பாடகர்கள் தங்களின் சொந்த பாடல்களுக்கு தாங்களே இசை அமைக்க முயற்சிக்க வேண்டும் என்று ஹிமேஷ் ரேஷ்மியா கருத்து தெரிவித்துள்ளார்.
பாடகர்கள் அவர்களின் சொந்த பாடல்களுக்கு தாங்களே இசையமைக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் தங்களின் சொந்த ஆன்மாவை உணர்ந்து கொள்வார்கள் என்று நடிகரும், இசையமைப்பாளருமான ஹிமேஷ் ரேஷ்மியா கூறியுள்ளார். எனது பாடல்கள் வழக்கமான மண்டலத்தில் இருப்பதில்லை, எப்போதுமே வித்தியாசமாகத்தான் இருக்கும். அதனால் வேறு யாரும் என்பாடல்களை நிகழ்த்துவது சாத்தியமற்றது.
இசையமைப்பாளர்களுடன் பாடகர்கள் 10 மணி நேரம் வரை ஒத்திகை பார்ப்பது வழக்கம். முன்பு எந்த ஒரு திட்டத்தையும் தொடங்குவதற்கு முன் இசையமைப்பாளரை தொடர்பு கொள்வார்கள். ஆனால் தற்போது டியூன்களையும் வாட்ஸ்அப்லேயே அனுப்பி வைக்கின்றனர். இசையமைப்பாளரின் நுணுக்கங்களைப் புரிந்து கொள்வது மிகக் கடினம் என்று கூறியுள்ளார். இவர் பாரதிராஜாவின் பொம்மலாட்டம், கமல்ஹாசனின் தசாவதாரம் போன்ற தமிழ் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.