நடிகரும், மக்கள் நீதி மையத் தலைவருமான கமலஹாசன் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். இதற்கு முன்னதாக அவர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வரும் ஹைதராபாத்தில் இருக்கக்கூடிய திரைப்பட இயக்குனர் விஸ்வநாதன் அவர்களை சந்தித்து விட்டு சென்னை வந்திருந்த நிலையில், வீட்டிலிருந்த நேரத்தில் திடீரென அவருக்கு இருமல் மற்றும் லேசான காய்ச்சல் ஏற்பட்டதாகவும் இதுகுறித்து சிகிச்சை பெறுவதற்காகவும், […]