Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! எச்சரிக்கை தேவை..! உதவிகள் கிடைக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! சிலர் வாக்குறுதிக்கு மாறாக செயல்படக் கூடும். பெருந்தன்மையுடன் நடந்து சுயகௌரவத்தை காப்பாற்றுவது நல்லது. தொழில் வியாபாரம் முன்னேற புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளால் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். பயணங்களின் பொழுது கவனத்துடன் இருக்கவேண்டும். சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபட வேண்டாம். தேவையில்லாத பிரச்சினைகளில் ஈடுபட வேண்டாம். அறிகுறிகள் எதுவும் சொல்ல வேண்டாம். பெரியவர்களை மதித்து நடக்கவேண்டும். எதிலும் அலட்சியம் காட்ட வேண்டாம். பெண்களிடத்தில் எச்சரிக்கையுடன் நடக்க வேண்டும். பேச்சில் கவனம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! ஆரோக்கியத்தில் கவனம் தேவை..! நற்செய்தி வந்துசேரும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் உங்களுக்கு கடினமானதாக இருக்கும். செயல்களை முடித்துவிட வேண்டும் என்ற எண்ணங்கள் இருக்கும். பணிச்சுமை இன்று அதிகரிக்கும். அனைத்து விஷயங்களையும் சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். வெளியூர் பயணத் திட்டங்கள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மனவருத்தங்கள் நீங்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்படும். தாயின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! திட்டமிடுதல் அவசியம்..! வாக்குறுதிகள் நிறைவேறும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று செயலில் திறமை நிறைந்து காணப்படும். தொழில் வியாபாரத்தில் மகிழ்ச்சி கொடுக்கும். கூடுதல் வருமானம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் சிக்கல்கள் ஏற்பட்டு சரியாகும். பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் பொழுது கவனம் வேண்டும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே அனுசரணை வேண்டும். விருந்தினர்களின் வருகை இருக்கும். கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது. வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். வசீகரமான தோற்றம் வெளிப்படும். திட்டங்களை தீட்டி வெற்றி பெறுவீர்கள். குடும்பத் தேவைக்காக கடன் வாங்க வேண்டியதிருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! வருமானம் பெருகும்..! பிரச்சனைகள் தீரும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் ரகசியங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மனதில் ஒருமுகத்தன்மை இருக்கும். தொழிலில் சராசரி வருமானம் கிடைக்கும். சேமிப்புபணம் செலவிற்கு பயன்படும். உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். சிறந்த உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இன்று உங்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் தலைதூக்கும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் இருக்கும். குடும்பத்தினர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். இன்று நீங்கள் விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். அனைவரிடமும் கவனத்துடன் இருந்துக்கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது. சக […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! மனமகிழ்ச்சி உண்டாகும்..! பொறுமை அவசியம்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுவீர்கள். அனைவரிடமும் பொறுமையை பேண வேண்டும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் கூற வேண்டாம். பணத்தேவைகள் அதிகரிக்கும். பயணத்தில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். பொருட்களை கவனத்துடன் கையாள வேண்டும். சிக்கல்களை சமாளிக்க கூடிய மனப்பக்குவம் உண்டாகும். வாக்குவாதங்களில் எப்பொழுதும் ஈடுபட வேண்டாம். அவசர போக்கை கைவிட வேண்டும். இன்று நீங்கள் தெளிவாக ஆராய்ந்து வெற்றிக்கொள்ள வேண்டும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடனாக கொடுத்த பணம் வசூலாகும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! காலதாமதம் ஏற்படும்..! பாக்கிகள் வசூலாகும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! பேச்சில் மங்கள தன்மை காணப்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி உருவாகும். கூடுதல் பணம் வருமானம் கிடைக்கும். பணியாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும். அலட்சியம் காட்டாமல் நடந்துக்கொள்ளக் கூடாது. தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் உண்டாகும். பாக்கிகள் வசூலாவதில் காலதாமதம் ஏற்படும். வாக்குவாதங்களில் ஈடுபட கூடாது. நீங்கள் அவசர போக்கினை கைவிட வேண்டும். தனவரவு இன்று இருக்கும். குடும்பத்தில் அன்பு நிலைத்துக் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! போட்டிகள் குறையும்..! வெற்றி கிடைக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி பெற்று மகிழ்வீர்கள். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றி பெறுவீர்கள். வியாபாரப் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறந்த நாளாக இன்றைய நாள் இருக்கும். புதிய பதவிகள் தேடி வரக்கூடும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருப்பதால், பணவரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்துசேரும். பெண்களுக்கும் பணவரவு சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். பேச்சில் கவனம் செலுத்த வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! பணிச்சுமை அதிகரிக்கும்..! ஒற்றுமை பலப்படும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று புதிய வாய்ப்புகள் உருவாகும். பல வழிகளில் பணம் வரும். அரசாங்கத்தால் லாபம் கூடும். பேச்சினால் காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். உறவினர்களின் வருகை நன்மையை உண்டாக்கும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். மனதின் குறைகளை சரி செய்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் அதிகமாக பணிச்சுமை இருக்கும். தேவையான பொருட்களை மட்டும் வாங்குங்கள். காதலில் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பேசும்பொழுது […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! அனுகூலம் உண்டாகும்..! செலவுகள் ஏற்படும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று வருங்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்துக் கொள்வார்கள். வாகனச் செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் இருக்கும் பெரியோர்களிடம் அனுசரித்து நடக்கவேண்டும். நிதானத்தைக் கடைப்பிடித்தால் வெற்றி உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். நல்ல அணுகுமுறை ஏற்படும். விட்டுக்கொடுத்து சென்றால் முன்னேற்றங்கள் ஏற்படும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். பெற்றோருக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வருமானத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! உதவிகள் கிடைக்கும்..! குழப்பங்கள் தீரும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று சிறந்த முன்னேற்றங்கள் உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் திரும்பி வரக்கூடும் இன்று கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். கஷ்டம் படிப்படியாக குறையும். மனசுக்குள் குழப்பம் விலகிச்செல்லும். பணிச்சுமை அதிகரிக்கும். பொறுப்புகள் கூடும். அதிக உழைப்பின் காரணமாக வேலையில் ஈடுபடுவீர்கள். உடல் சோர்வாக காணப்படும். சத்தான உணவு வகைகளை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! நன்மை உண்டாகும்..! நற்பலன் கிடைக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று புதிய திட்டங்களை வியாபாரத்தில் லாபங்களைப் பெருக்கிக் கொள்ள முடியும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். வீட்டை பராமரிக்கும் சூழல் ஏற்படும். பயணங்களால் நற்பலன்கள் ஏற்படும். பிரச்சனைகளை சமாளிக்கும் திறமை வெளிப்படும். காரியங்களில் தடைகள் ஏற்பட்டு சரியாகும். வெளியூர் அல்லது வெளிநாடு பயணங்கள் செல்ல நேரலாம். வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். கலைத்துறையில் வெற்றி பெறுவீர்கள். சில விஷயங்களில் சண்டைகள் ஏற்படும். வீணான குழப்பங்கள் வரக்கூடும். குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (02-12-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 02-12-2022, கார்த்திகை 16, வெள்ளிக்கிழமை, தசமி திதி பின்இரவு 05.40 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. உத்திரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 05.45 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00. இன்றைய ராசிப்பலன் – 02.12.2022 மேஷம் உங்களின் ராசிக்கு எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். கணவன் மனைவியிடையே சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வெளி வேலைகளால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 2…!!

திசம்பர் 2  கிரிகோரியன் ஆண்டின் 336 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 337 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 29 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1409 – லீப்சிக் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. 1697 – இலண்டனில் புனித பவுல் பேராலயம் திறக்கப்பட்டது. 1804 – நோட்ரே டேம் டி பாரிசில் நெப்போலியன் பொனபார்ட் பிரான்சின் பேரரசனாகத் தனக்குத்தானே முடிசூடினான். 1805 – நெப்போலியனின் தலைமையில் பிரான்சியப் படையினர் ஓஸ்டர்லிட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் உருசிய-ஆத்திரியக் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தனர். 1823 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் மன்ரோ ஐரோப்பிய சர்ச்சைகளில் அமெரிக்கா நடுநிலைமை வகிக்கும் என அறிவித்தார், அதேவேளையில் ஐரோப்பிய அரசுகள் அமெரிக்காக்களில் தலையிடக்கூடாது […]

Categories
மாநில செய்திகள்

நாளை மறுநாள் முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை….. திருச்செந்தூர் விரைவு ரயில் இங்கு நிற்கும்…. தெற்கு ரயில்வே தகவல்…..!!!!!

தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் எழும்பூரில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்செந்தூருக்கு விரைவு ரயில் செல்வது வழக்கம். இந்த ரயில் வருகின்ற 3-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 3-ஆம் தேதி வரை பாபநாசத்தில் நின்று செல்லும். இந்நிலையில் மாலை 4.5 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த ரயில் பாபநாசத்திற்கு இரவு 10.11 மணிக்கு செல்லும். பின்னர் அங்கிருந்து இரவு 7. 10 மணிக்கு  […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மூதாட்டியை கொன்று பலாத்காரம் செய்த டிரைவர்…. சாகும் வரை சிறை தண்டனை…. நீதிபதியின் பரபரப்பு தீர்ப்பு…!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒட்டனந்தல் காலனி புதுமனை தெருவில் கவிதாஸ்(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் பொக்லைன் எந்திர ஓட்டுநர். கடந்த 2019-ஆம் ஆண்டு கவிதாஸ் ஆலங்குப்பம் ஊராட்சி பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். அன்று இரவு வேலையை முடித்துவிட்டு கவிதாஸ் அப்பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது நள்ளிரவு நேரத்தில் வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்த 70 வயது மூதாட்டியை கவிதாஸ் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார். அதற்கு மூதாட்டி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கேட்பாரற்று சாலையில் கிடந்த பை…. ஆட்டோ ஓட்டுநரின் சிறப்பான செயல்…. குவியும் பாராட்டுகள்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நாச்சிப்பட்டு கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். நேற்று முருகன் ஆட்டோவில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு திம்மலையில் இருக்கும் தனியார் பள்ளியில் அதனை இறக்கி வைத்துவிட்டு திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் தியாகதுருகம் மின்வாரிய அலுவலகம் அருகே சென்ற போது சாலையில் கிடந்த பையை முருகன் திறந்து பார்த்துள்ளார். அந்த பையில் 9,500 ரூபாய் பணம், ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் ஆகியவை இருந்ததை பார்த்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஊருக்கு புகழ் சேர்த்த கோவில் காளை இறப்பு…. கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய கிராம மக்கள்….!!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள ஆதனூர் கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான காளை பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று ஊருக்கு புகழை சேர்த்தது. இந்நிலையில் உடல் நலக்குறைவால் எதிர்பாராதவிதமாக காளை இறந்ததால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர். மேலும் காளை இறந்த செய்தியை கேட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், மாடுபிடி வீரர்களும் காளைக்கு மாலை, வேட்டி, துண்டு அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். பின்னர் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க முன்னாள் அதிபருக்கு “கொரோனா தொற்று உறுதி”… வெளியான தகவல்…!!!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபராக கடந்த 1993-ஆம் வருடம் முதல் 2001-ஆம் வருடம் வரை பதவி வகித்த பில் கிளின்டனுக்கு தற்போது கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது நான் நன்றாக இருக்கிறேன். மேலும் பூஸ்டர் டோஸ் மற்றும் கொரோனா தடுப்பூசி மற்றும் போட்டிருப்பதால்  எனக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மரத்தின் மீது மோதிய தனியார் பேருந்து…. காயமடைந்த 11 பேர்…. போலீஸ் விசாரணை…!!!

மரத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 11 பேர் காயமடைந்தனர். தேனி மாவட்டத்திலிருந்து தனியார் பேருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் நோட்டம்பட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நிலக்கோட்டையை சேர்ந்த சுப்பையா, விஜயா, ஆண்டிபட்டியை சேர்ந்த காவேரி, ஹரிகிருஷ்ணன், ராசு, காயத்ரி, தேனியை சேர்ந்த கோபால், பஞ்சவர்ணம் உட்பட 11 பேர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வளர்ப்பு நாயை கவ்வி சென்ற சிறுத்தை…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. பீதியில் பொதுமக்கள்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த 28-ஆம் தேதி கல்லக் கொரை கிராமத்திற்குள் நுழைந்த சிறுத்தையை பார்த்து நாய்கள் குரைத்தது. அப்போது வளர்ப்பு நாய் ஒன்றை சிறுத்தை கவ்வி சென்ற காட்சிகள் அங்கு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை பார்த்து பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதற்கிடையில் சிறுத்தை நாயை கவ்வி […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர்!!…. சிறந்த பள்ளிகளுக்கு அன்பழகன் பெயரில் விருது….. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கல்வியில் சிறந்து விளங்கும்  பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மு.க ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நமது தமிழகத்தில் கல்வியில் சிறந்து விளங்கும் பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் பெயரில் விருதுகள் வழங்கப்படும் என அறிவித்தார். அதேபோல் இந்த ஆண்டிற்கான சிறந்த அரசு பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் அமைந்துள்ள 39 மாவட்டங்களில்  114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

கைதிகளுக்கு ஆதார் அட்டை வழங்க நடவடிக்கை… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!!!

தமிழக சிறை துறையின் கீழ் மொத்தம் 142 சிறைகள் உள்ளது. சுமார் 23 ஆயிரத்து 592 கைதிகள் வரை அடைத்து வைக்க கூடிய இந்த சிறையில் தற்போது வெறும் 18,000 கைதிகள் மட்டுமே அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறைகளில் இருக்கும் கைதிகள் அங்கிருந்து வெளியேறி வரும் போது, வேலையில் சேர்வதற்கும், தொழில் தொடங்குவதற்காகவும் வங்கி கடன் பெறுவதற்கு ஆதார் அட்டை இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதை உணர்ந்த சிறைத்துறை அதிகாரி டி.ஜி.பி அமரேஷ் பூஜாரி கைதிகளுக்கு ஆதார் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் பாலியல் பலாத்காரம்…. தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை…. நீதிமன்றம் அதிரடி…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை பகுதியில் கூலி தொழிலாளியான மணிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் 28 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மணிவேலை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகளா நீதிமன்ற நீதிபதி சத்யா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மணிவேலுக்கு 1 1/2 லட்ச […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காய்சலால் பாதிக்கப்பட்ட மாணவன் கூறிய தகவல்…. தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்…. போலீஸ் விசாரணை…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாலக்கரையில் இருக்கும் அரசு தொடக்கப் பள்ளியில் 35 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 21-ஆம் தேதி பள்ளியில் படிக்கும் மாணவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் மாணவனை பெற்றோர் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் பள்ளியில் கழிப்பறையை சுத்தம் செய்த போது கொசு கடித்ததாக மாணவன் டாக்டரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவனின் தாய் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்த கல்வி […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!…. தூத்துக்குடி, திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு ” 560 கோடி மதிப்பில் புதிய திட்டம்…. என்னன்னு தெரியுமா?….. மாஸ் காட்டும் தமிழக அரசு….!!!!

தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது தமிழ்நாட்டில் உள்ள 2 மாவட்டங்களில்   குடிநீர் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம், கயத்தாறு, கோவில்பட்டி, புதூர், விளாத்திகுளம் ஆகிய 6 பஞ்சாயத்துக்களில் உள்ள 363 ஊரக குடியிருப்பு பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செரு கண்ணூர், காடூர், கார்த்திகேயபுரம், கன்னிகாபுரம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வெந்நீர் வைத்த தாய்…. பானைக்குள் தவறி விழுந்த 3 வயது குழந்தை…. அதிர்ச்சி சம்பவம்…!!!

வெந்நீர் பானையில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தேனூர் கிராமத்தில் கொத்தனாரான ஆனந்தவேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தனுஸ்ரீ(3) என்ற குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று ராஜேஸ்வரி வீட்டிற்கு வெளியே அடுப்பில் வெந்நீர் வைத்து கொண்டிருந்தார். அப்போது படிக்கட்டில் இறங்கி வந்த தனுஸ்ரீ எதிர்பாராதவிதமாக வெந்நீர் வைத்திருந்த பானைக்குள் தவறி விழுந்தாள். இதனால் உடல் வந்து […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. 3 நாட்கள் சர்வதேச புத்தக கண்காட்சி…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழகத்தில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகை மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு வரும் பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி மாதம் 16,17,18 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3  நாட்களும் சர்வதேச அளவில் புத்தக கண்காட்சி நடைபெறும். இதில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஏராளமானோர் கலந்து […]

Categories
மாநில செய்திகள்

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா… தி.மு.க சார்பில் 100 சிறப்பு பொதுக்கூட்டங்கள்…!!!!!

தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 சிறப்பு பொதுக் கூட்டங்கள் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து தி.மு.க வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என இரண்டு வரிசைகளிலும் உறுப்பினராக இருந்து ஜனநாயக மாண்பு காத்தவர் பேராசிரியர் அன்பழகன். இவர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சி காலங்களில் மக்கள் நல வாழ்வு துறை, கல்வித்துறை, நிதித்துறை, சமூக நலத்துறை போன்ற துறைகளுக்கும் அமைச்சராக இருந்து மக்களுக்கான நலத்திட்டங்களை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தனியார் பேருந்து-கார் மோதல்…. 2 பேர் பலி; 2 பெண்கள் படுகாயம்…. கோர விபத்து…!!!

காரும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினரான விஜயலட்சுமி, மாலதி, சுப்புலட்சுமி ஆகியோருடன் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் வந்து கொண்டிருந்தார். அதே சமயம் ஒரு தனியார் பேருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நத்தம்பட்டி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாநில செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கு போட்டி…. சாதனை படைத்த மாணவிக்கு குவியும் பாராட்டுகள்…!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் மாநில செவித்திறன் குறைபாடுள்ள மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் 3 நாட்கள் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் விழுப்புரம் எம்.ஆர்.ஐ.சி ஆர்.சி உயர்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் சுபஸ்ரீ என்ற மாணவி 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றார். இதனையடுத்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த மாணவியை மாவட்ட ஆட்சியர் மோகன், […]

Categories
தேசிய செய்திகள்

வானொலி நிலையங்கள் இந்த பாடல்களை ஒலிபரப்பக்கூடாது!….. மத்திய அரசு எச்சரிக்கை…..!!!!

ஆல்கஹால், போதைப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி கலாசாரம் ஆகியவற்றை மிகைப்படுத்தி வானொலி நிலையங்கள் பாடல் ஒலிபரப்பக்கூடாது என மத்திய அரசு எச்சரித்து இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு ஒன்றை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் “வானொலி நிலையங்கள் கிராண்ட் ஆஃப் பர்மிசன் ஒப்பந்தம் மற்றும் புலம்பெயர் கிராண்ட் ஆஃப் பர்மிசன் ஒப்பந்தத்தில் கூறியுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் கண்டிப்பாக செயல்படவேண்டும். இந்த ஒப்பந்தங்களின் படி வன்முறை இடம்பெறும் எந்தவொரு விஷயத்தையும் வானொலியில் ஒலிபரப்பக்கூடாது. இதை […]

Categories
சினிமா

திருமணம் செய்யும் முன்பே கவர்ச்சி நடிகை கர்ப்பமா?…. வதந்திக்கு முற்றுப்புள்ளி…. கடுப்பான நடிகர் அர்ஜுன் கபூர்…..!!!!

பாலிவுட்டில் முன்னணி கவர்ச்சி நடிகை ஆக இருப்பவர் மலைக்கா அரோரா. இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகிய உயிரே திரைப்படத்தில் இடம்பெறும் தையா தையா பாடலில் ரயிலின் மீது ஷாருக்கானுடன் கவர்ச்சி நடனம் ஆடியதன் வாயிலாக பிரபலமானவர் ஆவார். இதனையடுத்து பாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் அவர், அங்கு பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். 50 வயதை நெருங்கிவிட்ட மலைக்கா அரோரா, நடிகர் சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ் கானை சென்ற 1998 ஆம் வருடம் திருமணம் செய்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படத்தின் புதிய பாடல் ரிலீஸ்….. இணையத்தில் செம ட்ரெண்டிங்….!!

தமிழ் சினிமாவில் கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் பிறகு குறைந்த பொருள் செலவில் எடுக்கப்பட்ட லவ் டுடே திரைப்படம் ஆனது பல கோடிகளை குவித்து வருவது கோலிவுட் மட்டுமின்றி டோலிவுட் வட்டாரத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. Full Video Song of #Saachitale streaming nowhttps://t.co/5U2yBZsmFa A @pradeeponelife […]

Categories
மாநில செய்திகள்

காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறவாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்…!!!!!

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது, டிசம்பர் 5-ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில்  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதி  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வருட டிசம்பரில் வெளியாகும் மொத்த படங்கள்…. வெளியான பட்டியல் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் எப்போதுமே வருடத்தின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் நிறைய திரைப்படங்கள் ரிலீசாகும். அந்த வகையில், 2022 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் ரிலீசாகும் படங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, டிசம்பர் 2ம் தேதி வெள்ளிக்கிழமை கட்டாகுஸ்தி, டிஎஸ்பி, தெற்கத்திவீரன், மஞ்ச குருவி போன்ற திரைப்படங்கள் ரிலீசாகின்றன. வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ், வரலாறு முக்கியம் போன்ற திரைப்படங்கள் அடுத்த வாரம் டிசம்பர் 9ஆம் தேதி ரிலீசாகின்றன. அகிலன், லத்தி போன்ற படங்கள் கிறிஸ்துமஸ் […]

Categories
மாநில செய்திகள்

எரிபொருள் விலைக்கேற்ப ஆட்டோ கட்டணம் உயர்வு…. தமிழக அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு….!!!!

சென்னையில் வசித்து வரும் வழக்கறிஞர் எஸ்.வி. ராமமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த 2015-ம் ஆண்டுக்கு பிறகு ஆட்டோ கட்டணமானது மாற்றி அமைக்கப்படவில்லை. தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை போன்றவைகள் உயர்ந்து வருவதால் ஆட்டோ கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும். கடந்த 7 வருடங்களாக ஆட்டோ கட்டணமானது மாற்றி அமைக்கப்படாததால் பல ஆட்டோ ஓட்டுநர்கள் தாங்களாகவே கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பிறகு கடந்த ஏப்ரல் மாதம் எரிபொருள் […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர் அறிவிப்பு!…. இனி கோயம்பேடுக்கு குட்பை…. பொங்கல் ஸ்பெஷலாக கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்….!!!!!

சென்னையில் உள்ள கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி போன்ற தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இந்த பகுதிகளில் புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருவதால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பயணிகள் விரைவில் அடையலாம். அதோடு பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பிறகு சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

“நான் எம்ஜிஆரை அப்படி கூப்பிட்டா அவருக்கு பிடிக்காது”…. என் அப்பா கிட்ட கூட கம்ப்ளைன்ட் பண்ணுவாரு…. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்….!!!!!

சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு எம்ஜிஆர் உடனான தன்னுடைய மறக்க முடியாத நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, என்னுடைய தந்தையின் நெருங்கிய நண்பராக எம்ஜிஆர் அவர்கள் இருந்ததால் எனக்கு அவரை அடிக்கடி சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. நான் எம்ஜிஆரை‌ சார்‌ என்று அழைத்தால் அவருக்கு பிடிக்காது. இது குறித்து அவர் ஒரு முறை என்னுடைய தந்தை […]

Categories
தேசிய செய்திகள்

தலைநகரில் 3 நாட்களுக்கு மதுபானம் விற்க தடை…. எதற்காக தெரியுமா?…. வெளியான உத்தரவு…..!!!!

நாட்டின் தலைநகரான தில்லியில் 3 நாட்களுக்கு மதுபானம் விற்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு நாளை முதல் வாக்குப்பதிவு நடைபெறும் 4ம் தேதி வரை மதுபானம் விற்பனைக்குத் தடைவிதித்து தில்லி மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. தில்லி மாநகராட்சியிலுள்ள 250 வார்டுகளுக்கும் டிசம்பர் 4ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதையடுத்து பதிவான வாக்குகள் டிசம்பர் 7ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இத்தோ்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… பிக்பாஸ் தனலட்சுமியும், ஜூலியும் ஒன்னா….? அட என்னப்பா பொசக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க….!!!!

சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் தனலட்சுமி. இதனயடுத்து ,இவரையும் பிக்பாஸ் சீசன் 1 கலந்து கொண்ட போட்டியாளரான ஜூலியையும் நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்னர் டிக் டாக் மற்றும் குறும்படங்களில் நடித்து பிரபலமானவர்கள். பிக்பாஸ் வீட்டில் பொய் சொல்வது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துணிவு படம் பற்றி சூப்பர் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்… அப்ப சம்பவம் கன்பார்ம் தான்…!!!!

துணிவு திரைப்படம் குறித்து போனி கபூர் பேசி உள்ளார். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் விவாகரத்திற்கு இவங்க தான் காரணமாமே… இது என்னப்பா புதுசா இருக்கு..!!!

தனுஷின் விவாகரத்திற்கு பிரபல நடிகை தான் காரணம் என செய்திகள் வெளியாகி வருகின்றது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து சென்ற 2004 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார்கள். 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் சென்ற ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக அறிவித்தார்கள். இது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் இருக்கின்றார்கள். இதனால் இவர்கள் மீண்டும் இருவரும் இணைந்து விடுவார்கள் என பலரும் எண்ணிய நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. சூப்பர்…. பிரபல சீரியலை பாராட்டிய நடிகர் ரஜினி…. மகிழ்ச்சியில் இயக்குனர்….!!!!

சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதன்படி, இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல் ”எதிர்நீச்சல்”. இந்த சீரியல் பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் இருப்பதால் பல தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. இந்நிலையில், இந்த சீரியலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெருமையாக பேசியுள்ளார். அதன்படி, திருச்செல்வத்தின் நண்பர் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிகிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் […]

Categories
மாநில செய்திகள்

அரசு கல்லூரிகளில் கூடுதல் கௌரவ விரிவுரையாளர்களுக்கான வழிமுறைகள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் நா. கார்த்திகேயன் ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் பணி நியமிக்கப்படும் வரையில், கௌரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்படுவார்கள். அதன்படி ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள 2423 கௌரவ விரிவுரையாளர்களுடன், கூடுதலாக 1895 விரிவுரையாளர்களையும் நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இப்படி நியமிக்கப்படும் பேராசிரியர்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவரா தான் இருக்கும்?…. மக்கள் மனதில் இடம்பிடித்த பெண் போட்டியாளர்…..!!!!

பிக்பாஸ் 6 நிகழ்ச்சி விறுவிறுப்புக்கும், சண்டைக்கும் பஞ்சம் இன்றி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் நடந்து வரும் டாஸ்கில் தொடர்ந்து பல சச்சரவுகள் ஏற்பட்டு வருகிறது. அதிலும் நேற்று ஒளிபரப்பாகிய எபிசோடில் பல்வேறு சண்டைகளை நாம் பார்த்தோம். 50 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரக்கூடிய பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி ரசிகர்கள் பல கருத்துக்களை சமூகவலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் 50 நாட்களை கடந்திருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களிடம் அதிகம் வரவேற்பை பெற்றுள்ள ஷிவின் கணேஷ் டைட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!!…. நாங்களும் இந்தியர்கள் தான்…. குஷியோ குஷியில் மினி ஆப்பிரிக்கா கிராமம்…..!!!!!

இந்திய அரசு முதல் முதலாக ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது. குஜராத் மாநிலத்தில் தற்போது சட்டப்பேரவை தேர்தல் 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த  தேர்தலில் 788 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் தலைவிதியை 2. 39 கோடி வாக்காளர்களின் வாக்குகள் மட்டுமே தீர்மானிக்கிறது. இந்நிலையில் ஜாம்பூர் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு படகு ஓட்டிகளாகவும், வணிகர்களாகவும் ஆப்பிரிக்கா  நாட்டில் இருந்து வந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தற்போது  முதல் முறையாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. மதுரையில் சிவாஜியின் ”பட்டிக்காடா பட்டணமா”…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….!!!!

தமிழ் திரையுலகில் ரசிகர்களால் இன்றளவும் மறக்க முடியாத நடிகர்களில் ஒருவர் சிவாஜி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்தது. இயக்குனர் பி. மாதவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 1972 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் ”பட்டிக்காடா பட்டணமா”. இந்த படத்தில் ஜெயலலிதா, மனோரமா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் மதுரை சோழவந்தானில் படமாக்கப்பட்டது. இந்நிலையில், இந்த படத்தின் 50 ஆவது ஆண்டு விழாவை மதுரையில் […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவி!…. பணத்திற்காக மனைவியை கொன்றுவிட்டு இப்படியொரு நாடகமா?…. சிக்கிய கணவர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்……!!!!

ராஜஸ்தான் ஜெய்ப்பூர் பகுதியில் வசித்து வருபவர் மகேஷ் சந்த். இவருடைய மனைவி ஷாலு. சென்ற அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி ஷாலு தன் உறவினர் ராஜூவுடன் கோயிலுக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். இந்நிலையில் கார் ஒன்று மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதனை காவல்துறையினர் சாலை விபத்தாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையில் ஷாலு மரணம் அடைந்தால் அவரது பெயரில் இருந்த இன்சூரன்ஸ் பணமான ரூபாய்.1.90 கோடியை மகேஷ் சந்த் பெற்றார். […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு மாதம் 1500…. இன்று அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க…!!!

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தமிழ்மொழி திறனை மேம்படுத்தும் வகையில் கடந்த அக்டோபர் மாதம் அரசு சார்பில் திறனறித் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலமாக ஒரு மாதம் 1500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்க தொகை வழங்கப்படும். இதில் 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களும் மீதமுள்ள 50 சதவீதத்துக்கு பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெறும் 1,500 மாணவர்களுக்கு இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

“இதுதான் நமது இந்தியா”…. ஒரே குடும்பத்தில் 81 பேர்…. சுவாரசியமான நிகழ்வு…. நீங்களும் பாருங்க….!!!!!

குஜராத் மாநிலத்தில்  தேர்தல் தொடங்கியுள்ளது குஜராத் மாநிலத்தில் இன்று முதல்  கட்ட தேர்தல் தொடங்கியுள்ளது. இதனால்  மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் காம்ரேஜ் பகுதியில் வசித்து வரும் ஒரு குடும்பத்தை சேர்ந்த 81 பேர் ஒன்றாக  வாக்களிக்க சென்றுள்ளனர்.  இவர்கள் நாட்டின் ஒற்றுமை, கலாசாரம், உறவின் மாண்பு அனைத்தையும் உணர்த்தும் வகையில் எதிர்கால தலைமுறைக்கு புரிய வைக்கும் வகையில் இவர்கள் ஒன்றாக வாழ்ந்து வருவதோடு, ஒன்றாக சேர்ந்து தங்களது ஜனநாயக கடமை ஆற்றியுள்ளனர். […]

Categories

Tech |