Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மீன் பிடித்து கொண்டிருந்த வாலிபர்…. கையில் பாய்ந்த தூண்டில் கொக்கி…. தீவிர சிகிச்சை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காட்டுப்பட்டி பகுதியில் அடைக்கன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அடைக்கன் அப்பகுதியில் இருக்கும் குளத்தில் தூண்டில் மூலம் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக தூண்டிலில் இருந்த கொக்கி அடைக்கனின் கையில் குத்தியது. அதனை எடுக்க முயற்சி செய்தும் அவரால் முடியவில்லை. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அடைக்கனை மீட்டு மூக்கண்ணாமலைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் அடைக்கனின் கையில் சிக்கியிருந்த தூண்டில் கொக்கியை அகற்றி […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பு: நீதிமன்றம் யோசனை !!

மகளிர் கல்லூரிகளில் பாதுகாப்புக்காக காவலர்களை நிறுத்தலாமே என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை யோசனை தெரிவித்துள்ளது. மாணவிகளின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது.  என்பதும் நீதிபதி கேள்வி எழுப்பி இருக்கிறார். தமிழகம் முழுவதும் மகளிர் கல்லூரிகள்,  பள்ளிகள் முன்பாக காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணையின் போது உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி இவ்வாறு ஒரு யோசனையை தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கிறார். மாணவிகளின் பாதுகாப்பு க்கு […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து கட்சி கூட்டம்: அழைப்பு விடுத்த ஸ்டாலின்…. புறக்கணித்த இபிஎஸ்…. எதற்காக தெரியுமா?….!!!!

சென்னையில் நாளை நடைபெற இருக்கும் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்து இருக்கிறது. உயர்ஜாதி ஏழைகளுக்கு வழங்கப்பட்ட 10 சதவீதம் இட ஒதுக்கீடு செல்லும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக ஆலோசிக்க நாளை(நவ..12) அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. இந்நிலையில் 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டி அதிமுக புறக்கணித்து இருக்கிறது. சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் வைத்து  நாளை காலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ்: இந்த வாரம் வெளியேறும் நபர் இவரா?…. வெளிவரும் தகவல்கள்….!!!!

பிக்பாஸ் தமிழ் 6வது சீசன் சென்ற அக்…9ம் தேதி துவங்கியது. மும்முரமாக நடந்துவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். அத்துடன் ஜி.பி. முத்து தாமாக முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதையடுத்து அசல் கோளாறு வெளியேறினார். அதன்பின் சென்ற வாரம் ஷெரினா எலிமினேட் செய்யப்பட்டார். இப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 17 நபர்கள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி 32வது நாட்களை நெருங்கி இருக்கிறது. இந்த நிலையில் பிக்பாஸ்-6 நிகழ்ச்சியில் ராம் இந்த வாரம் குறைந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காதலிக்க மறுத்த மாணவி….. ஊர்க்காவல் படை வீரரின் செயல்…. தாயின் பரபரப்பு புகார்….!!!

காதலிக்க மறுத்த மாணவியை மிரட்டிய ஊர்க்காவல் படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள தேக்கம்பட்டி அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலம் மாநகர ஊர்க்காவல் படையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அறிவழகன் அதே பகுதியில் வசிக்கும் 11-ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். அந்த மாணவி காதலை ஏற்கவில்லை. இதனால் கடந்த 7-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவியிடம் அறிவழகன் தகராறு செய்து தன்னை காதலிக்கும் படி […]

Categories
உலக செய்திகள்

சிங்கப்பூரிலிருந்து உடனடியாக பணம் அனுப்பலாம்…. விரைவில் தொடங்கவுள்ள டிஜிட்டல் பணப்பரிமாற்றம்…!!!

சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிற்கு இடையே பண பரிமாற்றம் செய்ய மேற்கொண்ட தொழில் நுட்ப பணிகள் முடிவடைந்ததாகவும் விரைவில் சேவை தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் ரிசர்வ் வங்கியும் சிங்கப்பூரின் மத்திய வங்கியும் சேர்ந்து இரண்டு நாடுகளின் UPI மற்றும் pay now போன்ற பண பரிமாற்ற அமைப்புகளை சேர்ப்பதற்கான திட்டத்தை உருவாக்கின. தற்போது அந்த திட்டமானது விரைவாக செயல்படுத்தப்பட இருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையே பரிமாற்றம் செய்ய அந்நாடுகளின் UPI மற்றும் pay now ஆகிய […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

8-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. இதுதான் காரணமா…? கதறும் பெற்றோர்….!!!

8- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை நாயகர்காடு பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 13 வயதுடைய மதிஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி செல்போனில் கேம் விளையாடிய சிறுமியை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த மதிஸ்ரீ தனது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்தை விரட்டி சென்ற காட்டு யானை…. சுதாரித்து கொண்ட ஓட்டுநர்…. வைரலாகும் வீடியோ…!!!

காட்டு யானை அரசு பேருந்தை விரட்டி சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள மேக்கரையில் இருந்து அச்சன்கோவிலுக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி வழியாக செல்லும் சாலையில் வன விலங்குகளின் நடமாட்டம் இருக்கும். இந்நிலையில் கேரள மாநில அரசு பேருந்து மேக்கரையிலிருந்து அச்சன்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது யானைகள் கூட்டமாக நின்று கொண்டிருந்தது. சாலை ஓரமாக மெதுவாக கடந்து சென்றுவிடலாம் என நினைத்து ஓட்டுநர் பேருந்தை இயக்கியுள்ளார். அப்போது ஒரு யானை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“வெளிநாட்டில் வேலை ரெடியா இருக்கு” 85,000 ரூபாயை இழந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செல்லமான்தடி பகுதியில் இளையராஜா(33) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வெளிநாடு செல்ல முயற்சி செய்த இளையராஜா திருச்சி தில்லைநகர் 6-வது கிராஸ் பகுதியில் இயங்கி வரும் கன்சல்டன்சியை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அங்கிருந்த நவாஸ்(39) என்பவர் வெளிநாட்டில் வேலை இருப்பதாகவும், அதற்கு 85 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை நம்பி இளையராஜா நவாஸிடம் பணம் கொடுத்துள்ளார். இதனையடுத்து நவாஸ் போலியான விசாவை இளையராஜாவிடம் கொடுத்துள்ளார். அது போலியானது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இஸ்லாமியரின் காவலன்…. கிறிஸ்துவர்களின் காவலன்…. எல்லாமே திருமாவளவன் தான் ?

செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் வேலூர் இப்ராஹிம், 10.5 % உயர் வகுப்பினருக்கான பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான  இட ஒதுக்கீடு என்பது பிராமண சமூகத்திற்கு மட்டுமல்ல. இதில் 40க்கும் மேற்பட்ட சாதியினர் வருகிறார்கள். ஜாதி ரீதியாக உயர்வகுப்பு என்று சொன்னதினால்,  அவர்கள் எப்பொழுதும் நலிந்து தான் இருக்க வேண்டுமா ? அவர்களுக்கு அரசு உதவி செய்ய கூடாதா ? என்கின்ற நியாயமான கேள்வி எல்லோருக்கும் எழுகிறது. பிராமணர்களுக்கு உதவி செய்யக்கூடியவர்கள் ஏன் சிறுபான்மையினருக்கு செய்யவில்லை ? என்று அவர்கள் தவறாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வேதனை தரும் இழப்பு…. “வலுவாக மீண்டும் வருவோம்”….. சூர்யகுமார் யாதவ் ட்விட்..!!

நாங்கள் பிரதிபலிப்போம் & வலுவாக மீண்டும் வருவோம் என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் சொதப்பிய போதிலும் விராட் கோலி, ஹர்திக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதிர்ச்சி!…. நடிகர் ஆர்.கேவின் மனைவியை கட்டி போட்டு 250 சவரன் தங்க நகைகள் கொள்ளை…. பரபரப்பு சம்பவம்….!!!!!

தமிழ் சினிமாவில் வெளியான எல்லாம் அவன் செயல், அவன் இவன், அழகர் மலை, ஜில்லா போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் ராதாகிருஷ்ணன் என்கிற ஆர் கே. 63 வயதாகும் இவருக்கு 53 வயதில் ராஜி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இதுனயடுத்து ராதாகிருஷ்ணன் நேற்று வெளியில் சென்றிருந்த நிலையில் இவரின் மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அந்த சமயத்தில் திடீரென வீட்டிற்குள் மூன்று பேர் நுழைந்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: கானா பாடல் பாடி அசத்திய சிறுமி…. டி.ஜி.பி சைலேந்திரபாபு பாராட்டு…..!!!!

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பாக சிறுமி ஒருவர் கானா பாடல் பாடி அசத்தி வந்தார். இந்த சிறுமி பற்றி  தகவலறிந்தால் உடனே தெரிவிக்கும்படி டி.ஜி.பி சைலேந்திர பாபு கூறியிருந்தார். இந்நிலையில் அந்த சிறுமியை கண்டுபிடித்துவிட்டதாக டிஜிபி சமூகவலைதளங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டு கூறியிருக்கிறார். அதாவது 13 வயது அச்சிறுமி ஜாய்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை டிஜிபி நேரில் அழைத்து பாராட்டினார். அத்துடன் சிறுமியிடம் அவரது படிப்பு மற்றும் வருங்கால கனவு பற்றி கேட்டறிந்தார். அதன்பின் சிறுமியின் கானா […]

Categories
மாநில செய்திகள்

அட! என்ன இப்படி சொல்லிட்டாரு!…. அழைப்பு விடுத்த ஸ்டாலின்…. புறக்கணித்த இபிஎஸ்….. வெளியான தகவல்….!!!

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 7ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன் பொன்முடி, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, கே.என்.நேரு, திமுக எம்பி வில்சன், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். அதன் பிறகு நவம்பர் 12ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M பதவி கொடுத்தது யாரு ? லிஸ்ட் ரெடியா இருக்கு…! நேரம் பார்க்கும் ஓபிஎஸ்…  பரபரப்பு பேட்டியால் இபிஎஸ் ஷாக்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நான்கரை வருடம் அவர் ( எடப்பாடி ) செய்த பல்வேறு ஜனநாயக விரோத செயல்களை…  என்னை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தான் அவர் செயல்பட்டார் என்பதனை நான் உங்கள் முன்னால் சொல்வதற்கு கடமைப்பட்டிருக்கிறேன். பட்டியல் போட்டு வைத்திருக்கிறேன். உரிய நேரத்தில் அது வெளியிடப்படும். துணை முதலமைச்சர் என்ற பதவியை எனக்கு தந்தாரா ? அவருக்கு யாரு முதலமைச்சர் பதவியை நியமனம் பண்ணுது ? அவருக்கு […]

Categories
பல்சுவை

அப்படி போடு! …. மேலும் 2 நகரங்களில் 5ஜி சேவை…. ஜியோ வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பிரதமர் மோடி சமீபத்தில் 5ஜி நெட்வொர்க் செய்வதை தொடங்கி வைத்தார். அதன் பிறகு மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசி போன்ற நகரங்களில் சோதனை அடிப்படையில் 5g சேவை தொடங்கப்பட்டது. மற்ற நகரங்களுக்கான 5ஜி சேவை படிப்படியாக சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்படும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும் 5g சேவையை பெற வாடிக்கையாளர்கள் புதிய சிம் வாங்க தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 5 ஜி சேவையை பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களில் ஜியோ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திருமா நேருல பார்த்தாரா ? இது ஒரிஜினல் இல்ல… EX பி.எம் நேரு சொன்னதை குறிப்பிட்ட அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசும் போது, மனுஸ்மிருதி நாம் பேசக்கூடிய விஷயங்கள் எல்லாமே மொழி பெயர்ப்பு தான். எந்த மனுஸ்மிருதியை யார்  மொழிபெயர்த்தார்.  ஒரிஜினல் மனுஸ்மிருதி என்ன ? யாரோ ஒரு ஆங்கில பாதிரியார்,  மதமாற்றத்திற்காக மொழிபெயர்த்த பூக்கை… இவங்களாகவே செலக்ட் பண்ணி,  இவங்களா  தப்பான கருத்துக்களை நுழைச்சு,  இவங்களாகவே மொழிபெயர்த்து, மொழிபெயர்த்த இங்கிலீஷ்ல இருந்து,  திரும்பவும் தமிழ்ல மொழிபெயர்த்து, அண்ணன் திருமாவளவன் அவர்கள் கொடுக்குறாங்க. அவருக்கு வேலை இல்லை என்று தான் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! உஷார்…. அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்க போகுது….. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. அதன் பிறகு மழையின் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்குவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது‌ என்று அறிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், […]

Categories
சினிமா

சதீஷ் நான் உங்களை அப்படியா சொல்ல சொன்னேன்?…. வேடிக்கையா இருக்கு!… பதிலடி கொடுத்த தர்ஷா….!!!!

சன்னி லியோன், தர்ஷா குப்தா இருவரது ஆடைகளையும் ஒப்பிட்டு நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சதீஷ் பேசியது சர்ச்சை ஆனது. இதற்கு பதில் அளித்து சதீஷ் கூறியதாவது “சன்னி லியோன் பட்டுப்புடவையில் வந்ததால் தர்ஷா குப்தா அப்செட் ஆனதாகவும், அதை மேடையிலும் பேசலாம் என்று தர்ஷா கூறியதாலேயே நான் பேசினேன். ஆடை கலாச்சாரத்தில் ஆண், பெண் இருவருக்கும் அவரவர் விருப்பம் என்பதில் தனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இந்த நிலையில் சதீஷுக்கு தர்ஷா பதில் அளித்துள்ளார். அந்த  […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கனமழை…. சென்னை மக்களே ஏதாவது பிரச்சனையா?…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க….!!!!

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தமிழக மற்றும் புதுச்சேரியை நெருங்குவதால் தமிழகத்திற்கு இன்று அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று 32 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை காண ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திபுதிபுவென கூடிய 80 அமைப்புகள்…! திணறி பின்வாங்கிய RSS… புதுத்தெம்பில் விடுதலை சிறுத்தைகள்…!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ஒரு அரசியல் பிரிவுதான் பாஜக என்றாலும் அது ஒரு அரசியல் இயக்கமாக இருக்கிற காரணத்தினால், வெளிப்படையாக இந்த பாகுபாடுகளை, வெறுப்பு அரசியலை பேச தயங்குகிற இயக்கம். ஆகவே பிஜேபி ஒரு அரசியல் இயக்கம் என்கின்ற பெயரில் பேரணி நடத்துவதில் எனக்கு எந்த மாறுபாடும் இல்லை. ஆர்.எஸ்.எஸ் இன் அரசியல் பிரிவாக இருக்கின்ற பிஜேபி இருக்கும் பொழுது,  பிஜேபி சார்பில் பேரணி நடத்தாமல் ஆர்எஸ்எஸ் […]

Categories
மாநில செய்திகள்

என்ன இப்படி சொல்லிட்டாரு?…. “பாதி பகுதிகளில் அந்த படத்தில் நான் நடிக்கவே இல்லை”…. உதயநிதி ஸ்டாலின் ஓபன் டாக்….!!!!

தடையறத் தாக்க, மீகாமன், தடம் ஆகிய திரைப்படங்கள் வாயிலாக கவனம் ஈர்த்த டிரைக்டர் மகிழ் திருமேனி இப்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து கலகத் தலைவன் எனும் படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுவிழா நேற்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இவற்றில் படக் குழுவினர் பங்கேற்றனர். அத்துடன் இயக்குநர்கள் மிஷ்கின், மாரி செல்வராஜ், அருண்ராஜா காமராஜ், உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். அப்போது விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய்க்கு என் கதை பிடித்தது…. ஆனால் வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன்…. பிரபல இயக்குனர் ஓபன் டாக்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனதுகென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. சமீபத்தில் வாரிசு படத்தின்‌ “ரஞ்சிதமே ரஞ்சிதமே” முதல் பாடல் […]

Categories
தேசிய செய்திகள்

“இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்”….. முன்னாள் தலைமைச் செயலாளர் கைது…. போலீஸ் அதிரடி….!!!!!

அந்தமான் நிக்கோபார் தீவை சேர்ந்தவர் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிதேந்திர நாராயணன். இவர் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் 21 வயது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். அந்தப் புகாரில், நான் வேலை தேடிக்கொண்டு இருந்தபோது ஜிதேந்திர நாராயணனை சந்தித்தேன். அப்போது எனக்கு அரசு பணி வாங்கி தருவதாக அவர் உறுதி அளித்ததோடு, தொழிலாளர் நலத்துறை ஆணையர் ரிஷி என்பவருடன் தொடர்பில் இருக்குமாறு கூறினார். அதன் பிறகு 2 பேரும் சேர்ந்து என்னை கொடூரமான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பின் தொடர்ந்து சென்ற ரசிகர்கள்….. திடீரென பதறிப்போன நடிகர் அஜித்…. கடைசியில் நடந்த மகிழ்ச்சி டுவிஸ்ட்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். வலிமை படத்திற்கு பிறகும் மீண்டும் எச் வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் “துணிவு” படத்தில் நடித்து வருகிறார். இதில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். துணிவு திரைப்படம் அடுத்த பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐயோ!… இப்பதான் ஆரம்பிச்சிருக்கேன்…. முடிச்சு விட்றாதீங்க… பதறி போன லவ் டுடே இயக்குனர்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இவர் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘கலகத் தலைவன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஏஜென்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். மேலும் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் குரோலி படத்திற்கு இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு முழுமையாக […]

Categories
அரசியல்

OMG…!! தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்வு….!!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.440 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.39,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,875-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.6.10 அதிகரித்து ஒரு கிராம் ரூ.67.50-க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடா…! குழந்தைகளுக்காக மாறிய நயன்தாரா…. சர்பிரைஸ் கொடுக்க காத்திருக்கும் விக்கி…. வெளியான தகவல்…!!!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இரண்டு பேரும் கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து நான்கு மாதங்களே ஆன நிலையில் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராகியுள்ளனர். இது பல சர்ச்சைகளுக்கு ஆளானது. இருப்பினும் சட்டங்களை முறையாக பின்பற்றி தான் குழந்தை பெற்றெடுத்ததாக விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் தங்களுடைய குழந்தைகளுக்காக வருடம் தோறும் பின்பற்றும் வழக்கத்தை மாற்றிக் கொண்டுள்ளாரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பட வெற்றி விழா: நடிகர் சிம்புவுக்கு நினைவு பரிசு…. வெளியான புகைப்படம்…..!!!!

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஐசரிகணேஷ் தயாரித்திருக்கும் படமதான் “வெந்து தணிந்தது காடு” ஆகும். இவற்றில் சிம்பு நாயகனாக நடித்து உள்ளார். இப்படத்தை கவுதம் மேனன் டிரைக்டு செய்துள்ளார். இந்த திரைப்படம் சென்ற செப்டம்பர் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் 50வது நாள் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் உதயநிதி, படத்தின் தயாரிப்பாளர் போன்றோர் கலந்துகொண்டு நடிகர் சிம்புவுக்கு நினைவு பரிசை வழங்கினர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரொம்ப கொடூர மொக்கையா இருக்கு…. அமுதவாணனை அடித்த மணிகண்டன்….. வைரலாகும் வேற லெவல் ப்ரோமோ….!!!

பிக் பாஸ் சீசன் 6 சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளுக்கும் சண்டைக்கு பஞ்சாயமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அதன்படி தற்போது கன்வேயர் வழியாக வரும் பொருட்களை எடுக்க பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் போட்டோ போட்டியாக உள்ளது. அப்படி ஒரு பொருளை எடுத்தபோது மணிகண்டன் தன்னை அடித்ததாக அமுதவாணன் புகார் அளித்துள்ள புரோமோ வீடியா வெளியாகி உள்ளது. அதில், எனக்கு வேற வேலை இல்ல பாரு என்றும் நீங்க ஃபிரேம் பண்றீங்க என்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு! செம… PS-2 படத்தை வாங்கிய உதயநிதி…. எப்போது ரிலீஸ் தெரியுமா?… வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் இயக்கிய பொன்னியின் செல்வன்-1 கடந்த 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்று உள்ளது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை லைக்கா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து மிகப் பிரமாண்டமாக தயாரித்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று ரூ.500 கோடிக்கு மேல் […]

Categories
சினிமா

சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்: சக போட்டியாளரை முகத்தில் குத்திய நடிகை…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்…..!!!!

நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியை வடஇந்தியாவில் பலபேர் பார்க்கின்றனர். இதற்கிடையில் இந்நிகழ்ச்சி சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அதாவது, 10 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய டிரைக்டர் சஜித்கானை பிக்பாசில் போட்டியாளராக சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தி நடிகை மந்தனா கரிமி சினிமாவைவிட்டே விலகுவதாக அறிவித்தார். அத்துடன் சஜித்கானை பிக்பாசிலிருந்து நீக்கும்படி டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி சுவாதி மலிவால் மத்திய மந்திரி அனுராக் தாக்கூருக்கு கடிதம் எழுதினார். […]

Categories
மாநில செய்திகள்

சிவில் சர்வீஸ் தேர்வர்கள் கவனத்திற்கு..! கட்டணம் இல்லா பயிற்சி பெற நாளை மறுநாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

2022 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுக்கான அட்டவணையை யூபிஎஸ்சி வெளியிட்டது. இதனை அடுத்து சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுகள் கடந்த செப்டம்பர் 16,17, 18 மற்றும் 24, 25 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. இந்த நிலையில் அடுத்த வருடத்திற்கு சிவில் சர்வீஸ் தேர்வு மே 28 இல் நடைபெற உள்ளது. எனவே சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு கட்டணம் இல்லா பயிற்சி அளிப்பதற்கான நுழைவு தேர்வு நாளை மறுநாள் (நவம்பர் 13) […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தல-தளபதியுடன் கலக்கப்போகும் திரிஷா?…. வெளியான சூப்பர் தகவல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!!

நடிகர்கள் அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் பல ஆண்டுகளுக்கு பின் ஒரே சமயத்தில் வெளியாக உள்ளது. அந்த வகையில் பொங்கல் பண்டிகையையொட்டி வாரிசு மற்றும் துணிவு படங்கள் மோத இருக்கிறது. இந்த நிலையில் இப்படங்களை அடுத்து விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரின் 67வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அதன்பின் நடிகர் அஜித் இயக்குநர் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் அவரின் 62வது திரைப்படத்தில் நடிக்கயிருக்கிறார். இந்த நிலையில் அந்த 2 திரைப்படங்களிலும் நடிகை த்ரிஷா தான் நடிக்க […]

Categories
தேசிய செய்திகள்

இனி தனியார் சேனல்கள் தினந்தோறும் கட்டாயம் இத செய்யணும்…. மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு…..!!!!!

நாடு முழுதும் உள்ள தனியார் தொலைக்காட்சிகளுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, நாடு முழுவதும் உள்ள தனியார் சேனல்கள் தினம் தோறும் 30 நிமிடங்கள் பொது நலன் குறித்த விஷயங்களை ஒளிபரப்ப வேண்டும். ‌ அதன்படி அறிவியல், தொழில்நுட்பம், கலாச்சார பாரம்பரியம், தேசிய ஒருமைப்பாடு, சுற்றுச்சூழல், சமுதாயத்தின் நலிந்த பிரிவை சேர்ந்த மக்களுக்கு அதிகாரம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆம்!… உண்மைதான்…. 74 வயது தந்தைக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்க முன்வந்த மகள்….. நெகிழ்ச்சி பதிவு…..!!!!!

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் தலைவருமாக இருப்பவர் லாலு பிரசாத் யாதவ். இவருக்கு தற்போது 74 வயதாகும் நிலையில், சிறுநீரகப் பிரச்சினையால் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சிங்கப்பூர் சென்றிருந்தார். இதனையடுத்து தீவன வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற லாலு பிரசாத் ஜாமினில் வெளியே வந்த போது பலமுறை சிகிச்சைக்காக தில்லி மற்றும் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் லாலு பிரசாத் தொடர்ந்து சிறுநீரக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“இந்தப் பட தோல்வியால் நான் பக்குவப்பட்டிருக்கிறேன்”…. விஜய் ஓபன் டாக்…!!!!

லைகர் திரைப்படம் தன்னை பக்குவப்பட வைத்திருப்பதாக விஜய் தேவரகொண்டா பேட்டியில் கூறியுள்ளார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லைகர் என்ற திரைப்படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். இந்த படத்தில் அனன்யா பாண்டே ஹீரோயினாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன் மற்றும் மைக் டைசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் சென்ற ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால் இந்தப் படம் தோல்வியை சந்தித்தது. இந்த […]

Categories
பல்சுவை

174ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (நவம்பர் 11) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
வேலைவாய்ப்பு

Degree முடித்தவர்களுக்கு….. 349 காலிபணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி…!!!!

வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாகவுள்ள திட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Agricultural Scientists Recruitment Board பதவி பெயர்: Head, Project Coordinator மொத்த காலியிடம்: 349 கல்வித்தகுதி: Degree சம்பளம்: Rs. 1,44,200 – 2,18,200/- கடைசி தேதி: 11.11.2022 கூடுதல் விவரங்களுக்கு: www.asrb.org.in http://www.asrb.org.in/images/Vacancy-Notification-Advt-No.-02-2022-for-Non-RMP-positions.pdf

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (11.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 11) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 20 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகலிலிருந்து, அக்டோபர் 10 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 20 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி….. வட தமிழக மாவட்டங்களுக்கு RED ALERT…!!!!

தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் பத்தாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அவங்க சம்மதத்தோடதான் நான் அப்படி பேசினேன்”…. சர்ச்சை பேச்சுக்கு சதீஷ் விளக்கம்…!!!!!

தர்ஷா குப்தா குறித்து பேசியதற்கு கண்டனம் வலுத்த நிலையில் சதீஷ் விளக்கம் அளித்துள்ளார். பிரபல நடிகை சன்னி லியோன் மற்றும் சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஓ மை கோஸ்ட். இத்திரைப்படத்தை இயக்குனர் யுவன் இயக்கியுள்ளார். இந்த படம் வரலாற்று பின்னணியில் ஹரார் காமெடி திரைப்படமாக தயாராகி இருக்கின்றது. இப்படத்தில் நடிகர் சதீஷ் உடன் இணைந்து தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி பி முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுதும் நாளை…. நடைபெற இருந்த தட்டச்சு தேர்வு ரத்து…. மீண்டும் தேர்வு எப்போது….? வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் வருடம் தோறும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் சார்பாக தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதன் மூலமாக அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக இந்த தேர்வுகள் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது இயல்புநிலை திரும்பியதால் மீண்டும் பயிற்சி மையங்கள் சீராக செயல்பட தொடங்கியுள்ளது. இதற்கிடையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டதால் தட்டச்சு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகையின் ஆடை குறித்த சர்ச்சை….. பொய்யான விளக்கமளித்த நடிகர் சதீஷ்‌.‌…. கண்டனம் தெரிவித்த இயக்குனர்….!!!!!

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சியான நடிகையாக வலம் வரும் சன்னி லியோன் தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற போது ஓ‌ மை கோஸ்ட் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது நடிகர் சதீஷ் ஹிந்தி நடிகையான சன்னி லியோன் அழகாக பட்டுப் புடவையில் வந்திருக்கிறார் என்றும், கோயம்புத்தூர் பெண்ணான தர்ஷா குப்தா கவர்ச்சி உடையில் வந்திருக்கிறார் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்திற்கு அலர்ட்: நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை…?

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.  வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக – புதுச்சேரி இடையே நாளை கரையை கடக்கும். இதனால் வட தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளதால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! பார்க்க அப்படியே நடிகர் கமல் மாதிரி இருக்கும் நபருடன்…. விஷால் எடுத்துக்கொண்ட புகைப்படம்…. வைரல்….!!!!!

தமிழ் திரையுலகில் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் கடைசியாக நடித்து வெளிவந்த விக்ரம் படம் மாபெரும் அளவில் வெற்றி அடைந்தது. இதையடுத்து அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் தன்னுடைய 234-வது படத்தில் கமல் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது. இதற்கிடையில் நடிகர்களை போன்றே இருக்கும் நபர்களின் புகைப்படங்கள் சமீபகாலமாக சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது துபாய்யை சேர்ந்த ஒருநபர் அச்சு அசலாக பார்க்க விஸ்வரூபன் திரைப்படத்தில் வரக்கூடிய கமல்ஹாசன் போலவே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னுடைய திருமணம் கண்டிப்பா காதல் திருமணம் தான்”…. நடிகர் அசோக் செல்வன் ஓபன் டாக்…!!!!

நடிகர் அசோக் செல்வன் திருமணம் குறித்து பேசி உள்ளார். பிரபல நடிகரான அசோக் செல்வன் தமிழில் தெகிடி திரைப்படம் மூலம் பிரபலமானார். இவர் நடித்த மன்மத லீலை, ஓ மை கடவுளே உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு தனித்த அடையாளத்தை பெற்று தந்தது. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான நித்தம் ஒரு வானம் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் வசூலை குவித்தது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் நடிகர் அசோக் செல்வன் பங்கேற்றார். அப்போது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஒரு நாணயத்திற்கு 2 பக்கம்…. “தோல்வியை ஏற்றுக்கொள்ளுங்கள்”…. சச்சின் ஆறுதல் ட்விட்.!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் இந்திய அணிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று முன்தினம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தகுதியானது. இந்நிலையில் நேற்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியது.. இந்த போட்டியில் […]

Categories
மாநில செய்திகள்

“11 வருட தவம்”…. ஜெ. ஜெயலலிதாவின் அண்ணன் மகளுக்கு பெண் குழந்தை…. மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்ட தீபா….!!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. இவருடைய கணவர் மாதவன். கடந்த 11 வருடங்களுக்கு முன்பாக தீபா மற்றும் மாதவன் தம்பதிக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், குழந்தையில்லாமல் இருந்தது. அதன் பிறகு சென்னையில் உள்ள வேளச்சேரி மருத்துவமனையில் தீபாவுக்கு வாடகை தாய்முறையில் குழந்தை பிறந்ததாக சமீபத்தில் தகவல் வெளியானது. இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது எனக்கு குழந்தை பிறந்தது உண்மைதான். ஆனால் என்ன குழந்தை என்று இப்போது கூற விரும்பவில்லை. சரியான நேரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இனி இபிஎஸ், ஓபிஎஸ் பதவி செல்லாது”…. அரசியலில் அனாதையான அதிமுக….. கவலையில் தொண்டர்கள்…..!!!!!

அதிமுக கட்சியில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கத்தில் 4 வருடங்களாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அமைதி காத்து வந்தனர். அதன்பின் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில் வெளிப்படையாகவே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் மோதிக்கொள்ள பொதுக்குழு கூட்டத்தில் பிரச்சனை பூகம்பமாக வெடித்தது. எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். […]

Categories

Tech |