Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

படகு கவிழ்ந்து விபத்து…. மீனவருக்கு நேர்ந்த சோகம்…. சமூக வலைதளங்களில் பரவும் காட்சிகள்….!!

படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர் உயிரிழந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேங்காப்பட்டணம் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் கடந்த 17ஆம் தேதி படகில் மீன்பிடிக்க சென்று விட்டு மாலை வேளையில் துறைமுகத்தில் நுழைவதற்கு முயற்சி செய்தனர். அப்போது அவர்கள் துறைமுக முகத்துவார பகுதியில் வந்தபோது ராட்சத அலையில் படகு கவிழ்ந்து விட்டது. இதனால் 6 மீனவர்கள் காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் இனையம்புத்தன்துறையை சேர்ந்த ஆன்டனி பிரிட்டன் ராஜா என்ற மீனவர் படகில் அடிப்பகுதியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இந்நிலையில் தற்போது படகு அலையில் சிக்கி கவிழ்ந்த சி.சி,டி.வி கேமரா காட்சி வெளியாகி இருக்கின்றது. அந்த வீடியோவில் முகத்துவாரத்தில் 2 படகுகள் நுழைய முயற்சித்தபோது ஒரு ராட்சத அலை எழுந்து படகுகள் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஒரு படகு மட்டும் அலையின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் நிலைதடுமாறி கவிழ்ந்து விட்டது. மேலும் இன்னொரு படகானது  அலையில் இருந்து தப்பிச் செல்லும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Categories

Tech |