64 முறை இசை தொடர்பான விருதுகளை வென்ற அமெரிக்க நாட்டின் பிரபல பாடகியான பில் எய்லீஸ் தன்னுடைய 11 ஆவது வயதிலிருந்து ஆபாச படங்களை பார்க்க ஆரம்பித்ததாக ரேடியோ ஒன்றிற்கு பேட்டி அளிக்கும் போது தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பில் எய்லீஸ் என்பவர் மிகவும் பிரபலமான பாடகியாக திகழ்கிறார். இவர் 64 முறை இசை தொடர்பான விருதுகளை வென்றுள்ளார்.
இந்நிலையில் இவர் ரேடியோ ஒன்றிற்கு பேட்டி அளிக்கும் போது தான் 11 ஆவது வயதிலிருந்து ஆபாச படங்களை பார்க்க ஆரம்பித்ததாக தெரிவித்துள்ளார். இந்த ஆபாச படங்களை பார்த்து தன்னுடைய மூளை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஆபாச படங்களை பார்ப்பது முதலில் நல்ல பழக்கம் கிடையாது என்று தெரியாமல் உடலுறவை கற்றுக்கொள்ளும் வழிமுறை என்று நினைத்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த படங்கள் தன்னை ஆபாசமாக நடக்க செய்ததாகவும் அமெரிக்க நாட்டின் பிரபல பாடகியான பில் தெரிவித்துள்ளார்.