Categories
இந்திய சினிமா சினிமா

“சிறந்த சமூக சேவை”…. நடிகர் ராம் சரணுக்கு பியூச்சர் ஆப் யங் இந்தியா விருது…. குவியும் வாழ்த்து….!!!!

இந்தியாவின் முன்னணி பத்திரிக்கை நிறுவனமானது வருடம் தோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ட்ரூ லெஜென்ட் விருது வழங்கி வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டில் சினிமா துறையில் இருந்து கொண்டு சமூக சேவைகள் செய்து வரும் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நடிகர் ராம் சரணுக்கு பியூச்சர் ஆப் யங் இந்தியா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழாவில் நடிகர் ராம்சரண் பேசியதாவது, கடந்த 1997-ம் ஆண்டு எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ரத்தம் கிடைக்காமல் உயிரிழந்து விட்டார்.

அப்போது என்னுடைய தந்தை சிரஞ்சீவி ஒரு மெகா ஸ்டாராக இருந்தும் கூட எங்கள் குடும்பத்தில் ரத்தம் கிடைக்காமல் ஒருவர் உயிரிழந்தது எங்களுக்கு மிகவும் வேதனையை ஏற்படுத்தியது. இதனால் அதற்கு அடுத்த வருடமே என்னுடைய தந்தை ரத்த வங்கியை தொடங்கினார். இதேபோன்று கொரோனா காலகட்டத்தின் போது 17,000 திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவிகள் செய்தோம். நாங்கள் செய்தது சிறிய உதவி தான் என்றாலும், அது அவர்களுக்கு மிகவும் தேவைப்பட்டது. நான் செய்த எல்லா பணிகளையும் என்னுடைய தந்தை தான் தொடங்கி வைத்தார். நானும் வருங்காலங்களில் சில சேவைகளை தொடங்க இருக்கிறேன். மேலும் இந்த விருதை என்னுடைய அப்பா, அம்மாவுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று கூறினார்.

Categories

Tech |