Categories
உலக செய்திகள்

கனடாவில் அதிகரிக்கும் குரங்கம்மை பரவல்…. 1444 நபர்கள் பாதிப்பு…!!!

கனடா நாட்டில் மொத்தமாக சுமார் 1444 நபர்களுக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா நாட்டில் தற்போது குரங்கம்மை பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒன்பது நபர்கள் மட்டுமே கடந்த வாரத்தில் பாதிப்படைந்திருந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. மொத்தமாக 1444 நபர்கள் குரங்கு அம்மையார் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 42 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கனடா நாட்டின் நோய் எதிர்ப்பிற்கான தேசிய அறிவுறுத்தல் குழு, குரங்கம்மை தடுப்பூசியை அளிக்குமாறு பரிந்துரைத்திருக்கிறது. அந்த வகையில் இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

SBI எஃப்டி கணக்கை ஆன்லைனில் திறப்பது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!!

SBI ஆன்லைன் எஃப்டி கணக்கைத் திறப்பதற்குரிய வழிமுறைகள் குறித்து நாம் இங்கே தெரிந்து கொள்வோம். # முதலாவதாக SBI-ன் அதிகாரப்பூர்வமான வலைத்தளத்துக்கு செல்லவும். # உங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லை உள்ளிட்டு நெட் பேங்கிங்கில் லாக்இன் செய்யவும். # பின் ஹோம் பேஜ் விருப்பத்துக்குச் சென்று டெபாசிட்ஸ்கீம்ஸ் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். # இதற்குப்பின் நீங்கள் டெர்ம் டெபாசிட்டைத் தேர்ந்தெடுத்து e-FD விருப்பத்தினைத் தேர்ந்தெடுக்கவும். # அடுத்ததாக நீங்கள் திறக்க விரும்பும் FD கணக்கின் […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!… 132 வருடங்கள் பழமையான சுரங்க பாதை….. அரசு மருத்துவமனையில் கண்டுபிடிப்பு….!!!!!

மராட்டிய மாநிலம் மும்பை நகரில் பைகுல்லா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஜேஜே என்ற அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது‌. இந்த மருத்துவமனையின் கீழ் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான சர். டிஎம் பெடிட் என்ற மருத்துவமனையும் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரி வளாகத்தில் நீர்க்கசிவு ஏற்படுவதாக புகார் வந்துள்ளது. இதை சரி செய்வதற்காக சென்றபோது பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 132 ஆண்டுகள் பழமையானது […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!… போலீசார் கண்முன்னே சிவசேனா தலைவர் சுட்டுக்கொலை…. அதிர்ச்சி வீடியோ…. பஞ்சாபில் பரபரப்பு….!!!!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பகுதியில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சுதீர் கரி. இவருடைய உயிருக்கு ரவுடிகள் மற்றும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளால் ஆபத்து இருப்பதாக கூறப்பட்ட நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சுல்தான்வின் என்ற பகுதியில் உள்ள இந்து மத கோவிலில் விதிமுறைகளை மீறியதாக கூறி சுதீர் கரி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது ஒருவர் சுதீர் கரியை நோக்கி ஒருவர் ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டதில் 2 குண்டுகள் அவருடைய உடம்பில் […]

Categories
உலக செய்திகள்

“டுவிட்டரில் இருந்து நீக்கப்பட்ட ஊழியரின் கடைசி ட்வீட்”…. வைரல் பதிவு… என்னனு நீங்களே பாருங்க…‌!!!!!

உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கும் எலான்‌ மஸ்க் சமீபத்தில் twitter நிறுவனத்தை வாங்கினார். இவர் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் பதவியேற்றவுடன் நிறுவனத்தின் சிஇஓ உட்பட சில முக்கிய அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கம் செய்தார்‌. அதன்பிறகு 50 சதவீத ஊழியர்கள் டுவிட்டரில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தகவல் வெளியானது. அந்த வகையில் டுவிட்டர் நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஒரு ஊழியர் டுவிட்டரில் கடைசியாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் Bye literally […]

Categories
உலக செய்திகள்

ராஜகுடும்பத்தின் எழுதப்படாத விதியை மீறிய…. வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன்…. நடந்தது என்ன….?

பிரிட்டனில் ராஜகுடும்பத்தில் எழுதப்படாத விதிமுறையை அனைத்து உறுப்பினர்களும் கடைபிடிக்கும் போது  கேட் மிடில்டன் மீறியுள்ளார். பிரிட்டன் நாட்டில் ஸ்கார்பரோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலேயே  தொடர்புடைய இந்த சம்பவம் வியாழக்கிழமை அன்று நடந்துள்ளது. அத்துடன் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனுடன் ஒரு நபர் புகைப்படம் எடுத்துக் கொண்டது மட்டுமல்லாமல் மேலும் ஒரு எழுதப்படாத விதியை மீறியுள்ளார். அதாவது, குறித்த நபர் தடையைத் தாண்டி வேல்ஸ் இளவரசியை நெருங்கியதுடன் புகைப்படத்தின் போது கேட் மிடில்டனின் தோள் மீது […]

Categories
உலக செய்திகள்

ஜேர்மன் சேன்சலர்…. பிரபல நாட்டு ஜனாதிபதியை சந்தித்த…. காரணம் என்ன….?

சீனாவுக்குச் சென்றுள்ள ஜேர்மன் சேன்சலரான ஓலாஃப் ஷோல்ஸ், சீன ஜனாதிபதியான ஜி ஜின்பிங்கை சந்தித்துள்ளார். சீனாவின் சர்வாதிகாரப் போக்கு கடும் கண்டனங்களை எதிர் கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஜேர்மன் சேன்சலர் சீனா நாட்டிற்கு சென்றுள்ள விடயம் விமர்சனங்களை உருவாக்கி வருகிறது. மேலும் தொழில்துறையினருடன் ஷோல்ஸ் சீனா நாட்டிற்கு சென்றுள்ளதன் நோக்கமானது அந்நாட்டுடன் வர்த்தக உறவுகளை அதிகரிப்பதாகும். அதன் ஆற்றலுக்காக ஜேர்மனி பெருமளவில் ரஷ்யாவை சார்ந்துள்ளது. அந்நாடு சந்தித்த பிரச்சினைகளையும், அதாவது, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ!…. “சுவாசிக்க கூட முடியாதாம்”…. பிரின்ஸ் பட இயக்குனருக்கு இப்படி ஒரு கொடிய நோயா?… ரசிகர்கள் ஆறுதல்….!!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் அனுதீப். இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீசான சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ஹீரோயினாக நடிக்க, பிரேம்ஜி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். காமெடி ஜானரில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீசான நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் அனுதீப்க்கு ஒரு அரியவகை நோய் இருப்பதாக அவரே தற்போது கூறியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் நாட்டு பிரதமர் ஃபிட்டாக இருக்க…. இதுதான் காரணமா….? டயடின் ரகசியம் இதோ….!!!!

பிரிட்டன் நாட்டு பிரதமராக சமீபத்தில் பொறுப்பேற்று தனது பணிகளை செய்து வருகின்றார் ரிஷி சுனக். பிரிட்டன் நாட்டு பிரதமரான ரிஷி சுனக் தினமும் காலையில் எத்தனை மணிக்கு எழுவார், அவர் காலை உணவாக என்ன சாப்பிடுவார் மற்றும் அவர் டயட் ரகசியங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியன. இது குறித்து அவர் கடந்தாண்டு podcast நிகழ்ச்சியில் கூறியதாவது. “நான் காலை 6-7 மணிக்குள் எழுந்திருக்கிறேன் என்றார். பின்னர் தனது வொர்க்அவுட் முறையையும் தனது உடல் வடிவத்தை எவ்வாறு […]

Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. எலான் மஸ்க்கின் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட “ஸ்டீல் சுரங்கப்பாதை தகர்ப்பு”…. வெளியான தகவல்….!!!!

எலான் மஸ்க்கின் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை அகற்றப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள ஸ்பேஸ்-எக்ஸ் தலைமையகத்துக்கு அருகில் உள்ள ஜாக்  நார்த்ரோப் அவென்யூவில்  ஒரு மைல் நீளமும், 12 அடி அகலமும் கொண்ட ஸ்டீல் சுரங்கப்பாதை எலான் மஸ்க்கின் நிறுவனத்தால் அமைக்கப்பட்டது. இந்நிலையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல், மாசு, செலவு போன்ற காரணங்களால் போக்குவரத்து என்பது எரிச்சலூட்டுவதாகவும், நேரத்தை கரைப்பதாகவும் மாறிவரும் சூழ்நிலையில் பேருந்துகள், கார்கள், ரயில், விமானம் போன்றவற்றைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் உந்துவிசையை அடிப்படையாகக் கொண்ட அடுத்த […]

Categories
உலக செய்திகள்

இலவச உணவை நாடும் கனேடியர்…. உதவும் கரங்களுக்கு சில தகவல்கள் இதோ….!!!!

கனடாவில் இலவச உணவை நாடுவோரின் எண்ணிக்கையானது  அதிகரித்து கொண்டு வருகின்றது. இந்நிலையில், உணவு வங்கிகளை அணுகுவது எப்படி மற்றும் உணவு வங்கிகளுக்கு நன்கொடை செலுத்துவது எப்படி என்பது போன்ற கேள்விகளும் பலரிடம் எழுகின்றது. உங்களுக்கு அருகிலுள்ள உணவு வங்கியை நாட விரும்புபவராக நீங்கள் இருந்தால் கீழ்க்கண்ட இணைப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். https://foodbankscanada.ca/find-a-food-bank. இதனை அடுத்து தேவையிலிருப்போருக்கு உதவுவதற்காகவே வடிவமைக்கப்பட்டவைதான் உணவு வங்கிகள். எனவே இலவச உணவுப் பொருட்களை வழங்குகின்றன. ஆனாலும், யார் இந்த உணவு வங்கிகளிலிருந்து உதவி […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலத்தில் இந்த வாகனங்கள் நுழைய தடை…. விதியை மீறினால் ரூ.20,000 அபராதம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.காற்றின் தன்மை மிக மோசமாக இருப்பதால் இணை நோய் உள்ள முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்லாமல் பல மருத்துவமனைகளில் குழந்தைகள் சுவாச கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனால் அரசு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி வாகனங்கள் மூலமாக ஏற்படும் மாசுபாட்டை குறைப்பதற்கு மக்கள் வீட்டிலிருந்தே வேலை […]

Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க புதிய வசதி…. அரசு அதிரடி….!!!!

ஓய்வூதியத்தாளர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியம். அப்படி செய்தால் மட்டுமே பென்ஷன் முறையாக வந்து சேரும். இந்நிலையில் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களின் வாழ்நாள் சான்றிதழை நேரடியாக வந்து சமர்ப்பிப்பதில் இருக்கும் சிக்கலை தவிர்க்கும் விதமாக ஓய்வூதியதாரர்களின் வசதிக்காக சென்னை துறைமுக ஆணையம் புதிய ஏற்பாடை செய்துள்ளது. அதன்படி ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் தங்களின் ஆயுள் சான்றிதழை கணினி மூலமாக மின்னணு முறையில் பதிவு செய்யலாம். அதற்காக www.jeevanpraman.gov.in  […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கூடலூரில் தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழி ஏற்பு”…. தூய்மை பாரதம் குறித்து பேச்சு….!!!!!

கூடலூர் காபி வாரியம் சார்பாக தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழி எடுக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் காபி வாரியம் சார்பாக மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் தொடக்க விழா அலுவலக வளாகத்தில் நடந்தது. இவ்விழாவிற்கு காபி வாரியம் முதுநிலை தொடர்பு அலுவலர் ஜெயராமன் தலைமை தாங்க உதவி அலுவலர் ராமஜெயம் வரவேற்றார்‌. இதன்பின் கூடலூர் அரசு கல்லூரி முதல்வர் சண்முகம் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அர்ஜுனன் உள்ளிட்டோர் தூய்மை பாரதம் குறித்து […]

Categories
மாநில செய்திகள்

412 மையங்களில் இலவச நீட் பயிற்சி…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை தொடங்குவது தொடர்பான அறிவிப்பை பள்ளி கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது . அதன்படி போட்டி தேர்வுகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11,12ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு மூன்றாவது வார சனிக்கிழமைகளில் இருந்து ஒவ்வொரு வார சனிக்கிழமைகளிலும் நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. போட்டி தேர்வுக்கு பயிற்சி பெற விருப்பமுள்ள 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 11ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் ஒன்றியத்திற்கு அதிகபட்சம் […]

Categories
உலக செய்திகள்

சீனாவால் அனுப்பப்பட்ட ராக்கெட்…. பசிபிக் பெருங்கடலில் விழுந்த பாகங்கள்…!!!

சீனாவால் விண்ணில் செலுத்தப்பட்ட 23 ஆயிரம் கிலோ எடை உடைய ராக்கெட்டினுடைய பாகங்கள் பசிபிக் பெருங்கடலில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டின் கட்டுமான பணியில் இருக்கும் டியான்காங் விண்வெளி நிலையத்திற்குரிய என்னும் உபகரணங்களின் தொகுதியை எடுத்துச் செல்ல சுமார் 178 அடிகள் நீளம் மற்றும் 23 ஆயிரம் கிலோ எடையில் ராக்கெட் ஒன்று கடந்த மாதம் 31ம் தேதி அன்று விண்ணிற்கு அனுப்பப்பட்டது. அது புவியின் வட்ட பாதையில் புகுந்து உபகரணங்களை அனுப்பியது. அதனைத்தொடர்ந்து ராக்கெட்டின் மீதம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பலத்த போலீஸ் பாதுகாப்புடன்…. விருதாச்சலத்தில் பிரபல மருத்துவமனை கட்டிடம் இடிப்பு…. அதிரடி நடவடிக்கை….!!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள 4 1/2 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் முல்லா ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள், 66 கடைகள் மற்றும் அலடி ரோட்டில் இருக்கும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 95 கடைகள் மற்றும் வீடுகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி விருதாச்சலம் தாசில்தார் தனபதி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் விருதாச்சலம் பேருந்து நிலையம் சுற்றுச்சுவரை ஒட்டி இருக்கும் பிரபல மருத்துவமனையை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு விருதாச்சலம் உதவி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடர் மழையால் இடிந்த வீடு…. இடிபாட்டிற்குள் சிக்கி மூதாட்டி பலி…. போலீஸ் விசாரணை…!!!

கனமழைக்கு தாக்கு பிடிக்காமல் வீட்டு சுவர் இடிந்ததால் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சைமகத்துவாழ்க்கை கிராமத்தில் ஓய்வு பெற்ற கிராம உதவியாளரான குமரவேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி கலியம்மாளுடன்(60) கூரை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக எதிர்பாராதவிதமாக நேற்று வீட்டு சுவர் இடிந்து விழுந்ததால் மூதாட்டி இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார். இதனையடுத்து வெளியே வர முடியாமல் சிரமப்பட்ட மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
Tech டெக்னாலஜி

ஏர்டெல் பிளாக் அறிமுகம் செய்யும் புது ரீசார்ஜ் திட்டங்கள்…. அதுவும் ஆஃப்ரில்…. இதோ முழு விபரம்….!!!!

Airtel நிறுவனம் ஏர்டெல்பிளாக் என்ற அம்சத்தின் கீழ் இலவச ஓடிடி சந்தாவுடன் போஸ்ட் பெய்டு, பிராட்பேண்ட் மற்றும் டிடிஹெச் அணுகளுக்கான நன்மைகளை அளிக்கிறது. முன்பே ப்ரீபெய்ட் (அ) போஸ்ட்பெய்டு இணைப்பில் பைபர், டிடிஹெச் ஆகிய சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு Airtel பிளாக் வழங்குகிறது. Airtel பிளாக் அதன் வாடிக்கையாளர் உடன் நல்லுறவை கொண்டிருக்கிறது. அத்துடன் பராமரிப்பு, தவறுகள் மற்றும் சிக்கல்களைத் தீர்க்க முன்னுரிமை வழங்குகிறது. Airtel பிளாக், ஏர்டெல் வாடிக்கையாளர்களை டிடிஹெச், லேண்ட்லைன், ஃபைபர் மற்றும் மொபைல் இணைப்பு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை…. தாயின் பரபரப்பு புகார்…. கணவர், மாமியார் அதிரடி கைது…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நந்திமங்கலம் கிராமத்தில் விஜய்(26) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் விஜயலட்சுமி(24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் விஜய் ஈரோட்டில் தங்கி அங்குள்ள டெக்ஸ்டைல் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சொந்த ஊரான நந்திமங்கலத்திற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மோசடி வழக்கு…. “தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும்”…. சினேகனுக்கு முன் ஜாமீன்…!!!!!

பாடலாசிரியர் சினேகனுக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. பாடலாசிரியர் சினேகன் தான் நடத்தி வரும் சினேகம் அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி நடிகை ஜெயலட்சுமி பணம் வசூலிப்பதாக காவல் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதுபோல நடிகை ஜெயலட்சுமியும் தான் தனியாக அறக்கட்டளை நடத்தி வருவதாகவும் அதன் மூலம் வசூலிக்கப்படும் பணத்தில் பல சமூகப் பணிகளை செய்வதற்காக பயன்படுத்துவதாகவும் எனது புகழுக்கு களங்கம் விளைவிக்க சினேகன் பொய் புகார் தெரிவிப்பதாக புகார் கொடுத்தார். சினேகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

“கர்ப்பிணி பெண் 2 குழந்தைகளுடன் பலியான விவகாரம்”….. மருத்துவர்களை தண்டிக்க புதிய சட்டம்…. அமைச்சர் தகவல்….!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள துமகூரு என்ற பகுதியில் தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த கஸ்தூரி என்ற நிறைமாத கர்ப்பிணி பெண் வசித்து வந்துள்ளார். இந்த பெண்மணிக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக கஸ்தூரியின் கணவர் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார். அந்த சமயத்தில் கஸ்தூரி கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவருக்கு இரட்டை ஆண் குழந்தை வயிற்றில் இருந்துள்ளது. தன்னுடைய கணவர் இல்லாததால் வயிற்றில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 18 பேர் மீது குண்டாஸ்..!!

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 18 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 18 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை 408 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், நன்னடத்தை காரணமாக பிணையில் வந்த பின் மீண்டும் குற்ற செயலில் ஈடுபட்டதாக 7 பேர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“போலியான குறுந்தகவல்” மூலம் டாக்டரிடம் 4 3/4 லட்ச ரூபாய் மோசடி…. சைபர் கிரைம் போலீஸ் அதிரடி…!!!!

தர்மபுரியைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் கே.ஒய்.சி அப்டேட் செய்ய வேண்டும் எனவும், இல்லையென்றால் வங்கி கணக்கு முடக்கப்படும் எனவும் டாக்டரின் செல்போனிற்கு குறுந்தகவல் வந்தது. இதனை நம்பிய டாக்டர் குறுந்தகவலில் இருந்த லிங்கை கிளிக் செய்து, வங்கி கணக்கு விவரம் மற்றும் ஓ.டி.பி எண் ஆகியவற்றை பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்தில் வங்கிக் கணக்கிலிருந்து 4 லட்சத்து 70 ஆயிரத்து 829 ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாமியார் வீட்டில் திடீர் சோதனை…. 300 கிலோ எடையுடைய சிலை மீட்பு…. போலீஸ் அதிரடி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் பேரூர் பைபாஸ் சாலையில் பாஸ்கர சுவாமிகள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஜோதிடம் பார்த்து வருகிறார். இவரது வீட்டில் முருகர் சிலை இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தி 4 அடி உயரமுள்ள முருகர் சிலையை மீட்டனர். இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

ஆபாச நடனம் கூடாது…! கோவில் விழாவில் கரகாட்ட நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு விதித்து கோர்ட் அனுமதி.!!

மதுரை மாவட்டம் மேலப்பட்டி கிராமத்தில் கோவில் விழாவில் கரகாட்ட நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடுகளுடன் உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கி உள்ளது. மதுரை மாவட்டம் மேலப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் விழாவில் கரகாட்ட நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, கரகாட்ட நிகழ்ச்சியில் ஆபாச நடனமோ, இரட்டை அர்த்த பாடல்களோ இடம் பெறக் கூடாது. கரகாட்டத்தில் நாகரீகமான உடைகளை அணிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கதை திருட்டு…. பேரரசு படம் காப்பியா?…. இயக்குனர் அட்லிக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்..!!

கதை திருட்டு விவகாரத்தில் இயக்குனர் அட்லிக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தற்போது அட்லி இயக்கத்தில் ஷாரூக் கான் நடித்து வரும் ஜவான் திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அட்லி எடுத்து எடுத்து வரும் ஜவான் திரைப்படத்தின் கதையானது பேரரசு திரைப்படத்தின் கதை எனக் கூறி அவர் மீது ‘செவன்த் சேனல் மாணிக்கம்’ என்பவர் புகார் அளித்திருந்தார். அதாவது, பேரரசு திரைப்படத்தின் கதையை தற்போது அப்படியே ஜவான் என்ற பெயரில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெயிலில் இருந்து வந்த பிறகு….. மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுக்கும் நடிகர் அர்னவ்….. வைரல் பதிவு…..!!!!!

சன் டிவி மற்றும் விஜய் டிவிகளில் ஒளிபரப்பான சீரியல்களின் மூலம் பிரபலமானவர் நடிகர் அர்னவ். இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், திவ்யா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். கடந்த 5 வருடங்களாக லிவிங் டூ‌ கெதரில் இருந்த திவ்யா மற்றும் அர்னவ் திருமணம் செய்து கொண்ட நிலையில், செல்லம்மா தொடரில் நடித்து வரும் ஹர்ஷிதாவுக்கும் அர்னவுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாக கூறி திவ்யா மற்றும் அர்னவுக்கிடையே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“லவ் டுடே ” படம்…. முதல் நாளில் வசூலை அள்ளி குவித்து சாதனை…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

கோமாளி திரைப்படத்தை அடுத்து பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் லவ் டுடே. இவர் இயக்குனராக மட்டுமின்றி இந்த படத்தின் வாயிலாக ஹீரோவாகவும் வெள்ளித் திரையில் அறிமுகமாகி இருக்கிறார். இந்த படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகிபாபு உட்பட பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கின்றனர். நேற்று வெளியாகிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூபாய்.4.5 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! நம்பவே முடியல! நடிகர் விஜய் போல் அப்படியே உறிச்சு வச்ச மாதிரி இருக்காங்க!…. வெளியான வைரல் புகைப்படம்…..!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் இப்போது வாரிசு படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் முதல்பாடலான ரஞ்சிதமே இன்று வெளியாகிறது. வரும் 2023 பொங்கலுக்கு வெளியாகவுள்ள இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கின்றனர். வாரிசு திரைப்படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படம் தாம் தளபதி 67.   இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ் திரையுலகில் உச்சத்தில் […]

Categories
உலக செய்திகள்

இந்திய மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள்…. புகழ்ந்து தள்ளிய புடின்…!!!

ரஷ்ய நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின், தங்கள் நாட்டின் ஒற்றுமை நாளில் இந்தியாவை புகழ்ந்திருக்கிறார். ரஷ்யா, சுமார் 8 மாதங்களுக்கு மேலாக உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், வருடந்தோறும் நவம்பர் மாதம் நான்காம் தேதி அன்று ரஷ்ய நாட்டின் ஒற்றுமை தினம் கடைபிடிக்கப்படும். அதன்படி நேற்று ஒற்றுமை தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்ததாவது, “இந்திய நாட்டை பாருங்கள், அங்கு உள்நாட்டு வளர்ச்சிக்குரிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. “தலைவர் 170” படத்தில் பல வருடங்களுக்குப் பிறகு இணையும் மாஸ் நடிகர்கள்…. உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் யோகி பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு பிறகு ரஜினியின் 170 மற்றும் 171-வது திரைப்படங்களை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் தலைவர் 170-வது படத்தை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முகத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்த தொழிலாளி…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்… போலீஸ் விசாரணை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணபதி ராஜ வீதியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 14 வயதுடைய மகன் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான வெங்கடேஷ் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் போதையில் சாலையில் நடந்து செல்பவர்களிடமும் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் வெங்கடேஷின் மனைவி தனது மகனுடன் ராமநாதபுரத்தில் இருக்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏன் என்னை காதலிக்க மாட்டாய்…?? மாணவியை தாக்கிய கல்லூரி மாணவர்…. போலீஸ் அதிரடி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னவேடம்பட்டியில் இருக்கும் கல்லூரியில் 20 வயதுடைய மாணவி படித்து வருகிறார். அதே கல்லூரியில் படிக்கும் சூரிய பிரகாஷ் என்ற மாணவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாணவியிடம் தனது காதலை வெளிப்படுத்தி தொந்தரவு செய்துள்ளார். ஆனால் மாணவி காதலை ஏற்காததால் சூரிய பிரகாஷ் அவரை பின்தொடர்ந்து சென்று காதலிக்குமாறு தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது சகோதரரிடம் கூறியுள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக மாணவி நின்று கொண்டிருந்தார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

லஞ்சம் வாங்கிய வழக்கு…. வருவாய் துணை ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை…. நீதிமன்றம் அதிரடி…!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் புதூரில் மகேந்திர பாபு என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு மகேந்திர பாபு தனது தந்தையின் நிலத்தை அளந்து வரைபடம் தர வேண்டும் என வடக்கு தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் வருவாய் துணை ஆய்வாளரான பொன்னுசாமி என்பவர் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து மகேந்திர பாபு அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பணம் வாங்கும் போது பொன்னுசாமியை கையும், களவுமாக பிடித்தனர். இந்த […]

Categories
சினிமா

மீண்டும் கதை திருட்டு?…. சர்ச்சையில் சிக்கிய இயக்குனர் அட்லீ?…. வெளிவரும் தகவல்கள்…..!!!!

ராஜா ராணி என்ற திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அட்லீ. இந்த படம் வெற்றிபெற்றாலும், இன்றுவரை மௌனராகம் படத்தின் காப்பிதான் ராஜா ராணி என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ராஜா ராணி திரைப்படத்தை அடுத்து தெறி,மெர்சல்,பிகில் என்று விஜய் உடன் கைகோர்த்து சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார். இந்த திரைப்படங்களுக்கும் கதைதிருட்டு எனும் சர்ச்சையில் அட்லீ சிக்கி கொண்டார். தற்போது அட்லீயின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகிவரும் படம் ஜவான். பாலிவுட் நடிகரான ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துவரும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“சுவரை இடிக்காமல் இப்படி செய்யுங்கள்” வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கிழக்கு ராமாபுரம் ஊராட்சி அலுவலகத்தில் சுற்றுச்சுவர் இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பொது வழியாக இருந்த இடத்தில் அலுவலக சுற்றுச்சுவர் கட்டப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளதாக அதே பகுதியில் வசிக்கும் ஒருவர் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி தலைமையிலான அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இதனை அறிந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக இருக்கும் ஊராட்சி அலுவலக சுற்றுச்சுவரை இடிக்க விடமாட்டோம் என கூறியுள்ளனர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சேத்தியாதோப்பு பகுதியில் கனமழை….. தண்ணீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்கள்…. விவசாயிகளின் குற்றச்சாட்டு….!!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாதோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பரதூர் ஊராட்சியில் 500 ஏக்கர் பரப்பளவுடைய விளை நிலங்களில் விவசாயிகள் சம்பா நெற்பயிர்களை பயிரிட்டுள்ளனர். தற்போது அனைத்து நெற்பயிர்களும் கனமழை காரணமாக தண்ணீரில் மூழ்கியது. மேலும் மழைநீர் வடிய வழி இல்லாமல் தண்ணீர் வயல்களிலேயே தேங்கி இருப்பதால் பயிர்கள் அழுகும் நிலையில் இருக்கிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, ஏக்கருக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உடலில் சூடு வைத்து சிறுமி கொலை…. கல்நெஞ்சம் படைத்த தம்பதி கைது…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் திருவள்ளுவர் நகரில் சுமை தூக்கும் தொழிலாளியான பிரகாஷ்(26) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி(24) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயதுடைய ஷிவானி என்ற மகள் இருந்துள்ளார். இவர்கள் அதே பகுதியில் வசிக்கும் மல்லிகா என்பவரது வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மல்லிகாவின் உறவினரான ராஜேஷ் குமார்(31)-கீர்த்திகா(24) தம்பதியினர் அடிக்கடி மல்லிகாவின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. இதனால் ஷிவானியுடன் […]

Categories
உலக செய்திகள்

விலங்குகளை கொன்று தின்ற ரஷ்யப்படையினர்…. காலியான பூங்கா… எங்கு தெரியுமா?…

உக்ரைன் நாட்டில் இருக்கும் விலங்குகள் பூங்காவில், ஒட்டகம், கங்காரு போன்ற விலங்குகளை கொன்று அவற்றை உண்டு ரஷ்ய வீரர்கள் உயிர் வாழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப் போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்யா கைப்பற்றிய தங்களின் பகுதிகளை உக்ரைன் படையினர் மீட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக இரண்டு தரப்பினருக்குமிடையே மோதல் வெடித்து பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரஷ்ய நாட்டின் ஆக்கிரமிப்பில் இருக்கும் டோனட்ஸ் நகரத்தை மீட்பதற்காக உக்ரைன் படை போராடி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வீடுகளை இடிக்க சென்ற அதிகாரிகள்…. பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு…. பொதுமக்களின் கோரிக்கை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சனிக்குப்பம் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து 8 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் வீடுகளை காலி செய்யுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இந்நிலையில் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் முரளி தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்றனர். இதனையடுத்து ஜேசிபி எந்திரம் மூலம் வீடுகளை இடிக்க முயன்ற போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் அமர்நாத் தலைமையில் பொதுமக்கள் ஜேசிபி வாகனத்தை முற்றுகையிட்டு வீடுகளை இடிப்பதற்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தேசிய பெண் குழந்தை தினத்தன்று…. மாநில அரசின் விருது பெற விண்ணப்பிப்பது எப்படி…? மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24 அன்று மாநில அரசின் 2002-23 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கப்பட உள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் 13-18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், குழந்தை திருமணத்தை தடுத்தல் என்ற ஏதாவது ஒரு வகையில் சிறப்பான தனித்துவமான […]

Categories
சினிமா விமர்சனம்

1 இல்ல 2 இல்ல!… 3 கெட்டப்பில் களமிறங்கும் அசோக் செல்வன்…. நித்தம் ஒரு வானம் விமர்சனம்…..!!!!

வாழ்கையில் நடைபெறும் இருவேறு சம்பவங்களுடன் தன்னை பொறுத்திக்கொண்டு அவர்களை தேடி பயணிக்கும் நபர் குறித்த கதைக்களம் தான் நித்தம் ஒரு வானம். சென்னையில் தன் தாய் தந்தையுடன் வாழ்ந்துவரும் அசோக்செல்வன் (பிரபா), சிறுவயதிலிருந்தே தான் உண்டு, தன் வேலை உண்டு என்று யாருடனும் நெருங்கிபழகாமல் 100 % பர்ஃபெக்ட்டான நபராக இருக்கிறார். இவர் படிக்கும் கதைப்புத்தகத்தில் வரக்கூடிய கதாப்பாத்திரங்களை தான் என்று நினைத்துக் கொள்வார். இதற்கிடையே தனக்கு நிச்சயிக்கும் பெண்ணை அதிகளவு விரும்பும் அசோக்செல்வன் அவளுக்காக நேரத்தை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

புகார் வாங்க மறுப்பு….. இன்ஸ்பெக்டருக்கு ரூ.3 லட்சம் அபராதம்…. மாநில மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் வலசை பகுதியில் கந்தசாமி-செல்லாத்தாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குப்புசாமி என்ற மகன் உள்ளார். இவர்களிடம் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பைனான்சியர்களான மணி, செல்வம் ஆகியோர் வெற்று பத்திரங்களில் கையெழுத்து வாங்கியுள்ளனர். இதுகுறித்து கள்ளிமந்தயம் காவல் நிலையத்தில் குப்புசாமி புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் புகாரை வாங்காமல் அலைக்கழித்துள்ளனர். மேலும் புகார் கொடுக்க சென்ற குப்புசாமி மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக மாநில மனித உரிமை ஆணையத்தில் […]

Categories
மாநில செய்திகள்

மாணவி சத்யபிரியா கொலை வழக்கு : கைது செய்யப்பட்டுள்ள சதீஷ் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்..!!

மாணவி சத்யபிரியா கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சதீஷ் மீது தற்போது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. கடந்த மாதம் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்யபிரியா என்ற மாணவியை சதீஷ் என்ற இளைஞர் ரயில் முன் தள்ளிவிட்டார். இதில் சத்யபிரியாவின் உடல் சிதறி இரண்டு துண்டாக சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம்  தமிழ்நாடு முழுதும் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து சதீஸ் என்ற நபரை மாம்பலம் ரயில்வே போலீசார் கைது செய்தனர். இதனைத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மாடியோ! 12 வருஷத்துல இத்தனை கோடியா….? நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல்….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனமாடியது சூப்பர் ஹிட் ஆனது. இதனால் சமந்தாவுக்கு பாலிவுட் சினிமாவில் நடிப்பதற்கும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், யசோதா திரைப்படம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதன் பிறகு நடிகை சமந்தா தற்போது சகுந்தலம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்ன ஒரு அதிசயம்….! 24 மணி நேரமும் பால் கறக்கும் பசு…. காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் மக்கள்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நந்தவனப்பட்டியில் பெருமாள்-மயில் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் பெருமாள் ஒரு கன்று குட்டியை வாங்கி வளர்த்து வந்துள்ளார். அந்த கன்று வளர்ந்து தற்போது தெய்வீகத் தன்மை உடையதாக காணப்படுகிறது. அதாவது கடந்த பல மாதங்களாக கன்றும் ஈன்றாமல், சினை ஊசி போடாமலும் அந்த பசு 24 மணி நேரமும் பால் கறக்கிறது. எந்த நேரத்தில் கறந்தாலும் அந்த பசு பால் தருகிறது. இதனை அறிந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காந்தாரா”….. முதலில் புனித் ராஜ்குமார் தான் நடிக்க இருந்தார்….. நடிகர் ரிஷப் செட்டி ஓபன் டாக்…..!!!!!

கன்னட சினிமாவில் வெளியாகிய சூப்பர் ஹிட் ஆன காந்தாரா திரைப்படம் தற்போது தென்னிந்திய மொழிகளில் ரிலீசாக 305 கோடி வரை சாதனை புரிந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் நாயகன் மற்றும் இயக்குனரான ரிஷப் செட்டி தற்போது ஒரு முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது கடந்த வருடம் கன்னட திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார் மாரடைப்பின் காரணமாக திடீரென உயிரிழந்தார். இவர் இறந்து தற்போது ஒரு வருடமாகும் நிலையில், கர்நாடக அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவாரூர், தஞ்சை, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் கரூர், நாமக்கல், திருச்சி, […]

Categories
அரசியல்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.424 உயர்வு..!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.424 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.38,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.53 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,770-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.90 அதிகரித்து ரூ.66.30 -க்கு  விற்பனை செய்யப்படுகிறது.      

Categories

Tech |