Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்க மாநிலத்தில் புதிய ஆளுநராக டாக்டர் சி.வி ஆனந்த் போஸ் நியமனம்…. இன்று பதவியேற்பு….!!!!!

மணிப்பூர் ஆளுநர் இல. கணேசன் கூடுதல் பொறுப்பாக மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநராகவும் இருந்தார். இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை கடந்த 17-ம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மு அறிவித்தார். அதன்படி டாக்டர் சிவி ஆனந்த் போஸ் என்பவர் மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப் பட்டுள்ளார். இவருடைய பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்ற நிலையில், கொல்கத்தா ஹைகோர்ட் தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சி […]

Categories
தேசிய செய்திகள்

12 பா.ஜ.க நிர்வாகிகள் கட்சியிலிருந்து இடைநீக்கம்…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

குஜராத் சட்ட சபைக்கு 2 கட்டங்களாக டிசம்பர் 1, 5 போன்ற தேதிகளில் ஓட்டுப் பதிவு நடைபெற இருக்கிறது. டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெற இருக்கும் முதல்கட்ட தேர்தலின் போது 89 தொகுதிகளுக்கும், 5ஆம் தேதி 2வது கட்ட தேர்தலின் போது 99 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற இருக்கிறது. இதையடுத்து டிச..8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையானது நடைபெறும். அம்மாநிலத்தில் சென்ற 1995ம் வருடம் முதல் ஆட்சி அதிகாரத்திலுள்ள பா.ஜ.க. இம்முறையும் வெற்றியை தக்க வைத்துகொள்ளும் பணிகளில் இறங்கியுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக இளைஞர் அணி செயலாளராக மீண்டும் உதயநிதி…. மகளிர் அணித் தலைவராக விஜயா தாயன்பன்…. யார் யாருக்கு என்ன பொறுப்பு?

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக சட்டதிட்டம் விதி -18, 19 பிரிவுகளின் படி மாநில இளைஞர் அணி செயலாளர் – துணைச் செயலாளர்கள் தலைமை கழகத்தால் பின்வருமாறு நியமிக்கப்படுகிறார்கள். இளைஞர் அணி செயலாளர் : உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் : எஸ். ஜோயல், பி.ஏ., பி.எல்., (தூத்துக்குடி) ந. ரகுபதி (எ) இன்பா ஏ.என்.ரகு, பி.பி.ஏ, எல்.எல்.பி (ராமநாதபுரம்) நா. இளையராஜா பி.இ (திருவாரூர் மாவட்டம்) ப. […]

Categories
தேசிய செய்திகள்

அன்று மசாஜ்… இன்று தடபுடலான உணவு…. சிறையில் மந்திரி சத்யேந்தா் ஜெயினின் சொகுசு வாழ்க்கை…. பரபரப்பு வீடியோ….!!!!!

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ பதிவுசெய்த வழக்குப்பதிவு அடிப்படையில் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் டெல்லி மந்திரி சத்யேந்தா் ஜெயின் மற்றும் அங்குஷ் ஜெயின், வைபவ் ஜெயின் போன்றோருக்கு எதிரான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் சத்யேந்தர் ஜெயினின் ஜாமீன் மனுவை சென்ற வியாழக்கிழமை நீதிமன்றமானது தள்ளுபடி செய்தது. சில நாட்களுக்கு முன்பு திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின் மசாஜ் செய்துகொள்ளும் வீடியோவானது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா…. ஒரே நாளில் 28,000 பேர் பாதிப்பு…!!!!

சீன நாட்டில் ஒரே நாளில் சுமார் 28,127 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் முதல் தடவையாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பிறகு உலக நாடுகளை கொரோனா தலைகீழாக புரட்டி போட்டது. கொரோனாவை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது படிப்படியாக கொரோனா குறைந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சீனாவில் சமீப நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 29,095 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 28,127 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

“காஷ்மீரில் இன்னும் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர்”…. ராணுவ மூத்த அதிகாரி வெளியிட்ட தகவல்…..!!!

காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்க இந்திய ராணுவ ‘ஆபரேஷன் ஈசி’ என்கின்ற பெயரில் தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றது. இந்த ஆப்ரேஷன் கடந்த 1948 ஆம் ஆண்டு நடைபெற்றது.இதனை முன்னிட்டு நேற்று 75 ஆவது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது. லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி தலைமையில் பூஞ்ச் மாவட்டம் மக்கள் மற்றும் ராணுவத்தினர் இதை உற்சாகமாக கொண்டாடினர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜம்மு காஷ்மீரில் 300 பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!…. இந்திய பொருளாதாரம் 2047 ஆம் ஆண்டு இவ்வளவு ட்ரில்லியன் டாலராக உயருமா?…. முகேஷ் அம்பானி கூறிய தகவல்….!!!!

குஜராத் மாநிலத்தின் காந்தி நகரில் உள்ள பண்டிட் தீன்தயான் எனர்ஜி பல்கலைக்கழகத்தின் 10 வது ஆண்டு பட்டளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல தொழிலாளர் முகேஷ் அம்பானி கலந்து கொண்டார். அதன் பிறகு பேசிய அவர், இந்திய வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. முன்னேபோதும் இல்லாத அளவிற்கு பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்திய சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும்போது பொருளாதார வளர்ச்சியில் இந்திய நாடு பல்வேறு மாற்றங்களை காணும், பெரிய வளர்ச்சியை […]

Categories
தேசிய செய்திகள்

என்னாது!…. இந்த 5 பாக்டீரியாவால்‌‌ 7 லட்சம் மக்கள் உயிரிழப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

உலகமெங்கும் கடந்த 2019 ஆண்டில் 77 லட்சம் பேர் 33 வகையான பொதுவான பாக்டீரியா தொற்றினால் உயிரிழந்தனர். இவற்றில் 50க்கும் மேலான உயிர் இழப்புகளுக்கு 5 பாக்டீரியாக்கள் மட்டுமே காரணம். அந்த பாக்டீரியாக்கள் இ.கோலி, எஸ். நிமோனியா, கே.நிமோனியா, எஸ்.ஆரியஸ் மற்றும் ஏ.பவுமனி ஆகியவைகள் ஆகும். இந்த பாக்டீரியாக்கள் இந்தியாவில் மட்டும் கடந்து 2019 ஆம் ஆண்டில் 6 லட்சத்து 80 பேரின் உயிர்களைப் பறித்துள்ளது. இந்த ஆய்வு தகவல்களை இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் ‘தி லேசன்ட்’ […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே!… குழந்தைகளுக்கான பால் ஆதார் புதுப்பிப்பு இலவசம்….. அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்…..!!!!!

நாடு முழுவதும் ஆதார் கார்டுகளை வழங்கும் நிறுவனமான UIDAI, நாட்டின் அனைத்து குடிமக்களும் தங்களது ஆதார் அட்டைகளைப் புதுப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்து உள்ளது. சென்ற 10 வருடங்களில் மீண்டும் ஒரு முறை ஆதார் கார்டை புதுப்பிக்காத குடிமக்கள் தங்களது ஆதார் அட்டையைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என UIDAI கூறியுள்ளது. ஆதார் கார்டில் பெயர், முகவரி, பிறந்ததேதி ஆகிய விபரங்களைப் புதுப்பிக்க ரூபாய்.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தவிர்த்து உங்கள் ஆதார் கார்டில் கைரேகை, கருவிழி ஆகிய பயோமெட்ரிக் […]

Categories
Tech டெக்னாலஜி

ஏர்டெல் குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் அதிரடியாக உயர்வு….. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்….!!!!

இந்தியாவின் முன்னணி telegram சேவை நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் அதிரடியாக அதன் ரூ.99 குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்தை கைவிட்டு இனி வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரீசார்ஜ் தொகையாக ரூ.155 செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இதன் முதல் கட்டமாக இந்தியாவின் இரண்டு பகுதிகளுக்கு மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது‌. இந்த திட்டம் விரைவில் அனைத்து இடங்களில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரூ.99 ரீசார்ஜ் திட்டம் ஏப்ரல் நிறுவனம் 28 நாட்கள் வேலிடிட்டி வசதியுடன் வழங்கியது. ஆனால் இந்த புதிய […]

Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….. இதை செய்யலன்னா உங்களுக்கு பென்ஷன் வராது…. உடனே இந்த வேலையை முடிங்க…..!!!!!

ஓய்வூதியதாரர்கள் அவர்களின் லைப் சான்றிதழைச் சமர்ப்பிக்கவில்லை எனில் தங்களுடைய ஓய்வூதிய நிதியினைப் பயன்படுத்த இயலாது என கூறப்பட்டு உள்ளது. டிஜிட்டல் லைப் சான்றிதழை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் சமர்ப்பிக்கலாம். அத்துடன் வங்கி (அ) திட்டத்தின் போர்ட்டலுக்குச் சென்றும் ஆன்லைன் மூலம் லைஃப் சான்றிதழைச் சமர்ப்பித்துக்கொள்ளலாம். ஓய்வூதியம் பெறக்கூடிய ஒவ்வொருவரும் வருடந்தோறும் லைப் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு ஆண்டு முடிந்தபின் அந்த சான்றிதழை சமர்பிக்காவிட்டால் ஓய்வூதியம் பெறுவதில் உங்களுக்கு சிக்கல்தான். இதன் காரணமாக உங்களின் டிஜிட்டல் லைப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அது நடந்து ஒரு வருடம் ஆகிவிட்டது”…. அமீர்-பவானி உருக்கமான பதிவு‌…. வைரல்…!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் அபிநயுடன் காதல் கிசுகிசு, அமீருடன் முத்தம் என பரபரப்பு பஞ்சமில்லாமல் வலம் வந்தவர் பாவனி பலவித சர்ச்சைகளில் சிக்கினாலும் இறுதிவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மூன்றாம் இடத்தை பாவனி பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் அமீர், பவானி இருவரும் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். இவர்களின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தற்போது அஜித் குமார் நடிக்கும் துணிவு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செயற்கை அருவிகளை உருவாக்குவது சட்டவிரோதம்: உயர்நீதிமன்ற கிளை

இயற்கையான அருவிகளின் நீரோட்டத்தை மாற்றி,  செயற்கை அருவிகளை உருவாக்குவது சட்டவிரோதம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தென்காசி, நெல்லை, கோவை, குமரி மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்து தனியார் ரிசார்டுகளில் இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது உயர்நீதிமன்ற கிளை. இயற்கையான அருவிகளின் நீரோட்டத்தை மாற்றி செயற்கை அருவிகளை உருவாக்குவது சட்ட விரோதம் என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள். ஆய்வு செய்வதற்காக குழு அமைத்திருக்கிறார்கள். இந்த குழுவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: டிசம்பர் 1ல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…! திமுக தலைமை அறிவிப்பு ..!!

டிசம்பர் 1 இல் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது. டிசம்பர் 1இல் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என தற்போது திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கடந்த வாரத்தில் தமிழக முதலமைச்சர் கலந்து கொண்டார். 234 தொகுதிகளிலும் இருக்கக்கூடிய திமுகவினுடைய பூத் எஜெண்டுகள் ஒவ்வொருவரிடமும் வீடியோ கான்ஃபரன்ஸ் வழியாக பேசியிருந்தார். தேர்தல் நேரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் ? எப்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. “தங்கலான்” படத்திற்காக செம மாஸ் லுக்கில் விக்ரம்… இணையத்தில் வைரலாகும் போட்டோ….!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் என்ற படத்தில் விக்ரம் நடித்து வருகிறார்.இது கோலார் தங்க வயலில் வரலாற்று பின்னணியில் படமாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோர் நடித்துள்ளனர். தங்கலான் திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை பான் இந்தியா திரைப்படமாக வெளியிட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தோல்வியால் ரஜினி எடுத்த திடீர் முடிவு… இதுவாது வெற்றி பெறுமா?…. எதிர்பார்ப்பில் படக்குழு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினி லைக்கா நிறுவனம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புதிய தலைவர், புதிய செயலாளர், புதிய நிர்வாகிகள்…. திமுக தலைமை அறிவிப்பு …!!

திமுகவினுடைய மகளிர் அணி செயலாளராக இருந்த கனிமொழி மாற்றம் செய்யப்பட்டு, அவர் துணைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது மகளிர் அணிக்கு புதிய தலைவர்கள்,  செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு திமுக தலைமை புதிய நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளது. அதன்படி திமுகவினுடைய மகளிர் அணி தலைவராக சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த திருமதி விஜயா தாயன்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல மகளிர் அணி செயலாளராக நாகர்கோவிலை சேர்ந்த திருமதி ஹெலன் டேவிட்சன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். மகளிர் […]

Categories
உலக செய்திகள்

நியூயார்க்கில் வரலாறு காணாத பனிப்பொழிவு…. வீடுகளில் முடங்கிய மக்கள்…. அவசரநிலை பிரகடனப்படுத்திய அதிபர்…!!!

அமெரிக்க நாட்டில் கடுமையாக பனிப்பொழிவு ஏற்பட்டதில், நியூயார்க் மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் பல மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. இதிலும் நியூயார்க்கில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிகமாக பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. அம்மாகாணம் மொத்தமும் கடுமையான காற்று வீசுவதோடு பனி கொட்டிக் கொண்டிருக்கிறது. அங்கிருக்கும் ஏரி நகரத்தில் ஒரே நாளில் சுமார் 150 சென்டிமீட்டர் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். இதன் காரணமாக குடியிருப்புகள், சாலைகள் வாகனங்கள் என்று அனைத்திலும் பனி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டிராப்பான “கொரோனா குமார்”…. எதிர்பார்க்காத கூட்டணி…. நடிகர் சிம்புவின் நிலை என்ன….?

நடிகர் சிம்பு நடிக்கும் கொரோனா குமார் என்ற திரைப்படம் ட்ராப் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது.  “மாநாடு” திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் உற்சாகமடைந்தார் நடிகர் சிம்பு. இயக்குனர் கெளதம்  மேனன் இயக்கத்தில் “வெந்து தணிந்தது காடு” மற்றும் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் “பத்து தல” படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்  சிம்பு.  இதனைத் தொடர்ந்து கன்னடத்தில் இயக்குனர் நரதன் இயக்கத்தில் “முஃப்தி” என்ற திரைப்படத்தின்  தமிழ் ரீமேக் பணி தொடங்கி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த தமிழ் ரீமிக் மூவி […]

Categories
தேசிய செய்திகள்

உள்நாட்டு விமான போக்குவரத்து விவரங்கள்…. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நடப்பாண்டில் கடந்த அக்டோபர் மாதம் வரை உள்நாட்டு விமான போக்குவரத்து விவரங்களை சிவில் விமான போக்குவரத்து இயக்குனராக நேற்று வெளியிட்டது. அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரை காலகட்டத்தில் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கையை விட இந்த ஆண்டு அக்டோபர் மாத வரை பயணித்த உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை 59.16% அதிகரித்து உள்ளது. அதாவது கடந்த ஆண்டு 6,20,96,000 பயணிகள் பயணம் செய்த நிலையில் இந்த ஆண்டு இதுவரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: திமுக மகளிர் அணிச் செயலாளர் மாற்றம் ..!!

திமுகவின் மகளிர் அணி செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.  கனிமொழி துணை பொது செயலாளர் ஆகியுள்ள நிலையில் மகளிர் அணிக்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.  ஏற்கனவே திமுக மகளிர் அணி செயலாளர் ஆக இருந்த கனிமொழி துணை பொதுச் செயலாளர் ஆகியுள்ள நிலையில் மகளிர் அணிக்கு புதிய செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமிக்கப்பட்டு இருக்கிறா. திமுக மகளிர் அணி தலைவராக விஜயா தாயன்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைமை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம்..!!

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இளைஞரணி துணைச் செயலாளர்களாக பிரகாஷ், பிரபு, சீனிவாசன், பிரதீப் ராஜா, ஆனந்தகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான துரைமுருகன் இதனை அறிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

எஃப்டி கணக்குக்கு அதிக வட்டி…. எந்த வங்கியில் தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ வட்டி விகிதத்தினை அதிகரித்ததில் இருந்து பல்வேறு வங்கிகளிலும் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு வருகிறது. தற்போது RBI ரெப்போ விகிதங்களை 4 புள்ளிகள் உயர்த்தி இருக்கிறது. இந்த வருடம் மே மாதம் துவங்கி பல வங்கிகள் நிலையான வைப்புத் தொகைக்கான (எஃப்டி) வட்டியை அதிகரித்து வருகிறது. பொது, தனியார் மற்றும் சிறு நிதி வங்கிகளின் வட்டி விகித உயர்வைப் பார்க்கும் போது இனி  நிலையான வைப்புத்தொகைகளுக்கு நல்ல விதத்தில் வட்டிவிகிதம் வழங்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

254 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்ததில் உபரியாக கண்டறியப்பட்ட முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் பள்ளிக்கல்வி பொதுத்தொகுப்புக்கு ஒப்படைக்கப்பட்டன. தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் கோரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து கருத்துக்கள் பெறப்பட்டிருந்தன. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், வரலாறு,வணிகவியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய பாடப்பிரிவுகளில் கூடுதலாக 254 […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் மாணவர்களுக்கு நாளை 10 – 7 மணி வரை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மற்றும் பாட பிரிவுகளை தேர்வு செய்ய பட்டியலின மாணவர்கள் நாளை விண்ணப்பிக்கலாம் என பொறியியல் கலந்தாய்வு குழு அறிவித்துள்ளது. பொது கலந்தாய்வு மற்றும் துணை கலந்தாய்வில் பங்கேற்ற இடங்களை தேர்வு செய்த பட்டியல் இன மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நாளை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம். 25 ஆம் தேதி காலை 10 மணிக்கு தற்காலிக இட ஒதுக்கீடு வழங்கப்படும். அதனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் கடன் தள்ளுபடி…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் அரசு நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதன்படி இதுவரை நகை கடன் தள்ளுபடி, மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என அடுத்தடுத்து பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்நிலையில் பெண்களுக்கு அமைச்சர் எம் ஆர் கே […]

Categories
மாநில செய்திகள்

40,000 பணியிடங்கள்: வேலை தேடுபவர்களுக்கு ஜாக்பாட்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கத்தில் அரசு தனியார் துறையுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. மாதத்தில் இரண்டு முறை இந்த வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது சேலம் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட வேலைவாய்ப்பு மையமும் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற நவம்பர் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 300 தனியார் நிறுவனங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

EPFO பயனர்களே!…. உடனே இந்த வேலையை செய்து முடிங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

இப்போது மாதந்தோறும் லட்சக்கணக்கான பயனாளர்கள் EPFO கணக்கில் சேர்வதால், அவர்களும் தங்களின் ஆன்லைன் நாமினேஷனை தாக்கல் செய்யவேண்டும். ஆகவே நீங்கள் இதுவரை உங்களது நாமினேஷனை தாக்கல் செய்யவில்லை எனில், ஆன்லைனில் எப்படி செய்வது என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம். முதன் முதலில் உங்களது UAN எண் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி UAN போர்ட்டலில் லாகின் செய்யவும். இதை முதல் முறையில் நீங்கள் லாகின் செய்கிறீர்கள் எனில் இதற்கு பாஸ்வேர்டை உருவாக்கவும். இச்செயல்முறையை முடித்தப் பிறகு பின்வரும் வழிமுறைமுறைகளை பின்பற்ற […]

Categories
கால் பந்து விளையாட்டு

ரசிகர்கள் அதிர்ச்சி…. மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து ரொனால்டோ நீக்கம்..!!

கிறிஸ்டியானோ ரொனால்டோ பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு வெளியேறுவது உறுதிசெய்யப்பட்டது. உலக புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை தெரியாதவர்கள் யாரும் கிடையாது. போர்ச்சுகலை சேர்ந்த இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு கிளப் போட்டிகளில் முதல் முறையாக மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடினார். அதன்பின் 2009 ஆம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ரொனால்டோ, தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு யுவெண்டஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு,  3 ஆண்டுகளாக அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உங்களுக்கு வேற நீதிபதியே கிடைக்கலையா?”… ரொம்ப மொக்கையா இருக்கு… வேற லெவலில் வைரலாகும் புரொமோ…..!!!!

விஜய் டிவி ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சண்டைகள், பிரச்சினைகள் மட்டுமின்றி என்டர்டைன்மெண்டுக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் டாஸ்க் வீட்டை நீதிமன்றமாக மாற்றிவிட்டார்கள். பிக் பாஸ் வீட்டில் நடந்த பிரச்சனைகளை நீதிமன்றத்தில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில் புது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் சாவித் திருட்டு வழக்கிற்கு சிவின் அவர்கள் வாதாட போகிறார்கள் என்று அசிம் அடக்கமாக அறிவிப்பதோடு புரொமோ வீடியோ வெளியாகி உள்ளது. நான் சாவியை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பஸ் வசதி இல்ல!… தெரு வசதி இல்ல!…. ஆனால் தளபதி வந்து இதெல்லாம் செய்தார்?…. விஜய்-ஐ புகழ்ந்து தள்ளிய ரசிகர்….!!!!

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக விஜய் உள்ளார். இவர் நடிப்பில் அடுத்து வாரிசு படம் உருவாகிறது. இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். சமீபத்தில் பனையூரிலுள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் தன் ரசிகர்களை அழைத்து விஜய் சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகியது. இச்சந்திப்பிற்கு வந்த ரசிகர் ஒருவர் கூறியதாவது,  “தங்களது கிராமம் மிக சிறியது ஆகும். எங்களுடைய கிராமத்திற்கு பேருந்து வசதி கூட கிடையாது. அத்துடன் தெரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தீடிரென வந்த போன் கால்…! பேசிட்டு டக்குனு வச்ச தலைமை… செம அப்செட்டில் காயத்ரி ரகுராம் …!!

பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் பாஜகவின் இந்த நடவடிக்கை குறித்து பேசுகையில், நான் கொலை பண்ணுனேனா ? இல்ல திருட்டு வேலை செஞ்சனா ?  எதுவுமே நான் பண்ணலையே. யாராயிருந்தாலும் சரி, என்னை தாக்கி பேசினால் நான் திருப்பி தாக்குவேன். ஆரம்பத்தில் இருந்து எனக்கு தொல்லை கொடுத்துட்டு இருந்தாங்க. காலையில் எனக்கு போன் லைன்ல வந்தாரு. வந்த உடனே எனக்கு சொன்ன ஒரே ஒரு விஷயம்,  நீங்க சஸ்பெண்ட் பண்ணபடுறீங்க அப்படின்னு […]

Categories
இந்திய சினிமா சினிமா

“கணவரை டைவஸ் பண்ண போறேன்”…. எனக்கும் சுய மரியாதை இருக்கு!…. பிரபல நடிகை ஓபன் டாக்….!!!!

இந்தி மற்றும் மராத்தி மொழி படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமாக உள்ள நடிகை மானசி நாயக், சென்ற ஆண்டு பிரதீப் கரேரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சென்ற சில வாரங்களாக இருவருக்கும் சுமுக உறவு இல்லை எனவும் விவாகரத்து செய்து பிரியப்போகிறார்கள் எனவும் தகவல் பரவியது. இதற்கிடையில் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவரவர் சமூகவலைத்தள பக்கங்களிலிருந்து திடீரென நீக்கியதும் சந்தேகத்தை வலுப்படுத்தியது. இந்த சூழ்நிலையில் இருவரும் பிரிவதை நடிகை மானசி நாயக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கன்னகுழி அழகி ஸ்ருஷ்டியின் வேற லெவல் க்யூட் போட்டோஸ்….. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

கன்னத்து குழியழகியான நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட்   போட்டோஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. ஸ்ருஷ்டி டாங்கே ஒரு இந்திய நடிகை, ஆவார். இவர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர்  ஆரம்பத்தில் துணை வேடங்களில் தான் நடித்தார். பின்னர் மிஷ்கினின் “யுத்தம் செய்” என்ற படத்தில் நடித்தார். “ஏப்ரல் இடியட்” என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதனை அடுத்து  ரொமாண்டிக் த்ரில்லர் மேகாவில் முன்னணி குணாதிசயத்தை சித்தரித்து, பெயர் அம்சத்திற்குள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சூர்யகுமார் ஆடிய சில ஷாட்களை பார்த்ததே இல்லை – வியப்பில் பேசிய நியூசி. கேப்டன்..!!!

சூர்யகுமார் விளையாடியது குறித்து நியூசிலாந்து கேப்டன் பேசி உள்ளார். நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் சூர்யகுமார் யாதவ் மூன்றாவது வீரராக களம் இறங்கி 51 பந்துகளில் 111 ரன்கள் விளாசினார். இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் சூர்ய குமாரின் இன்னிங்ஸ் உலக தரம் வாய்ந்தது எனவும் தனது வாழ்நாளில் பார்த்த சிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்று எனவும் […]

Categories
அரசியல்

எஜமானனுக்காக வயலில் வேலை செய்யும் நாய்… விவசாயிகளுக்கே டப் கொடுக்குதே..!!!

எஜமானனுக்காக வயலில் வேலை செய்யும் நாய் குறித்த வீடியோ வைரலாகி வருகின்றது. மனோஜ் சர்மா என்பவர் தனக்கு உதவிய தன் நாய் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். குட்டை இனத்தைச் சேர்ந்த வெள்ளை நிற நாய் ஒன்று சோழ பயிர்களை தனது கூர்மையான பற்களால் வெட்டி சாய்கின்றது. நாய் வேக வேகமாக வேலை செய்தாலும் ஒரு சோழ கதிர்கள் கூட கீழே சிந்தாமல் அழகாக பயிர்களை அறுவடை செய்து அசத்துகிறது. பல வருடங்கள் அனுபவம் வாய்ந்த விவசாயிகளுக்கே […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தேநீர் குடித்துவிட்டு.. பணம் தராத பா.ஜ.க எம்.எல்.ஏ…!!!

பாஜக எம்.எல்.ஏ தேநீர் குடித்துவிட்டு பணம் தரவில்லை என டீக்கடை உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகின்றது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தற்போதைய எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான பாஜகவை சேர்ந்த கரண்சிங் வர்மா தனது தொகுதிக்கு காரில் சென்று இருக்கின்றார். அப்போது அவரின் காரை மறித்த தேநீர் கடை உரிமையாளர் ஒருவர் கரண்சிங் வர்மா மற்றும் அவருடன் வந்த கட்சியினர் தேநீர் குடித்துவிட்டு முப்பதாயிரம் ரூபாய் பணம் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டுக்கு ரூ.1000 – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு …!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் உதவி வழங்க அரசாணையானது வெளியாகி இருக்கிறது. தமிழக அரசின் உடைய வருவாய் நிர்வாக ஆணையர் எஸ். கே பிரபாகரன் வெளியிட்டுள்ள அரசாணையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குறிப்பாக இரண்டு வட்டங்களுக்கு சீர்காழியில் 99, 518 குடும்ப அட்டைதாரர்கள்,  தரங்கம்பாடியில் 62,129 குடும்ப அட்டைதாரர்களுக்கு கிட்டத்தட்ட 1,60,000 ரேஷன் கார்டுதரர்களுக்கு நிதி ஒதுக்கி கொடுக்கப்பட்டிருக்கிறது. ரேசன் கடைகள் மூலமாக இந்த நிதி என்பது […]

Categories
மாநில செய்திகள்

மழை நிவாரணம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு …!!

தமிழக அரசின் உடைய வருவாய் நிர்வாக ஆணையர் எஸ். கே பிரபாகரன் வெளியிட்டுள்ள அரசாணையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குறிப்பாக இரண்டு வட்டங்களுக்கு சீர்காழியில் 99, 518 குடும்ப அட்டைதாரர்கள்,  தரங்கம்பாடியில் 62,129 குடும்ப அட்டைதாரர்களுக்கு கிட்டத்தட்ட 1,60,000 ரேஷன் கார்டுதரர்களுக்கு நிதி ஒதுக்கி கொடுக்கப்பட்டிருக்கிறது. ரேசன் கடைகள் மூலமாக இந்த நிதி என்பது விநியோகம் செய்யப்படும். இதற்கான மொத்த தொகையாக 16 கோடி ரூபாயை தமிழக அரசு , கும்பகோணம் மத்திய கூட்டுறவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1 ரூபாய்… 3 ரூபாய்… 5 ரூபாய்…. 10 ரூபாய் கொடுக்கீங்க…. கருணை உள்ளதோடு கொடுக்க சொன்ன அன்புமணி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னையில் உள்ள மழை நீர் வடிகால் வருடம் வருடம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது சென்னைக்கு சேட்டிலைட் மேப்பிங் செய்து, எந்த தெருவில் எவ்வளவு மழை பெய்யும் ? எவ்வளவு தண்ணீர் நிற்கும் என்று தகவல்கள் வைத்திருக்கிறார்கள்.  இப்போது மட்டுமல்ல 20 வருடமாகவே இந்த தகவல்களை வைத்திருக்கிறார்கள். அதற்கு ஏற்ப மழை நீர் வடிகால் போவதை மழை தொட்ங்கும் முன்பே கட்டி, அதை செயல்படுத்த வேண்டும். மழை வந்த பிறகு, பள்ளம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உண்மை சம்பவம் கதையில் நடிக்கும் கலையரசன்…. என்ன படம் தெரியுமா?…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!!

சமூகத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு வாழை எனும் பெயரில் புது  படம் தயாராகிறது. இவற்றில் கலையரசன் நாயகனாக நடிக்கிறார். இவர் மெட்ராஸ் திரைப்படம் வாயிலாக பிரபலமாகி பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். அத்துடன் அண்மையில் திரைக்கு வந்த கலக தலைவன் திரைப்படத்தில் உதய நிதியுடன் நடித்து இருந்தார். வாழை திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார். இவர் முன்பே பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது உதயநிதி நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (23.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 23) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 17 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

எப்போ, எப்போ ? என கேட்டுட்டே இருந்த உதயநிதி…! நீ வா பா என சட்ரென்று வந்த பதில்…!!

திமுக இளைஞரனி சார்பாக நடந்த பாசறை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய  இளைஞரனி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,  அண்ணன் அன்பரசன் அவர்கள் என்னிடத்திலே தேதி வாங்கும் பொழுது உன் பயிற்சி பாசறை கூட்டத்தில் பெருசா கலந்துக்கறது இல்ல, நான் முதல் கூட்டத்தில் கலந்துக்கிட்டேன். அதன் பிறகு சென்ற மாதம்,  திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட நம்முடைய அக்கா அருள்மொழி அவர்கள் பேசிய கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். அண்ணன் வேலு அவர்களுடைய வேண்டுகோளை ஏற்று அன்பரசன் அவர்கள் உரிமையோடு […]

Categories
அரசியல்

186ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (நவம்பர் 23) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வசூலில் தெறிக்கவிடும் “காந்தாரா” படம்…. உலக அளவில் எவ்வளவு கோடி தெரியுமா?…. வெளிவரும் தகவல்கள்….!!!

நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” படம் சென்ற செப்டம்பர் 30ம் தேதி வெளியாகியது. முதலில் இப்படம் கன்னட மொழியில் மட்டுமே வெளியாகியது. இதையடுத்து கர்நாடகாவில் விமர்சன ரீதியாக இந்த படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதோடு, நல்ல வசூலையும் குவித்தது. அதன்பின் இப்படத்தை மற்ற மொழிகளில் வெளியிட படத் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் முடிவுசெய்தது. அதன்படி இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் அண்மையில் “காந்தாரா” படம் வெளியிடப்பட்டது. இப்போது அனைத்து மொழிகளிலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆட்சியர் அலுவலகத்தில் இளம் பெண் தீக்குளிக்க முயற்சி… போலீசார் வழக்கு பதிவு..!!!

தீக்குளிக்க முயன்ற இளம்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பார்த்திபனூர் பரளை பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவர் தனது கைக்குழந்தையுடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் வசித்து வருவதாகவும் திருமணத்தின்போது தனக்கு பெற்றோர்கள் 10 பவுன் நகை மற்றும் ஒரு லட்சத்தை கொடுத்ததை அவர் என்னிடம் தர மறுக்கின்றார். ஆகையால் அவரிடம் இருந்து எனது நகையையும் பணத்தையும் மீட்டுத் தருமாறு ஆட்சியரிடம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக செல்வாக்கை இழந்து விட்டது….. தேர்தலில் எப்படி கணக்கு போட்டாலும் ஜெயிக்க முடியாது…. பாஜக ஆருடம்….!!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பச்சாபாளையம் பகுதியில் பாஜக அலுவலகம் அமைந்துள்ளது. இன்று சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளையும் வலிமைப்படுத்து வதற்காக பாஜக சார்பில் சக்தி கேந்திரா அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். திமுக அரசை எதிர் கொள்வதற்கான பல்வேறு வியூகங்களை பாஜக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தயாரிப்பாளர் ஜி.தனஞ்ஜெயனின் மகளுக்கு “டும் டும்”…. நிகழ்ச்சியில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள்…. வெளியான புகைப்படம்….!!!!

தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் டாக்டர் ஜி.தனஞ்ஜெயன் ஆவார். இப்போது இவர் விஜய் ஆண்டணி நடிக்கும் கொலை, மழை பிடிக்காத மனிதன், ரத்தம், காக்கி போன்ற திரைப்படங்களை இன்பினிட்டி பிலிம் வென்சரின் சார்பாக தயாரித்து வருகிறார். இவரது மூத்தமகளான ரேவதியின் திருமணம் அபிஷேக்குமார் என்பவருடன் அம்பத்தூரிலுள்ள பிஎஸ்பி கன்வென்ஷஸ் ஹாலில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் மூத்த நடிகரும், பிரபல பேச்சாளருமான சிவகுமார் தன் குடும்பத்துடன் பங்கேற்று திருமாங்கல்யத்தை மணமகன் அபிஷேக்கிடம் எடுத்து கொடுத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஊழல் பட்டியல்”…. அண்ணாமலையை தொடர்ந்து ஆளுநரிடம் ரிப்போர்ட் கொடுக்கும் இபிஎஸ்….. அதிர்ச்சியில் திமுக….!!!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று பால் விலை, மின் கட்டணம் மற்றும் சொத்துவரி போன்றவற்றின் விலையை உயர்த்தியதன் காரணமாக பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருவதோடு விலை உயர்வை மீண்டும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. அதன் பிறகு திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் குறித்து அடிக்கடி அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி வருகிறார்கள். இதற்கு திமுக அமைச்சர்களும் பதிலடி கொடுக்கிறார்கள். அதன் பிறகு எதிர்க்கட்சித் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

20 வருஷ டேட்டா இருக்கு…! போட்டோ எடுக்கும் முதல்வர்… C.M மீது அன்புமணி விமர்சனம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், இந்த மாவட்டங்களில் குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை மாவட்டம் எல்லாமே வடிகாலாக தான் இருக்கின்றது. எங்கே மழை பெய்தாலும் அங்கே தான் தண்ணீர் போகும். அப்படி தாழ்வான பகுதி. வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை எந்த மழை வந்தாலும் எங்கே வந்தாலும் அங்கே தண்ணீர் தேங்கும். நெல்லூரில் மழை பெய்தால் வெள்ளம் கடலூரில் வரும், ஊட்டியில் மழை பெய்தாலும் கடலூருக்கு தான் வரும், தர்மபுரி எங்கே […]

Categories

Tech |