Categories
சினிமா தமிழ் சினிமா

பச்சை பச்சையா திட்டுறாங்க…. இப்படி நடிக்கிறது தான் கஷ்டம்…. பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை வருத்தம்….!!!

என்னை பச்சை பச்சையாக திட்டுகிறார்கள் என்று பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை கூறியுள்ளார்.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.குறிப்பாக இந்த சீரியலில் இடம்பெற்றுள்ள கண்ணம்மா கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் தான் பரீனா.

சமீபத்தில் நடந்த விஜய் டிவி அவார்ட்ஸில் இவருக்கு சிறந்த வில்லிக்கான விருது வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து மேடையில் பேசிய அவர் இந்த சீரியலில் தான் வில்லியாக நடிப்பதால் என்னை பச்சை பச்சையாக திட்டுகிறார் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், ஒரு பெண் கேட்க கூடாத வார்த்தைகள் எல்லாம் கேட்கிறேன் என்றும், சீரியலில் கதாநாயகியாக நடிப்பதை விட வில்லியாக நடிப்பது தான் கஷ்டம் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |