Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய் குரலில் “ரஞ்சிதமே”….. வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு…. இணையத்தில் படு வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, மீனா, குஷ்பூ, சங்கீதா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாரிசு படத்தின் முக்கியமான அறிவிப்பு இன்று மாலை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மத்திய பேருந்து நிலையத்தில்…. வழிந்து ஓடும் கழிவுநீர்…. அவதியில் பயணிகள்….!!!!

வழிந்து ஓடும் கழிவு நீரால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கும் வெளிமாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப் படுகின்றது. இங்கிருந்து ஏராளமான பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் இந்த பேருந்து நிலையத்தில் பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட பேருந்துகள் நிற்கும் இடத்தில் கட்டண கழிப்பிடம் அமைந்துள்ளது. இங்கிருந்து நேற்று முன்தினம் இரவு கால்வாய் நிரம்பி பேருந்துகள் நிற்கும் இடத்தில் வழிந்து ஓடியது. இதனால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்துள்ளனர். அது […]

Categories
உலக செய்திகள்

வாகனத்தின் உச்சியில் நின்ற இம்ரான் கான்… துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்… பரபரப்பு வீடியோ…!!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் செபாஸ் செரிப்பின் தலைமையில் அரசாங்கத்தை எதிர்த்து பேரணி நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று அவருடன் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்தனர். Footage from the container when Imran Khan shot on his leg. pic.twitter.com/rE3CyMoTdP — Ihtisham Ul Haq (@iihtishamm) November […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாடகைத்தாய் பிரச்சனை… “நடிகர்கள் சம்பந்தப்பட்டதால் பெருசாகிட்டாங்க”…. பிரபல நடிகை ஓபன் டாக்….!!!!!

வாடகைதாய் பிரச்சனை குறித்து நடிகை வரலட்சுமி பேசியுள்ளார். பிரபல நடிகையான வரலட்சுமி சரத்குமார் வாடகத்தாய் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். வாடகைத்தாய் பிரச்சனை என்பது ஒரு பெரிய சிக்கலான விஷயமே கிடையாது. இதில் நடிகர்கள் சம்பந்தப்பட்டதால் தான் பெரிதாகிவிட்டார்கள் என வரலட்சுமி கூறியுள்ளார். இவர் யசோதா படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, இதுபோன்ற கதையும் கதாபாத்திரங்களும் எப்படி எழுதினார்கள் என்பது தான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது குறித்து நான் இயக்குனர்களிடம் கேட்டேன். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆன்லைன் மூலம் ரூபாய் 82,000 மோசடி…. தவிக்கும் வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு….!!!!

ரூபாய் 82 ஆயிரத்து மோசடி செய்த மர்ம நபருக்கு போலீஸ் வலைவீசி உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் திருவானைக்காவல் பகுதியில் வசந்தவேலு என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஆன்லைன் முதலீடு என்ற பெயரில் whatsapp மற்றும் telegram வாயிலாக பதிவு ஒன்று வந்துள்ளது. இதனை வசந்த வேலுவும் திறந்து பார்த்துள்ளார். இதனை அடுத்து மர்ம நபர் ஒருவர் அவரை தொடர்பு கொண்டு ரூபாய் 1600 முதலீடு செய்தால் 600 லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதனை நம்பி வசந்த […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான முக்கிய விதிகளில் மாற்றம்?…. வெளியான ஷாக் நியூஸ்…..!!!!

7வது சம்பளம் கமிஷனின்கீழ் ஊதியம் பெறக்கூடிய மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி இருக்கிறது. மத்திய பணியாளர்கள் மீதான அபராதம் மற்றும் தண்டனை நடவடிக்கை தொடர்பாக பணியாளர்துறை விளக்கமளித்துள்ளது. சமீபத்திய புதுப்பிப்புகளை இப்பதிவில் தெரிந்துகொள்வோம். போனஸ், அகவிலைப்படி அதிகரிப்பு ஆகிய மகிழ்ச்சியான செய்திகளுக்கு மத்தியில் மத்திய அரசு, ஊழியர்களுக்கு புது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பணியாளர் அமைச்சகத்தின் கீழ்வரும் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை (DoPT), ஒரே நேரத்தில் 2 (அல்லது) அதற்கு அதிகமான அபராதம் விதிக்கப்படுவது பற்றி […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் விநியோகிக்கும் நாடுகள்…. முதல் இடத்தை பிடித்த ரஷ்யா…!!!

இந்தியாவிற்கு அதிகமாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யா முதல் இடத்தை பிடித்துள்ளது. ரஷ்ய நாட்டிலிருந்து இந்தியாவிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கொள்முதல் செய்யப்பட்ட கச்சா எண்ணையின் அளவானது 2.4% குறைந்திருந்தது. அதே சமயத்தில் இந்திய நாட்டிற்கு அதிகமாக கச்சா எண்ணெய் விநியோகிப்பதில் முதல் இடத்தில் ஈராக்கும் இரண்டாம் இடத்தில் சவுதி அரேபியாவும் இருந்தது. இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் ரஷ்யாவின், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் பங்கானது, 22% உயர்ந்தது. அந்த வகையில் ரஷ்யா, ஈராக் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்த கடைகளில்…. கைவரிசை காட்டிய வாலிபர்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்….!!!!

பல கடைகளில் கைவரிசை காட்டிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர் பகுதியில் அன்பழகன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பால் ஏஜென்சி கடையை நடத்தி வருகின்றார். இவர் இவருடைய கடையின் பூட்டை உடைத்து ₹2900மும், பக்கத்து தெருவில் உள்ள மீரா மொய்தின் என்பவருடைய செருப்பு கடையில் ரூ.2000மும், சீனிவாசன் என்பவருடைய கடையில் 1700 ரூபாயும், பக்கத்து தெருவில் உள்ள சாமுவேல் ராஜ் என்பவருடைய பழக்கடையில் ரூபாய் 2500, கோகுல்ராஜ் என்பவர் நடத்தி வரும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

விடிய விடிய ஆற்றுக்குள் இறங்கி நின்ற ஆசிரியையால்…. தஞ்சையில் பெரும் பரபரப்பு….!!!!

தஞ்சை மாவட்டத்தில் பள்ளியக்ரஹாரம் பகுதியில் ரேவதி என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் பகல் 12 மணிக்கு வெண்ணாற்றங்கரைக்கு அருகே ரேவதி நடந்து சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து அவர் திடீரென ஆற்றுக்குள் இறங்கி வெகுநேரமாக நின்று கொண்டிருந்தார். இதனை கண்டதும் வழியாக சென்றவர்கள் அவரை வெளியே வருமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர் வெளியே வர மறுத்துள்ளார். இது குறித்து அவருடைய குடும்பத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

கனமழை எதிரொலி!…. நாளை (நவ..4) இங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை?…. மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

தமிழகம் மற்றும் புதுவையில் வட கிழக்கு பருவமழை சென்ற 29-ஆம் தேதி துவங்கியது. அதனை தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுவையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைபெய்து வருகிறது. இதில் புதுவையிலும் சென்ற சில தினங்களாக மழை வெளுத்துவாங்கி வருகிறது. இந்நிலையில் கன மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (04/11/2022)  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் கன மழை காரணமாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எந்திரத்தை சிறைபிடித்த விவசாயிகள்…. புறவழிச்சாலை அமைக்க தொடர் எதிர்ப்பு…. தஞ்சையில் பெரும் பரபரப்பு….!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு பகுதியில் தியாகராஜர் சமாதி மற்றும் புகழ் பெற்ற கோவில்கள் அமைந்துள்ளது. இந்தப் பகுதிக்கு செல்வதற்கான சாலைகள் மிக குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதேபோல் கண்டியூர் போன்ற பகுதிகளிலும் சாலை குறுகலாக இருப்பதினால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது. இதனால் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை அடுத்து திருவையாறு கண்டியூர் பகுதிகளில் அரசூரில் இருந்து விளாங்குடி வரை சாலையை இணைக்கும் வகையில் […]

Categories
மாநில செய்திகள்

கொட்டி தீர்க்கும் மழை….. புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்கள் (04, 05) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகின்றது. நகரப் பகுதி, கிராம பகுதியில் கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக புதுச்சேரியில் உள்ள வீதிகள், முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொது மக்களுடைய வாகனம் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை…. வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர்…. ஆய்வுப் பணியில் கலெக்டர்….!!!!

வடிகால் உடைந்து வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தஞ்சை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை நேற்று மாலை சுமார் 3:30 மணி நேரத்திற்கு மேல் கொட்டி தீர்த்தது. இதனால் கொடி மரத்து மூளை பகுதியில் இருக்கும் அகழியில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இங்கிருந்து வடியும் தண்ணீர் வடிகால் மூலம் வடவாற்றிற்கு சென்று சேரும். இந்த நிலையில் வடிகாலில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் வெளியேறி நூற்றுக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவங்க வளர்ந்தவுடனே என்னை எல்லாரும் மறந்துட்டாங்க!…. வருத்தம் தெரிவித்த டெல்லி கணேஷ்…..!!!!!

தமிழ் திரையுலகில் முக்கியமான நடிகர்களுள் ஒருவர்தான் டெல்லி கணேஷ். இவர் கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கும் மேல் கலை அனுபவம் கொண்டவர். இப்போது இவர் வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் “இளம் இயக்குனர்கள் வளர்ந்த பிறகு தன்னை மறந்துவிடுகிறார்கள் என்று டெல்லி கணேஷ் வருத்தம் தெரிவித்து இருக்கிறார். இளைஞர்கள் பல பேர் ஷார்ட் பிளிம் நடித்து இருப்பதாக கூறிய அவர், அவர்கள் வளர்ந்து படங்களை இயக்கும்போது தன்னை கூப்பிடுவதில்லை. பணமில்லை என்று கூறும் இயக்குனர்களுக்கு வீட்டைக் கூட இலவசமாக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான…. சிலம்பம் போட்டிக்கு…. அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு….!!!!

மாநில அளவிலான சிலம்பம் போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள் தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் ஜூனியர் பிரிவில் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் அப்துல் ரகுமான் முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும் சீனியர் பிரிவில் அதே பள்ளியில் படிக்கும் மாணவன் பாசில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர்கள் இருவரும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் அதிர்ச்சி…. பேரணியில் துப்பாக்கிசூடு…. காயமடைந்த இம்ரான் கான்….!!!

பாகிஸ்தான் நாட்டில் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், பேரணி நடத்திய போது துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், நாட்டின் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி வரிசாபாத் நகரத்தில் தன் தலைமையில் பேரணி நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதில், இம்ரான் கானின் காலில் குண்டு பாய்ந்து விட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரோடு சேர்ந்து பி.டி.ஐ […]

Categories
தேசிய செய்திகள்

ஊழியர்கள் சம்பளத்தில் கைவைத்த இன்ஃபோசிஸ்…. வெளியான திடீர் அறிவிப்பு…..!!!!

இந்திய ஐ.டி சேவை நிறுவனங்கள் எதிர்வரும் ரெசிஷன்-ஐ சிறப்பாகக் கையாண்டு வருகிறது என்று ஒருபக்கம் கூறப்பட்டாலும், நாளுக்கு நாள் புது வர்த்தகத்தைப் பெறுவதற்கான சூழ்நிலை கடுமையாக இருக்கிறது. இந்நிலையில் விப்ரோ சென்ற காலாண்டில் வெளியிட்ட அறிவிப்பைப் போலவே இன்போசிஸ் இப்போது அறிவித்துள்ளது. அதாவது செப்டம்பரோடு முடிந்த காலாண்டில் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய Variable Payயில் 60% மட்டுமே இன்ஃபோசிஸ் வழங்க இருகிறது. மொத்த சம்பளத்தில் அதிகபட்சம் 20 சதவீதம் Variable Pay ஆக இருக்கும். அதேநேரம் மூன்லைட்டிங்கிற்கு […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. 87 திருமணங்களா?…. பிளேபாய் கிங்கின் 88-ஆவது கல்யாணம்…!!!

இந்தோனேசியா நாட்டில் 61 வயதான முதியவர் 88-ஆம் முறையாக திருமணம் செய்யவுள்ளார். இந்தோனேசிய நாட்டின் ஜாவாவில் இருக்கும் மஜலெங்கா பகுதியில் வசிக்கும் கான் என்ற நபர் “பிளேபாய் கிங்” என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு தான் 88-ஆம் தடவையாக திருமணம் நடக்கவுள்ளது. தன் 14 வயதில் அவர் முதல் திருமணத்தை செய்திருக்கிறார். அந்த பெண்ணிற்கு  இவரை விட இரண்டு வயது அதிகம். இரண்டே ஆண்டுகளில் இவர்கள் விவாகரத்து செய்து விட்டனர். அங்கிருந்து ஆரம்பமானது தான் கல்யாணம் மன்னனின் திருமண […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

7 பிள்ளைகள் இருந்தும் என்ன பயன்…?? ஆர்.டி.ஓ அலுவலகத்தில் கண்ணீருடன் தஞ்சமடைந்த மூதாட்டி…. அதிர்ச்சி சம்பவம்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நியூஹோப் பகுதியில் கணவனை இழந்த முத்தம்மா(81) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவருக்கு 3 மகன்களும், 4 மகள்களும் இருக்கின்றனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். நேற்று முத்தம்மா கூடலூர் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு சென்று வயதான காலத்தில் பிள்ளைகள் யாரும் கவனிக்காததால் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாக கண்ணீர் மல்க பொதுமக்களிடம் கூறி அழுதுள்ளார். அப்போது ஆர்.டி.ஓ இல்லாததால் கிராம நிர்வாக அலுவலர் சாம் சுந்தரி, கிராம உதவியாளர் சதீஷ் ஆகியோர் மூதாட்டியிடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஷாட் ஓகே!… அடுத்து என்ன..? பிரதமரை வாழ்த்திய விஷாலை பங்கமாய் கலாய்த்த பிரகாஷ் ராஜ்…. வைரல் பதிவு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்களின் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்த விஷால் தற்போது லத்தி மற்றும் மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் தன்னுடைய குடும்பத்துடன் காசிக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றார். அதன்பின் நடிகர் விஷால் பிரதமர் மோடியை பாராட்டி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீங்கள் வணிகம் செய்பவரா….?? “இதனை” பெறுவது கட்டாயம்…. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியின் எச்சரிக்கை….!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் நேற்று உணவு பொருள் வணிகர்களுக்கான உரிமம் பதிவு மற்றும் புதுப்பித்தல் முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் நிருபர்களிடம் கூறியதாவது, வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களுக்கு கண்டிப்பாக ரசீது வழங்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் உபயோகப்படுத்த கூடாது. இதனை அடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பைகள் மற்றும் குட்காவை வணிகர்கள் விற்பனைக்கு வைக்கவும், சாப்பிடும் உணவு பண்டங்களின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“உண்மை தெரியவரும்” மர்மமாக இறந்து கிடந்த சிறுத்தை….. வனத்துறையினரின் தகவல்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓவேலி பேரூராட்சி பாரதிநகர் பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். ஆனால் சிறுத்தை இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. இதனை அடுத்து முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் சிறுத்தையின் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, இறந்து […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

சற்றுமுன்…! புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை..!!

புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக பெய்து வருகிறது. அதன்படி புதுச்சேரியில் இன்று அதிகாலை முதல் கனமழை மாநிலம் முழுவதும் பெய்து வருகின்றது. நகரப் பகுதி, கிராம பகுதியில் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக புதுச்சேரியில் முக்கிய வீதிகள், முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி பொது மக்களுடைய வாகனம் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் நாளை (04.11.2022) […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான போட்டி…. சாதனை படைத்த ஓசூர் அரசு பள்ளி மாணவிகள்…. குவியும் பாராட்டுகள்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே கைப்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர் மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் 14 வயதிற்குட்பட்ட பிரிவிலும், 17 வயதிற்குட்பட்ட பிரிவிலும் ஓசூர் காமராஜர் காலணியில் இருக்கும் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைபள்ளி மாணவிகள் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். இதன் மூலம் மாணவிகள் இந்த மாதம் இறுதியில் நடைபெற உள்ள மாநில […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை…. இன்ஜினியரிடம் 5 லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!!

சாப்ட்வேர் இன்ஜினியரிடம் 5 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியில் சாப்ட்வேர் இன்ஜினியரான கோசிக் ராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைனில் வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் கோசிக் ராமை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட சிலர் ஹைதராபாத்தை தலையிட தலைமை இடமாகக் கொண்டு தனியார் நிறுவனம் செயல்படுவதாக தெரிவித்துள்ளனர். அதில் 1 லட்ச ரூபாய் சம்பளத்தில் மேலாளர் பதவி தருவதாக […]

Categories
தேசிய செய்திகள்

இனி கோவா கடற்கரையில் குப்பை போடாதீங்க!…. மீறினால் இவ்வளவு ரூபாய் அபராதம்?…. மாநில அரசு எச்சரிக்கை…..!!!!

கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த மாநில அரசு அண்மையில் வெளியிட்ட செய்திகுறிப்பில் “கோவா கடற்கரைகளை சுத்தமாக பராமரிக்கவும், பயணியர் பாதுகாப்பாக உணரவும் பல சட்ட விதிகளை நடைமுறைபடுத்த அரசு முடிவுசெய்துள்ளது. அந்த வகையில் கோவா கடற்ரைகளில் திறந்த வெளியில் சமைக்க மற்றும் வாகனங்களை ஓட்டுவதற்கு தடைவிதிக்கப்படுகிறது. கடற்கரை பகுதிகளில் குப்பை போட்டாலோ, கண்ணாடி பாட்டில்களை உடைத்தாலோ கடும் அபராதமானது விதிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதனை தவிர்த்து சுற்றுலா பயணியருக்கு பல சேவைகள் […]

Categories
சினிமா

“ரூ. 2 கோடிக்கு நடிச்சிட்டு, ரூ. 200 கோடி கேக்கிறாரு”…. படம் ஓடலனா சம்பளத்த குறைங்க… அமீர்கானை விமர்சித்த நடிகை….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமீர்கான். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான லால் சிங் தத்தா திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இதற்கு காரணம் அமீர்கானின் சர்ச்சை பேச்சு தான். அதாவது இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது என்று ஒரு பேட்டியில் கூறினார். இதை காரணம் காட்டி தான் இந்தி ரசிகர்கள் அமீர்கானின் படத்தை புறக்கணித்தனர். இது குறித்து தற்போது பிரபல நடிகை கங்கனா ரணாவாத் பேசியுள்ளார். அவர் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே கவனம்…! வீட்டில் கிளி வளர்த்தால்…… 6 மாத சிறை தண்டனை….. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

கோவை மற்றும் அதனுடைய சுற்றுவட்டார பகுதிகளில் மக்களிடையே கிளி வளர்ப்பு அதிகரித்து வருகிறது. ஆனால் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் பட்டியலில் கிளி நான்காவது இடத்தில் உள்ளது. எனவே பச்சைக்கிளிகளை வளர்ப்பதும், விற்பதும் குற்றம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் சமீப காலமாகவே ஆன்லைனிலும் நேரடியாகவும் கிளிகள் விற்பனை அதிகரித்துள்ளது. கிளியை வீட்டில் வளர்த்தால் பேசும் திறன் பெற்று அன்பாக பழகுவதன் காரணமாகவே பலரும் கிளிகள் வளர்க்க விரும்புகிறார்கள். இதனால் இளியை பிடித்து இறகுகளை வெட்டி துன்புறுத்தி வீட்டில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தேசிய அளவிலான அபாகஸ் போட்டி…. சாதனை படைத்த குமாரபாளையம் மாணவர்…!!!

சென்னையில் உள்ள ரயினோ பிரைன் அமைப்பு சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான அபாகஸ் போட்டியில் 6 முதல் 14 வயதிற்குட்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட போட்டியில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் வசிக்கும் மாணவர் ஹரிஹரன் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். ஹரிஹரன் ஏற்கனவே மாநில அளவிலான போட்டியில் 2 முறையும், தேசிய அளவிலான போட்டியில் 2 முறையும் சாம்பியன் பட்டம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : தென்னாப்பிரிக்கா 108க்கு ஆல் அவுட்…! டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 33 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி..!!

தென்னாப்பிரிக்க அணியை டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 33 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று இந்திய நேரப்படி 1:30 மணிக்கு பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்க அணிகள் மோதியது. சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய முகமது ரிஸ்வான் 4 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து பாபர் அசாமுடன் முகமது ஹாரிஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க வருத்தப்படாத தீங்க….! ஒருவேளை அவரே “குரங்கா” இருக்கலாம்….. ஆறுதல் சொன்ன அமைச்சர்…!!!!

கடந்த மாதம் 27ஆம் தேதி பாஜகவினர் தமிழக அரசு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கோவை கார் வெடிப்பு சம்பந்தம் குறித்து உங்களிடம் சில ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்தீர்கள். அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கண்டனம் தெரிவித்ததோடு தேசிய புலனாய்வு முகைமை முதலில் விசாரிக்க வேண்டிய நபர் நீங்கள் தான் என்று கூறி இருக்கிறாரே? என்று […]

Categories
மாநில செய்திகள்

“சாத்தான்குளம் லாக்கப் கொலை வழக்கு”…. கூட்டு சதியா?…. சிபிஐ தாக்கல் செய்த புது மனு….!!!!!

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீது கூட்டுசதி பிரிவில் வழக்குபதிவு செய்ய அனுமதி கோரி சிபிஐ புது மனுவை தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து 120 பி மற்றும் விடுபட்ட பிரிவுகளின் கீழ் குற்றசாட்டு பதிவுசெய்ய அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ புது மனுவை இன்று தாக்கல் செய்துள்ளது. சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுதும் பரவலாக பேசப்பட்டது. இவ்வழக்கு ஆரம்பத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்…. 3 மாதங்களுக்கு கவனமா இருங்க…. சுகாதாரத்துறை திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 4,806 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இனி வரும் நாட்களில் பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் மூன்று மாதங்கள் கவனம் தேவை என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இனி வரும் நாட்களில் பாதிப்பு மேலும் அதிகரிக்க கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மாநிலம் முழுவதும் அடுத்த மூன்று மாதங்களுக்கு டெங்கு பாதிப்பு அதிகமாக இருக்கும்.இதனை கட்டுப்படுத்த பல துறைகளுடன் ஒருங்கிணைந்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவையான இடங்களில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேற லெவல் போலீஸ்…. மாயமான குழந்தை 1 மணி நேரத்தில் மீட்பு…. துப்பு துலங்கியது எப்படி….? பரபரப்பு….!!!!

வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை கடத்திச் சென்ற ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை சிட்லப்பாக்கம் திருமலை நகரில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெருங்களத்தூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 4 வயதில் வர்ஷா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் வர்ஷா வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருக்கும் போது ஆட்டோவில் வந்த மர்ம நபர் ஒருவர் சிறுமியை கடத்தி சென்றுள்ளார். இதனை பார்த்த அங்குள்ள குழந்தைகள் வர்ஷாவின் […]

Categories
தேசிய செய்திகள்

அவங்கள தப்பவிடக் கூடாது!…. மத்திய ஊழல் தடுப்பு அமைப்புக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்….!!!!

ஊழல் விழிப்புணர்வு வாரத்தையொட்டி சிவிசி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது, ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு பொறுப்பேற்க வைக்கும் அடிப்படையில் சமுதாயம் செயல்பட வேண்டும். இதற்குரிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். ஊழல்வாதிகள் என்று நிரூபிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் எழுவதை பார்க்கிறோம். இதனிடையில் தங்களை நேர்மையானவர்கள் என அழைத்து கொள்பவர்கள், ஊழல்வாதிகளை சென்றுபார்ப்பதும், அவர்களுடன் புகைப்படம் எடுப்பதற்கும் வெட்கப்படுவது கிடையாது. இந்நிலை இந்திய சமுதாயத்திற்கு நல்லதல்ல. ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக பேசும் சிலபேர், அவர்களுக்கு விருது தரவேண்டும் […]

Categories
Tech

அடடே சூப்பர்…. வாட்ஸ் அப்பில் இப்படி ஒரு வசதியா?…. இனி சாட்டிங் ரொம்ப ஈஸி…. பயனர்களுக்கு குட் நியூஸ்….!!!!

உலகம் முழுவதும் கோடி கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் தங்கள் பயனர்களின் வசதிக்காக வாட்ஸப் நிறுவனம் அவ்வப்போது பல புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது . அதனால் வாட்ஸ் அப் பயன்படுத்துவது தற்போது மேலும் எளிதாகி வருகிறது. அண்மையில் whatsapp குழுவில் சேர்க்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 256 ஆக இருந்த நிலையில் 512 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கை மேலும் உயர்த்தப்பட்டு இனி whatsapp குரூப்பில் அதிகபட்சமாக 1024 உறுப்பினர்கள் வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பதிவுத்துறை ஆவண எழுத்தர்களுக்கு…. அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தற்போது ஆன்லைன் மூலமாக பத்திரப்பதிவு முறை நடைபெற்ற வருகின்றது.அதன் மூலமாக பத்திரப்பதிவு சார்ந்த வேலைகள் விரைவாக முடிக்கப்பட்டு வருகின்றன.அண்மையில் போலி மற்றும் மோசடி வகையிலான பத்திரப்பதிவை தடுக்கும் வகையில் புதிய சட்ட திருத்தம் செய்யப்பட்டது. அவ்வகையில் போலி பத்திரப்பதிவுகளை பதிவாளர் ஆய்வு செய்து அதனை ரத்து செய்யும் அதிகாரம் உள்ளது.நிலையில் தற்போது புதிய மாற்றமாக தேர்வுகள் நடத்தி அதன் மூலம் ஆவண எழுத்தர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆவண எழுத்தர் உரிமம் வழங்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. கால அவகாசம் நீட்டிப்பு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சிறுபான்மையினர் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி மையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக எஸ் எஸ் பி ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.தகுதியான மாணவர்கள் பள்ளி படிப்புக்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரையும் பள்ளி மேற்படிப்புக்கு இந்த மாதம் அக்டோபர் 31ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க…. தீவிரம் காட்டும் மத்திய அரசு…. சூப்பர் நியூஸ்….!!!!

எப்படியாவது அரசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்று பல லட்சம் மாணவர்கள் அரசு வேலைக்காக தீவிரமாக படித்து வருகிறார்கள். இதில் கடந்த 2014 ஆம் வருடம் தேர்தல் வாக்குறுதியின் படி பிரதமர் மோடி ஒரு கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். ஆட்சி அமைந்து பல வருடங்கள் ஆகிய இன்னும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று எதிர் கட்சிகள் விமர்சித்து வந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் ரோஸ்கார் மேளா என்ற வேலைவாய்ப்பு கண்காட்சி மூலமாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மாடித்தோட்டம் அமைக்க 50 சதவீதம் மானியம்…. உடனே போங்க…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

சேலம் மாவட்டத்தில் 50% மானிய விலையில் 450 ரூபாய்க்கு மாடி தோட்டம் அமைப்பதற்கான தொகுப்புகள் தோட்டக்கலைத்துறை மூலம் விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் விவரங்களுக்கு ஆதார் அட்டை நகல்,இரண்டு புகைப்படங்கள் மற்றும் 450 ரூபாய் ஆகியவற்றை அந்தந்த வட்டாரங்களில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களில் கொடுத்து மாடி தோட்ட தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார். மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் மாடித்தோட்டம் அமைப்பதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். இதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… அட!… ஒரே மேடையில் தலைவியுடன் ஜி.பி முத்து…. என்னம்மா கலக்குறாரு…. வேற லெவல் போங்க….!!!!

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி புயலாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோன். இவர் தற்போது தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் காமெடி ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ள நிலையில், அறிமுக இயக்குனர் யுவன் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சசிகுமார் மற்றும் வீரமணி ஆகியோர் இணைந்து தயாரிக்க, நடிகர்கள் சதீஷ், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஜி.பி முத்து, ரமேஷ் திலக், நடிகை தர்ஷா குப்தா  ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விவசாயிகளை…. இதை வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது….. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!

விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்களோடு இணைப்பொருட்களையும் கட்டாயப்படுத்தி வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜே மேகநாதன் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டத்தில் யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் ஆகியவை தனியார் மட்டும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரசு நிர்ணயம் செய்த விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மானிய விலையில் பிஓஎஸ் இயந்திரங்கள் […]

Categories
மாநில செய்திகள்

திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைமேடை கட்டணம் குறைவு…? வெளியான தகவல்…!!!!

திருச்சி ரயில்வே நிலையத்தில் ரூ.20 என உயர்த்தப்பட்ட நடைமேடை கட்டணம் தற்போது 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. பண்டிகை நாட்கள் முடிவடைந்து இருக்கின்ற நிலையில் திருச்சி ரயில்வே கூட்டத்தில் நடைமேடை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பண்டிகை காலங்களில் ரயில் நிலையங்களில் பயணிகள் எளிதாக பயணம் மேற்கொள்ளும் விதமாக வழி அனுப்ப வருபவர்களின் கட்டணத்தை கட்டுப்படுத்த நடைமேடை அனுமதி கட்டணத்தை அக்டோபர் 4ஆம் தேதி முதல் ரயில்வே நிர்வாகம் இருபது ரூபாயாக உயர்த்தியுள்ளது. இந்த நிலையில் இந்த நடைமேடை கட்டண […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

இவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து…? இனி பொருள் வாங்கவே முடியாது…. மத்திய அரசு அதிரடி…!!!

ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக நியாய விலை கடைகள் மூலமாக இலவச அரிசி, மலிவு விலையில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த பொருட்கள் அனைத்தும் கிடைக்கும். இந்த நிலையில் நிறைய பேர் தவறாக பயன்படுத்துவதாக புகார்கள் வந்து கொண்டிருக்கிறன. அரிசி, கோதுமை ஆகியவற்றை மலிவு விலைக்கு வாங்கி அவற்றை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தகுதி உள்ள பலருக்கும் ரேசன் உதவிகள் கிடைக்காமல் போகின்றன. இவ்வாறு தகுதியில்லாதவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்… “இங்க கல்யாணம் பன்னா வளைகாப்பிற்கு மண்டப கட்டணம் இல்லை”..? இணையத்தில் வைரலாகும் வித்தியாசமான விளம்பரம்…!!!!!

கடந்த சில வருடங்களாகவே தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே தற்போது விற்கப்படும் பொருட்களின் சலுகைகள் மட்டுமே அதனை வாங்கும் பொது மக்களின் நோக்கமாக மாறி உள்ளது. அரசியல் கட்சிகளோ தாங்கள் ஆட்சியை பிடிக்க நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு உபயோக பொருட்களை இலவசமாக வழங்குவோம் என தேர்தல் வாக்குறுதிகளாக அழித்து வருகின்றனர். மேலும் வலைதளங்களில் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு மக்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள் முதல் எலக்ட்ரானிக் பொருட்கள் வரை அனைத்திற்கும் சலுகைகளை அறிவித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#PAKvSA : சிட்னியில் மழை…. தென்னாப்பிரிக்காவுக்கு 5 ஓவர்களில் 73 ரன்கள் தேவை….!!

சிட்னியில் மழை பெய்ததால் தென்னாப்பிரிக்காவுக்கு 5 ஓவர்களில் 73 ரன்கள் தேவைப்படுகிறது. டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று இந்திய நேரப்படி 1:30 மணிக்கு பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்க அணிகள் மோதியது. சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய முகமது ரிஸ்வான் 4 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து பாபர் அசாமுடன் முகமது ஹாரிஸ் ஜோடி சேர்ந்தார். இதில் அதிரடியாக […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் தாயார் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி….!!!!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வயது முதிர்வின் காரணமாக ஏற்பட்ட உடல்நல குறைவினால் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை கோபாலபுரம் இல்லத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ பரிசோதனைக்காகவும், சிகிச்சைக்காகவும் அவ்வப்போது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகிறார். கடந்த மார்ச் மாதம் நுரையீரல் தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தொடர் பரிசோதனைக்காகவும் சிகிச்சைக்காகவும் அதே மருத்துவமனைக்கு மீண்டும் தற்போது அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் l. இந்த நிலையில் தன்னுடைய […]

Categories
Tech டெக்னாலஜி

அடடே! சூப்பர்….‌ ரூ. 40,000 மதிப்புள்ள GOOGLE ஸ்மார்ட் போனுக்கு அசத்தல் தள்ளுபடி….. வெறும் ரூ. 13,000 மட்டும்தான்… உடனே முந்துங்கள்….!!!!!

பிரபலமான கூகுள் pixel 6A ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் டிஸ்ப்ளே நல்ல முறையில் இருப்பதால் பல வாடிக்கையாளர்கள் போனை வாங்க வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால் போனில் விலை 40 ஆயிரம் ரூபாய் இருந்தால் விரும்பிய வாடிக்கையாளர்களால் வாங்க முடியாத சூழல் இருந்தது. ஆனால் தற்போது பிளிப்கார்ட்டில் சூப்பர் ஆஃபர் போடப்பட்டுள்ளது. இந்த ஆஃபரில் நீங்கள் google ஸ்மார்ட்போனை வெறும் 13 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம். ஆஃபரில் 40,000 மதிப்புள்ள ஸ்மார்ட் போனின் விலை […]

Categories
Tech டெக்னாலஜி

“ஏர்டெல்” வாடிக்கையாளர்களே!…. உங்களுக்கான அருமையான ரீசார்ஜ் திட்டம்…. மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க….!!!!!

பிரபலமான தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக ஏர்டெல் இருக்கிறது. ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் 5 ஜி சேவையை தொடங்கிய நிலையில் 10 லட்சம் வாடிக்கையாளர்களை குறுகிய காலத்தில் பெற்றுள்ளது. இந்நிலையில் நீங்கள் ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளராக இருந்தால் ஒரு சூப்பரான ரிசார்ஜ் பிளான் பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள். இந்த திட்டத்தின் படி ரீசார்ஜ் செய்தால் குறுகிய காலத்திற்கு வேறு எந்த திட்டத்தையும் நீங்கள் மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது. ஏனெனில் ரீசார்ஜ் பலன்கள் 365 […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

இரட்டிப்பு லாபம் வேண்டுமா….? இதோ அஞ்சல் துறையின் அருமையான திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க…!!!

இந்திய தபால் துறை சார்பாக பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்று தான்  கிசான் விகாஸ் பத்திர திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும். நீங்கள் முதலீடு செய்யும் தொகை பத்து வருடங்கள் மற்றும் நான்கு மாதங்களில் இரண்டு மடங்காக மாறிவிடும். நீங்கள் பத்திரம் வாங்கிய பிறகு இரண்டரை வருடங்கள் கழித்து உங்கள் பணத்தை எடுக்க முடியும். நாட்டில் இருக்கும் […]

Categories

Tech |