Categories
கல்வி பல்சுவை

“படிப்பில் கவனமின்மை”…. உங்கள் கவனத்தை ஒரே நிலையில் வைப்பது எப்படி?… இதோ சில டிப்ஸ்….!!!!

நீங்கள் ஏதாவது ஒரு வேலையில் கவனம் செலுத்தி கொண்டிருந்தால் அதை அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு நான் சொல்வதை உன்னிப்பாக கவனியுங்கள் என்று நாம் படிக்கும் பள்ளியிலும் சரி வேலைப் பார்க்கும் நிறுவனங்களிலும் சரி அதிகமாக கேட்டிருப்போம். இப்படி கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்பவர்கள் அனைவரும் எவ்வாறு ஒரு வேலையில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என்பதை கற்றுத் தருவதில்லை. இதே மாதிரி பிரச்சினையை தான் தண்டபாணி என்பவர் தனது இளம் வயதில் சந்தித்தார்.

அவரின் சிறுவயதிலிருந்தே கவனமாக இரு கன்சன்ட்ரேஷன் பண்ணு என்று சொல்பவர்கள் யாருமே அதை எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லித் தரவில்லை. அவரால் கன்சன்ட்ரேஷன் செய்ய முடியாததால் அனைவரும் அவரை கேலி செய்து கொண்டிருந்தனர். அவர் வாழ்க்கை இப்படியே சென்று கொண்டிருந்தாலும், சில நாட்கள் கழித்து அவர் ஒரு ஆசிரமத்தில் சேர்ந்தார். அங்கிருந்து தான் அவருடைய வாழ்க்கை மாறியது. அந்த ஆசிரமத்தில் ஒரு சிஷ்யனாக சேர்ந்தார்.

அங்கு சேரும் போது அவரால் கன்சன்ட்ரேஷன் செய்ய முடியவில்லை என்று அங்கிருப்பவர்களிடம் கூறி எப்படி கன்சன்ட்ரேஷன் பண்ண வேண்டும் என்று கற்றுக் கொள்ள நினைத்தார். அப்போதுதான் மனிதர்கள் எப்படி எல்லா விஷயங்களையும் கற்றுக் கொள்கிறார்களோ அதனைப் போலவே கன்சன்ட்ரேஷனையும் பயிற்சியின் மூலமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று புரிந்துகொண்டார். ஆனால் பிரச்சனை என்னவென்றால் நாம் அனைவருமே கவனத்தை திசை திருப்புவதிலேயே அதிகம் பயிற்சி மேற்கொள்வதால் கவனத்தை சிதற விடுவதில் மட்டுமே சிறந்தவராக இருக்கிறோம்.

அதனாலேயே கன்சன்ட்ரேஷன் செய்ய முடிவதில்லை. இந்த காலத்தில் இருக்கும் டெக்னாலஜி கவனத்தை சிதற விடுவதாக இருந்தாலும் அதனை நல்ல விஷயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அதை நம்மால் செய்ய முடியும். உங்கள் போனில் இருந்து வரும் நோட்டிஃபிகேஷன் உங்களை திசை திருப்புவதாக இருந்தால் அதனை ஆப் செய்து விட்டால் நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். இப்போது இருக்கும் டெக்னாலஜி உங்களது கவனத்தை சிதற விடுவதாக இருந்தாலும், உங்களின் அறிவை வளர்த்துக் கொள்ள இந்த டெக்னாலஜி தான் கை கொடுக்கும்.

அதனால் டெக்னாலஜியை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பது தான் முக்கியமான ஒன்று. இப்போது நீங்கள் முழுமையாக கன்சன்ட்ரேஷன் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று முழுமையாக பார்க்கலாம். நீங்கள் முழுமையாக கன்சன்ட்ரேஷன் செய்ய புரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால், நம்முடைய மூளைக்கும் அவார்னஸ்க்கும்  இடையே உள்ள வித்தியாசத்தை தான். மூளை என்பது கணினியில் உள்ள ப்ராசசர் போல நீங்கள் கொடுக்கும் வேலையை பிராசஸர் செய்து புரிந்து கொள்ள வைக்கும்.

ஆனால் அவர்னஸ் என்பது ஒரு பயனாளராக நீங்கள் கொடுப்பதை அப்படியே செய்யும். இதை நீங்கள் இன்னும் நன்றாக புரிந்துகொள்ள உங்களது மூளையை ஒரு பெரிய இடமாக நினைத்துக்கொள்ளுங்கள். அதில் மகிழ்ச்சி, விளையாட்டு, பணம், குடும்பம், அன்பு, தோல்வி அனைத்துமே ஆங்காங்கே  உள்ளது. ஆனால் அனைத்துமே ஆங்காங்கே  இருந்தாலும் அதனை செயல்படுத்த அவர்னஸ் என்பது ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அதாவது உங்கள் மகிழ்ச்சியை நீங்கள் வெளிப்படுத்த அவர்னஸ் என்பது உங்கள் மகிழ்ச்சியின் ஒரு பக்கமாக இருந்தால் அதனை தொடர்ந்து செயல்படுத்தலாம்.

ஆனால் அவார்னஸ் அவ்வாறு இருக்காது. ஒரே நிலையில் இல்லாமல் ஆங்காங்கே மாறிக் கொண்டிருக்கும். உதாரணமாக நீங்கள் யூடியூபில் ஏதாவது ஒன்றை பார்த்துக் கொண்டிருக்கும் போது அதில் முழு கவனமும் அங்கே இருக்காது. வேறு எங்காவது செல்லும். ஆனால் அவ்வாறு செல்லவிடாமல் உங்களது முழு கவனத்தையும் அந்த வீடியோவில் செலுத்தி உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே உங்கள் கான்சன்ட்ரேசன் அதிகமாகும். அதாவது உங்கள் கவனம் சிதறும் போது திரும்பவும் ஒரே இடத்திற்கு கொண்டு வந்தால் மட்டுமே உங்களது கன்சன்ட்ரேஷன் பவரை அதிகரிக்க முடியும்.

இதற்கு முழுமையான பயிற்சியும் தேவை. ஏனென்றால் ஒரு விஷயத்தில் நீங்கள் எந்த அளவிற்கு உங்களது கவனத்தை செலுத்துகிறார்களோ அந்த அளவிற்கு உங்களுடைய எனர்ஜி முழுமையாக அதில் இருக்கும். அதனால் பயிற்சியின் மூலமாக அந்த விஷயத்தில் நீங்கள் சிறந்தவராக முடியும். உங்களால் கன்சன்ட்ரேஷனை அதிகரிக்க முடியும். எனவே உங்களுடைய கவனம் ஆங்காங்கே சிதறும் போது, நீங்கள் எந்த விஷயத்தில் கவனம் செலுத்த விரும்புகிறீர்களோ அங்கேயே உங்கள் கவனத்தை திரும்பத் திரும்பக் கொண்டு வர வேண்டும்.

இதே விஷயத்தை தான் புத்தர்கள் பயன்படுத்தி அவர்களது கன்சன்ட்ரேஷன் பவரை அதிகரிக்க பயன்படுத்துவார்கள். ஒருநாள் முழுவதும் ஒரே விஷயத்தில் அவர்களது முழு கவனத்தையும் செலுத்த முயற்சி செய்வார்கள். நாம் அவ்வாறு ஒரு நாள் முழுவதும் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை என்றாலும், நீங்கள் ஒரு வேலையை செய்து கொண்டிருக்கும் போது முழுமையாக அதில் மட்டுமே கவனத்தை செலுத்துங்கள். உதாரணமாக ஒருவரிடம் நீங்கள் பேசிக் கொண்டிருந்தால் உங்களது முழு கவனமும் அவரிடம் மட்டுமே இருக்க வேண்டும்.

இப்படி உங்களது தினசரி வாழ்க்கையில் ஒரு விஷயத்தில் நீங்கள் முழுமையாக உங்கள் கவனத்தை செலுத்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே அனைத்தும் உங்களது நினைவில் இருக்கும். இல்லை என்றால் உங்களுடைய வாழ்க்கையில் நல்ல நினைவுகள் எதுவுமே ஞாபகத்தில் இருக்காது. உங்களுடைய வாழ்க்கை கதை என்னவென்று யாராவது கேட்டால் ஒரு நல்ல கதையை கூட உங்களால் சொல்ல முடியாது.

ஏனென்றால் உங்களது கவனம் உங்களை எங்கு இழுத்துச் செல்கிறதோ அங்குதான் நீங்கள் சென்று கொண்டிருக்கிறீர்கள். வாழ்க்கையில் தற்போது என்ன நடக்கிறது என்று நீங்கள் நினைக்காமல் முன்பு என்ன நடந்தது இனிமேல் என்ன நடக்கப் போகிறது என்பதில் கவனத்தை சிதற விடுகிறீர்கள். எனவே உங்களது வாழ்க்கையை ஒரு சிலை போல செதுக்க வேண்டும் என்று நினைத்தால் இப்போது நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் முழு கவனத்தை செலுத்தி கன்சன்ட்ரேஷன் செய்திருக்க வேண்டும்.

இல்லையென்றால் உங்கள் கவனத்தை வேறு எங்காவது திசைதிருப்பி உங்களது வாழ்க்கையை ஏதாவது ஒரு போக்கில் நீங்களே செதுக்கி விடுவீர்கள். எனவே உங்களது கவனத்தை ஒரே விஷயத்தில் அதிக நேரம் செலுத்த பயிற்சி மேற்கொள்ளுங்கள். அவ்வாறு செய்தால் மட்டுமே உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும். வாழ்க்கை போகும் போக்கில் நீங்கள் செல்லாமல் உங்கள் போக்கில் வாழ்க்கையை கொண்டு வர முடியும். எனவே மாணவர்கள் தங்கள் படிப்பில் முழு கவனத்தையும் செலுத்த இதை கடைப்பிடியுங்கள்.

Categories

Tech |