Categories
தேசிய செய்திகள்

குஜராத் சட்டமன்ற தேர்தல்….. வாக்களிப்பார்களா அனைவரும்?…. பிரதமர் மோடி வேண்டுகோள்….!!!!!

பிரதமர் மோடி மக்களுக்கு கோரிக்கை ஒன்றை  வைத்துள்ளார். குஜராத் மாநிலம் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகளை கொண்டுள்ளது. இங்கு முதற்கட்டமாக கடந்த 1-ஆம்  தேதி 89 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. அதேபோல் தற்போது மீதமுள்ள 92 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி ஆமதாபாத்தில் உள்ள  நிஷான் பள்ளியில் தனது வாக்கை  அளித்தார். மேலும் இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்  மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அதில்  “நமது மாநிலத்தில் 2-வது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பாபா படத்துல மட்டும் தான் அது இருக்கா”…. அப்ப மத்ததெல்லாம் புத்தர் படங்களா….? ரஜினிக்கு பாமக தலைவர் ஆதரவு….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ரஜினி. இவர் தற்போது ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2002-ம் ஆண்டு நடிகர் ரஜினி தயாரித்து நடித்த பாபா திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்க, மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் பாபா திரைப்படத்தை நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் புதுப்பித்து திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். அதன் பிறகு இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் புதிதாக டப்பிங் பேசியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

அனல் மின் நிலையத்தில் இவ்வளவு பிரச்சனையா?…. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அதிரடி உத்தரவால் பெரும் பரபரப்பு….!!!!!

அனல் மின் நிலையங்களின்  மூலம்  ஏற்படும் பிரச்சனை  குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. புதுடெல்லியில் அமைந்துள்ள அனல் மில் நிலையங்களில் இருந்து  சாம்பல் கொண்டு செல்வதை கண்காணிப்பதற்காக பல சட்ட விதிமுறைகள் உள்ளது. ஆனால் விதிமுறைகளை அதிகாரிகள் பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இது குறித்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரணை நடத்தி வருகிறது. அதேபோல் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய பிரதேசம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“புரட்சி வீட்டிலிருந்து துவங்குகிறது”…. கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “ரகு தாத்தா”…. வெளியான புகைப்படங்கள்….!!!!

தமிழில் “இது என்ன மாயம்” படத்தின் வாயிலாக திரை உலகில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் பின், நடிகையர் திலகம் படத்துக்காக தேசிய விருதை பெற்றார். இப்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் “மாமன்னன்” திரைப்படத்தில் அவர் நடித்து முடித்து உள்ளார். அத்துடன் தெலுங்கில் நானிக்கு ஜோடியாக “தசரா” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிக்கும் “ரகு தாத்தா” என்ற திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சுமன்குமார் எழுதி இயக்கும் இந்த படத்திற்கு ஷான் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது… கார்-லாரி நேருக்கு நேர் மோதி… திருப்பூரில் நடந்த துயரச் சம்பவம்..!!!!

கார்-லாரி நேருக்கு நேர் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே இருக்கும் காட்டுப்புத்தூரை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரின் உறவினர் வீட்டு திருமணம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக விஸ்வநாதன் தனது உறவினர் மணி, உமாவதி, ரமணன் உள்ளிட்டோரை தனது காரில் அழைத்துக் கொண்டு நேற்று காலை வீட்டிலிருந்து புறப்பட்டார்கள். கார் காங்கயம்-சென்னிமலை சாலை அருகே சென்ற போது காலை திடீரென 6 மணி அளவில் எதிரே வந்த […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!…. மாணவர்களுக்கு இனி daily ஃப்ரீ பஸ் தான்….. அசத்திய புதுச்சேரி அரசு….!!!!

 மீண்டும் ஏழை, எளிய மாணவர்களுக்காக இலவச பேருந்து திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு மற்ற மாநிலங்களைப் போல  மாணவர்களுக்கு இலவச பேருந்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.    இந்த திட்டத்தின் மூலம் தினம்தோறும் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயனடைந்தனர். இந்த நிலையில் கடந்த 2  ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட  கொரோனா தொற்றின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இதனால்  பேருந்துகளும் குறைவாகவே இயக்கப்பட்டது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

செம கெத்து!!!….. சோப்தாராக மாறி மாஸ் காட்டும் மதுரை பொண்ணு…. குவிந்து வரும் வாழ்த்துக்கள்….!!!!

சோப்தாராக  நியமிக்கப்பட்டுள்ள பெண்ணிற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். உயர்நிதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகள் தங்களது தனி அறையில் இருந்து நீதிமன்றம் செல்லும் வரை அவர்களுக்கு முன்பாக  சோப்தார்  என்பவர் செல்வது வழக்கம். இவர் வெள்ளை நிற சீருடை மற்றும் சிவப்பு நிற தலைப்பாகை அணிந்தும், கையில் செங்கோல் ஏந்திய படியும் இருப்பார்கள். இவர்கள்  தேவையான சட்ட புத்தகங்கள், வழக்கு தொடர்பான கோப்புகள் என நீதிபதிகளின் அன்றாட பணிகளை செய்கின்றனர். இந்த நிலையில் நமது சென்னையில் அமைந்துள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ப்ப்ப்பா”….. என்னம்மா தோசை சுடுறாரு….. ஒரு தோசை பார்சல் ப்ளீஸ்….. ஐஸ்வர்யா ராஜேஷை ஜாலியாக கலாய்க்கும் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். அதன்பிறகு தான் நடித்த பல திரைப் படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். இவர் தற்போது டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி, மோகன்தாஸ், தீயவர் குலை நடுங்க, தி கிரேட் இந்தியன் கிச்சன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் படப்பிடிப்பு தளத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“காவலர் தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு”…. சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

காவலர் தேர்வுக்கான விடை குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நமது தமிழ்நாட்டில் உள்ள சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பு வீரர் என காலியாக இருந்த 3, 552 இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.  இதற்கான தேர்வு கடந்த மாதம் 27- ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 295 தேர்வு மையங்கள் மூலம் 2 லட்சத்து 99 ஆயிரத்து 820 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!… 10 லட்சம் வியூவெர்ஸா?…. கவனம் ஈர்க்கும் ஶ்ரீகாந்த் பட பாடல்….!!!!

அறிமுக டிரைக்டர் பிரகாஷ் ராகவதாஸ் இயக்கத்தில் ஶ்ரீகாந்த் மற்றும் வெற்றி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் “தீங்கிரை”. இந்த படத்தில் கதாநாயகிகளாக  அபூர்வாராவ் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் நடிக்கின்றனர். சஹானா ஸ்டுடியோஸ் மற்றும் டிடபுள்யூடி மீடியா தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹரிஷ் அர்ஜுன் பின்னணி இசை அமைத்துள்ளார். சைக்கோ கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. அத்துடன் இப்படத்தில் சித் ஸ்ரீராம் பாடிய “அவிழாத […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெ., சமாதியில் ஓபிஎஸ், இபிஎஸ் எடுத்த சபதம்…. என்ன தெரியுமா…? வெளியான தகவல்…!!!

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை மெரினாவில் அமைந்திருக்கும் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் நினைவிடத்திற்க்கு ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியே வந்து மரியாதை செலுத்த உள்ளனர். இவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் தனித்தனியாக சென்று ஜெ., நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கு ஹேப்பி நியூஸ்… உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்… ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

விளையாட்டு வீரர்கள் இணையவழியில் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை, பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம், வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

கனரா வங்கி வாடிக்கையாளர்களே!… ATM, POS பணப் பரிவத்தனைகளின் உச்சவரம்பு அதிகரிப்பு…. வெளியான அறிவிப்பு….!!!!

இந்தியாவின் பொதுத் துறை வங்கியான கனரா வங்கி தன் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அடிப்படையில் பல வகையான புது அப்டேட்டுகளை அறிமுகப்படுத்தி வருகிறது.  அதன்படி தற்போது வாடிக்கையாளர்கள் தினசரி மேற்கொள்ளும் ATM, POS போன்ற பணப் பரிவத்தனைகளின் உச்சவரம்பை அதிகரித்துள்ளதாக இந்நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பில் ஏடிஎம்களில் Classic டெபிட் கார்டுகளை பயன்படுத்தி தினசரி ரூ.40,000 வரை எடுக்கலாம் என்று உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இப்போது இதை ரூபாய்.75,000 ஆக அதிகரித்துள்ளது. இதேபோன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“முகம் முழுக்க அசிங்கம், கெட்ட வார்த்தைகள்”…. அதைக் கேட்டாலே மனம் வலிக்கிறது…. நடிகர் பார்த்திபன் திடீர் வேதனை….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், இயக்குனராகவும் இருப்பவர் பார்த்திபன். இவர் தற்போது டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அரிசியில் பொறுக்கி கல் ஒதுக்கி விட்டு சமைப்போம். அப்படி சமூக வலைதளங்களிலும் சில (முகம் முழுக்க அசிங்கத்தை முகமூடியாய் அணிந்தபடி) அருவருப்பான வார்த்தைகளை உபயோகப்படுத்தும் போது ஒதுங்கி விடுகிறேன். அவர்களுக்கு பிடிக்கவில்லை என்ற கருத்தை நான் வரவேற்கிறேன். இருப்பினும் அதைக் கெட்ட வார்த்தைகளால் சொல்லும் போது தான் மனம் வலிக்கிறது. என் மனம் கூசுகிறது என்று பதிவிட்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

உலக கோப்பை கால்பந்து போட்டி…. காலிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ் அணி…. கொண்டாடிய அதிபர் மேக்ரோன்…!!!

உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடந்து வரும் நிலையில் பிரான்ஸ் அணி காலிறுதிக்குள் முன்னேறியதை அந்நாட்டு அதிபர் மேக்ரோன் கொண்டாடியிருக்கிறார். பிரான்ஸ் அணியானது உலககோப்பை கால்பந்து போட்டியின் கால் இறுதிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. பிரான்ஸ் அணியின் ஒலிவியர் ஜிரூட் 44-ஆம் நிமிடத்தில் கோல் அடித்தார். அவர் கணக்கை தொடங்கிய பிறகு, விறுவிறுப்பாக மைதானத்தில் சுற்றி வந்த எம்பாப்வே 74 மற்றும் 90-ஆம் நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினார். En quarts ! pic.twitter.com/8GS5TTFrep — Emmanuel Macron (@EmmanuelMacron) […]

Categories
தேசிய செய்திகள்

இரட்டை பெண்களை திருமணம் செய்த மணமகன் மீது எப்ஐஆர்!…. எதற்காக தெரியுமா?….!!!!

மராட்டியம் சோலாபூர் மாவட்டம் மல்ஷிரஸ் பகுதியில் வசித்து வருபவர்கள் இரட்டை சகோதரிகள் பிங்கி மற்றும் ரிங்கி. 36 வயதான இவர்கள் இரண்டு பேரும் இரட்டை சகோதரிகள் ஆவர். இந்த சகோதரிகள் ஐடி துறையில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகின்றனர். இரட்டை சகோதரிகளான இரண்டு பேரும் சிறு வயது முதலே ஒன்றாக வாழ்ந்து வருவதால் இறப்புவரை சேர்ந்தே வாழவேண்டும் என முடிவுசெய்துள்ளனர். சென்ற சில நாட்களுக்கு முன்பு பிங்கி, ரிங்கி சகோதரிகளின் தந்தை இறந்துவிட்டார். அத்துடன் சகோதரிகளின் தாயாருக்கும் உடல்நலக் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்… அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி..!!!

தூத்துக்குடியில் புதிய துணை மின் நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி உபகோட்டம் படுக்கப்பத்து கிராமத்தில் துணை மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று அடிக்கல் நாட்டினார். இதன்பின் அவர் கூறியுள்ளதாவது, புதியதாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு முதல்வர் இலவச மின்சாரம் வழங்கி இருக்கின்றார். மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. இதன் அடிப்படையிலேயே […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

“கலவரத்தை தூண்டும் பேச்சு”…. பாஜகவை சேர்ந்த சூர்யா பட நடிகர் மீது போலீசார் வழக்குப்பதிவு…. பரபரப்பு….!!!!!!

பாலிவுட் மற்றும் டோலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பரேஷ் ராவல். இவர் தமிழில் நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் பாஜக கட்சியின் பிரமுகராக இருக்கும் நிலையில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பரேஷ் ராவல் பிரச்சாரத்தின் போது வாக்காளிகள் குறித்து பேசியது தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இவர் மீது மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவின் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு…. 2000 மக்கள் வெளியேற்றம்…!!!

இந்தோனேசிய நாட்டில் மிகப்பெரிய எரிமலை திடீரென்று வெடித்து சிதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் இருக்கும் லுமாஜாங் என்ற நகரில் செம்மேரு  என்ற 12000 அடிகள் உயரமுடைய மிகவும் பெரிதான எரிமலை அமைந்திருக்கிறது. இந்நிலையில் பலத்த மழையால் அந்த எரிமலையின் குவி மாடம் சாய்ந்தது. அதன் பிறகு, அதிலிருந்து நெருப்பு குழம்பு வெளியேறியது. சுமார் 5 ஆயிரம் அடி உயரத்திற்கு சாம்பல் புகைகள் காணப்பட்டது. அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் சாம்பல் பரவியதால், […]

Categories
இந்திய சினிமா சினிமா

“பேட் டச்”…. ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் என்னிடம் ஒருவர்…. பகீர் கிளப்பிய பொன்னியின் செல்வன் பூங்குழலி….!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா  லட்சுமி. இவர் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்த பூங்குழலி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடிப்பில் தற்போது கட்டாகுஸ்தி என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் தான் சந்தித்த மோசமான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, சிறுவயதில் குருவாயூர் சென்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இளம்பெண்களை மிரட்டி பாலியல் தொழில்… எதிர்த்து கேள்வி கேட்கும்… கவனம் ஈர்க்கும் பகாசுரன் ட்ரெய்லர்..!!!

செல்வராகவன் நடிப்பில் உருவாகியிருக்கும் பகாசூரன் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. மோகன்ஜி இயக்கத்தில் இயக்குனர் செல்வராகவன் மற்றும் நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படம் பகாசூரன். இத்திரைப்படத்தில் ராதாரவியும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க மோகன் ஜி-யின் ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. அண்மையில் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி வைரலான நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கின்றது. ட்ரைலரில் இளம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“எழுந்து ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியல”…. பயமாதான் இருந்துச்சு…. நோயினால் நடிகை சமந்தா உருகமான பேட்டி….!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் யசோதா திரைப்படம் ரிலீஸ் ஆகிய நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது மயோசிடிஸ் எனும் அரியவகை தசை அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் தற்போது சமந்தா வீட்டில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வரும் நிலையில் தென்கொரியாவுக்கு முயற்சி செய்து செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை சமந்தா தன்னுடைய உடல் நலம் குறித்து பேட்டியளித்துள்ளார். அவர் பேசியதாவது, நான் எத்தனையோ போராட்டங்களில் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் நடிக்கும் “துணிவு” படத்தின் முதல் பாடல் குறித்து…. படக்குழு வெளியிட்ட தகவல்…. குஷியில் ரசிகர்கள்….!!!!

தற்போது நடிகர் அஜித் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் “துணிவு” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்தின் தோற்ற போஸ்டர் அண்மையில் வெளியாகி வைரலானது. இப்படம் வங்கி கொள்ளையை மையமாக கொண்டு தயாராவதாக முன்பே கூறப்பட்டது. இத்திரைபடத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் போன்றோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். The Wait is over! 💥 #ChillaChilla is coming to rule your Playlist 😉 from December 09#ChillaChillaFromDec9 […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா!!…. 3 மாதம் விண்ணில் என்ன செய்தார்கள்…? அசத்திய சீன விஞ்ஞானிகள்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

சீனா தனது நாட்டில் தனக்கென தனியாக ஒரு விண்வெளி  நிலையத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. அந்த வகையில் தியான்ஹே என்ற விண்வெளி நிலையத்தை கட்ட முடிவு செய்து இந்த வருட இறுதிக்குள் அதன் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளது. அப்படி கட்டுமான பணிகள் முடிவடையும் பட்சத்தில் சொந்தமாக விண்வெளி நிலையம் வைத்திருக்கும் ஒரே நாடாக சீனா இருக்கும். கடந்த ஜூன் 5-ம் தேதி ஷென்சோ-14 விண்கலத்தில் சீனா 3  வீரர்களை விண்வெளிக்கு  அனுப்பியதன் நோக்கம் விண்வெளி நிலையத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி 67 படத்திற்கு ரெடியாகும் விஜய்… வெளியான பல சுடசுட தகவல்கள்…!!!!

தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க விஜய் தயாராகி வருகின்றார். தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களில் […]

Categories
தேசிய செய்திகள்

யாரும் எதிர்பா்க்கலல்ல…! 10,000 No 20,000 பணிநீக்கம்…. அதிர்ச்சியளிக்கும் அமேசான்…..!!!

அமேசான் பெரும் பணிநீக்கத்திற்கு தயாராகி வருகிறது. 10,000 ஊழியர்கள் வரை பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 20,000ஆக இருக்கலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. பணிநீக்கம் அனைத்து தரவரிசை ஊழியர்கள் மீதும் இருக்கும் என்று ‘கம்ப்யூட்டர் வேர்ல்ட்’ இணையதளம் தெரிவித்துள்ளது. பணவீக்கம் மற்றும் சந்தையில் நிலவும் மந்தநிலையால், செலவுகளை குறைக்கும் வகையில் இந்த முடிவை எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்ற சில மாதங்களில் டுவிட்டர், மெட்டா ஆகிய நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை […]

Categories
சினிமா

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் 2 போட்டியாளர்கள் இவங்க தான்?…. ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 55 நாட்களைக் கடந்து 13 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கடந்த சீசன் களை ஒப்பிடுகையில் இந்த சீசனில் சண்டை சச்சரவுகள் சற்று அதிகமாகவே உள்ளது. இருந்தாலும் போட்டியாளர்கள் டாஸ்க் கொடுக்கப்பட்டால் அதில் கவனம் செலுத்துவதில்லை என கமல் கடுமையாக விமர்சித்த நிலையில் இந்த வாரம் ஓரளவு போட்டி விறுவிறுப்பாக சென்றது. இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை குயின்சி வீட்டை […]

Categories
தேசிய செய்திகள்

பட்டப்பகலில் பயங்கரம்!…. கை, மார்பகம் உட்பட பெண்ணை சரமாரியாக வெட்டிய நபர்…. நொடியில் பறிபோன உயிர்…. பரபரப்பு….!!!!

பீகார் பாகல்பூர் பிர்பைண்டியை சேர்ந்த அசோக்யாதவ் என்பவரின் மனைவி நீலம் தேவி(40). இந்த தம்பதியினர் மளிகை கடை வைத்து நடத்தி வந்தனர். இவர்கள் அதே ஊரைச் சேர்ந்த ஷகீல் அகமது என்பவரிடம் கடன் வாங்கியிருந்தனர். ஒரு மாதத்துக்கு முன்னதாக பணத்தை திருப்பி கொடுப்பது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நீலம் தேவி தன் மகனுடன் பக்கத்திலுள்ள சந்தையில் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது அங்கு ஷகீல் தன் சகோதரர் முகமது ஜூதினுடன் வந்துள்ளார். அங்கு […]

Categories
உலக செய்திகள்

நேபாள நாடாளுமன்ற தேர்தல்… மீண்டும் பிரதமராவாரா ஷெர் பகதூர் தூபா…??

நேபாளத்தில் கடந்த 20-ஆம் தேதி  நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைக்கு வாக்குபதிவு நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு 165 உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமாகவும், 110 பேர் விகிதாச்சார தேர்தல்  மூலமாகவும் தேர்வு செய்யப்படுகின்றனர்.  இந்நிலையில் தேர்தலில் பதிவான ஓட்டுகள் 2 வாரங்களுக்கும் மேலாக எண்ணப்பட்டு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை 163 தொகுதிகளின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வாக்கு எண்ணிக்கை தொடர்கிறது. இந்நிலையில் 85 இடங்களை கைப்பற்றி  […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு முக்கிய அறிவிப்பு…. தேர்வு மையம் திடீர் மாற்றம்…. உடனே பாருங்க….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் ஒவ்வொரு தேர்வுக்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. அவ்வகையில் கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர் மற்றும் தொழில், வர்த்தகத்துறை மற்றும் பண்டகக்காப்பாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 3 தேர்வு நடத்தப்பட உள்ளது. நடப்பு ஆண்டு 15 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நாளை இந்த மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வருடம் தோறும் கார்த்திகை தீபத் திருவிழா விமர்சையாக நடைபெறும் நிலையில் இந்த வருடத்திற்கான தீபத்திருவிழா கடந்த நவம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் டிசம்பர் 6ஆம் தேதி ஆன நாளை மலை  உச்சியில் தீபம் ஏற்றப்படும். இன்றைய தினம் தங்களின் வீடுகளில் விளக்கு ஏற்றி மக்கள் அனைவரும் வழிபடுவார்கள். இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 6ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

குஜராத் தேர்தல்: வெற்றி யாருக்கு…? TV9 கணிப்பு…!!!

குஜராத் சட்டமன்ற தேர்தலின் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று 93 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு முடிவடைந்தது. மொத்தம் மாலை 5 மணி வரை 56.68% வாக்குகள் பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாஜக, காங்கிரசுடன் இம்முறை ஆம் ஆத்மியும் இணைந்துள்ளதால் முடிவுகள் மிகவும் சுவராசியமாக இருக்கும். இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளின் படி, அங்கு பாஜக 117-40, ஆம் ஆத்மி 6 – 13, காங்கிரஸ் 6- 13தொகுதிகளை கைப்பற்றும் என டைம்ஸ் ஆஃப் இந்தியா […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு… கூட்டுறவு துறை செயலாளர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!!!

ரேஷன் கார்டு தாரர்களுக்கு கூட்டுறவு துறை செயலாளர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது ரேஷன் கார்டுடன் வங்கி கணக்கு எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு வெளியிட்ட உத்தரவின் பேரில் ரேஷன் கார்டுடன் வங்கி கணக்கு எண்ணை இணைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கணக்கு எடுக்கப்பட்டபோது 14, 86,000 ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லாதது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வங்கி கணக்கு இல்லாத குடும்ப அட்டைதாரர்கள் அருகில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வர்களே…. மெயின் தேர்வு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்வது எப்படி?…. இதோ முழு விவரம்….!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில் குரூப் 2, குரூப் 2ஏ பதவிகளுக்கான நேர்காணல் மற்றும் நேர்காணல் அல்லாத பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் கடந்த மே மாதம் தேர்வுகள் நடத்தப்பட்டு நவம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதன்மை தேர்வுகள் […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தை மிரட்ட வரும் ‘மாண்டஸ்’ புயல்….!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் கடலில் 2 நாட்கள் நிலை கொண்டு தமிழகத்துக்கு மிக கனமழையை கொடுக்க உள்ளது. அதன்படி, டிச.8ல் 13 மாவட்டங்களில் மிக அதிகனமழையும், 9ஆம் தேதி 10 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று தெரிவித்துள்ளது. மேலும் பலத்த சூறாவளி எச்சரிக்கை இன்று முதல் 7ம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திருமணமான 2 வாரத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை… காரணம் என்ன…? பெரும் சோகம்…!!!!!

திருமணமான இரண்டு வாரத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த கோபால்(22) என்பவர் கட்டிடங்களுக்கு சென்டரிங்  செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவர் வினோதினி(25) என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் கடந்த 15-ஆம் தேதி இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில்  இருவரும் திருப்பூர் சந்திராபுரம் முதல் வீதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து  கோபாலின் பெற்றோரிடம் வினோதினி பேசாமல் இருந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வாடகை காரில் சென்ற பெண்… டிரைவரை கைது செய்த போலீசார்… நடந்தது என்ன…?

திருப்பூர் மாவட்டத்திலுள்ள ராயபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அழகு கலை பயிற்சி நிறுவனத்தில் படித்து வருகின்றார். அந்தப் பெண் அழகு கலை பயிற்சிக்கு செல்வதற்காக ஆன்லைன் மூலமாக வாடகை கார் முன்பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்தில் கார் வீட்டுக்கு வந்தவுடன் அந்த காரில் ஏறி அந்த பெண் புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் கார் சிறிது தூரம் சென்றதும் டிரைவர் அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது  நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் எனவும், இதே போல் உடை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“குடிநீர் குழாயை சீக்கிரம் சீரமைங்க”… காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்… போலீஸ் பேச்சுவார்த்தை…!!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் பெரிய நாகபூண்டி என்னும் கிராமம் கிராமத்தில் பிரதான சாலையின் இருபுறமும் மழைநீர் கால்வாய் அமைப்பதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அப்போது வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் உடைந்ததால் மக்கள் குடிநீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்ட பின்பும் இந்த குடிநீர் குழாய் சரி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வந்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புரூஸ் லீ வாழ்க்கை வரலாறு படம்…. எதிர்பார்ப்புடன் ரசிகாஸ்..!!!!

புரூஸ் லீ-யின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குங்பூ கலையில் ஜாம்பவானாக திகழ்ந்த புரூஸ் லீ-யின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படங்களும் ஆவணப் படங்களும் ஏற்கனவே வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தற்போது அவரின் வாழ்க்கையை வைத்து மற்றொரு திரைப்படம் உருவாக இருக்கின்றது. இத்திரைப்படத்தை ஹாலிவுட் இயக்குனர் ஆங் லீ இயக்க இருக்கின்றார். இவர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் விருதுகள் பெற்றிருக்கின்றது. இந்நிலையில் இவர் புரூஸ்லீயின் வாழ்க்கை கதையை இயக்குவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை […]

Categories
மாநில செய்திகள்

10 சதவீத இட ஒதுக்கீடு… காங்கிரசை தொடர்ந்து தி.மு.க… உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்…!!!!!!

கடந்த 2019-ஆம்  வருடம் அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின்படி பட்டியலினத்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை தவிர பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு முற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் விதமாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த நவம்பர் 7-ஆம் தேதி இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை – ஆட்சியர் மறுப்பு..!!

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாக தகவல் பரவிய நிலையில் அதனை மறுத்துள்ளார் ஆட்சியர்.. திருவண்ணாமலை மகா தீபத்தை ஒட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மேல்மலையனூர், அவலூர்பேட்டை, மேல் பாப்பம்பாடி, ஆலம்பூண்டியில் அரசு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், நாளை விடுமுறை விடும் பள்ளிகளுக்கு வரும் சனிக்கிழமை (10.12.2022) பள்ளிகள் செயல்படும் என தகவல் வெளியானது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாக பரவிய தகவலை அம்மாவட்ட ஆட்சியர் அதனை மறுத்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

குஜராத் தேர்தல்: பாஜகவைவிட ஆம் ஆத்மிக்கே அதிக இடம்…. கருத்துக் கணிப்பில் தகவல்…!!!

குஜராத் சட்டமன்ற தேர்தலின் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று 93 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு முடிவடைந்தது. மொத்தம் மாலை 5 மணி வரை 56.68% வாக்குகள் பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாஜக, காங்கிரசுடன் இம்முறை ஆம் ஆத்மியும் இணைந்துள்ளதால் முடிவுகள் மிகவும் சுவராசியமாக இருக்கும். இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளின் படி, அங்கு பாஜக 117-40, ஆம் ஆத்மி 6 – 13, காங்கிரஸ் 6- 13தொகுதிகளை கைப்பற்றும் என டைம்ஸ் ஆஃப் இந்தியா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறபட்டுள்ளதவது, தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. வருகிற 6-ம் தேதி மாலை இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து தென் வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும். பின் டிசம்பர் 8-ம் தேதி காலை மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து வட தமிழகம், புதுவை மற்றும் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

LIC யின் குழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்…. என்னனு தெரிஞ்சுகிட்டு உடனே ஜாயின் பண்ணுங்க…!!!

இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனம் எல்ஐசி. இந்திய அரசின் கீழ் இந்த நிறுவனத்தின் திட்டங்களில் கிராமப்புறம் மற்றும் நகற்புறத்தை சேர்ந்த மக்கள் என பல தரப்பினரும் முதலீடு செய்து வருகின்றனர். எல்ஐசி நிறுவனம் பாலிசிதாரர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் எல்.ஐ.சி புதிய சில்ட்ரன்ஸ் மணி பேக் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் 12 வயது குழந்தைகள் வரை இணையலாம். இந்த திட்டத்தின் முதிர்வு வயது 25. இதன் குறைந்தபட்ச காப்பீட்டு தொகை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ராகிங் விவகாரம்” தானாக முன்வந்து போலீசில் சரணைடைந்த முக்கிய குற்றவாளி…. வெளியான தகவல்….!!!!

அசாமில் திப்ரூகார் பல்கலைகழகத்தின் விடுதியில் தங்கி எம்காம் பயின்று வந்த மாணவர் ஆனந்த் சர்மா சென்ற 27-ஆம் தேதி விடுதியின் 2வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதையடுத்து சிகிச்சைக்கு பிறகு ஆனந்தின் உடல்நிலை தேறியது. இது தொடர்பாக 5 பேர் மீது ஆனந்தின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.  அவர்களில் நிரஞ்சன் தாக்குர் என்ற குற்றவாளியை காவல்துறையினர் முதலாவதாக கைது செய்தனர். இது தவிர்த்து 3 நபர்களை பிடித்து விசாரித்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

மின்வெட்டு பிரச்சனை!…. 4 மணி நேரத்தில் 4 குழந்தைகள் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் 4 மணி நேரம் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக 4 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என மாநில சுகாதாரத் துறை மந்திரி அறிவித்துள்ளார். அதாவது, சத்தீஸ்கரிலுள்ள அம்பிகாபூர் மருத்துவ கல்லூரியில் நேற்றிரவு 4 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக “சிறப்பு பிறந்த குழந்தை பிரிவில்” இருந்த 4 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து இதுபற்றி விசாரிக்க விசாரணைக் குழுவை அமைக்குமாறு சுகாதாரத்துறைக்கு மாநில சுகாதாரத்துறை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

#Thunivu : டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகிறது ‘சில்லா சில்லா’ பாடல்….. அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்.!!

நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு படத்திலிருந்து ‘சில்லா சில்லா’ என்ற பாடல் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகிறது.. ஹெச் வினோத் -அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட  படங்கள் வெளியானதை தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் கிட்டத்தட்ட  முடிந்துள்ளது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்ராசக்க…! 24 மணி நேரத்தில் 1 கோடி வியூஸ் கடந்த “தீ தளபதி”….!!

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

JUSTIN: “துணிவு” செம மாஸ் அறிவிப்பு…!!!!

அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ‘துணிவு’ படத்தின் முதல் பாடலான ‘சில்லா சில்லா’ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாடல் டிசம்பர் 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்ரான் இசையில், இந்த பாடலை அனிருத் பாடியிருப்பதாக கூறப்படுகிறது. படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
ஆட்டோ மொபைல்

ராயல் என்ஃபீல்டு பைக் பிரியர்களுக்கு இனி செம ஹேப்பி தான்…. திறந்தாச்சு முதல் அனுபவ பயிற்சி மையம்….!!!!

ஹிந்துஸ்தான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி வளாகத்தில் ராயல் என்ஃபீல்டு அனுபவ பயிற்சி மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த அனுபவ பயிற்சி மையத்தை ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரி பி. கோவிந்தராஜன் திறந்து வைத்தார். இந்த அனுபவ மையத்தை திறப்பதற்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனம், எச்ஐடிஎஸ் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி ஊழியர்கள், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி சேனல் பார்ட்னர்களின் ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அதோடு இந்த பயிற்சி மையத்தின் மூலமாக […]

Categories

Tech |