Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

பசியின்மை பிரச்சனையா.? இதோ எளிய முறையில் தீர்வு..!!

சில பேருக்கு பசியே எடுக்காது. அப்படி பட்டவர்களுக்காக எளிமையாக, அருமையாக வீட்டிலேயே தீர்வு காணும் வழிகளை பற்றி பார்ப்போம்.

* தினந்தோறும் வெதுவெதுப்பான தண்ணீர் குடித்து வாருங்கள். மிகுந்த பசி ஏற்படும்.

* அரை ஸ்பூன் சுக்குப் பொடியுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து தினமும் 3 வேளை சாப்பிடுங்கள், பசியின்மை எளிதில் பறந்து போகும்.

* சுக்கு, மிளகு, திப்பிலி பொடி செய்து, சம அளவில் எடுத்து கொள்ளுங்கள். தேனுடன் கலந்து சாப்பிட்டால்,நன்றாக பசி எடுக்கும்.

* மாதுளம் பழ சாறுடன் சிறிதளவு இந்துப்பு மற்றும் தேன் கலந்து குடித்து வர நன்கு பசியை தூண்டி விடும்.

* பட்டை, ஏலக்காய், தனியா, சோம்பு இவைகளை சம அளவில் எடுத்து கொள்ளுங்க. பிறகு முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள். காலையில் அதில் உள்ள நீரை ஒரு டம்ளர் வீதம் வடிகட்டி குடித்து வாருங்கள்.

* ஒரு கிளாஸ் வெந்நீரில் பெரிய நெல்லிக்காய் அளவு புளியை ஊறவைத்து, அத்துடன் ஒரு சிட்டிகை இந்துப்பு, இரண்டு கிராம் ஓமம் சேர்த்து அந்தத் தண்ணீரை வடிகட்டி, சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக குடித்து வந்தால் நல்ல பசி எடுக்கும்.

* மிளகுப் பொடியையும் நாட்டுச் சர்க்கரையும் கலந்து சாப்பிட்டால் பசியின்மை நீங்கும்.

Categories

Tech |