Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பகல்லயே இப்படியா… அதிர்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவர்… கைது செய்த காவல்துறையினர்…!!

ஆட்டோ டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள கிருபில்ஸ் பேட்டை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆனந்த் ஒரு சவாரிக்காக வெளியில் செல்லும் போது இவரது ஆட்டோவை வழிமறித்த மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி ஆனந்தின் சட்டைப் பையில் இருந்த 800 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதனை அடுத்து ஆட்டோ ஓட்டுநர் ஆனந்த் பணம் வழிப்பறி நடந்தது குறித்து அரக்கோணம் டவுன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வழிப்பறி செய்த நபர் பழனிபேட்டை பகுதியில் வசிக்கும் திருமாறன் என தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் வழிப்பறி செய்த திருமாறனை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

Categories

Tech |