Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்…! தமிழக அரசு பள்ளியில் படித்த….. 87 மாணவர்கள் ஐஐடியில் படிக்க தேர்வு….!!!

சென்னை ஐஐடியில் தமிழக அரசு பள்ளி மாணவர்களை அதிகளவு சேர்க்கும் விதமாக தமிழக அரசோடு இணைந்து அனைவருக்கும் ஐஐடி என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழாக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள 58 அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 192 மாணவர்களை கொண்ட பட்டியல் தயார் செய்யப்பட்டது. இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்கள் போட்டி தேர்வுகளை சந்திக்க அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், அரசு […]

Categories
உலக செய்திகள்

மகனின் 5 ஆவது ஆசை….! 56 வயதில் “பேத்தி”யை பெற்றெடுத்த “தாய்”… நெகிழ்ச்சியில் குடும்பத்தினர்….!!!!

அமெரிக்கா நாட்டின் உத்தா பகுதியில் வசிப்பவர் நான்சி ஹாக்கி. இவர் தன்னுடைய மகன் மற்றும் மருமகளோடு வசித்து வருகிறார். தனது மகனிற்கு ஏற்கெனவே நான்கு குழந்தைகள் உள்ள நிலையில் ஐந்தாவதாக ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை ஏற்பட்டுள்ளது. ஆனால் மருமகளுக்கு உடல் ஒத்துழைக்கவில்லை. எனவே தன்னுடைய மகனின் ஆசையை நிறைவேற்ற அந்த தாய் கர்ப்பமடைந்துள்ளார். அதாவது மகனின் குழந்தைக்கு தாயே வாடகை தாயாக மாறியுள்ளார். 56 வயதான நான்சி மகன் மற்றும் மருமகளுக்காக கருவை சுமந்து […]

Categories
அரசியல்

(06.11.22) இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்….!!

சென்னையில் இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. அதன் படி சென்னையில் 22 கேரட் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.38,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,770-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் கிராம் ரூ.66.30 -க்கு  விற்பனை செய்யப்படுகிறது.      

Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன் எதிரொலி!…. தாமதமாகும் பார்த்திபன் படம்…. வெளியான தகவல்…..!!!!

பார்த்திபன் நடித்து இயக்கிய இரவின் நிழல் திரைப்படம் சென்ற ஜூலை மாதம் திரைக்கு வந்தது. எனினும் இப்படம் இதுவரையிலும் ஓடிடி தளத்தில் வெளியாகாமல் இருக்கிறது. இந்த திரைப்படம் ஓரிரு நாட்களில் ஓடிடி-யில் வந்துவிடும் என ஏற்கனவே பார்த்திபன் தெரிவித்திருந்தார். இருப்பினும் இதுவரை வரவில்லை. இதனால் பார்த்திபன் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பார்த்திபன் வெளியிட்டுள்ள பதிவில் “இன்று முதல் பொன்னியின் செல்வன். ஆகவே வரும் வாரம் வருமாம் “இரவின் நிழல்” செய்தி. பெரு மழையில் தேங்கி விடுகிறது சிறு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் தயாரிக்கும் படத்தில்…. இணையப்போகும் உதயநிதி ஸ்டாலின்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

உதயநிதி ஸ்டாலின் இப்போது மாமன்னன், கலக தலைவன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து இவர் கமல்ஹாசன் தயாரிக்கும் திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார். இது தொடர்பாக உதயநிதி  கூறியதாவது ”அரசியல், சினிமா ஆகிய இரண்டிலும் ஒரே சமயத்தில் ஈடுபடுவது சிரமமாக இருக்கிறது. அரசியலை சினிமா போன்று பாவிக்க இயலாது. ஏனெனில் அதில் முழு நேரமும் கவனம்செலுத்த வேண்டும். ஆகவே சினிமாவில் நடிப்பதை குறைக்க நினைத்தேன். அதன்படி நெஞ்சுக்கு நீதியுடன் முடித்துக்கொள்ள முடிவுசெய்தேன். அதன்பின் மாரி செல்வராஜ் வந்து […]

Categories
அரசியல்

169ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (நவம்பர் 06) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (06.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 06) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகலிலிருந்து, அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தமிழகத்தில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தமிழக வீரர்களுக்கு மாதம் தோறும் பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அசோக் சிகாமணி புதிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,பள்ளி மற்றும் கல்லூரி அளவில் மகளிர் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அணி ராஞ்சி கோப்பையை வெல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இனிவரும் நாட்களில் தமிழகத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்கு மாதம்தோறும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இப்படி ஒரு கிராமமா?…. அசைவம் சாப்பிட்டால் பாம்பு கடிக்கும்…. காலம் காலமாக அசைவம் சாப்பிடாமல் இருக்கும் கிராமம்….!!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள தேன் கனல் என்ற மாவட்டத்தில் பெண்டசாலியா கிராமத்தில் உள்ள மக்கள் பாம்பு கடித்து விடும் என்று அசைவ உணவை சாப்பிடாமல் இருந்து வருகிறார்கள். இந்த வழக்கத்தை காலம் காலமாக பின்பற்றி வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.அதுமட்டுமல்லாமல் அசைவம் சாப்பிட்டால் கண் பாதிப்பு ஏற்படும் மற்றும் உடல் நலக்குறைவு ஏற்படும் என அந்த கிராம மக்கள் நம்பி வருகிறார்கள். இதில் இன்னும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வருவதால் அந்த கிராமத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் அமைச்சர் சென்ற கார் மோதி திடீர் விபத்து…. மருத்துவமனையில் விபத்து…. அதிர்ச்சி…..!!!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமையாத்திரை நாளை மகாராஷ்டிரா மாநில எல்லையை அடைகின்றது. அங்கு நான் டெட்மாவட்டத்தில் யாத்திரை தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை மாவட்டத்தில் பொறுப்பு வகிக்கும் முன்னால் அமைச்சர் மந்திரி ஆரிப் நசீம் கான்,காங்கிரஸ் முக்கிய நிர்வாகியான எச்.கே.பாட்டீல் இருவரும் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் பணிகளை பார்வையிடுவதற்காக ஆரிப் நாசிம் கான் அந்தப் பகுதிக்கு காரில் சென்றுள்ளார்.அங்குள்ள சுங்கச்சாவடியை அடைந்தபோது எதிர்பாராத விதமாக கார் மீது மற்றொரு […]

Categories
உலக செய்திகள்

BREAKING: இலங்கை கிரிக்கெட் வீரர் கைது….. பெரும் பரபரப்பு….!!!!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகா பாலியல் வன்கொடுமை வழக்கில் சிட்னியில் சற்று முன் கைது செய்யப்பட்டார். டி20 உலக கோப்பை தொடருக்கு தேர்வான இவர் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிலிருந்து திடீரென விலகினார். அவருக்கு பதிலாக அஷேன் பண்டார சேர்க்கப்பட்டார். நேற்று சிட்னியில் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அணி தனது கடைசி குரூப் ஆட்டத்தில் விளையாடிய போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.37 ஆயிரம் சம்பளத்தில் வேலை…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: மீன் துறை ஆய்வாளர் காலி பணியிடங்கள்: 64 சம்பளம்: ரூ.37,700 – ரூ.1,19,500 கல்வித் தகுதி: டிகிரி விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 12 கணினி வழி தேர்வு நடைபெறும் நாள்: 2023 பிப்ரவரி 8 மேலும் இது குறித்த கூறுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் 19 மாவட்டங்களில்…. 3 மணிநேரத்திற்கு வெளுத்து வாங்கும் மழை….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்டபல மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக மாணவர்களின் நலனை கருதி பள்ளி மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.அதேசமயம் இனி வரும் நாட்களில் மழை பொழிவு அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆரஞ்சு தொடர்ந்து சிவப்பு ஆவின் பால் விலை உயர்வு…. எவ்வளவு தெரியுமா….????

தமிழகத்தில் ஆரஞ்சு பால் பாக்கெட்டை தொடர்ந்து தற்போது சிவப்பு நிற பால் பாக்கெட் விலை லிட்டருக்கு எட்டு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை மட்டும் நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஆவின் பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில் ஆரஞ்சு பால் பாக்கெட் 500 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளே…. உடனே இந்த வேலையை முடிங்க…. இல்லனா உங்களுக்கு தான் நஷ்டம்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சம்பா, தாளடி, பிசான பருவ நெல் பயிரை நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் சம்பா நெல் சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை சாகுபடி செய்த 24.13 லட்சம் ஏக்கர் நெல் பயிரில் 5.90 லட்சம் ஏக்கர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். மேலும் கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், […]

Categories
தேசிய செய்திகள்

வங்கியில் பர்சனல் லோன் வாங்க போறீங்களா?…. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி?….. இதோ முழு விவரம்…..!!!

இன்றைய காலகட்டத்தில் அவசர தேவைகளுக்கு கடன் வாங்க வேண்டும் என்றால் அனைவரும் வங்கியை நாடித்தான் செல்கிறோம். வங்கிகளில் தனிநபர் கடன் பெறுவதற்கு எதையும் அடமான வைக்க வேண்டிய அவசியம் இல்லை.சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பெரும்பாலான வங்கிகள் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளன. இருந்தாலும் குறைந்த பட்டியில் தனிநபர் கடன் வழங்கும் சில வங்கிகளும் உள்ளது. அதன்படி குறைந்த வட்டியில் தனி நபர் கடன் வழங்கும் வங்கிகளில் ஒன்றுதான் […]

Categories
தேசிய செய்திகள்

குறைந்த விலையில் இனி சிலிண்டர் வாங்கலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ சூப்பரான சலுகை….!!!!

எல்பிஜி சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்யும்போது 70 ரூபாய் கேஷ்பேக் வெல்வதற்கான வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதாவது டிஜிட்டல் பேமென்ட் வசதியை வழங்கும் பஜாஜ் பின்சர்வ் ஆப் மூலம் மொபைல் ரீசார்ஜ், டிடிஎச் ரீசார்ஜ்,பில் பேமண்ட்களில் வாடிக்கையாளர்கள் 10 சதவீதம் கேஷ் பேக் பெறலாம் . இந்த செயலி வங்கி அல்லாத நிதி நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட் மூலம் இயங்கி வருவதால் சிலிண்டர் புக்கிங் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் மாணவர்களின் நலனை கருதி பல மாவட்டங்களிலும் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் மாணவர்களின் நலனை கருதி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு…. சென்னை உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த 2011 ஜனவரி 1ஆம் தேதிக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களுக்கு திட்ட அனுமதி கோரி புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தனியார் பள்ளிகள் 2022-23ஆம் ஆண்டுக்கான கட்டிட திட்ட அனுமதி அங்கீகாரம் புதுப்பிக்க கோரி தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் தனியார் பள்ளிகள் நிர்வாகம் முன்னதாக திட்ட அனுமதி தொடர்பான விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி,தமிழ்நாடு நகர் மற்றும் ஊரக […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்கள் கடும் ஷாக்….! நவம்பர் 15 முதல் இது கிடையாது…. BSNL எடுத்த அதிரடி முடிவு…!!!!

Bsnl நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வந்தது. அது மட்டும் இன்றி பண்டிகை கால சலுகைகளையும் வழங்கி வந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வந்தனர். அந்தவகையில் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரூ.775க்கு 150 Mbps வேகத்தில் தினமும் 2000 ஜிபி டேட்டாவை வழங்கி வந்தது. இத்துடன் முக்கிய ஓடிடி சேவைகளும் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.775 பிராட்பேண்ட் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. நவம்பர் 15ம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகரின் தம்பியை காதலிக்கும் நடிகை அனு இம்மானுவேல்….? யார் தெரியுமா….? கடும் ஷாக்கில் ரசிகர்கள்….!!!

நடிகை அனு இமானுவேல் தமிழில் வெளியான துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தின்பிரபலமானவர். இந்த நிலையில் இவர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனனின் சகோதரரான அல்லு சிரிஷீனை காதலித்து வருவதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. மேலும் இவர்கள் இருவரும் டேட்டிங் செல்வதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள அனு இமானுவேல், தாங்கள் இருவரும் காபி ஷாப் ஒன்றில் சந்தித்து பேசியபோது எடுத்த போட்டோக்கள் இணையத்தில் வெளியானதால் அதை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“திருச்செந்தூர் ரயில் இந்தந்த தேதிகளில் கோவில்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும்”… தென்னக ரயில்வே அறிவிப்பு….!!!!!

உடுமலை வழியாக திருச்செந்தூர் செல்லும் ரயில் இந்தந்த தேதியில் கோவில்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே கோட்டம் அறிவித்திருக்கின்றது. கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, நெல்லை வழியாக திருச்செந்தூருக்கு தினசரி ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. ரயில் பாலக்காட்டில் இருந்து காலை 07.10 மணிக்கு புறப்பட்டு அதன் பின் உடுமலையில் நிலையத்திற்கு வந்தடையும். இங்கு பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் ரயில் பாதை பராமரிப்பு காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6,144 காவலர்கள் அதிரடி மாற்றம்….. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு….!!!!

தமிழ்நாடு சிறப்பு படையில் பணியாற்றி வரும் 6144 காவலர்கள் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பிரபாகரன் கோவை மாநகர உளவுத்துறை உதவி கமிஷனர் ஆகவும், ரமேஷ் கள்ளக்குறிச்சி சாப்-டிவிஷன் டிஎஸ்பி ஆகவும், ரவிக்குமார் கோவை மாநகரம் ஆர் எஸ் புரம் உதவி ஆணையராகவும், கென்னடி திருச்சி கண்டோன்மென்ட் உதவி ஆணையாளராகவும் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று…. 44 இடங்களில் நடைபெறவிருந்த….. RSS பேரணி ஒத்திவைப்பு….!!!!

தமிழகம் முழுவதும் இன்று 44 இடங்களில் நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கோவை, திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர மற்ற 44 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்க கோரி ஆர் எஸ் எஸ் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், நாகர்கோவில், அருமனை மற்றும் பல்லடம் ஆகிய இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை என்றும் […]

Categories
வேலைவாய்ப்பு

இந்திய கடற்படையில் வேலை…. இன்றே கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

இந்திய கடற்படையில் பைலட், பொது சேவை மற்றும் எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 217 காலி பணியிடங்கள் உள்ளது.அதில் அதிகபட்சமாக பொது சேவை பிரிவில் 56 இடங்கள், எலக்ட்ரிக்கல் பிரிவில் 45, இன்ஜினியரிங் மற்றும் பயலட் பிரிவில் 25, போக்குவரத்து பிரிவில் 20, கடற்படை விமான இயக்க அதிகாரி பிரிவில் 15, கல்வி பிரிவில் 12 என மொத்தம் 217 பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப தற்போது வேலைவாய்ப்பு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தராசு படிகளுக்கு முத்திரை வைக்கும் சிறப்பு முகாம்”…. வெளியான தகவல்…!!!!!

தராசு படிகளுக்கு முத்திரை வைக்கும் சிறப்பு முகாம் ஆறு நாட்கள் நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தொழிலாளர் துறை திருச்செந்தூர் முத்திரை ஆய்வாளர் ராம்மோகன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தொழிலாளர் உதவி ஆய்வாளர் சங்கர கோமதி உள்ளிட்டோர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, நெல்லை தொழிலாளர் இணை ஆணையர் சுமதி உத்தரவின் பேரில் தூத்துக்குடி தொழிலாளர் உதவியாளர் ஆலோசனையின்படி ஸ்ரீவைகுண்டம் பகுதியில் முத்திரையிடப்படாத தராசு படிகள் வைத்திருக்கும் வணிகர்கள் முத்திரையிடுவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் காபி, டீ விலை உயரும் அபாயம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

தமிழகத்தில் காபி, டீ விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆவின் ஆரஞ்சு பால்  பாக்கெட்டின் சில்லறை விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.12 அதிகரித்து ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆவினில் பசும் பால் லிட்டருக்கு 32 ரூபாய் என கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மூன்று ரூபாய் உயர்ந்து 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எருமைப்பால் லிட்டருக்கு 41 ரூபாய் என கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்று ரூபாய் உயர்ந்து 44 […]

Categories
சென்னை மாநில செய்திகள்

காவலர் உதவி ஆய்வாளர் தேர்வு…. சென்னையில் இன்று இலவச பயிற்சி….. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!

காவலர் உதவி ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு இலவச மாதிரி நேர்முகத் தேர்வை சென்னையில் இன்று  நடைபெற உள்ளதாக ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாடமி அறிவித்துள்ளது.தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 444 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகின்றது.இதில் பயன்பெறும் வகையில் நவம்பர் 6ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச மாதிரி நேர்முகத்தேர்வு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆட்சி தமிழ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தெருவில் நின்று…. படிப்படியாக ஏறி தான் அரசியலில் ஜொலிக்க முடியும்…. EPS அட்வைஸ்….!!!!

சென்னை தியாகராய நகரில் எம்ஜிஆர் கிரியேஷன்ஸ் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அரசியலும் திரை துறையும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்துள்ளது. திரைப்படத்துறைக்கு அதிமுக ஏராளமான உதவிகளை செய்துள்ளது. அம்மா ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் கட்டிய பாதையில் அதிமுக தற்போது தொடர்ந்து பயணம் கொண்டிருக்கிறது அரசியலில் ஜொலிப்பது என்பது கடினம். ஆனால் சினிமாக்களில் எளிதாக ஜொலித்து விடலாம். கட்சியில் அப்படி கிடையாது. தெருவில் நின்று பலரைப் பார்த்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“வேப்பமரத்தில் வடிந்த பால்”…. பூஜை செய்து வழிபட்ட பொதுமக்கள்…!!!

எட்டயபுரம் அருகே பால்வடிந்த வேப்ப மரத்திற்கு கிராம மக்கள் பூஜை செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் அருகே இருக்கும் மேலப்பட்டி கிராமத்தில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான வேப்பமரத்தில் சென்ற மூன்று நாட்களாக பால் போன்ற திரவம் வெளியேறி வந்திருக்கின்றது. இதனை அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக ஆர்வத்துடன் பார்த்திருக்கின்றார்கள். வேப்ப மரத்தில் இருந்து பால் வடிவதை அப்பகுதி மக்கள் பார்த்ததோடு மரத்திற்கு மஞ்சள் பூசி, சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து ஆராதனை காட்டி பூஜை செய்து வழிபாடு […]

Categories
வேலைவாய்ப்பு

இந்திய விமானப்படைக்கு ஆட்சேர்ப்பு….. 10, +2 முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு…. நவ 23 கடைசி தேதி….!!!

அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் இளைஞர்கள் நான்கு ஆண்டுகளுக்கு இராணுவத்தில் சேவையாற்றும் வகையில், இந்திய விமானப்படைக்கு திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. நிறுவனத்தின் பெயர்: Indian Air Force பதவி பெயர்: Agniveervayu கல்வித்தகுதி: 10+2 வயதுவரம்பு: 27-06-2002 – 27-12-2005 (இடையில் பிறந்தவர்கள் மட்டும்) கடைசி தேதி: 23.11.2022 கூடுதல் விவரங்களுக்கு: https://agnipathvayu.cdac.in/AV/ முக்கிய நாட்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 07.11.2022 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.11.2022 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை(7.11.22) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. மக்களே தெரிஞ்சுக்கோங்க…. முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக  நாளை(7.11.22) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. நெல்லை தாழையூத்து துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம்புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் வரும் 7ஆம் தேதி திங்கள்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. கன்னியாகுமரி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

PS1 Hit…! கல்கி அறக்கட்டளைக்கு 1 கோடி நன்கொடை…. பெரிய மனசு தான் போங்க….!!!!

உலகப் புகழ் பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்த திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், கார்த்தி உள்ளிட்ட பல நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் பொன்னியின் செல்வன் 1 கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், படம் பெரும் வெற்றி கண்டது. உலக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் பெய்த பரவலான மழை”…. விவசாயிகள் மகிழ்ச்சி….!!!!!

தூத்துக்குடியில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். தமிழ்நாட்டில் சென்ற 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை ஆரம்பமானது. சென்ற சில நாட்களாகவே மழை பெய்து வருகின்றது. இதன்படி சென்ற 3-ம் தேதி இரவு கனமழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 99மிமீ மழை பெய்துள்ளது. தூத்துக்குடியில் 19மிமீ, ஸ்ரீவைகுண்டத்தில் 76மிமீ, திருச்செந்தூரில் 13மிமீ, குலசேகரன்பட்டினத்தில் 7மிமீ, சாத்தான்குளத்தில் 5மிமீ, கோவில்பட்டியில் 1மிமீ, கழுகுமலையில் 9மிமீ, கயத்தாறில் 78மிமீ, கடம்பூரில் […]

Categories
பல்சுவை

மழைக்காலத்தில் வீட்டில் கொசுத்தொல்லையா….? இதை செஞ்சி பாருங்க…. கொசு ஓடிவிடும்….!!!

மழைக்காலம் ஆரம்பித்து விட்டாலே இல்லத்தரசிகளுக்கு கொஞ்சம் கஷ்டமாகி போய்விடும். ஏனென்றால் மழைக்காலங்களில் துணிகளை துவைத்து காய வைப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள சில பொருட்கள் மழை காலத்தில் அதனுடைய தன்மையிலிருந்து மாறும். இவ்வாறு மழைக்காலங்களில் தங்களுடைய வீட்டில் உள்ள பொருட்களை எளிதில் பராமரிப்பதற்கு சில குறிப்புகளை இப்போது பார்க்கலாம். மழைக்காலத்தில் அதிகரிக்கும் கொசுக்களின் தொல்லையை ஒழிக்க நெருப்பில் வேப்பிலை போட்டு புகைப்போடலாம். ஆல் அவுட் உள்ளிட்ட மருந்துகளின் காலி பாட்டில்களில் வேப்பெண்ண்ணெயையை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளே….! நவ., 15, டிச.,15 இதுவே கடைசி நாள்…. இதை விட்டால் பணம் கிடைக்காது….!!!!

விவசாயிகளுக்காக பிரதான் மந்திரியின் திருந்திய பயிர் காப்பீடு திட்டம் தமிழகத்தின் 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்குவது, பண்ணை வருவாய் நிலைப்படுத்தவும், நவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிப்பதுக்கும் உதவுகிறது. ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூலமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிரை காப்பீடு செய்துகொள்ள விவசாயிகளுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லவ் யூ அண்ணா…! நீங்க மாஸ் அண்ணா….! விஜய்யை புகழ்ந்து தள்ளிய தமன்…!!!!

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் “வாரிசு” திரைப்படத்தின் முதல் பாடலாக ‘ரஞ்சிதமே’ என்ற குத்து பாடல் வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் விவேக் வரியில், தமன் இசையில் உருவாகி இருக்கும் இப்பாடலை விஜய் பாடி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளார். நீண்ட நாள் கழித்து விஜய் பாடிய பாடல் என்பதால் ரசிகர்கள் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் விஜய்யின் வாரிசு படத்தின் முதல் பாடல் வெளியானதை அடுத்து, இந்த நாளுக்காகத்தான் தான் நெடுங்காலமாக காத்திருந்ததாக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வ.உ.சி துறைமுகத்தில் போலி ரசீது…. “நிலக்கரி கடத்தி சென்ற லாரி டிரைவர்கள்”…. போலீசார் வலைவீச்சு…!!!!!

தூத்துக்குடியில் போலி ரசீது செய்து கொடுத்து நிலக்கரியை கடத்திச் சென்ற இரண்டு லாரி டிரைவர்களை போலீசார் தேடி வருகின்றார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிதம்பரம் நகர் 1-வது தெருவை சேர்ந்த ராகுல் அமீது என்பவர் தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் போக்குவரத்து மேலாளராக வேலை செய்து வருகின்றார். சம்பவத்தன்று இவரின் நிறுவனத்தின் பெயரில் இரண்டு லாரி ட்ரைவ்ர்கள் வ.உ.சி துறைமுகத்தில் போலி ரசீதை கொடுத்திருக்கின்றார்கள். இதன் மூலம் அவர்கள் நிலக்கரி லோடு கடத்திச் சென்றதாக சொல்லப்படுகின்றது. இது குறித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : இன்று 4 அணிகளுக்குள் கடும் போட்டி….. “இந்தியா அரையிறுதிக்கு செல்லுமா?”….. மழை வந்தால் என்ன நடக்கும்…. இதோ.!!

இன்று நடைபெறும் கடைசி சூப்பர் 12 போட்டியில் அரை இறுதிக்கு செல்ல 4 அணிகள் மல்லு கட்டுகின்றன.. ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்று போட்டிகள் இன்றோடு முடிவுக்கு வருகிறது. இந்த சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் இடம்பெற்றன. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஷூட்டிங் நிறுத்தப்பட்டது உண்மைதான்”…. ஆனா காரணம் வேறு…. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த “மாவீரன்” படக்குழு….!!!!

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. அதன் பிறகு அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவா நடித்த பிரின்ஸ் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் என்ற திரைப்படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… உண்மைதான் போல….. “நடிகை ஹன்சிகாவின் இன்ஸ்டா பதிவு”…. குழப்பத்தில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி. மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஹன்சிகா எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, மனிதன், சிங்கம், ரோமியோ ஜூலியட், வாலு, மகா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு தெலுங்கு சினிமாவிலும் நடிகை ஹன்சிகா மோத்வானி நிறைய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னுடைய நீண்ட நாள் நண்பரும் பிசினஸ் பார்ட்டனருமான சோகேல் என்பவரை கூடிய விரைவில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்…! “கல்கி அறக்கட்டளைக்கு 1 கோடி நிதியுதவி”…. காசோலையை வழங்கிய பொன்னியின் செல்வன் தயாரிப்பாளர்கள்….!!!!!

கல்கி அறக்கட்டளைக்கு ரூபாய் 1 கோடியை பொன்னியின் செல்வன் தயாரிப்பாளர்கள் வழங்கினார்கள். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற செப் 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் ஆயிஷா 2 முறை விவாகரத்து ஆனவரா….? இது உண்மையான தகவலா…. பிரபல நடிகர் விளக்கம்….!!!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளியான சத்யா என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஆயிஷா. இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் 9-ம் தேதி தொடங்கிய நிலையில் ரசிகர்கள் மத்தியில் மற்ற சீசன்களை போன்று நல்ல வரவேற்பு இருக்கிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் தற்போது 19 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் வீட்டுக்குள் வைத்து ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய வாழ்க்கையில் […]

Categories
சினிமா விமர்சனம்

“காதல், காமெடி, கலாட்டா”…. மொத்தத்தில் ரசிக்கலாம்….. “காபி வித் காதல்” படத்தின் திரை விமர்சனம் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சுந்தர் சி காபி வித் காதல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர்கள் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், திவ்யதர்ஷினி, ஐஸ்வர்யா தத்தா, ரைசா வில்சன், சம்யுக்தா, யோகி பாபு, மாளவிகா ஷர்மா, அமிர்தா ஐயர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். தற்போது படத்தின் திரை விமர்சனத்தை பார்க்கலாம். அதாவது பிரதாப் போத்தனுக்கு ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் என்ற 3 மகன்களும், டிடி என்ற ஒரு மகளும் இருக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!…. பேர கேட்டாலே சும்மா அதிருதே….. சங்கரின் “வேள்பாரி” படத்தில் இணையும் மாஸ் ஹீரோக்கள்…. ஆவலில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொன்னாலே அது இயக்குனர் சங்கர் தான். ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சங்கர் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் பிரம்மாண்டத்தை வைப்பதற்கு தவறவே மாட்டார். அதன் பிறகு இயக்குனர் சங்கரின் படம் என்றாலே, கண்டிப்பாக சூப்பர் ஹிட் தான். அந்த வகையில் தன்னுடைய முதல் படத்திலேயே தனக்கான முத்திரையை பதித்த சங்கர் இந்தியன், எந்திரன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது இந்தியன் 2 மற்றும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! அனுகூலம் கிட்டும்…! வெற்றி கிடைக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் வழக்குகளில் வெற்றி பெற்று மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களின் ஒற்றுமை கிடைக்கும்.  பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றி பெறுவீர்கள். வியாபாரப் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறந்த நாளாக இன்றைய நாள் இருக்கும். புதிய பதவிகள் தேடி வரக்கூடும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருப்பதால், பணவரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்துசேரும். பெண்களுக்கும் பணவரவு சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். பேச்சில் கவனம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! சேமிப்பு தொடங்கும்…! அனுசரிப்பு அவசியம்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். நீங்கள் வருங்காலத்திற்காக சேமிக்க தொடங்குவீர்கள். வாகனச் செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் இருக்கும் பெரியோர்களிடம் அனுசரித்து நடக்கவேண்டும். நிதானத்தைக் கடைப்பிடித்தால் வெற்றி உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். நல்ல அணுகுமுறை ஏற்படும். விட்டுக்கொடுத்து சென்றால் முன்னேற்றங்கள் ஏற்படும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். பெற்றோருக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வருமானத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! வாய்ப்பு உருவாகும்…! பனிச்சமை இருக்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு பல வழியில் பணம் வரும். இன்று உங்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும். அரசாங்கத்தால் லாபம் கூடும். பேச்சினால் காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். உறவினர்களின் வருகை நன்மையை உண்டாக்கும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். மனதின் குறைகளை சரி செய்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் அதிகமாக பணிச்சுமை இருக்கும். தேவையான பொருட்களை மட்டும் வாங்குங்கள். காதலில் உள்ளவர்கள் மிகவும் கவனமாக […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! கஷ்டம் நீங்கும்…! ஒற்றுமை பலப்படும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு கஷ்டம் படிப்படியாக குறையும். இந்த சிறந்த முன்னேற்றங்கள் உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் திரும்பி வரக்கூடும் இன்று கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். மனசுக்குள் குழப்பம் விலகிச்செல்லும். பணிச்சுமை அதிகரிக்கும். பொறுப்புகள் கூடும். அதிக உழைப்பின் காரணமாக வேலையில் ஈடுபடுவீர்கள். உடல் சோர்வாக காணப்படும். சத்தான உணவு வகைகளை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். சகோதரர்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! லாபம் உண்டாகும்…! முன்னேற்றம் இருக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் வீட்டை பராமரிக்க கூடும். இன்று புதிய திட்டத்தால் வியாபாரத்தில் லாபங்களை பெருக்கி கொள்ள முடியும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பயணங்களால் நற்பலன்கள் ஏற்படும். பிரச்சனைகளை சமாளிக்கும் திறமை வெளிப்படும். காரியங்களில் தடைகள் ஏற்பட்டு சரியாகும். வெளியூர் அல்லது வெளிநாடு பயணங்கள் செல்ல நேரலாம். வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். கலைத்துறையில் வெற்றி பெறுவீர்கள். சில விஷயங்களில் சண்டைகள் ஏற்படும். வீணான குழப்பங்கள் வரக்கூடும். குடும்பத்தினரை அனுசரித்து செல்ல […]

Categories

Tech |