Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பரபரப்பு…. அதிரடி சோதனை….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த மாதம் கார் வெடித்து ஜமேஷா முகின் என்பவர் உயிரிழந்தார். அந்த வழக்கில் இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இந்த வழக்கை என் ஐ ஏ விசாரித்து வரும் நிலையில் கோவை கார் வெடி விபத்து சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழக முழுவதும் 45 இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் ஐந்து இடங்களில் போலீஸ் ஆர் தீவிர சோதனை நடத்திவரும் நிலையில் […]

Categories
அரசியல்

173ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (நவம்பர் 10) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தாத்தாவான கோபி… பங்கம் செய்து கலாய்க்கும் ராமமூர்த்தி…. செம கடுப்பில் ராதிகா…. வைரலாகும் புரோமோ….!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் பாக்கியலட்சுமி ஒன்று. கடந்த சில மாதங்களாக உச்சகட்ட பரபரப்பாக பாக்கியலட்சுமி சீரியல் சென்று கொண்டிருக்கிறது. தனது அப்பாவி மனைவி கைவிட்டு தனது தோழியான ராதிகாவை கோபி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கோபி வாழ்க்கையில் என்னென்ன திருப்புங்கள் ஏற்படுகிறது என்பதை கதையாக சென்று கொண்டிருக்கிறது. அதன்படி தனது வீட்டில் மிகவும் சொகுசாக வாழ்ந்த கோபி ராதிகாவிடம் படாதபாடு பட்டு வருகிறார். ஒரு காபி கூட ராதிகாவிடம் கெஞ்சி […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (10.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 10) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 20 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகலிலிருந்து, அக்டோபர் 10 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 20 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
சினிமா தமிழ் சினிமா

BOGG BOSS: தனலட்சுமி-மணிகண்டன் சண்டை…. யார் குற்றவாளி?…. வெளியான புரோமோ வீடியோ…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

பிக்பாஸ் தமிழ் 6வது சீசன் சென்ற அக்…9ம் தேதி துவங்கியது. மும்முரமாக நடந்துவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். அத்துடன் ஜி.பி. முத்து தாமாக முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதையடுத்து அசல் கோளாறு வெளியேறினார். அதன்பின் சென்ற வாரம் ஷெரினா எலிமினேட் செய்யப்பட்டார். இப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 17 நபர்கள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி 31வது நாட்களை நெருங்கி இருக்கிறது. இந்த நிலையில் நேற்று வெளியான முதல் புரோமோவில் இந்த வாரம் […]

Categories
தேசிய செய்திகள்

என்ன காரணம்?…. கொலை செய்யப்பட்ட பச்சிளம் குழந்தை…. போலீஸ் விசாரணை….!!!!

பச்சிளம் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா  மாநிலத்தில் உள்ள அகோலா பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் பிறந்து 20 நாட்களேயான குழந்தையை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு  சென்றுள்ளார். அங்கு  குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையின் சடலத்தை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்தியாவுடன் பைனலில் மோதனும்….. “இன்னும் ஃபுல் பவரை காட்டல”….. பயம் காட்டும் மேத்யூ ஹைடன்..!!

பாகிஸ்தான் அணியின் ஆலோசகர் மேத்யூ ஹைடன் இந்தியாவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் “பெரிய காட்சிக்காக” விளையாட விரும்புகிறார். இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே அதிக ஆர்வத்தை உருவாக்குகிறது. மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் இறுதி போட்டியில் மோதவேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.. டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி தனது அதிரடியால் இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.. மிகவும் பேசப்பட்ட அந்த வெற்றிக்காக கோலி பாராட்டுகளைப் பெற்றார். தற்போது முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ஆண்களை ஓவர் டேக் செய்த பெண்கள்….. வாக்காளர் பட்டியலில் அதிக எண்ணிக்கை….. வெளியான முக்கிய தகவல்….!!

தமிழகத்தில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவிலான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி, பெயர் திருத்தம் போன்ற பல்வேறு பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும். அந்த வகையில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை சேர்க்கும் பணிகளும் நடைபெற்றது. இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில், ஒருங்கிணைந்த மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலும் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இது தொடர்பான தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய […]

Categories
மாநில செய்திகள்

“நில அபகரிப்பு, பண மோசடி வழக்கு”….. EX. ஐபிஎஸ் அதிகாரியின் மனைவியின் சொத்துக்கள் முடக்கம்….. அமலாக்கத்துறை அதிரடி…..!!!!!!

தமிழகத்தின் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட். இவர் கடந்த 2006-11 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தின் போது அரசுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 1989-ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த ஜாபர் தமிழக காவல்துறையில் சிபிசிஐடி டிஜிபி மற்றும் உளவுத்துறை ஐஜி என பல உயர் பதவிகளில் வகித்துள்ளார். இவர் உளவுத்துறை அதிகாரியாக இருந்தபோது தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்தி வீட்டு வசதி வாரியத்திடமிருந்து நில ஒதுக்கீடு பெற்றுள்ளார். அதன்படி சென்னையில் உள்ள திருவான்மியூரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சிறந்த டீம்..! ஆனா… பாகிஸ்தானுடன் இந்தியா மோதுவதை விரும்பவில்லை….. போட்டிக்கு முன் கேப்டன் பட்லர் அளித்த பேட்டி இதோ.!!

இந்திய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டியளித்துள்ளார். டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று (வியாழன்) அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதுகிறது. இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்துள்ள பாகிஸ்தான் அணியுடன் மோதும். இதற்கிடையே […]

Categories
மாநில செய்திகள்

கோவை கார் விபத்து…. சென்னை உட்பட 45 இடங்களில் இன்று காலை முதல் சோதனை….. என்ஐஏ அதிகாரிகள் அதிரடி….!!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 23-ஆம் தேதி கார் வெடி விபத்து நடந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபீன் என்பவருக்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. அதன்பிறகு இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் கோவையில் நாச வேலைகளுக்கு ஜமேஷா தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து திட்டமிட்டது தெரியவந்தது. இதனையடுத்து ஜமேஷாவின் கூட்டாளிகள் 6 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். தமிழகத்தில் தீபாவளி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரம் மழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கலந்த அக்டோபர் 31ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் கடந்த வாரங்களில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வங்க கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இந்த தாலு பகுதி தமிழகத்தை நோக்கி நகர்வதால் நவம்பர் 13ஆம் தேதி வரை மிக கனமழைக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கழிவறையில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியர்…. நொடி பொழுதில் ஏற்பட்ட மரணம்…. பெரும் சோக சம்பவம்….!!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கருமாபுரம் தென் சோலை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (42). இவர் வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வரும் நிலையில் நேற்று காலை சரவணன் வழக்கம் போல பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு கழிவறைக்குச் சென்ற அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஆசிரியர்கள் உடனே அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பத்தல பத்தல” பிரபல நடிகையுடன் செம குத்தாட்டம் போட்ட நடிகர் கமல்…. இணையத்தை தெறிக்க விடும் வீடியோ…..!!!!!

தமிழ் சினிமாவில் 4 வயதில் களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கமல்ஹாசன் தற்போது வரை முன்னணி ஹீரோவாக ஜொலிக்கிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு நடிகர் கமல்ஹாசனின் 234-வது திரைப்படத்தை நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்தினம் இயக்குகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. அதன் பிறகு நடிகர் கமல்ஹாசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதோடு, ராஜ்கமல் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் முக்கிய பகுதிகளில் நவம்பர் 12 முதல் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக பணங்கள் பூங்கா, வெங்கட்நாராயணா சாலை மற்றும் நந்தனம் பகுதிகளில் நவம்பர் 12ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சாலையில் தற்போது உள்ள ஒரு வழி பாதையில் இருந்து மாற்றப்பட்டு பனகல் பூங்காவில் இருந்து செல்லலாம். தணிகாசலம் சாலை சந்திப்பிலிருந்து பனகல் பூங்காவிற்கு செல்லும் வாகனங்கள் தணிகாசலம் சாலை வெங்கடாநாராயண சாலை வழியாக பனகல் பார்க் […]

Categories
Tech

இனி வாட்ஸ் அப் இருந்தா மட்டும் போதும்…. கிரெடிட் ஸ்கோர் பார்ப்பது ரொம்ப ஈஸி…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

பொதுவாகவே வங்கியில் கடன் வாங்குவதற்கு கிரெடிட் ஸ்கோர் என்பது மிகவும் முக்கியம். அது 300 முதல் 900 வரையிலான மூன்று இலக்க எண்களைக் கொண்டது. இந்த கிரெடிட் ஸ்கோர் பயனாளர்களின் நிதி நடவடிக்கைகளை பொறுத்தே ஏற்ற இறக்கத்தை சந்திக்கும். இதனை சரி பார்ப்பது என்பது வாடிக்கையாளர்களுக்கு சிக்கலான செயலாக உள்ளது. இதனை எளிதாக்கும் வகையில் எக்ஸ்பீரியன்ஸ் இந்தியா நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் ஒருவரின் கிரெடிட் அறிக்கையை உடனடியாக சரி பார்ப்பது அதில் ஏதேனும் […]

Categories
தேசிய செய்திகள்

CBSE 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா சூழல் காரணமாக பொது தேர்வுகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் உயர் கல்வியை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்களை வழங்கியது. அதன் பிறகு பாதிப்பு குறைந்த நிலையில் சிபிஎஸ்இ கல்வி வாரியம் நேரடி முறையில் பொது தேர்வில் நடத்த திட்டமிட்டது. அவ்வகையில் பத்து மட்டும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை செமஸ்டர் முறை போல இரண்டு கட்டங்களாக நடத்தியது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsENG : ஃபைனலில் பாகிஸ்தானுடன் மோதுமா?…. இன்று அனல்பறக்கும் அரையிறுதி போட்டி..!!

டி20 உலகக்கோப்பை 2ஆவது அரையிறுதி போட்டியில் இந்தியா –  இங்கிலாந்து அணிகள் மோதுகிறது.. இன்று நவம்பர் 10 ஆம் தேதி அடிலெய்டில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 இன் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா –  இங்கிலாந்து அணிகள் மோதுகிறது. ஜோஸ் பட்லர் தலைமையிலான அணி 2016, 2021 மற்றும் 2022 இல் மீண்டும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 2016 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸிடம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தகுதியானவர்களுக்கு பால் அட்டை…. ஆவினுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தகுதியான நுகர்வோருக்கு பால் அட்டை வழங்க வேண்டும் என்று ஆவின் நிர்வாகத்திற்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆவின் மூலமாக கொழுப்பு சத்து அடிப்படையில் பால் சிவப்பு, ஆரஞ்ச், பச்சை மற்றும் நீலம் ஆகிய  வண்ணங்களில் தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதில் சிவப்பு நிற பால் பாக்கெட் 500 மி.லி 34 ரூபாய் வரையும், ஆரஞ்சு நிற பால் பாக்கெட் 30 ரூபாய் வரையும் உயர்த்தப்பட்டது. இதுவே பால் அட்டைதாரர்களுக்கு 23 ரூபாய்க்கு வழக்கம் போல […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. காசிக்கு இலவச பயணம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பல பல்கலைக்கழகங்களில் பயிலும் 2000 மாணவர்களை உத்திரப்பிரதேசத்தின் காசிக்கு மத்திய அரசு இலவசமாக அழைத்துச் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மொழிகளை மேம்படுத்துவதற்காக பாரதிய பாஷா சமிதி என்ற குழுவை மத்திய கல்வி அமைச்சகம் உருவாக்கிய நிலையில் உத்திரபிரதேசம் மாநிலத்தில் வாரணாசியில் உள்ள காசி நகருக்கும் தமிழ் சமூகத்திற்கும் பல நூற்றாண்டுகளாக உள்ள நெருங்கிய தொடர்பை மறு உருவம் செய்து அதனை கொண்டாடுவதற்கான நிகழ்ச்சிகளுக்கு இந்த குழு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தின் பல்கலைக்கழகங்களில் பயிலும் […]

Categories
தேசிய செய்திகள்

முதுகலை மருத்துவ படிப்புக்கு இனி இந்த தேர்வு கிடையாது?…. வெளியான சூப்பர் தகவல்….!!!

மருத்துவ மாணவர்களுக்கு தற்போது நெக்ஸ்ட் எனப்படும் தகுதி தேர்வு அறிமுகமாக உள்ளதால் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு அடுத்த வருடம் முதல் இருக்காது என புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் எம்பிபிஎஸ் எனப்படும் இளநிலை மருத்துவப் படிப்பின் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு நெக்ஸ்ட் எனப்படும் தேசிய தகுதி தேர்வு நடத்துவதற்கு தேசிய […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இளைஞர்களே ரெடியா….? “தூத்துக்குடியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்”…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!!

தூத்துக்குடியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகின்றது. தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குனர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை(வெள்ளி) காலை 10:30 மணிக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற இருக்கின்றது. இந்த முகாமில் 10-ம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, டிப்ளமோ, ஐடிஐ, பட்டப்படிப்பு மற்றும் கம்ப்யூட்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்படி கூட‌ ப்ரொபோஸ் பண்ணலாமா…. விஜய் டிவி பிரபலத்துக்கு தூது விட்ட பிரபல நடிகர்….. கிரீன் சிக்னலுக்காக வெயிட்டிங்காம்…..!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் கலக்கி வருகிறார்கள். அந்த அளவுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் சமூக வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சுனிதாவும் கலந்து கொண்டார். இவர் போட்டியாளர்களில் யங் அண்ட்‌ பிட்டான சந்தோஷ் மீது தனக்கு ஒரு கண்ணு எனக் கூறி  எல்லோரையும் அதிர வைத்திருந்தார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“நுகர்வோர் பேரவை சிறப்பு விருது”… தட்டிச் சென்ற டி.சி டபிள்யூ நிறுவனம்….!!!!!

சிறப்பு விருந்து டிசி டபுள்யூ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. தமிழக நுகர்வோர் பேரவையின் சார்பாக வருடம் தோறும் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த வருடத்திற்கான தமிழ்நாடு நுகர்வோர் பேரவை சிறப்பு விருது சுற்றுப்புற சூழல், தொழிலாளர்களுடன் இணக்கமான உறவு, பொதுமக்களுடன் நல்ல உறவு உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும் சாகுபுரம் டி.சி டபிள்யூ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த விருதை மாநிலம் நுகர்வோர் பேரவை தலைவர் வழங்க நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் ஸ்ரீனிவாசன் பெற்றுக்கொண்டார். இந்த  […]

Categories
மாநில செய்திகள்

தமிழக இளைஞர்களே…! வெளிநாட்டில் சிக்கி தவிக்கிறீர்ர்களா…? இந்த எண்ணிற்கு அழைக்கலாம்…. அரசு அதிரடி…!!!!

இந்தியாவில் பொதுமக்களின் கஷ்டங்களை தெரிந்து கொண்டு அவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி சிலர் மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்றும், அதன் மூலம் உங்களுடைய கடனை எல்லாம் அடைத்து விடலாம் என்றும் கூறுவதால் மக்களும் அதை நம்பி  வெளிநாட்டுக்கு வேலை செல்ல வேண்டும் என்று முடிவு செய்து விடுகின்றனர். ஆனால் வெளிநாட்டு வேலை சிலருக்கு நன்மையாக அமைந்தாலும், பலருக்கும்  அது பாதகமாகவே அமைந்துவிடுகிறது. சமூகத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சாஹல் சிறந்த பவுலர்…. “புவியை கண்டு பயப்பட மாட்டேன்”…. எனது ஆட்டத்தை நம்புகிறேன்…. பட்லர் சொன்னது இதுதான்..!!

யுஸ்வேந்திர சாஹல் மற்றும் புவனேஷ்வர் குமார் பற்றி இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் கருத்து தெரிவித்துள்ளார்.. டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று (வியாழன்) அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதுகிறது. இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்துள்ள பாகிஸ்தான் அணியுடன் மோதும். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக திருவள்ளூரை மாற்ற வேண்டும்” … மக்களிடம் கேட்டுக் கொண்ட ஆட்சியர்…!!!!!

பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என திருவள்ளூர் ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நேற்று முன்தினம் தமிழ்நாடு மாசுகட்டுபாட்டு வாரியம் சார்பாக முதல்வரின் ஆணைக்கிணங்க மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தின் கீழ் அமைக்கப்பட்டு இருக்கும் மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தின் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது, இந்த எந்திரத்தின் மூலம் ரூபாய் பத்து செலுத்தி மஞ்சப்பை பெற்றுக் கொள்ளலாம். திருவள்ளூரில் ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எப்படி கர்ப்பமாக முடியும்….? நான் அப்படியல்லவா….!…. பிரபல நடிகை டுவீட்….!!!!

நடிகை கனிஷ்கா சோனி விவேக் ஹீரோவாக நடித்த பத்தாயிரம் கோடி என்ற தமிழ் படத்தில் நடித்தவர். இதனை அடுத்து தெலுங்கு, இந்தியில் மட்டுமல்லாமல் டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் தன்னை தானே திருமணம் செய்து கொண்டவர் . எனக்கு எந்த ஆணும் தேவையில்லை. சிவனும் சக்தியும் என்னுள்ளே இருக்கிறார்கள் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இணையவாசிகள் அவரை சராமாரியாக விமர்சித்து இருந்தனர். இவர் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி வலம் வந்தது. இந்நிலையில் தற்போது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாம்… பயன்பெற்ற ஏராளமான மக்கள்..!!!!!

வானரமுட்டி கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாலாட்டின்புத்தூரில் இருக்கும் வானரமுட்டி கிராமத்தில் உள்ள  தொடக்கப் பள்ளி சார்பாக இலவச மருத்துவ முகாம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்தது. இம்முகாமை பள்ளி தலைமை ஆசிரியர் தொடங்கி வைத்தார். இதன் பின் டாக்டர் சுகஸ்ரீ குணசேகரன் பங்கேற்று இடுப்பு வலி, மூட்டு வலி, கழுத்து வலி இருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகள் வழங்கி ஆலோசனைகளை […]

Categories
தேசிய செய்திகள்

சாலையில் நடந்தால் இந்தியாவை நன்றாக புரிந்து கொள்ளலாம்…. ராகுல் காந்தி அதிரடி ஸ்பீச்….!!!!

இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சாலையில் நடப்பதனால் இந்தியாவை புரிந்து கொள்ள முடியும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தனது இந்திய ஒற்றுமை பயணம் குறித்து மகாராஷ்டிராவில் உரையாற்றிய அவர், இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளிகள் வாகனங்களில் செல்வதில்லை. அவர்கள் சாலையில் நடந்து செல்கின்றனர். விமானத்திலும் ஹெலிகாப்டரிலும்,சொகுசு வாகனங்களிலும் செல்பவர்களால் அவர்களைப் பற்றி எப்படி புரிந்து கொள்ள முடியும். உங்களுக்கு இந்தியாவை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நீங்களும் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Justin: கோவையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் NIA திடீர் சோதனை…!!!!

கோவையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு கோவையில் காரில் கேஸ் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீட்டில் இந்த சோதனை நடந்து வருகிறது. கோட்டைமேடு, ரத்தினபுரி, உக்கடம் ஆகிய பகுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். கோட்டை மேடு, உக்கடம், பொன்விழா நகர், ரத்தினபுரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ முழு விவரம்…. உடனே செக் பண்ணிக்கோங்க….!!!!!

தாராபுரம்: தாராபுரம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை தாராபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதிகள், வீராட்சிமங்கலம், நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், மடத்துப்பாளையம், வண்ணாபட்டி, உப்பார்டேம், பஞ்சப்பட்டி, சின்னப்புத்தூர், கோவிந்தாபுரம், செட்டிபாளையம் மற்றும் இது சார்ந்த பகுதிகளுக்கு மின் வினியோகம் தடை செய்யப்படும். தாராபுரம் கோட்டம் செலாம்பாளையம் துணை மின்நிலைய பகுதியில் மாதாந்திரபராமரிப்பு பணிகள் இன்று நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க மறந்துட்டீங்களா?”…. கால அவகாசம் நீட்டிப்பு…. ஆட்சியர் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்…!!!!!

சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கின்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தமிழ்நாட்டில் இந்திய அரசால் சிறுபான்மையினராக கருதப்படும் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களில் 2022-23 கல்வியாண்டில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு புதுப்பிக்க நவம்பர் 15ஆம் தேதி வரை கால […]

Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில்…. இன்று ஒரு நாள் மட்டும் இதற்கு தடை…. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!!

முதல்வர் மு க ஸ்டாலின் இன்று ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தில் மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை முதல்வர் அவர்கள் வழங்க இருக்கிறார். முதல்வர் வருகையை ஒட்டி ஈரோடு மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு மாவட்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று ஒரு நாள் மட்டும் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். விதிகளை மீறி ட்ரோன்கள் பறக்கவிடப்பட்டால் சட்ட விதிகளின்படி காவல் துறையால் கையகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சினிமா

பிக்பாஸ் வீட்டில் எல்லை மீறிய ராபர்ட் மாஸ்டர்…. ரட்சிதாவிடம் முத்தம் கேட்டு அலப்பறை…. வைரல் வீடியோ…..!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள ராபர்ட் மாஸ்டர் ரட்சிதாவிடம் தொடர்ந்து பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அதில் ஒரு சில விஷயங்கள் தற்போது பார்வையாளர்களை முகம் சுளிக்கும் வகையில் மாறி உள்ளது. கடந்த வாரம் கமல்ஹாசன் முன்பு ரட்சிதாவிடம் மறைமுகமாக ப்ரபோஸ் செய்வது போல நடந்து கொண்டார். இந்நிலையில் தற்போது நடந்து வரும் ஸ்வீட் டாஸ்க் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“எனக்கு தற்கொலை செய்ய அனுமதி தாங்க”…. மனு கொடுத்த தூய்மை பணியாளரால் பரபரப்பு….!!!!!!

தூய்மை பணியாளர் கொடுத்த மனுவால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தூய்மை பணியாளர் துரைராஜ் என்பவர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருக்கின்றது. ஆனால் ஊராட்சி நிர்வாகம் சென்ற சில மாதங்களாக எனக்கு ஊதியம் கொடுக்கவில்லை. இதனால் என்னுடைய குழந்தைகளின் கல்வி செலவு, வீட்டு செலவு, மருத்துவச் செலவு ஆகியவைக்கு பணம் இல்லாமல் தவிர்த்து வருகின்றேன். இதனால் நான் தற்கொலை செய்து கொள்ள அனுமதி […]

Categories
வேலைவாய்ப்பு

சென்னை மாநகராட்சியில் வேலை….. இன்றே கடைசி நாள்…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையில் நிரப்பப்பட உள்ள மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பணி: medical officer, staff nurse காலி பணியிடங்கள்: 58 கல்வித் தகுதி: MBBS, பிளஸ் டூ தேர்ச்சியுடன் நான்கு ஆண்டு பிஎஸ்சி நர்சிங், நர்சிங் டிப்ளமோ அல்லது பொது நர்சிங் பிரிவில் டிப்ளமோ தேர்வு: நேர்முகத் தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 10 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.chennaicorporation.gov.in […]

Categories
மாநில செய்திகள்

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்களின் நலனுக்காக அரசு சார்பில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயின்று வரும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபின மாணவ மாணவிகளுக்கு அரசு சார்பாக உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றது.இந்த உதவித்தொகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில்…. இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக சென்னையில் இன்று கனமழையும் 11 மற்றும் 12ம் தேதி மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் 13ஆம் தேதி ஓரிரு பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று அநேக இடங்களிலும் 11,12,13ஆம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடக்கு கடலோர மாவட்டங்களிலும் அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Please..! ரொம்ப தொந்தரவு பண்ணாதீங்க…. ரசிகர்களை கண்டித்த சிம்பு… என்னவா இருக்கும்…?

சினிமா ரசிகர்கள் படத்தின் அப்டேட் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என நடிகர் சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் வெந்து தணிந்தது காடு படத்தின் 50ஆவது நாள் விழா கொண்டாட்டம் நேற்று  நடந்தது. இதில், பங்கேற்ற சிம்பு பேசியதாவது, ஃபேன்ஸ் எல்லாரும் புரிஞ்சிப்பீங்கனு நம்புறேன். எல்லா ஃபேன்சும் ஹீரோவை தூக்கி மேல வைப்பாங்க. ஆனா நான் என் ஃபேன்ஸ தூக்கி மேல வைக்கிறவன். என் படத்துக்கு மட்டுமில்லை, எல்லோர் படத்துக்கான அப்டேட் கேட்டும் ரொம்ப […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எழுந்த புகார்…. ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்… மரத்தை அகற்றாமல் கட்டப்பட்ட தடுப்புச் சுவர்…. நடவடிக்கை…!!!!!

நெடுஞ்சாலை விரிவாக்க பணியின் போது மரத்தை அகற்றாமல் சுற்றுச்சுவர் கட்டப்பட்டிருப்பதை அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக மைசூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கம் செய்யும் பணியானது சென்ற இரண்டு வருடங்களாக நடந்து வருகின்றது. இதற்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பல இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் நெடுஞ்சாலை ஓரம் கட்டப்படும் பாலம் மற்றும் தடுப்புச் சுவர்கள் தரமற்று இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத் துறை சேலம் கண்காணிப்பு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : அரையிறுதி 2….. “இந்தியா vs இங்கிலாந்து மோதல்”….. இந்திய வீரர்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!!

அடிலெய்டில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி வீரர்கள் பற்றி பாப்போம்.. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, அடிலெய்டு ஓவலில் இன்று இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. அவர்களின் கடைசி சூப்பர் 12 ஆட்டத்தில் ஜிம்பாப்வேக்கு எதிராக  சிறப்பான வெற்றிக்குப் பிறகு மென் இன் ப்ளூ அவர்களின் குழுவில் முதலிடம் பிடித்தது. இந்திய அணியில் கே.எல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் ‘AK62′ படத்தில் ஜி.பி.முத்து…? அடுத்தடுத்து முன்னேற்றம்…. வெளியான தகவல்…!!!

டிக் டாக் செயலியில் தனது பயணத்தைத் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் ஒரு காலத்தில் விமர்சிக்கப்பட்டவர்தான் ஜி.பி.முத்து. துவக்கத்தில் வெறுத்தவர்கள் அனைவரையும் தனது ரசிகர்களாக்கி கோலோச்சி வருகிறார் இவர். டிக் டாக் முடக்கப்பட்டதை தொடர்ந்து யூடியூபில் கலக்கியவர் தற்போது பிக் பாஸில் நுழைந்தார். ஆனால் தன்னுடைய சொந்த காரணத்தின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார். வீட்டை விட்டு வெளியேறிய ஜிபி முத்துவுக்கு பல்வேறு பட வாய்ப்புகள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இணைய பிரபலம் ஜி.பி.முத்து, அஜித்தின் ஏகே […]

Categories
தேசிய செய்திகள்

பக்தர்களே மறந்துடாதீங்க… நாளை காலை 10 மணிக்கு…. தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு…!!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  கடந்த ஏப்ரலில் நிறுத்தப்பட்டிருந்த நேரடி இலவச தரிசன டோக்கன்கள், மீண்டும் நவம்பர் 1 முதல் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதத்திற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நவம்பர் 11ஆம் தேதி தொடங்க இருக்கிறது. மார்கழி மாதம் பெருமாளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே…! 3 நாட்களுக்கு உஷாரா இருங்க…. மிரட்ட வருகிறது கனமழை….!!!!

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக சென்னையில் இன்று கனமழையும் 11 மற்றும் 12ம் தேதி மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் 13ஆம் தேதி ஓரிரு பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று அநேக இடங்களிலும் 11,12,13ஆம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடக்கு கடலோர மாவட்டங்களிலும் அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ஒரே குஷி தான் போங்க…! தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் இன்று அமைச்சரோடு…. வெளியான சூப்பர் நியூஸ்…!!!!

தமிழகத்தில் திமுக அரசு அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பல்வேறு துறைகளிலும் பல முக்கிய மாற்றங்களை கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி கல்வித்துறை மாணவர்களுடைய நலனில் அக்கறை கொண்டு பல்வேறு நடவடிக்கைகளையும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பள்ளி அளவில் கல்வி, விளையாட்டு, நுண் கலைகள் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவில் புகழ்பெற்ற இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என பள்ளிகல்வித்துறை சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கர்நாடக அரசின் நடவடிக்கை…. கொய்மலர்களை விற்பனைக்கு அனுப்ப முடியல…. விவசாயிகள் பாதிப்பு…!!!!!!

நீலகிரியில் கொய்மலர்களை விற்பனைக்கு அனுப்ப முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நீலகிரி மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்கள் பயிரிட்ட கொய்மலர்களை கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருக்கு விற்பனைக்காக அனுப்பி வைப்பார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் பெங்களூருவில் இருக்கும் கொய்மலர் மொத்த விற்பனை சந்தைக்கு கர்நாடக அரசு சீல் வைத்திருக்கின்றது. இதனால் நீலகிரி மாவட்ட விவசாயிகள் சாகுபடி செய்த கொய்மலர்களை விற்பனைக்கு அனுப்ப முடியாமல் அவதி அடைந்து வருகின்றார்கள். இது பற்றி நீலகிரி மாவட்ட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsENG : காயத்தால் விலகும் மலான் & வுட்?….. இன்று பார்ப்போம்…. கேப்டன் பட்லர் பேட்டி…. மாற்று வீரர்கள் யார்?

இங்கிலாந்து அணியில் மலான் மற்றும் மார்க் வுட் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் மாற்று வீரராக இவர்களை களமிறக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று (வியாழன்) அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் […]

Categories
கல்வி

சட்டப் படிப்புகளுக்கான கிளாட் நுழைவுத் தேர்வு தேதி…. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தேசிய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு தலைவர் பூனம் சக்சேனா ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 22 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. சட்டப்படிப்புகளுக்கான கிளாட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் மட்டும்தான் சட்டப் படிப்பில் சேர முடியும். 2023-24 ஆம் ஆண்டுக்கான கிளாட் நுழைவுத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வு வருகிற […]

Categories
கல்வி

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம்….. தமிழக அரசு வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்ததன் காரணமாக அரசு முதன்மை செயலாளர் செந்தில்குமார் ஐஏஎஸ் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இந்தியாவில் அரசு மருத்துவக் கல்லூரிகளை போன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது. அதன் பிறகு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்ததன் காரணமாக தனியார் கல்லூரிகளின் கட்டண வரம்பை நியமிப்பதற்காக அரசு சார்பில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த […]

Categories

Tech |