Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

பாலில் இருக்கும் நன்மைகள் மற்றும் வகைகள் பற்றி அறிவோம்..!!

சிறியவர் முதல் பெரியவர் வரை பால் பருகுவோம். அதில் உள்ள நன்மைகள் மற்றும் வகைகள் பற்றியும் அறிவோம்.

தேங்காய்ப்பால்:

சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்துவிடும். கூந்தலின் அடர்த்தியையும், வளர்ச்சியையும் அதிகரிக்கும். வறண்ட சருமத்தை பளபளப்பாக்கும்.  இதில் உள்ள லாரிக் அமிலம் வயிற்றுப்போக்கை தடுக்கும். கல்லீரலை பாதுகாத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். தேங்காய் பாலில் வைட்டமின், தாது உப்புக்கள் உள்ளது. இதில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளதால் அளவோடு சாப்பிடுவது நல்லது. முக்கியமாக  50 வயது கடந்தவர்கள் ஒரு தேங்காயை தவிர்ப்பது நல்லது.

வெள்ளாட்டுப்பால்:

வெள்ளாட்டுப் பாலில் இருக்கக்கூடிய கொழுப்பும் புரதமும் எளிதில் செரிக்கக் கூடிய தன்மை உடையது. குடற்புண்ணால் அவதிப்படுபவர்கள் வெள்ளாட்டுப்பால் எடுத்துக் கொள்ளலாம். இதுமட்டுமின்றி ரத்தப் போக்கை தடுக்கும். தாய்ப்பாலை பெறுக செய்யும்.

பசும்பால்:

பசும்பாலில் வைட்டமின் பி12 உள்ளது. இப்பாலை இரவில் சாப்பிட்டு வந்தால் உடல்சூடு, நுரையீரல் சளி, கண்ணெரிச்சல், பித்த கோளாறுகள் போன்றவை நீங்கிவிடும். தாது பலம் பெற்று ஆண்மை அதிகரிக்கும். பசும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் நெய், தயிர், மோர் ஆகியவை உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும். இரத்தக் கொதிப்பு கட்டுக்குள் இருக்கும். உடல் பருமன் குறைவதற்கும், இதய நோயிற்கும், புற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளவர்களும் பாலை தினமும் எடுத்து கொள்ளுங்கள்.

ஆட்டுப்பால்:

பசும் பாலில் இருப்பதை விட கொழுப்பு, புரதம், இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் அதிகமாகவே இருக்கும் ஆட்டு பாலில். இப்பால் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு மிக மிகவும் எளிதாக செரிக்க கூடியதாகும். காசநோய், வரட்டு இருமல், வயிற்றுக் கடுப்பு, குடல் வாதம், பக்க வாத நோய்களுக்கு ஆட்டுப்பால்  ஒரு சிறந்த மருந்தாகும். ஆட்டுப்பால் பசியின்மையை போக்கும். 200 மிலி ஆட்டுப்பாலில் சுமார் 6 கிராம் உயர்தர புரோட்டீன் உள்ளது.

கழுதைப்பால்:

கழுதைப் பாலில் மருத்துவ குணம் அதிகம் உள்ளது. காலை வெறும் வயிற்றில், ஏழு நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் ஜீரண சக்தி, மஞ்சள் காமாலை ஆஸ்துமா நோய்கள் போன்றவை உங்களை சீண்டாது. பிறந்த குழந்தைக்கும் நோயுற்ற குழந்தைகளுக்கும் கழுதை பால் கொடுங்கள், மிகவும் நல்லது. இதனால் கரப்பான், சொரி சிரங்கு, நரம்பு கட்டிகள், பித்தம் போன்ற நோய்கள் விரைவில் தடுக்கப்படும்.

Categories

Tech |