தன்னுடைய 85 வயதில் காலமான பல்கேரியன் நாட்டை சேர்ந்த பெண் பாபா வாங்கா இந்தியா அடுத்தாண்டு வெட்டிகிளி தாக்குதலால் அதிகளவில் பாதிக்கப்படும் என்று முன்கூட்டியே கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளார்.
பல்கேரியன் நாட்டை சேர்ந்த பெண் பாபா வாங்கா என்பவர் தன்னுடைய 85 ஆவது வயதில் காலமாகியுள்ளார். இந்த கண் தெரியாத பெண் பாபா வாங்கா 100 க்கும் மேலான தகவல்களை முன்பாகவே கணித்து வைத்துள்ளார். இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு உலகில் என்னெல்லாம் ஆபத்து ஏற்படவுள்ளது என்பது தொடர்பான பாபா வாங்காவின் கருத்து கணிப்பு தற்போது வெளியாகி மிக வேகமாக பரவி வருகிறது.
அதாவது பாபா அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதல் உட்பட பல நிகழ்வுகளை கணித்தப்படியே நடந்துள்ளது. இந்த பெண் பாபா வாங்காவின் கருத்துக்கணிப்பின் படி 2022-ல் இந்தியாவில் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின் படி இந்தியா அடுத்தாண்டு வெட்டுக்கிளி தாக்குதலால் மிகவும் அதிகமாக பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வெட்டுக்கிளி தாக்குதலால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு இந்தியாவில் பஞ்சம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் கண் தெரியாத பெண் பாபா கணித்துள்ளார். அதோடு மட்டுமின்றி இந்தியாவில் புவி வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.
இந்த கண் தெரியாத பெண் பாபா வாங்கா புவி வெப்பமயமாதலின் காரணத்தால் தற்போது வரை சைபீரியாவில் உறைந்து கொண்டிருந்த மிகக் கொடிய வைரஸ் அடுத்தாண்டு கட்டுப்பாட்டை மீறி மிக வேகமாக பரவும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்தாண்டு உலக நாடுகளில் இயற்கை சீற்றங்களின் தாக்கமும் அதிகமாக இருக்கும் என்றும் முன்கூட்டியே அவர் கணித்துள்ளார்.