Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“இருளர் இனத்தைச் சேர்ந்த பெண்கள் பலாத்கார வழக்கு”…. போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது….!!!!

இருளர் இனத்தைச் சேர்ந்த பெண்கள் பலாத்கார வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே இருக்கும் டி.மண்டபம் கிராமத்தில் திருட்டு வழக்கு தொடர்பாக பழங்குடி இருளர் இனத்தைச் சேர்ந்த கர்ப்பிணி உள்பட நான்கு பெண்களை போலீசார் சென்ற 2011 ஆம் வருடம் நவம்பர் மாதம் 22ஆம் தேதி போலீஸ் வேனில் அழைத்துச் சென்றார்கள். ஆனால் செல்லும் வழியில் ஒரு தைலம் மர தோப்பில் வைத்து நான்கு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் பெறுபவர்களுக்கு….. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர ஓட்டுநர் உரிமம் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு செல்லுபடி ஆகும் பழகுநர் உரிமம் வழங்கப்படுகிறது. இந்த பழகுநர் உரிமத்தை வைத்து ஒரு மாதத்திற்கு பிறகு ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்க முடியும். ஆனால் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு நேரில் ஆஜராக வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால் பழகுநர் உரிமம் பெறுபவர்கள் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க தவறி விடுவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மக்களுக்கு இமெயில் மட்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் டீ சர்ட்டுக்குள் ஒரு கை வந்தது…. பஸ்ஸில் பிரபல நடிகைக்கு நடந்த துயரம்…!!!!

நடிகை ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தி நடித்திருந்தார். இவர் பல பாடல்களையும் பாடியுள்ளார். இந்நிலையில் ஆண்ட்ரியா 11 வயதில் தனக்கு நடந்த கொடுமை பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நான் ஃபேமிலியுடன் பஸ்சில் சென்று கொண்டிருந்தபோது, என் முதுகுக்கு பின்னால் கை வைப்பதை உணர்ந்தேன். அது அப்பாவின் கை என நினைத்தேன். ஆனால், அந்த கை என் டீ சர்ட்டுக்குள் வந்தபோது, […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தர்ணா…. தரையில் படுத்து உருண்டு புரண்டதால் பரபரப்பு….!!!!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சத்திய கண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் நேற்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதை பார்த்த அங்கிருந்த போலீசார் அவரை அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர் கூறியுள்ளதாவது, கனமழை காரணமானால் என்னுடைய கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இரண்டு ஆடுகள் உயிரிழந்தது. நான் மிகவும் வறுமை கோட்டின் […]

Categories
மாநில செய்திகள்

டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி தமிழக அரசு கவுரவிக்கிறது. அதன்படி, 2022-ம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தை https://www.tn.gov.in/ta/forms/Deptname/1 என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காவலர் பல்பொருள் அங்காடியில்…. விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு…!!!!!

விழுப்புரம் காவலர் பல்பொருள் அங்காடியில் போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் காகுப்பத்தில் உள்ள ஆயுத பட வளாகத்தில் காவலர் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திடீரென ஆய்வு செய்தார். அப்போது அங்காடியில் இருக்கும் பதிவேடுகள் மற்றும் வரவு-செலவு கணக்குகளை பார்வையிட்டார். இதன்பின் அத்தியாவசிய பொருட்கள் உடனுக்குடன் விற்பனை செய்யப்படுகின்றதா என்பதையும் கேட்டறிந்தார். இதை அடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் இருக்கும் சைபர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(16.11.22) உள்ளூர் விடுமுறை….. இந்த மாவட்டத்திற்கு மட்டும்…. முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்படும் நடைபெறும் மற்றும் திருவிழாக்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதற்கான அனுமதியை தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளது. அந்த வகையில் முக்கியமான திருவிழாக்கள் அல்லது நிகழ்வுகளின் போது மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் ஐப்பசி மாத துலா உற்சவம் மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டிற்கான விழா அக்டோபர் மாதம் தொடங்கியது.   தொடர்நது 30 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாக்!…. பிக்பாஸில் ப்ளூடூத் பயன்படுத்திய போட்டியாளர்?…. இப்படி ஒரு ஏமாற்று வேலையா….? வைரலாகும் பரபரப்பு ப்ரோமோ…..!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ‌ இந்த நிகழ்ச்சியில் 100 நாட்களுக்கு போட்டியாளர்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும். இதனால் செல்போன் கூட பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. பிக்பாஸ் ஷோ இறுதிக்கட்டத்தை நெருங்கும் நேரத்தில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வீட்டுக்குள் வந்து சந்திப்பார்கள். அதுவரை 100 நாட்களுக்கு போட்டியாளர்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் இருப்பதோடு தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களையும் பார்க்காமல் தான் இருக்க வேண்டும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாரிசு சூட்டிங் ஸ்பாட்டில் குவிந்த கூட்டம்….. தளபதி விஜய் செய்த காரியம்…. செம உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ஷாம், குஷ்பூ, சங்கீதா, மீனா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!… ரிலீசுக்கு முன்பே இத்தனை கோடி வசூலா….. அப்ப “வாரிசு” படம் வேற லெவல்ல இருக்கும் போலயே..‌..!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவர் வம்சி இயக்கத்தில் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம், குஷ்பூ, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு தமன் இசையமைக்க முதல் பாடலான ரஞ்சிதமே அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நோயினால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தாவின் ஹாட் க்ளிக்ஸ்…… இணையத்தில் படு வைரல்…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது மயோசிடிஸ் என்னும் அரிய வகை சரும அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். சமந்தா நடித்துள்ள யசோதா திரைப்படம் அண்மையில் வெளியாகி வசூலில் அதிரடி வேட்டை நடத்தி வருகிறது. நோயினால் பாதிக்கப்பட்ட நிலையிலும் நடிகை சமந்தா யசோதா திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதோடு, ஹாலிவுட் பயிற்சியாளருடன் சண்டை பயிற்சியில் ஈடுபடும் வீடியோவும் வெளியாகி வைரலானது. இதனையடுத்து நடிகை சமந்தா தற்போது சகுந்தலம் மற்றும் குஷி போன்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எல்லாரும் முதுகுல குத்திட்டாங்க”….. கோபத்தில் கொந்தளித்த மைனா நந்தினி….. பிக் பாஸில் நடந்தது என்ன?….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலிருந்து சண்டைகளுக்கும், சச்சரவுகளுக்கும் பஞ்சமில்லாமல் இருப்பதால் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஓடி கொண்டு இருக்கிறது. இந்த வாரம் போட்டியாளர்களுக்கு ராஜ வம்சமும், அருங்காட்சியகமும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கின் படி போட்டியாளர்கள் 3 பிரிவுகளாக பிரிய வேண்டும். இதில் ராஜா குடும்பம், சேவகர்கள் உள்ளிட்ட பிரிவுகளை அசீம் வாசித்தார். அப்போது கதாப்பாத்திரங்களுக்காக ஒவ்வொருவரும் போட்டியிட்டனர். ஆனால் […]

Categories
சினிமா

இது என்ன சோதனை!…. அடுத்தடுத்து சில மாதங்களில் ஈடுகட்ட முடியா 3 இழப்புகள்…. தீரா துயரில் தவிக்கும் நடிகர் மகேஷ்பாபு….!!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவருடைய தந்தை கிருஷ்ணா நேற்று முன்தினம் மாரடைப்பின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று உயிரிழந்தார். தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த கிருஷ்ணாவுக்கு 80 வயது ஆகும் நிலையில், 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 50 வருடங்களாக தெலுங்கு சினிமாவில் நிலைத்திருந்த கிருஷ்ணா தயாரிப்பாளர், இயக்குனர் என பல்வேறு அவதாரங்களை எடுத்தவர். இந்த வருடம் முழுவதும் நடிகர் மகேஷ்பாபுக்கு தீராத […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg Boss: நெகடிவ் விமர்சனங்கள்….. நாமினேட் பட்டியலில் 8 பேர்….. இந்த வாரத்தில் இவர்தானாம்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்ற ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, செரினா மற்றும் அசல் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இந்த வாரத்தில் நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தனலட்சுமி, அசீம், நிவாஷினி, குயின்சி, ஆய்ஷா, ராபர்ட் மாஸ்டர், விஜே கதிர், ஜனனி ஆகிய 8 பேர் நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை மஞ்சிமா மோகன் திருமணத்தினால் எடுத்த திடீர் அதிரடி முடிவு….. குழப்பத்தில் ரசிகர்கள்…. காரணம் அதுதானாம்…..!!!!!

தமிழ் சினிமாவில் கௌதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலிக்கிறார். நடிகை மஞ்சிமா தேவராட்டம் என்ற படத்தில் நடித்த போது நடிகர் கௌதம் கார்த்திக்குடன் காதலில் விழுந்தார். இருவரும் தங்களுடைய காதலை உறுதிப்படுத்திய நிலையில், நவம்பர் 28-ஆம் தேதி சென்னையில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் திருமணத்திற்கு முன்பாக நடிகை மஞ்சிமா மோகன் திடீரென ஒரு முடிவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சச்சின் மகள் இல்ல, சைஃப் அலிகானின் மகளாம்”…. காதலை உறுதிப்படுத்திய பிரபல கிரிக்கெட் வீரர் ஷுப்மன்‌ கில்?….!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சாரா அலிகான். இவர் தனுஷ் உடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார். இவர் பிரபல கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில்லுவை காதலிப்பதாக சமீப காலமாகவே தகவல்கள் பரவி வருகிறது. இந்த தகவல்களை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் 2 பேரும் ஒன்றாக விமானத்தில் சென்றனர். இதனால் பலரும் ஷுப்மன் மற்றும் சாரா காதலிப்பதாக கூறிய நிலையில், இருவரும் அதை கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் சாராவை காதலிக்கும் தகவலை தற்போது […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! ஈடுபாடு உண்டாகும்..! இறைவழிபாடு அவசியம்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று துன்பமும் இன்பமும் மாறி வரும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும், பணவரவு சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். உங்களின் வேலையைக்கண்டு மேலதிகாரிகள் திருப்தியடையக்கூடும். பெண்களுக்கு காரியத்திலிருந்த தடைகள் விலகிச்செல்லும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அவர்கள் எடுக்கும் முடிவில் தெளிவு இருக்கும். மற்றவர்களுக்கு உறுதுணையாக இருப்பீர்கள். நல்ல முன்னேற்றத்தை இன்று அடையக்கூடும். இன்று உங்களுக்கு இறைவழிபாட்டில் நாட்டம் செல்லும். குடும்பத்தில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! தாமதம் உண்டாகும்..! வேற்றுமை விலகும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு கூடும் நாளாக இருக்கும். எதிரிகள் விலகிச்செல்வார்கள். எதிர்ப்புகளும் குறைந்துவிடும். நண்பர்களின் உதவி நன்மையைக் கொடுக்கும். காதலில் பயப்படக்கூடிய சூழலும் உண்டாகும். கல்யாணக் கனவுகள் நனவாகும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகும், எனவே நிதானம் தேவை. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இடத்தில் நிதானத்தை கடைபிடியுங்கள். காரியங்களில் இருந்துவந்த தடைகளும், தாமதமும் விலகிச்செல்லும். மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும். உங்களுடைய பாடங்களில் கவனத்தை செலுத்துங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! வாக்குறுதிகள் நிறைவேறும்..! பயணங்கள் செல்ல நேரிடும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! பிறரது சிரமங்களை மதிக்க வேண்டும். பணச்செலவு அதிகரிக்கும். தியானம் மற்றும் தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியளிக்கும். இன்று குடும்பத்தினரின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். திட்டமிட்ட பணியையும் சிறப்பாக செய்து வெற்றியும் பெறுவீர்கள். இன்று கூடுதல் கால அவகாசம் அனைத்து விஷயங்களிலும் தேவைப்படும். கடன் பிரச்சனையிலிருந்து ஓரளவு விலகிச்செல்வீர்கள். வெளியூர் பயணங்களின் போழுது கவனம் தேவை. பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். உடன் இருப்பவர்கள் உங்களுக்கு துரோகியாக மாறக்கூடும். அவர்களை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! தொடர்புகள் விரிவடையும்..! திருப்தி உண்டாகும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! அனுபவத்தைப் பயன்படுத்தி புகழ்ச்சி பெறுவீர்கள். தொழில் வியாபார தொடர்பு பலனளிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருளை வாங்குவீர்கள். இன்று எதிரிகளின் தொல்லையை சமாளித்து விடுவீர்கள். அனைத்து விஷயங்களையும் இன்று சரி செய்து விடுவீர்கள். உறவினர்களின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பணவரவு திருப்தியளிக்கும். பெண்கள் தாய்வீட்டாரின் அன்பைப் பெறக்கூடும். சிலருக்கு வீடு மாறக்கூடிய சூழ்நிலை அமையும். வீட்டை புதுப்பிக்கும் எண்ணங்கள் மேலோங்கும். வேலைச்சுமை அதிகரிப்பதால் உடல் சோர்வு ஏற்படும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! எண்ணங்கள் மேலோங்கும்..! வளர்ச்சி சீராக இருக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! தொழிலில் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். மனக் கஷ்டங்கள் நீங்கும். தைரியம் பிறக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். இன்று அக்கம்பக்கத்தினரிடம் அன்பு பாராட்டுவீர்கள். தொழில் வியாபாரத்திலும் புதிய சாதனைகளை படைப்பீர்கள். ஆதாயத்தை ஈட்டிக் கொள்வீர்கள். விருந்து, விழாக்களில் கலந்துக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணவரவில் முன்னேற்றம் இருக்கும். சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். குடும்பத் தேவைகளை பூர்த்திச்செய்துக் கொள்வீர்கள். கடன் தேவைகளை சமாளிப்பீர்கள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் நிறைவேற்றி விடுவீர்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! முயற்சிகள் கைகூடும்..! வளர்ச்சி உண்டாகும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று நண்பர்கள் தேவையான உதவிகளை வழங்குவார்கள். தொழில் வியாபாரம் செழித்து வளர கூடுதல் மூலதனம் தேவைப்படும். கொஞ்சம் அலைச்சல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தவறுகளை திருத்த வேண்டும். தேவையில்லாத நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று வளர்ச்சி சீராக இருக்கும். தடைபட்ட சுபகாரியங்கள் சிறப்பாக நடந்துமுடியும். திருமண வரன்கள் வந்து குவியும். இன்று முயற்சியை மேற்கொண்டால் முன்னேற்றம் உண்டாகும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் நல்ல வெற்றியைக் கொடுக்கும். எதிர்பார்த்த கடனுதவிகள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! திறமைகள் வெளிப்படும்..! ஆர்வம் அதிகரிக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்றைய நாள் சுய திறமையை வளர்த்துக் கொள்ளக்கூடிய நாள். பொது விசயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தெய்வ அருளால் தொழிலில் லாபத்தை ஈட்டிக் கொள்வீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருக்கமாக இருக்க வேண்டாம். அவர்களிடம் குடும்ப கஷ்டங்களை பேச வேண்டாம். ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். யோசித்து செயல்பட வேண்டும். தொழிலில் சிரமங்களை சரி செய்யுங்கள். பணவரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். வாகனங்களில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டும். பணியாளர்களை மதித்து […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! சிந்தனைகள் மேலோங்கும்..! நிதியுதவி கிடைக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று சந்தோச சிந்தனைகள் மனதை உற்சாகப்படுத்தும். சிறு செயல்களையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அமைதியாக பணிகளை மேற்கொள்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்திலிருந்த பிரச்சனைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த சங்கடங்களும் சரியாகும். இன்று அன்பு வெளிப்படும் நாளாக இருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். கேட்ட இடத்தில் பணஉதவிகள் கிடைக்கும். சந்தோஷமான தருணங்களை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! நிதானம் அவசியம்..! எச்சரிக்கை தேவை..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செயல்களை நிதானமாக செய்யுங்கள். யாரையும் அலட்சியப்படுத்த வேண்டாம். யாரையும் குறைச்சொல்ல வேண்டாம். ஆலய வழிபாடு மற்றும் இறைவழிபாடு பெரிதாகவேண்டும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சீராக இருக்கும். தனவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். அவர்களின் தேவைகளை புரிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு சிரமமான சூழலில் இருக்கும். அதனை கவனமாக கையாள வேண்டும். அனைத்து நன்மைகளும் ஏற்படுவதற்கு இறைவழிபாடு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! நன்மைகள் உண்டாகும்..! செலவுகள் அதிகரிக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று தகுதித் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். செயலில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். பணவரவு நன்மையை கொடுக்கும். எதிர்பாராத வகையில் செலவு அதிகரிக்கும். எவரிடமும் பொது விஷயங்களைப்பற்றி பேசவேண்டாம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். நேரத்திற்கு உணவு மேற்கொள்வதால் உடல்நிலையை பாதுகாக்க முடியும். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். உடலை வலுப்படுத்துங்கள். ஆரோக்கியமாக இருந்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசவேண்டாம். கணவன் மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். பிள்ளைகளிடம் அன்பு காட்டுங்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! கோபத்தை தவிர்க்க வேண்டும்..! அன்பு வெளிப்படும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று தனித்திறமையை வளர்த்துக் கொள்வதால் சில நன்மைகள் உண்டாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். பணியாளர்களுக்கு பணிச்சுமை கூடும். தொழில் வியாபாரத்திற்காக அலைய வேண்டியதிருக்கும். பிறர்களின் செயலால் இடையூறுகள் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. எதிர்பாராத செலவுகள் உண்டாகும். இனம் புரியாத குழப்பம் இருந்துக்கொண்டே இருக்கும். தாயின் உடல்நிலையில் கவனம் கொள்ளுங்கள். தந்தையிடம் அன்பாக பேசுங்கள். கோபத்தை தவிர்க்க வேண்டும். தொழில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! கவனம் தேவை..! திட்டமிடுதல் அவசியம்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! எதிர்மறையான சூழலில் கவனமாக இருக்க வேண்டும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நடைமுறை சிக்கல்கள் இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். பணப்பரிவர்த்தனை திருப்தியளிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடுவீர்கள். எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது கவனம் தேவை. செயலில் வேகம் இருக்கும். விவேகத்துடன் எதையும் அணுகுங்கள். முன்னேற்றத்திற்கு இன்று இறைவழிபாடு கண்டிப்பாக […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (16-11-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 16-11-2022, ஐப்பசி 30, புதன்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை அஷ்டமி திதி. ஆயில்யம் நட்சத்திரம் மாலை 06.58 வரை பின்பு மகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கால பைரவாஷ்டமி. பைரவர் – நவகிரக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00. இன்றைய ராசிப்பலன் – 16.11.2022 மேஷம் உங்களின் ராசிக்கு நெருங்கியவர்களால் பிரச்சினைகள் வரலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை தோன்றும். விட்டு கொடுத்து நடந்து கொண்டால் மன அமைதி உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 16…!!

நவம்பர் 16  கிரிகோரியன் ஆண்டின் 320 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 321 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 45 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1272 – இங்கிலாந்து அரசர் மூன்றாம் என்றியின் இறப்பையடுத்து, 9வது சிலுவைப் போரில் பங்கெடுக்க சென்ற இளவரசர் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னராக அறிவிக்கப்பட்டார். ஆனாலும், இரண்டு ஆண்டுகளின் பின்னரே அவர் திரும்பி வந்து முடிசூட முடிந்தது. 1491 – எசுப்பானியா, ஆவிலா நகரில் பெருமலவு யூதர்கள் பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டனர். 1532 – எசுப்பானியத் தளபதி பிரான்சிஸ்கோ பிசாரோ இன்கா பேரரசர் அட்டகுவால்பாவைத் தோற்கடித்து சிறைப்பிடித்தான். 1776 – அமெரிக்கப் புரட்சி: ஐக்கிய அமெரிக்காவை ஐக்கிய மாகாணங்கள் (கீழ் நாடுகள்) அங்கீகரித்தன. 1793 – பிரெஞ்சுப் புரட்சி: நாந்துவில் உரோமைக் கத்தோலிக்க […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 16…!!

நவம்பர் 16 கிரிகோரியன் ஆண்டின் 320 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 321 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 45 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1272 – இங்கிலாந்து அரசர் மூன்றாம் என்றியின் இறப்பையடுத்து, 9வது சிலுவைப் போரில் பங்கெடுக்க சென்ற இளவரசர் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னராக அறிவிக்கப்பட்டார். ஆனாலும், இரண்டு ஆண்டுகளின் பின்னரே அவர் திரும்பி வந்து முடிசூட முடிந்தது.1491 – எசுப்பானியா, ஆவிலா நகரில் பெருமலவு யூதர்கள் பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டனர். 1532 – எசுப்பானியத் தளபதி பிரான்சிஸ்கோ பிசாரோ இன்கா பேரரசர் அட்டகுவால்பாவைத் தோற்கடித்து சிறைப்பிடித்தான். 1776 – அமெரிக்கப் புரட்சி: ஐக்கிய அமெரிக்காவை ஐக்கிய மாகாணங்கள் (கீழ் நாடுகள்) அங்கீகரித்தன. 1793 – பிரெஞ்சுப் புரட்சி: நாந்துவில் உரோமைக் கத்தோலிக்க பிரிவினைவாத மதகுருக்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மகனுடன் தீக்குளிக்க முயன்ற பெண்…. தடுத்து நிறுத்திய போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

பெண் தனது மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் சிறுவனுடன் வந்த பெண் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தன் மீதும், சிறுவன் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் […]

Categories
மாநில செய்திகள்

பிறந்தநாள் நிகழ்ச்சியில் பிரியாணி சாப்பாடு… மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் தற்கொலை….!!!!!

மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள மேட்டு தெருவை சேர்ந்த தம்புசாமி என்பவர் ப்ளம்பர் தொழில் செய்து வருகின்றார். இவருடைய மனைவி பவானி. இவர்களுக்கு யுவஸ்ரீ (22) என்ற மகள் இருக்கின்றார். இந்நிலையில் பவானி நேற்று முன்தினம் இரவு சேத்துப்பட்டில் வசித்து வரும் தனது அக்கா பார்வதியுடன் அயனாவரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கு பிரியாணி […]

Categories
உலக செய்திகள்

கடலுக்கு படையெடுக்கும் நண்டுகள்… வழிவிட்டு செல்லும் மக்கள்… இதுதான் காரணமா….?

ஆஸ்திரேலிய நாட்டில் கிறிஸ்துமஸ் தீவு எனும் பகுதி அமைந்துள்ளது. இந்த தீவில் ஏராளமான சிவப்பு நண்டுகள் காணப்படுகிறது.  பொதுவாக அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் தான் நண்டுகளுக்கான இனப்பெருக்க காலகட்டமாகும்.  எனவே சிவப்பு நிற நண்டுகள் இந்த மாதங்களில் காட்டுப் பகுதியில் இருந்து கடலை நோக்கி கூட்டம் கூட்டமாக படையெடுத்து செல்கின்றது. ஆண் நண்டுகள் தங்களது இடங்களை விட்டு வெளியேறி கடலுக்கு செல்கின்றது. இந்திய பெருங்கடலுக்கு சென்ற நண்டுகள் ஒவ்வொன்றும் முட்டைகளை இட்டு, அந்த முட்டைகள் பொறித்ததும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்…. இரவே காட்பாடியில் குவிந்த இளைஞர்கள்…!!!!

இன்று தொடங்கிய முகாமிற்காக நேற்று இரவே காட்பாடியில் இளைஞர்கள் குவிந்தார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி விளையாட்டு மைதானத்தில் அக்னிபத் திட்டத்தில் ராணுவத்தில் ஆட்சேர்ப்பு முகமானது இன்று தொடங்கி வருகின்ற 30ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. இதன் மூலம் அக்னிவீர், அக்னிவீர் சிப்பாய், தொழில்நுட்பம், உதவி செவிலியர், உதவி செவிலியர் கால்நடை, மத போதகர் ஆகிய பணியிடங்களுக்காக ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த நிலையில் இன்று நடைபெற்ற முகாமில் பங்கேற்பதற்காக நேற்று இரவு ஏராளமான இளைஞர்கள் காட்பாடியில் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. அம்மை நோய்க்கு பலியான 1 வயது குழந்தை…. மருத்துவர்கள் எச்சரிக்கை….!!!!

அம்மை நோய்க்கு 1 வயது குழந்தை பலியாகியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் உள்ள நல் பஜார் பகுதியில் வசித்து வந்த ஒரு தம்பதியினரின் 1 வயது குழந்தைக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் அந்த குழந்தைக்கு கடுமையான நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு சுவாச கோளாறுகளை உண்டாக்கியது. இதனையடுத்து கடந்த சனிக்கிழமை வென்டிலேட்டரில் 2  நாட்களாக வைக்கப்பட்டிருந்த குழந்தை நேற்று  மதியம் பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து மருத்துவர் மங்களா கோமரே கூறியதாவது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரக்ஷன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்…. சூப்பர் அப்டேட் வெளியிட்ட படக்குழு…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

விஜய் டிவியில்  ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரக்ஷன். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து தற்போது இயக்குனர் யோகேந்திரன் இயக்கத்தில் ரக்ஷன் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கலக்கப்போவது […]

Categories
உலக செய்திகள்

நடப்பு ஆண்டில் 600 துப்பாக்கி சூடு…. அதிர்ச்சி சம்பவங்கள் வெளியீடு…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

விர்ஜீனியா பல்கலைக்கழக வளாக துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க நாட்டில் வாஷிங்டன் என்று நகரம் அமைந்துள்ளது. இந்த நகருக்கு  சுற்றுலா சென்று விட்டு மாணவ மாணவிகள் அடங்கிய பேருந்து ஒன்று விர்ஜீனியா பல்கலைக்கழகத்திற்கு திரும்பி கொண்டு இருந்தது. இந்நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை அன்று இரவு 10.30 மணியளவில் அந்தப் பேருந்தை நோக்கி திடீரென மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். விர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த […]

Categories
உலக செய்திகள்

ஜி-20 மாநாடு நடைபெறும் ஓட்டலுக்கு…. பிரதமர் மோடி வருகை….. பிரபல நாட்டு அதிபர் வரவேற்பு….!!!!

ஜி-20 மாநாடு நடைபெறும் பாலி நகரிலுள்ள அபூர்வா கெம்பிஸ்னிகி ஓட்டலுக்கு வருகை தந்த பிரதமர் மோடியை இந்தோனேசிய அதிபர்  வரவேற்றார். இந்தோனேசியா நாட்டில் பாலி என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில்  ஜி-20 உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்து நேற்று புறப்பட்டு பாலி நகருக்கு சென்றுள்ளார். இந்த மாநாட்டில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம், சுகாதாரம் போன்ற மூன்று முக்கிய அமர்வுகளில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“செல்போன் கோபுரம் அமைக்க தடை விதிங்க”…. கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு….!!!!!

செல்போன் கோபுரம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என காசிகுட்டை கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்கள். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மனுக்களை கொடுத்தார்கள். அந்த வகையில் காட்பாடி அருகே இருக்கும் காசிகுட்டை கிராம மக்கள் மனு ஒன்றை அளித்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, எங்கள் ஊரில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றது. சென்ற சில […]

Categories
மாநில செய்திகள்

கால்பந்து வீராங்கனை மறைவு… “இழப்பீடு போதுமானதல்ல”..? அன்புமணி ராமதாஸ் இரங்கல்…!!!!!

கால்பந்து வீராங்கனையான பிரியாவின் உயிரிழப்பு பற்றி பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை கொளத்தூர் அரசு மருத்துவமனையில் மூட்டு சவ்வு கிழிந்ததற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான பிரியா அடுத்தடுத்து ஏற்பட்ட உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்நிலையில் பிரியாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி விசாரணை நடத்தி  தவறு இருந்தால் டாக்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட…. ‘ பிக்பாஸ்’ விக்ரமன் இந்த சீரியலில் நடித்துள்ளாரா….? இது தெரியாம போச்சே….!!!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.  இந்த நிகழ்ச்சியின் முதல் ஆளாக சாந்தி எலிமினேட் ஆனார். இதனையடுத்து ஜி. பி. முத்து தானாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் விக்ரமன். இவர் தற்போது இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி வருகிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான […]

Categories
மாநில செய்திகள்

இதை தான் நாங்கள் பேசினோம்…. மு.க. ஸ்டாலினை சந்தித்த பா.ஜ.க.வினர் …. வெளியான தகவல்….!!!!

பாஜகவினர் இன்று முதலமைச்சரை சந்தித்து பேசியுள்ளனர். பாஜக நிர்வாகிகள்  இன்று முதலமைச்சரை  நேரில் சந்தித்து பேசினர். இதில் பாஜக நிர்வாகியான பொன்.  ராதாகிருஷ்ணன், பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜகவினர் கூறியதாவது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்தும், எங்களது தொகுதிகளில் ஏற்பட்ட பிரச்சனை குறித்தும் ஆலோசனை நடத்தினோம் என கூறியுள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

கல்குவாரி விபத்து…. 8 தொழிலாளர்கள் பேர் உயிரிழப்பு…4 பேரின் நிலை என்ன…? மீட்பு பணிகள் தீவிரம்…!!!!!

மிசோரம் மாநிலத்தில் நத்தியால் மாவட்டம் மவுதார் கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி அமைந்துள்ளது. நேற்று தொழிலாளி வேலை பார்த்துகொன்டிருந்த போது தீடிரென கற்கள் விழுந்தது.இதனால் இடிபாட்டிற்குள் சிக்கி 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை  8 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 4 பேரை தேடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் பெரும் அப்பகுதியில் சோகத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. நடிகை சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…. இணையத்தில் வைரல்….!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். மேலும், இவர் விசுவாசம், காலா போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதனையடுத்து சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது சமூக வலைதளபக்கத்தில் சாக்ஷி  அகர்வால் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கார்த்திகை மகா தீபத்திருவிழாவையொட்டி… திருவண்ணாமலையில் அமைச்சர்கள் ஆய்வு….!!!!!

கார்த்திகை மகா தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத மகா தீபத் திருவிழா நடைபெற இருக்கின்றது. தற்போது இதற்கான பல்வேறு முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். அவர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த பின் பக்தர்கள் செல்லும் பாதை குறுகியதாக இருக்கின்றது. அதிக பக்தர்கள் வரும் போது நெரிசல் ஏற்படும். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீது இவ்வளவு வழக்குகள் நிலுவையில் இருக்கு?…. சுப்ரீம்கோர்ட்டில் அறிக்கை தாக்கல்….!!!!!

எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீதானவழக்குகளை விரைந்து விசாரிக்கவேண்டும் என கோரி வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் சார்பாக சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்குமாறு சிபிஐ மற்றும் பிற அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் “சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ்(பிஎம்எல்ஏ), அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்குகளில் 51 எம்.பிக்கள், 71 எம்எல்ஏக்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது. அத்துடன் 51 எம்பிக்கள், 71 எம்எல்ஏக்கள் மீது உள்ள […]

Categories
மாநில செய்திகள்

“பிரதமர் மோடியாக மாற முதல்வர் ஸ்டாலினுக்கு ஆசை”…. கலாய்த்து தள்ளிய பாஜக அண்ணாமலை….!!!!

தமிழக அரசின் மின்சார கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பால் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் அந்தியூரில் வடக்கு மாவட்ட தலைவர் கலைவாணி விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அந்த கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போட்டி போட்டு விலை உயர்த்தி வருகின்றனர். மத்திய அரசு விலையை குறைத்தாலும் […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு…. இனி நூலகங்கள் எல்லாம் வேற லெவல்ல மாறப்போகுது…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் உள்ள  நூலகங்களை சீரமைக்கவும், தேவையான புத்தகங்களை வாங்கவும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 84 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதற்கான ஆணையை  வெளியிட்டுள்ளது. இந்நிலையில் முதல் கட்டமாக 2021-2022 ஆம் ஆண்டில் 416 நூலகங்களை சீரமைக்க 91 .75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதேபோல் தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள நூலகங்கள் அனைத்தும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஜெய் நடிக்கும் புதிய படத்தில்… பிரபல தெலுங்கு நடிகை தமிழில் என்ட்ரி…!!!!!

பிரபல தெலுங்கு நடிகை தமிழில் என்ட்ரி கொடுக்கின்றார். தெலுங்கு திரை உலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்கின்றார் நடிகை பானு ஸ்ரீ. பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்த இவர் தற்போது பிரேக்கிங் நியூஸ் என்ற திரைப்படம் மூலமாக தமிழில் என்ட்ரி கொடுக்கின்றார். அந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் ஜெய் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை ராகுல் பிலிம்ஸ் தயாரிக்க அண்ட்ரூ பாண்டியன் இயக்குகின்றார். சயின்ஸ் பிக்சன் ஆக்சன் திரில்லர் கதையாக உருவாகும் இத்திரைப்படத்தில் ஜெய் சூப்பர் ஹீரோவாக […]

Categories

Tech |