Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆன்லைன் மூலம் விற்பனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

லாட்டரி விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் கேரளா உட்பட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனால் சர்ச் ரோடு பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முகமது அசாருதீன்(23) என்பது தெரியவந்தது. அசாருதீன் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மீண்டும்” பழைய நிலைக்கு திரும்பிய கடல்…. செத்து மிதந்த மீன் குஞ்சுகள்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் பகுதியில் கடல் அலைகள் நேற்று முன்தினம் பச்சை நிறத்தில் காணப்பட்டதோடு துர்நாற்றம் வீசியது. இதனால் அச்சமடைந்த மீனவர்கள் கடல் நீரின் நிறம் மாறியதற்கு பூங்கோரை பாசிகள் தான் காரணமா? அல்லது ரசாயன கழிவுகள் காரணமா? என மீன்வளத்துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் நேற்று கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. ஆனால் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய மீனவர்கள் மீன் குஞ்சுகள் கடலில் செத்து மிதப்பதை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வங்கியின் சேவை குறைபாடு…. ரூ. 72 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உத்தரவு….!!!

வங்கிக்கு 72 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவிதாங்கோட்டை பகுதியில் கில்லஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தான் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கி அதிகாரி கேட்டுக்கொண்டபடி 25 ஆயிரம் ரூபாய் வீதம் 48 தவணைகளில் சேர்த்து முடிக்கும் டெபாசிட் திட்டத்தில் இணைந்தார். அதற்கு 6.85 சதவீதம் வட்டி கிடைக்கும் என வங்கி அதிகாரி தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கில்லஸ் சில தவணைகளை செலுத்தாமல் இருந்துள்ளார். இதனையடுத்து வங்கிக்கு சென்று […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வெறிபிடித்து சுற்றும் நாய்…. 10-க்கும் மேற்பட்டோர் காயம்…. நகராட்சி ஊழியர்களின் முயற்சி….!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பகுதியில் கடந்த சில நாட்களாக கழுத்தில் பெல்ட் அணிந்த ஒரு நாய் சுற்றி திரிகிறது. யாரோ ஒருவர் இந்த நாயை வீட்டில் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் வாகனத்தில் செல்பவர்களையும், சாலையில் நடந்து செல்பவர்களையும் இந்த நாய் துரத்தி கடிக்கிறது. கடந்த சில நாட்களாக 10-க்கும் மேற்பட்டோரை இந்த நாய் கடித்து குதறியது. இதனால் காயமடைந்தவர்கள் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் நகராட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

“மற்ற நாடுகளுக்கு முன்னோடி”… இந்தியாவுக்கு சர்வதேச விருது… மத்திய அமைச்சர் தகவல்…!!!!

குடும்ப கட்டுப்பாட்டை செயல்படுத்துவதில் சிறப்பான தலைமைத்துவத்திற்கான விருதை இந்தியா வென்றுள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா குடும்ப கட்டுப்பாட்டை செயல்படுத்துவதில் சிறப்பான தலைமைத்துவத்திற்கான விருதை இந்தியா பெற்றுள்ளது என கூறியுள்ளார். இது தொடர்பாக மன்சுக் மாண்டவியா வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, தாய்லாந்தில் பட்டாயா நகரில் குடும்ப கட்டுப்பாடு தொடர்பான சர்வதேச மாநாடு (ஐசிஎஃப்பி) நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டில் 120-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 3,500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் நேரடியாகவும், 10,௦௦௦-ற்கும் மேற்பட்டவர்கள் காணொலி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை புலி….. அச்சத்தில் கூச்சலிட்ட பெண்…. பரபரப்பு சம்பவம்…!!!

வீட்டிற்குள் சிறுத்தை புலி புகுந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை அருகே நடுமலை ஸ்டேட் வடக்கு பிரிவில் தேயிலை தோட்ட தொழிலாளியான பாக்கியம் என்பவர் வசித்து வருகிறார். நேற்று அதிகாலை பாக்கியம் தனது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது பக்கத்து அறையில் பூனை ஒன்று அமர்ந்திருந்தது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து தேயிலை தோட்டம் வழியாக குடியிருப்பு பகுதிகள் நுழைந்த சிறுத்தை புலி பூனையை பார்த்து அதன் மீது பாய்ந்து பிடிக்க […]

Categories
தேசிய செய்திகள்

“தவறான செய்திகளை நம்ப வேண்டாம்”….. உரத் தட்டுப்பாடு இல்லை…. மத்திய அரசு விளக்கம்….!!!!

தமிழகம், ராஜஸ்தான் மாநிலங்களில் உரத் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின் திருச்சி பகுதி மற்றும் ராஜஸ்தானில் உரத் தட்டுப்பாடு இருப்பதாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தது. அவை தவறான செய்திகள். ரபி பருவத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய நாட்டில் போதுமான அளவு உரங்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் தேவைக்கு ஏற்ப உரங்களை அனுப்புகிறது. மேலும் மாவட்டங்களுக்குள் மற்றும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

புரோக்கர் கூறியதை நம்பி…. 32 லட்ச ரூபாயை இழந்த பெண்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

32 லட்ச ரூபாய் மோசடி செய்த புரோக்கரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராம்நகர் செங்குத்தா நகரில் வசிக்கும் மனிஷா என்பவர் அப்பகுதியில் மழலைகள் பள்ளியில் நடத்தி வருகிறார். இவர் சொந்தமாக வீடு கட்ட முடிவு எடுத்து மயிலம்பட்டி பகுதியை சேர்ந்த நில புரோக்கர் மாரியப்பன் என்பவரை அணுகினார். அப்போது காளபட்டியில் விற்பனைக்கு இருக்கும் ஒரு பிளாட்டை வாங்கி வீடு கட்டி தருவதாக மாரியப்பன் தெரிவித்துள்ளார். இதனை நம்பி மனிஷா பல்வேறு தவணைகளாக மாரியப்பனின் […]

Categories
தேசிய செய்திகள்

விக்ரம் எஸ் ராக்கெட் வெற்றி… அடுத்து ஏவுதளம் எப்போது?…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தனியார் நிறுவனம் சார்பில் விக்ரம் எஸ் ராக்கெட் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு விட்டது. அடுத்தகட்டமாக மற்றொரு தனியார் நிறுவனமான ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் புதிய ஏவுதளத்தை கட்டமைத்து வருகிறது. அதற்கான பணிகள் இறுதிநிலை அடைந்துள்ளதாகவும் அடுத்த மாதத்தில் அங்கிருந்து முதல் ராக்கெட் திட்டம் செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியுடன் ஒருங்கிணைந்து செயல்பட அக்னிகுல் காஸ்மோஸ் எனும் நிறுவனம் இதற்கான முயற்சியை முன்னெடுத்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீநாத் ரவிச்சந்திரன் கூறியது, […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற பாகன்…. மதம் பிடித்து தாக்கிய யானை…. பரபரப்பு சம்பவம்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உலாந்தி வனச்சரகத்தில் கோழிகமுத்தி முகாம் அமைந்துள்ளது. இங்கு பாகன்களை வைத்து வனத்துறையினர் 22 யானைகளை பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் பாகன் பிரசாந்த் என்பவர் 35 வயது மதிக்கத்தக்க சுயம்பு என்ற யானையை பராமரித்து வந்துள்ளார். நேற்று காலை பிரசாந்த் யானையை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று மாலையில் முகாமிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது திடீரென மதம் பிடித்து யானை பிரசாந்தை தாக்கி பள்ளத்தில் தூக்கி வீசியதால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில்…. மகளால் தம்பதி எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வேளங்கிப்பட்டு கிராமத்தில் விவசாயியான சுந்தரமூர்த்தி(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுமதி(50) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு புஷ்பரோகிணி(19) என்ற மகள் உள்ளார். இவர் அரசு பள்ளி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சுந்தரமூர்த்தி தனது மகளுக்கும், பெரியாண்டிக்குழி கிராமத்தை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நடத்த முடிவு செய்தார். அதன்படி நாளை அவர்களுக்கு நடைபெற இருந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்து கொண்டிருந்தனர். நேற்று […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருந்து வெளியே வந்த ராபர்ட் பயாஸு க்கு உடல்நல குறைவு..!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த ராபர்ட் பயாஸு க்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. திருச்சியில் சிறப்பு முகாமில் தங்கி இருந்த பயாஸு க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் ராபர்ட் பயஸ். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வந்த ராபர்ட் பயஸ் உட்பட 6 பேரை  கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் உச்ச […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு வந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள தொளார் கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் ஹோட்டலில் காசாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறையை முன்னிட்டு சரவணன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் பெண்ணாடம் சென்று விட்டு சரவணன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இவர் கைகாட்டி அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் […]

Categories
தேசிய செய்திகள்

பீமா கோரேகான் வழக்கு…. கௌதம் நவ்லேகாவை 24 மணி நேரத்தில்… என்.ஐ.ஏ‌வுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

பீமா கோரேகான் வன்முறை தொடர்பான வழக்கில் கௌதம் நவ்லேகாவை என்ஏஐ கைது செய்து மும்பை தாலோஜா சிறையில் அடைத்துள்ளது. இதற்கு முன்பாக வயது மூப்ப காரணமாக பலத்த பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் அவரை வீட்டு காலில் வைக்க அனுமதி அளித்து கடந்த 10 ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தேசிய பாதுகாப்பு, ஒருங்கிணைப்புக்கு அச்சுறுத்தல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நவ்லேகாவுக்கு கரிசனம் காட்டக்கூடாது என்று அவரது வீட்டு காவல் அனுமதி ரத்து செய்ய வேண்டும் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு விவகாரம் : கட்சி நலனை கருதியே ஒற்றை தலைமை….. சுப்ரீம் கோர்ட்டில் ஈபிஎஸ் பதில் மனு..!!

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவுக்கு எதிராக ஈபிஎஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது ஓபிஎஸ் மனு குறித்து எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஈபிஎஸ் […]

Categories
உலக செய்திகள்

ட்விட்டரில் புதிய கொள்கை… என்ன தெரியுமா…? எலான் மஸ்க்கின் அதிரடி அறிவிப்பு…!!!!!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பிரபல சமூக வலைதளமான டுவிட்டர்  நிறுவனத்தை கடந்த மாதம் 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்நிலையில் சர்வதேச  அளவில் டுவிட்டர் நிறுவனத்தில் 7,500 ஊழியர்கள் பணியாற்றி வந்த நிலையில் அவர்களில்  பாதி பேரை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்துள்ளார். இதனையடுத்து டுவிட்டர் நிறுவனத்தில் லாப நோக்கத்தில் செயல்பட வைப்பதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என ஊழியர்களுக்கு உத்தரவிட்டு ஒரு வாரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

HIGH ALERT: தமிழகத்தை நோக்கி வரும் புதிய ஆபத்து…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தற்போது வங்கு கடலில்உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றால் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக மற்றும் புதுவை, ஆந்திர கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனால் நாளை தமிழக கடலோரப் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தமிழக […]

Categories
தேசிய செய்திகள்

பிளாஸ்டிக் கவரில் சுற்றி இளம்பெண் சடலம் வீச்சு….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா நகரின் யமுனா நெடுஞ்சாலை அருகே பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்தப் பெண்ணிற்கு 20 வயது இருக்கலாம் எனவும் முகத்தில் காயங்கள் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பெண்ணை கொலை செய்தவர்கள் யார்,பிளாஸ்டிக் கவரில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பொங்கல் பரிசு குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேசன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். மேலும் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும். ஆனால் கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ரொக்க பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த மளிகை பொருட்கள் தரமற்ற இருப்பதாக பல புகார்கள் எழுந்த நிலையில் இது சர்ச்சையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஸ்ரீதேவி முதன் முதலில் வாங்கிய சென்னை வீடு…. சுற்றி காட்டிய மகள் ஜான்வி… நெகிழ்ச்சி தருணம்….!!!

தென்னிந்திய திரையுலகில் 80 ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. இவர் இயக்குனர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்ற இரு மகள்கள் உள்ளனர். இதனிடையே கடந்த 2018-ம் ஆண்டு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக துபாய் சென்ற ஸ்ரீதேவி திடீரென மரணமடைந்தார். இதில் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அவர் தற்போது எனது அம்மாவானம் மறைந்த நடிகை ஸ்ரீதேவி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அடி தூள்”…. கிறிஸ்மஸ் பண்டிகையில் வெளிவரும் நடிகர் விஷாலின் புதிய படம்….. இணையத்தில் தீயாய் பரவும் போஸ்டர்…!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் அண்மையில் வீரமே வாகை சூடும் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு பிறகு  நடிகர் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்க, நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடலான ஊஞ்சல் மனமே ஆடும் போன்றவைகள் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் லத்தி படத்தின் […]

Categories
சினிமா

ஷாக்!… பிரபல விக்ரம் பட நடிகரிடம் மர்ம நபர்கள் செல்போன் பறிப்பு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் இளங்கோ குமாரவேல். இவர் அபியும் நானும், ஜெய் பீம், காற்றின் மொழி, விக்ரம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் தன்னுடைய குடும்பத்துடன் சென்னையில் வசித்து‌ வருகிறார். இந்நிலையில் இளங்கோ ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில மர்ம நபர்கள் இளங்கோவின் செல்போனை பறித்துவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து இளங்கோ பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த […]

Categories
Tech டெக்னாலஜி

“உலகக்கோப்பை கால்பந்து போட்டி”….. 5 புதிய சலுகைகள்…. ஜியோ நிறுவனத்தின் அசத்தல் ரீசார்ஜ் பலன்கள்…..!!!!!

உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நவம்பர் 20-ம் தேதி தொடங்கி டிசம்பர் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் கத்தார் நாட்டிற்கு தற்போது இருந்தே செல்ல ஆரம்பித்துள்ளனர். இந்த போட்டியை முன்னிட்டு பிரபலமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5 சர்வதேச ரோமிங் சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் முதல் சர்வதேச ரோமிங் சலுகையின் விலை 1112 ரூபாய் ஆகும். இதில் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுவதுடன், 5 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பணக்கஷ்டத்தால் 2 மாதங்களுக்கு ஒரு முறை வீடு மாற்றம்….. ஒரு பொம்மை கூட வாங்க வழியில்ல….. மனதை உருக்கும் ராஷ்மிகாவின் பேட்டி….!!!!!

தென்னிந்திய திரையுலகில் தற்போது டாப் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். ராஷ்மிகா கர்நாடகாவில் நிறைய சொத்துக்கள் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவரது வீட்டில் சமீபத்தில் வருமானவரித்துறை சோதனையும் நடத்தப்பட்டது. இந்நிலையில் நடிகர் ராஷ்மிகா சமீபத்தில் அளித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு! செம… லேடி சூப்பர் ஸ்டாரின் 81-வது படம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாராஹ இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். நேற்று நயன்தாரா தனது 38வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் நயன்தாராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிலையில் நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகும் 81-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்த அற்புதமான நியூஸை சொல்லும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்”…. கர்ப்பம் குறித்த தகவலுக்கு நடிகை நிக்கி விளக்கம்….!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் ஆதியும், நிக்கி கல்ராணியும் காதலித்து வந்த நிலையில் கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் முடிந்த கையோடு பாரிசுக்கு ஹனிமூன் சென்ற நிலையில், அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். கடந்த சில நாட்களாகவே நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இந்த செய்திகளை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் நடிகை நிக்கி கல்ராணிக்கு வாழ்த்துக்களை […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குஷியோ குஷி…! ஒரு வாரம் இலவசமாக பார்க்கலாம்…. மதுரை மக்களுக்கு வந்தது குட் நியூஸ்….!!!

உலக பாரம்பரிய வாரம் இன்று  நவம்பர் 19 முதல் 25-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இத்தினம் மக்களிடையே தங்களது சமூக கலாசார பாரம்பரியத்தைக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கொண்டாடப்பட்டு வருகிறது. இது மேலும் பாரம்பரிய பெருமை கொண்ட இடங்களை பாதுகாக்கவும் அவற்றின் மீது அக்கறை கொள்ளவும் தூண்டுகிறது. இந்நிலையில் சென்னை, மாமல்லபுரத்தில் உள்ள சின்னங்களை பார்வையிட  இன்று(நவம்பர் 19) சுற்றுலா பயணிகளுக்கு இலவசம் என புராதன தொல்லியல் துறை அறிவித்துள்ளது. அதேபோல மதுரையின் பிரசித்தி பெற்ற […]

Categories
தேசிய செய்திகள்

டாடா சுமோ பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து….. 12 பேர் பலி…. பயங்கர சம்பவம்….!!

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நேற்று டாடா சுமோ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இது குறித்து சமோலி காவல் கண்காணிப்பாளர் கூறியது, ஜோஷிமத் பகுதியில் இருந்து பல்லா ஜாகோல் சிற்றூருக்கு டாடா சுமோ வாகனத்தில் 17 பேர் சென்றனர். அவர்கள் சென்ற வாகனம் உர்கம் பகுதியில் 300 மீட்டர் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இதில் 3 […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் பொதுத்துறை வங்கி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு….. மத்திய அரசு அறிவிப்பு….!!!!!!

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் தலைமை செயல் அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குனர் ஆகியோரின் பதவி காலத்தை தற்போது மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திறமையான அதிகாரிகள் இன்னும் சில காலம் பணியில் நீடித்திருப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுத்துறை வங்கிகளில் தலைமைச் செயலாதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குனர் ஆகியோரின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகவும் 60 வயது வரையும் இருந்தது. இதை தற்போது 10 ஆண்டுகளாக அதிகரித்த […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…! இனி படிக்கும்போதே வேலை…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

பொறியியல், பாலிடெக்னிக் மாணவர்கள் படிக்கும்போதே பயிற்சி பெற 6 தனியார் தொழிற்சாலை நிறுவனங்களுடன்புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், CM தொடங்கி வைத்த நான் முதல்வர் திட்டத்தின் நோக்கமே, படிக்கும் போது மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதுதான் என்று கூறினார். அதன் முன்னெடுப்பாக தான் தற்போது ஆறு தனியார் தொழிற்சாலை நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு கல்லூரியில் உதவி கவுரவ விரிவுரை யாளராக பணிபுரிந்து வந்தாலும் கட்டாயம் […]

Categories
தேசிய செய்திகள்

ஜீப்பில் காவலாளி எரித்து கொலை…. 30 பேருக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

ராஜஸ்தான் மாநிலம் சுர்வால் கிராமத்தை சேர்ந்த ஒருவர் கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்கு ஒன்றில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி உயர்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தார். அப்போது காவல் ஆய்வாளராக இருந்த ஃபூல் முகமது அவரை சமாதானப்படுத்தி கீழே இறங்க வைக்கும் நோக்கில் அங்கு சென்றார். இருப்பினும் அந்த நபர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த நவர் காவல்துறை மீது குற்றம் சாட்டி […]

Categories
தேசிய செய்திகள்

“நீட் தேர்வில் தவறான கேள்வி”….. கருணை அடிப்படையில் மாணவருக்கு 4 மதிப்பெண்கள்….‌. ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை…..!!!!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, நடப்பாண்டில் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் அதற்கான ரிசல்ட் அனைத்தும் வெளியானது. இந்த தேர்வில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு 93 மதிப்பெண்கள் கட் ஆப் ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த பிரிவை சேர்ந்த உதயகுமார் என்ற மாணவர் 92 மதிப்பெண்கள் பெற்று எடுத்ததால் தனக்கு கருணை அடிப்படையில் தான் விடையளிக்காமல் விட்ட தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என தேசிய தேர்வு […]

Categories
சினிமா விமர்சனம்

எதிர்பாராத திருப்பம்!…. யூகி படத்தின் திரைவிமர்சனம் பற்றி ஓர் அலசல்…..!!!!

காணாமல்போன பெண்ணை தேடும் 2 குழுவினர் குறித்த கதைக்களம் தான் யூகி. அதாவது, போலீஸ் உயர் அதிகாரியாக உள்ள பிரதாப் போத்தன், சிலை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வருகிறார். இந்த நிலையில் இவருக்கு உதவியாக செயல்பட்டதாக கூறப்படும் ஆனந்தி மர்மநபர்களால் கடத்தப்படுகிறார். இதையடுத்து ஆனந்தியை அரசியல் அமைப்பு சார்பின் நட்டியும், பிரதாப் போத்தன் சார்பாக டிடெக்டிவ் ஏஜென்சியை சேர்ந்த நரேனும் தேடுகின்றனர். கடைசியில் ஆனந்தியை யார் கண்டு பிடித்தார்கள்..? ஆனந்தியை கடத்தியது யார்..? பிரதாப் போத்தன் பிடிப்பட்டாரா..? […]

Categories
தேசிய செய்திகள்

“ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை”….. இனி எல்லாமே ஈஸி தான்…. எய்ம்ஸ் மருத்துவமனையின் அதிரடி முடிவு….!!!!!

டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் எம். ஸ்ரீனிவாஸ் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, எய்ம்ஸ் மருத்துவமனையில் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்கான பதிவுக்கு ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு அட்டை பயன்படுத்தப்படுகிறது. இந்த அட்டையை தற்போது வெளி நோயாளிகளும் பயன்படுத்தும் வகையில், தொடர் சிகிச்சைகளுக்கு பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட இருக்கிறது. இதை எய்ம்ஸ் மருத்துவமனைகளில் கியூ ஆர் கோடு மற்றும் ஸ்கேன் மூலம் விரைவில் பதிவு […]

Categories
உலக செய்திகள்

இதை நாங்க கண்டிப்பா செய்வோம்…. அமெரிக்காவால் ஒன்னும் பண்ண முடியாது…. பாகிஸ்தான் மந்திரியின் பளீர் பேச்சு….!!!!

பாகிஸ்தான் நாட்டில் கடந்த நவம்பர் மாதம் 13-ஆம் தேதி துபாய் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் தொண்டர்கள் மத்தியில் அந்நாட்டின் மந்திரி இஷாக் தார் உரையாற்றினார்.  அப்போது அவர் கூறியதாவது, “ரஷ்யாவிடமிருந்து பாகிஸ்தான் விரைவில்  கச்சா எண்ணெய்யை வாங்கும். இதனை அமெரிக்காவால் தடுக்க இயலாது” என்று அவர் கூறியுள்ளார். இதற்கு முன்னதாக செப்டம்பர் மாதம் அமெரிக்க பயணத்தின் போது இஷாக் தார் அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது மேற்கு நாடுகளின் பொருளாதார […]

Categories
தேசிய செய்திகள்

ராணுவ அதிகாரிகள் தேர்வு….. முதன் முறையாக 6 பெண்கள் வெற்றி…. வெளியான முக்கிய தகவல்….!!!!!

இந்தியாவில் வருடம் தோறும் ராணுவ உயர் அதிகாரிகள் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படும். அதன்படி நடப்பாண்டில் நடத்தப்பட்ட பணியாளர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர் பணிகளுக்காக நடத்தப்பட்ட தேர்வுகளில் முதல் முறையாக 6 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் 4 பேர் குன்னூரில் அமைந்துள்ள வெலிங்டன் ராணுவ கல்லூரியில் ஒரு வருடம் மேற்படிப்பு படிக்க இருக்கின்றனர். இவர்கள் முப்படை ராணுவ வீரர்களுடன் சேர்ந்து படிக்க இருக்கும் நிலையில், ராணுவ நுண்ணறிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

50-வது நாளை நெருங்கிய PS-1…. ரஜினி படத்திற்கு பின் புது சாதனை…. என்னென்னு நீங்களே பாருங்க…!!!!

பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன்-1 கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லஷ்மி, பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, சரத்குமார், ரஹ்மான் உட்பட பல பேர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படம் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பொன்னியின் செல்வன்-1 திரையரங்குகளில் வெளியாகி நேற்றுடன் 50வது நாளை நிறைவு செய்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜயின் வாரிசு ரிலீஸ்….. உதயநிதி சொல்ல வருவது என்ன?…. வெளியான தகவல்….!!!!

தல‌ அஜித் வலிமை படத்திற்கு பிறகும் மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் “துணிவு” படத்தில் நடித்துள்ளார். இதில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. துணிவு திரைப்படம் அடுத்த பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் துணிவு படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ளது. அதனைப் […]

Categories
Tech டெக்னாலஜி

“Twitter, Metta, Amazon போன்ற டெக் நிறுவனங்களில் பணியாளர்கள் நீக்கம்….. காரணம் என்ன….? இதோ நீங்களே பாருங்க….!!!!!

உலகம் முழுவதும் தற்போது நிலவி வரும் பொருளாதாரம் மந்த நிலை காரணமாக பல பன்னாட்டு ஐடி நிறுவனங்கள் அதன் ஊழியர்களின் வேலையை விட்டு நீக்கம் செய்கின்றனர். அதிலும் இந்தியர்கள் பலர் வேலையை விட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் H1B Visa கொண்டு வேலை செய்யும் பல இந்தியர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு மீண்டும் புதிய வேலை தேட இன்னும் 60 நாட்கள் என்று குறுகிய கால அவகாசம் மட்டுமே உள்ளது. இதனால் பலர் என்ன செய்வது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புஷ்பா படத்தின் வசூல் சாதனையை முறியடித்த முக்கிய படம்….. எவ்வளவு கோடி தெரியுமா?….லீக்கான தகவல்….!!!!!

சென்ற வருடம் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “புஷ்பா”. இந்த படத்தின் 2ஆம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. அடுத்த வருடம் புஷ்பா 2 வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இப்படம் உலக அளவில் சுமார் ரூபாய்.350 கோடி வரை வசூல் செய்தது. இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகி இருக்கும் காந்தாரா படம் புஷ்பா திரைப்படத்தின் வசூலை அசால்டாக முந்தி உள்ளது. […]

Categories
அரசியல்

182ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (நவம்பர் 19) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (19.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 17 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசம் நீட்டிப்பு….. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!!

தமிழக விவசாயிகளுக்கு சம்பா பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசமானது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 21-ம் தேதி வரை காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வேளாண்மை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, பருவமழையின் பாதிப்பினால் பயிர்களை காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி அனுப்பினார். இந்த கோரிக்கையை தற்போது மத்திய அரசு ஏற்று கால அவகாசத்தை நவம்பர் 21-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரோஜா சீரியல் நடிகைக்கு பிறந்த குழந்தை….. Girl (Or) Boy?…. வெளியான இன்ஸ்டா பதிவு…. வாழ்த்தும் ரசிகர்கள்….!!!!

சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரோஜா. இது TRP-யிலும் தொடர்ந்து டாப் இடத்தில் இருந்து வருகிறது. பிரியங்கா என்பவர் நாயகியாக நடித்துவரும் இந்த சீரியலில், நாயகனாக சிப்பு சூர்யன் நடித்து வருகிறார். இந்த சீரியலில் முதல் முதலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிகை ஷாமிலி குமார் நடித்துவந்தார். இந்நிலையில் இவர் கர்ப்பமாக இருந்ததால் இவருக்கு பதில் விஜே அக்ஷயா வில்லியாக நடிக்க வந்தார். சில மாதங்கள் இந்த கதாபாத்திரத்தில் நடித்துவந்த விஜே அக்ஷயா கர்ப்பமான காரணத்தினால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சம்பாதிக்க ஆரம்பித்தால் பெற்றோரை மதிப்பில்லை”…. எஸ்ஏசி கூறிய பதில்…. நடந்தது என்ன….!!!

சம்பாதிக்க ஆரம்பித்தால் பெற்றோரை மதிப்பதில்லை என்று நடிகர் விஜய்யின் அப்பா எஸ்ஏசி கூறியுள்ளார். நடிகர் விஜய் இந்திய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். தனது தனித்துவமான நடிப்பினால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரின் மனதிலும் தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமன்றி ஒரு சிறந்த நடனக்கலைஞர் மற்றும் பின்னணி பாடகராவார். குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் விஜய்க்கு துணையாக நின்றது அவரது அப்பா எஸ்ஏசி ஆவார். இருப்பினும் சமீபமாக அவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரம்…. எவ்வளவு மானியம் வழங்கப்படும் தெரியுமா….? இதோ முழு விபரம்…..!!!!!

தமிழக அரசு விவசாயிகள் மத்தியில் வேளாண் இயந்திரமாக்குதல் திட்டத்தை பிரபலப்படுத்து வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தனிப்பட்ட விவசாயிகள் இயந்திரம் வாங்குதல், இளைஞர்களை விவசாயத்தில் ஈடுபட வைக்க, பதிவு செய்த விவசாய‌ சங்கங்கள், தொழில் முனைவோர்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் போன்றவற்றின் மூலம் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் வேளாண் இயந்திர மையம் நிறுவுதல் போன்றவற்றிற்கு நடப்பு நிதியாண்டில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. அதன்படி 150 கோடி நிதி […]

Categories
மாநில செய்திகள்

“திமுகவும், அதிமுகவும் அண்ணன்-தம்பி”…. அமைச்சர் நேரு ஏன் அப்படி சொன்னார் தெரியுமா….? துரை வைகோ விளக்கம்….!!!!

மதிமுக கட்சியின் மாநில பொறியாளர் அணியின் முன்னாள் செயலாளர் மறைந்த ER. சேக் முகமது. இவருடைய மனைவியும், கழக மாநில செயலாளருமான மருத்துவர் ரொகையாவின் தாயார் பாத்திமா பீபி. இவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு திருச்சியில் உள்ள ரொக்கையாவின் இல்லத்தில் வைத்து நடைபெற்றது. இதில் மதிமுக கட்சியைச் சேர்ந்த மாநில கழக நிலைய செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வுக்குப் பிறகு துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பால் பொருட்கள் தடையின்றி கிடைக்க…. அமைச்சர் நாசர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வந்தது. அதே சமயம் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதனிடையே இனிவரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் எனவும் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே!… இதுக்கு ஒரு முடிவே இல்லையா…. வந்தே பாரத் ரயில் மீது மீண்டும் மாடுகள் மோதல்…..!!!!!

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அடுத்த வருடத்திற்குள் 75 வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பின்படி ஒவ்வொரு பகுதிகளிலும் வந்தே பாரத் ரயில் சேவையானது அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 6-ம் தேதி குஜராத்தில் இருந்து மகாராஷ்டிராவுக்கு சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது 4 நாடுகள் மோதியதில் மாடுகள் பலியானது. இந்த விபத்தில் ரயிலின் முன்பக்கத்தில் லேசான சேதம் ஏற்பட்டது. இதே ரயிலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டி20 கிரிக்கெட் போட்டி:… சவாலில் ரசிகரிடம் ரூ. 5 லட்சத்தை பறிகொடுத்த ஒரு அடார் லவ் பட இயக்குனர்… ரசிகர்கள் ஷாக்….!!!!!

டி20 கிரிக்கெட் போட்டியை மையமாகக் கொண்டு இயக்குனர் ஒருவர் தனது ரசிகர் கிட்ட பந்தயம் கட்டி 5 லட்ச ரூபாய் தோற்ற சுவாரசிய நிகழ்வு. மலையாளத்தில் புருவ அழகி என அழைக்கப்படும் பிரியா பிரகாஷ் வாரியார் கதாநாயகியாக அறிமுகமான “ஒரு அடர் லவ்” என்ற திரைப்படத்தை இயக்கியவர் தான் ஓமர் லுலு. இவர் தற்போது “நல்ல சமயம்” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவர் ரசிகர்களுடன் எப்போதுமே சோசியல் மீடியாவில் பேசுவது வழக்கம். அப்போது ரசிகர் ஒருவர் டி20 […]

Categories

Tech |