போக்சோ சட்டத்தில் குறிப்பிட்டிருக்கும் பாலுறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயதை மறு பரிசீலனை செய்யவேண்டி இருக்கிறது என சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்து உள்ளார். யுனிசிஸ் அமைப்புடன் சுப்ரீம்கோர்ட்டு சிறார் நீதி குழு இணைந்து நடத்திய போக்சோ சட்டம் குறித்த 2 நாள் விவாத நிகழ்ச்சியில் சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பங்கேற்று பேசினார்.
இந்நிலையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களின் பாலுறவு செயல்கள் இருவரின் சம்மதத்துடன் இருந்தாலும் போக்சோ சட்டத்தின் படி குற்றமாக உள்ளதால் இது போன்ற வழக்குகள் நீதிபதிகளுக்கு சவாலாக இருக்கிறது என்று தெரிவித்தார். ஆகவே போக்சோ சட்டத்தில் குறிப்பிட்டிருக்கும் பாலுறவுக்கு இசைவு தெரிவிக்கும் வயதை நல்வாழ்வு நிபுணர்களின் ஆய்வு மேற்கொண்டு நாடாளுமன்றம் பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் சில நேரங்களில் குற்றவியல் நீதிமுறை பாதிக்கப்படுபவர்களின் மன வேதனையை அதிகரித்துவிடுவதால் அதனை தடுக்க நீதித்துறையுடன், அரசு நிர்வாகம் கைகோர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.