Categories
சினிமா

“கடலில் கரைத்து விடுங்கள்” பிகினி உடையில் ஓவியாவின் கருத்து…. வைரலாகும் புகைப்படம்….!!

ஓவியா வெளியிட்ட பிகினி புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவர் ஓவியா. களவாணி திரைப்படம் மூலம் அறிமுகமான இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். ஓவியா எப்போதும் சமூகவலைதளத்தில் பிஸியாக புகைப் படங்களையும் காணொளிகளையும் வெளியிட்டு வருபவர்.

இந்நிலையில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஓவியா பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கடற்கரை ஓரமாக எடுக்கப்பட்ட அந்த புகைப் படத்துடன் சேர்த்து “கவலைகளை கடலில் கரைத்து விடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் .இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |