Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நோயாளிகளின் நலனுக்காக… சரக்கு ரெயிலில் வந்த ஆக்சிஐன்… அதிகாரி அளித்த தகவல்..!!

திண்டுக்கல் வழியாக மதுரைக்கு 90 டன் ஆக்சிஜன் ஒடிசாவில் இருந்து வந்த சரக்கு ரயிலில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உருமாறிய கொரோனா தொற்றால் நோயாளிகளுக்கு நுரையீரல் மிகவும் பாதிக்கப்படுவதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கொரோனா நோயாளிகள் மரணத்தை தழுவும் நிலை ஏற்படுகிறது. எனவே நோயாளிகளின் நலனுக்காக வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்படும் ஆக்சிஜன் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. அந்தவகையில் தமிழகத்திற்கு வடமாநிலத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் ஆக்சிஜன்களில் தென்மாவட்டங்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் டேங்கர் லாரிகளில் அடைக்கப்படுகிறது.

அதன்பின் மதுரை அருகே உள்ள கூடல்நகர் ரயில் நிலையத்திற்கு அவை அனைத்தும் ரெயில் மூலம் கொண்டு வரப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஆக்சிஜன் தேவை உள்ள மாவட்டங்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று சரக்கு ரயில் ஒன்றில் ஒடிசாவிலிருந்து 90 டன் ஆக்சிஜன் திண்டுக்கல்லுக்கு வந்துள்ளது.

இந்த ஆக்சிஜன் 6 டேங்கர் லாரிகளில் சரக்கு ரெயிலில் வந்ததாகவும், அதனை தொடர்ந்து கூடல்நகர் ரெயில் நிலையம் வரை கொண்டுசெல்லப்படும் இந்த ஆக்சிஜன் மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைக்கு டேங்கர் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று ரயில்வே காவல்துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |