Categories
தேசிய செய்திகள்

பி.எப். சந்தாதாரர்களுக்கு தடையற்ற சேவை வழங்க நடவடிக்கை…!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான தகவல்களைப் பெறவும், புகார் தெரிவிக்கவும், சந்தேகங்களை கேட்கவும் வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா சூழலில் பிஎப் சந்தாதாரர்களுக்கு தடையற்ற சேவை வழங்க வாட்ஸ்அப் மூலம் தொடங்க முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அனைத்து சந்தாதாரர்களை நேரடியாக அணுகி பிரச்சினைகளை தீர்க்க முடியும் என தொழிலாளர் அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்திற்கு உள்ள 138 மண்டல அலுவலகங்களிலும் வாட்ஸ்அப் உதவி மையம் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்டலம் வாட்ஸ்அப் உதவி  எண்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்பி தேவையான தகவல்களைப் பெறலாம் இதற்காக மண்டல அலுவலகங்களில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மண்டல வாரியாக வாட்ஸ்அப் உதவி எண்கள் பட்டியல்  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |