Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கசப்பு இல்லா பாகற்காய் சாம்பார்… ருசியோ ருசி..!!

பாகற்காயின் மருத்துவ குணம்: வயிற்றில் உள்ள கிருமிகளை போக்கும். சர்க்கரை நோய்க்கு சிறந்த உணவு. 

தேவையானவை:

பாகற்காய்                       – 2

தக்காளி                             – 2

பெரிய வெங்காயம்     – 2

துவரம் பருப்பு                  – கால் கிலோ

பூண்டு                                  – 5 அரிசி

சீரகம்                                    – சிறிதளவு

வத்தல்                                   – 5

புளி                                          – தேவையானவை

மஞ்சள் பொடி                    – தேவையானவை

உப்பு                                        – தேவையானவை

பெருங்காய பொடி          – சிறிதளவு

தேங்காய் எண்ணெய்       – சிறிதளவு

கடுகு, உளுந்தம் பருப்பு    – சிறிதளவு

கறிவேப்பிலை                       – சிறிதளவு

கொத்தமல்லி இலை           – சிறிதளவு

செய்முறை: 

துவரம் பருப்பை கழுவி, அவித்து கொள்ள வேண்டும். பாகற்காய், தக்காளி, பெரிய வெங்காயம் இவற்றை  சிறு சிறு துண்டுகளாக  நறுக்கி கொள்ள வேண்டும். பூண்டு, சீரகம் பொடியாக நச்சு வைத்து கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் விட்டு, சூடானதும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை  போட்டு தாளிக்க வேண்டும். பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி போட்டு நன்கு வதக்க வேண்டும்.

அடுத்து பெரிய வெங்காயம், பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும். பாகற்காய் போட வேண்டும். அது நன்றாக வதங்கிய பின்னர், பூண்டு, சீரகம் போட்டு கிளறி விட வேண்டும். அதன் கூட அவித்து வைத்திருக்கும் துவரம் பருப்பை ஊற்ற வேண்டும்.

அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி , சிறிது பெருங்காய தூள், மஞ்சள் பொடி, உப்பு, வத்தல் பொடி எல்லாம் போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். பின்னர் கொத்தமல்லி இலை நறுக்கி வைத்திருப்பதை போட வேண்டும். கொஞ்சம் ஆறியதும் சாதத்துடன் ஊற்றி சாப்பிட்டால் செம டேஸ்டா இருக்கும்..

Categories

Tech |