பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் கதாபாத்திரத்தில் குமரனுக்கு பதில் வேறு ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது .
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்த கதை அண்ணன், தம்பிகளின் பாசத்தை சுற்றியே நகர்கிறது . இந்த சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது . கடந்த சில நாட்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் கதாபாத்திரத்தில் நடிக்கும் குமரனை காட்டவில்லை.
இதற்கு காரணம் குமரன் வேறொரு படத்தின் படப்பிடிப்பில் இருப்பதாக கூறப்பட்டது . இந்நிலையில் இந்த சீரியலில் கதிர் கதாபாத்திரம் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவருக்கு பதில் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது . ஆனால் இந்த தகவல் உண்மை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .