தயாரிப்பாளர் ஒருவர் சிம்பு தற்போது நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கக்கூடாது என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.
சிம்பு தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பில் உருவாகவுள்ள நதியினிலே நீராடும் சூரியன் என்னும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் கிருத்தி சனோன் நடிப்பதற்கு ஒப்பந்தம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த படப்பிடிப்பு திருச்செந்தூரில் வைத்து ஆகஸ்ட் 6-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் தயாரிப்பாளர் ஒருவர் சிம்பு தற்போது நடிக்கவிருக்கும் நிதியினிலே நீராடும் சூரியன் என்னும் படத்தின் படப்பிடிப்பை தொடங்கக்கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில் இடம்பெற்றிருக்கும் செய்தியாவது, சிம்பு நடிப்பில் வெளியான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்னும் படத்தின் தயாரிப்பாளர் தனக்கு தர வேண்டிய பணத்தை தற்போது புதிய படத்தில் நடிக்கவிருக்கும் சிம்புதான் தர வேண்டும் என்பதால் அவருடைய படப்பிடிப்பை தற்போது தொடங்கக்கூடாது என்று கூறியுள்ளார்.
இதனால் நதியினிலே நீராடும் சூரியன் என்னும் படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் இந்த பிரச்சினையில் தலையிட விரும்பாமல் படப்பிடிப்பினை பிரச்சனை முடிந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.