Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு…. “நான் அதைப் பற்றி அவரிடம் பேசவில்லை”…. மம்தா பானர்ஜி ஓபன் டாக்….!!!!

மணிப்பூர் மாநில ஆளுநராகவும் மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநராகவும் இருப்பவர் தமிழகத்தை சேர்ந்த இல.கணேசன் இவரின் மூத்த சகோதரி 80 வது பிறந்த நாள் விழா நாளை சென்னையில் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் பங்கேற்குமாறு மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு இல.கணேசன் அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று விழாவில் பங்கேற்பதாக அறிவித்திருந்தார். மேலும் 2 நாள் பயணமாக சென்னை வரும் மம்தா பானர்ஜி ஸ்டாலின் மற்றும் சில அரசியல் கட்சி தலைவர்களை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“சிவரக்கோட்டையில் பேருந்து நிற்க வேண்டும்”… சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்… பெரும் பரபரப்பு…!!!!

சிவரக்கோட்டையில் பேருந்து நிற்க வேண்டும் என கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை கிராமத்தில் தென் மாவட்டங்கள் வழியாக செல்லும் மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி அரசு போக்குவரத்து பணிமனையில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். இதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கி விட்டதாக கூறப்படுகிறது ஆனால் கடந்த சில மாதங்களாக அரசு பேருந்துகள் சிவரக்கோட்டை பேருந்து நிலையத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ஆர்எஸ்எஸ் பேரணி… 3 இடங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கிய காவல்துறை…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் அக்டோபர் 2 ஆம் தேதி ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பு உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தனர். இதனை ஏற்றுக் கொண்டு, தமிழகம் முழுவது 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது. ஆனால் சட்ட ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த […]

Categories
மாநில செய்திகள்

“எழும்பூர் ரயில் நிலையம் அன்று போல் இன்று இல்லை”…? தெற்கு ரயில்வே ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு…!!!!!

எழும்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாள பகுதிகளில் மழைநீர் தேங்கி ரயில் போக்குவரத்து பாதிக்கப்படுவது வழக்கமாகி கொண்டிருந்த நிலையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மழை நீர் வடிகால் பணியால் நிலைமை மேம்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வ பிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்தும் தண்டவாளங்களில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இது பற்றி ட்விட்டர் பதிவில் வீடியோவுடன் தகவல் கூறப்பட்டிருக்கிறது. இதனால் தண்டவாள பகுதிகளில் மழைநீர் தேங்காாமல் வழக்கம்போல் ரயில்கள் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் இளநிலை கால்நடை மருத்துவ படிப்பு பொது கலந்தாய்வு”… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!!!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி போன்ற ஏழு இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கல்லூரிகளில் இளநிலை கால்நடை மருத்துவ படிப்பில் இந்த வருடம் 580 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு போன்ற நான்கு கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டான 15 சதவீதம் என மொத்தம் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் பால விபத்து…. அரை கம்பத்தில் பறக்க விடப்பட்ட தேசியக்கொடி…. முதல் மந்திரி தகவல்….!!!!!

இன்று மாநிலம் முழுவதும்  துக்க நாள் அனுசரிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி  நகரில் மச்சு என்ற ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே 100  ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் உள்ளது. இந்த பாலம் கடந்த 26-ஆம் தேதி 8 மாத கால பராமரிப்பு பணிக்கு பின்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. இந்நிலையில்   கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை  பாலம் இடிந்து விழுந்தது. இதில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 177 […]

Categories
தேசிய செய்திகள்

வசூல்ராஜா எம்பிபிஎஸ் பட பாணியில்…. புனரமைக்கப்பட்ட மோர்பி மருத்துவமனை…. வெளியான வைரல் வீடியோ….!!!!

கமல் நடிப்பில் வெளியாகிய வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் வருவதைப் போன்று மோடி வருகைக்காக குஜராத் மோர்பி மருத்துவமனை புனரமைக்கப்பட்டதாக விமரிசித்து இருக்கும் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தின் ஹிந்தி ரீ மேக் திரைப்படம் முன்னாபாய் எம்பிபிஎஸ். Modi ji is visit to Morbi hospital, and the preparations made for his visit, remind us of Munnabhai MBBS.Sometimes reality is close to […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“இப்போ தர போறீங்களா இல்லையா”…. போராட்டத்தில் ஈடுபட்ட தோட்டத் தொழிலாளர்கள்…. நீலகிரியில் பரபரப்பு….!!!!

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பகுதியில் தனியார் தோட்டத் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இரண்டு மாத சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் நேற்று காலை வேலைக்கு வந்த தொழிலாளர்கள் சம்பளத்தை உடனே வழங்குமாறு தோட்ட அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசாரும் தோட்ட நிர்வாக பிரதிநிதிகளும் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கப்படும் என நிர்வாகத்தினர் உறுதியளித்ததன் பேரில் அவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

வேற லெவலில் மாறப்போகும் அண்ணா நூற்றாண்டு நூலகம்…. குட்டீஸ் முதல் இளசுகள் வரை…. வெளியான மாஸ் தகவல்….!!!!

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. இங்கு ரூ.6.2லட்சம் புத்தகங்கள், மூவாயிரம் இ-புத்தகங்கள் உள்ளது. இங்கு தினசரி 2000 முதல் 2500 வாசகர்கள் வந்து செல்கின்றனர். மேலும் மாணவர்கள் மற்றும் சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராகும் நபர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றன. இந்த நூலகம் கடந்த அதிமுக ஆட்சியில் பராமரிப்பு இன்றி காணப்பட்டது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததும் மீண்டும் புத்துணர்ச்சி பெற […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் சரியாகல”…. ஊஞ்சல் சங்கிலியில் பிணமாக தொங்கிய விவசாயி…. பேரதிர்ச்சியில் தாய்….!!!!

தேனி மாவட்டத்தில் கம்பம் பகுதியில் விஜய் ஆனந்த் என்ற விவசாயி வசித்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனை குணப்படுத்துவதற்கு அவர் பல்வேறு மருத்துவமனைகளை நாடி உள்ளார். ஆனால் எந்த சிகிச்சைக்கும் நோய் கட்டுப்படவில்லை. இதனால் விஜய் ஆனந்த் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் விஜய் ஆனந்தும் அவரது தாயும் உணவு அருந்திவிட்டு தூங்கச் சென்றுள்ளனர். அதன் பின் நள்ளிரவில் விஜய் ஆனந்தின் தாய் எழுந்து […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் புது சிறைச்சாலை, போலீஸ் நிலையங்கள்?…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்…..!!!!

மும்பையில் புது சிறைச்சாலை மற்றும் 7 போலீஸ் நிலையங்களை அமைக்க மகாராஷ்டிர அரசு திட்டமிட்டு இருப்பதாக துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தன் சுட்டுரை பதிவில், மாநிலத்தலைநகர் மும்பை, நாக்பூர் மற்றும் புனே போன்ற இடங்களில் புது சிறைச்சாலைகளின் தேவை தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடந்தது. இப்போது மும்பையில் ஆர்தர் ரோட்டில் ஒரேஒரு ஜெயில் மட்டும்தான் இருக்கிறது. அத்துடன் காவலர் குடியிருப்புகளுக்கு அரசிடமிருந்து நிதிப்பற்றாக்குறை ஏற்படாது என உறுதியளித்தார். மும்பையின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

16 அடி நீளம் மலைப் பாம்பா….? பீதியில் தோட்டத் தொழிலாளர்கள்…. துரித நடவடிக்கையில் வனத்துறையினர்….!!!!

நீலகிரி மாவட்டத்தில் அள்ளூர்வயல் பகுதியில் தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தேயிலை தோட்டத்தில் அதிக அளவிலான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென அங்கு மலை பாம்பு ஒன்று வந்துள்ளது. இதனை கண்ட தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர். இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்து அருகில் உள்ள தெய்வ […]

Categories
தேசிய செய்திகள்

நீ யாருக்கும் கிடைக்கக்கூடாது…. காதலன் மீது “5 லிட்டர் ஆசிட் உற்றிய பெண்”…. அறுந்து விழுந்த உடல் உறுப்புகள்….!!!!

வாலிபர் மீது திரவியம் வீசிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அரியானா மாநிலத்தில் உள்ள பஹதுர்கர் பகுதியில் ஷியாம் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது அத்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் கோஹானா கிராமத்தை சேர்ந்த அஞ்சலி என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அஞ்சலி தினமும் ஷியாமை   போனில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். இந்நிலையில் திடீரென ஒரு நாள் அந்த பெண் தனது பெற்றோருடன் ஷியாமின் அத்தை வீட்டிற்கு சென்று […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“வாடகை செலுத்தவில்லையா”….? அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால்…. கொந்தளித்த வியாபாரிகள்….!!!

வாடகை செலுத்தாத கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி நகராட்சி பகுதியில் அமைந்துள்ள மார்க்கெட்டின் உள் மற்றும் வெளிப்புறத்தில் 1587 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இது கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் வாடகை மறு நிர்ணயம் செய்து உயர்த்தப்பட்டது. இதனை அடுத்து வியாபாரிகள் பல கட்ட பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டும் நிலுவை வாடகை செலுத்துவதாக உறுதியளித்தும் வாடகையை முழுமையாக செலுத்தவில்லை. இதனை தொடர்ந்து 4 ஆண்டுகளாக நிலுவை வாடகை ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

ஞானவாவி மசூதி வழக்கு… விசாரணை வருகிற 11‌‌ ஆம் தேதி ஒத்திவைப்பு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

உத்தரபிரதேச மாநில வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலை ஓட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. முகலாய மன்னர் ஔரங்கசீப் உத்தரவின் படி கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு அந்த மசூதி கட்டப்பட்டதாக ஹிந்துக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள சிருங்கார் கௌரி, கணபதி, ஹனுமன், நந்தி சிலைகளை தினந்தோறும் வழிபட அனுமதி அளிக்குமாறு 5 பெண்கள் உள்ளிட்ட சிலர் கொடுத்த வழக்கை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஞானவாபி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

காதலி பேசாததால்…. அவசர முடிவில் இன்ஜினியரிங் மாணவர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

காதலி பேசாமல் இருந்த காரணத்தினால் மனம் உடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் கிராமத்தில் நிதிஷ்குமார் என்ற வாலிபர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்தியன் 2 படத்தில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை”…. இணையத்தில் பதிவு…!!!!!

இந்தியன் 2 படப்பிடிப்பில் பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை இணைந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் கமல். அண்மையில் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப் ஹிட்டானது. சென்ற 2018 ஆம் வருடம் தொடங்கி சில காரணங்களால் நிறுத்தப்பட்ட இந்தியன்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்தநிலையில் கமல் இந்தியன் 2 படத்தில்  நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் கமலுடன் இணைந்து […]

Categories
தேசிய செய்திகள்

கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதி உதவி…. எவ்வளவு தெரியுமா?…. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி…..!!!!

மாசுபாடு காரணமாக கட்டுமானப் பணிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், தொழிலாளர்களுக்கு ரூபாய்.5,000 நிதியுதவி வழங்குமாறு தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொழிலாளர் அமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மாசுஅளவு மிகவும் மோசமடைந்து வருவதால் தில்லி என்.சி.ஆரில் கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்குத் தடைவிதிக்குமாறு மத்திய அரசின் காற்றின் தரக் குழு கடந்த சனிக்கிழமையன்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதனால் தில்லி முழுதும் மாசுபாடு காரணமாக கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படாத இந்தக் காலக்கட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“சரியான பட்டனை அழுத்தியதால் எய்ம்ஸ்”….. அப்ப தமிழகத்தில் வராதா…..? ஜேபி நட்டாவின் சர்ச்சை பேச்சால் புதிய பரபரப்பு…..!!!!!

இமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக 1470 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த மருத்துவ மனையின் பணிகள் நடப்பாண்டில் முடிவடைந்தது. கடந்த 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்தார். இந்நிலையில் ஜேபி நட்டா தற்போது இமாச்சல் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, நீங்கள் இவிஎம் இயந்திரத்தில் சரியான பட்டனை அழுத்தியதால், இன்று மாநிலத்தில் எய்ம்ஸ் […]

Categories
தேசிய செய்திகள்

பத்ம பூஷன் விருது பெற்ற பெண்கள் உரிமை செயற்பாட்டாளர் காலமானார்…. சோகம்…!!!

பத்ம பூஷன் பெற்றவரும், பெண்கள் உரிமை செயற்பாட்டாளருமான எலா பாட் 89 இன்று காலமானார். காந்தியவாதியாக அறியப்பட்ட இவர், பெண்களின் பொருளாதார சுதந்திரத்திற்காக பல வழக்குகளை நடத்தியவர். மேலும் சேவா அமைப்பை தொடங்கி தலைமை தாங்கியவர். பெண்களின் முதல் வங்கியான சேவா கூட்டுறவு வங்கியை இவர் 1973ல் தொடங்கியவர். இவருக்கு இந்திய அரசு 1985ல் பத்மஸ்ரீ விருதும், 1986ம் ஆண்டு பத்ம பூஷன் விருதும் கொடுத்து கெளரவப்படுத்தியது. இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து […]

Categories
Tech டெக்னாலஜி

“ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவை”…. குறுகிய காலத்தில் 10 லட்சம் வாடிக்கையாளர்கள்…. வெளியான தகவல்…!!!!!

இந்தியாவில் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை அறிமுகப்படுத்தி வைத்தார். 5ஜி அழைக்கசற்றை சேவை ஏலத்தில் விடப்பட்ட நிலையில் ஜியோ நிறுவனம் ஏலத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் பிரபலமான ஏர்டல் நிறுவனம் இந்தியாவில் உள்ள வாரணாசி, நாக்பூர், ஹைதராபாத், பெங்களூர், சென்னை, மும்பை மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் முதற்கட்ட துவக்கமாக 5ஜி சேவையை சமீபத்தில் அறிமுகப்படுத்தினார். இந்த நகரங்களில் 5 ஜி சேவையானது படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படுவதாக கூறப்படும் நிலையில், கூடிய விரைவில் இந்தியா […]

Categories
தேசிய செய்திகள்

என்ன செய்யன்னு தெரியல…! ரூ.8 லட்சம் கொடுத்து மகனை தீர்த்துகட்டிய பெற்றோர்…. என்ன காரணம்….??

ஹைதராபாத் மாநிலத்தை சேர்ந்தவர் 26 வயதான சாய்ராம். இவர் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு குடிக்கு அடிமையாகி நாள்தோறும் குடித்துவிட்டு தாய், தந்தையரை துன்புறுத்தி வந்துள்ளார். திருந்துவதற்காக மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பியும் பலன் கிடைக்கவில்லை. இதனால் என்ன செய்வதென்று தெரியாத பெற்றோர்கள் கூலிப்படையை வைத்து தன்னுடைய மகனை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து எட்டு லட்சம் கொடுத்து கூலிப்படையை தயார் செய்து தன்னுடைய மகனை கொலை திட்டமிட்டுள்ளனர். பின் அக்டோபர் 18ஆம் தேதி அன்று சாய்ராம் […]

Categories
உலக செய்திகள்

ஈரான் அரசின் அதிரடி திட்டம்…. எச்சரிக்கும் சவுதி அரேபியா… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

சவுதி அரேபியா மற்றும் அமெரிக்க ராணுவம் உடனடியாக ஈரான் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக எச்சரித்திருக்கிறது. ஈரான் நாட்டில் ஹிஜாப் அணியாத காரணத்தால் காவல்துறையினரின் காவலில் வைக்கப்பட்டிருந்த 22 வயது இளம்பெண் பலியானதை தொடர்ந்து அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளது. இதில் பெண்கள் ஆயிரக்கணக்கில் தங்களின் தலை மற்றும் முகங்களை மறைக்காமல் சாலைகளில் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால், உலக நாடுகள் ஈரான் மீது கோபமடைந்துள்ளது. இந்நிலையில் ஈரான் அரசு தங்கள் நாட்டில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களிலிருந்து உலக […]

Categories
தேசிய செய்திகள்

காற்றின் தரம் மிக மோசம்: மீண்டும் மூடப்படும் பள்ளிகள்?…. மாநில அரசுக்கு திடீர் நெருக்கடி….!!!!

நாட்டின் தலைநகரான டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியுள்ளது என்று மத்திய ‌மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. காற்று மாசுபாடு காரணமாக இணை நோயுடைய முதியவர்கள், குழந்தைகள் என பலரும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் 10-இல் 8 குழந்தைகள் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனைக்கு வருவதாக குழந்தைகள் நல டெல்லி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காற்று மாசு குறித்து குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்க் கானூங்கோ டெல்லி […]

Categories
சினிமா

அவதார்-2 திரைப்படம்….. வெளியான டிரைலர்…. வைரலாக்கும் ரசிகர்கள்…..!!!!!!

ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் சென்ற 2009ம் வருடம் இயக்கிய “அவதார்” திரைப்படம் உலகளவில் வசூலில் மாபெரும் சாதனைப் படைத்தது. ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஒளிப்பதிவு, விஷூவல் எபெக்ட்ஸ், கலை அமைப்பு போன்ற 3 பிரிவுகளில் இந்த படம் விருதுகளைப் பெற்றது. On December 16, return to Pandora. Watch the brand-new trailer and experience #AvatarTheWayOfWater in 3D. pic.twitter.com/UtxAbycCIc — Avatar (@officialavatar) November 2, 2022 இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“2 நடிகைகளுக்கும் விரைவில் டும் டும் டும்”…. குவியும் வாழ்த்து…!!!!!

இரண்டு நடிகைகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது. தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பைரவா திரைப்படத்தில் நடித்தவர் அபர்ணா வினோத். இவர் இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு தோழியாக நடித்திருந்தார். இந்த நிலையில் இவருக்கும் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ரினில் ராஜ் என்பவருக்கும் திருமணம் முடிவாகி இருப்பதாகவும் நிச்சயதார்த்தம் முடிந்திருப்பதாகவும் அவர் இணையத்தில் தெரிவித்து இருக்கின்றார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, உன்னை சந்தித்த நாள் தான் எல்லாவற்றுக்குமான தொடக்கம் என பதிவிட்டதோடு உனக்காக பொறந்தேனே எனதழகா பிரியாம இருப்பேனே பகல் […]

Categories
உலக செய்திகள்

உங்களுக்கு எதுக்கு கல்வி?…. பிரபல நாட்டில் “பெண்களை விரட்டி அடித்த அரசாங்க அதிகாரி”…. அலறிக் கொண்டு ஓடிய மாணவிகள்….. வைரலாகும் வீடியோ….!!!!

பிரபல நாட்டில் பெண்களுக்கு  எதிரான அடக்குமுறை தொடர்ந்து கொண்டே வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தலீபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. இதனால் அவர்கள் பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். மேலும் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு தடை விதித்துள்ளனர். இவர்களின் இந்த தடைகளுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள படாசவும் பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு மாணவிகள் பலர் காத்திருந்துள்ளனர். அவர்களை பல்கலைக்கழகத்திற்குள் நுழைய விடாமல் தலீபான்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே! “துணிவு” திரைப்படத்தை வாங்க தயங்கும் விநியோகஸ்தர்கள்?…. அதுதான் காரணமாம்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 2 திரைப்படங்கள் தோல்வியை தழுவிய நிலையில், தற்போது எச் வினோத் இயக்கத்தில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க, மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கன், ஜி.எம் சுந்தர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பிரமோஷன் நிகழ்ச்சியில் அஜித் […]

Categories
உலக செய்திகள்

ஹாலோவீன் கொண்டாட்டம்…. 14 பேர் படுகாயம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

அமெரிக்கா நாட்டில் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் 3 குழந்தைகள் உள்பட 14 பேர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அமெரிக்கா நாட்டில் இல்லினாய்ஸ் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் சிகாகோ என்ற நகரத்தில் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில், அங்கு நடந்த கொண்டாட்டத்தை கவனித்தபடி இருந்த கருப்பு நிற ஆடம்பர ரக காரில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் திடீரென கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி […]

Categories
உலக செய்திகள்

“சும்மா எங்கள குறை சொல்லாதீங்க”…. பால் பொருள்களின் விலை உயர்வு…. இது தான் காரணம்….?

கனடா நாட்டில் பால் மற்றும் பாலிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களுக்கு விலை உயர வாய்ப்புள்ளது.  கனடா நாட்டில் பால் கொள்முதல்  விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பாலிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களின் விலை உயர உள்ளதாக கனேடிய பால் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பாலின் விலையானது 2.2% அல்லது லிட்டருக்கு இரண்டு செண்டுகள் வரை உயர்த்த ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக நேற்று கனேடிய பால் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பாலின் விலை  உயர்வானது வருகிற 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ மாணவர் சேர்க்கை… “உளவியல் பரிசோதனை கட்டாயம்”…. மாநில அரசு திடீர் அறிவிப்பு….!!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹால்த்வானி பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு எம்பிபிஎஸ் மற்றும் முதுநிலை மருத்துவ படைப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் மாணவர் சேர்க்கையின் போது பொது பரிசோதனை மட்டுமே நடத்தப்படுவது வழக்கமாக இருந்தது. அத்துடன் இஎன்டி, கண் பரிசோதனை, கதிரியக்க பரிசோதனை நோயியல் பரிசோதனை ஆகியவை மட்டுமே செய்யப்பட்டது. ஆனால் தற்போது மாணவர் சேர்க்கைக்கு உளவியல் பரிசோதனை கட்டாயம் என மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது […]

Categories
ஆட்டோ மொபைல்

நாடு முழுக்க 100 புளூ ஸ்கொயர் விற்பனை…. யமஹா வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

இந்தியா யமஹா மோட்டார் நிறுவனமானது நாடுமுழுக்க 100 புளூ ஸ்கொயர் விற்பனை மையங்களை கட்டமைத்து இருக்கிறது. இந்திய சந்தையில் ரிடெயில் விற்பனையை உறுதிப்படுத்த 3s நெட் வொர்க்கை யமஹா புளூ தீமிற்குள் கொண்டுவரவும் யமஹா திட்டமிட்டு இருக்கிறது. அத்துடன் புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் யமஹா சர்வதேச சந்தையில் விற்பனை செய்யும் மாடல்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் என யமஹா தெரிவித்து உள்ளது. எந்தெந்த மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்பது தொடர்பாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வடகிழக்கு பருவமழை தொடக்கம்…. மாவட்டம் முழுவதும் பெய்த சாரல் மழை….. தயார் நிலையில் மீட்பு குழுவினர்…!!!

தமிழகத்தில் கடந்த 29-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் வருகிற 4-ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் நேற்று சாரல் மழை பெய்தது. பாதிப்புகளை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனை அடுத்து மழை வெள்ளம் ஏற்பட்டால் மீட்பு பணிகளுக்கு ஊழியர்கள் தயார் […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. Over ஸ்பீடில் வரும் வைரஸ்…. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை….!!!!!

உலக நாடுகளில் குரங்கு அம்மை நோய் தொற்று அதிகரித்துள்ளது. உலகில் உள்ள பல நாடுகளில் குரங்கு அம்மை நோய் தொற்று  அதிகரித்து வருகிறது. இந்நிலையில்  சர்வதேச பொது சுகாதார அவசர அச்சுறுத்துதலாக குரங்கு அம்மை நோய் பரவல் இருந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. மேலும் இது குறித்து அவசர குழுவின் 3-வது கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 11 உறுப்பினர்கள், 6 ஆலோசகர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து உலக சுகாதார […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

துரிதமாக செயல்பட மருத்துவ குழுவினர்…. ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை…. நன்றி தெரிவித்த உறவினர்கள்…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடம்பூர் மாக்காம்பாளையம் பகுதியில் ரங்கசாமி- மைலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான மைலாக்கு திடீரென பிரசவ வலி அதிகரித்ததால் ஆம்புலன்ஸ் மூலம் அவரை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில் கிட்டாபாளையம் வனப்பகுதியில் சென்றபோது பிரசவ வலி அதிகரித்ததால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டார். பின்னர் மருத்துவ குழுவினர் மைலாவுக்கு பிரசவம் பார்த்ததில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக சத்தியமங்கலம் […]

Categories
உலக செய்திகள்

“உங்களுக்கு 30 நொடிகளே அவகாசம்”… உடனே பாதுகாப்பான பகுதிக்கு போங்க…? மரண பயத்தை காட்டிய தருணம்…!!!!!!

சிட்னி தம்பதி மேக்னஸ் மற்றும் டொமினிக் பெர்ரி போன்றோர் தங்களது இரண்டு மகன்கள் உடன் தாரோ உயிரியல் பூங்காவில் சம்பவத்தன்று குடில் ஒன்றில் தங்கி இருந்தனர்.  அப்போது தான் சிங்கங்களின் கர்ஜிக்கும் சத்தம் கேட்டு அதிகாலை 4 மணிக்கு கண்விழித்து இருக்கின்றனர். பொதுவாக தாரங்கோ உயிரியல் பூங்காவில் மிருகங்களின் அச்சமூட்டும் சத்தங்களையே சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க விளம்பரமாக பயன்படுத்தி வந்திருக்கின்றார்கள். ஆனால் புதன்கிழமை சிங்கங்களின் கர்ஜனை சத்தம் கேட்ட போதும் அவை கூண்டுக்குள் பூட்டப்பட்ட நிலையில் இருப்பதால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மின்கம்பம் மீது மோதிய கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. சிரமப்பட்ட பொதுமக்கள்…!!!

மின்கம்பம் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து 2 பேர் காரில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள செம்மண் திட்டு என்ற பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக காரின் டயர் வெடித்தது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மின்கம்பம் உடைந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குழிக்குள் பாய்ந்த டிராக்டர்…. சுதாரித்து கொண்ட விவசாயி…. மீட்பு பணிகள் தீவிரம்…!!

குழியில் விழுந்த டிராக்டரை மீட்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவளகுட்டை பகுதியில் விவசாயியான வேலு என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை வேலு தனது டிராக்டரை பவளகுட்டையில் இருந்து அந்தியூர் நோக்கி ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய டிராக்டர் கிணறு போல இருந்த சாலையோர குழிக்குள் பாய்ந்தது. உடனடியாக வேலு டிராக்டரில் இருந்து வெளியே குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனை அடுத்து குழியில் இருந்த தண்ணீரை அகற்றிவிட்டு டிராக்டரை மீட்கும் […]

Categories
உலக செய்திகள்

“ஆஹா!”… சூப்பர் தகவல்…. பிற நாட்டை சேர்ந்தவர்களுக்கு… துருக்கி வெளியிட்ட நல்ல தகவல்…!!!

துருக்கியில் வேலை செய்யும் பிற நாட்டவர்கள் பணி அனுமதி இல்லாமலும் வேலை செய்ய முடியும் என்று ஆனை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. துருக்கியில் பணியாற்ற சென்ற பிற நாட்டை சேர்ந்த மக்களுக்கு அந்நாட்டின் பணியாளர் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சகம் நல்ல தகவலை வெளியிட்டுள்ளது. துருக்கியில் பிற நாட்டைச் சேர்ந்த மக்கள், பணி அனுமதியின்றி வேலை செய்வதை எளிதாக்கும் விதத்தில் துருக்கி அரசு, புதிதாக வேலைவாய்ப்பு ஆணையை அமல்படுத்திருக்கிறது. அதன்படி, பிற நாடுகளை சேர்ந்த கல்வியாளர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தண்ணீருக்கு பதில் “கழிவறை கிளீனர்”…. வட மாநில வாலிபருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!!

வட மாநில வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையில் இருக்கும் தனியார் கம்பெனியில் தங்கி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாபு நாயக் என்பவர் லாரி கிளீனராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அருமையான பாபு நாயக் திடீரென வயிறு வலியால் அலறி துடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது மது அருந்திய போது கழிவறையில் இருந்த கிளீனரை தண்ணீர் என நினைத்து […]

Categories
உலகசெய்திகள்

இரு வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் திருமணம்… இணையத்தில் வெளியிட்ட புகைப்படம் வைரல்…!!!!!

கடந்த 2020 ஆம் வருடம் மிஸ் கிராண்ட் சர்வதேச அழகி போட்டியில் அர்ஜென்டினாவை சேர்ந்த மரியானா வரேலா வெற்றி பெற்றுள்ளார். இவரும் போட்டோ ரிகோ நாட்டின் அழகி பாபியோலா வேலன்டினும் நண்பர்களாக அறிமுகமாகியுள்ளனர். அதன் பின் தன் பாலின ஈர்ப்பாளராக இருவரும் ஒன்றாகவே வாழ தொடங்கியுள்ளனர். ஆனால் இவர்களது காதலை ரகசியமாக வைத்துள்ளனர். இந்த சூழலில் கடந்த மாதம் 28ஆம் தேதி இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். மேலும் இது தொடர்பாக இவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“சென்னை வந்துட்டு ஸ்டாலினை சந்திக்காமல் செல்ல முடியுமா….?” அவர் என்னுடைய சகோதரர்…. முதல்வர் மம்தா பானர்ஜி நெகிழ்ச்சி…..!!!!

மேற்குவங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சென்னைக்கு வருகை புரிகிறார். இவர் முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்து பேச இருக்கிறார். இவர்கள் சந்திப்பு  2024-ம் ஆண்டு தேர்தலுக்கான வியூகம் என்று சொல்லப்பட்ட நிலையில், மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநர் இல. கணேசன் அதை மறுத்துள்ளார். அதாவது தமிழகத்தைச் சேர்ந்த இல. கணேசனின் அண்ணன் பிறந்தநாள் நாளைய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தான் முதல்வர் மம்தா பானர்ஜி சென்னைக்கு வருவதாக கூறியுள்ளார். ஆனால் முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி…. “உடனே தொடங்குங்க”…. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை….!!!!

அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி உடனடியாக தொடங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. அதனால் தான் நீட் தேர்வை பா.ம.க கடுமையாக எதிர்க்கிறது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை பா.ம.க. முழுமையாக ஆதரிக்கிறது. அதே நேரத்தில் நீட் விலக்கு என்ற இலக்கை எட்டும் வரை அதை […]

Categories
டெக்னாலஜி

BSNL 4G இந்திய வெளியீட்டு விபரம் குறித்து….. வெளியான தகவல்கள்…..!!!!!

BSNL அதிகாரப்பூர்வமான டுவிட்டர் பக்கத்தில் நாட்டில் 4G வெளியீடு தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நம் நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை வைத்து 4G சேவைகளானது எப்போது வெளியிடப்படும் என்று BSNL தெரிவித்துள்ளது. இந்தியச்சந்தையில் 4G சேவைகளை வெளியிட BSNL நிறுவனம் நீண்டகாலமாகவே போராடி வருகிறது. இருப்பினும் 4G வெளியீட்டில் BSNL பெரும்பாலான தடைகளை எதிர் கொண்டு வருகிறது. இந்நிலையில் BSNL இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவில் எப்போது பிஎஸ்என்எல் 4ஜி வெளியாகும் என்ற […]

Categories
மாநில செய்திகள்

டிலைட் பால்… “3 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்”… ஆவின் நிறுவனத்தின் புதிய அறிமுகம்…!!!!!!

தமிழகத்தின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் விவசாயிகளிடமிருந்து நேரடியாக பசும்பாலை கொள்முதல் செய்து அதனை பொது மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றது. அது மட்டுமல்லாமல் பால் சார்ந்த நெய், பால்கோவா போன்ற பல்வேறு பொருட்களையும் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பால் பொருட்களில் சிறந்த ஆப்பர்களும் வழங்கப்பட்டது கடந்த வருடம் திமுக தலைமையிலான ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்துள்ளது. இந்த விலை குறைவால் ஆவின் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் வேளாண், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி பற்றி…. மத்திய மந்திரி வெளியிட்ட தகவல்…..!!!!

இந்தியாவின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களின் ஏற்றுமதி நடப்பு நிதி ஆண்டின் 2ஆம் காலாண்டில் 25% அதிகரித்துள்ளது என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காலத்தில் பல்வேறு நிறுவனங்கள் முடங்கி பொருளாதார தேக்க நிலையை நாடு சந்தித்தது. இந்நிலையில் சென்ற சில மாதங்களாக தொழில் துறை வளர்ச்சி, பொருளாதார முன்னேற்ற நிலை காணப்படுகிறது. நாட்டில் உற்பத்திதுறையின் பொருளாதார வளர்ச்சியானது, சென்ற அக்டோபர் மாதத்தில் தொடர்ந்து ஆரோக்கியமுடன் காணப்பட்டது என்று புள்ளி விபரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மாஸ், கிளாஸ், பக்கா மாஸ்”…. ஆக்ரோஷமான வேடத்தில் ஷாருக்…‌ வைரலாகும் வேற லெவல் டீசர் வீடியோ…..!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படங்கள் தோல்வி அடைந்த நிலையில், தற்போது எப்படியாவது வெற்றியை கொடுத்து விட வேண்டும் என்ற புது உத்வேகத்துடன் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மெர்சல் மற்றும் தெறி போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அட்லி இயக்குகிறார். அதன் பிறகு நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நயன்தாரா மற்றும் பிரியாமணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் […]

Categories
மாநில செய்திகள்

ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம்… வல்லுனர் குழு பரிந்துரை CORRECT…. மத்திய அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!!!

ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உள்ளூர்மயமாக்குவதன் மூலம் கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு தன்னாட்சி அதிகாரம் கிடைக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அறிக்கை ஒன்றே வெளியிட்டு உள்ளார். அதில், மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்படி உள்ளூர் மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வசதியாக அந்த திட்டத்தை உள்ளூர்மயமாக்க வேண்டும் என்று வல்லுனர் குழு பரிந்துரைக்கிறது. மக்களுக்கான திட்டத்தை மக்களின் விருப்பப்படி செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசுக்கு வல்லுனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கார்த்தியின் “கைதி”…. ரீமேக்கில் இணைந்த பிரபல நடிகை அமலாபால்…. வெளியான புதிய அப்டேட்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரையை பதித்தார். இந்நிலையில் கார்த்தி நடிப்பில் தமிழில் வெளியான கைதி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், இப்படத்தை போலோ என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்கின்றனர். இப்படத்தில் ஹீரோவாக அஜய் தேவ்கன் நடிக்கிறார். […]

Categories
தேசிய செய்திகள்

காற்று மாசு எதிரொலி: இனி வீட்டிலிருந்தே வேலை….? ஊழியர்களுக்கு முக்கிய வேண்டுகோள்….!!!

டெல்லியில் அண்மை தினங்களாக காற்றின்தரம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் காற்றின் தரத்தை மேம்படுத்த டெல்லி அரசானது பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் காற்று மாசுபாடை குறைக்க, மாநில அரசின் சார்பாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில் காற்று மாசு காரணமாக பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதுகுறித்து தேசிய குழந்தைகளுக்கான உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் டெல்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. டெல்லியை பொறுத்தவரையிலும் இன்று […]

Categories

Tech |