Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 5 லட்சம் அபராதம்… அளவுக்கு அதிகமான எடை… காவல்துறையினரின் எச்சரிக்கை…!!

அதிக அளவு எடை ஏற்றி டிப்பர் லாரியை  பறிமுதல் செய்து  காவல்துறையினர் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள  ஜிப்சன் குவாரி மற்றும் கல்குவாரியில் இருந்து லாரிகளில் அதிக பாரம் கற்களை எடுத்து செல்கின்றனர். இதுகுறித்து பெரம்பலூர் வட்டார போக்குவரத்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தேசிய நெடுஞ்சாலை பேரளி சுங்கச்சாவடி அருகே தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து கற்களை ஏற்றி வந்த 10 டிப்பர் லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தபோது அதில்  எம்.சேண்டு, பெரிய கற்கள், ஜல்லிக்கற்கள் போன்றவை இருந்துள்ளது.

மேலும் அரசு அனுமதி கொடுக்கப்பட்ட அளவை விட அதிகமான எடையை ஏற்றி செல்வது சோதனையில் தெரியவந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்து 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததோடு 10 டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது போன்ற சம்பவங்களில் மீண்டும் ஈடுபட்டால் காவல்துறையினர் அபராதம் விதித்ததோடு ஓட்டுனர் உரிமமும் ரத்து செய்யப்படும் என அவர்களை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |