1 முதல் 12ம் வகுப்பு வரைக்குமான பாடத்திட்டத்தை குறைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் போது குறைவான நாட்களே என்ஜி இருக்கும் என்பதால் அதைக் கணக்கில் கொண்டு 1 முதல் 12ம் வகுப்பு வரைக்குமான பாடத்திட்டத்தை கணிசமாக குறைக்கும் பணியில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஈடுபட்டிருந்தது.
நடப்பு கல்வியாண்டுக்கான பொது தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் பாடத்தின் முக்கிய பகுதிகளில் மாற்றமின்றி எடுத்துக்காட்டுகள் மற்றும் விரிவான விளக்கங்களை குறைக்கும் பணி நிறைவடைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புளூ பிரிண்ட் அடிப்படையில் பாட வாரியாகவும், வகுப்பு வாரியாகவும் குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்து முழு விபரங்களை விரைவில் வெளியிட உள்ளதாகவும், மாணவர்கள் அதனடிப்படையில் ஆண்டு இறுதித் தேர்வுக்கும், பொதுத் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாடக்குறிப்பு தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.