Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“வாங்கிய சில நாட்களிலேயே பழுது” தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்…. அதிரடி உத்தரவு…!!!

தனியார் நிறுவனத்திற்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிந்தன்விளை பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராஜபாளையத்தை சேர்ந்த மரம் அறுக்கும் எந்திரம் தயாரிக்கும் நிறுவனத்தினரிடம் மரம் அறுக்கும் எந்திரங்களை வாங்கியுள்ளார். சில நாட்களிலேயே பழுதான எந்திரங்களை சரி செய்து தருமாறு சசிகுமார் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினரிடம் கூறியுள்ளார். அப்போது அவர்கள் 29 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என கூறியுள்ளனர். இதனால் சசிகுமார் வழக்கறிஞர் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“உலக சாம்பியன்ஷிப் போட்டி”…. சாதனை படைத்த மதுரை கல்லூரி மாணவி….. குவியும் பாராட்டுகள்…!!!

மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவியான கேஷ்னி ராஜேஷ் என்பவர் டெல்லியில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டார். இந்த மாணவி தங்கம் வென்று சாதனை படைத்து மதுரைக்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் சாதனை படைத்த மாணவிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதுகுறித்து கேஷினி ராஜேஷ் கூறியதாவது, உடல் எடையை குறைப்பதற்காக உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்ற போது தான் இப்படி ஒரு போட்டி இருப்பது எனக்கு தெரிந்தது. இதனால் சென்னையை சேர்ந்த விக்னேஷ் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான தடகள போட்டி…. அரசு பள்ளி மாணவனின் சாதனை…. குவியும் பாராட்டுகள்…!!!

தடகள போட்டியில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவனை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு மாவட்ட அளவிலான தடகள போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் மாவட்டத்தில் இருக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் தோட்டக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் விஷ்ணு உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டார். இவர் மாவட்ட அளவில் 2-வது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சாப்பாடே இறங்கல… “நான் சந்திரமுகியாக மாறுகிறேன்”…. அசலை நினைத்து கண்ணீர் மல்க புலம்பும் நிவாஷினி….!!!!

விஜய் டிவி டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9‌ ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் அமோகமாக வரவேற்பு பெற்ற போட்டியாளர் ஜி.பி.முத்து இருந்தார். ஆனால் இவர் இரண்டாவது வார முடிவில் பிக் பாஸ் வீட்டை விட்டு அவராகவே வெளியேறினார். அதன் பிறகு முதல் போட்டியாளராக மெட்டிஒலி சாந்தி எலிமினேட் ஆனார். அதனை தொடர்ந்து கடந்த வாரம் அசல் பிக் பாஸ் வீட்டை விட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாடு மேய்க்க சென்ற விவசாயி…. எதிர்பாராமல் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

மின்கம்பி அறுந்து விழுந்து விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உறங்கான்பட்டி பகுதியில் விவசாயியான அழகு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தினமும் தனது மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் மேச்சலுக்கு மாடுகளை ஓட்டி சென்றபோது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின் கம்பி அறுந்து அழகு மீது விழுந்தது. இதனால் மின்சாரம் தாக்கி உடல் கருகி சம்பவ இடத்திலேயே அழகு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எங்களுக்கு உலகக்கோப்பை வேண்டாம்…. “இந்தியாவை ஜெயித்தால் போதும்”…. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஷகிப் அல் ஹசன்..!!

இந்த முறை உலகக் கோப்பையை வெல்ல மாட்டோம் என்று கேப்டன் கூறியதைக் கேட்ட வங்கதேச ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 போட்டியில் இந்தியா அக்டோபர் 2 ஆம் தேதி (நாளை) அடிலெய்டில் வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் இதுவரை, இரு அணிகளும் தங்களின் 3 ஆட்டங்களில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளன. இதன் விளைவாக, குழுவில் தங்கள் இடத்தை வலுப்படுத்த இரு தரப்பினருக்கும் இந்த போட்டி மிக முக்கியம். இருப்பினும், பெர்த்தில் புரோட்டீஸிடம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு நாளை….. வெளியான முக்கிய அறிவிப்பு… !!!!

அரசு தேர்வுகள் இயக்கத்தின் மூலமாக தமிழகத்தில் பள்ளி படிப்பை பாதிலேயே நிறுத்திய மாணவர்களுக்கும், ஒரு சில காரணங்களால் பள்ளி சென்று படிக்க முடியாத மாணவர்களுக்கும் தனியாக பொது தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொது தேர்வு அக்டோபர் பத்தாம் தேதி முதல் அக்டோபர் 14ஆம் தேதி வரை நடந்தது. இந்த நிலையில் திட்டமிட்டபடி எட்டாம் வகுப்பு பொது தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. மேலும் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அலறி துடித்த ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளர்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!!

ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகக்கோடு வண்டி பில்லாங்கால விளை பகுதியில் சுரேஷ்குமார்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரும்பு சிமெண்ட் உள்பட கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் ஹார்டுவேர்ஸ் கடை மற்றும் எடை மேடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு மலர் என்ற மனைவியும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த சுரேஷ்குமார் […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை தொடக்கம்…. அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவநிலை தொடங்கியுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் காணொளி காட்சி மூலம் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் மாவட்டங்களில் நடைபெற்று வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும் பருவங்களை எதிர்கொள்ள அனைத்து அதிகாரிகளும் தயாராக இருக்க […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி!…. சென்னையில் இந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்?…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு முதல் தொடர்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 2 சுரங்கப் பாதைகள் மற்றும் சில சாலைகளில் நீர் தேங்கி இருக்கிறது. இதனையடுத்து அந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மழை நீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடு என்னென்ன? # சென்னையில் இருந்து கணேசபுரம் சுரங்கப்பாதை வழியே போகக்கூடிய வாகனங்களை புளியந்தோப்பு நெடுஞ்சாலை அம்பேத்கர் கல்லூரி சாலை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்….!! இந்த நிறுவனங்களை நம்ப வேண்டாம்…. போலீசாரின் எச்சரிக்கை…!!!

ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதியின் உத்தரவின்படி, ஜவுளிசந்தை, பன்னீர்செல்வம் பூங்கா, ஈரோடு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் துண்டு பிரசுரங்கள் வழங்கியுள்ளனர். அதில் மோசடி நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்ற வாசகங்கள் அடங்கியுள்ளது. மேலும் ஈமு கோழி, நாட்டுக்கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு திட்டம், மாதத் தவணையில் வீடு மற்றும் மனை வாங்கும் திட்டம், அங்கீகாரம் பெறாத நிறுவனங்களின் தங்க நகை சேமிப்பு திட்டம் […]

Categories
மாநில செய்திகள்

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு…. இன்னும் 1 வாரத்தில் ரூ.20 லட்சம்…. அமைச்சர் குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் உள்ள கிராமப்புற பெண்களுடைய முன்னேற்றத்திற்காகவும், அவர்களுடைய சமூக வளர்ச்சிக்காகவும் குழுவாக இணைந்து மகளிர் சுய உதவி குழு முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஏழை எளிய பெண்கள் இதை குழுவின் மூலமாக பயன் அடைந்து வருகிறார்கள். அரசு சார்பிலும் இந்த குழுக்களுக்கு கடன் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த கடன்களை திருப்பி செலுத்த முடியாத நிலை இருப்பதால் அதனை தள்ளுபடி செய்து ரசீது வழங்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. […]

Categories
உலக செய்திகள்

பிரேசிலில் மூன்றாவது முறையாக லூலா டி சில்வா அதிபர்… உலகத் தலைவர்கள் வாழ்த்து…!!!!!

பிரேசிலில் கடந்த இரண்டாம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜெயிர் போல்சனோரா மீண்டும் போட்டியுள்ளார். அவருக்கு எதிராக முன்னாள் அதிபரும் இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவருமான லூலாடி சில்வா களம் இறங்கியுள்ளார். மேலும் இவர்களுடன் சேர்த்து மொத்தம் 11 பேர் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட நிலையில் லூலா டி சில்வா 47.9% வாக்குகளும், போல் சனோரா 43.6% வாக்குகளும் பெற்றுள்ளார். பிரேசில் அரசியலமைப்பு சட்டப்படி அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 50 சதவீத […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொடர் மழையால் தோன்றிய அருவி…. 60 அடி உயரத்திலிருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்…. பொதுமக்களின் கோரிக்கை…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊமாரெட்டியூர், நெருஞ்சிப்பேட்டை, குருவரெட்டியூர், சின்ன பள்ளம் போன்ற பகுதிகளில் மிக முக்கியமான 7 பள்ளங்கள் அமைந்துள்ளது. இங்கு மழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். கடந்த 3 ஆண்டுகளாக பாலமலையில் மழை பெய்யாததால் பள்ளங்களில் தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் கனமழை காரணமாக சிறு சிறு திடீர் அருவிகள் தோன்றியுள்ளது. இதுகுறித்து பாலமலையில் இருந்து வந்த மக்கள் கூறியதாவது, சின்னபள்ளம் வழுக்குப் பாறையில் இருக்கும் அருவியில் 60 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ரயில் டிக்கெட் தொலைஞ்சுட்டா?…. அப்போ பயணிப்பது எப்படி?…. இதோ சூப்பர் தகவல்….!!!!

முன் பதிவு செய்த ரயில் டிக்கெட்டைத் தொலைத்து விட்டால் என்ன செய்வது..? பயணம் செய்தே தீரவேண்டும், பணமும் செலவழிக்க முடியாது? என்ற நிலையிலும் கூட பயணத்தைத் திட்டமிட்டபடி தொடருவதற்கான மாற்றுவழிகள் இருக்கத்தான் செய்கிறது. ரயில்வே உடைய அதிகாரபூர்வமான இணையமான irctc.co.in எனும் இணையதளத்தில் முன் பதிவு செய்தோ (அ) நேரடியாக டிக்கெட் பெற்றோ ரயிலில் பயணிக்கலாம். எனினும் ஆன்லைன் வசதி இருந்தும் இன்னும் ஏராளமான மக்கள் நேரில்சென்று டிக்கெட்டை முன் பதிவு செய்வதைத்தான் வழக்கமாகக் கொண்டு இருக்கின்றனர். […]

Categories
மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறையில் நவ.,16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடை முக தீர்த்தவாரியை முன்னிட்டு நவம்பர் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார். விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் வரும் 19ஆம் தேதி பணிநாளாக அறிவித்தார் மயிலாடுதுறை ஆட்சியர்..

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கழிவு நீர் குழாய்க்குள் நுழைந்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த போலீசார்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!!

காவல் நிலையத்திற்குள் நுழைந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் காவல் நிலையத்திற்குள் நல்ல பாம்பு ஒன்று நுழைந்தது. சிறிது நேரத்தில் அந்த பாம்பு கழிவு நீர் குழாய்க்குள் சென்றதை பார்த்து போலீசார் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1/2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழாய்க்குள் நுழைந்த பாம்பை பத்திரமாக பிடித்தனர். இதனை அடுத்து 5 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மண்ணெண்ணெய் பாட்டலுடன் தீக்குளிக்க வந்த வழக்கறிஞர்…. என்ன காரணம்…? பரபரப்பு சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை சந்திப்பிலிருந்து மடிச்சல் செல்லும் சாலை சுமார் 100 மீட்டர் தூரம் சேதமடைந்து குண்டும், குழியுமாக இருக்கிறது. இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. இதனால் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் மடிச்சல் பகுதியில் வசிக்கும் மதுரை ஹைகோர்ட் வழக்கறிஞரான புனித தேவகுமார் என்பவர் சமூக வலைதளங்களில் சாலையை சீரமைக்காவிட்டால் 31-ஆம் தேதி குழித்துறை சந்திப்பில் தீக்குளிப்பேன் என பதிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் போதிய […]

Categories
மாநில செய்திகள்

ஆர்எஸ்எஸ் ஊர்வலம்….உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்….. காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு….!!!!

காவல்துறையினர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்தது. இதனையடுத்து 50-க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஊர்வலத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டது. ஆனாலும் பல்வேறு  இடங்களில் அனுமதி வழங்கவில்லை என காவல்துறைக்கு எதிராக   நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

லிப்டில் சிக்கிய 9 பேர்…. போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

லிப்டில் சிக்கிய 9 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் லாட்ஜில் சுற்றுலாவுக்காக வந்த வட மாநிலத்தை சேர்ந்த 8 பேர் தங்கியுள்ளனர். நேற்று அனைவரும் கன்னியாகுமரி கடற்கரையை சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் லாட்ஜுக்கு வந்தனர். இந்நிலையில் மாடியில் இருக்கும் அறைக்கு செல்வதற்காக 9 பேர் லிப்டில் சென்றுள்ளனர். சிறிது தூரம் சென்ற பிறகு லிப்ட் பழுதாகி பாதியிலேயே நின்றதால் 9 பேரும் வெளியே வர முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து ஊழியர்கள் […]

Categories
மாநில செய்திகள்

அண்ணாமலை கைது…. எதற்காக தெரியுமா….? பரபரப்பு…!!!!

சென்னையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அண்ணாமலை கைது செய்யப் பட்டுள்ளார். பாஜக மகளிர் நிர்வாகிகளான குஷ்பூ, கௌதமி குறித்து ஆபாசமாக பேசியதாக திமுக நிர்வாகி சாதிக் மீது புகார் எழுந்தது. இதையடுத்து சாதிக்கை கைது செய்யக்கோரி அண்ணாமலை தலைமையில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் தமிழக பாஜக தவைலர் அண்ணாமலையும் பங்கேற்றார். இந்நிலையில் இந்த போராட்டம் தடையை மீறி நடந்ததாக கூறி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பெரியம்மை நோயால் 50 ஆயிரம் மாடுகள் பாதிப்பு… விவசாயிகள் வேதனை… உயிரிழப்பை தடுக்க கோரிக்கை…!!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயத்தை நம்பி ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் பலர் விவசாயம் செய்வது மட்டுமல்லாமல் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றார்கள். மாவட்டம் முழுவதும் சுமார் 4 லட்சம் மாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாடுகளை பெரிய அம்மை நோய் தாக்கி வருகின்றது. இதற்காக கால்நடை பராமரிப்பு துறை மூலமாக பெரிய அம்மை பாதிக்கப்பட்டு வரும் கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் உள்ளிட்ட சிகிச்சைகளை அளித்த போதிலும் நோய் தீவிரமாக […]

Categories
உலக செய்திகள்

“இலங்கைத் தமிழர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும்”… அதிபர் ரனில் விக்ரமசிங்கே உறுதி…!!!!!

இலங்கை தமிழர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் அணில் விக்ரமசிங்கே உறுதி அளித்துள்ளார். இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களாக வேலை செய்து வரும் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு புதுச்சேரி அரசு சார்பில் மருந்து பொருட்கள் அனுப்பிவைக்கப்படுகிறது. கொழும்பு போய் சேர்ந்த மருந்து பொருட்களை இலங்கை அதிபர் அணில் விக்ரமசிங்கே பெற்றுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ரணில் விக்ரமசிங்கே இலங்கை மலையக தமிழர்கள் சிலர் […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க மட்டும்தான் குடிப்பீங்களா நாங்களும் குடிப்போம்! வொயின்ஷாப்பில் பீரை அலேக்காக குடித்து குரங்கு செய்த அட்டகாசம்….. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் ஒரு குரங்கு மதுபானக் கடைகளுக்குள் புகுந்து மது பாட்டில்களை திருடுவதாக மதுப் பிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ரேபரேலி மாவட்டத்தில் அச்சல்கஞ்ச் பகுதியில் செயல்பட்டுவரும் மதுபானக்கடையில், மதுவைத் திருடிக்குடிப்பதை அந்த குரங்கு வாடிக்கையாக வைத்து இருப்பதாகவும், துரத்தி சென்றால் கடித்துக் குதறுவதாகவும் மதுப் பிரியர்களும், கடைக்காரர்களும் புகார் கூறியுள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று கடைக்காரர்கள் குற்றம்சாட்டுகின்றனர். रायबरेली में बंदर का शराब पीने का […]

Categories
மாநில செய்திகள்

சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்க வில்லை…. மாநகராட்சி நிர்வாகம் தகவல்….!!!!!

சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்றே வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது மாவட்டதில்  உள்ள பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்காமல் வெளியேறியுள்ளது. இந்நிலையில்  சென்னை மாநகராட்சி பாதி  சுரங்க பாதைகளையும், நெடுஞ்சாலை துறை மிதி  சுரங்க பாதைகளையும் சீரமைத்து வருகிறது. மேலும் வழக்கமாக  நீர் தேங்கும் இடங்களில் கூட தற்போது  தேங்க வில்லை  என அதில்  கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் வேலூர், திருவள்ளூர், உள்ளிட்ட 8  மாவட்டங்களில் பலத்த மழைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இது வேற லெவல்!… பள்ளி பாடத்திட்டத்தில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் சாதனைகள்….. முதல்வர் அறிவிப்பு….!!!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடத்த 2021-ம் ஆண்டு தன்னுடைய 46-வது வயதில் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இவர் இறந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் கர்நாடக அரசு புனித் ராஜ்குமாருக்கு உயரிய கர்நாடகா ரத்னா விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். ‌ அவர் கூறியதாவது, மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் கன்னட மொழிக்காகவும், கர்நாடகா மாநிலத்துக்காகவும் நிறைய தொண்டுகளை செய்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

அட இவரை என்ன சொல்றது!… “ஈஸ்வரன் கோவிலில் கந்த சஷ்டி கவசம்”….. அண்ணாமலையை விமர்சித்த அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 62-யில் இன்று நடைபெற்ற பகுதி சபா மற்றும் வார்டு கமிட்டி கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வடகிழக்கு பருவமழை முன்னிட்டு மின்வாரியத்தின் சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து தெரிவித்தார். அப்போது அவரிடம் பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தயவு செய்து பாஜக மாநில தலைவர் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்கள்…”சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம்”…? பிர்லா கோளரங்க இயக்குனர் வெளியிட்ட தகவல்…!!!!!

புவியின் நிழலில் நிலவு கடந்து செல்லும் போது அது சூரியனின் நேரடியான ஒளியை பெற முடியாமல் போய்விடுகிறது. இதனால் நிலவு ஒளி குன்றுவதையே சந்திர கிரகணம் என கூறுகின்றோம். இந்த நிலையில் சந்திர கிரகணத்தின் போது சூரியனின் எதிர் திசையில் நிலவு வருகின்ற காரணத்தினால் சந்திர கிரகணம் பௌர்ணமியின் போது தான் தெரிகிறது நிலவு முழுமையாக பூமியின் முழு நிழல் பகுதியில் மறைவது சந்திர கிரகணம் ஆகும். இந்தப் பகுதி சந்திர கிரகணத்தின் போது நிலவின் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் மாத தானியங்கள் நிலுவை…. அரசின் ஒதுக்கீடு எங்கே…? ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் கிடைக்குமா….???

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கரீப் கல்யான் அண்ண யோஜனா என்ற திட்டத்தின் கீழ் இலவசமாக அரிசி கோதுமை போன்ற உணவு தானியங்களை அளித்து வந்தது. கடைசியாக செப்டம்பர் 2022 உடன் இந்த திட்டம் முடிவடை உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் தொடர்ந்து இந்த திட்டம் நீட்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். […]

Categories
மாநில செய்திகள்

தொடரும் கனமழை….! தமிழகத்தில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறையா….? வெளியான தகவல்…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. நேற்றும் இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட நகரங்களில் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. மழைக்காலம் வந்துவிட்டாலே பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அதிகளவில் வரும் என்பதால் குழந்தைகள் மகிழ்ச்சி ஆகி விடுவார்கள். அதன்படி கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் கனமழை பெய்து […]

Categories
மாநில செய்திகள்

இது ரயில் நிலையமா? இல்ல அரண்மனையா…? வேற லெவலில் மாறப்போகும் எழும்பூர் ரயில் நிலையம்… வெளியான மாதிரி புகைப்படம்…!!!!!!

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக விளங்குகிறது. இது தமிழ்நாட்டின் சென்னை நகரில் அமைந்திருக்கிறது. இந்த ரயில் நிலையம் தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது இந்த சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் எவ்வாறு மேம்படுத்தப்பட இருக்கிறது என்பதை விளக்கும் கண்கவர் புகைப்படங்களை தெற்கு ரயில்வே வெளியிட்டு இருக்கிறது. 734 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் பணிகள் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. இனி மழை வந்தால் ” இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்”…. உதவி எண்கள் அறிவிப்பு….!!!!

  உதவி எண்கள்  அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. மேலும் பல்வேறு  பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனை மாநகராட்சி நிர்வாகத்தினர் வெளியேற்று வருகின்றனர். இந்த நிலையில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள் குறித்து புகார் அளிக்க உதவி எண்களை மாநகராட்சி  அறிவித்துள்ளது. அதில் இலவச உதவி என் 1913 மூலம் தொடர்பு கொள்ளலாம். மேலும் 04425619206, […]

Categories
மாநில செய்திகள்

“உலகின் பெரிய கரகாட்ட கோஸ்டி”….. அரசியல் கோமாளி….. BJP அண்ணாமலையை கலாய்த்த செந்தில் பாலாஜி….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நகர சபை கூட்டம் நடைபெற்றது. இவர் மக்களின் குறைகளை கேட்டறிந்தார். கோயம்புத்தூரில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 100 வார்டுகளில் 846 சபைகள் அமைக்கப்பட்டு மக்களின் குறைகள் கேட்டறியப்படுகிறது. அதன் பிறகு நகர சபை கூட்டத்தின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது, தமிழகத்தில் நகர சபை கூட்டங்களின் மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் முதல்வர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். […]

Categories
மாநில செய்திகள்

சென்னைக்கு இன்று ஒரு நீண்ட நெடிய மழை நாளாக அமையும்… தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருப்பதால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் எதிரொலியால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் தொங்கு பாலம் விபத்து…. உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு தொகை…. வெளியான அறிவிப்பு….!!!

குஜராத் மோர்பி நகரில் தொங்கு பாலம் உள்ளது. இந்தப் பாலத்தில் தனியார் நிறுவனம் கடந்த 6மாதங்களாக புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தது. இதனால் பாலம் மூடப்பட்டிருந்தது. இதனையடுத்து பாலம் புனரமைப்பு பணிகள் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி திறக்கப்பட்டது. அந்த பாலத்தில் கடந்த 30 ஆம்‌ தேதி மக்கள் கூட்டம் அலைமோதியது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகமானோர் பாலத்துக்கு வந்திருந்தனர். பொதுமக்களின் எடை தாங்காமல் தொங்கு பாலம் மாலை அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள், […]

Categories
மாநில செய்திகள்

“எல்லா நேரத்திலும் நேர்மையாக பணிபுரிவது சாதாரண விஷயம் அல்ல”…? டிஜிபி சைலேந்திரபாபு பேச்சு…!!!!

காவல்துறை அதிகாரிகள் எல்லா நேரங்களிலும் நேர்மையாக பணி புரிவது சாதாரண விஷயம் அல்ல என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். டிஜிபிகள் ஷகில் அக்தர், சுனில் குமார் சிங் ஓய்வு பெறும் பிரிவு உபச்சார விழா சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜீவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பல கலந்து கொண்டுள்ளனர். இதனை அடுத்து நிகழ்ச்சியில் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறையில் சுனில் குமார் சிங்கும், ஷகில் […]

Categories
மாநில செய்திகள்

எல்லைப் போராட்ட தியாகிகள் தினம்… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ட்வீட் பதிவு…!!!!!

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, நவம்பர் 1 எல்லை போராட்ட தியாகிகள் தினம் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது நாம் இழந்த தமிழர் வாழும் பகுதிகளை தமிழகத்துடன் மீண்டும் இணைக்க போராடிய எல்லை காவலர்களின் இணையற்ற தியாகத்தை போற்றி செலுத்தும் நாள். மேலும் சிறையி உயிரீந்து தமிழ் நிலம் காத்த தியாகம் வாழ்க என அதில் கூறப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

பிரபல ரவுடிகள் 12 பேரிடம் நடத்தப்படும் உண்மை கண்டறியும் சோதனை…. எதிர்பார்ப்பில் புலனாய்வுக்குழு அதிகாரிகள்….!!!!

பிரபல ரவுடிகளிடம்  உண்மையை கண்டறியும் சோதனை நடத்தப்படவுள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29-ஆம் தேதி தொழிலதிபரான ராமஜெயம்  தில்லை நகரில் உள்ள தனது வீட்டின் அருகே  நடை பயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் அவரை கடத்தி படுகொலை செய்தனர். மேலும் அவரது உடலை கட்டுக்கம்பியால் கட்டி  பொன்னி டெல்டா பகுதியில் காவிரி ஆற்று  கரையோரம் வீசி சென்றனர். இந்த சம்பவம் திருச்சி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : பிலிப்ஸ் அதிரடி வீண்…. 20 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி…. 2ஆவது இடத்திற்கு முன்னேற்றம்.!!

சூப்பர் 12 போட்டியில் இங்கிலாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையும். […]

Categories
மாநில செய்திகள்

மிக கனமழை: இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…. மக்களே உஷார்…!!

சென்னையில் வரலாறு காணாத மழை வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகமெங்கும் மிக கன மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் இன்று காலை வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 72 ஆண்டுகளில் மூன்றாவது பெரிய அளவிலான மழை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் கன மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்அடுத்த 24 மணிநேரங்களுக்கு 8 மாவட்டங்களில் மிக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“IPS அதிகாரிகளால் பரிபோண தூக்கம்”…. 3-வது ஐபிஎஸ்-ம் தமிழகத்தில் களமிறக்கம்….. தூக்கமிழந்து தவிக்கும் திமுக….!!!!!

தமிழகத்தில் அம்மா ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் தமிழகத்தில் பாஜகவின் நிலைப்பாடு எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் அமர்ந்ததால் பாஜக ஒவ்வொரு விஷயத்திற்கும் போராட வேண்டிய நிலையில் இருக்கிறது. அதோடு அரசியல் ரீதியான பல்வேறு விஷயங்களுக்கும் திமுக முட்டுக்கட்டை போட்டதால் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரிந்த அண்ணாமலையை தமிழகத்தில் பாஜக மாநில தலைவராக களம் இறக்கியது. இதேபோன்று வடமாநிலங்களில் ஐபிஎஸ் அதிகாரியாக […]

Categories
வேலைவாய்ப்பு

1,422 பணியிடங்கள்…. டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.33,000 சம்பளத்தில்…. SBI வங்கியில் வேலை…..!!!!

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: circle based  officer காலி பணியிடங்கள்: 1422 சம்பளம்: ரூ.33,00 – ரூ.63,840 வயது: 21- 30 கல்வித்தகுதி:டிகிரி தேர்வு:ஆன்லைன் தேர்வு, நேர்முக தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர்  7 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு bank.sbi, www.sbi.co.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி நில அளவையர், வரைவாளர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு…. பதிவிறக்கம் செய்வது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!!

789 நிலஅளவையர், 236 வரைவாளர், 55 சர்வேயர்கள் என மொத்தம் 1089 பணியிடங்களை TNPSC நிரப்ப இருக்கிறது. இதற்குரிய எழுத்துத்தேர்வு வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுகிறது. இதன் முதல்தாள் காலை 9:30 மணியிலிருந்து மதியம் 12:30 வரையும், 2ஆம் தாள் மதியம் 2 மணியிலிருந்து மாலை 5 மணிவரை 2 பிரிவாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அந்த தேர்வுக்கான நுழைவுச் சீட்டை TNPSC தன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (tnpsc.gov.in) வெளியிட்டு உள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே…. நவம்பர் 15 ஆம் தேதிக்குள் நெல் பயிருக்கு காப்பீடு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பூர் மாவட்ட விவசாயிகள் சம்பா நெற்பயிருக்கு பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் ஏக்கருக்கு பிரீமியம் தொகை 559.50 காப்பீடு கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரதமரின் இந்த திட்டத்தில் பயிர் கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும். இதில் கடன் பெறாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது இ சேவை மையம் மூலமாக உரிய பிரிமியம் தொகை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இடைநிலை மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் அண்மையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான டெட் தாள் 1 தேர்வு கணினி மூலமாக நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து இரண்டாம் தாள் தேர்வு நடைபெற உள்ளது.இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் இருக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டுக்கு முன்பாக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் ஆசிரிய ர் தகுதி பெறவில்லை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு HIGH ALERT: 18 மாவட்டங்களில் கனமழை பிச்சி எடுக்கும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழடித்து சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், […]

Categories
திருப்பூர் மாநில செய்திகள்

#BREAKING: நீட் பயிற்சி மையத்தில் மாணவி தற்கொலை …!!

ஆனந்தி என்கின்ற மாணவியின் அப்பா திருப்பூர் காமராஜர் சாலையில் இருக்கக்கூடிய தனியார் நீட் கோச்சிங் சென்டறில் அந்த பெண்ணை சேர்த்து உள்ளார்கள். இந்த சூழலில் இன்று சற்று முன்பாக ஆனந்தி என்ற பெண் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் திருப்பூர் காமராஜர் ரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து போலீசார் முதற்கட்ட விசாரணையை துவங்கி உள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளுக்கு புதிய இயக்குநர் நியமனம்…. அரசு அதிரடி உத்தரவு….!!

தமிழகத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் புதிய இயக்குனராக நாகராஜ முருகன் என்பவர் நியமனம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு முதன்மை செயலாளர் காகலா உஷா வெளியிட்டுள்ள செய்தியில்,ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கூடுதல் உதவி திட்ட இயக்குனர் நாகராஜ் முருகன் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக பணியில் இருந்த கருப்பசாமி என்பவர் வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெற்ற நிலையில் அந்த காலி பணியிடத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூடுதல் உதவி திட்ட இயக்குனர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை : நியூசிலாந்தை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து..!!

இங்கிலாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையும். இந்நிலையில் இன்று குரூப் […]

Categories
மாநில செய்திகள்

“இருப்பதை பறிப்பது தான் திராவிட மாடலா”…. திமுக மௌனம் காப்பது ஏன்….? முதல்வருக்கு ஓபிஎஸ் கோரிக்கை….!!!!!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப் படியை 38 சதவீதம் வரை உயர்த்தி வணங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஓபிஎஸ் டுவிட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே பாலமாக இருப்பவர்கள் அரசு ஊழியர்கள். ஒரு மனிதனை மனிதன் என்று அடையாளப்படுத்தி கல்வியையும் ஒழுக்கத்தையும் போதிப்பவர்கள் ஆசிரியர்கள். இப்படி பொறுப்பு மிக்க பணியில் இருக்கும் […]

Categories

Tech |