது சித்ரா கூச்சலிட்டதால் அருகில் இருந்தவர்கள் மூதாட்டியை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனை அடுத்து போலீசார் மூதாட்டியை விசாரித்ததில் […]

Categories
உலகசெய்திகள்

அடக்கடவுளே… வீட்டு கதவுக்கு பிங்க் நிற பெயிண்ட் அடித்தது தப்பா…? ரூ.19 லட்சம் அபராதம்… அரசு எச்சரிக்கை…!!!!!!

ஸ்காட்லாந்தில் வீட்டு கதவிற்கு பிங்க் நிற பெயிண்ட் அடித்ததால் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்க் நகரில் நியூ டவுன் பகுதியில்  மிராண்டா டிக்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 2019 ஆம் வருடம் தனது பெற்றோரிடம் இருந்து ஒரு வீட்டை வாங்கி அதை இரண்டு வருடங்களாக புதுப்பித்து இருக்கின்றார். இந்த நிலையில் கடந்த வருடம் அந்த வீட்டின் முன் பக்க கதவிற்கு பிங்க் நிற பெயிண்ட் அடித்துள்ளார். இதன்பின் சமூக ஊடகங்களின் பயன்பாட்டர்களிடையே அந்த […]

Categories
உலக செய்திகள்

என்ன….? உக்ரைனின் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தை…. பிரபல நாடு நிறுத்தியது….!!!!

உக்ரைன் நாடு உலகின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதியாளராக இருந்து வந்துள்ளது. இந்த சூழலில் அந்நாட்டின் மீதான ரஷ்ய படையெடுப்பால் தானிய ஏற்றுமதி தடைப்பட்டுள்ளது. இதனால் உலகளாவிய உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து ஐ.நா. மற்றும் துருக்கியின் ஏற்பாட்டில் உக்ரைன்-ரஷ்யா இரு நாடுகளுக்கும் இடையிலான கடந்த ஜூலை மாதம் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தில் தானிய போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் சரக்குக் கப்பல்கள் மீது துறைமுகத்திலோ, கடல்வழியிலோ தாக்குதல் நடத்த மாட்டோம் என்று ரஷ்யாவும், உக்ரைனும் […]

Categories
உலக செய்திகள்

எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது…. உயிரிழந்த பெண்ணின் வீட்டிற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்த முன்னாள் பிரதமர்….!!!!

பிரபல நாட்டில் உயிரிழந்த பெண்ணின் வீட்டிற்கு முன்னாள் பிரதமர் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை தொடங்கு பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில்  ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளதை  ஏற்க மறுத்து வரும் இம்ரான் கான் தனது ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“தோட்ட கலை திட்டங்களில் பயன்பெற இனி இது கட்டாயம்”…? வெளியான தகவல்…!!!!!

தோட்டக்கலை திட்டங்களில் பயன் பெற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறை திட்டங்களில் பயன் பெற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என நாகை மாவட்ட தோட்டக்கலை துறை இயக்குனர் கண்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 2022 – 2023 ஆம் நிதி ஆண்டு முதல் தோட்டக்கலை துறை மூலமாக செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களுக்கும் இணையதள பதிவு கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனங்கள்…. நேருக்கு நேர் மோதி விபத்து…. 2 பேர் பலி….!!!!

இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் பனங்குடி பகுதியில் சரத் மோகன் என்ற கொத்தனார் ஒருவர் வசித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் நன்னிலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அதே சமயத்தில் மூலமங்கலம் பகுதியில் வசித்து வந்த பாலசுப்பிரமணியன் மற்றும் செந்தில் முருகன் ஆகிய இருவரும் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் மூலமங்கலம் பகுதியில் உள்ள சட்ரஸ் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மினி பஸ் மோதி…. தொழிலாளி படுகாயம்…. போலீஸ் விசாரணை….!!!!

மினி பஸ் மோதியதில் தொழிலாளி படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மீனம்பட்டி பகுதியில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு அச்சகத்தில் வேலை பார்த்து விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினி பஸ் பால்ராஜ் மீது மோதியுள்ளது. இதில் அவருக்கு படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து விபத்தை […]

Categories
தேசிய செய்திகள்

தீடிரென 50 மீட்டருக்கு உள்வாங்கிய கடல் நீர்… கேரளாவில் இயல்பு நிலை திரும்பியது…!!!!!

சுனாமி காலகட்டத்திற்கு பின் அடிக்கடி கடல் நீர் உள்வாங்குவதும் சீற்றம் அதிகரிப்பதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கேரள மாநிலம் கோழிக்கோடு நைனாம் வலப்பு அருகே உள்ளது கோத்தி கடற்கரை பல சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கமாகும். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கடல் நீர் உள்வாங்கி இருப்பதை கண்டு கடற்கரைக்கு வந்த மக்கள் மிகவும் அதிர்ச்சடைந்துள்ளனர். சுமார் 50 மீட்டருக்கு கடல் நீர் உள்வாங்கியுள்ளது. இதனை பார்த்த பலரும் சுனாமி அறிகுறியாக இருக்கலாம் என பயமடைந்துள்ளனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திகட்ட திகட்ட காதலிப்போம்”…. இணையத்தை தெறிக்க விட்ட வேற லெவல் பாடல் வீடியோ…… செம வைரல்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வசந்த பாலன். இவர் வெயில், அங்காடித்தெரு, காவிய தலைவன் மற்றும் ஜெயில் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது அநீதி என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கைதி மற்றும் மாஸ்டர் போன்ற திரைப்படங்களில் நடித்த அர்ஜுன் தாஸ் ஹீரோவாகவும், சார்பட்டா பரம்பரை படத்தில் நாயகியாக நடித்த துஷாரா விஜயன் ஹீரோயின் ஆகவும் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க, அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இதை வச்சி தான் ராமர் பாலம் கட்டினாரா?…. தண்ணீரில் மிதக்கும் அதிசய கல் …. வியப்பில் மக்கள்….!!!!

தண்ணீரில் மிதக்கும் அதிசய கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேட் பாங்க்  காலனி பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடியம்பாளையம் கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு கல்லை வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சுரேஷின் வீட்டில் ஒரு ஓரமாக வைக்கப்பட்டிருந்த கல்லை தண்ணீரில் போட்டுள்ளனர். ஆனால் அந்தக் கல் தண்ணீரில் மூழ்காமல் மிதந்துள்ளது. இதனை பார்த்து ஆச்சரியமடைந்த சுரேஷ் […]

Categories
தேசிய செய்திகள்

“தமிழகத்தில் உருமாறிய XBB வைரஸ் தொற்று”….‌175 பேர் பாதிப்பு….. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

சர்வதேச ஆராய்ச்சி அமைப்பான கிஷியாத் வைரஸ் தொற்றின் உருமாற்றங்களை ஆய்வு செய்து வருகிறது. இந்த அமைப்பு தற்போது XBB வைரஸ் தொற்றின் மாறுபாடு குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி இந்தியாவில் உள்ள 9 மாநிலங்களில் ஒரு உருமாறிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம், ராஜஸ்தான், கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா, ஒடிசா, புதுச்சேரி, மேற்கு வங்காளம் போன்ற 9 மாநிலங்களில் உருமாறிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்றின் தாக்கத்தினால் நாடு முழுதும் […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த 5 வருஷத்தில் 51,000 குழந்தைகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்……!!!!!

கடந்த 5 வருடங்களில் 51,000 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமானது தகவல் தெரிவித்துள்ளது. சட்டங்கள் இருந்தாலும் கூட குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தல்கள், வன்முறைகள் நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் இருக்கிறது. குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், ஊக்குவிப்பதற்கும், உரிமைகளைப் பெற போராடுவதற்கும் செய்யப்படும் அதிகாரபூர்வமான அமைப்பான தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், ஓர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு இருக்கிறது. அதாவது சென்ற 2016-17 முதல் 2020-21 வரையிலான 5 வருடங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கொடுமையே!… இந்திய மருத்துவ கூட்டமைப்பில் அடிதடி, கைகலப்பு…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!!

மத்தியபிரதேசம் மாநிலம் ஜபல்பூர் பகுதியில் இந்திய மருத்துவ கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மருத்துவக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் அமரேந்திர பாண்டே வரவேற்புரை ஆற்றினார். இதற்கு மேடையின் கீழே அமர்ந்திருந்த குவாலியர் பிரிவை சேர்ந்த உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்கள் கீழே நின்று கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் திடீரென மேடையின் மீது ஏறி அமரேந்திர ராவை தாக்க, அவரும் பதில் தாக்குதல் நடத்தினார். இதனால் கூட்டத்தில் அடிக்கடி, கைகலப்பு என பரபரப்பு நிலவியது. […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் துப்பாக்கி சூடு…. பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக் கொலை…. தொடர் தேடுதல் வேட்டையில் ராணுவத்தினர்….!!!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹெரான் பிரிவில் ஜுமாஹூண்ட் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சில தீவிரவாதிகள் எல்லை கடந்து வந்துள்ளனர். இதனால் அவர்கள் மீதி இந்திய ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த தகவலை காஷ்மீர் போலீசார் டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து தீவிரவாதிகளை தேடி வருகின்றனர். இதனையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 4 […]

Categories
தேசிய செய்திகள்

ஃபிட்மென்ட் ஃபேக்டரை மாற்றுவது பற்றி…. விரைவில் வெளியாகும் குட் நியூஸ்….!!!!

பிட்மென்ட் பேக்டரை உயர்த்தவேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் வெகு நாட்களாகவே கோரிக்கை வைத்து வந்தனர். அத்தகைய ஊழியர்களுக்கு தற்போது ஒரு பெரிய செய்தி இருக்கிறது. நீங்களோ (அ) உங்கள் குடும்பத்தில் எவரேனும் மத்திய அரசு ஊழியர்களாக இருப்பின், அவர்களுக்கு இச்செய்தி மிகவும் உபயோகமாக இருக்கும். பிட்மென்ட் பேக்டரில் மாற்றம் ஏற்பட்டதும் சம்பள அமைப்பில் பெரியமாற்றம் ஏற்படும். அடுத்த வருடம் 7-வது ஊதியக்குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரியமாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வட்டாரங்கள் […]

Categories
மாநில செய்திகள்

மாநகராட்சி கூட்டம்: திமுக கவுன்சிலருக்கு எச்சரிக்கை விடுத்த மேயர்…. பரபரப்பு….!!!

ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டமானது இன்று மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மாநகராட்சி 8வது வார்டு உறுப்பினர் திமுக-வை சேர்ந்த ஆதி ஸ்ரீதர், தன் வார்டில் சென்ற 6 மாதமாக எந்த பணிகளும் நடைபெறவில்லை எனவும் இதுகுறித்து பல முறை மனு அளித்தும் தனது வார்டு புறக்கணிக்கப்படுவதாகவும், மற்ற வார்டுகளில் பணிகள் நடைபெறுவதாகவும் தெரிவித்தார். அத்துடன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கு எந்த மதிப்புமில்லை எனக் கூறிய ஆதி ஸ்ரீதர், பல குறைபாடுகளை சுட்டிக் காட்டிய […]

Categories
தேசிய செய்திகள்

“குஜராத்தில் தொங்கு பாலம் இடிந்து விபத்து”…. உயிர் பிழைத்தவரின் பரபரப்பு பேட்டி….!!!!

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு தொங்கு பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் சீரமைப்பு பணிகள் நடைபெற்ற நிலையில் கடந்த 26-ம் தேதி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. அதன்பிறகு நேற்று சத் பூஜை செய்வதற்காக ஏராளமான மக்கள் பாலத்தின் மீது ஏறி உள்ளனர். அப்போது திடீரென பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 140-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதன் பின் 177 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக அரசு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பால் வியாபாரி அடித்துக் கொலை”…. 4 பேர் கைது…. போலீசார் குவிப்பு…!!!!

பால் வியாபாரி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் 4 பேரை கைது செய்தார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் தெருவை சேர்ந்த முரளி என்பவர் பால் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கும் திலீபன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்ததாக சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திலீபன் தனது கூட்டாளிகளுடன் முரளியை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று அவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பித்து விட்டார்கள். பலத்த காயமடைந்த முரளியை ஆம்புலன்ஸ் […]

Categories
தேசிய செய்திகள்

“அரசு ஊழியர்கள் கவனத்திற்கு”…. இனி ஓய்வு பெறும் வயது இதுதான்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக முதலில் இருந்தது. கடந்த 2020- ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அரசு  ஓய்வு பெறும் வயது  59  ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக அரசு  60 ஆக நிர்ணயித்து அரசாணை வெளியிட்டது. பல லட்சக்கணக்கான மக்கள் அரசு வேலைக்காக காத்திருக்கும் நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரித்து அவர்களின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பிரபல இயக்குனரின் கார் கண்ணாடி உடைப்பு”…. போலீசார் விசாரணை….!!!!

சாலிகிராமத்தில் பிரபல இயக்குனரின் கார் கண்ணாடி கல்லால் உடைக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனரும் நடிகை ரோஜாவின் கணவருமான ஆர்.கே.செல்வமணி திரைப்பட இயக்குனர் சங்கம் மற்றும் பெப்சி சங்கத்தின் தலைவராகவும் இருக்கின்றார். இவரின் வீடு சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் இருக்கின்றது. நேற்று முன்தினம் மாலையில் இவர் தனது நண்பரை பார்ப்பதற்காக சாலிகிராமத்தில் இருக்கும் கண்ணம்மாள் தெருவிற்கு சென்றிருக்கின்றார். அப்போது அவர் சாலையோரமாக காரை நிறுத்தி இருக்கின்றார். பின் அவர் நண்பரை பார்த்து விட்டு திரும்பி வந்த போது கார் கண்ணாடி […]

Categories

Tech |