Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஒதுக்காதீர்கள்.. பச்சை மிளகாயில் காரம் மட்டுமல்ல பலனும் அதிகம்…!!

நாம் உணவில் இருந்து ஒதுக்கும் பச்சை மிளகாயில் காரம் மட்டும் அதிகம் இல்லை பலனும் அதிகம்.

சாப்பாடு காரசாரமாக இருப்பதற்கு சேர்க்கக்கூடிய காய் தான் பச்சை மிளகாய். பச்சை மிளகாய் காரம் சாரமாக இருப்பதனாலேயே பண்ணுவாங்க,ஆனால் அந்த காலத்தில் நம்முடைய பாட்டி தாத்தா எல்லாம் கஞ்சி கூட 2 பச்சைமிளகாய் கடித்து சாப்பிடுவார்கள். அதனால் தான் அவங்க ரொம்ப ஹெல்த்தியா இருந்தாங்கன்னு சொல்லலாம்.

அதாவது பச்சை மிளகாய் ஸ்ட்ராங் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆக இருக்கிறது.இதி  நம்ம உடலுக்கு பாடிகார்டு என்று சொல்லலாம்.அது மட்டுமில்லாமல் இதில் விட்டமின் ஏ,சி,கே இருக்கிறது.நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பச்சை மிளகாயில் கலோரீஸ் கிடையாது.உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அவர்களுடைய லிஸ்ட்ல பச்சை மிளகாயை தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். பொதுவாக சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து கொள்வதற்கு பச்சை மிளகாய் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

அது போல பச்சை மிளகாய் சாப்பிடுவதால் நாம் சாப்பிட்ட உணவு ரொம்ப சீக்கிரத்திலேயே செரிமானமாகும்.செரிமான கோளாறு பிரச்சனைகள் இருப்பவர்கள் பச்சை மிளகாய் சாப்பிடுவது நல்லது. காரசாரமாக பச்சை மிளகாய் சாப்பிடுவதால் மூளை நரம்புகள் பலம் பெறும்.

மூளை மட்டும் இல்லாமல் உங்களுடைய முதல் முழு உடலும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். பச்சை மிளகாயில் இருக்கின்ற அண்டிபாக்டரியல், புரோபர்டீஸ் தொற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும். முக்கியமாக சரும பிரச்சனைகளும் வராமல் தடுக்கும்.

குறிப்பாக நுரையீரல் புற்றுநோய் வருவதை தடுக்கவும், புகைபிடிக்கும் பழக்கத்தை மறக்கவும் நுரையீரல் புற்றுநோயில் இருந்து தப்பிக்கவும் 2 பச்சை மிளகாய் சாப்பிட்டு வாருங்கள். முக்கியமாக ஆண்களுக்கு வரக்கூடிய  புரோஸ்டேட் புற்றுநோய் ஆபத்தில் இருந்து தப்பிக்கவும் பச்சை மிளகாய் சாப்பிடுவது ரொம்ப நல்லது.

அது போலவே பெண்களுக்கும் வரக்கூடிய பெரிய பிரச்சனை ரத்தசோகை. பச்சை மிளகாயில் இருக்கும் அளவுக்கு அதிகமான இரும்புச் சத்து இருக்கிறது. அவை நம் உடலில் உடனே இரத்தத்தை ஊற வைத்து இரத்த சோகையை போக்கும். அதாவது பெண்களுக்கு மாதவிடாய் மற்றும் பிரசவத்தின் போது அதிக ரத்தப்போக்கு காரணமாக ரத்த சோகை உண்டாகும்.

அந்த டைம்ல பச்சை மிளகாய் சேர்த்து செய்து காரசாரமான உணவு  எடுத்து கொள்வது நல்லது.  அதற்காக வயிறு எரிகிற அளவுக்கு பச்சை மிளகாய் சாப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. இனியாவது சாப்பாட்டிலிருந்து பச்சை மிளகாய் ஒதுக்காமல் அதை நன்றாக மென்று சாப்பிடுவது உடலுக்கு நல்லது.

Categories

Tech |