Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… நடிகர் விஜயுடன் நடிகை பிரியா ஆனந்த் இணைகிறாரா….? தளபதி 67 லேட்டஸ்ட் அப்டேட்டால் ஆவலில் ரசிகாஸ்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய் தற்போது  வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை அண்மையில் தொடங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் ஒரு புகைப்படம் கூட இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலி..! சென்னைக்கு பேருந்து சேவை ரத்து…. புதுச்சேரி அரசு அறிவிப்பு..!!

புதுச்சேரியில் இருந்து சென்னை காரைக்காலுக்கு இயக்கப்பட்டு வந்த புதுச்சேரி அரசு பேருந்து சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடலில் தீவிர புயலாக நிலவிக் கொண்டிருக்கக்கூடிய மாண்டஸ் தற்போது சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 260 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த தீவிர மாண்டஸ் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கன மழை முதல் மிதமான மழை பெய்து வருகின்றது.. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அது மட்டும் இருக்கு!…. ஆனால் அஜித் பட பேனரை எதுக்காக எடுத்தீங்க?…. கடுப்பான ரசிகர்கள்…..!!!!

தமிழ் திரையுலகில் என்றுமே ஓயாத போட்டியாக இருப்பது என்று சொன்னால் விஜய், அஜித் ரசிகர்கள் சண்டை தான். இதற்கிடையில் எங்கு சென்றாலும் இப்போது பேசப்பட்டு வருவது எனில், அது துணிவு, வாரிசு திரைப்படம் பற்றி தான். இந்த நிலையில் துணிவு திரைப்படத்தின் பேனர் முதன் முதலாக ஜோதி திரையரங்கில் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வாரிசு திரைப்படத்தின் பேனர் வைக்கப்பட்டது. இந்நிலையில் என்ன ஆனது என தெரியவில்லை, திடீரென துணிவு படத்தின் பேனரை எடுத்து விட்டனர். இது அஜித் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை கௌதமிக்கு கிடைத்த சிறந்த அந்தஸ்து…. வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்….!!!!

தமிழ் திரையுலக ரசிகர்கள் கொண்டாடிய முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் கௌதமி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் உட்பட பல மொழி திரைப்படங்களில் நடித்து உள்ளார். மேலும் ஆடை வடிவமைப்பாளராகவும் பல்வேறு படங்களில் பணியாற்றிய கௌதமிக்கு தற்போது ஒரு சிறப்பான விஷயம் நடந்து உள்ளது. அதாவது, Asia Metropolitan University Malaysia பல்கலைக்கழகம் நடிகை கௌதமிக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்து இருக்கின்றனர். இதனால் ரசிகர்கள் நடிகை கௌதமிக்கு தங்களது வாழ்த்தை கூறி […]

Categories
தேசிய செய்திகள்

விமானங்களை புதுப்பிக்க நடவடிக்கை… எப்படி தெரியுமா…? ஏர் இந்தியா அதிரடி முடிவு…!!!!!

மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாட்டா நிறுவனம் வாங்கியதை தொடர்ந்து ஏர் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதாவது இந்த விமானங்களை புதுப்பிக்க அதிலும் குறிப்பாக கேபின்களை மாற்றி அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. 4,ooo மில்லியன் டாலர் செலவில் இந்த புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்வதற்கு ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. மேலும் இதற்காக லண்டனை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அனைத்து வகுப்புகளிலும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அப்பா.. அப்பா.. என கதறி அழுத சிறுவன்…. தந்தை – மகன் பாச போராட்டம்… நீதிபதி கூறிய அதிரடி உத்தரவு என்ன…?

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தினேஷ்குமார் சார்பாக அவரது  தந்தை ராஜேந்திரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2016-ம் வருடம் என்னுடைய மகன் தினேஷ் குமாருக்கும், அபிநயா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அவர்களுக்கு ஹர்ஷித் குமார் (5) என்ற மகன் உள்ளான். இந்நிலையில் தினேஷ்குமார் அபுதாபியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததால் அவருடைய மனைவி மற்றும் மகனுடன் அங்கேயே வசித்து வந்தார். இதனையடுத்து அபிநயா […]

Categories
தேசிய செய்திகள்

பிரசித்தி பெற்ற பூரி ஜெகநாதர் கோவிலுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!!

இந்தியாவில் பொதுமக்கள் கோவில்களில் செல்போன் பயன்படுத்துவதால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக அடிக்கடி புகார்கள் எழுந்து வருகிறது. அதோடு கோவில் கருவறையையும் சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்கள். இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் ஆங்காங்கே செல்போன் பயன்பாடானது கோவில்களில் இருக்கத்தான் செய்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பல கோவில்களில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் பிரபலமான பூரி ஜெகநாதர் ஆலயம் அமைந்துள்ளது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராணுவ கவசம் போன்ற பிரத்தியேக வாகனம்… யாத்திரை செல்லும் பவன் கல்யாண்… வைரலாகும் புகைப்படம்..!!!!

யாத்திரை செல்வதற்கு தயார் செய்யப்பட்ட வாகனத்தின் புகைப்படம் வைரலாகி வருகின்றது. பிரபல நடிகரும் ஆந்திர மாநில ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் வரும் ஜனவரி மாதம் யாத்திரை செல்கின்றார். இதற்காக அவர் ராணுவ வாகனம் போல பிரத்தியேக வாகனம் ஒன்றை தயாரிக்கின்றார். அதற்கு வராகி என பெயரிடப்பட்டிருக்கின்றது. இந்த வாகனம் குறித்த புகைப்படங்களை பவன் கல்யாண் தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கின்றார். அந்த வாகனம் நவீன தொழில்நுட்பை பயன்படுத்தி உயர் பாதுகாப்பு நடவடிக்கையோடு அதிக […]

Categories
மாநில செய்திகள்

சென்னைக்கு 260 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!!!

மாண்டஸ் புயல்  சென்னையை நெருங்கி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, அந்தமான் அருகே உருவான காற்றழுத்ததாழ்வு  பகுதி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது டிசம்பர் 7-ஆம் தேதி இரவு 11:30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. சென்னையிலிருந்து தெற்கு, தென் கிழக்கே 260 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு, தென்கிழக்கு 200 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. மேலும் இந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மத்திய சிறை அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம்… ஏன் தெரியுமா…? டி.ஜி.பி அதிரடி உத்தரவு…!!!!

மதுரை மத்திய சிறையில் 1800-க்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளர். இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் அவர்களின் திறமைக்கு தகுந்தாற்போல் தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றார்கள். அதாவது கைதிகள் மூலமாக ஆபிஸ் கவர், பேக்கரி உணவுப் பொருட்கள், மருத்துவ பேன்ட்ஸ், இனிப்பு வகை போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. அந்த பொருட்களை விற்பதன் மூலமாக நிர்வாகத்திற்கும், கைதிகளுக்கும் வருமானம் கிடைக்கிறது.  வெளிச்சந்தையில் இந்த பொருட்களை விற்பனை செய்ததில் பல கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றதாக சில மாதங்களுக்கு முன்பு வக்கீல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மக்களே உஷாரு!…. பிரபல விஜய் டிவி பெயரில் பண மோசடி…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக விஜய் டிவி இருக்கிறது. சன் டிவிக்கு அடுத்த இடத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவி தான் இருக்கிறது. அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இந்நிலையில் விஜய் டிவி பெயரில் மோசடிகள் நடப்பதாக கூறி தற்போது விஜய் டிவி நிறுவனம் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளது. அதில் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு வாங்கி தருவதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இறைவன் தான் என் மருமகளை தேர்வு செய்யணும்”…. நடிகர் சிம்புவின் திருமணம் குறித்து டி. ராஜேந்தர் உருக்கம்….!!!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு தற்போது பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு தற்போது 39 வயது ஆகும் நிலையில் அவருடைய திருமணம் எப்போது என்பது தான் பலரது கேள்வியாகவும் இருக்கிறது. நடிகர் சிம்பு நேரம் வரும்போது என்னுடைய […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இயக்குனராக என்ட்ரி கொடுக்கும் சூப்பர் ஸ்டாரின் மகன்… குவியும் வாழ்த்து..!!!

ஷாருக்கானின் மகன் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். ஹிந்தி சினிமா உலகில் பிரபல முன்னணி நடிகரான ஷாருக்கானின் மகன் ஆரியன் கான். இவர் தற்போது கதை ஒன்றை எழுதி இருப்பதாக சோசியல் மீடியாவில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கதை எழுதிய புத்தகத்தின் புகைப்படத்தை பதிவிட்டு கதை எழுதி முடித்து விட்டேன்…. ஆக்ஷன் சொல்ல காத்திருக்க முடியவில்லை என பதிவிட்டிருக்கின்றார். இதற்கு ஷாருக்கான் யோசித்தது.. நம்பியது.. கனவு கண்டது நடந்தது.. முதல் ஒன்றுக்கு எனது வாழ்த்துக்கள்.. அது எப்போதும் சிறப்பானது.. […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING!….‌ உலக அளவில் அதிக வெப்பநிலை கொண்ட நாடாக இந்தியா மாறும்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!!

சர்வதேச அளவில் அதிக வெப்ப அலைகளை சந்திக்கும் நாடுகள் குறித்து உலக வங்கி ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் சில வருடங்கள் ஆக வெப்பநிலை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இதில் குறிப்பாக தலைநகர் டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் 144 டிகிரி பாரன்ஹீட் வெப்பமானது பதிவாகியுள்ளது. இதேபோன்று இந்தியாவின் சில முக்கிய நகரங்களிலும் வெப்பம் அதிக அளவில் பதிவாகியுள்ளது. அதோடு வெப்பத்தின் தாக்கம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருப்பதையும் ஆய்வில் உலக வங்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே சூப்பர்!…. டான்ஸ் ஆடி கலக்கும் இசையமைப்பாளர் டி.இமான்…. ட்ரெண்டிங் வீடியோ…..!!!!!

விஜய் நடிப்பில் கடந்த 2002 ஆம் வருடம் வெளியாகிய “தமிழன்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் டி.இமான். இதையடுத்து ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இதையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகிய “விஸ்வாசம்” திரைப்படத்துக்காக டி.இமான் தேசிய விருது பெற்றார். தற்போது இவரின் கைவசம் “வள்ளி மயில்”, “மலை” ஆகிய படங்கள் இருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

ஹிஜாப் போராட்டம்… கைதானவருக்கு தூக்கு தண்டனை…? ஈரான் மனித உரிமை அமைப்பின் இயக்குனர் கடும் கண்டனம்…!!!!!!

ஹிஜாப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் இளம்பெண் ஒருவர் கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி அன்று உயிரிழந்ததை தொடர்ந்து அங்கு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை ஈரான் அரசு ஒடுக்கியது.  இதில் 475 பேர் உயிரிழந்தனர். மேலும் 18000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தின் போது மோசென் ஷெகாரி என்பவர் பாதுகாப்பு படை வீரர் ஒருவரை கத்தியால் தாக்கியதாக […]

Categories
உலக செய்திகள்

“தொடரும் பயங்கரவாதிகளின் அட்டுழியம்”… 12 பேர் பலி… பெரும் பரபரப்பு…!!!!!

பர்கினோபாசோ நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள பர்கினோபாசோ நாட்டில் கடந்த 2015 -ஆம் வருடம் முதல் போகோஹரம், ஐ.எஸ் அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. ராணுவமும், போலீசாரும் சேர்ந்து இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிப்பதற்கு பல்வேறு தீவிர முயற்சிகளை நடத்தி வருகின்றனர். இதனால் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி  நடைபெறும் தாக்குதல் சம்பவங்களால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இன்று இரவு வழக்கம் போல் இயங்கும் – ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு..!!

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இன்று இரவு வழக்கம் போல் இயங்கும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று இரவு அரசு பேருந்துகள் இயக்கப்படாது என கூறப்பட்ட நிலையில் ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட நேரத்தில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழக்த்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 275 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத உதவி… பிரபல நாடு அறிவிப்பு…!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரானது 8 மாதங்களைக் கடந்து தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இருப்பினும் உக்ரைன் ராணுவம் ரஷ்ய படைகளை எதிர்த்து தொடர்ந்து துணிச்சலுடன் போரிட்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு உதவியாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியாக உதவி வருகிறது. அந்த வகையில் அமெரிக்கா பல ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்கியுள்ள நிலையில் உக்ரைனுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி!…. ரயிலுக்கும், தண்டவாளத்துக்கும் இடையில் சிக்கிய மாணவி பரிதாப பலி….. பெரும் சோகம்….!!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் பகுதியில் அன்னாவரம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு பிஎஸ்சி மாணவி சசிகலா கல்லூரிக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் துவ்வடா ரயில்வே நிலையத்திற்கு சென்றார். இவர் ரயிலில் இருந்து இறங்கிய போது திடீரென தண்டவாளத்திற்கும், ரயிலுக்கும் இடையில் சிக்கிக் கொண்டார். இதைப்பார்த்து  அதிர்ச்சியடைந்த சக பயணிகள் உடனடியாக ரயிலை நிறுத்துமாறு ஓட்டுனரிடம் கூறியுள்ளனர். இருப்பினும் சசிகலாவை மீட்க முடியாததால் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் ஒன்றரை […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : தீவிர புயலாக இருந்த மாண்டஸ் புயலாக வலுவிழந்தது.!!

தீவிர புயலாக இருந்த மாண்டஸ் புயலாக வலுவிழந்தது என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென்மேற்கு வங்க கடலில் தீவிர புயலாக நிலவிக் கொண்டிருக்கக்கூடிய மாண்டஸ் தற்போது சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 260 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த தீவிர மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிதமான மழை பெய்து வருகின்றது.. இந்நிலையில் வானிலை […]

Categories
சினிமா

ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே…. கெத்து காட்டும் அவதார்-2…. கடும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

கடந்த 2009-ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் டைரக்டு செய்து ரிலீசான அவதார் திரைப்படமானது உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இப்போது அவதார் திரைப்படத்தின் 2ஆம் பாகம் தயாராகியுள்ளது. இதற்கு அவதார்: தி வே ஆப் வாட்டர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற இந்திய மொழிகள் உட்பட 160 மொழிகளில் டிசம்பர் 16ம் தேதி வெளியாக  இருக்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் முன்பதிவு […]

Categories
மாநில செய்திகள்

ஷாக்!… திருமணத்தில் திடீரென வெடித்த கேஸ் சிலிண்டர்…. 2 குழந்தைகள் பலி, 50 பேர் படுகாயம்…. பரபரப்பு…!!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் புங்ரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் திடீரென 2 கேஸ் சிலிண்டர்கள் வெடித்துள்ளது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததோடு 50 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து  ஆய்வு செய்ததில் […]

Categories
மாநில செய்திகள்

நெருங்கி வரும் மாண்டஸ்..! சென்னைக்கு 260 கி.மீட்டர் தொலைவில் மையம்.!!

சென்னைக்கு 260 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. தென்மேற்கு வங்க கடலில் தீவிர புயலாக நிலவிக் கொண்டிருக்கக்கூடிய மாண்டஸ் தற்போது சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 260 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வட மேற்கு திசை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். வடமேற்கு திசையில் மேலும் அது நகர்ந்து வட தமிழ்நாடு, […]

Categories
மாநில செய்திகள்

குப்பை லாரிகளுக்கு காலை, மாலையில் தடை விதிக்க வேண்டும் – ஐகோர்ட்டில் மனு.!!

குப்பை லாரிகளுக்கு காலை, மாலையில் தடை விதிக்கக்கோரி ஐகோர்ட்டில்  மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் இரவில் மட்டுமே குப்பை லாரிகளை இயக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார். அதில், வெளிநாடுகளைப் போல சென்னையில் குப்பை லாரிகளை இரவில் இயக்க உத்தரவிட வேண்டும். பள்ளி, அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை இயக்க தடை விதிக்க வேண்டும். காலை, மாலை நேரங்களில் குப்பை லாரிகளை இயக்குவதால் மாணவர்கள், பொதுமக்கள், பணிக்கு செல்வோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்!… டிக்கெட் பரிசோதகர் தலையில் திடீரென விழுந்த மின் கம்பி…. தண்டவாளத்தில் சுருண்டு விழுந்ததால் பரபரப்பு…..!!!!!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஹராக்பூர் பகுதியில் ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக சுஜன் சிங் சர்தார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்றுத் தனுடன் பணியாற்றும் சக ஊழியர் ஒருவருடன் ரயில்வே நிலையத்தில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென தண்டவாளத்திற்கு மேலே சென்ற உயர் மின்னழுத்த கம்பியானது சுஜன் தலையில் விழுந்தது. இந்த விபத்தில் சுஜன் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்றொரு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நகரும் மாண்டஸ்…. வானிலை மையம் BIG WARNING…!!

மாண்டஸ் புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால் பல்வேறு இடங்களில் மழைபெய்து வருகிறது. தொடர்ந்து, மிக அதிகனமழை பெய்யும் என்பதால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பொது மக்கள் கவனத்திற்கு.! தேவையின்றி வெளியே வரவேண்டாம்…. போக்குவரத்து போலீசார் வேண்டுகோள்..!!

மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் எனவும், மிக அவசியமான காரணங்களுக்கு மட்டும் வாகன ஓட்டிகள் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று  டிராபிக் போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர். மாண்டஸ் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அதனுடைய தாக்கம் சென்னையில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த மாண்டஸ் புயல் சென்னையிலிருந்து 270 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. தீவிர புயலான மாண்டஸ் வரும் 3 மணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் வசூல் வேட்டைக்கு தயாராகும் பொன்னியின் செல்வன்… வெளியான 2-ம் பாகம் குறித்த அப்டேட்..!!!

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற செப் 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் நம்ம தலைவர் ஆட்டம் ஆரம்பம்…! தனக்கே உரித்தான உடல் மொழியில் சிரிக்க வைத்த வடிவேலு…!!!

வடிவேலு நடனமாடி அசத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம்” நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இந்த படத்தில் பிக்பாஸ் ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் தயாரிக்கிறது. இத்திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. முன்னதாக படத்தின் பிரமோஷனுக்காக இந்தியா அளவில் பிரபலமான கச்சா பாதாம் என்ற பாடலுக்கு நடிகர் வடிவேலு நடனமாடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

OMG.! அட நம்ம நயன்தாராவா இது…? என்னப்பா இப்படி மாறிட்டாங்களே… வைரலாகும் புகைப்படம்..!!!

நயன்தாரா நடிக்கும் கனெக்ட் திரைப்பட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் தற்போது ஜவான், கனெக்ட், இறைவன், கோல்ட் உள்ளிட்ட திரைப்படங்களை நடித்து வருகின்றார். இவர் தற்போது நடித்துள்ள கனெக்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். மேலும் அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கின்றார்‌.   இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி ரிலீசாக உள்ளது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இன்முகத்துடன் மகேஷ் பாபு… படக்குழுவின்ருடன் ஹோட்டலில்.. ரசிகர்கள் நிம்மதி..!!!

மீண்டும் மகேஷ் பாபு இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றார். தெலுங்கு சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் மகேஷ் பாபு. இவரின் தந்தையும் நடிகருமான கிருஷ்ணா அண்மையில் உயிரிழந்தார். இதற்கு முன்னதாக இவரின் அண்ணன் மற்றும் தாயார் உள்ளிட்டோர் உயிரிழந்தார்கள். இவரின் குடும்பத்தில் உள்ள நபர்கள் ஒவ்வொருவராக உயிரிழந்த நிலையில் மகேஷ் பாபு மிகவும் மனமுடைந்து போனார். இந்த நிலையில் இவர் த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். மேலும் அண்மையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல்-மகேஷ் நாராயணன் கூட்டணி… படத்தின் தற்போதைய நிலை என்ன…???

கமல் மகேஷ் நாராயணன் கூட்டணியில் உருவாக இருந்த திரைப்படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரமான கமல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் மூலம் மீண்டும் தனது மார்க்கெட்டை பிடித்து தொடர்ச்சியாக திரைப்படங்களில் கமல் கமிட்டாகி உள்ளார். தற்போது இந்தியன் 2 படபிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இத்திரைப்படத்தை அடுத்து வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதன் பிறகு மணிரத்தினம் இயக்கும் திரைப்படத்திலும் அடுத்ததாக வெற்றிமாறன், பா.ரஞ்சித் உள்ளிட்டோர் இயக்கம் திரைப்படங்களிலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழில் ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கும் அஜித்தின் ரீல் மகள்… வெளியான ஹிப்ஹாப் ஆதி பட அப்டேட்..!!!

அனிகா சுரேந்திரன் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். இசையமைப்பாளரான ஹிப்பாப் ஆதி மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து நட்பே துணை, நான் சிரித்தால், சிவக்குமாரின் சபதம், அன்பறிவ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். தற்போது இவர் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கின்றார். இத்திரைப்படத்தை கார்த்திக் வேணுகோபாலன் இயக்குகின்றார். இந்த நிலையில் இத்திரைப்படத்தில் என்னை அறிந்தால், விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் அஜித்தின் மகளாக நடித்திருந்த அனிகா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கூகுளில் அதிகம் தேடப்பட்ட தமிழ் படங்கள்… எந்த படம் முதலிடம் தெரியுமா.? இதோ லிஸ்ட்..!!!

கூகுளில் அதிகம் தேடப்பட்ட பத்து தமிழ் திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. கூகுள் நிறுவனம் வருடம் தோறும் அதிகம் தேடப்பட்ட சொற்கள், கேள்விகள், திரைப்படங்கள் என பல்வேறு துறை சார்ந்த பட்டியலை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் 2022 ஆம் வருடத்தில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தமிழ் திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கின்றது. இதில் முதல் இடத்தை கமலின் விக்ரம் திரைப்படம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை பொன்னியின் செல்வன் திரைப்படமும் மூன்றாம் இடத்தை விஜயின் பீஸ்ட் திரைப்படமும் பெற்றிருக்கின்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐயோ!… “அம்மா கடவுளே காப்பாத்து”…. இயக்குனர் செல்வராகவனுக்கு என்னாச்சு….? திடீர் பதிவால் ரசிகர்கள் ஷாக்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் செல்வராகவன். இவர் தற்போது படங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் செல்வராகவன் நடிப்பில் தற்போது பகாசூரன் என்ற திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் போன்ற படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் வீடியோ சமீபத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் செல்வராகவன் தற்போது ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா தேனி மாவட்ட செய்திகள்

மாணவருக்கே தெரியாமல்… கல்வி கட்டணத்தை செலுத்திய விஜய் ரசிகர்கள்… வேற லெவல்யா..!!!

தேனியில் மாணவருக்கே தெரியாமல் கல்வி கட்டணத்தை செலுத்தி விஜய் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி தந்துள்ளனர்.  தேனி மாவட்டத்திலுள்ள பெரிய குளம் பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டு மாணவர் ஒருவர் பயின்று வருகின்றார். இவர் தந்தையை இழந்த நிலையில் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வந்திருக்கின்றார். இதனை அறிந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் அந்த மாணவனின் கல்வி கட்டணத்தை முழுவதும் செலுத்த முடிவு செய்து நேற்று முன்தினம் கல்லூரிக்கு நேரடியாக சென்று முதல்வரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக அறிவாலயத்தில் விரைவில் முடி சூட்டு விழா…. அந்தத் துறைக்கு அமைச்சராகும் உதயநிதி…. ஸ்டாலின் போட்ட பலே திட்டம்….!!!!!

திமுகவின் இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக சமீப காலமாகவே தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய மகனுக்கு எவ்வித பதவியும் வழங்கப்படாது என்று கூறிய நிலையில் இளைஞர் அணி செயலாளர் பதவியை வழங்கினார். தற்போது உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவாகவும் இருக்கும் நிலையில், அமைச்சரவையில் ஏற்கனவே 4 எம்எல்ஏக்கள் அமைச்சராக இருப்பதால் உதயநிதிக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என மூத்த அமைச்சர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்திக்க டெல்லி பறக்கும் ஓபிஎஸ்?…. பெரும் கலக்கத்தில் இபிஎஸ் அண்ட் டீம்….!!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் , ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையை கைப்பற்றுவதற்காக அதிகார மோதலில் ஈடுபட்டுள்ளார்கள். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் மத்திய அரசு இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிச்சாமியை மாநாட்டில் கலந்து கொள்ள வருமாறு கடிதம் எழுதி அனுப்பியது. இது ஓபிஎஸ் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக அவர் […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலி…. 7 விமான சேவைகள் இன்று ரத்து…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  மாமல்லபுரம் அருகே இன்று இரவு மாண்டஸ் புயல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் இன்று பள்ளிகள் இயங்கும்…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  மாமல்லபுரம் அருகே இன்று இரவு மாண்டஸ் புயல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. 34 மாவட்டங்களில் மழை புரட்டி எடுக்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  மாமல்லபுரம் அருகே இன்று இரவு மாண்டஸ் புயல் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கனமழை எச்சரிக்கை… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்… தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள்..!!!

விழுப்புரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதன் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் என வானிலை மையம் கூறி இருக்கின்றது. இதனால் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் விழுப்புரம் மாவட்டத்தில் 1500 போலீசார் தேவையான உபகாரணங்களுடன் தயார் நிலையில் இருக்கின்றார்கள். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு 150 கிலோ அரிசி இலவசம்…. மாநில அரசு ஜாக்பாட் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா காலகட்டத்தில் மக்களின் நலனை கருதி மத்திய அரசு சார்பாக அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டது. அதனைப் போலவே மாநில அரசுகளும் அரிசி மற்றும் மளிகை உள்ளிட்ட பொருட்களை மக்களுக்கு இலவசமாக வழங்கின. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 150 கிலோ வரை அரிசி இலவசமாக வழங்கப்பட உள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே ரெடியா இருங்க…. டிசம்பர் 10 குறைதீர்ப்பு முகாம்…. அரசு முக்கிய அறிவிப்பு…. !!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களின் குறைகளை கேட்டு அறிந்து அதற்கு தீர்வு காணும் விதமாக ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் குறை தீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் டிசம்பர் மாதத்திற்கான குறைதீர்ப்பு முகாம் வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 19 மண்டலங்களிலும் உள்ள உதவி ஆணையர் அலுவலகங்களில் காலை […]

Categories
Tech

வாட்ஸ் அப்பில் டிஜிட்டல் அவதார் அம்சம்…. இனி ஒரே ஜாலிதான்…. பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புது புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் சமீபத்தில் 1024 பேர் இணையும் அளவுக்கு வாட்ஸ் அப் குரூப் வசதி ஏற்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது அவதார் ஸ்டிக்கர் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த அம்சம் facebook மற்றும் இன்ஸ்டாகிராம் செயலியில் இருக்கும் பட்சத்தில் தற்போது வாட்ஸ் அப் செயலிலும் அவதார அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலமாக […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், நாளை புதுச்சேரி, ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு சென்னையிலிருந்து தற்போது 520 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. இந்த புயலானது இன்று மாலை 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வலுப்பெரும் என்று கணிக்கப் பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக டிசம்பர் 8-ம் தேதி முதல் அடுத்த 4 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்…. ஆன்லைன் மோசடியால் பணத்தை இழப்போருக்கு…. அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தினம்தோறும் மோசடிக்காரர்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மக்களிடம் தொடர்ந்து மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக வங்கி தரப்பில் இருந்தும் அரசு தரப்பில் இருந்தும் பொது மக்களுக்கு தொடர்ந்து பல விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. மங்கி வாடிக்கையாளர்களின் மொபைல் எண்ணை பெற்று வங்கியில் இருந்து ஊழியர்களைப் போல பேசி வாடிக்கையாளரிடம் இருந்து தனிப்பட்ட வங்கி சார்ந்த தகவல்களை திருடும் சம்பவங்கள் தொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பள்ளி கல்வித்துறை உத்தரவு… மாவட்ட அளவிலான கலைத் திருவிழா… மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு..!!!

பள்ளிக்கல்வித்துறை சார்பாக விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான கலை திருவிழா நடைபெற்றது. தமிழக முழுவதும் பள்ளி கல்வித்துறை சார்பாக மாணவர்களின் கலைத்திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி விழுப்புரம் மாவட்ட கல்வித்துறை சார்பாக வட்டார அளவிலான போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில் மாவட்ட அளவிலான கல்வி போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரை நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள் என […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மேலும் 3 மாவட்டங்களில் விடுமுறை….. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. காரைக்காலில் இருந்து 310 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 390 கி.மீட்டர் தொலைவிலும் இந்த புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து […]

Categories

Tech |