Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“இனிமேல் யாரும் பெண் தர மாட்டார்கள்” மனநலம் பாதிக்கப்பட்டு வாலிபர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முட்டாஞ்செட்டி ஊராட்சி மேல தெருவில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எலக்ட்ரீசியனான பாலகுமார்(31) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட வேலைக்கு செல்லாமல் இருந்த பாலகுமார் திருமணம் ஆகவில்லை என மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனையடுத்து இனிமேல் தனக்கு யாரும் பெண் தர மாட்டார்கள் என நினைத்து பாலகுமார் விஷம் குடித்து மயங்கி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“அக்காள் மீது அளவில்லாத பாசம்”…. தங்கை எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மருவத்தூர் கிராமத்தில் விவசாயியான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா, பவித்ரா(21) என்ற மகள்கள் இருந்துள்ளனர். இதில் சத்யா ஓதியம் கிராமத்தில் வசிக்கும் கனகராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இதனையடுத்து பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு பவித்ரா வீட்டில் இருந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சத்யா உயிரிழந்தார். அதிலிருந்து யாரிடமும் பேசாமல் மன உளைச்சலில் இறந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விடுமுறை நாட்களில் கேட்டரிங் சர்வீஸ்…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!!

சரக்கு வேனில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் ஜெல்சன்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காரைக்குடியில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். விடுமுறை நாட்களில் ஜெல்சன் தனது நண்பர்களோடு விசேஷ வீடுகளில் கேட்டரிங் சர்வீஸ் செய்து வந்தது வழக்கம். இந்நிலையில் கேட்டரிங் சர்வீஸ் செய்வதற்காக ஜெல்சன் தனது நண்பர்களுடன் சரக்கு வேனில் கொத்தமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உங்கள முழுசா இன்னும் படிச்சு முடிக்கல…. நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்த்து…. தெரிவித்த பிரபல நடிகர்….!!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கமல்ஹாசனுக்கு திரையுலக பிரபலங்கள் நேற்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளானர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரும், பல திறமை கொண்டவரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு நேற்று 68-வது பிறந்த நாளாகும். இவரது பிறந்தநாளை தொடர்ந்து மக்கள் நீதிமய்யம் கட்சியினர் தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தனர். தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு சம்பவம்…. 6 பேருக்கு நீதிமன்ற காவல்…. கோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

கார் வெடிப்பில் சம்பந்தப்பட்ட 6  பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் அருகே கடந்த மாதம் 23-ஆம் தேதி நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தில் காரில் இருந்த ஜமேஷா மூபீன்  என்பவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முபீன் வீட்டில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் ஏராளமான வெடிபொருட்கள், ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையதற்கான பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து போலீசார் முகமது தல்கா, முகமது அசாருதீன், […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பயங்கர விபத்து…. ஆற்றில் மூழ்கிய 35 பேர்…!!!

உபி, பாரபங்கியில் பயங்கரமான படகு விபத்து நிகழ்ந்துள்ளது. ஏறக்குறைய 35பேரை ஏற்றிக்கொண்டு சிம்லி ஆற்றைகடக்கும்போது படகு கவிழ்ந்தது.இதில் பயணித்த அனைவரும் ஆற்றில் விழுந்தனர். இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தது அனைத்தும் குழந்தைகள். சிலர் நீந்தி ஆற்றை கடந்தனர். சிலர் மூழ்கினர். மூழ்கியவர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. “இந்தியன் 2” படக்குழுவினருடன்…. தனது பிறந்த நாளை கொண்டாடிய பிரபல நடிகர்….!!!!

நடிகர் பாபி சிம்ஹா தனது பிறந்தநாளை இயக்குனர் ஷங்கர் மற்றும் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும், “இந்தியன் 2” படத்தில் நடித்து வருகின்றார் நடிகர் பாபி சிம்ஹா. இவர் பீட்சா, சூது கவ்வும், நேரம், ஜிகிர்தண்டா மற்றும் இறைவி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் “ஜிகிர்தண்டா” படத்தில் அசால்ட் சேதுவாக நடித்ததற்காக தேசிய விருது கிடைத்தது. இது மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

நாங்கள் எப்போதும் brothers தான்…. TTV -யை விரைவில் சந்திப்போம்…. ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி….!!!!

ஓ.பன்னீர்செல்வம் இன்று  செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். திருச்சியில் இன்று செய்தியாளர்களை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அப்போது டிடிவி தினகரன் அதிமுக கூட்டணி அமைத்தால் சேர தயார் என்று கூறியிருப்பதை நான் வரவேற்கிறேன். மேலும் அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் நான் சந்திப்பேன். இதனையடுத்து வரும் 12-ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார். அப்போது அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தாலும் நாங்கள் சந்திப்போம். இந்நிலையில் திமுகவும் அதிமுகவும் எப்பொழுதும் நாங்கள் அண்ணன் தம்பி தான். ஆனால் நாங்கள் […]

Categories
மாநில செய்திகள்

அரசாணை எண் 115 திரும்ப பெறுங்கள்….. திமுக அரசிற்கு எச்சரிக்கை விடுத்த டிடிவி தினகரன்….!!!!

தமிழக அரசு வேலைக்காக முயற்சி செய்துவரும் இளைஞர்களின் கனவில் மண் அள்ளிப் போடுகிறது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பதிவில், தமிழக அரசு பணிகளில் உள்ள லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்பும் வேலையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்துடன் திமுக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது கண்டனத்துக்குரியது. அரசு வேலைக்காக முயற்சித்த இளைஞர்களின் கனவில் மண்ண அள்ளி போடும் விதமாக திமுக அரசு செயல்படுவதை ஏற்க முடியாது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. நடிகர் கார்த்தியின் வேற லெவல் புகைப்படங்கள்…. இணையத்தில் ட்ரெண்ட்….!!!

கார்த்தியின்  லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வெற்றியடைந்து வருகிறது. இந்த வருடத்தில் இவர் நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘சர்தார்’ என இரண்டு படங்கள் ரிலீசாகி விட்டது. அதில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. மேலும், சர்தார் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

எல்லாம் இவர்களின் வேலை தான்…. உக்ரைனில் அத்துமீரும் ரஷியா…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

ரஷிய படைகளிடமிருந்து தங்களது பகுதிகளை மீட்கும் நடவடிக்கையில் உக்கிரைன்  இறங்கியுள்ளது. உக்ரைன் மீது ரஷியா கடந்த 9 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலின் மூலம் உக்ரைனின்  பெரும்பாலான பகுதிகளை ரஷியா கைப்பற்றியுள்ளது. தற்போது உக்ரைனின்  தெற்கு பகுதி நகரமான கெர்சனுக்குள் புகுந்த ரஷிய ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். மேலும் அங்குள்ள வீடுகளை ஆக்கிரமித்து வருவதுடன் பெரும்பாலான பொருட்களையும் கொள்ளையடித்து வருகின்றனர். மேலும் பொது மக்களை காலி செய்யுமாறு உத்தரவிட்டு வருவதாக உக்ரைன்  அரசு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. ஜி.பி முத்துவிற்கு அடித்த ஜாக்பாட்…. நடிகர் அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு….!!!

அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருப்பதாக ஜி.பி முத்து தெரிவித்துள்ளார். ஜி. பி முத்து யூடியூப் மற்றும் டிக் டாக் மூலம் பிரபலமானவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் முதல் நபராக நுழைந்தவர். இந்த நிகழ்ச்சியில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். இவர் இந்த பிக்பாஸ் வீட்டில் இரு வாரங்கள் மட்டுமே இருந்தார். தனது மகன்களை பார்க்க வேண்டும் என பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். இதனயடுத்து, இவர் சன்னி லியோனுடன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வாடகைக்கு வீடு வேண்டும்”…. வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. நகை கொள்ளை… மூதாட்டி பலி…!!!!!

சேலத்தில் வீடு கேட்பது போல் வந்து நகை பறித்து சென்றதில் மூதாட்டி உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னதிருப்பதி பாண்டியன் தெருவை சேர்ந்த நசீர் ஜஹான் என்ற மூதாட்டி சென்ற பத்து வருடங்களாக அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். சென்ற 4-ம் தேதி காலை 25 வயது மதிக்கத்தக்க இரண்டு பேர் வீடு வாடகைக்கு கேட்பது போல் இவரின் அடுக்குமாடி குடியிருப்புக்குள் சென்றுள்ளார்கள். அதற்கு இவர் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் எனக் கூறி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோபத்தின் உச்சியில் கோபி…. கையில் கத்தியை எடுத்ததால் அதிர்ச்சியில் ராதிகா…. பரபரப்பான எபிசோடு….!!!!!

பாக்கியலட்சுமி சீரியலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ”பாக்கியலட்சுமி” சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து இந்த சீரியலின் நாளைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் கோபி மற்றும் ராதிகா காரில் வந்து இறங்கும் போது தாத்தா ரோட்டில் கத்தி கலாய்க்கிறார். கோபி தாத்தா கோபி தாத்தா என […]

Categories
உலக செய்திகள்

15ஆம் தேதி பெரிய அறிவிப்பு…! ட்ரம்ப் எடுத்த முடிவு… உற்றுநோக்கும் உலக நாடுகள் ..!!

நவம்பர் 15ஆம் தேதி முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 2016 முதல் 2020 ஆம் வருடம் வரை நான்கு வருடங்கள் அமெரிக்காவின் அதிபராக இருந்த டெனால்டு ட்ரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர். இவர் அமெரிக்காவின் அதிபராக இருந்த காலகட்டத்தில் வடகொரியா உடன் நட்பு, இஸ்ரேல் அரபு நாடுகள் இடையேயான நட்பை ஏற்படுத்துவது போன்ற பல்வேறு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதே சமயம் 2020 ஆம் வருடம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் […]

Categories
உலக செய்திகள்

நம்ம உறவு எப்படி இருக்கு ? உக்ரைன் – ரஷ்யா நிலை என்ன ? என இந்தியா – அமெரிக்கா பேச்சு…!

அமெரிக்க வெளியுறவு துணை செயலாளர் உடன் இந்திய வெளியுறவு துணை செயலாளர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா அமெரிக்காவில் அந்த நாட்டு வெளியுறவு துணை செயலாளர் ஆன வெண்டி ஷெர்மானை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி பேசி உள்ளார். இதனை அடுத்து ஜனநாயக கொள்கைகள்,  மண்டல பாதுகாப்பு மற்றும் வளம் மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது போன்ற இருநாட்டு விவகாரங்கள் பற்றிய  செயல் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் நாங்கள் வருவோம்…. பிரபல நாட்டில் “தொடங்கும் பேரணி”…. வெளியான தகவல்….!!!!!

இம்ரான் கான் மீண்டும் நாளை முதல் பேரணியை தொடங்குகிறார். பாகிஸ்தானில்  முன்னாள் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். இவரது ஆட்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு கவிழ்க்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் தொடர்ந்து பேரணி நடத்தி வருகிறார். அதேபோல் கடந்த வியாழக்கிழமை  வாஜிராபாத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்று இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத ஒரு நபர் இம்ரான் கானை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவரது வலது காலில் துப்பாக்கி குண்டு  பாய்ந்தது. இதனையடுத்து அவரை […]

Categories
உலக செய்திகள்

மேடைக்கு வந்து காதில் குசுகுசு..!! டக்குனு கிளம்பிய ரிஷி சுனக்… வெளியான பரபரப்பு தகவல் ..!!

ஐநா பருவ கால மாற்ற மாநாட்டில் பாதியிலேயே பிரிட்டன் பிரதமர் ரிஷி வெளியேறிய சம்பவம் பார்வையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து நாட்டின் ஷாம்- எல் ஷேக் நகரில் நடைபெற்ற ஐநாவின் பருவ கால மாற்ற மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கலந்து கொண்டுள்ளார். இதனை அடுத்து அவர் கிளாஸ் பருவ கால ஒப்பந்தம் பற்றி உரையாற்றும் போதும், பிற நாடுகளையும் அதிலிருந்து விலகாமல் வாக்குறுதி அளித்ததை பின்பற்றும் படியும் வலியுறுத்துவார். மேலும் இந்த பருவ கால […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

4 கிரவுண்ட் நிலத்தை அபகரிக்கும் முயற்சியில்…. சிக்கிக்கொண்ட முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்…. போலீஸ் அதிரடி….!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேங்கிகால் பகுதியில் வசித்து வரும் சுபாஷினி என்பவர் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அழுத்துள்ளார். இந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது பல்லாவரம் பகுதியில் எங்களுக்கு சொந்தமான 4 கிரவுண்ட் இடம் உள்ளது. இந்த இடத்தை நாங்கள் இருபது வருடங்களுக்கு முன்பு விலைக்கு வாங்கி அதில் சுற்றுச்சுவர் கட்டி பராமரித்து வருகின்றோம். இந்த நிலையில் கீழக்கட்டளையில் உள்ள ஏழுமலை என்பவர் நிலத்தை அபகரிக்கும் எண்ணத்தில் சுற்றுச்சுவரை இடித்து வேறொரு இரும்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயன் நடிக்கும் ”மாவீரன்”…. அப்டேட் கொடுத்த அதிதி சங்கர்…. வைரலாகும் புகைப்படம்….!!!

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில்  வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”பிரின்ஸ்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து, இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் ”மாவீரன்”. இந்த படத்தில் மிஷ்கின், யோகி பாபு, சரிதா மற்றும் பல நடிக்கின்றனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கண்டெய்னர் லாரி டிரைவர்கள்‌‌….. மணலி சாலையில் பரபரப்பு….!!!!!

மணலி சாலையில் கண்டெய்னர் லாரி டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி விரைவு சாலையில் கண்டெய்னர் லாரி டிரைவர் ஒருவர் காக்கி சீருடைய அணியாமல் லுங்கி அணிந்து இருந்ததால் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபாய் 500 அபராதம் விதித்திருக்கின்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டெய்னர் லாரி டிரைவர்கள் நூறுக்கும் மேற்பட்டோர் மணலி விரைவுச் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதன்பின் போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்கள். அப்போது காக்கி சீருடை அணியாமல் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. உணவுக்கு திண்டாடும் இலங்கை…. ஐ.நா. விடுத்த எச்சரிக்கை….!!!!

ஐ.நா. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 1948-ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றது. அன்று  முதல் தற்போது வரை மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதுடன், பணவீக்கம், மின் தடைகள் போன்ற  பிரச்சினைகளையும் சமாளித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக விலையேற்றம், உணவு மற்றும் மருந்து பொருட்களின் தட்டுப்பாட்டுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதன் விளைவாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் தற்போது இலங்கையில் உணவு பற்றாக்குறை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எல்லாமே ஹிட்…. திடீரென சம்பளத்தை உயர்த்திய அனிருத்…. எத்தனை கோடின்னு தெரியுமா….?

அனிருத் தனது சம்பளத்தை உயர்த்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.  இதனயடுத்து, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை போன்ற படங்களில் இசையமைத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். இவர் சமீபத்தில் வெளியான விக்ரம், டான், பீஸ்ட், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் சூப்பரான பாடல்களை மற்றும் பின்னணி இசையையும் வழங்கி இருந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஐயப்பன்”…. 25ஆம் தேதி ரிலீஸ்….!!!!!!

பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஐயப்பன் திரைப்படம் உருவாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் தற்போது பல வருடங்களுக்கு பிறகு ஸ்ரீ சபரி அய்யப்பன் என்கின்ற சாமி திரைப்படம் உருவாகி வருகின்றது. இதைப்போல ஸ்ரீ ராஜ மணிகண்டன் என்ற பெயரில் மற்றொரு திரைப்படமும் தயாராகி வருகின்றது. இந்த படத்தை ஸ்ரீ சாய் ஹரிஷ் புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரிக்கின்றது. இப்படத்தில் மனோகர், தர்மராஜ், எஸ்.கே.ரித்திகா செல்வராஜ், கொக்கி குமார், சாவித்திரி, முரளி சங்கர், மீனா உள்ளிட்ட பல நடிக்கின்றார்கள். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“எங்களை வேறு பள்ளியில் சேர்ந்து படிக்க சொல்றாங்க”…. அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அவதி….!!!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை மனு மூலமாக அழித்தனர். இதில் ஏலாக்குறிச்சியை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் வருகை தந்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது “ஏழக்குறிச்சியில் 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி கடந்த ஆண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”ஆயிரம் லட்சம் ஆகாயத் துளிகள் வாழ்த்தாய்ப் பெய்தன”…. கலங்க வைத்த நடிகர் கமல்….!!!

பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு கமல் ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் உலக நாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’  திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. இவர் நேற்று தனது 68 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவை தாக்குவதற்கே இந்த பயிற்சி…. வடகொரியா அதிரடி…!!!

வடகொரிய அரசு, அமெரிக்க நாட்டை தாக்கும் பயிற்சியாகத் தான் ஏவுகணைகள் பரிசோதனைகள் என்று தெரிவித்துள்ளது.  அமெரிக்காவும் தென்கொரிய படைகளும் சேர்ந்து கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியை மேற்கொள்வதை வடகொரியா தொடர்ந்து எதிர்த்து வந்தது. அதற்காக அச்சுறுத்தும் வகையில் ஏவுகணை சோதனைகளை மேற்கொள்கிறது. கடந்த வாரத்தில் கண்டம் தாண்டி  கண்டம் பாயக்கூடிய ஏவுகணை உட்பட பல ஏவுகணைகளை வடகொரியா அனுப்பியது. தென்கொரியாவை நோக்கி நூற்றுக்கும் அதிகமான போர் விமானங்களை செலுத்தியது. எனவே, கொரிய தீபகற்பம் பதற்றமடைந்துள்ளது. இது பற்றி […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. பிரபல நாட்டில் சிறைபிடிக்கப்பட்ட நார்வே எண்ணெய் கப்பல்…. 3 இந்திய மாலுமிகள் சிக்கி தவிப்பு….!!!!

கினியாவில் கடற்படை சிறைபிடித்த கேரள மாலுமிகளை மீட்கும் பணிகளில் இந்திய தூதரகத்தினர் ஈடுபட்டுள்ளனர். மேற்கு ஆப்பிரிக்கா நாட்டில் கினியா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதி  கச்சா எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டுள்ளன. இங்கு கச்சா எண்ணெய் ஏற்றி வருவதற்காக நார்வே கப்பல் ஒன்று கினியா நாட்டுக்கு சென்றுள்ளது. அக்கப்பலில் இந்தியாவை சேர்ந்த 16 மாலுமிகள் உள்பட 26 பேர் உள்ளனர். இதனை அடுத்து நடுக்கடலில் கச்சா எண்ணெய் ஏற்றுவதற்காக ஏற்கனவே பல கப்பல்கள் காத்திருந்தன. அவற்றுடன் இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : அரையிறுதியில் மழை வந்து போட்டி நின்றால் என்ன நடக்கும்?….. இறுதிப்போட்டிக்கு யார் போவார்கள்?

டி20 உலக கோப்பையில் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் மழை பெய்து ஆட்டம் நிறுத்தப்பட்டால்  என்ன நடக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். ஆஸ்திரேலியாவில் 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் டாப் 2 இடங்களை பிடித்துள்ள  அணிகள் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. அதன்படி குரூப் 1 பிரிவிலிருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் குரூப் 2 பிரிவிலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கல்வி முன்னேற்றதிற்கு இவர் தான் காரணம்?…. அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிரடி….!!!

தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு கல்வி ஆண்டில் விலையில்லா மிதிவண்டி திட்டம் மூலம் 6.35 லட்சம் பணம் மாணவிகள் பயன்பெறுகின்றனர். இதற்காக தமிழக அரசு ரூ.323 கோடியே 3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி இந்த ஆண்டிற்கான விலையில்லாம் மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் சென்னையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உலகக் கோப்பை போட்டியை பார்ப்பதற்காக வேட்டி, சட்டையில் சென்ற புகழ்”…. மைதானத்தில் செய்த அட்ராசிட்டி…!!!!

கிரிக்கெட் போட்டியை காண்பதற்காக புகழ் வேட்டி சட்டையில் சென்று இருக்கின்றார். விஜய் டிவியில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது சினிமாவில் நடித்து வருகின்றார் புகழ். விஜய் டிவியில் இவர் கோமாளியாக பங்கேற்ற “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகவும் ரீச்சானது. தற்போது பல முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து வருகின்றார். மேலும் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதிய உலகக் கோப்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அவரோடு சேராதீங்க”…. கொஞ்சம் தள்ளி இருங்க அதான் நல்லது…. விக்ரமனை எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்.‌‌!!!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.  இந்த நிகழ்ச்சியின் முதல் ஆளாக சாந்தி எலிமினேட் ஆனார். இதனையடுத்து ஜி. பி. முத்து தானாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அடுத்ததாக அசல் வெளியேற்றப்பட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டின் 18 நபர்கள் உள்ளனர். இந்நிலையில். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

இனி அரசு வேலையில் சேர…. முந்தைய பணி அனுபவம் தேவை…. மாநில முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!

கோவாவில் முதலமைச்சர் பிரமோ த் சாவந்த் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் இளைஞர்களிடையே அம்மாநில முதல்வர் பேசுகையில், இனி நேரடியான வேலை வாய்ப்பு வழங்கப்படாது. பட்டப்படிப்பு முடிப்பதற்கு முன்பாக பலரும் கணக்கு மற்றும் பிற பதவிகளுக்காக அரசு வேலைக்கு விண்ணப்பித்து வருகிறார். எனவே இனி இவ்வாறு நடக்காது. அரசு வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் தனியார் துறையில் ஒரு வருடம் அனுபவம் தேவை. இனிவரும் காலத்தில் அரசு வேலை […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியானது..!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்  நடத்திய குரூப் 2 குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்  நடத்திய குரூப் 2 குரூப் 2 ஏ தேர்வை கடந்த மே மாதம் 21ஆம் தேதி சுமார் 11 லட்சம் பேர் எழுதினர். 5,529 காலி பணியிடங்களுக்கு தேர்வு தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்  நடத்திய குரூப் 2 குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியானது. […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு….. நாடு முழுவதும் இந்த நாளில் வங்கி இயங்காது….? வெளியான Important News…!!

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 19ஆம் தேதி அன்று நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்வதற்கு அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அழைப்பு விடுத்துள்ளது. இந்த மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை வரும் 19ஆம் தேதி ஆகும். வழக்கமாக இரண்டாம், நான்காம் சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை உண்டு. இந்த நிலையில் வேலை நடத்த போராட்டத்தை மூன்றாம் சனிக்கிழமை அன்று அறிவித்ததால் அன்று […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

படித்துவிட்டு வேலை தேடுகிறீர்களா….? நவம்பர் 11ஆம் தேதி விருதுநகரில்…. அரிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள்….!!!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் சுமார் 12 கோடி மக்கள் வேலை இழந்ததாக இந்திய கணிப்பு மையம் கூறுகின்றது. இதன் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியதனால் வேலையின்மை விகிதம் ஜூலை மாதத்தில் 6.80 சதவீதமாக குறைந்தது. இது கடந்த ஆறு மாதங்களில் ஒப்பீடுகையில் மிக குறைந்த அளவாகும். இந்தியாவில் கிராமப்புற வேலையின்மை ஒருபுறம் குறைந்தாலும் நகர்புற வேலையின்மை அதிகரித்து வருகிறது. இப்படி வேலையின்மையால் போராடுபவர்களை கருத்தில் கொண்டு விருதுநகர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி. பிரகாஷ் வெளியிட்ட ”ரத்த சாட்சி” படத்தின் சூப்பரான புரோமோ…. நீங்களே பாருங்க….!!!

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதையை மையமாக வைத்து உருவான திரைப்படம்” ரத்த சாட்சி”. வெந்த தணிந்தது காடு, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதைகளில் ஒன்று ”கைதிகள்”. இந்த படத்தை ரபீக் இஸ்மாயில் இயக்கியுள்ளார். ஜெகதீஸ்வரர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஜாவேத் ரியாஸ்  இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஹரிஷ் குமார், கண்ணா ரவி, இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர் மற்றும் மெட்ராஸ் சார்லஸ் போன்றோர் நடித்துள்ளனர். ‘ஆஹா’ தமிழ் OTT  தளம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரபல கிரிக்கெட் வீரருடன் இருக்கும் விஜயகாந்த்”…. இதோ அன்சீன் புகைப்படம்….!!!!!!

கிரிக்கெட் வீரருடன் விஜயகாந்த் எடுத்துக்கொண்ட அன்சீன் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். இவரை மக்கள் அன்புடன் கேப்டன் என்று அழைக்கின்றனர். பல வெற்றி படங்களை தந்து வந்த இவர் பிறகு அரசியலில் ஈடுபட்டார். தற்போது கடந்த இரண்டு வருடங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் உள்ளார். இவருக்கு உடல்நிலை சரியாகி பிறகு மீண்டும் திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி […]

Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்!….. நாளை முதல் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை….. ஏஎஸ்பி திடீர் எச்சரிக்கை….!!!

சிவகங்கை மாவட்ட காரைக்குடி பெரியார் சிலை அருகில் சாலை பாதுகாப்பு விழிப்புணர் பேரணியை தொடங்கி வைத்த பிறகு தலைகவசம் அணிந்தவர்களுக்கு காரைக்குடி ஏ.எஸ்.பி.ஸ்டாலின் இனிப்பு வழங்கினார். அதனை தொடர்ந்து தலைகவசம் அணியாமல் வந்தவர்களுக்கு புதிய போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் அபதாரம் விதிக்கப்படும் என்று தெரிவித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நாளை முதல் இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும். அதனைப் போல கார்களில் வருபவர்கள் சீட் பெல்ட் அணிந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தியின் 25-வது படம்…. பூஜையுடன் தொடக்கம்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

நடிகர் கார்த்தி நடிப்பில் இந்த வருடம் வெளியாகிய விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் போன்ற படங்கள் ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. இதையடுத்து கார்த்தி ராஜூ முருகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். கார்த்தியின் 25-வது படமாக உருவாகும் இத்திரைப்படத்திற்கு “ஜப்பான்” என பெயரிட்டுள்ளனர். கார்த்தி ஜோடியாக அனு இம்மானுவேல் முதன்முறையாக நடிக்க இருக்கிறார். தெலுங்கில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, நாயகனாகவும் வெற்றிபெற்ற நடிகர் சுனில் முக்கியமனா  வேடத்தில் நடிக்கிறார். அதன்பின் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான விஜய் மில்டனும் ஒரு […]

Categories
உலக செய்திகள்

“இதனால்தான் கடலில் தள்ளி விட்டேன்”…. குற்றத்தை ஒப்புக்கொண்டு சரண் அடைந்த…. 81 வயது முதியவர் ஜப்பானில் அதிர்ச்சி….!!!!

ஜப்பான் நாட்டில் ஹிரோஷிப் புஜிவாரா என்ற முதியவருக்கு 81 வயது ஆகின்றது. இவருடைய மனைவி 40 வருடங்களுக்கு முன்பு கால்களை இழந்துள்ளார். அதிலிருந்து ஹிரோஷி தான் அவருடைய மனைவியை கவனித்து வந்துள்ளார். தற்போது இவருக்கும் வயதானதால் மிகவும் சோர்வடைந்துள்ளார். இதனால் அவருடைய மனைவியை கவனிக்க முடியாததால் அவரை வீல் சேருடன் கடலில் தள்ளி விட்டுள்ளார். இதனையடுத்து ஹிரோஷியே தனது கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டு போலீசில் சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்….. பொங்கலுக்கு முன்பாக இது உறுதி…. அடிதூள் அறிவிப்பு….!!!!

தமிழக நியாய விலை கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் பணியிடங்களை நிரப்ப சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. மொத்தமுள்ள 6503 காலிப்பணியிடங்களுக்கு இதுவரை 2,29,807 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. அத்தோடு நவம்பர் 14ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் மாநிலத்தில் விரைவில் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் பணிகள் தொய்வின்றி நடைபெறும் விதமாக இந்த காலி பணியிடங்கள் பொங்கல் பண்டிகைக்குள் நிரப்பப்படும் என்று கூட்டுறவு துறை உறுதி அளித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கான மத்திய அரசின் உதவித்தொகை….. நவ.,15 கடைசி தேதி…. அதை விட்டால் பணம் கிடைக்காது….!!!!

தமிழகத்தில் மத்திய அரசால் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசால் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர் பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்கள் அரச மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2022-23 கல்வியாண்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படித்து வருபவர்களுக்கு கல்வித் தொகையை வழங்க உள்ளது. எனவே பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் இந்த உதவி தொகை பெறுவதற்கு […]

Categories
உலக செய்திகள்

“இரு நாடுகளும் உடனடியாக இதை பண்ணனும்”…. போர் குறித்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பேச்சு….!!!!

ரஷ்யா மற்றும் இந்திய நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் மாஸ்கோவில் சந்தித்துள்ளனர். உக்ரைன் ரஷ்யா போரானது தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக ரஷ்யாவின் தலைநகரமான மாஸ்கோ சென்றடைந்துள்ளார். அங்கு ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் உடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இருநாட்டு வெளியுறவு துறை அமைச்சர்களும் நான்கு முறை சந்தித்து பேசி உள்ளனர். இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து மாஸ்கோவில் இந்திய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார் விபத்துக்கு பின்…. நடிகை ரம்பா குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்…. இணையத்தில் வைரல்….!!!!

நடிகை ரம்பா உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தின் வாயிலாக தமிழில் சினிமாவிற்கு அறிமுகமாகி 90களில் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஆவார். சென்ற 2000ம் வருடங்களில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம்வந்த ரம்பா ரஜினி, அஜித், விஜய் உட்பட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கனடா நாட்டின் தொழிலதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம்செய்து கொண்ட ரம்பாவுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இதனிடையில் அடிக்கடி ரம்பா தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன்கூடிய புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவு செய்துவந்தார். கடந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

அட! இது என்னப்பா புது டுவிஸ்டா‌ இருக்கு…. “வேள்பாரி” நாவலில் பாலிவுட் ஹீரோ நடிக்கிறாரா….? பிளானை மாற்றிய‌ சங்கர்….!!!!!!

சங்கர் இயக்கத்தில் பிரபல ஹிந்தி நடிகர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. இதனையடுத்து தற்போது இவர் இயக்கத்தில் பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தமிழ் சினிமாவில் நாவல்களை படமாக்கும் நடைமுறை இருந்து வருகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதையடுத்து, தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!…. ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு…. 4 பெண் குழந்தைகளை அனாதையாக்கிய தந்தை…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!!

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் ஷெட்டிஹள்ளி கிராமத்தில் லோகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சம்மா. இவர்களுக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் மஞ்சம்மா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். நேற்று முன் தினம் மஞ்சம்மாமாவுக்கு சீனிவாசப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது. இதில் 4 வது அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் மஞ்சம்மாவும் லோகேஷும் மனம் உடைந்து, சோகமாக இருந்து வந்தனர். மனைவி மருத்துவமனையில் […]

Categories
பல்சுவை

என்னா கோபம்!…. காரை வைத்து கால்பந்து ஆடிய காளை…. வெளியான திடுக்கிடும் வீடியோ….!!!!

காளை கால்பந்தாட்டம் போன்று காரை தூக்கியடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்தால் காளை ஏதோ ஒரு கோபத்தில் காரை தூக்கியடிக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. தன் கோபம் முழுவதையும் அந்த காளை காரின் மீது இறக்கிவிட்டது போல தெரிகிறது. அதாவது முதலாவதாக காரை நெருங்கிய காளை தன் கொம்பினால் அதனை காற்றில் வீசியது.     View this post on Instagram   A post shared by Animal Power […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. சூப்பர்…. இரண்டு மொழியில் பாடி அசத்தும் தனுஷ்…. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் ”வாத்தி”. இந்த படத்தை தயாரிப்பாளர் நாகவம்சி தயாரிக்கிறார். இந்த திரைப்படம் தெலுங்கு மொழியிலும் ரிலீசாக உள்ளது. இந்த படத்திற்கு தமிழில் வாத்தி எனவும் தெலுங்கில் சார் எனவும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

பணமதிப்பிழப்பு: 6 வருஷம் ஆயிட்டு…. உண்மை எப்போது தெரியவரும்?…. கேள்வியெழுப்பும் மக்கள்….!!!!

1,000 மற்றும் 500  ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டு இன்று 6 வருடங்கள் கடந்துவிட்டது. ஆனால் இதனால் ஏற்பட்ட நன்மைகள் என்னதான் என்பது குறித்து உண்மை எப்போது தான் தெரியவரும் என்று இதுவரையிலும் தெரியவரவில்லை. கடந்த 2016ம் வருடம் நவம்பர் 8ம் தேதி மத்திய அரசானது ஆயிரம் மற்றும் 500ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என அறிவித்தது. இதன் காரணமாக கருப்புப் பணம் ஒழியும், கள்ளநோட்டுகள் புழக்கத்தில் இருந்து வெளியேறும் என பல வாக்குறுதிகளை மத்திய அரசு […]

Categories

Tech |