Categories
உலக செய்திகள்

190 அடி ஆழ குகைக்குள் சிக்கிய முதியவர்கள்….. காபி மட்டுமே குடித்து 9 நாட்கள் உயிர் வாழ்ந்தார்களா….? வினோத சம்பவம்…..!!!!

190 அடி‌ குகைக்குள் சிக்கிய 2 முதியவர்களை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். தென்கொரியாவில் சிங் மைன் உடைப்பின் போது 56 மற்றும் 62 வயதுடைய 2 முதியவர்கள் பாதாள குழிக்குள் சிக்கிக் கொண்டனர். இந்த 2 முதியவர்களும் 190 அடி குகைக்குள் சிக்கிக் கொண்ட நிலையில் 9 நாட்களாக வெறும் காபித்தூளை மட்டும் கலக்கி குடித்து அவர்கள் உயிர் வாழ்ந்துள்ளனர். இவர்களை தற்போது மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்நிலையில் 2 முதியவர்களையும் பரிசோதனை செய்த […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் மிக மோசமான நிலையில் காற்று மாசு…. அரசின் திடீர் அறிவிப்பால் மக்கள் அதிருப்தி….!!!

தலைநகர் டெல்லியில் காற்று மாசு எப்போதுமே அதிகமாக இருக்கும் என்பதை பலரும் அறிந்திருப்போம். தற்போது டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமான பிரிவில் இருப்பதால் கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் நாளில் காற்றில் தரம் கடுமை என்ற பிரிவில் இருந்த நிலையில் தற்போது இரண்டாவது நாளாக இன்று காற்று மாசு மிகவும் மோசம் பிரிவில் இருந்து வருகின்றது. காற்றின் தரம் 326 புள்ளிகளாக உள்ளது. இதனால் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய […]

Categories
மாநில செய்திகள்

“10% இட ஒதுக்கீடு செல்லும்”..…. அடுத்து என்ன செய்வது….? வேதனையுடன் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை….!!!!!

இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 2019-ம் ஆண்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய  பிரிவினருக்காக 10 சதவீத இட ஒதுக்கீடு என்ற முறையை கொண்டு வந்தது. ஆனால் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் முறை அரசியலமைப்பில் இல்லை என கூறி நீதிமன்றத்தில் அரசியல் கட்சிகளின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு…. அரசு அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு கால அட்டவணை இன்று வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பத்து முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். தேர்வு முடிவுகள் மே மாதம் இறுதியில் வெளியிடப்படும்.கால அட்டவணை முன்கூட்டியே பள்ளிக்கல்வித்துறை சார்பாக வெளியிடப்படும்.ஆசிரியர்களும் தங்களை மாணவர்களை பொது தேர்விற்கு தயார் படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள். இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

இது வேற லெவல் போங்க!…. 150 கி.மீ சைக்கிளில் பயணித்து…. காதலியை கரம் பிடித்த நபர்…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

குஜராத்திலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியியலாளராக பணிபுரிந்து வரும் சிவசூர்யா (28) சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். இதேபோல் குஜராத்தின் ஆமதாபாத்தில் மென் பொருள் பொறியியலாளராக பணிபுரிந்து வருபவர் அஞ்சனா. இவர் கேரளா கண்ணூரை சேர்ந்த சத்யன் என்பவரின் மகள் ஆவார். இதில் சிவசூர்யா மற்றும் அஞ்சனா ஆகியோர் இடையே 2 வருடங்களாக நட்பு பழக்கம் இருந்துள்ளது. தற்போது இந்த நட்பு திருமணத்தில் முடிந்திருக்கிறது. கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவரான சிவசூர்யா உடல் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் நூற்றாண்டு கண்ட 38 ஆயிரம் ரயில்வே பாலங்கள்…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!

அண்மையில் குஜராத் மாநிலத்தில் மோர்பி மாவட்டத்தில் நூறாண்டு பழமையான தொங்குபாலம் ஒன்று புனரமைக்கப்பட்டு, மறு பயன்பாட்டுக்கு வந்த போது, இடிந்து விழுந்தது. நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இவ்விபத்தில் 130-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். மச்சுஆற்றின் நீரோட்டத்தின் அழகை பார்க்க இந்த பாலத்தில் சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிடுவது வழக்கம். ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இப்பாலம் சரியாக மறுசீரமைப்பு செய்யப்படவில்லை எனவும் துருப்பிடித்த பழைய கேபிள் வயர்கள், அதிக எடை உள்ளிட்டவை விபத்துக்கான காரணங்களாக கூறப்படுகிறது. இதன் காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

“கொலை செய்ய 3 மாதம் ஒத்திகை”….. ஜூஸில் கொஞ்சம் கொஞ்சமாக விஷம்….. வாலிபர் கொலையில் காதலியின் பகீர் வாக்குமூலம்…..!!!!!

தமிழக-கேரள எல்லையில் பாறசாலை மூறியன்கரை பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் ஜெயராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிஎஸ்சி ரேடியாலஜி படித்து வந்த சாரோன் ராஜ் என்ற 23 வயது மகன் இருந்துள்ளார். இவர் களியக்காவிளை அருகே உள்ள ராமவர்மன் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 14-ம் தேதி சாரோன் தன்னுடைய நண்பருடன் காதலி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவருடைய காதலி குடிப்பதற்கு கசாயம் மற்றும் குளிர்பானம் கொடுத்துள்ளார். அதன் பிறகு வீட்டில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : 10, 11, 12ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு..!!

2022 -23 ஆம் ஆண்டு பொது தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.. 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வர்களுக்கான கால அட்டவணையை சென்னையில் இன்று  வெளியிட்டார் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். அதன்படி  2022 – 2023ம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 06.04.2023 தொடங்கி, 20.04.2023 வரை நடைபெறவுள்ளது. 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான 11ம் வகுப்பு பொதுத்தேர்வு 14.03.2023 தொடங்கி, 05.04.2023 வரை நடைபெறவுள்ளது. 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான 12ம் […]

Categories
தேசிய செய்திகள்

மகளை காலேஜில் சேர்த்துவிட்டு…. மனம் உருகி ஆனந்த கண்ணீர் சிந்திய தந்தை…. வைரல் வீடியோ…..!!!!

தலைநகர் டெல்லியை சேர்ந்த ஒரு நபர் தன் மகளை காலேஜில் சேர்த்து விட்டு திரும்பிய போது ஆனந்த கண்ணீர் சிந்திய வீடியோவானது தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. டெல்லியை சேர்ந்த பிரிக்‌ஷா என்பவர் புது கல்லூரியில் சேர்ந்து இருக்கிறார். கல்லூரியில் சேர்வதற்காக தன் தாய் மற்றும் தந்தையுடன் பிரிக்‌ஷா ஆட்டோவில் சென்று உள்ளார். இந்நிலையில் தன் மகளை கல்லூரியில் விடுவதை எண்ணி பிரிக்‌ஷாவின் தந்தை கண்ணீர் சிந்துகிறார். அத்துடன் பிரிக்‌ஷாவின் தந்தையுடன் சேர்ந்து தாயும் மனம் கலங்கிய […]

Categories
உலக செய்திகள்

அட!…. பூமிக்கடியில் இப்படி ஒரு அதிசய கிராமமா…. அதுவும் ஆடம்பர வசதிகளுடன்….. கொடுத்து வச்ச மக்கள்….!!!!!

தெற்கு ஆஸ்திரேலியாவில் கூப்பர் லேடி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமமானது மண்ணுக்கடியில் அமைந்துள்ளது. இந்த தனி உலகமானது சுரங்கப்பாதையில் இருப்பது தான் மிகவும் சிறப்பு. இந்த சுரங்கப்பாதையில் 1500 வீடுகள் இருப்பதுடன் 3500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி ஒரு காலத்தில் பாலைவனமாக இருந்ததாகவும் அங்கு தட்பவெப்ப நிலை சரியாக இல்லாததால் மக்கள் வாழ்வதற்கு மிகவும் சிரமப்பட்டதன் காரணமாகவும் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 1915-ம் ஆண்டு சுரங்கப்பாதை பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பிறகு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளே…. “இதை மட்டும் செய்யாதீங்க”…. அமைச்சர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் விவசாயத்திற்காக துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், தமிழகத்தில் பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள், ரசாயன உரங்களை மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் போதுமான அளவு இருப்பு வைத்து விவசாயிகளுக்கு காலத்தே விநியோகம் செய்ய வேண்டும் என்று தமிழகம் முதல்வர் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். பயிர் சாகுபடிக்கு சாதகமான சூழ்நிலை கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாத வரை தென்மேற்கு பருவகாலத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குழப்பமில்லை..! அதிமுக தலைமையிலான கூட்டணியை பாஜக ஏற்கும் – அண்ணாமலை..!!

2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியை பாஜக ஏற்கும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது, 2024 தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்பதில் எந்த தவறும் இல்லை. பெரிய கட்சி என்கிற அடிப்படையில் கூட்டணிக்கு அதிமுக தலைமை ஏற்கலாம். அதிமுக தான் பெரிய கட்சி. அதிமுக கிட்டத்தட்ட தமிழகத்தின் உடைய மிகப்பெரிய கட்சி, பலம் வாய்ந்த கட்சி, தொடர்ந்து ஆட்சியில் பல காலங்களில் இருந்த ஒரு கட்சி. […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பரோ சூப்பர்!… விப்ரோ ஊழியர்களுக்கு டபுள் ஜாக்போட்….. வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ தனது ஊழியர்களுக்கான வேரியபிள் தொகை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் காலாண்டுக்கு ஊழியர்களுக்கு 100% வேரியபிள் செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் நவம்பர் மாதத்திற்கான சம்பளத்துடன் சேர்த்து வேரியபிள் பே தொகையும் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனால் நவம்பர் மாதத்தில் விப்ரோ ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் தான் கூறப்படுகிறது. இருப்பினும் டீம் லீடர் அளவிலான பொறுப்புகளில் இருக்கும் ஊழியர்களுக்கு மட்டுமே 100% வேலை கிடைக்கும். A முதல் B3 […]

Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. 2023 ஆம் ஆண்டு ஜனவரி 31 வரை இலவசம்…. அசத்தல் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் உள்ள ஓய்வூதியதாரர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியம். அப்படி சமர்ப்பித்தால் மட்டுமே பென்ஷன் தொடர்ந்து வரும்.எனவே ஓய்வூதியதாரர்கள் எளிதாக வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும் வகையில் தபால் துறையும் பல்வேறு வங்கிகளும் நேரடியாக ஓய்வூதியதாரர் வீட்டில் வாழ்நாள் சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்கான வசதியை அறிமுகம் செய்துள்ளனர். மேலும் டிஜிட்டல் வாழ்நாள் சாலைகளை சமர்ப்பிக்கும் வசதியும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி ஓய்வூதியதாரர்கள் தங்கள் வீட்டில் இருந்தே […]

Categories
தேசிய செய்திகள்

இன்று ஓய்வு பெறுகிறார் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி… சிறப்பு அமர்வு நடவடிக்கைகள் இணையத்தில் நேரடி ஒளிபரப்பு…!!!!!

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி யுயு லலித் இன்று ஓய்வு பெறுகின்றார். கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்றுக்கொண்டார். இந்த நிலையில் யு.யு.லலித்தின் பனிக்காலம் நாளையுடன் (நவ.8) நிறைவடைய உள்ளது. ஆனால் நாளை குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று கடைசி நாளாக யு.யு.லலித் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பணியாற்ற உள்ளார். இதனை முன்னிட்டு அவர் தலைமையில் கூடும் சிறப்பு […]

Categories
உலக செய்திகள்

பசிக்கொடுமை – அதிர வைக்கும் பட்டியல்…. இந்தியாவுக்கு இப்படி ஒரு நிலையா…???

உலக அளவில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 116 நாடுகளில் இந்தியா 101 வது இடம் என்ற மோசமான இடத்தை பெற்றுள்ளது.முந்தைய ஆண்டில் இந்த பட்டியலில் 94 ஆவது இடத்திலேயே இந்தியா இருந்த நிலையில் அதை காட்டிலும் மோசமான நிலைக்கு 2021 ஆம் ஆண்டு போனது.குழந்தைகள் உரிய எடை இல்லாமல் இருப்பது 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த போது 15.1 சதவீதமாக இருந்தது. அது 2022 ஆம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

என்ன இப்படி சொல்லிட்டீங்க…! PJP, RSS வேடிக்கை காட்டும் அரசியல்…. பங்கமாக கலாய்த்த திருமாவளவன்….!!!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழகம் மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் மருது பாண்டியர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாளன் கலந்து கொண்டார். அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய அவர், இரட்டை இலை தற்போது இரட்டை தலையாக உருவெடுத்துள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற மாபெரும் சக்திகள் இருந்தால் சனாதன சக்திகள் தமிழகத்தில் நுழைய முடியவில்லை. பாஐகவும், ஆர்எஸ்எஸ் தமிழகத்தில் வேடிக்கை அரசியலை அரங்கேற்றி வருகிறது. அதனை தொடர்ந்து இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு […]

Categories
அரசியல்

இவ்வளவு சாதனைகளா?… நடிகர் முதல் அரசியல்வாதி வரை ஒரு தசாவதாரம்….!!!!

நடிகர் கமலஹாசன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் வழக்கறிஞர் டி.சீனிவாசன்-ராஜலட்சுமி தம்பதிக்கு 1954-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ஆம்  தேதி கடைக்குட்டி மகனாக பிறந்தவர் பார்த்தசாரதி என்ற கமலஹாசன். இவருக்கு 2  அண்ணன் ங்களும், ஒரு அக்காவும் இருக்கிறார்கள். தொடக்க கல்வியை பரமக்குடியில் முடித்தார். பின்னர் சென்னையில் உள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் படிப்பை தொடர்ந்தார்.   மேற்கொண்டு படிப்பை தொடர முடியாமல் போனதற்கு காரணம் சிறு வயது முதலே அவர் […]

Categories
மாநில செய்திகள்

10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அட்டவணை…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு கால அட்டவணை இன்று வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டிற்கான 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட உள்ளார் . அதிலும் குறிப்பாக பத்து முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். தேர்வு முடிவுகள் மே மாதம் இறுதியில் […]

Categories
மாநில செய்திகள்

10% இடஒதுக்கீடு தீர்ப்பு….. சமூகநீதி போராட்டத்துக்கு பின்னடைவு…. முதல்வர் ஸ்டாலின்.!!

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு சமூகநீதி போராட்டத்தில் பின்னடைவு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சமூக நீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திட ஒருமித்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும். சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு காலப் போராட்டத்தில் 10% ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு […]

Categories
தேசிய செய்திகள்

5G போன் வாங்க யாரும் அவசரபடாதீங்க!…. ஏன் தெரியுமா?…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

மக்கள் பல பேரும் 5G ஸ்மார்ட் போன்களை வாங்குவதிலும், 5ஜி நெட்வொர்க் சேவையை பெறுவதிலும் ஆர்வம்காட்டி வருகின்றனர். நம் நாட்டில் ரிலையன்ஸ் JIO, பார்தி ஏர்டெல் நிறுவனர்கள் தன் 5Gசேவையை படிப் படியாக பல்வேறு நகரங்களுக்கு விரிவுபடுத்தும் சேவையை துவங்கியிருக்கிறது. இதற்கிடையில் மக்கள் பல பேரும் தங்களுக்கு எப்போது இச்சேவை கிடைக்கும் என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். டிசம்பர் 2023 ஆம் வருடத்திற்குள் நாடு முழுதும் 5G சேவையை அளிப்பதாக JIOநிறுவனம் தெரிவித்து இருக்கிறது. அதேபோன்று ஏர்டெல் நிறுவனமும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!… நவம்பர் 1 முதல் மாறிய முக்கிய 5 விதிகள்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்திய ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கைக் குழுவின் (எம்பிசி) கூட்டத்தை நவம்பர் 3ம் தேதி கூட்ட அறிவித்தது. ரெப்போ விகிதம் 190 அடிப்படை புள்ளிகள் அதிகரித்தபோதிலும் பணவீக்கம் உயர்ந்துக்கொண்டே தான் செல்கிறது. ஆகவே இக்கூட்டத்தில் வட்டிவிகித உயர்வு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு, பிறகு வீட்டுக்கடன்கள் மற்றும் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட பிற கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயரலாம். 2021-2022 நிதி ஆண்டிற்கான வரிக்கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் 30 முதல் நவம்பர் 7, 2022 வரை 7 நாட்களுக்குத் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா-சீனா எல்லை…. கடைசி கிராம மக்களின் தொடரும் ஒரே கோரிக்கை…. அரசின் முடிவு என்ன….????

இந்தியா-சீனா எல்லை பகுதியில் இமாசலப் பிரதேசத்தில் இருக்கும் நாட்டின் கடைசி கிராமம் கின்னெளர் மாவட்டம் சித்குல் கிராமம் ஆகும். இந்த கிராம மக்கள் தொடர்ந்து ஒரே கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். அதாவது,‌ சித்குல் கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தோ-தீபெத் எல்லை காவல் படையை தும்தி கிராமத்துக்கு மாற்ற வேண்டும் என்பதை அவர்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது. இந்த கிராமத்துக்கு சித்குலில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இரண்டு காரணங்களுக்காக இவர்கள் இந்த கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். அது என்னவென்றால், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பாலியல் வன்கொடுமை….. பிரபல கிரிக்கெட் வீரரை இடைநீக்கம் செய்து இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடி உத்தரவு.!!

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான தனுஷ்க குண திலகாவை இடைநீக்கம் செய்து இலங்கை கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற தனுஷ்க குணதிலகாவை சிட்னி போலீசார் கைது செய்தனர். இது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் திரு. குணதிலகா கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தேசிய வீரர் தனுஷ்க குணதிலகாவை […]

Categories
தேசிய செய்திகள்

“கடந்த ஆட்சியில் ஊழல்களை செய்த காங்கிரஸ்”…. கடுமையாக விமர்சித்த மத்திய அமைச்சர்…!!!!

இமாச்சலப் பிரதேசத்தில் வருகின்ற 12ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மாநிலத்தில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் பாஜகவும், காங்கிரஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் காங்கரா மாவட்டத்தில் பாஜக சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம்‌ நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கடந்த 10 ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள். ஆனால் அவர்கள் பெரிய ஊழல்களில் ஈடுபட்டனர். இப்போது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : முன்னாள் எம்எல்ஏ துரை.கோவிந்தராஜன் காலமானார்…!!

முன்னாள் எம்எல்ஏவும், எம்ஜிஆர் ஆட்சியில் அரசு கொறடாவாகவும் இருந்த துரை. கோவிந்தராஜன் காலமானார். கந்தர்வகோட்டை, திருவோணம், திருவையாறு தொகுதிகளில் போட்டியிட்டு வென்றவர் துரை கோவிந்தராஜன் (85). ஒரத்தநாடு அருகே வடக்கூரை சேர்ந்த துரை.கோவிந்தராஜன் உடல்நல குறைவால் தஞ்சையில் காலமானார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் .

Categories
மாநில செய்திகள்

ஷாக்: ஓடும் ரயிலில் இருந்து கழன்று சென்ற 2 பெட்டிகள்…. பயத்தில் அலறிய பயணிகள்…. பின் நடந்த சம்பவம்….!!!!

சென்னை சென்ட்ரலிலிருந்து நேற்று முன்தினம் இரவு 10 மணி வாக்கில் சேரன் எக்ஸ்பிரஸ் கோவைக்கு புறப்பட்டது. அதில் என்ஜினுடன் சேர்த்து மொத்தமாக 23 பெட்டிகள் இருந்தது. இரவு 11 மணி வாக்கில் ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்தின் 4வது நடைமேடை வழியே சென்றது. இந்நிலையில் ரயிலின் S7, S8 ஆகிய 2 பெட்டிகளை இணைக்கும் இரும்பு கொக்கி திடீரென்று பலத்த சத்தத்துடன் உடைந்தது. இதில் S8 பெட்டியுடன் இணைந்திருந்த 16 பெட்டிகள் தனியாக கழன்று ஓடியது. அதேபோன்று […]

Categories
மாநில செய்திகள்

“அன்புத்தோழருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்”…. என்றென்றும் நன்றியுடன்….. கமல்ஹாசன் ட்விட்.!!

தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசன் இன்று தனது 68 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முக ஸ்டாலின் தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அமிதாப் பச்சனின் மகள் ரூ. 3000 சம்பளத்துக்கு வேலைக்கு செல்கிறாரா…..? அட என்னப்பா இப்படி சொல்லிட்டீங்க….!!!!!

இந்தி திரை உலகில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் அமிதாப்பச்சன். இவர் திரை உலகில் சம்பாதித்து ரூ.3396 கோடி மதிப்பு சொத்து உள்ளது. அவரது மகன் அபிஷேக் பச்சக்ன், மருமகள் ஐஸ்வர்யாராய் என எல்லோரும் சினிமாவில் கோடி கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள். அமிதா பச்சன் சொந்த மகள் ஸ்வேதா பச்சன் நிகில் நந்தா என்ற டெல்லி தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். அவரது மகள் நவ்யா நவேலி விரைவில் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். சமீபத்தில் அமிதாப்பச்சன் […]

Categories
தேசிய செய்திகள்

“குடும்ப பாசம், உறவுகளை முற்றிலும் துறக்கிறேன்”…. என் வாழ்க்கையில் இனி துறவு மட்டுமே….. உமா பாரதி அறிவிப்பு…..!!!!!

தேசிய அளவிலான அரசியலில் பாஜகவின் எழுச்சியை தூண்டியவரும், ராமர் கோவில் இயக்கத்தின் மிக முக்கியமான தலைவராகவும், அரசியல்வாதியாகவும் இருப்பவர் உமா பாரதி. இவர் தற்போது டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 1992-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி நான் தீட்சை வாங்கி சன்னியாசம் பெற்றேன். என்னுடைய குரு ஜெயின் முனி ஆச்சார்யா வித்யாசாகர் மகராஜ். இவருடைய அறிவுறுத்தலின் பேரில் நான் 30 வருடம் ஆன்மீகத்தில் இருந்ததன் காரணமாக என்னுடைய குடும்பம் வந்த பாசங்கள் போன்றவற்றை துறக்கிறேன். […]

Categories
தேசிய செய்திகள்

அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் கட்டாயப் பணி திட்டம் ரத்து?….. மத்திய அரசின் அதிரடி முடிவு…..!!!!!!

இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் படிக்கும் மாணவர்கள் தங்களுடைய படிப்பு முடிந்த பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தாங்கள் படிக்கும் மருத்துவமனையில் வேலை பார்க்க வேண்டும். இதற்கான ஒப்பந்தம் செய்யப்படும் நிலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்க்க முடியாத மருத்துவர்கள் குறிப்பிட்ட அபராத தொகையை மாநிலத்தில் செலுத்த வேண்டும். இந்த ஒப்பந்த கொள்கை செல்லுபடியாகும் என கடந்த 2019-ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகு இது தொடர்பான விரிவான கொள்கையை ஆராய்வதற்காக மருத்துவர் பி.டி. அதானி […]

Categories
மாநில செய்திகள்

10,11, 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான கால அட்டவணை இன்று வெளியீடு..!!

10,11, 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான கால அட்டவணை இன்று வெளியிடப்படுகிறது. 2022-23ஆம் கல்வி ஆண்டிற்க்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று மதியம் 2:30 மணிக்கு வெளியிடுகிறார்.

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து விதிமீறல் அபராதம் உயர்வு….. அரசாணையை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு.!!

போக்குவரத்து விதிமீறலுக்காக விதிக்கப்பட்ட அபராதத்தை அதிகரித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரித்து கடந்த அக்டோபர் மாதம் தமிழக அரசு சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி, மதுரையை சேர்ந்த ஜலாலுதீன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதத்தை பல மடங்கு அதிகரித்ததன் மூலம் தினக்கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், […]

Categories
அரசியல்

வேற லெவல்!!… 68-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கமலஹாசன்…. குஷியோ குஷியில் ரசிகர்கள்….!!!!

கமலஹாசன் தனது 68-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். 1954-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ஆம்  தேதி இந்திய திரைப்பட நடிகரும், அரசியல்வாதியுமான கமலஹாசன் பிறந்தார். இவர் தனது சிறு வயது முதலே  நடிக்க ஆரம்பித்தார். மேலும் இவர் சில திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவரின் மாறுபட்ட வேடங்களை கொண்ட நடிப்பிற்காக பரவலாக  அறியப்பட்டார். மேலும் இவர் சிறந்த நடிகர் என்ற முறையில் 4 தேசிய விருதுகளும், சிறந்த படம் எந்த முறையில் தயாரிப்பாளராக ஒரு தேசிய விருதும், […]

Categories
மாநில செய்திகள்

“இதில் மாற்றத்தை ஏற்படுத்த பாஜக தினசரி உழைக்கிறது”…. அண்ணாமலை அதிரடி ஸ்பீச்….!!!!

பா.ஜ.க மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில் மாநில மருத்துவ அணி செயலாளர் கோமதி விஸ்வநாதன் ஏற்பாட்டில் மாதவரம் பஜாரில் தாமரை கிளினிக் தொடக்கவிழா மற்றும் மாவட்ட பொருளாளர் குமரன் ஏற்பாட்டில் ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியானது மாத்தூரில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது அவருக்கு அம்பத்தூர் தொகுதி சார்பாக பாடி மேம்பாலம் அருகில் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. இதையடுத்து அண்ணாமலை  செய்தியாளர்களிடம் […]

Categories
மாநில செய்திகள்

புற்றுநோய் விழிப்புணர்வு! 6 மணி்நேரம் சிறுவன் செய்த செயல்…. உலக சாதனை புத்தகத்தில் கிடைத்த இடம்….!!!!.!!!

புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுவன் கார்த்திக் தொடர்ந்து 6 மணி்நேரம் வாள்வீசி சாதனை படைத்தார். கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த அழகர் சாமி-கீதா தம்பதியினரின் மகன் கார்த்திக்(14) ஆவார். இதில் கார்த்திக் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிலம்பம் கலையின வாள்வீச்சை தொடர்ந்து 6 மணிநேரம் சுற்றி 3 உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். முன்பாக துடியலூர் பகுதியிலுள்ள உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அதிகாலையில் தன் சாதனையை துவங்கிய கார்த்திக் 6 […]

Categories
அரசியல்

தமிழக முதல்வர் முதல் இயக்குனர் சங்கர் வரை….. உலக நாயகனுக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்…. வைரல் பதிவு….!!!!

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிகராக மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர், நடன ஆசிரியர், பின்னணி பாடகர், பாடலாசிரியர்‌ என பன்முகத் திறமைகளை கொண்டவர். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு கமலின் 234-வது திரைப்படத்தில் 35 வருடங்களுக்குப் பிறகு மணிரத்தினம் இயக்குகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட! பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யாவா இது…. சீரியலை விட்டு வெளியேறியதும் என்னா கவர்ச்சி…. இணையத்தை கலக்கும் கிளிக்ஸ்…..!!!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட்டான சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர் சீரியலும் ஒன்று. இந்த தொடர் கிட்டத்தட்ட நான்கு வருடங்களை கடந்து ஓடிக் கொண்டு இருக்கிறது. அந்த தொடரில் உள்ள முல்லை கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது. முதலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா இறந்த பிறகு அவருக்கு பதிலாக நடிகை காவியா அறிவுமணி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். அதன் பிறகு காவியாவும் சமீபத்தில் சீரியலில் இருந்து வெளியேறினார். அதற்கான காரணத்தை அவர் அறிவிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு!….. Enjoy Enjaami போல இணையத்தை கலக்கும் புதிய பாடல்…… செம வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனி ‘நான்’ திரைப்படத்தில் ‘தப்பெல்லாம் தப்பே இல்லை’ பாடலை எழுதி அறிமுகமானவர் இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின். இவர் ஏற்கனவே விசுவாசம், அண்ணாத்தை படங்களுக்கு எழுதிய புரொமோ பாடல்கள் வைரலாகியது. அதுமட்டுமில்லாமல் ஜெயலலிதாவின் இரங்கல் பாடலை இவர்தான் எழுதியுள்ளார். இந்நிலையில் இவர் “ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்” என்ற பாடலை எழுதியுள்ளார். இந்த பாடல் காதலனால் ஏமாற்றப்பட்ட பெண்களின் சர்வதேச கீதமாக வெளியாகி உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே….! பசி கொடுமையில் இந்தியாவின் நிலை…. அதிர வைக்கும் பட்டியல்….!!!

கொடுமையிலும் கொடுமையானது பசி கொடுமை. இன்றளவும் உலகின் பல நாடுகளில் ஏராளமானவர்கள் பசி கொடுமையால் உயிரிழந்து வருகின்றனர். கடந்த 2021 ஆம் வருடம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 116 நாடுகளில் இந்தியா 101 வது இடம் என்ற மோசமான இடத்தை பெற்றுள்ளது. 2020 ஆம் வருடத்தில் இப்பட்டியலில் 94வது இடத்தில் இருந்த இந்தியா அதை காட்டிலும் 2021 ஆம் வருடத்தில் மோசமான நிலைக்கு ஆனது. குழந்தைகள் உரிய எடை இல்லாமல் இருப்பது 2014 ஆம் வருடம் 15. […]

Categories
அரசியல்

“திரைப்பயணத்தின் பல்வேறு முகங்கள்”‌….. கமல்ஹாசனின் கலை அர்ப்பணிப்புகள்….. இதோ ஓர் சிறப்பு பார்வை….!!!!!

பன்முக தன்மைகளை கொண்ட கமல் குறித்து ஓர் பார்வை. தமிழ் சினிமா உலகில் உச்ச நடிகராக வலம் வருகின்றார் கமல்ஹாசன். இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் 1954 ஆம் வருடம் நவம்பர் 7ஆம் தேதி பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை பரமக்குடியிலேயே படித்தார். இதன் பின் திருவல்லிக்கேணியில் இருக்கும் இந்து உயர்நிலைப் பள்ளியில் தனது படிப்பை தொடர்ந்தார். இதையடுத்து எட்டாம் வகுப்பு வரை சென்னையில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். இதன்பிறகு அவரால் படிப்பை […]

Categories
சினிமா

காரின் மேற்கூரையில் அமர்ந்து பயணம்…. சிக்கலில் சிக்கிய பவன் கல்யாண்?…. வெளியான பரபரப்பு வீடியோ….!!!!

ஜனசேனா கட்சி என்பது ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலுள்ள ஒரு இந்திய அரசியல் கட்சி ஆகும். இவை மார்ச் 2014-ஆம் வருடம் பவன்கல்யாணால் உருவாக்கப்பட்டதாகும். ஜனசேனா என்பதற்கு தெலுங்கில் மக்கள் ராணுவம். தெலுங்கு நடிகர் மற்றும் அரசியல்வாதியும் ஆன பவன்கல்யாண் ஆந்திர மாநிலம் குண்டூரிலுள்ள இப்டாம் என்ற கிராமத்தை எவ்வாறு சென்றடைந்தார் என்ற வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவில், பவன்கல்யாண் தன் ஓடும் கார் மேலே அமர்ந்து இருப்பதையும், அவரது ஆதரவாளர்கள் மற்றும் பாதுகாப்பாளர்கள் வாகனத்தின் […]

Categories
அரசியல்

உலகநாயகன் கமல்ஹாசனின் திறமைகள்…. முழு விவரம் இதோ….!!!!!

1954 ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசன் பிறந்துள்ளார். இவருக்கு சினிமா மிகவும் பிடிக்கும் என்பதால் தனது பன்முக திறமையை வெளிபடுத்தியுள்ளார். மேலும் கமல்ஹாசன் 4 வயதாக இருக்கும்போது களத்தூர் கண்ணம்மா என்னும் திரைப்படத்தில் நடித்ததற்காக தங்கப்பதக்கம் ராஷ்டிரபதி விருது வழங்கப்பட்டது. சமீபத்திய விஸ்வரூபம் தவிர கமல்ஹாசனை பின் தொடர்பவர்கள் அல்லது சினிமா ரசிகன் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைபடங்களாகும் சாகர், நாயகன், புஷ்பக விமான, ஏக் டுஜே கே லியா, இந்தியன் ஆம் பிரபல […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த இரண்டு மணி நேரத்தில்…. நான்கு மாவட்டங்களில்…. அலர்ட் மக்களே…!!!

தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை தொடர்ந்து கனமழை பெய்தது. இந்த நிலையில்  சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இடி , மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாக உள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓ அப்படியா!…. “வாரிசு படம் இப்படி தான் இருக்குமாம்”….. பிரபல நடிகை கூறிய சூப்பர் தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனதுகென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. சமீபத்தில் வாரிசு படத்தின்‌ “ரஞ்சிதமே ரஞ்சிதமே” முதல் பாடல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்னங்க…! கேட்டை பிடித்தபடி சிலையாக நின்ற கணவர்…. அடுத்த நொடியே மனைவியும்…. பெரும் சோக சம்பவம்….!!!

சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வந்தவர்கள் மூர்த்தி – பானுப்பிரியா தம்பதியினர். மூர்த்திக்கு 80 வயதும், பானுமதிக்கு 76 வயதும் ஆகின்றது. இவர்கள் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது மழை காலம் என்பதினால் அங்குள்ள இரும்பு கேட்டில் உள்ள அலங்கார விளக்குகளில் மின்கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது இதை அறியாத மூர்த்தி அங்கு வந்து மின் விளக்கை தொட்ட போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து உள்ளது. இதை பார்த்து அவருடைய […]

Categories
அரசியல்

நவீன யுகத்தில் மாறிவரும் வாழ்க்கை முறையால் ஏற்படும் கொடிய நோய்கள்…… தடுக்கும் வழிமுறைகள் இதோ….!!!

உலக அளவில் மனிதர்களுக்கு வரும் கொடூர நோய்களில் இதய நோய்களை அடுத்து புற்று நோய்கள் தான் இருக்கிறது. புற்றுநோய் என்பது உடலில் உள்ள உயிரணுக்களில் ஒழுங்கற்ற விபரீதமான வளர்ச்சியே ஆகும். இந்த வளர்ச்சியானது மற்ற சாதாரண உயிரணுக்களின் வளர்ச்சியை விட மிக அதிகமாக இருப்பதால் பக்கத்தில் உள்ள உடல் உறுப்புகளின் உயிரணுக்களையும் பாதித்து உடலில் மற்ற பாகங்களுக்கும் பரவும் தன்மை உடையது ஆகும். இந்த புற்றுநோய் எங்கோ? யாருக்கோ? உள்ளது என்று இருந்தது. தற்போது இந்தியாவில் புற்றுநோயற்றோர் […]

Categories
அரசியல்

புற்றுநோய் அறிகுறிகள்… தெரிந்து கொள்வது எப்படி…? இதோ முழு விவரம்…!!!!

சத்தம் இல்லாமல் நமது உடலில் உருவாகி கொஞ்சம் கொஞ்சமாக நம்மை இறப்பின் வாயிலுக்கு அழைத்துச் செல்லும் நோய்களில் புற்றுநோயும் ஒன்றாக விளங்குகிறது. புற்றுநோய் வந்து விட்டாலே இறப்பு உறுதி தான் என்ற நிலை மாறி தற்போது அதற்கான சிகிச்சைகள் வந்துவிட்டது. இருப்பினும் கூட மக்களிடையே புற்றுநோய் பற்றிய பயமும் பாதிப்பும் அதிகமாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் புற்றுநோய் அறிகுறிகள் மற்றும் இந்த நோயினால் ஏற்படும் பயத்தில் இருந்து விடுபடும் வழிமுறையை பற்றி இங்கே நாம் தெரிந்து […]

Categories
தேசிய செய்திகள்

BIG BREAKING: 10% இடஒதுக்கீடு (EWS) செல்லும்…. பரபரப்பு தீர்ப்பு…!!!

கல்வி & வேலைவாய்ப்பில் உயர் சாதி ஏழைகளுக்கு வழங்கப்பட்ட 10% இடஒதுக்கீடு (EWS) செல்லும் உச்சநீதிமன்ற 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளனர். 103வது அரசியல் சாசனத் திருத்தம் மூலம் 2019ல் மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திருத்ததிற்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடுத்த வழக்கில் தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பீலா திரிவேதி தீர்ப்பு அளித்துள்ளனர்

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 % இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் – உச்சநீதிமன்றம்..!!

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என 5 நீதிபதிகள் அமர்வில் 3 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். அனைவரும் இலக்குகளை அடைய தேவையான கருவியாக இட ஒதுக்கீடு பயன்படுகிறதுஎன்றும், 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது சமத்துவத்திற்கு எதிரானதாக அமையவில்லை என்று நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.  

Categories

Tech |