அயோத்தி ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகளுக்கு ரசிகர்கள் தாராளமாக நன்கொடை அளிக்க வேண்டும் என்று நடிகர் அக்ஷய் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். அதில் நம் பங்களிப்பும் இருக்க வேண்டும்.
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணிகளுக்கு என் ரசிகர்கள் தாராளமாக நன்கொடை அளிக்க வேண்டும். நான் இதனை தொடங்கி விட்டேன். ஜெய் ஸ்ரீராம் என்று காணொளி மூலமாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த காணொளியில் அவர் இராமாயணம் தொடர்பான கதைகளையும் கூறி இருக்கிறார்.