Categories
பல்சுவை

என்ன ஒரு பாசம்!… பெண்ணின் கூக்குரல் கேட்டதும்…. டக்குன்னு வந்த எருமை…. வைரல் வீடியோ…..!!!!

சமூகவலைத்தளத்தில் விலங்குகளின் வீடியோகளுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது அதுபோன்ற ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ஒரு பெண்ணுக்கும் அவளுடைய எருமைக் குட்டிக்கும் இடையிலுள்ள அழகான பந்தத்தின் வீடியோ வைரலாகி இருக்கிறது. இந்த பாசம்மிக்க உறவை பார்க்கும்போது இதயம் இனிக்கிறது. எருமைக்கன்று ஒன்று பெண்ணின் குரலை கேட்டதும் அவரிடம் ஓடி வருவதை வீடியோவில் காண முடிகிறது. பாசமாக பெண் எருமையை கூப்பிடுவதும், ஆசையாக அது பெண்ணை நோக்கி ஓடி வருவதையும் […]

Categories
உலக செய்திகள்

“ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை குறையலாம்”.. இதுதான் காரணமா..? எலான் மஸ்க் ட்விட்…!!!!!

எலான் மஸ்க்  twitter நிறுவனத்தை வாங்கிய பின் அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அந்த வகையில் twitter கணக்கு வைத்திருப்பவர்களை ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது என தற்போது பதிவிட்டுள்ளார். மேலும் தற்போது ட்விட்டரில் போலி கணக்குகள் நீக்கப்படுவதால் பாலோவர்ஸ்களின் எண்ணிக்கை குறையலாம் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் பயனர்கள் சரியாக 280 எழுத்துக்களை அல்லது உள்ளீடுகளை மட்டுமே டைப் செய்து அனுப்பக்கூடிய வசதி தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் அதிகமான கருத்துக்களை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிறப்பு வகுப்புக்கு சென்ற மாணவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள வி.மலம்பட்டி பகுதியில் ஹோட்டல் தொழிலாளியான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு வள்ளியப்பன்(20), சின்னையா(17), விஜயகுமார்(15) ஆகிய மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இதில் விஜயகுமார் வேலங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று பள்ளியில் நடைபெற்ற சிறப்பு வகுப்புக்கு வழக்கம் போல காலை 7 மணிக்கு விஜயகுமார் சென்றுள்ளார். இதனையடுத்து காலை உணவு இடைவேளையின் போது விஜயகுமார் பள்ளிக்கு வெளியே சென்றுள்ளார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 7-வது ஆண்டாக சாதனை…. சிங்கம்புணரி அரசு பள்ளி மாணவிகளுக்கு குவியும் பாராட்டுகள்…!!!!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புவனத்தில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றுள்ளது. இதில் 25 பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியை சேர்ந்த 35 மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். இதில் மாணவிகள் 23 தங்கம், 10 வெள்ளி, 2 வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த பள்ளி மாணவிகள் மாவட்ட அளவில் தொடர்ந்து 7-வது வருடமாக முதலிடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் […]

Categories
தேசிய செய்திகள்

முஸ்லிம் பெண்களுக்காக தனி கல்லூரிகள் அமைக்கப்படுகிறதா…? முதல் மந்திரி பசவராஜ் பொம்மை கூறிய விளக்கம்…!!!!!

சிவமெக்காவில் நேற்று முதல் மந்திரி பசவராஜ் பொம்மை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, கர்நாடகத்தின் வக்பு வாரிய தலைவர் முஸ்லிம் பெண்களுக்காக 10 கல்லூரிகள் திறக்கப்படுவதாக கூறியுள்ளார். இது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும். ஆனால் முஸ்லிம் பெண்களுக்காக 10 கல்லூரிகள் திறக்கும் திட்டம் தற்போது இல்லை. மேலும் ஹிஜாப் பிரச்சனைக்கு பின் கல்வி நிலையங்களுக்கு வருகின்ற முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக சொல்வது உண்மை இல்லை. ஏனென்றால் முஸ்லிம் பெண்களின் வருகை வழக்கம் போல தான் […]

Categories
தேசிய செய்திகள்

நோ நோ என்னை விடுங்க….. தென் கொரிய பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை…. தலையிடுமா வெளியுறவு அமைச்சகம் ?….!!!!!

பிரபல நாட்டு பெண்ணிற்கு 2  இந்திய வாலிபர்கள் பாலியல் தொல்லை அளித்துள்ளனர். தென்கொரியாவை சேர்ந்தவர்  மியோச்சி என்ற பெண். இவர் கடந்த 2  நாட்களுக்கு முன்பு மும்பையில் உள்ள ஒரு தெருவில் யூடியூப் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக  மோட்டார் சைக்கிளில்   2 வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்கள் இந்த பெண்ணிடம் பைக்கில் லிப்ட் கொடுக்கவா என கேட்டுள்ளனர். அதற்கு  அந்த பெண் நோ நோ  என கூறியுள்ளார். ஆனாலும் அவர்கள் வலுக்கட்டாயமாக அந்த பெண்ணின் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கைவிடப்பட்ட பணிகளை மீண்டும் தொடர விருப்பம்… தலிபான் அரசு அறிவிப்பு…!!!!!

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து அங்கு குண்டு வெடிப்பு சம்பவங்களும், வன்முறைகளும் வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் காரணமாக கைவிடப்பட்ட பணிகளை மீண்டும் தொடர இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதாக தலிபான் அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி இந்திய தூதரகத்தில் இருந்த அதிகாரிகளை இந்தியா திரும்ப அழைத்ததை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவு தடைபட்டது. இருந்த போதிலும் இந்தியா, ஆப்கானிஸ்தான் மக்களுக்கு  உணவு மற்றும் மருத்துவ உதவிகளை  வழங்கி வந்தநிலையில்  […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மீது மோதிய கார்…. தம்பதிகள் உள்பட 5 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!!

மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதிய விபத்தில் தம்பதிகள் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அதிரப்பட்டி கிராமத்தில் நாகராஜ்-முத்துலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நாகராஜ் அவரது மனைவி, மகன் கிருஷ்ணமூர்த்தி, மருமகள் தேன்மொழி ஆகியோர் சொந்த வேலை காரணமாக 2 மோட்டார் சைக்கிள்களில் விராலிமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் ராமகவுண்டம்பட்டி அருகே சென்ற போது திருச்சி நோக்கி வேகமாக சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள்கள் மீது […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில்… வி.ஐ.பி தரிசன நேரம் மாற்றம்…!!!!!

திருப்பதி கோவிலில் வி.ஐ.பி பிரேக் தரிசனம் தினமும் காலை 5 மணி முதல் 8 மணி வரை நடைமுறையில் இருந்தது. இதன் காரணமாக முந்தைய நாள் இரவு ஏகாந்த சேவைக்கு பிறகு தரிசனத்திற்கு வரும் சாமானிய பக்தர்கள் காலை 5 மணி முதல் 8 மணி வரை சாமியை தரிசனம் செய்ய முடியாமல் இருந்தது. இந்நிலையில் திருப்தி தேவஸ்தானம்  வி.ஐ.பி பிரேக் தரிசன நேரம் காலை 8 மணிக்கு தொடங்கும் விதமாக மாற்றியது. இதனால்  காலை 5 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்-லோகேஷ் கனகராஜ் இணையும் புதிய படம்… வெளியான சூப்பர் நியூஸ்..!!!

லோகேஷ் கனகராஜ்-விஜய் இணையும் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் ஆரம்பமாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உரிய விலை இல்லாததால் நடு ரோட்டில் கொட்டப்பட்ட வெண்டைக்காய்… விவசாயிகள் வேதனை…!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மானூர் பகுதியில் வெண்டைக்காய்கள்  பயிரிடப்படுகிறது.  இந்த வெண்டைக்காய்களை விவசாயிகள்  மொத்த காய்கறி சந்தைகளில் விற்பனை செய்யவது வழக்கம். இந்நிலையில் வெண்டைக்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் விற்பனைக்கு கொண்டு வந்த காய்களை விவசாயிகள் சாலையில் கொட்டி சென்றுள்ளனர். இதனையடுத்து காய்கறி மற்றும் பயிர்களுக்கு அரசு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானிற்கு கச்சா எண்ணெய் கிடையாது…. மறுப்பு தெரிவித்த ரஷ்யா…!!!

ரஷ்ய அரசு, பாகிஸ்தான் நாட்டிற்கு கச்சா எண்ணையை குறைவான விலையில் கொடுக்க மறுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா பல மாதங்களாக தொடர்ந்து போர் மேற்கொண்டு வருகிறது. இதனால் மேற்கத்திய நாடுகள், எண்ணெய் போன்ற எரிபொருட்களை ரஷ்ய நாட்டிடமிருந்து வாங்குவதை தவிர்க்குமாறு கோரிக்கை வைத்தன. எனவே ரஷ்ய நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை சில நாடுகள் நிறுத்திவிட்டது. இதனால், நஷ்டமடைந்த ரஷ்ய அரசு குறைவான விலையில் கச்சா எண்ணையை வழங்க தீர்மானித்தது. அதன் பிறகு, இந்தியா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தீ தளபதி பாடல்”…. வாரிசு படத்தின் 2-ம் சிங்கிள் வெளியீடு…. வேற லெவலில் மாஸ் காட்டும் தளபதி…..!!!!!

தளபதி நடிகர் விஜய் தெலுங்கு டிரைக்டர் வம்சி உடன் கூட்டணி சேர்ந்து இருக்கும் திரைப்படம் வாரிசு. டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் தில்ராஜு தான் இப்படத்தை தயாரித்து வருகிறார். முன்பே வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆகியிருக்கிறது. மேலும் படத்தின் சில ஸ்டில்களும் வெளியிடப்பட்டிருந்தது. #VarisuSecondSingle – #TheeThalapathy 🔥THE BOSS is all set to arrive on Dec 4th at 4PM 💥#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @Lyricist_Vivek […]

Categories
உலக செய்திகள்

பிரபல பாடகரின் ட்விட்டர் கணக்கை முடக்கிய மஸ்க்…. என்ன காரணம்?….

அமெரிக்க நாட்டின் பிரபல ராப் இசை பாடகரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் பிரபலமான ராப் இசை பாடகரான கன்யே வெஸ்ட் தன் ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டதாக கூறப்பட்டிருக்கிறது. இதனால் அவரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டிருப்பதாக எலான் மாஸ்க் தகவல் வெளியிட்டுள்ளார். கன்யே வெஸ்ட் பல தடவை கிராமிய விருதுகளை பெற்றிருக்கிறார். ELON FIX KANYE PLEASE — Alex 🃏🏝 (@TheeAleexJ) December 2, 2022 இவருக்கு […]

Categories
மாநில செய்திகள்

தாழ்த்தப்பட்ட மாணவர்களை டார்ச்சர் செய்த தலைமை ஆசிரியை…. நடந்தது என்ன?…. ஈரோட்டில் அரங்கேறிய கொடூரம்…..!!!!

ஈரோடு பாலக்கரையில் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக கீதாராணி என்பவர் உள்ளார். இந்நிலையில் தலைமை ஆசிரியை மாணவர்களிடம் சாதிபாகுபாடு பார்த்து இருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அதாவது அப்பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் தாழ்த்தப்பட்ட மாணவ- மாணவிகள் 6 பேரை கழிவறையை சுத்தம் செய்ய கூறியிருக்கிறார். இதனால்  அவர்களும் வேறு வழியின்றி அதனை செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து வெளியில் சொல்ல முடியாமல் மாணவ-மாணவிகள் அஞ்சி தங்களுக்குள்ளேயே வைத்து இருக்கின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

மலேரியா நோய்க்கு குட் பாய் சொல்ற நேரம் வந்துட்டு?…. இந்திய மருத்துவக் கழகம் வெளியிட்ட தகவல்….!!!!!

இந்தியாவில் புதியதாக கண்டறிப்பட்டிருக்கும் மலேரியா நோய் தடுப்பு மருந்து, மேற்கு வங்கத்தில் சோதனை செய்யப்பட இருப்பதாக இந்திய மருத்துவக் கழகம் சார்பாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மலேரியா ஒரு தொற்று நோய் ஆகும். இவை பொதுவாக அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சுமார் 300 -500 மில்லியன் வரையிலான மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இவற்றில் 20% மக்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கின்றனர். இந்த நிலையில் தற்போது மலேரியாவுக்கு புது மருத்து […]

Categories
உலக செய்திகள்

இந்தியா தலைமை பொறுப்பை ஏற்பது வரலாற்று சிறப்புமிக்கது…. ஐ.நாவின் இந்திய தூதர்…!!!

இந்திய நாட்டிற்கு ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பு கிடைத்திருப்பது வரலாற்று சிறப்புமிக்கது என ஐக்கிய நாடுகளின் இந்தியாவிற்கான தூதர் கூறியிருக்கிறார். இந்தியா ஜி-20 நாடுகளின் தலைவராக சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது மாதந்தோறும் ஒரு நாடு ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பில் அமரும். அதன்படி இம்மாதம் இந்தியாவிற்கு தலைமை பொறுப்பு கிடைத்திருக்கிறது. இதனை தொடர்ந்து ஜி 20 மாநாடுகளின் அனைத்து நிகழ்வுகளும் இந்தியா முழுக்க இருக்கும் மாநிலங்களின் தலைநகரங்கள் மற்றும் சிறப்பு வாய்ந்த சுற்றுலா நகரில் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களிடம் “இந்த விவரங்களை” கேட்கக்கூடாது…. ஊழியர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண் விவரங்களை எக்காரணம் கொண்டும் கேட்கவோ, ஆதார் அட்டை நகலை பெறவோ கூடாது, நியாயவிலைகடைகளுக்கு உணவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. 14 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைதாரருக்கு வங்கி கணக்கு இல்லை. இதன் காரணமாக ஏற்கனவே கூட்டுறவுத்துறை சார்பாக சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அதில் வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு புதிய வங்கி கணக்கு தொடங்க வேண்டும், ஆதார் தொடர்பான தகவல்களை அனுப்ப வேண்டுமென்று நேற்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த சுற்றறிக்கைக்கு பதிலாக புதிய சுற்றறிக்கையை […]

Categories
மாநில செய்திகள்

மலையேற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவானது வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அன்று பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள். எனவே திருவிழாவை பாதுகாப்பாக கொண்டாடுவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நாளில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரும் டிச. 6ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீபத்திருவிழாவில் […]

Categories
தேசிய செய்திகள்

3 குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை…. காரணம் என்ன?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் நேற்று கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தன் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த பெண், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் மத்தூர் நகரின் ஹோலா தெருவில் நடந்துள்ளது. இது தொடர்பாக மாண்டியா காவல்துறையினர் கூறியதாவது, அகில் என்பவர் ஹோலா தெருவில் கார் மெக்கானிக்காக இருக்கிறார். இவருடைய மனைவி உஸ்னாகவுசர் (30) கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்றிரவு வீட்டில் தூக்கிட்டு  தற்கொலை செய்துகொண்டார். இதற்கு முன்பு உஸ்னாகவுசர் […]

Categories
வேலைவாய்ப்பு

டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு…. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில்… டிச.,18 கடைசி தேதி…!!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓராண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடங்கள்: 346. உதவித்தொகை: மாதம் 77,000 – 59,000. கல்வித்தகுதி: டிப்ளமோ, டிகிரி. தேர்வு: நேர்முகத்தேர்வு. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 18. மேலும், விவரங்களை http://www-mhrdnats.in/, http://boat-srp.com/ ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும்…. பக்தர்கள் இதை பயன்படுத்த தடை…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடைவிதித்துள்ளது. சமீபத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவிலின் புனிதம் மற்றும் தூய்மையைக் காக்கும் விதமாக செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்குமாறு அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் கோயில் வளாகத்தில் செல்போன்களை வைக்க பாதுகாப்பு அறையை ஏற்பாடு செய்யவும் அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2 ஆவது திருமணம் குறித்து….. உண்மை தகவல் என்ன…? மனம் திறந்த நடிகை மீனா…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இவருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த வித்தியாசாகர் என்பவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் வித்யாசாகர் நுரையீரல் தொடர்பான பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சுவாச பிரச்சனை காரணமாக போராடி வந்த தன்னுடைய கணவருக்கு மாற்று நுரையீரல் கிடைக்க போராடி வந்தார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்….. சென்னை வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் தெற்கு அந்தமான் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி புதிய காற்றழுத்த  தாழ்வு நிலை உருவாகக்கூடும் என்று அறிவித்துள்ளது. இது இதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வலுவடையக்கூடும். இதன் காரணமாக டிசம்பர் 2-ம் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களிலும், டிசம்பர் 3-ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால், தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!…. ரேஷன் கார்டுதாரர்களுக்கு வங்கி கணக்கில் ரூ. 1000 பரிசு பணம்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் நியாய விலை கடைகளின் மூலம் நடபாண்டில் பொங்கல் பரிசு தொகுப்பு ரூபாய் 1000 வழங்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த முறை ரொக்க பணத்திற்கு பதிலாக 21 பொருட்கள் அடங்கிய மளிகை சாமான்கள் மட்டும் தான் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட்டது. கடந்த 19-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது பொங்கல் பரிசு தொகையாக ரூபாய் 1000 வழங்குவதற்கும், இலவசமாக வழங்கப்படும் வேட்டி மற்றும் சேலையின் நிறம் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு கூடுதல் மானியம்…. விண்ணப்பிப்பது எப்படி….? முழு விபரம் இதோ….!!!!!

தமிழகத்தில் விவசாயிகளுக்காக வேளாண் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு தனியாக சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. அதன்படி சிறு, குறு, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 20 சதவீதம் கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது. இதற்காக 2022-23 ஆம் ஆண்டு நிதி ஆண்டில் கூடுதலாக 5 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பதற்கு விவசாயிகளுக்கு 50 ஆயிரம் மானியத்துடன் […]

Categories
இந்திய சினிமா சினிமா

 பிரபல பாடகர் ஜூபின் நாட்டியல்க்கு பலத்த காயம்…. மருத்துவமனையில் அனுமதி…!!!

பிரபல பாடகர் ஜூபின் நாட்டியல் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படிக்கட்டில் இருந்து தவறி விழுந்ததில் அவரது கை மற்றும் விலா பகுதியில் முறிவு ஏற்பட்டது. தலையிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. வலது கையில் அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள், அந்த கையை இனி பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். ராதன் லம்பியான், லுட் கயே, ஹம்னாவா மேரே உள்ளிட்ட சூப்பர்ஹிட் பாடல்களை பாடியவர் ஜூபின் சமீபத்தில் அவர் துபாயில் ஒரு பெரிய கான்செட் நடத்தி இருந்தார். அதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

பவுன்ஸ் செக்: ஏமாற்றிய அண்ணன்… வழக்கு தொடுத்த தங்கை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!

 உத்தரகாண்ட் காஷிபூரில் பவுன்ஸ் செக் கொடுத்து ஏமாற்றிய பல்வந்த்சிங் என்பவருக்கு 4 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. தேவிபுரா பகுதியில் வசித்து வரக்கூடிய நிர்மலா என்பவரிடம், அவரது மூத்த சகோதரரான பல்வந்த்சிங் கடந்த 2018-ம் வருடம் தன் மகனின் திருமண செலவுக்காக ரூபாய்.6 லட்சம் கடன் வாங்கினார். இதையடுத்து பணத்தை திருப்பி கேட்டபோது, பல்வந்த் சிங் ரூபாய். 6 லட்சத்துக்குரிய காசோலையை நிர்மலாவிடம் கொடுத்தார். அதன்பின் அந்த காசோலையை 2019-ம் வருடம் ஆகஸ்ட் 27ம் தேதி நிர்மலா […]

Categories
உலக செய்திகள்

மனிதர்களின் மூளைக்குள் சிப் பொருத்தும் சோதனை…. எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி…!!!

மனித மூளையினுள் சிப்பை பொருத்தி கணினியுடன் உரையாட செய்வது தொடர்பான பரிசோதனை விரைவாக மேற்கொள்ளப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்திருக்கிறார். மனிதர்களின் மூளையினுள் ஒரு சிப்பை பொருத்தி, கணினியோடு சேர்ந்து நேரடியாக  உரையாடும் பரிசோதனையை விரைவாக நடத்த உள்ளதாக எலான் மஸ்க் கூறியிருக்கிறார். தற்போது குரங்குகளை வைத்து இந்த பரிசோதனை வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கிறது. மனிதர்களிடம் பரிசோதனை மேற்கொள்வது விரைவாக செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த பரிசோதனைக்கு தேவைப்படும் ஆவணங்களை சமர்ப்பித்து, அனுமதி வழங்குமாறு தங்களின் குழு அமெரிக்க கட்டுப்பாட்டாளர்களிடம் […]

Categories
Tech டெக்னாலஜி

விரைவில் மிட்-ரேஞ்ச் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்….. Samsung வெளியிட்ட சூப்பர் தகவல்…..!!!!

Samsung கூடியவிரைவில் மிட்-ரேஞ்ச் 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்த இருக்கிறது. அதற்குரிய ஆரம்பகட்ட பணிகளை Samsung துவங்கியுள்ளது. அதன் பெயர் Samsung Galaxy A14 5ஜி என கூறப்படுகிறது. அத்துடன் இதற்குரிய விபரங்கள் BIS India, NBTC மற்றும் Geekbench வலைத்தளங்களில் காணப்பட்டது. இவற்றில் இருந்து போனின் சிறப்பம்சங்கள் குறித்து தெரியவந்துள்ளது. சாம்சங்கின் இந்த ஸ்மார்ட்போனில் 5000 mAh-ன் வலுவான பேட்டரியானது கிடைக்கும். Galaxy A14 5G விரைவில் நாட்டில் அறிமுகமாகும் என லிஸ்டிங் வாயிலாக தெரியவந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: சுரங்கம் இடிந்து 7 பேர் பலி…!!!

சத்தீஸ்கர் மாநிலம் பாஸ்டர் மாவட்டத்தில் பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. சுரங்கம் இடிந்து விழுந்ததில் 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் ஆறு பேர் பெண்கள். விபத்து நடந்த இடத்தில் SDRF குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரான இந்தியா…. வெளியான தகவல்…!!!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் இந்த மாதத்திற்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா கடந்த 2021 மற்றும் 2022 ஆகிய இரு வருடங்களுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது. ஒவ்வொரு மாதமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பு ஒவ்வொரு நாட்டிற்கு வழங்கப்படும். அந்த வகையில் இந்தியாவிற்கு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இம்மாதம் மீண்டும் இந்தியாவிற்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

என்னுடைய ஓவரில்….. “அந்த சிக்ஸரை கோலியை தவிர யாராலும் அடித்திருக்க முடியாது”…. அதுதான் கிளாஸ்…. கோலியை புகழ்ந்த பாக்., பவுலர்..!!

டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான அந்த பரபரப்பான இந்திய வெற்றியின் போது அந்த 2 சிக்ஸர்களை விராட் கோலியை தவிர உலக கிரிக்கெட்டில் எந்த வீரரும் அடித்திருக்க முடியாது என ஹாரிஸ் ரவூப் நம்புகிறார். 2022 டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி. இந்த போட்டி மிகவும் சுவாரஸ்யமாக, பரபரப்பாக கடைசி […]

Categories
உலக செய்திகள்

ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கப்படுகிறதா ட்விட்டர்?…. எலான் மஸ்க் வெளியிட்ட தகவல்…!!!

ஆப்பிள் ஸ்டோரிலிருந்து ட்விட்டர் நீக்கப்படுவதாக வெளியான தகவலை தொடர்ந்து எலான் மஸ்க் அந்நிறுவனத்தின் CEO-வை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் கடந்த திங்கட்கிழமை அன்று தங்கள் ஸ்டோரில் இருந்து ட்விட்டரை நீக்க போகிறோம் என்று தெரிவித்தது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் ட்விட்டரை அதன் பயனர்கள் அணுகுவதில் சிக்கல் உண்டாகும். இது பற்றி எலான் மாஸ்க் தெரிவித்ததாவது, ஆப்பிள் அல்லது google என்று எந்த நிறுவனமாக இருந்தாலும் அவர்களின் ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டரை நீக்கினால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!… இத்தனை கோடி வியூவெர்ஸா….? யூட்யூபில் புதிய மைல் கல்லை எட்டிய “ரஞ்சிதமே”….. இது வேற லெவல் பா….!!!!!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம், குஷ்பூ, சம்யுக்தா, சங்கீதா, மீனா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!…. நீரில் மூழ்காமல் வேகமாக செல்லும் பல்லி….. உருவத்துல சின்னதா இருந்தாலும் தில்லு அதிகப்பா….!!!!

இணையதளத்தில் நாள்தோறும் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளிவருகிறது. அந்த வகையில் தற்போது இணையதளத்தில் வைரலாகும் ஒரு உயிரினத்தின் செயல் அனைவரையும் ஆச்சரியபடுத்தி உள்ளது. அதாவது நீர் நிலையின் நடுவில் உள்ள ஒரு கிளை ஒன்றில் இயேசு பல்லி அல்லது பசிலிஸ்க் பல்லி என்று அழைக்கப்படும் பல்லி ஒன்று தாவுகிறது. அதன் பிறகு தண்ணீரில் குதித்த அந்த பல்லி கரையை கடக்கும் வரை வேகமாக ஊர்ந்து தண்ணீருக்குள் மூழ்காமல் செல்கிறது. இந்த வீடியோ தற்போது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ள […]

Categories
மாநில செய்திகள்

“போதைப் பொருள் யூஸ் பண்ணணு எழுதி தா”…. மாணவனை கொடுமை செய்த ஆசிரியர்?…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்…..!!!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை சின்னநீலாங்கரை குப்பம் பகுதியில் வசித்து வருபவர் மகேஷ். இவர் சென்னை மாநகராட்சியில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது 2 மகன்கள் கொட்டிவாக்கத்திலுள்ள நெல்லைநாடார் பள்ளியில் 12ம் மற்றும் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர். எல்கேஜி முதல் இப்போது வரை இருவரும் அப்பள்ளியில் தான் படித்து வருவதாக தெரிகிறது. இதில் மகேஷின் இளையமகன் தர்ஷன் பள்ளியில் பாடம் நடத்தும்போது கொஞ்ச நேரம் மேசையில் படுத்து இருந்ததாகவும், இதனை பார்த்த ஆசிரியர் செல்லப்பாண்டியன் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி அமைச்சருக்கு பணிவிடை செய்ய போக்சோ கைதிகளை நிர்பந்தித்த சிறை அதிகாரிகள்….. விசாரணையில் பகீர்….!!!!

டெல்லியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு சிறையில் மசாஜ் உள்ளிட்ட சொகுசு வாழ்க்கைகளை திகார் ஜெயில் அதிகாரிகள் செய்து கொடுத்திருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளதோடு, அது தொடர்பான வீடியோ ஆதாரங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக் குழு நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது போக்சோ வழக்கில் கைதான 5 கைதிகளை அமைச்சருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மாநகராட்சி தேர்தல்…. காலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை…. வெளியான அறிவிப்பு….!!!!

டெல்லியில் மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் 250 வார்டுகளுக்கு நடைபெறும் நிலையில், காலை 8 மணி முதல் 5.30 மணி வரை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தேர்தலை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் சேவையானது இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காலை 6 மணி முதல் அனைத்து ரயில்களும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரபல கிரிக்கெட் வீரர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் மூன்றாவது நாள் போட்டியில் வர்ணனையாளராக இருந்த அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதால் பெர்த்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மக்களே…. பேருந்துகளில் சேவை குறைபாடு இருந்தால்…. இந்த நம்பரில் புகார் செய்யலாம்….!!!!

தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு போக்குவரத்து துறை சார்பாக பேருந்துகள் இயக்கப்பட்ட வருகின்றன. அதிலும் குறிப்பாக பண்டிகை நாட்கள் மற்றும் விசேஷங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் பயணிகளின் குறைகளையும் அரசு நிவர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் சேலம் கோட்டை அரசு பேருந்துகளில் சேவை குறைபாடுகளை 9489203900 என்ற whatsapp எண்ணில் பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படிக்கட்டில் பயணம், பயணிகளிடம் டிக்கெட் கட்டணத்திற்கு மீதி சில்லரை வழங்காமல் இழுத்தடிக்கும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#BREAKING : பிரபல கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங்கிற்கு நெஞ்சுவலி…. ரசிகர்கள் பிரார்த்தனை..!!

முன்னாள் ஆஸ்திரேலிய பேட்டிங் ஜாம்பவானும், கேப்டனுமான ரிக்கி பாண்டிங் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல ஆஸ்திரேலிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. டிசம்பர் 2 ஆம் தேதி பெர்த் ஸ்டேடியத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் வர்ணனையின் போது முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்சு சிகிச்சை பெற்று வருகிறார் என்று செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் ஆஸ்திரேலிய ஊடகங்களை மேற்கோள் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு…. டிசம்பர் 16க்குள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதே சமயம் நடந்து முடிந்த தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2a முதல் நிலை தேர்வுகள் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகளின் படி முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை ஐஐடியில் முன்னேறிய சாதியினருக்கு 83% வாய்ப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

மத்திய மற்றும் மாநில அரசுகளால் நடத்தப்படும் கல்வி, தொழில் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிகள் அனைத்தும் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் கீழ் நடைபெற வேண்டும் என்பதுதான் அரசியல் அமைப்பு சட்டமாக உள்ளது. அதன் அடிப்படையில் தான் நாடு முழுவதும் அரசு நிறுவனப் பணிகள் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்திய கல்வி நிறுவனங்களிலேயே தலைசிறந்ததாக இருக்கும் மத்திய அரசால் நடத்தப்பட்டு வரும் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி) […]

Categories
தேசிய செய்திகள்

“திருமண போட்டோ ஷூட்”…. திடீரென பாகனை தலைகீழாக தூக்கி யானை…. பகீர் கிளப்பும் வீடியோ வைரல்….!!!!!

கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புதிதாக திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதிகள் போட்டோ ஷூட் நடத்தினர். அப்போது கோவிலில் இருந்த யானையின் முன்பாக நின்று தம்பதிகள் போட்டோ ஷூட் நடத்தும்போது திடீரென யானை அருகில் இருந்த பாகனை தலைகீழாக தூக்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அனைவரும் அங்கிருந்து தலை தெரிக்க ஓடினர். அதன் பிறகு பாகனின் வேட்டியை மட்டும் யானை உருவிய நிலையில், காயமின்றி அந்த பாகன் தப்பினார். இந்நிலையில் யானையின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகமே அதிர போகுது…. டிசம்பர் 9,12,13 போராட்டம்…. இபிஎஸ் திடீர் அறிவிப்பு….!!!!

தமிழக முழுவதும் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் டிசம்பர் 9ஆம் தேதியும், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் டிசம்பர் 12ஆம் தேதியும், அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் டிசம்பர் 13ஆம் தேதியும் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று இபிஎஸ் அறிவித்துள்ளார். அதன்படி டிசம்பர் 9, 12,13 ஆகிய தேதிகளில் சொத்துவரி, விலைவாசி, பால்வினை மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் அதிமுகவினர்,இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என ஈபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். இதனால் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

இஸ்ரோ உளவு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கு முன் ஜாமீன் ரத்து….. சுப்ரீம் கோர்ட்டின் புதிய அதிரடி உத்தரவு….!!!!

இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணன் இருந்தபோது பல்வேறு விதமான ஆய்வுகளை மேற்கொண்டார். இவர் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்தார். அதன் பிறகு ஊழல், பாகிஸ்தான் நாட்டுக்கு உளவு பார்த்தது போன்ற குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டார். அதாவது கடந்த 1994-ம் ஆண்டு ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்கள் தொடர்பாக ரகசிய தகவல்களை உளவு பார்த்ததாக நம்பி நாராயணன் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பல ஆண்டுகளாக சிறையில் இருந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு…. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கத்திலும் அவர்களின் கல்விக்கு உதவுவதற்காகவும் அரசு அவ்வப்போது பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அவ்வகையில் தமிழகத்தில் உள்ள 11 ஆம் வகுப்பு அனைத்து பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கும் தமிழ் மொழி திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது. அதில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தின் அடிப்படையில் அனைத்து வினாக்களும் கேட்கப்பட்டன. இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்கள் அனைவருக்கும் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் இரண்டு வருடங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்க அதிபருக்கு கொலை மிரட்டல்”… அதிரடியாக கைது செய்யபட்ட நபர்… நீதிபதி அதிரடி உத்தரவு…!!!!!

ஜார்ஜியாவின் பார்னெஸ்வில்லியை சேர்ந்த 56 வயதான ட்ராவல்ஸ் பால் என்பவருக்கு அமெரிக்க அதிபரை மிரட்டிய குற்றத்திற்காக  33 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும் இவர் உள்ளூர் நீதிபதிகள், சட்ட அமலாக்கத்திற்கு எதிராக பல்வேறு கொலை மிரட்டல்கள் மற்றும் ஒரு வித வெள்ளை தாள் போன்ற பொருள் அடங்கிய பல அச்சுறுத்தல் கடிதம் போன்றவற்றை அனுப்பியுள்ளார். இந்நிலையில் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, இவர் மற்றொரு நபரின் பெயரை பயன்படுத்தி இது போன்ற செயல்களில் […]

Categories
உலக செய்திகள்

” ஊழல் செய்து சம்பாதித்தது அல்ல”..? தென்னாபிரிக்க அதிபர் பதவிக்கு நெருக்கடி…!!!!!

தென் ஆப்பிரிக்காவின் அதிபராக பணியாற்றி வருபவர் சிரில் ரமபோசா (70). இவர் தன்னுடைய பார்ம் கேட் என்னும் பண்ணை வீட்டில் இருந்து சுமார் 4 மில்லியன் டாலர் திருடு போனதை தன்னுடைய பதவியை பயன்படுத்தி மறைத்துள்ளதாக இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊழல் குறித்து விசாரணை நடத்திய  சுயாதீன குழு  தற்போது அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை தற்போது நாடாளுமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  நாடாளுமன்றம் இதனை ஆய்வு செய்து அதிபர் சிரில் மீது அடுத்த வாரம் ‘இம்பீச்மென்ட்’ […]

Categories

Tech |