Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

நம்முடைய பந்தம் ஆழமானது- நாம் இணைந்து விரட்டுவோம் – பினராயி விஜயன்

கொரோனா சவாலை கேரளா – தமிழகம் ஒருங்கிணைந்து  முறியடிப்போம் என்று கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.  

இந்தியாவிலே கொரோனா முதலில் பாதித்த மாநிலமாக கேரளா. அதை தொடர்ந்து அதிகளவில் கொரோனா பாதித்த மாநிலங்களின் வரிசையில் கேரளா , மகாராஷ்டிரா என மாறி இருந்த நிலையில் தமிழகம் அதிக பாதிப்பு பெற்ற மாநிலங்களின் வரிசையில் கேரளாவை முந்திச் சென்றது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் தமிழ்நாட்டில் இருந்து வரும் அனைத்து சாலைகளையும் கேரளா மூட போகின்றது என்ற செய்தி வெளியகியது.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், இது ஒரு வதந்தி கேரளா அப்படி ஒருபோதும் நினைத்ததில்லை. அவர்கள் நம்முடைய அண்டை மாநிலத்தவர் மட்டுமல்ல, அவர்களை நம் சகோதரர்கள் ஆகவே பார்க்கிறோம் என்று தெரிவித்தார். இதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கேரள மாநிலம் தமிழக மக்களை சகோதர சகோதரியாகவே அன்புடன் பாராட்டுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அனைத்து இன்ப துன்பங்களிலும் கேரள மாநில சகோதர சகோதரிகளின் உற்ற துணையாக தமிழகம் இருக்கும் என்று தனது ட்விட்டர் முலம் தெரிவித்தார்.

இதனையடுத்து தமிழக முதல்வரின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழில் பதில் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், கேரளா மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையேயான பரஸ்பர உறவானது கலாச்சாரம், சகோதரத்துவம் மற்றும் மொழி முதலியவற்றால் பின்னிப் பிணைந்தது ஆகும். இந்த ஆழமான பந்தத்தை புரிந்து கொள்ள இயலாதவர்கள் தான் பொய்யான தகவல்களை பரப்புகின்றனர். நாம் ஒருங்கிணைந்து இந்த சவால்களை முறியடிப்போம் என்று பதிலளித்துள்ளார்.

Categories

Tech |