Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய கணவர்… இரட்டை குழந்தைகளுடன் தீக்குளித்த தாய்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

குடும்ப பிரச்சனையால் தாய் தனது  இரண்டு குழந்தைகளுடன் தீக்குளித்து  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பூவந்தி கொள்ளை கிராமத்தில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பாண்டிபஜாரில் செல்போன் பழுது பார்க்கும் கடை ஒன்றை நடத்தி வருகின்றார்.இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு  தர்ஷன், தர்ஷினி என்ற இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஜெயபால் செல்போன் கடைக்கு கிளம்புவதற்காக வீட்டின் வெளியே இருக்கும் குளியல் அறைக்கு சென்று இருக்கிறார். இதனையடுத்து தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்த மகேஸ்வரி திடீரென உள்ள கதவை உள்புறமாக  தாளிட்டு மண்ணெண்ணையை தன் மீதும் குழந்தைகள் மீதும்   ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

அதன்பின் வீட்டிற்குள் இருந்து புகை வருவதை பார்த்த ஜெயபால் கதவை உடைத்துகொண்டு உள்ளே சென்று உள்ளார். அப்போது மகேஸ்வரி தனது இரண்டு குழந்தைகளையும்  கட்டிப்பிடித்து கொண்டு தீயினால்  உடல் முழுவதும் கருகிய நிலையில் அமர்ந்தவாறு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதில் மகேஸ்வரி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் இரண்டு குழந்தைகளையும் மீட்டு அரசுமருத்துவமனைக்கு சிகிக்சைக்காக கொண்டு சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இரண்டு குழந்தைகளுக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு  வருகிறது. இச்சம்பவம் குறித்து மகேஸ்வரியின் தந்தையான காந்தி என்பவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ஜெயபாலனுக்கு, மகேஷ்வரிக்கு இடையே ஏற்கனவே குடும்பப் பிரச்சனை இருந்தது தெரியவந்துள்ளது. இதன் காரணத்தினா லேயே மகேஸ்வரி தனது இரண்டு குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து உள்ளார்.இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Categories

Tech |