Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் அமர்ந்து பேசிய நண்பர்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

9- ஆம் வகுப்பு மாணவன் தண்டவாளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்காளிமேடு பகுதியில் காளிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னபூரணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரித்தீஷ், யுவனேஷ், விக்னேஷ் என்ற மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இதில் ரித்தீஷ் தனியார் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ரித்தீஷ் தனது நண்பர்கள் 4 பேருடன் இணைந்து அப்பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குப்பையில் கிடந்த மணிபர்ஸ்…. நேர்மையாக செயல்பட்ட தூய்மை பணியாளர்…. குவியும் பாராட்டுக்கள்…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் வார சந்தையில் தூய்மை பணியாளரான கோபால் என்பவர் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஒரு குப்பையில் கிடந்த மணிபர்சை கோபால் பிரித்து பார்த்தபோது அதில் ஏடிஎம் கார்டு, மோட்டார் சைக்கிள் சாவி, செல்போன் ஆகியவை இருந்தது. இதனையடுத்து கோபால் அந்தியூர் காவல் நிலையத்திற்கு சென்று இன்ஸ்பெக்டர் மோகன்ராஜிடம் மணிபர்சை கொடுத்து உரியவரிடம் ஒப்படைக்குமாறு கூறினார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மணிபர்ஸ் தங்கப்பாளையம் பகுதியில் வசிக்கும் கீதா என்பவருக்கு சொந்தமானது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மயக்க மருந்து தெளித்த மர்ம கும்பல்…. தாய், மனைவி மீது கொலைவெறி தாக்குதல்…. விவசாயியின் பரபரப்பு புகார்…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சங்கராபாளையம் ஆர்.ஜி.கே புதூர் பகுதியில் விவசாயியான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது தாய் புஷ்பா, மனைவி கீர்த்திகா(29) ஆகியோர் நேற்று முன்தினம் எங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது எங்கள் பகுதியில் வசிக்கும் 7 பேர் கொண்ட கும்பல் தோட்டத்திற்குள் நுழைந்து எனது மனைவி மற்றும் தாய் முகத்தில் மயக்க மருந்து தெளித்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“400 வருடங்களைக் கடந்த தஞ்சை பீரங்கிமேடு”…. மும்முரமாக நடந்து வரும் சீரமைக்கும் பணி…!!!!!

21 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் தஞ்சை பீரங்கி மேடு புதுப்பிக்கப்பட்டு வருகின்றது. உலக பாரம்பரிய சின்னமாக தஞ்சை பெரிய கோவில் இருக்கின்றது. தஞ்சையில் ஆசியாவின் பழமையான நூலகமான தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம், அரண்மனை, கலைக்கூடம், ஆயுத கோபுரம் உள்ளிட்ட பெருமைக்குரிய நினைவுச் சின்னங்கள் இருக்கின்றது. இந்த வரிசையில் ராஜகோபால் பீரங்கியும் ஒன்றாக இருக்கின்றது. இந்த பீரங்கி தஞ்சைக்கு சுற்றுலா வரும் பயணிகள் பார்க்க வேண்டிய ஒன்றாகும். எப்போதும் பீரங்கிகள் வார்ப்பிரும்பால் வார்க்கப்படும். ஆனால் இது […]

Categories
மாநில செய்திகள்

கும்பக்கர்ணன் போல் தூங்கியது ஏன்?…. சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி…!!!!

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று விதிகளை மீறி கட்டிய கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி, அந்த குடியிருப்பில் தரைதளம் மற்றும் முதல் மாடியின் உரிமையாளர் விஜயபாஸ்கர் என்பர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 5000 சதுர அடி கட்டுமான மேற்கொள்ள திட்ட அனுமதி பெற்று விட்டு, 12,000 சதுர அடிக்கு கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்தை‌சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த விதிமுறைகளை கட்டுப்படுத்துவது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

புதுமைப்பெண் திட்டம்…. 1196 விண்ணப்பங்கள் இணையத்தில் பதிவேற்றம்…. மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு….!!!!

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து தற்போது மேற்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியான மாணவிகள் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் மூலமாகவே விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்து இருந்தது. இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் பணியும் நடந்து வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் நாடார் சரஸ்வதி […]

Categories
தேசிய செய்திகள்

சட்டவிரோதம்: ரயில் நிலையத்தில் இருந்த 8 ரோகிங்கியா அகதிகள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

மியான்மரியில் உள் நாட்டு போரின்போது லட்சக்கணக்கான ரோகிங்கியா இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் அகதிகளாக மாறினர். மியான்மரிலிருந்து வெளியேறி ரோகிங்கியாக்கள் அண்டைநாடான வங்காளதேசத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து வங்காளதேசத்திலிருந்து சட்டவிரோதமாக வட கிழக்கு மாநில எல்லைகள் வழியே இந்தியாவுக்குள் நுழைந்து போலி அடையாளங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறு இந்தியாவில் சட்டவிரோதமாக வாழ்ந்துவரும் ரோகிங்கியாக்களை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திரிபுரா மாநிலம் அகர்தலா நகரில் ரோகிங்கியாக்கள் சட்டவிரோதமாக வசித்து வருவதாக இராணுவ […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி நடத்தப்பட்டதா…? தனியார் காப்பகத்தில் திடீர் சோதனை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொலவக்காளிபாளையம் பகுதியில் அரசு அனுமதியின்றி தனியார் குழந்தைகள் காப்பகம் நடத்தப்படுவதாக அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தனியார் குழந்தைகள் காப்பகத்தில் சோதனை நடத்திய போது 18 வயதிற்கு உட்பட்ட 11 சிறுவர்கள் தங்கியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து எந்தவித பதிவேடுகள் இல்லாமலும், அரசு அனுமதி இல்லாமலும், போதுமான பணியாளர்கள் இல்லாமலும் சிறுவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதுகுறித்த […]

Categories
தேசிய செய்திகள்

பீகார் முதல்வா் மீது நிகழ்த்தப்பட்ட அவமதிப்பு சம்பவம்: 15 வருஷமா சாலை வசதியின்றி தவிக்கும் கிராமம்…. பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

பீகாரில் ஒரு கிராமத்தில் மாநில முதல்வா் மீது நிகழ்த்தப்பட்ட அவமதிப்பு சம்பவத்தை அடுத்து கடந்த 15 வருடங்களாக அங்கு சாலைவசதி ஏற்படுத்தி தரவில்லை என பிரசாந்த் கிஷோா் குற்றம் சாட்டியுள்ளாா். அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோா் “ஜன் சுராஜ்” எனும் 3,500 கி.மீ தொலைவு நடைப் பயணத்தை பீகாா் மாநிலத்தில் மேற்கொண்டு வருகிறாா். மேற்கு சம்பாரன் மாவட்டத்திலுள்ள ஜோகபட்டி கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பொதுமக்கள் பங்கேற்ற கூட்டத்தில் அவா் பேசியிருப்பதாவது “இந்த கிராமத்தில் இருந்து பெடியா நகரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நல்ல நட்பை இலக்க நேரிடுகிறது”….. சுவாரசிய பேச்சுக்கு டாட்டா சொன்ன பார்த்திபன்….. கவலையில் ரசிகர்கள்….!!!!!

சென்னையில் நேற்று பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் மணிரத்தினம், நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன்பிறகு நிகழ்ச்சியின் போது நடிகர் பார்த்திபன் மிகவும் சுருக்கமாக பேசிவிட்டு கிளம்பிவிட்டார். நடிகர் பார்த்திபன் பொதுவாக ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலே மிகவும் சுவாரசியமாக பேசுவார். ஆனால் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் சுருக்கமாக பேசியதன் காரணமாக பலரும் எதற்காக அப்படி செய்தீர்கள் என்று […]

Categories
சேலம்

29 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்…. பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்…. ஓமலூரில் பரபரப்பு….!!!!

சேலம் மாவட்டத்தில் ஓமலூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் இந்த பள்ளியில் தின்பண்டங்களை விற்பனை செய்யும் கேண்டினும் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு வகுப்பு இடைவெளியின் போது 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் கேண்டில் இருந்து முட்டை பப்ஸ் மட்டும் வேஜ் பப்ஸ் வாங்கி சாப்பிட்டு உள்ளனர். இதனை மொத்தம் 30 மாணவர்கள் சாப்பிட்டதாக தெரிய […]

Categories
உலக செய்திகள்

கால்பந்து திருவிழா… ரசிகர்களை அடக்க மிருகத்தனமான அமைப்பு… வெளியான தகவல்…!!!!

வளைகுடா நாடு ஒன்றில் முதன்முறையாக கால்பந்து உலக கிண்ணம் போட்டிகள் நடத்தப்பட இருக்கின்ற நிலையில் உலகம் முழுவதிலும் இருந்து சிறப்பு படைகளை களம் இறக்கி கட்டுக்கோப்பான ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கிறது. நவம்பர் 20ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 18ஆம் தேதி வரை நடக்க இருக்கும் இந்த கால்பந்து போட்டிக்கு சுமார் 1.2 பில்லியன் பார்வையாளர்கள் கட்டார் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் அமெரிக்கா, பிரித்தானியா, துருக்கி, தென்கொரியா, இத்தாலி மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளை சேர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

PF இருப்புத்தொகை…. சரிபார்ப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன?…. இதோ முழு விபரம்….!!!!

உங்களது யுஏஎன் மூலம் இபிஎப்ஓ வலைதளத்தில் பிஎப் இருப்பை எவ்வாறு சரிபார்ப்பது என்ற வழிமுறைகள் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம். # இபிஎப்ஓ-ன் அதிகாரப்பூர்வமான வலைதளத்துக்குச் சென்று “Our Services” என்ற டேபுக்குள் போகவேண்டும். # தற்போது டிராப்-டவுனில் தோன்றும் பட்டியலிலிருந்து For Employees என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். # பின் “Member Passbook” எனும் ஆப்ஷனை க்ளிக்செய்யவும். # அப்போது வரும் புது பக்கத்தில் உங்களுடைய யுஏஎன் எண், பாஸ்வேர்டு கேட்கப்படும். அதை உள்ளீடு செய்தபின் காட்டப்படும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாதாள அறையில் செயல்பட்ட ஹூக்கா பார்…. வசமாக சிக்கிய உரிமையாளர்…. போலீஸ் அதிரடி….!!!!

சென்னை மாவட்டத்தில் நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஒரு கடையில் பாதாள அறையில் தடை செய்ய தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹுக்கா போதைப்பொருள் பார் செயல்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் நுங்கம்பாக்கம் போலீசார் அந்தக் கடைக்கு சென்று பாரில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையில் ஹூக்கா போதை பொருள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பாரை நடத்திய முஸ்தாக் அகமது என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குழந்தை இல்லாத காரணத்தினால்…. விரக்தி அடைந்த இளம் பெண் எடுத்த முடிவு…. போலீஸ் விசாரணை….!!!!

குழந்தை இல்லாத விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் வியாசர்பாடி பகுதியில் விவேக் கவிதா என்ற தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணம் ஆகி ஒன்பது ஆண்டுகள் ஆகியும் இதுவரை குழந்தை இல்லை. இந்த காரணத்தினால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையில் வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கவிதா கணவன் வேலைக்குச் சென்ற […]

Categories
உலக செய்திகள்

அடடே! சூப்பர்…. இனி சவப்பெட்டியை கையில் தூக்கி செல்ல வேண்டாம்…. அசத்தலான கண்டுபிடிப்பு அறிமுகம்….!!!!!

மிதிவண்டியில் சவப்பெட்டியை கொண்டு செல்லும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் இசபெல் ப்ளூமேரா. இவர் ஒரு முக்கிய தகவலை கூறியுள்ளார். அதாவது அந் நாட்டில் மிதிவண்டி சவப்பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாம். இதன் மூலம் சவப்பெட்டியை இனி கையில் சுமந்து செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. இந்த மிதிவண்டி சவப்பெட்டியில் சவத்தை வைத்துவிட்டு சைக்கிள் ஓட்டுவது போன்ற ஓட்டினால் சுலபமான முறையில் சவத்தை சுடுகாட்டுக்கு கொண்டு சேர்க்க முடியுமாம். மேலும் இந்த முறை டென்மார்க் மற்றும் ஸ்விட்சர்லாந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அட!… என்ன‌‌ ஓர் அதிசியம்…. கன்று‌ ஈனாமல் 24 மணி நேரமும் பால் கறக்கும் பசுமாடு…. பக்தியோடு வணங்கும் கிராம மக்கள்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை அருகே நந்தவன பட்டி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பெருமாள் மற்றும் மயில் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிகள் வளர்க்கும் ஒரு பசு மாடு கன்று இல்லாமல் 24 மணி நேரமும் பால் கறக்கிறது. இந்த மாட்டிற்கு சினை ஊசி கூட போடவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு கன்று இல்லாமல் சினை ஊசி போடாமல் ஒரு மாடு 24 மணி நேரமும் பால் கறப்பது மிகவும் அதிசயமாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி குறைவு”… காரணம் இதுதான்…!!!!!

கூடலூர் அருகே லோயர்கேம்ப் மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி குறைந்துள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே இருக்கும் லோயர்கேம்ப் நீர்மின் உற்பத்தி நிலையம் இருக்கின்றது. இந்த உற்பத்தி நிலையத்திற்கு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. இதற்காக நான்கு ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டு ஒரு ஜெனரேட்டர் மூலம் 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஒரு ஜெனரேட்டருக்கு வினாடிக்கு 450 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும். சென்ற 3-ம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏய்!… மழையில் நனையாதே…. காய்ச்சல் வந்து சளி பிடிக்கும்…. ரச்சிதாவை செல்லமாக கண்டித்த ராபர்ட் மாஸ்டர்…..!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த போட்டி தொடங்கிய முதல் நாளிலிருந்து சண்டைகள், சச்சரவுகள் என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாந்தி, அசல் கோலார் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாகவே முன்வந்து  நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் தற்போது 19 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில், ரச்சிதா மற்றும் விக்ரமன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தன் மகளுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் பிரபல நடிகர்”…. அர்ஜுன் கூறிய பரபரப்பு புகார்..‌.. அதிர்ச்சியில் திரையுலகினர்…..!!!!!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி கதாநாயகராக வலம் வந்தவர் நடிகர் அர்ஜூன். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். படங்களில் நடிகராக மட்டும் நடித்து வந்த அர்ஜூன் தற்போது குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். படங்களில் நடிப்பது மட்டுமின்றி சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதோடு படங்களை இயக்கவும் செய்கிறார். இந்நிலையில் நடிகர் அர்ஜுன் தெலுங்கு சினிமாவில் தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக தான் இயக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

கட்டுப்பாடு இன்றி கடன் வாங்கும் மாநிலங்கள்…. வருத்தம் தெரிவித்த மத்திய நிதியமைச்சர்….!!!!

ஆா்எஸ்எஸ் அமைப்பின் மறைந்த முதுபெரும் தலைவா் பி.பரமேஸ்வரன் நினைவாக “கூட்டாட்சி அமைப்புமுறை: தற்சாா்பு இந்தியாவை நோக்கிய பாதை” எனும் தலைப்பில் கேரள மாநிலம்  திருவனந்தபுரத்தில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. இவற்றில் மத்திய நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் பங்கேற்றுப் பேசியதாவது, தங்களுடைய சக்தியை மீறி கடன் வாங்கவேண்டும் என்ற மாநிலங்களின் எண்ணமானது, நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கூடுதல் சுமைக்கு வழிவகுக்கும். அதாவது குறிப்பிட்ட சில மாநிலங்களானது கட்டுப்பாடு இன்றி கடன் வாங்குவதுடன், முறையற்ற செலவினங்களை அதிகம் […]

Categories
மாநில செய்திகள்

நம்பர் 311 என்னாச்சு!…..‌ முதல்வர் ஸ்டாலின் முடிவு என்ன?…. அரசு பள்ளி ஆசிரியர்கள் திடீரென போட்ட பிளான்….!!!!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில அளவிலான மாவட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் தலைமை தாங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2009 ஆம் ஆண்டிற்கு பிறகு நியமிக்கப்பட்ட அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் சங்க வேறுபாடுகள் இன்றி போராட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்கள் கடந்த 13 ஆண்டுகளாக வேதனையிலும் வறுமையிலும் வாடி வருகின்றனர். எங்களின் ஒற்றை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் ரவுடியை கடத்திய கூலிப்படை…. “5 பெண்களுடன் குடும்பம் நடத்திய உண்மை”…. போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்….!!!!

சேலம் ரவுடி கடத்தல் வழக்கில் கூலிப்படையைச் சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான பூபதி என்பவரும் அதே பகுதியே சேர்ந்த பிரவின் குமார் என்பவரும் நண்பர்கள். இவர்களைச் சென்ற 1-ம் தேதி மர்ம கும்பல் ஒன்று கடத்திச் சென்றது. ஆனால் அவர்களிடம் இருந்து பிரவீன் குமார் தப்பித்து விட்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதன்பின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvZIM : தினேஷ் கார்த்திக் இல்லை…. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்….!!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற வருகிறது. இன்றோடு 12 அணிகள் பங்கேற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைகிறது. ஏற்கனவே குரூப் 1 பிரிவிலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு சென்றுள்ளது.  இன்று மொத்தம் 3 போட்டிகள் நடைபெறுகிறது. அதில் முதலில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணியிடம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சூட்கேசுக்குள் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட தங்கம்”….. அதிகாரிகளின் அதிரடி செயல்…. இலங்கை இளைஞர் கைது…!!!!!!

நூதன முறையில் சூட்கேசுக்குள் கடத்தி வரப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து இலங்கை இளைஞரை கைது செய்தார்கள். சென்னை உள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவு தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தீவிரமாக கண்காணிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அப்போது போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எதுக்கு இப்படி!…. சிவகார்த்திகேயன் வளர்ச்சி பிடிக்காமல் வன்மத்தை கக்கும் கும்பல்….. பரவும் வதந்தி….!!!!

தமிழ் சினிமாவில் 3 திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். இவர் மெரினா படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு மான் கராத்தே, சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற தரமான படங்களை கொடுத்துள்ளார். இவரின் டாக்டர், டான் என்ற இரு திரைப்படங்கள் ரூ.100 கோடி வசூல் சாதனை செய்தது. சொல்லப்போனால் விஜய், அஜித் அடுத்த மார்க்கெட்டில் அதிக வசூல் சாதனை சிவகார்த்திகேயன் தான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. 2 மாதத்திலேயே ஆலியா இவ்வளவு எடை குறைந்துள்ளாரா?…. சஞ்சீவ் கொடுத்த சர்ப்ரைஸ்…..!!!!

மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஆலியா மானசா. இவர் விஜய் டிவியில் பிரவீன் பென்னட் இயக்கிய ராஜா ராணி தொடரில் சஞ்சீவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்க். அப்போது இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. தனது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தாலும் ஆலியா தனது காதலன் சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஐலா மற்றும் அர்ஷ் 2 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு சமீபத்தில் தான் 2-வது மகன் பிறந்தார். 2 வது பிரசவத்திற்கு பிறகு ஆலியா […]

Categories
தேசிய செய்திகள்

விதி-132: வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

வருமானவரி விதி-132 மத்திய நேரடிவரிகள் வாரியம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டது ஆகும். இப்பிரிவு 155(18) வருமானத்தின் மறுகணக்கீட்டைக் கையாள்கிறது. வருமானத்தினை மீண்டுமாக கணக்கிடுவதற்கு படிவம் 69 பயன்படுத்தப்படுகிறது. இவ்விதி வணிகர்கள் செலுத்தவேண்டிய வரி மீதான செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் குறித்த தகவல்களை வழங்குகிறது. வணிக லாபத்தின் மீதான வரி குறித்த விதிகள் தெளிவாக இருக்கிறது. எனினும் அதன் மீது செலுத்தப்படும் செஸ் (அ) கூடுதல் கட்டணம் விலக்குக்கு உட்பட்டதா இல்லையா என்பதை அறிந்துகொள்ள வேண்டும். பிரிவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸில் இருந்து வெளிய அனுப்பப்பட்ட போட்டியாளர் இவர்தான்…. வெளியான உறுதி தகவல்….!!!!

விஜய் டிவி டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9‌ ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் அமோகமாக வரவேற்பு பெற்ற போட்டியாளர் ஜி.பி.முத்து இருந்தார். ஆனால் இவர் இரண்டாவது வார முடிவில் பிக் பாஸ் வீட்டை விட்டு அவராகவே வெளியேறினார். அதன் பிறகு முதல் போட்டியாளராக மெட்டி ஒலி சாந்தி எலிமினேட் ஆனார். கடந்த வாரம் அசல் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரம்….. வலுவடையும் தாழ்வு பகுதி…. வெளியான புதிய எச்சரிக்கை….!!!

வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் வருகின்ற 9 ஆம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைய சாதகமான நிலை உள்ளது. தாழ்வு பகுதி உருவானதில் இருந்து அடுத்து 48 மணி நேரத்தில் வலுவடைந்து வட மேற்கு திசையில் தமிழக, புதுச்சேரி கரையை நோக்கி நகர்ந்து வரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் அடுத்த 3 மணி நேரங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!…. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தயாரான மீட்ப படையினர்…. வெளியான தகவல்….!!!

வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியுள்ளது அப்போதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதற்கிடையில் வங்க கடலில் வருகின்ற 9 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.‌இதனையடுத்து தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையின் 2408 வீரர்கள், 5093 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது என்று தமிழக வருவாய் பேரிடர் மேலாண்மை ஆணையராகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : வங்கதேசம் தோல்வி…. பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறியது.!!

வங்கதேச அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு சென்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற வருகிறது. இன்றோடு 12 அணிகள் பங்கேற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைகிறது. ஏற்கனவே குரூப் 1 பிரிவிலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு சென்றுள்ளது.  இன்று மொத்தம் 3 போட்டிகள் நடைபெறுகிறது. அதில் முதலில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்ததால் தென் ஆப்பிரிக்க […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கலாம்…. 9ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு..!!

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்காலில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை முதல் மூன்று நாட்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மாடியில் படுத்திருந்த விவசாயியை…. வெறிபிடித்து விடாமல் விரட்டிய குரங்குகள்…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!

உத்திரப்பிரதேசம் மாநிலம் பரேலியில் 40 வயது விவசாயி தன் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிந்தார். அப்போது அவரை குரங்குகள் கூட்டம் விரட்டியதில் மாடியிலிருந்து தவறி விழுந்துவிட்டார். அதாவது தன்னைத் தாக்கிய குரங்குகள் கூட்டத்திடமிருந்து காத்துக்கொள்ள முயற்சி செய்தபோது தவறுதலாக மொட்டைமாடியிலிருந்து விவசாயி விழுந்துள்ளார். இவர் முகேஷ்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உடனே பரேலி நகரிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி கடந்த வியாழக்கிழமை மாலை இறந்தார். குரங்குகள் தாக்கியதில் முகேஷ்குமார் தன் சம நிலையை […]

Categories
தேசிய செய்திகள்

பெண்ணுடன் பழகவைத்து…. தொழில் அதிபரை டார்ச்சர் செய்த கும்பல்…. வெளியான பரபரப்பு தகவல்கள்…. போலீஸ் அதிரடி….!!!!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தொழில் அதிபரை கட்டாயப்படுத்தி, ஒரு பெண்ணுடன் அவரை நிர்வாணமாக இருக்கும் அடிப்படையில் சித்தரித்து வீடியோ எடுத்து பணம் பறிப்பில் ஈடுபட்டதாக 3 பேரை டெல்லி காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அமிர் இக்பால் (52), முகமது அஸ்ரஃப் (50), ஃபிரோஜ் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது தொடர்பாக டெல்லி மூத்தபோலீஸ் அதிகாரி கூறியதாவது “உத்தரப்பிரதேசத்தின் சஹாரன்பூர் பகுதியில் மர வியாபாரம் செய்து வரும் 45 வயதான சந்தீப் அடிக்கடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#PAKvBAN : வங்கதேச அணி 127 ரன்கள் குவிப்பு…. இலக்கை சேஸ் செய்து அரையிறுதிக்கு செல்லுமா பாகிஸ்தான்?

சூப்பர் 12 போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 128 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது வங்கதேச அணி. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற வருகிறது. இன்றோடு 12 அணிகள் பங்கேற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைகிறது. ஏற்கனவே குரூப் 1 பிரிவிலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு சென்றுள்ளது.  இன்று மொத்தம் 3 போட்டிகள் நடைபெறுகிறது. அதில் முதலில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணியிடம் […]

Categories
மாநில செய்திகள்

மாணவிக்கு மஞ்சள் கயிறு கட்டிய பள்ளி மாணவன் வழக்கு: குழந்தைகள் நலக்குழுவினருக்கு ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

கடலூர் சிதம்பரத்தில் 16 வயது மாணவிக்கு சகமாணவர் ஒருவர் மஞ்சள் கயிற்றை கட்டுவது போன்ற காட்சிகள் சமூகவலைதளத்தில் வெளியாகியது. சென்ற செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகள், 12 தினங்களுக்கு பின் சமூகவலைதளத்தில் வெளியானது. இதனையடுத்து அக்..10ஆம் தேதி இதுகுறித்து அந்த மாணவனுக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோன்று மாவட்ட குழந்தைகள் நலக் குழு, 16 வயது மாணவியை அரசு காப்பகத்தில் சேர்த்தது. இதற்கிடையில் தன் மகளை குழந்தைகள் நலக்குழுவினர் எதற்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ!…. பிக் பாஸில் இருக்கும் நந்தினி இவ்ளோ கஷ்டத்தில் உள்ளாரா?…. மனந்திறந்து பேசிய கணவர்….!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ என்ற தொடரின் மூலம் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானவர் நந்தினி. அதன்பிறகு தொடர்ந்து நிறைய சீரியல்களில் நடித்து வந்தார். மைனா நந்தினியின் முதல் திருமணம் பிரச்சனையில் முடிந்தாலும், இப்போது யோகேஷ் என்பவரை மறுமணம் செய்து ஒரு மகனை பெற்று இருக்கிறார். தனது கணவருடன் இணைந்து Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இப்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கடைசி போட்டியாளராக களம் இறங்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு! செம…. அஜித் பட இயக்குனருடன் இணையும் கமல்ஹாசன்…. ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் அப்டேட்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமலஹாசன். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விக்ரம் படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து கமலஹாசன் யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்வி எழுந்தது. அப்போது சில இயக்குனரின் பெயர்கள் கூறப்பட்டது. ஆனால் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் கமல் ரசிகர்கள் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் ஸ்பெஷல் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#SAvNED : தென்னாப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வி…. அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா….!!

தென் ஆப்பிரிக்க அணி தோல்வி அடைந்துள்ளதால் இந்திய அரையிறுதிக்கு நுழைந்துள்ளது. ஐசிசி டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் காலை 5:30 மணிக்கு குரூப் 2 பிரிவிலிருந்து தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. இதையடுத்து எப்படியும் வென்றுவிடலாம் என்று […]

Categories
சினிமா

” அதில் ஒரு பெரிய வாய்ப்புக்காக தான் காத்திருக்கிறேன்”…. ஜான்வி கபூர் ஸ்பீச்….!!!!!

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஹிந்தியில் தடாக், ரோகி, குட்லக் ஜெர்ரி ஆகிய திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். இப்போது அவர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிலி என்ற படம் திரைக்கு வந்திருக்கிறது. முத்துக்குட்டி சேவியர் இயக்கி இருக்கும் இந்த படத்தின் புரமோஷனுக்காக ஐதராபாத் வந்திருந்த ஜான்வி கபூரிடம், ஏற்கனவே தேடிவந்த சில தெலுங்கு பட வாய்ப்புகளை தவிர்த்தது ஏன்..? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஜான்வி கபூர், ஹிந்தி படங்களில் நடித்துக்கொண்டிருந்ததால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகள் இயக்கும் புது படத்தில் ரஜினி…. வெளியான போஸ்டர்…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!!

நடிகர் ரஜினிகாந்த், அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க  தன் 171வது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினிகாந்த் தன் 170வது படத்தில் இயக்குநர் சிபி சக்கரவர்த்தியுடன் கைகோர்க்கிறார் என்ற தகவல் வெளியான நிலையில், தற்போது அவரது அடுத்த படத்தினை மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. ரஜினிகாந்த் நடிக்கும் இந்த இரண்டு படங்களையும் லைகா நிறுவனம்தான் தயாரிக்கிறது என அண்மையில் செய்தி வெளியாகியது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அச்சச்சோ! எல்லாமே போச்சே….. உறவினர்கள் செஞ்ச துரோகம்….. கை மீறி போன முக்கிய சொத்து…… கவலையில் சசிகலா….!!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் உள்ள பிரபலமான சத்யம் சினிமாஸ் நிறுவனத்தை சசிகலா 1000 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் பிறகு அம்மா ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்த இளவரசி, சசிகலா உள்ளிட்ட பலர் அதிமுக ஆட்சிக்காலத்தின் போது பல்வேறு சொத்துக்களை வளைத்து போட்டதாக புகார்கள் எழுந்தது. இருப்பினும் அந்த சமயத்தில் அதிமுக ஆட்சி நடந்து கொண்டிருந்ததால் பெரிதாக கண்டு கொள்ளப் படவில்லை. அதன் […]

Categories
உலக செய்திகள்

FLASH NEWS: பிரபல பாப் இசை பாடகர் ஆரன் கார்ட்டர் மர்ம மரணம்…!!!

அமெரிக்காவில் பிரபல பாப் இசை பாடகர் ஆரன் கார்ட்டர் (34) மர்ம மரணம் அடைந்துள்ளார். பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ் பாப் இசை குழுவுடன் ஒப்பந்தம் போட்டு பணியாற்றி வந்தவர் கார்ட்டர். இவர் கடந்த காலங்களில் மனநல பாதிப்பு ஏற்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில், தனது வீட்டில் ஆரன் கார்ட்டர் சந்தேகத்திற்குரிய வகையில் மரணமடைந்து கிடந்துள்ளார். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்பனையா…..? தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் விளக்கம்….!!!!

சென்னையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் பிரதாப் என்பவர் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 1996-ம் ஆண்டு தமிழக அரசு ஒரு அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த அரசாணையின்படி தமிழகத்தில் கண்ணாடி பாட்டில்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் பாட்டில்களில் மதுவை விற்பனை செய்வதற்கு முடிவு செய்துள்ளனர். பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். அதோடு ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் தொழிலில் 5 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களின் […]

Categories
மாநில செய்திகள்

“52 டோல்கேட் ஊழியர்கள் பணிநீக்கம்”…. மீண்டும் வேலையில் சேர வாய்ப்பு?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!!

இந்தியா ஒன்றிய துணை அமைச்சர் வி.கே சிங்கிடம் எம்.பி திருமாவளவன் மற்றும் எம்பி ரவிக்குமார் ஆகியோர் தனித்தனியே கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதன் பிறகு விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் 48 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் 27 திட்டங்கள் ஆக பிரிக்கப்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் அவுட்சோர்ஸ்  முறையில் டோல் பிளாசாக்களை துணை ஒப்பந்தம் செய்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடும் ஊழல்”….. பாஜகவில் இணையும் முக்கிய புள்ளிகள்…. எடப்பாடிக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் ஓபிஎஸ் தரப்பு….!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் ஒரு தனியார் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் வைத்து ஓபிஎஸ் அணியை சேர்ந்த புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக கட்சியில் அம்மா ஜெயலலிதாவை தவிர யாராலும் பொதுச் செயலாளர் பதவிக்கு வர முடியாது. எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டமானது தற்போது தண்ணீரில் மிதக்கிறது. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எடப்பாடி மற்றும் பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் சொல்லிக் கொள்ள முடியாத […]

Categories
மாநில செய்திகள்

HIGH ALERT: தமிழகத்தை தாக்க வரும் புயல்…. கனமழை தொடரும்….!!!

தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை தொடர்ந்து கனமழை பெய்தது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் நவம்பர் 9-ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைய சாதகமான சூழல் உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி 48 மணிநேரத்தில் வலுவடைந்து, தமிழகம், புதுச்சேரி கரையை நோக்கி நகரும். இதனால் தமிழகத்தில் கனமழை தொடரும். மேலும், குறைந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வருங்கால கணவரின் முதல் திருமணத்தில்…. டான்ஸ் ஆடிய ஹன்சிகா…. வெளியான வைரல் வீடியோ….!!!!!

பிரபல நடிகைகளில் ஒருவரான நடிகை ஹன்சிகா தன் தொழில் பங்குதாரரான சோகைல் கதுரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். இவர்கள் திருமணமானது 450 வருடங்கள் பழமையான புகழ்பெற்ற ஜெய்பூர் அரண்மனையில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சோகைல் கதுரியா பிரான்சின் ஈபிள் டவர் முன்னால் நின்று காதலை வெளிப்படுத்திய புகைப்படங்களை ஹன்சிகா சமூகவலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் ஹன்சிகாவின் வருங்கால கணவரான சோகைல் கதுரியா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் எனும் […]

Categories
மாநில செய்திகள்

“ஜெ. ஜெயலலிதாவின் குடும்பத்திற்கு புதிய வாரிசு”…. வாடகை தாய் முறையில் குழந்தை பிறந்ததா….? தீபா குழந்தையால் திடீர் சர்ச்சை….!!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெ. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. இவருடைய கணவர் மாதவன். இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆன நிலையில், குழந்தைகள் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் தீபா மற்றும் மாதவன் தம்பதிக்கு தற்போது சென்னையில் உள்ள வேளச்சேரி மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு வாடகை தாய் முறையில் குழந்தை பிறந்துள்ளதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் செய்தியாளர்கள் தீபாவை தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. அப்போது தீபா கூறியதாவது, […]

Categories

Tech |